Miami Beach ...................
ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு சம்பவம், ஒரு இடத்தை பற்றி மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. நீங்க ஒரு இடத்தை சுற்றி பார்க்க போகும்போது ஏதாவது நடக்கணும். (Newton மட்டும்தான் விதி வச்சுக்கணுமா?)
Chitra's law # 1: நல்லதாக இருந்தால் பெரு மகிழ்ச்சி. "நாங்க அங்க போனோம். நல்லா enjoy பண்ணினோம். திரும்பி இப்படி எப்படா போவோம்னு இருக்கு " என்கிறோம். so, every good sambavam brings an actual positive reaction to that place.
Chitra's law # 2: அதே இடத்தில் பிடிக்காதது வேண்டாதது நடந்திருந்தால் "அந்த இடத்துக்கு இனி யார் போவா? அப்படி அங்க என்ன இருக்கு?" என்கிறோம். so, every negative sambavam brings a bad reaction to that place.
அதாகப்பட்டது, மேட்டர் இடத்தில் இல்லை. ஒரு இடத்தை விட அந்த இடத்தில் நடப்பவை, அனுபவித்தவை தான், நம் உணர்வுகளை தொடுகிறது...... மனதில் நிற்கிறது.
Miami இல் இருக்கும் சில beach களில் Crandon Beach ஒன்று ................
என் கணவருக்கும் நண்பர்களுக்கும் rule # 1 apply ஆக்கிய அதே வேளையில் எனக்கு rule # 2 apply ஆக்கிய இடம்.
ஒரு சமயம், என் பிறந்த நாளை, நண்பர்களுடன் Crandon பீச்சில் போய் கொண்டாட என் கணவர் பிளான் செய்து வைத்து இருந்தார். எல்லோரும் போனோம். நீச்சல் தெரியாத என்னையும் கடலில் ஆட்டம் போட தள்ளி விட்டார்கள். இவர்கள் என் நண்பர்களா, இல்லை எதிரிகளா - பிறந்த நாள் அதுவுமா என்னை கொல்ல பாக்குராங்களேனு கத்தினேன். எங்கள் நண்பர், Paul, "திருநெல்வேலிய தேடுது தேடுதுன்னு சாலமனை படுத்துறீங்களே, அப்படியே direction பாத்து போனா, தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் வரும். அங்கே இருந்து ஒரு மணி நேரம்தான்" என்று பாளையங்கோட்டைக்கு வழியக் கேட்டா, பரலோகத்துக்கு வழி சொன்னார்.
தாமிரபரணி கரையை விட Crandon கடற்கரை அருகில் இருந்ததால் தண்ணீரை விட்டு வெளியே கரைக்கு வந்தேன். ஒரு beach-walk போகலாம் என்று தோன்ற, சாலமனை தேடினேன். சற்று தள்ளி 2 pieces swim-suit அணிந்த சுந்தரிகள் குளித்து ஆட்டம் போட்டு கொண்டிருந்ததற்கு அருகில், எங்கள் நண்பர்கள் ரெண்டு பேர்களோடு சேர்ந்து கொண்டு கடல் நீரில் throw-ball ஆடுவதாக இருந்தார். இப்படி நீரில் விளையாடும் போது வேர்வை கடலா, ஜொள்ளு கடலா என்று தெரியாது பாருங்கள்.
பிறந்த நாள் எனக்கு - கொண்டாட்டம் அவருக்கு!
என் தோழி, லிண்டாவுடன் வாக் போய் விட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து நானும் லிண்டாவும் திரும்பி வந்து பார்த்தால், எங்கள் மக்காவை காணோம். அவர்கள் எல்லோரும் Beach volley-ball விளையாட போயிருக்கலாம் என்று லிண்டா சொன்னாள். அங்கும் இல்லை. இவர்களை தேடிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, கண்களை கசக்கி கொண்டு பார்த்தேன் - நான் பார்க்கும் காட்சி நிஜம்தானா?
அங்கிருந்த தென்னை மரம் ஒன்றில் சாலமன் பாதி ஏறியபடி - மரத்தை தழுவியபடி - உட்கார்ந்தது போல் தொங்கி கொண்டு இருந்தார். மரத்தின் கீழே, இவர் விழுந்தாலும் பரவாயில்லை, மரம் விழுந்து விடக் கூடாது என்பது போல் மரத்தை தாங்கி பிடித்தபடி, Paul உடன் மற்ற நண்பர்களும் நின்று கொண்டு இருந்தார்கள். நான் கத்தியபடி ஓடி வந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லாத்தானே எல்லோரும் தண்ணீரில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்கள். பின்னே எப்படி மரம் ஏற வேண்டி வந்தது? நான் நிஜமாகவே கடல் பயணத்தை ஆரம்பித்து விட்டேனா என்று மரத்தில் இருந்து பார்க்கிறாரா? ஒன்றும் புரியாமல் பயந்து கத்தியபடி ஓடி வந்தேன்.
"Paul, Paul, என்னாச்சு? ஏன் இவர், இப்படி பாதி மரம் ஏறியிருக்கிறார்?" என்று கேட்டு கொண்டே வந்தேன்.
Paul, எனக்கு பதில் சொல்லாமல் வேறு எங்கோ மற்றவர்களுடன் பார்த்து கொண்டிருந்தார். லிண்டா என் தோள் பிடித்து அமைதி படுத்தினாள்.
Paul மெல்ல திரும்பி, என்னை பார்த்து, "ஒண்ணும் இல்லை, சித்ரா. volley-ball விளையாடி கொண்டிருந்தோம். பந்து தென்னை மரம் மேலே மாட்டி கொண்டது. எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. உங்க ஆளு, மரம் ஏறி பந்து எடுக்க முயற்சி பண்ணுவதாக சொன்னாங்க. ஆனால் பாதி மரத்துக்கு மேல் ஏற முடியவில்லை. அதான்."
நான் லிண்டாவை பார்த்து உதவிக்கு police or fire-engine service கூப்பிடும்படி சொன்னேன்.
மேலிருந்து சத்தம்: "வேண்டாம். நானே மெல்ல இறங்கிடுவேன்."
Paul ஏக்கத்துடன், "solomon got the best seat in town. அங்க பாருங்க. கூட்டத்தில் எங்களுக்கு சரியா தெரிய மாட்டேங்குது. அவருக்கு பிரச்சினை இல்லை."
"என்ன கூட்டம்? என்ன பிரச்சினை?" என்றேன் பதட்டத்துடன்.
லிண்டா விரல் காட்டிய திசையில், ஒரு topless model அழகி, ஒரு calendar photo-shoot ஒன்றுக்காக பல போஸ் களில் சிரித்து கொண்டு இருந்தது அரை குறையாக கூட்டம் நடுவில் தெரிந்தது. முதலில் பயத்தில் கத்தியவள் இப்பொழுது கோபத்தில் கத்தினேன். வேறு என்ன செய்ய? மரம் ஏறியா உதைக்க முடியும்?
இன்று வரை, என் ஆளு தான் பந்து எடுக்க மட்டும் போனதாகவும், பாதி மரம் ஏறியதும் களைத்து போனாதாகவும் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு இறங்கி வந்ததாகவும் கூறுகிறார். பனை மரத்தின் அடியில் குடித்தது பால்தானாம் - கள் இல்லையாம். "நம்பிட்டேன்."
There is never a dull moment in our happily married life. :-)
94 comments:
hmm koduthu vaccha manusna . hmmmmmmmmmmmmm
நல்லா அனுபவிச்சி எழுதி இருக்கீங்க போல
-----------------------
ஆமாமாம் அவரு அனுபவிக்க நீங்க எழுதி ...
ஜொள்ளு கதை நல்லா இருக்கு....
லொல்லு சித்ரா கூட பயந்தாஙகன்னா நம்ப முடியலை,very interesting.
பயம் என்று சொல்ல மாட்டேன்.. ஒன்றும் புரியாததால் வந்த பதட்டம். :-)
பாவம் ஒரு நாள் தானே விட்டு இருக்கலாமே. அப்ப அன்னிக்கி வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் ஒரே ரகளையா இருந்திருக்குமே அல்லது பீச்சிலேயே ஸ்டார்ட் பண்ணிடீங்களா
அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க..... நான் ரொம்ப "நல்லவ"...... ! நம்புங்க... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
இந்த பின்னூட்டம்....சித்ராவுக்கு இல்லை...சாலமனுக்கு....!
சாலமன் சார்....கங்கிரஜுலேசன்....! மரம் ஏற கத்துக்கிட்டு ஏறினிங்களா இல்லை சும்மா போய் ட்ரை பண்ணினாலே மேலே ஏறிடலாமா? ஏன்னா நான் சில பீச்சுக்களுக்கு போனா.. Law of சாலமனை பாலோ பண்ணலாம் இல்லையா..... ஹா....ஹா...ஹா...
சாலமன்.. இந்த wifeங்களே இப்படித்தான் பாஸ் எப்பவும் திட்டிகிட்டே இருப்பாங்க.. கோபபட்டுகிட்டே இருப்பாங்க..... நீங்க.. கலக்குங்க.. பாஸ் ! உங்காளால.. மியாமி பீச் ச எப்படி மறக்க முடியாதோ....அதே மாதிரிதான் சார் எங்களாலயும்.....ஹா... ஹா....ஹா....!
நல்ல அனுபவம்....
நிம்மதியா எதையும் பாக்க விடுறாங்களா..
நாங்க பந்து எடுக்கத்தான் போனோம்.. அப்ப பாத்து அங்க சூட் பண்ணா பாக்காம இறங்க முடியுமா..?
ஆணாதிக்கவாதி செந்தில்.
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... தேவா மற்றும் ஆணாதிக்கவாதி செந்தில். கமென்ட் வாசிச்சிட்டு, இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்..... ஹா,ஹா,ஹா,ஹா....
மியாமின்னாலே பனை மரமும் கள்ளும்னுதானே அர்த்தம். அங்க போய் ஆவின் பூத்த காணோமேன்னா??
அடுத்தமுறையாவது அவர் கண்ண கட்டிட்டு ஐஸ் பாய் விளையாட்டு விளையாடுங்க. :)))
ஹும்ம்.. பாளையங்கோட்டைய விட்டு வெளிய வாங்க டீச்சர்! :))
:)).பனமரத்து கீழன்னாதான் நம்ப வேணாம். இவர் பாதியில தொங்கிட்டு சொன்னதுதானே. So, benefit of doubt should go to the accused :))
பனமரத்து கீழன்னாதான் நம்ப வேணாம். இவர் பாதியில தொங்கிட்டு சொன்னதுதானே. So, benefit of doubt should go to the accused :))
.... அசத்தல்!
அடுத்தமுறையாவது அவர் கண்ண கட்டிட்டு ஐஸ் பாய் விளையாட்டு விளையாடுங்க. :)))
.....ஆசை தோசை அப்பள வடை!
ஹும்ம்.. பாளையங்கோட்டைய விட்டு வெளிய வாங்க டீச்சர்! :))
...... me tha no teacher! aaaaaaaa!!!
மேடம் உங்க சொலோமோனை நம்புங்க.
மேடம்! உங்க சாலமனை நம்புங்க. அவரு நல்லவரு !
இதுக்குத்தான் தேவையான உயரம் வேனும்ங்கிறது..அநியாயமா மரம் ஏற வேண்டியதாப் போச்சி..
இந்த கூத்துக்கு, காம்ப்ளான் வேற குடிக்கணுமா? சரியா போச்சு!
@@@dheva--//இந்த பின்னூட்டம்.... சித்ராவுக்கு இல்லை... சாலமனுக்கு....!
சாலமன் சார்....கங்கிரஜுலேசன்....! மரம் ஏற கத்துக்கிட்டு ஏறினிங்களா இல்லை சும்மா போய் ட்ரை பண்ணினாலே மேலே ஏறிடலாமா? ஏன்னா நான் சில பீச்சுக்களுக்கு போனா.. Law of சாலமனை பாலோ பண்ணலாம் இல்லையா..... ஹா....ஹா...ஹா...
சாலமன்.. இந்த wifeங்களே இப்படித்தான் பாஸ் எப்பவும் திட்டிகிட்டே இருப்பாங்க.. கோபபட்டுகிட்டே இருப்பாங்க..... நீங்க.. கலக்குங்க.. பாஸ் ! உங்காளால.. மியாமி பீச் ச எப்படி மறக்க முடியாதோ....அதே மாதிரிதான் சார் எங்களாலயும்.....ஹா... ஹா....ஹா..//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
சிரிச்சி சிரிச்சு இன்னும் வயிறு வலிக்குது..ஹா...ஹா.........
அவரு தங்கம் தான். அதற்காக சந்தேகம் வரும் போதெல்லாம் உரைக்கல்ல உரசி பார்க்கணுமா,
சாலமன் அண்ணன் முக்கியமான வேலைல இருக்கும் போது கத்தி டிஸ்டர்ப் பண்ணிட்டீங்களே.....
(ஆமா வீட்டுக்கு போன உடனே அண்ணனுக்கு சேதாரம் எவ்வளவு..???)
நெக்ஸ்ட் டைம் மியாமி பீச்சுக்கு ஓரு டிரிப் அடிச்சுற வேண்டியதுதான்....
:)
பாவம் மனுஷன்... பந்த சாக்கா வெச்சு பாதி தூரம் ஏறிட்டாரு... இப்புடியா வாக்கிங்க பாதிலேயே விட்டுட்டு வந்து ஆப்படிப்பீங்க.... அவர் எவ்ளோ பீல் பன்னிருபாறு பாவம்.... ;-))))
nice, could u pls share more pics of miami beach
//இன்று வரை, என் ஆளு தான் பந்து எடுக்க மட்டும் போனதாகவும், பாதி மரம் ஏறியதும் களைத்து போனாதாகவும் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு இறங்கி வந்ததாகவும் கூறுகிறார். பனை மரத்தின் அடியில் குடித்தது பால்தானாம் - கள் இல்லையாம். "நம்பிட்டேன்."//
நீங்க சொல்றது நம்புற மாதிரி இல்லையே ( நம்புறேன்னு சொன்னது:))
நமக்கு கஷ்டமா இருக்கறது இங்க எவ்வளவு பேருக்கு சந்தோஷமா இருக்கு பாருங்க. நான் இருக்கேங்க உங்களுக்கு துணையா.
அனுபவத்தை சுவைபட பகிர்ந்து இருக்கின்றீர்கள்.
நம்புங்க...அவர் சொல்றது உண்மையாகவும் இருக்கலாம்....இல்லேன்னா இந்தியாவில விசாரணை கமிசன் அமைங்க...இந்த ஜென்மத்துக்கு விடைகிடைக்காது.
சித்ரா சரியான சிரிப்பு
பிறந்த நாள் உங்களுக்கு ஆனால் கொண்டாட்டம் அவருக்கு தான்.
விதிமுறைகள் இரண்டும் தத்துபித்துன்னு இல்லாம தத்துவார்த்தமா இருக்கு:)
//இன்று வரை, என் ஆளு தான் பந்து எடுக்க மட்டும் போனதாகவும், பாதி மரம் ஏறியதும் களைத்து போனாதாகவும் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு இறங்கி வந்ததாகவும் கூறுகிறார். //
விடாதிங்க.. உண்மைய ஒத்துக்கும் வரை கேட்டுட்டே இருங்க..
கலக்கல் சித்ரா.
//There is never a dull moment in our happily married life. :-)//
அப்படியே இருக்க வாழ்த்துகள்
சுவையாக இருந்தது உங்கள் அனுபவம். அதுவும் பின் பாதி சூப்பர்.
ஏங்க நாங்கெல்லாம் அப்பாவிங்க நம்புங்க
அடுத்த ஆண்டு காலண்டரை அமெரிக்காவிலிருந்துதான் இறக்குமதி பண்ணனும் :-))
தாயம்மா கலக்கிறீங்க.
எப்பிடிம்மா இப்பிடி !
Lovely post Chitra,
very interesting and enjoyable...!
Loved your humourous presentation dear.
ம்ம்ம்
கடைசி வரியில் நிக்குறீங்க சித்ரா
:)
ஹா...ஹா... மிஸ்டர்.சாலமன்.. சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்ல...(என்னவொன்னு எனக்கு மரம் ஏறத்தான் தெரியாது..)
நாங்களும்தான் போன வாரம் பீச் போனேமே!
பீச்சே முக்காடு.
இப்படி நீரில் விளையாடும் போது வேர்வை கடலா, ஜொள்ளு கடலா என்று தெரியாது பாருங்கள்.
நல்ல பன்ச்
ஹாய் சித்ரா,
ஜாலியா எழுதியிருக்கீங்க.
பதிவப் படிச்சா பயந்த மாதிரி தெரியலியே!
இல்லைங்க சித்ரா சாலமன் ரொம்ப அப்பாவிங்க. அவரு அதல்லாம் பாத்திருக்க மாட்டாரு. அப்புறம் மியாமி வரைக்கும் வந்துட்டு எங்க ஊருக்கு வராம போய்டீங்களே. இது நியாயமா :-).
Interesting experience .
what a ball game!
என்னா போங்க! நீங்க
போடுற பாலையெல்லாம்
சிக்சருக்கு அனுப்புறீங்க!
அன்னைக்கு உங்க வீட்டுக்காரர்
அடிச்சிருக்காரு பாருங்க.
அலப்பறையான சிக்சர்!! :)))
ஜாலியா எழுதிருக்கிங்க...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...ஆனா ஏதோ பெருக்கு பயம் வந்த்தை மறைத்து பதட்டம்னு சொல்றீங்களே..நம்பமாட்டேன்..
Neenga paravallai chitra... Naan ennavaroda shopping mall ponaale, avar enga paakraar, yaarai sight adikraar nu track vechu sandai pidikara aalu
ஒரு நாள் கொஞ்சம் சந்தோசமா இருந்துட்டு போகட்டுமே?
இன்று வரை, என் ஆளு தான் பந்து எடுக்க மட்டும் போனதாகவும், பாதி மரம் ஏறியதும் களைத்து போனாதாகவும் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு இறங்கி வந்ததாகவும் கூறுகிறார்.//
அடடா.. என்ன சொன்னாலும் நம்பாதவங்கள வச்சுகிட்டு எவ்வளவுதான் யோசிச்சு யோசிச்சு சொல்றது.. ஸ்ஸ்.. ஹப்பா..
நான் எப்ப மியாமி பீச்சைப் பார்க்கப் போறேனோ?
சாலமன் சார் கவலை படாதீங்க பாத்துக்கலாம்
முன்னமே நீங்க சொன்ன மாதிரி இருக்கு சித்ராக்கா. நீங்க சொன்னீங்களா இல்லேன்னா நான் கனவு காண்கிறேனா?
பாதி மரத்துல சிக்கிட்டாரோன்னு நானும் அச்சச்சோன்னு நினைச்சேன். தலைவரு நல்லாத்தான் பிளான் பண்ணியிருக்காரு. கொடுத்து வெச்ச அண்ணாச்சி...
அடுத்த போட்டோ சூட் எப்போ?...
இதை எனக்காக கேக்கல...
இப்பெல்லாம் 'மியாமி' எங்க இருக்கின்னு யாராவது கேட்டா என்னான்னு சொல்லுவீங்க? ( வெற்றிக்கொடிகட்டு வடிவேலு ஸ்ரைலில் சொல்லுங்க)
பக்கத்துல இருக்க ரூம்மேட்டுக்கு தமிழ் தெரியாது. நான் சிரிச்சதைப் பாத்துட்டு முறைச்சு முறைச்சு பார்க்கிறான்.
***இன்று வரை, என் ஆளு தான் பந்து எடுக்க மட்டும் போனதாகவும், பாதி மரம் ஏறியதும் களைத்து போனாதாகவும் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு இறங்கி வந்ததாகவும் கூறுகிறார்.***
நான் நெஜம்மாவே அவரை நம்புறேங்க! அங்கே ஏறித்தான் போய்ப் பார்க்கனும்னு ஒண்ணும் இல்லையே! :)
ஆனால் நெறைய விசயங்களை பெண்களிடம் நிரூபிப்பது கஷ்டம். :)
இவ்வளவுநாள் பழக்கமான என்னை நம்பாம எப்படி இவரை னு கேக்காதீங்க!
This is a Guy thing, Chitra! :)))
புகைப்படங்களும் , அனுபவங்களும் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
.Law # 3 :நோ கமெண்ட்ஸ்
//எல்லோரும் போனோம். நீச்சல் தெரியாத என்னையும் கடலில் ஆட்டம் போட தள்ளி விட்டார்கள். இவர்கள் என் நண்பர்களா, இல்லை எதிரிகளா//
அதானே...
//பாளையங்கோட்டைக்கு வழியக் கேட்டா, பரலோகத்துக்கு வழி சொன்னார்.//
ஹ ஹ ஹா ஹா ஹா
//There is never a dull moment in our happily married life. :-)//
தொடர வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு
சித்ரா அவ்வளவும் அனுபவம்
சாலமன்
விடுங்க பாஸ் இந்த பெண் பிள்ளைகலே அப்படித்தான் நீங்களும் எவ்வளவு தடவதான் போய் சொல்லுவிங்க வாய்வலிக்காது உண்மையை ஒத்துக்குங்க...
பாளையங்கோட்டைக்கு வழியக் கேட்டா, பரலோகத்துக்கு வழி சொன்னார்.
தாமிரபரணி கரையை விட Crandon கடற்கரை அருகில் இருந்ததால் தண்ணீரை விட்டு வெளியே கரைக்கு வந்தேன்"//
:)))
சித்ரா ஜி, வீட்டுக்கு போன பிறகு நடந்த அனுபவத்தையும் எழுதியிருக்கலாம். ஹிஹிஹி
மறுபடி அங்கே எப்போ போறதா ப்ளான்???:)
டைட்டிலைப் பார்த்து பயந்துட்டு, ஆபீஸ்ல படிக்கலை :). பரவாயில்லைங்க. உங்களுக்கு நல்ல மனசு.
கலக்கலான அனுபவம் சித்ரா
அசத்துங்க..
"லிண்டா விரல் காட்டிய திசையில், ஒரு topless model அழகி, ஒரு calendar photo-shoot ஒன்றுக்காக பல போஸ் களில் சிரித்து கொண்டு இருந்தது அரை குறையாக கூட்டம் நடுவில் தெரிந்தது."
போட்டோ இல்லீங்களா ( i mean , மரத்தில் ஏறும் போட்டோ ? )
ஏம்மா செல்லத்தையும் செலவத்தையும் விட்டு கூட்டிப்போக வில்லையா?
இப்படி நீரில் விளையாடும் போது வேர்வை கடலா, ஜொள்ளு கடலா என்று தெரியாது பாருங்கள்.//
ஹா ஹா ஹா மாட்டிக்கினாரா சாலமன்.. ஐ லைக் இட் பா..:)))
நல்ல சுவாரஸ்யமான கதை..!
ஹாஹாஹா... சூப்பர் அனுபவம்ங்க சித்ரா.
பதிவு சூப்பப்ர்...
LOL As usual Interesting!!!!!
பதிவில் பகிர்வு படங்கள் மிக அழகு!
பதிந்தவர் படமோ மிரட்டல் அழகு!!
இன்றைய கண்ணாடி படத்த சொன்னேன்.
முன்னாடி படத்த சொல்லல
கண்ணாடி படத்ததான் சொன்னேன்... நான்
முன்னாடி சொன்னத நீங்க
நின்னாடி தப்பா எடுத்துக்காதிங்க
//There is never a dull moment in our happily married life. :-)//
Nice to hear that. Keep going...
முன்னாடி படத்த சொல்லல
கண்ணாடி படத்ததான் சொன்னேன்... நான்
முன்னாடி சொன்னத நீங்க
பின்னாடி தப்பா எடுத்துக்காதிங்க
ஆஹா....... ஓஹோ......... "மியாமி பீச்" க்கு வந்த அனைவருக்கும் நன்றி - பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி - ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி - தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி....!!!
Hai take it easy. why feel like this. he made tempting you for getting angry and jelous. he is playing. take it easy. how are you and your family?
miyami beach ku ellam wife pai yaarathu kooti povangala?. soloman sir thappu pannittar. enaku oru phone pannina kuuda poiruppan.
Hi Chira, Superaa irunthathu Miami beachvivarippu. Unnoda comedy style sirippu sirippaa varuthuppa. Slomonoda intha maram yerura talenta adikkadi use pannikko vittudaatha. Birthday partye ippadi jollurathukku thaan arrange pannuraro ennavo... :-))
சித்ரா போட்டோவில் கண்ணாடி உங்கள் கண்ணுக்கு ரொம்ப சிறுசா இருக்கு
Really very nice Chitra. I enjoyed ur post.
//There is never a dull moment in our happily married life.//
:)
Interesting Experience Chitra..
I enjoyed your story telling :)
எல்லாம் சரி , அது என்ன புதுசு புதுசா போஸ் குடுக்குரிக்க , அது என்னா கண்ணாடி சின்னபுள்ள தனமா இருக்கு , (அசத்துங்க )
Well written. Do drop by
http://padhuskitchen.blogspot.com
when u find time
//"திருநெல்வேலிய தேடுது தேடுதுன்னு சாலமனை படுத்துறீங்களே, அப்படியே direction பாத்து போனா, தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் வரும். அங்கே இருந்து ஒரு மணி நேரம்தான்" என்று பாளையங்கோட்டைக்கு வழியக் கேட்டா, பரலோகத்துக்கு வழி சொன்னார் //
ஹா ஹா ஹா... சித்ரா.. அப்படி எதாவது ஐடியா இருந்தா.. என்னையும் சேர்த்துக்கோங்க..
டிக்கெட் சார்ஜ் மிச்சம் ஆகும்.. :D :D
//இப்படி நீரில் விளையாடும் போது வேர்வை கடலா, ஜொள்ளு கடலா என்று தெரியாது பாருங்கள்.///
Mr.Solomon... Youuuuu Tooooooo (Gowravam sivaji style aaa padinga...)
//பிறந்த நாள் எனக்கு - கொண்டாட்டம் அவருக்கு!//
ஹி ஹி ஹி.. சரி சரி விடுங்க.. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.. :D :D ;) ;)
//முதலில் பயத்தில் கத்தியவள் இப்பொழுது கோபத்தில் கத்தினேன். வேறு என்ன செய்ய? மரம் ஏறியா உதைக்க முடியும்?///
ஹா ஹா ஹா.. :D :D
முடியல சித்ரா.. சிரிச்சு முடியல..
போங்க சித்ரா.. எப்படியாச்சும் நீங்க மரத்துல ஏறி இருக்கணும்.. :P :P
(அது சரி.. எதாச்சும் male மாடல் என்றாலும் பரவாயில்லை... :) ;)
செம அனுபவம் தான் போங்க.. இனிமே அந்த பீச் பக்கம் போவீங்க.. ;) :)
நல்லா இருந்தது..!!
தென்னை மரத்தில் ஏறினாலும் பார்த்தது பந்தைத்தான்....என்றால் யார்தான் நம்புவார்கள்.....
நீங்க ரொம்ப அப்பாவி சித்ரா.. அண்ணாத்தை சொல்றதையெல்லாம் அப்பிடியே நம்புறீங்களே :-)))))
//மரம் ஏறியா உதைக்க முடியும்?//
ஹா ஹா ஹா ஹா அதை செய்துருந்தா இன்னும் சூப்பரா இருந்துருக்கும் ஹா ஹா ஹா...
சூப்பரா எழுதிருக்கீங்க மேடம்....
Post a Comment