Sunday, June 6, 2010

ஹலோ, ஹலோ நலமா?

ஹலோ ...... எப்படி இருக்கிறீங்க? நலமா?

நான் ஆங்கிலத்தில் லீவ் லெட்டர் சப்மிட் செய்து விட்டு  போனால், அதையும் யாரோ என் மேல உள்ள பாசத்தில்,  அவர்களாகவே  தமிழ் மணத்துல இணைத்து விட்டு பரிந்துரை செய்து விட்டார்கள்.  எனக்கு தமிழ் மணத்துல இருந்து ஒரு வார்னிங் மெசேஜ் வந்து இருக்கிறது. வேறு மொழியில் எழுதி விட்டு, தமிழ் மணம் பரப்ப முயன்ற குற்றத்தால், அந்த பதிவை நீக்கி விட்டோம் என்று செய்தி.   அதை எனக்கு தெரிந்த மொழியில் எழுதி இருந்ததால்  எனக்கு புரிந்து விட்டது.  இதையே பரிந்துரைக்க சேர்த்து விட்ட நல்ல உள்ளம்,  தமிழ் மணத்துக்கு பதிலாக  சைனீஸ் மணத்துல சேர்க்க அனுப்பி விட்டு, எனக்கு வார்னிங் மெசேஜ் வந்து இருந்தால், எனக்கு ஒண்ணும் புரிந்து இருக்காது. ஏதோ சைனீஸ் ரெஸ்டாரண்டு, ஆர்டர் பண்ண மெனு அனுப்பி இருக்கிறது என்று, நானும் எதையாவது லஞ்ச்க்கு ஆர்டர் செய்து விட்டு, இன்னும் பட்டினியாக காத்து இருந்து இருப்பேன்........ வாயில சிரிப்பு வருது.....

அப்புறம்,  இந்த வாரம்,   வலைச்சரம் பொறுப்பு என் கையில்...... என்னையும் நம்பி, இப்படி விஷப் பரீட்ச்சை செய்யும் சீனா ஐயாவுக்கு வணக்கமும் நன்றியும்......  கண்ணுல தண்ணி வருது.......

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_07.html
இங்கே கொடுக்கும் அன்பின் ஆதரவு கரத்தை அங்கேயும் நீட்ட வேண்டுகிறேன்....... தொண்டையில 'கிச்கிச்' வருது......

இனி, வழக்கம் போல வெட்டி பேச்சு தொடரும்:

48 comments:

ஜெட்லி said...

வலைச்சரத்துக்கு ...வாழ்த்துக்கள்...

LK said...

வாழ்த்துக்கள் சித்ரா.. விடுமுறை நல்ல இருந்துச்சா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வலைச்சரத்துக்கு ...வாழ்த்துக்கள்...

ஆனாலும் நாங்க ரொம்ப பாவம். ரொம்ப அடிக்காதீங்க

திருவாரூரிலிருந்து சரவணன் said...

அடடா...ஒரு வாரம் லீவு எடுத்ததுக்கு பிறகு இப்படி ஒரு கொடுமையா? இட்ஸ் ஒ.கே. எவ்வளவோ தாங்க்ட்டோம். இத சமாளிக்க மாட்டோமா?

ஆனாலும் தம்பட்டம் தாயம்மாவை வரவேற்கிறோம்.

கே.ஆர்.பி.செந்தில் said...

வாழ்த்துக்கள் சித்ரா ...

ஜீவதர்ஷன் said...

வந்திட்டீங்கெல்ல இனிமேல் கலக்கல்தான். (இதை சந்திரமுகியில பிரபு நம்ம தலைவரை பார்த்து சொல்லும் பீலிங்கில படிக்கணும். )

ஜீவதர்ஷன் said...

சூப்பர் , வாழ்த்துக்கள்

dheva said...

" வாராயோ தோழி...வாராயோ.....பதிவுலகுக்குள் மீண்டும் வாராயோ..."


அப்பாடா...சித்ரா..... நேத்தே உங்கள ரீ ஜாய்ன் பண்ணி அனுமதிச்சுடேனே.....! ஹா..ஹா..ஹா! ஒரு சின்னகவிதை...


"கருப்பு வெள்ளையாய்...
இருந்த பதிவுலகம்
உங்களின் மீள் வருகையால்
வண்ணங்களால் நிரம்பி வழிகிறது"

வலைச் சரம் கூட மிக சந்தோசத்தில் இருப்பதாக கேள்வி பட்டேன்.... நீங்க கலக்குங்க...தோழி...!

மாதேவி said...

வலைச்சரத்துக்கு வாழ்த்துகள் சித்ரா.

Anonymous said...

அவங்க மட்டும் அனுப்புற மெயிலை எல்லாம் இங்கிலீஷில் அனுப்புவாங்களாம்.இதுக்குப் பெயர் தான் என்ன‌ கொடுமை சித்ரா அக்கா.

Welcome Back.

soundar said...

வாங்க அக்கா விடுமுறை சென்ற அனுபவம் எங்கே....

கண்ணா.. said...

வலைசர டீச்சர் ஆனதற்கு வாழ்த்துக்கள் டீச்சர்..:)

S Maharajan said...

வாங்க அக்கா வாங்க

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்கோ

ஆசிரியரே

ப்ரசெண்ட் ரீச்சர் :)

நாஞ்சில் பிரதாப் said...

அடடே... வலைச்சரமா ??? தூள்....
அன்னமாக்கா...பொன்னமக்கா எல்லாரும் ஓடி வாருங்கோ.......

அமைதிச்சாரல் said...

விடுமுறைக்கு சென்றுவந்து புத்துணர்வோடு கலக்க வந்திருக்கும் சித்ராவுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும்.

நாடோடி said...

வாங்க‌.. வாங்க .... வ‌லைச‌ர‌த்தில் க‌ல‌க்குங்க‌..

சசிகுமார் said...

வலைச்சர ஆசிரியர் ஆட்சி கட்டிலில் அமர்ந்ததுக்கு நன்றி சித்ரா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜெயந்தி said...

வலைச்சரம் சிறக்க வாழ்த்துக்கள் சித்ரா!

asiya omar said...

வாழ்த்துக்கள்.சொன்ன மாதிரி 6-ம் தேதி வருகைக்கு மகிழ்ச்சி.

செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் சித்ரா

புது டீச்சர் எப்ப கிலாஸ்க்கு வராங்க

Sangkavi said...

அக்கா....

வலைச்சரத்துக்கு ...

வாழ்த்துக்கள்...

அங்கேயும் கொஞ்சம் வெட்டியா பேசி கலக்குங்க....

அமுதா கிருஷ்ணா said...

valthukkal chitra!!!

VELU.G said...

வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

வலைச்சரம் கலக்க வாழ்த்துகள்:)

தமிழ் உதயம் said...

எங்க எழுதினாலும் சித்ரா சித்ரா தான்.

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள்!!!

ஸாதிகா said...

வலைசரத்தில் பங்கேற்கும் சித்ராவுக்கு வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

உங்கள் வெ(ட்டி)ற்றிப்பேச்சால் வலைசரம் கலகலக்க வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

//வாயில சிரிப்பு வருது.....
கண்ணுல தண்ணி வருது.......//

அப்டிங்களா...??!!! வித்யாசமா இருக்கே...

சரி..சரி... இந்தாங்க என்னோட வாழ்த்துககளையும் பிடிங்க..

அக்பர் said...

வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாழ்த்துகள் சித்ரா.

இனி சரவெடிதான் போல :)

மங்குனி அமைச்சர் said...

ஒரே நேரத்தில் இருமுனை தாக்குதல்கள் , ...........................சமாளிப்போம்

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் சித்ரா

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்!!!!

ராமலக்ஷ்மி said...

வாங்க! வாங்க:)!

Anonymous said...

வாழ்த்துக்கள் சித்ரா ..

இளம் தூயவன் said...

வாழ்த்துக்கள்......

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள்!!

ரிஷபன் said...

வலைச்சரத்துக்கு வாழ்த்துகள்..

ஜெரி ஈசானந்தன். said...

வருக...வருக

சத்ரியன் said...

ஆஹா...! நான் அங்க வந்து பேசிக்கிறேன்.

ஹேமா said...

சித்ரா..வாங்கோ வாங்கோ...
தவிச்சுப்போய் இருக்கோம் சிரிக்கிறதுக்கு.

Mahi_Granny said...

வெளியில் பகிர முடியாத மௌனம் எல்லோருக்கும் உங்கள் விடுமுறையில். எனவே நீங்கள் வந்து கலக்க போவதற்கு நன்றியும் வாழ்த்துக்களும் கலக்குங்க சித்ரா

Mahi_Granny said...

waiting for vettipachu comeon

ப்ரின்ஸ் said...

இங்கே கொடுக்கும் அன்பின் ஆதரவு கரத்தை அங்கேயும் நீட்ட வேண்டுகிறேன்.......///


எங்க ஆதரவு என்னைக்கும் உண்டு.

தாராபுரத்தான் said...

வாம்மா..நல்லா இருக்கீங்களா? பார்த்து ஒரு வாரமாச்சே..வலைச்சரத்தில் சந்திக்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள்...
வலைச்சரத்துக்கு ...வாழ்த்துக்கள்
அசத்துங்க..

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வாழ்த்துக்கள் சித்ரா