Tuesday, June 29, 2010

அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க ..... பேப்பர் இரண்டு

முன்னுரையும் முதல் ஐந்து கேள்விகளும்: 

சரி, இப்போ அடுத்த கட்ட டொச்சு கேள்விகளுக்கு:

பல்லு வலிச்சாலும் வாய் வலிக்காம பேசும்,  "பஞ்ச்" பக்கிரிசாமியின் கேள்வி:
6.  நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா அவர்கள் பேசற டாப்பிக் கண்டிப்பாக....
   பொண்ணுங்களை பற்றி இருக்கும்
   சமீபத்தில் பார்த்த நல்ல சினிமா, கெட்ட சினிமா பற்றி இருக்கும்
   முந்தினநாளு சரக்கடித்த மட்டையான மேட்டரு பற்றி இருக்கும்
ஆனா இந்த பொண்ணுங்க நாலுபேர் ஒண்ணு சேர்ந்தா அவ்ளோ நேரம் பேசி பேசி சிரிக்கிறாங்களே
அப்படி எதைப்பத்தி பேசுவாங்க...?

1.  அதேதான்....... மற்ற பெண்களை பற்றி - உறவினர் அல்லது தோழிகள் அல்லது சண்டை கோ(தோ)ழிகள், அலட்டல் பொண்ணுங்க,  முகமே தெரியாத/பரிச்சயம் இல்லாத  பொண்ணுங்களை கூட விட்டு வைக்கிறது இல்லை.
   நீங்க பேசுனா அரட்டை - நாங்க பேசுனா  gossip - புரணி - அப்படின்னு சொல்றீங்க.
 அதேதான் ......... சினிமா - டிவி ப்ரோக்ராம் - கலை நிகழ்ச்சிகள் - சமையல் - உணவகங்கள் - புத்தகம்.
 அதேதான் ....... அடித்த திருட்டு தம்மு, சரக்கு இருந்தால் அதை பற்றி ...... அஸ்க்கு புஸ்க்கு...  இப்படி சொல்லுவோம்னு நினைச்சீங்களா....... ஆசை... தோசை.... 
2 .   குழந்தைகளை வைத்து பெருமை பாராட்டி கொள்ளல்.
3 .  ஷாப்பிங் - லேட்டஸ்ட் ஐட்டம்ஸ்,  புது கடை, தள்ளுபடி விலை,  etc ...etc....
4 .  பெருமூச்சு விட வைக்கும்  தனக்கு கிடைக்காத வாழ்க்கை அல்லது பொருட்கள்.
5 .   தான்தான் டாப்பு  என்ற வகை  பெருமை பேச்சுக்கள்  - இல்லையென்றால்  -  தான்தான் பாவப் பட்ட ஜென்மம் என்ற வகை  பேச்சுக்கள். 
6 .  பள்ளி - காலேஜ் கால லூட்டிகள்,  கலாட்டா  - சைட்  அடித்த  "ஹீரோஸ்"  -  தன்னை சைட் அடித்த  "ஹீரோஸ்" பற்றி ....
7 . பேச காரணம் வேணுமா என்ன?  ஒண்ணுமே இல்லைனா கூட - எதையாவது மணிக்கணக்காக  பேச கண்டு பிடிச்சு பேசப்படும்.

ஆயிரம் பொற்காசுகளை ஒரு சின்ன பர்சில் திணிக்க திணறும் "திருவிளையாடல்" தருமியின் கேள்வி: 
7 .  நாங்க ஒரு சின்ன purse வைத்து சமாளிக்கிறோம். ஆனால், நீங்கள்  எங்கே போனாலும் ஒரு பெரிய purse - இல்லை என்றால் - ஒரு பெரிய hand bag தூக்கிட்டு போறீங்களே, அப்படி என்னதான் அதில் இருக்கும்?

1 .  Driver's License - credit card/cheque book - money - hand-kerchief or tissues - hand-sanitizer or lotion - make-up items (optional) - sanitary napkins (optional) - first-aid kit (optional) - photos/camera  (optional) - 
mint/mouth refresher (optional)  - pen - cell phone - keys.
2.   ஏதாவது ஒரு லிஸ்ட் அல்லது சின்ன குறிப்பேடு  இருக்கும்.
3.  தேவைப்பட்டால்,  குடை - தண்ணீர் பாட்டில் கூட இருக்கும். 
4 .  குழந்தைகள் இருந்தால் வேற கேள்வியே இல்லை - ஒரு மினி மார்ட் உள்ளே இருக்கும்.
5.  "மத்திய பிரதேசத்தில்"  பிரச்சினை செய்யும்  பின் சீட்டு (இருக்கை) " தீவிரவாதிகளை" சமாளிக்க ஒரு பின் அல்லது ஒரு சின்ன ஷார்ப் object .

sample for American humour:

சும்மா  இருந்தாலும்  கிண்டி  விட்டுப்  போகிற  "கோள்மூட்டி" குப்புவின்  கேள்வி : 
8 .   பசங்க முன்னாடி வேற பசங்களை பத்தி உயர்த்திச்சொன்னா அதை கண்டுக்கறதில்லை...அதுவே பொண்ணுங்க முன்னாடி மத்த  பொண்ணுங்களை உயர்த்திச்சொன்னா ஏதோ கரியிற மாதிரி வாடை அடிக்குதே அது ஏன்???
1.  ஒரே வார்த்தை - பொறாமை. 
2 . ஈகோவுக்கு ஒத்து வராது. 
3 .  தன்னைத்தான் மற்றவர்களை விட better என்று நினைத்து எல்லோரும்,  குறிப்பாக ஆண்கள்  அதிகம் நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  மண் விழுந்து விடுவது பிடிக்காது. 
4 .  எப்போதும் உண்மை இல்லை.  பெருந்தன்மையாக  அதை ஏற்றுக் கொண்டு  பாராட்டி பேசுவது  உண்டு. 
5 .  தன்னை கடுப்பேத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் சில சமயம் ஆண் அப்படி பேசும் போது - நக்கல் அல்லது குத்தல் பதில்கள்  தரப்படும். அந்த கடுப்பான பதில்களுக்கு காரணம்: அந்த பெண் மேல் உள்ள எரிச்சல் அல்ல, அந்த ஆண் மேல் உள்ள எரிச்சல் தான்.


காதல் கப்பல் கரை சேரும் நாள் எப்போ என்று காத்து இருந்து,  கதை கந்தல் ஆன "காத்தாடி" காத்தவராயன் கேட்கிறார்: 
9 .  அது ஏன்  பொண்ணுங்க பசங்களா வந்து லவ்வை சொல்லனும்னு எதிர்பார்க்குறாங்க... இதனால எத்தனை லவ்வு பெயிலிராயிருக்கிறது. அது ஏன் இப்படி பண்ணுறாங்க????

1 .  எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருந்து கொள்வோமே என்று ஒரு நினைப்புதான்.
2 .  இப்போ எல்லாம், பெண்களும் காதலை முதலில் தெரிவிக்கிறாங்களே  .... ஆளை பிடிச்சு இருந்தா கேக்குறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.....
3 . நேரிடையாக சொல்லாமல்,  கண்களாலோ இல்லை  குறிப்பாலோ சொல்லுவார்கள்.  அது புரியாத மாங்க மண்டைக்கு, காதல் எதற்கு என்று ஒதுங்கி சென்று இருக்கலாம். 
4  .  வெளிப்படையாக சொன்னால் தன்னை பற்றி ரொம்ப cheap ஆக நினைத்து விடுவார்களோ என்ற உணர்வு.  ஈகோ தரும்  பயம்.
5 . காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ஆண்களை விட பெண்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள்.  அது ஒரு பலவீனம். 
6 . தனக்கு பின்னால் ஆண்கள் கெஞ்சி கொண்டு அல்லது லோ லோனு வழிந்து கொண்டு  வருவது இன்னும் பிடிக்கும் - பெருமை என்று கருதப்படும். 
7 .  ஆணாய் வந்து சொல்வது,  தன் அழகுக்கு - இல்லை, திறமைக்கு உள்ள recognition என்று நினைத்து கொள்வதால்.


பஸ் ஸ்டாப் - பஸ் ஸ்டாப் ஆக அலையும்  "ஜோல்னா" சிங்காரம் கேட்கும் கேள்வி: 
10 .  ஆண்கள் திருமணத்துக்கு பின்னும் - குழந்தைகள்  பிறந்த பின்னும் இன்னொரு பெண்ணை பார்த்து ஜொள்ளுவதையும் அதை பற்றி பேசிக் கொள்ளுவதும் தவறாக கருதப்படுவதில்லை. ஏன், பெருமையாக கூட நினைத்து பேசுகிறார்கள்.  ஆனால், பெண்கள் திருமணத்துக்கு பின் ஜொள்ளவே  மாட்டார்களா? அதை பற்றி வேறு பெண்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா? அப்படியே பகிர்ந்து கொள்ளும் பெண்களை பற்றி, பெண்களே என்ன நினைக்கிறார்கள்? 

1 .  சும்மா பாக்குறது  தானே ..... ஒண்ணும் தப்பு இல்லை. அதை மற்ற தோழிகளிடம் சொல்வது -  அவர்களுக்குள் இருக்கும்  நெருக்கத்தை, நம்பிக்கையை பொறுத்தது. 
2 .  பொதுவாக,  திருமணமான பெண்கள் அப்படி செய்வது  இல்லை.   வீட்டு கடமைகள் , கவலைகள்  தான் மேலோங்கி நிற்கும்.  அப்படியே இருக்கிறது என்றாலும் சினிமா ஹீரோ  என்ற  ஒரு public இமேஜ்  கொண்ட  குறுகிய வட்டம்தான். 
3 .   பெண்கள்  சொன்னால், ஏதோ கற்பே போன மாதிரி மற்றவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களே என்ற பயம் ஒரு காரணம்.  எதுக்கு வம்பு என்று ஒதுங்கி விடுவது.
4 .  மற்றவர்களிடம் சொல்வது இல்லை  - கதை/கவிதையில் கற்பனை நாயகனாய் ரசிப்பதுண்டு.
5 .  சில  பெண்களுக்கு double   personality உண்டு.  ஊருக்காக ஒரு முகம்/வரைமுறை  -  உள்ளுக்குள்  மடிந்து கொண்டு இருக்கும் உண்மை முகம்/ஆசைகள்/கனவுகள்.   பார்த்தாலே  தப்புதான் என்று அடக்கி கொள்கிறார்கள். இன்னும் அந்த சுதந்திரம் வரவில்லை - குறிப்பாக தமிழ் பெண்களுக்கு.
6 . இந்த கேள்வியை கேட்ட ஆண்கள் எத்தனை பேரு ,  தன் மனைவி,  இன்னொருவரை பார்த்து சும்மா சைட் அடிப்பதை   முழு மனதோடு  ஏற்றுக் கொள்வார்கள்? 

இத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது.  இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின்  "அறிவுக்கண்" - "மனக்கண்" திறக்கப்பட்டால்,  இந்த  சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் "நெற்றிக்கண்"ணைத் திறந்து விடாதீர்கள்.  :-)

நன்றி:  கேள்விகள் அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.
உங்களது  அனைத்து கேள்விகளையும் சேர்க்க இயலாததற்கு  மன்னிக்கவும்.
நன்றி:  பதில்களை அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.
உங்களது அனைத்து பதில்களையும் சேர்க்க இயலாததற்கு மன்னிக்கவும்.
நன்றி:  எனக்காக படங்களை கண்டு பிடித்து கொடுத்த கூகிள்க்கு நன்றிகள் பல. அந்த படங்களை போட்டு வைத்த தளங்களுக்கும், நன்றிகள் பல....  :-)

பின்குறிப்பில் ஒரு முன் அறிவிப்பு:  அடுத்த கட்ட நேயர் விருப்பம் டாபிக் கமென்ட்டில் வரவேற்கப்படுகின்றன..... இன்னும் Airtel - BSNL - கூட எனக்கு  கமிஷன் டீல் ஒத்து வராததால்,  யாரும் SMS அனுப்பி ஏமாற  வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

76 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.......

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//இத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது. இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின் "அறிவுக்கண்" - "மனக்கண்" திறக்கப்பட்டால், இந்த சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் "நெற்றிக்கண்"ணைத் திறந்து விடாதீர்கள். :-)//

ஹா ஹா ஹா..:D :D :D
ரொம்ப கலக்கலா இருந்தது..ரெண்டு பதிவும்..
எல்லார் மனுசுலயும் என்ன இருக்குதுன்னு ஓரளவு தெரிது இப்போ.. :-))

Unknown said...

யாராவது இதற்கு எதிர்வினை ஆற்றுன்கப்பா....

Vidhya Chandrasekaran said...

அப்படியே இதெல்லாம் ஒரு கல்வெட்டில் பொறிச்சு வச்சு பக்கத்துல நீங்களும் உட்காச்சிக்கோங்க. வரலாறு போற்றவிருக்கும் சித்ரா வாழ்க வாழ்க:))

dheva said...

ஒற்றை வரியில் கமெண்ட்டோ அல்லது இது பற்றிய விளக்கமோ நான் எழுதினால் அது ஒரு பதிவாகி விடும்....அப்புறம் சித்ரா என்ன கொன்னுடுவாங்க...மொத்தமா ஓவர் ஆலா ஒண்ணு சொல்றேன்...

" ஆண், பெண் மன இயல்புகளை விளையாட்டாய் ஊடுருவி உண்மைகளை வெளிக் கொண்டு வந்திருக்கும் சித்ராவிற்கு ஒரு சல்யூட்....! இதனால் இருபாலாருக்கும் இடையே இருக்கும் மன இறுக்கங்கள் தளர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து நடக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.... மீண்டும் விளையாட்டாய் ....ஒரு கலக்கல் மேட்டரை சொல்லியிருக்கீங்க சித்ரா...."

வாழ்த்துக்கள்!

ஜெயந்தி said...

கலக்குறீங்க சித்ரா. சூப்பர்.

நாடோடி said...

இவ்வ‌ள‌வு இருக்கா?....

SUFFIX said...

நல்ல முயற்சி சித்ரா, #9 கேள்வியும், பதிலகளும் அருமை. யாராவது PhD கொடுத்திடுங்களேன்.

Anonymous said...

அருமை சித்ரா இங்கே சொல்லி இருக்கற எல்லா பதிலும் ரொம்பவே சூப்பர் ...

VELU.G said...

ஆத்தாடி examல கூட இப்படியெல்லாம் இருந்திருக்காது. எங்கிட்டு இருந்து இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

பின்னோக்கி said...

ரெண்டு பதிவும் படிக்கவும் சிரிக்கவும் வைத்தது. வழக்கம் போல சிந்திக்க வைக்கவில்லை :)

Ahamed irshad said...

சூப்பர் இடுகை...


//கே.ஆர்.பி.செந்தில் said...
யாராவது இதற்கு எதிர்வினை ஆற்றுன்கப்பா....///

என்னங்க சித்ரா ரெடியா....?

சசிகுமார் said...

சிரிக்க வைத்த பதிவு ரெண்டுமே கலக்கல். அடுத்து எந்த டாபிக் எடுக்கபோராங்களோ

Chitra said...

இதுல எதிர் பதிவு போட என்ன இருக்குனு எனக்கு புரியல. கேள்விகளை அனுப்பியது, ஆண்கள்..... இதில் சில ஆண் பதிவர்களும் உண்டு.
பதில் அனுப்பியுள்ளது பெண்கள். இதில் பெண் பதிவர்களும் உண்டு.... Confidential காரணமாக பங்கு பெற்றவர்கள் பெயர்களை சொல்ல போவதில்லை.....
அவர்கள் மனதில் உள்ள கேள்விகளும் பதில்களும்..... பொய் இல்லையே? :-)
நடு நிலை இருக்க வேண்டிய காரணமாக...... எனது பதில்களை இணைக்கவில்லை.

அண்ணாமலை..!! said...

ரொம்ப ரசனையோட ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சியே
நடத்தியிருப்பீங்க போலிருக்கே!
ஒவ்வொரு கேள்விபதிலுக்கும் ஒக்காந்து ரொம்ப நே..ரம்
யோசிச்சுருப்பாங்களோ!?
:)

Karthick Chidambaram said...

அட! எதுவும் உங்க பதில் இல்லையா ? இப்படி எல்லாம் கேள்வியும் வருது பதிலும் வருது.
மக்களின் சிந்தனையை தூண்டிய டாக்டர் சித்ரா வாழ்க!

Asiya Omar said...

நடுநிலையான தொகுப்பு,அருமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im busy. appuram padikkiren

சிநேகிதன் அக்பர் said...

பாராட்டுக்கள் மேடம்.

Santhappanசாந்தப்பன் said...

நல்ல ரசனையான பதிவு.

கேள்விகளுக்கு ஏற்றார் போல், கேள்வி கேட்டவருக்கு கொடுத்திருக்கும் அறிமுகமும், அடைமொழியும் டாப் கிளாஸ்!

கேள்விகள் எல்லாம் பொதுவானவை/எல்லோரும் எல்லா சமயங்களிலும் கேட்பவைதான் என்றாலும், சில பதில்கள் உண்மையிலேயே, "இப்படியும் இருக்கலாமோ" என்று மற்றொரு கோணத்தை வழங்கியிருக்கிறது.

ப‌தில்க‌ளை பொறுத்த‌ம‌ட்டில், பெண்க‌ள் வாழும் நாடு/ந‌க‌ர‌ம், வ‌ள‌ர்ந்த‌/வாழும் சூழ‌ல் பொறுத்த‌ ஒவ்வொருவ‌ருக்கும் மாறுப‌டும். நீங்க‌ள் கொடுத்துள்ள‌ ப‌தில்க‌ளையும் தாண்டி, சில‌ விட‌ய‌ங்க‌ள் இருக்கிற‌து என்று நான் நினைக்கிறேன்.

உண்மையிலேயே, ந‌ல்ல‌ முய‌ற்சி. வாழ்த்துக்க‌ள்!!

Robin said...

:)

தமிழ் உதயம் said...

இரு பாலரிடமும் உள்ளதை, உள்ள படி சொல்லிட்டிங்க.

அம்பிகா said...

//இத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது. இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின் "அறிவுக்கண்" - "மனக்கண்" திறக்கப்பட்டால், இந்த சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் "நெற்றிக்கண்"ணைத் திறந்து விடாதீர்கள். :-)//
:-)))

ஸாதிகா said...

கலக்கல்.மேலும் கலக்குங்கள்.

கண்ணா.. said...

நல்ல பதிவு நிறைய இன்பர்மேஷன் நோட் பண்ணிக்கிட்டேன்....

ஹேமா said...

ஆணாகிப் பெண்ணாகி மனதைச் சலித்தெடுக்கும் சித்ராவே.....பராட்டுக்கள் !

பருப்பு (a) Phantom Mohan said...

பதில் சொன்ன பெண்களுக்கு மிகப் பெரிய நன்றி! அதை தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றியோ நன்றி!

இந்தப் பதிவ விட முதல் பதிவு எனக்கு ரொம்ப உபயோகமா இருந்தது! 300 நண்பர்கள் சேர்ந்துள்ளார்கள் வாழ்த்துக்கள். நான் தான் அந்த 300 வது நண்பன்! நான் முன்னாடியே add பண்ணதா நெனைச்சிருந்தன், பட் இப்போ தான் தெரிஞ்சது நான் add பண்ணலைன்னு,

என் லக் 300 வது நண்பன் என்ற மைல் கல்.

வேலன். said...

அருமை சகோதரி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Mythili (மைதிலி ) said...

romba kalakkalaa irukku chitraa.. particularaa kelvigalai vida kelvigal ketporai patriya unnudaya comedy kalantha introduction super pa.. siriththu sirithu vayiru valikkuthu. Badilgal super :-)

GEETHA ACHAL said...

அருமையான கேள்விகள்...அதற்கு ஏற்றாற் போல தெளிவான பதில்கள்...வாழ்த்துகள்...

Anonymous said...

ஹா ஹா. உங்க இந்த ஆராய்ச்சி கட்டுரையை பிரின்ட் எடுத்து எங்க காம்பஸ்ல சப்மிட் பண்ண வேண்டியது தான்.

Jey said...

கலக்கல் பதிவு. ம்ஹூம், எனக்கு கல்யாணம் ஆகுரதுக்கு முன்னாடி இத படிச்சிருந்தா,இந்த பொம்பா பசங்கள நல்லா டீல் பண்ணிருந்திருப்பேன், தெவைஇலாம , பட்டிகாடு, மக்குனு பேர் எடுத்துருக்க மாட்டேன்.

ராஜ நடராஜன் said...

பஞ்ச் பக்கிரிசாமி கேள்வி பதில் இயல்பா இருக்குது.

செந்திலு!கவுண்டமணிய கூப்பிடவா:)

Asha said...

Nalla kaeturukkeenga detailu!

Nice one, Chitra! :))

Ur profile pic is realy good. :))

Anonymous said...

:) நல்லா இருக்கு

Madhavan Srinivasagopalan said...

:)

தமிழ் மதுரம் said...

ஆனா இந்த பொண்ணுங்க நாலுபேர் ஒண்ணு சேர்ந்தா அவ்ளோ நேரம் பேசி பேசி சிரிக்கிறாங்களே
அப்படி எதைப்பத்தி பேசுவாங்க...?//


ஹி..ஹி... பொண்ணுங்கள் ஒன்று சேர்ந்தால் சீரியல் பற்றிப் பேசிக் கண்ணீர் வடிப்பாங்கள்:))
தாய்க்குலங்களே! சும்மா நகைச்சுவையாகச் சொன்னேன். பிறது என்னைத் தேடுறேல்லை.

தமிழ் மதுரம் said...

பசங்க முன்னாடி வேற பசங்களை பத்தி உயர்த்திச்சொன்னா அதை கண்டுக்கறதில்லை...அதுவே பொண்ணுங்க முன்னாடி மத்த பொண்ணுங்களை உயர்த்திச்சொன்னா ஏதோ கரியிற மாதிரி வாடை அடிக்குதே அது ஏன்???//


பெண்கள் எப்பவுமே அழகாக இருக்கிறாங்கள், உங்களை விட அழகானவள் இந்த இடத்திலேயே இல்லை என்று பெண்களிடம் சொல்லிப் பாருங்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆஹா... இந்தப் பொயிண்டையும் கொஞ்சம் ஆராய்ந்திருக்கலாம் தோழி!

தமிழ் மதுரம் said...

ஆணாய் வந்து சொல்வது, தன் அழகுக்கு - இல்லை, திறமைக்கு உள்ள recognition என்று நினைத்து கொள்வதால்//


வெளிநாடுகளில்லை பெண்கள் தான் இதிலை முதலிடம்!

தமிழ் மதுரம் said...

சில பெண்களுக்கு double personality உண்டு. ஊருக்காக ஒரு முகம்/வரைமுறை - உள்ளுக்குள் மடிந்து கொண்டு இருக்கும் உண்மை முகம்/ஆசைகள்/கனவுகள்//


கவனம்.. அமெரிக்காவிலை உங்கடை வீட்டுக்கு கிட்ட மகளிர் பட்டாளம் கண்டனப் பேரணியோடு ஊர்வலமாக வரப்போறாங்கள்?

தமிழ் மதுரம் said...

உண்மையில் நல்ல ஒரு அலசல். அனைத்து ஆண்கள் மனதிலும், பெண்கள் மனதிலும் உள்ள புரியாத புதிர்களைப் புரியவைத்திருக்கீறீர்கள்.


உங்கள் முயற்சிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

அடுத்த முயற்சிக்கு ஒரு கேள்வியைத் தரலாம் என நினைக்கிறேன்.


ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளையோ/ பெண் பிள்ளையோ தங்களது அனைத்து விடயங்களையும் ஏன் தாயிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள்? தந்தையிடம் எவ்விதமான கலந்துரையாடலையையும் நடாத்துவதில்லை.

இதற்கான காரணம் என்ன? ஏன் குடும்பத்தில் ஆண்களை விடப் பெண்களே ஆலோசனை வழங்கும், திட்டமிடும் சம்பவங்களில் முதன்மை வகிக்கிறார்கள்?

அன்புடன் அருணா said...

என்னா ஒரு உழைப்பு!நேரம் எப்படிக் கிடைக்குதுங்க!!!????

சாருஸ்ரீராஜ் said...

கலக்கலான கேள்வி பதில்கள் , ரொம்ப நல்லா இருக்கு.

Vidhoosh said...

:DD

Menaga Sathia said...

சூப்பர்ர் சித்ராஜி!!

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு சித்ரா.

திருவாரூர் சரவணா said...

கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கனும்னு அம்மா சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஏற்கனவே குழப்ப வாதியா இருந்த நான் இப்போ இன்னும் அதிகமா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். சீக்கிரம் தெளிவு வந்தா சரிதான். (நான் எனக்கு சொன்னேன்.)

ஸ்ரீராம். said...

இன்னும் Airtel - BSNL - கூட எனக்கு கமிஷன் டீல் ஒத்து வராததால், யாரும் SMS அனுப்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன சொல்றது. நான் குழந்தையா இருப்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை

Prathap Kumar S. said...

//இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின் "அறிவுக்கண்" - "மனக்கண்" திறக்கப்பட்டால், இந்த சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். //

என்ன அப்படி கேட்டுடிங்க...இப்பத்தான் ஏதோ மனசுலேருந்து பெரிய பாரம் இறக்கி வச்சமாதிரி இருக்கு :)))
நன்றி சித்ரா...

Unknown said...

@Chitra...Good one...liked some of the Q & A, and the TV Vs Cell comparison...

நசரேயன் said...

நல்லா இருக்கு டீச்சர்

பிரேமா மகள் said...

நல்லா கிளப்பி விடுறீங்க...

சாந்தி மாரியப்பன் said...

ஆராய்ச்சி நல்லாருக்கு சித்ரா.

Unknown said...

அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க...

எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது ஏன்?

சுசி said...

முதல் பேப்பருக்கே இன்னும் சிரிச்சு முடியல.. இதில ரெண்டாவது பேப்பருமா..

கலக்கல் சித்ரா.

Chitra said...

///////எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது ஏன்? ////


.... MGR அணிந்தார்...... இறந்த போனவங்களை பத்தி என்னத்தை ஆராயுறது? அது போஸ்ட் மோர்டம் பண்ண மாதிரி ஆகும்.


அடுத்த ஆளு அணிவது.... "அரசியல் ஆதாயம் எங்கே இருக்கு - யார் கிட்ட இருக்கு - எதில இருக்கு - என்று "கண்ணோட்டம்" விடுவதை, மற்றவர்கள் காணாமல் இருக்க - மேலும், சில விஷயங்களை கண்டும் காணாமல் இருக்க இது உதவுகிறது..... ..... :-)

தெய்வசுகந்தி said...

kalakkal DR.chitra!!!!!!!!!!!

CS. Mohan Kumar said...

கலக்குறீங்க. தொடருங்க.

prince said...

:-)

Prasanna said...

ரொம்ப உபயோகம் ஹீ ஹீ.. அப்புறம், ஒரு விஷயத்த எழுதுனா, இப்படியா பிரிச்சு மேயவீங்க? அடுத்தவங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வைக்க கூடாதா :)

Cool Lassi(e) said...

The first picture is funny but really, women aren't dumb drivers or dumb to begin with. I have been driving for nearly 14 years and have nary a point or warning..that says something about women drivers in general, no?

வலை ரசிகன். said...

http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே
ஒரு முக்கியவேண்டுகோள்.

நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
ராஜன்+வால்பையன்
இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.

இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.

ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.

நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.

நான் கூறுவது சரியா தவரா?
பதில் கூறவும்.
வஸ்ஸலாம்.

Yoganathan.N said...

சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைத்தது உங்கள் பதிவு.
வாழ்த்துகள் சித்ரா ஜி :)

'பரிவை' சே.குமார் said...

கலக்குறீங்க சித்ரா. சூப்பர்.

எப்பூடி.. said...

தமிழ்வொய்ஸ்.காம்

//அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்க...

எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது ஏன்? //

கண்ணாடி வாங்கியது கருப்பு பணத்தில் என்பதை சிம்பாலிக்கா காட்டவாக இருக்குமோ:-)

எப்பூடி.. said...

இதுபோல மென்மேலும் பல ஆராட்சிகள் செய்து நோபல்பரிசு வாங்க வாழ்த்துக்கள்

தக்குடு said...

Dr. சித்ரா வாழ்க! வாழ்க!....:)

அன்புத்தோழன் said...

ச.. அதுக்குள்ள முடிஞ்சு போச்சா... கல கல கலன்னு டைம் போனதே தெரில... ஆபீஸ்ல உக்காந்து டைம் பாஸ் பண்றதுக்கு இது போன்ற பல ஆய்வுகள் எங்கள மாதுரி ஆட்களுக்கு ரொம்ப முக்கியம்.... ஹ ஹ... க்ரேட்டு... எப்புடிங்க இப்புடி... இதுல என்ன ஒரு சந்தோசமான மேட்டருனா நான் என்ன ஒரு கணக்கு போட்டு வச்சுருந்தேனோ அதே தான் பெரும்பாலான பதில்களா இருக்கு... ஹி ஹி...

அன்புடன் மலிக்கா said...

சித்ராமேடம் சித்துவிளையாட்டு
சூப்பரப்பு.

சித் மேடம்
[ரா எங்கேனெல்லாம்கேக்காக்கூடாது ஓகே]ரெண்டும் ரெண்டும் ஐஞ்சிதானே கேள்விக்கு பதிலு...

செந்தில்குமார் said...

எப்படி சித்ரா உங்களாள மட்டும் இப்படி

உக்காந்து யேசிப்பிங்கலோ...
இல்ல கூட்டமா கூடி யேசிப்பிங்கலோ...

தமிழ் மதுரம் said...

அடுத்த பதிவு எப்ப வரும்?

வருண் said...

***Chitra said...
இதுல எதிர் பதிவு போட என்ன இருக்குனு எனக்கு புரியல. கேள்விகளை அனுப்பியது, ஆண்கள்..... இதில் சில ஆண் பதிவர்களும் உண்டு.
பதில் அனுப்பியுள்ளது பெண்கள். இதில் பெண் பதிவர்களும் உண்டு.... Confidential காரணமாக பங்கு பெற்றவர்கள் பெயர்களை சொல்ல போவதில்லை.....
அவர்கள் மனதில் உள்ள கேள்விகளும் பதில்களும்..... பொய் இல்லையே? :-)
நடு நிலை இருக்க வேண்டிய காரணமாக...... எனது பதில்களை இணைக்கவில்லை.

June 30, 2010 1:10 AM***

கேள்விகேட்பவர்/பதில்கள் சொல்பவர் அனானிமஸாக இருப்பதால் கேள்வி கேக்கிறதும் சரி பதில் சொல்றதும் சரி, ஓரளவுக்கு மேலோட்டமாக (நாகரிகம் என்கிற பேரில்) இல்லாமல் நல்லாவே யிருக்குங்க :)

நீங்க சும்மா மாடெரேட்டர் மற்றும் தொகுத்து வழங்பவர் மட்டும்தானா? :)

ஆனா ஒண்ணு, இதுபோல் விவாதமெல்லம் "வெட்டிப்பேச்சு" மாதிரி இல்லாமல் கொஞ்சம் சீரியஸானதாகவேதான் (esp some responses/answers from "ladies") இருக்குங்க! :)

வருண் said...

***Chitra said...
இதுல எதிர் பதிவு போட என்ன இருக்குனு எனக்கு புரியல. கேள்விகளை அனுப்பியது, ஆண்கள்..... இதில் சில ஆண் பதிவர்களும் உண்டு.
பதில் அனுப்பியுள்ளது பெண்கள். இதில் பெண் பதிவர்களும் உண்டு.... Confidential காரணமாக பங்கு பெற்றவர்கள் பெயர்களை சொல்ல போவதில்லை.....
அவர்கள் மனதில் உள்ள கேள்விகளும் பதில்களும்..... பொய் இல்லையே? :-)
நடு நிலை இருக்க வேண்டிய காரணமாக...... எனது பதில்களை இணைக்கவில்லை.

June 30, 2010 1:10 AM***

கேள்விகேட்பவர்/பதில்கள் சொல்பவர் அனானிமஸாக இருப்பதால் கேள்வி கேக்கிறதும் சரி பதில் சொல்றதும் சரி, ஓரளவுக்கு மேலோட்டமாக (நாகரிகம் என்கிற பேரில்) இல்லாமல் நல்லாவே யிருக்குங்க :)

நீங்க சும்மா மாடெரேட்டர் மற்றும் தொகுத்து வழங்பவர் மட்டும்தானா? :)

ஆனா ஒண்ணு, இதுபோல் விவாதமெல்லம் "வெட்டிப்பேச்சு" மாதிரி இல்லாமல் கொஞ்சம் சீரியஸானதாகவேதான் (esp some responses/answers from "ladies") இருக்குங்க! :)

வருண் said...

***Chitra said...
இதுல எதிர் பதிவு போட என்ன இருக்குனு எனக்கு புரியல. கேள்விகளை அனுப்பியது, ஆண்கள்..... இதில் சில ஆண் பதிவர்களும் உண்டு.
பதில் அனுப்பியுள்ளது பெண்கள். இதில் பெண் பதிவர்களும் உண்டு.... Confidential காரணமாக பங்கு பெற்றவர்கள் பெயர்களை சொல்ல போவதில்லை.....
அவர்கள் மனதில் உள்ள கேள்விகளும் பதில்களும்..... பொய் இல்லையே? :-)
நடு நிலை இருக்க வேண்டிய காரணமாக...... எனது பதில்களை இணைக்கவில்லை.

June 30, 2010 1:10 AM***

கேள்வி கேட்பவர்/பதில்கள் சொல்பவர் அனானிமஸாக இருப்பதால் கேள்வி கேக்கிறதும் சரி, பதில் சொல்றதும் சரி, ஓரளவுக்கு மேலோட்டமாக (நாகரிகம் என்கிற பேரில்) இல்லாமல் நல்லாவே யிருக்குங்க :)

நீங்க சும்மா மாடெரேட்டர் மற்றும் தொகுத்து வழங்பவர் மட்டும்தானா? :)

ஆனா ஒண்ணு, இதுபோல் விவாதமெல்லம் "சும்மா வெட்டிப் பேச்சு" மாதிரி இல்லாமல் கொஞ்சம் சீரியஸானதாகவேதான் (esp some responses/answers from "ladies") இருக்குங்க! :)

Anonymous said...

சித்ரா, ஒரு தொடர்பதிவுக்கு உங்களை கூப்பிட்டிருக்கேன். விருப்பம் இருந்தால் தொடரலாம்

http://chinnaammini.blogspot.com/2010/07/blog-post.html