Sunday, December 5, 2010

ஒரு வினாடியில் "வடை" போச்சே!

இரண்டு சம்பவங்களை, இன்று  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  சென்ற வாரம்,  எங்க பக்கத்து ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்:

வீட்டில் எல்லோரும் வெளியே சென்று இருந்த நேரத்தில் - அந்த வீட்டு   குடும்ப தலைவர்,  தன் துப்பாக்கி எடுத்து தற்கொலைக்கு முயன்று விட்டார்.  சுட்ட அடுத்த நொடியில், அவர் நினைத்த படி உயிர் போகவில்லை.   மரண பயம் மனதில் படற,  தானே அவசர உதவிக்கு 911 போன் கால் செய்து உதவி நாடி இருக்கிறார்.  ஐந்து நிமிடங்களுக்குள்,  உதவி வந்து மருத்துவமனையில் சேர்த்தும் பயன் அளிக்காமல், சில மணி நேரங்கள் கழித்து இறந்து விட்டார்.


இறக்கும் முன், மரண வாக்குமூலமாக அவர்  மருத்துவர்களிடம் தெரிவித்தது என்ன தெரியுமா?  "சுடும் வரை,  எனக்கு பயம் இருந்தது.  எனக்கு இருந்த கஷ்டங்களை மட்டுமே நினைத்து கொண்டே இருந்தேன்.  பயம் குறைந்தது. உடனே சுட்டு விட்டேன். அடுத்த நொடியே, நான் நினைத்தது போல இறக்காமல் இருந்த பொழுது,  வாழ்க்கையின் அருமை புரிந்தது.  மரண பயம் வந்து விட்டது. என் பிரச்சனைகளை எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் என்று தோன்றி விட்டது. நான் வாழ ஆசைப்படுகிறேன்.  என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்," என்று கேட்டு இருக்கிறார்.
 அடங் கொக்க மக்கா -  கஷ்டங்களை மட்டும் நினைத்து depression  (அதிக மன சோர்வு) ஆகி,  இந்த முடிவு வந்ததற்கு பதில், கொஞ்சமாவது positive ஆக யோசித்து கொண்டு இருந்து இருந்தால்,   இந்த நிலை அவருக்கு இல்லையே..... மக்கா, இந்த பதிவை  வாசிக்கும் யாராவது "அப்படி இப்படி"  நினைத்து வாழ்க்கையின் எல்லையை நோக்கி ஓட நினைத்து கொண்டு இருந்தீர்கள் என்றால் - அப்படியே ஒரு அபௌட் டர்ன், ப்ளீஸ்.   போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே! 

அது ஒரு புறம் இருக்க,   எங்க நண்பர் முருகன்,  எங்களிடம் பகிர்ந்து கொண்ட  ஒரு  சம்பவம்:

முருகன் வேலை பார்க்கும் ப்ராஜெக்ட் ஒன்றில் கூட வேலை செய்யும் தமிழர் ஒருவர், ரவி.   தனக்கு பெண் பார்க்கும் படலம் வீட்டில் ஆரம்பித்து இருப்பதாக சொல்லி,   தமிழகத்திற்கு  வந்து இருந்தார்.   அவரது  அம்மா, இவருக்காக தேர்வு செய்து வைத்து இருந்த பெண்கள் ஒரு லிஸ்ட் போடும் அளவுக்கு இருந்ததாம்.  ரவி அவர்களை நேரில் ஒவ்வொருவராக பார்த்து - சந்தித்துப் பேசி  - இறுதி தேர்வு செய்து -  முடிவு எடுக்க ஏற்பாடாம். 

ஒவ்வொருவராக பார்த்து,  பெண் வெள்ளையாக - அழகாக - இல்லை என்ற காரணத்தைத் தன் அம்மாவிடம் சொல்லி கழித்து விட்டார்.  லிஸ்ட்ல் இன்னும் இரண்டு பெண்கள் தான் பார்க்க வேண்டியது இருந்தன.


நண்பர்கள் எடுத்து சொல்லியும் கேட்பதாக இல்லை.  முருகன்  வெளிப்படையாகவே ,   " நீ பெரிய ஹீரோ லுக்னு நினைப்பாடா?  பொண்ணு மட்டும் வெள்ளை வெள்ளைனு ஏண்டா அலையுற?  வெள்ளை தான் அழகுனு - சோப்பு, கிரீம் கம்பெனிகாரன் தவிர வேற எவனும் சொன்னதில்லை.  வெள்ளை பொண்ணை உனக்கு பிடிச்சு இருந்தாலும் - அவளும்,   'இந்த மாப்பிள்ளை வேண்டாம்.    அமாவாசையும் பௌர்ணமியும் சேர்ந்து வந்தாப்புலதான்  இருக்க போகுதுனு,'  சொல்லிட்டா என்ன செய்ய போறே?" என்று சொல்லிட்டாரு.

    "அறுப்பு காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி" என்று நெல்லை பக்கம் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன். அது  போல, ஏதோ தான் அமெரிக்காவில் இருப்பதே பெரிய காந்த சக்தி என்பது ரவியின்  பதில்  வாதம்.
  நினைப்ஸ் தான்,  புளைப்ஸ் கெடுக்த்ஸ்.

லிஸ்ட்டில் பாக்கி இருந்த   ஒரு பெண்ணின் தந்தையை,  ரவியின்  குடும்பம்,  கோவிலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  தன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து இருப்பதாகவும், இன்றே பெண்ணையும் அங்கே பார்த்து விடலாம் என்றும் ரவியின் அம்மாவிடம், பெண்ணின் தந்தை  சொல்லி இருக்கிறார்.  பெண்ணின் தந்தை , நல்ல கருப்பு நிறம்.  பெண்ணும் அப்படித்தான் என்ற நினைப்பில், தன் அம்மாவிடம்,  எப்படியாவது இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்று கூறி விட்டு,  ரவி  காருக்கு வந்து விட்டார்.   அம்மாவும்  இவர் பேச்சை கேட்டு,   இடத்தை தட்டி கழித்து விட்டு காருக்கு வந்து விட்டார்கள்.

கிளம்பு முன், இளநீர் அருந்தி கொண்டு இருந்த பொழுது,  அந்த பெண்ணின் தந்தை, தனது மனைவி மற்றும் மகளுடன்,  அவரது காரில்  ஏறுகின்ற பொழுது,  ரவி  தற்செயலாக பார்த்து இருக்கிறார்.  பெண்,  இவர் எதிர்ப்பார்த்து தேடி கொண்டு இருந்த நிறம்.  ரவி  நினைத்த மாதிரி, அப்பாவின் நிறத்தில் இல்லாமல், அம்மாவின் நிறத்தில்...... அவ்வ்வ்வ்.....

அம்மாவிடம் எவ்வளவோ கெஞ்சியும், அம்மா  மறுத்து விட்டார். "அந்த இடம் வேண்டாம் என்று நீ சொன்னதை கேட்டு,  கோவில்னு கூட பார்க்காம,  என்னவெல்லாம் பொய் சொல்லி - அவங்க மனம் கோணாம -  வேண்டாம்னு  சொல்லி விட்டு வந்து இருக்கேன். இப்போ, எந்த முகத்தை வச்சுக்கிட்டு போவேன்?" என்று சொல்லி விட்டார்.

ரவி , முருகனை அழைத்து, " எனக்கு எப்படிடா தெரியும்?  பனமரம் நிறத்துல அப்பா வந்து நிற்கிறார். உரிச்சு வச்ச  பனங்கிழங்கு நிறத்துல மகள் இருப்பாள்னு நான் நினைச்சேனா?, " என்று "நியாயம்" கேட்டு இருக்கிறார்.
முருகன், "அந்த பொண்ணுக்கு கோவிலுக்கு வந்த  நல்ல நேரம்டா. தப்பிச்சிட்டா!" என்றார்.

 இந்த ட்ரிப்ல எதுவும் அமைந்து வராமல்,  திரும்பி வந்து விட்டு,  இன்னும் "வடை போச்சே" என்று அந்த பெண்ணை நினைத்து கொண்டு, ரவி   புலம்பி கொண்டு இருக்கிறார்.  இவரை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  இந்த vivel சோப்புல இருந்து எல்லா சிகப்பழகு கிரீம்கள்  வரை இந்த  "கலர் மேஜிக்  கொசுக்கடி"  தொல்லை தாங்க முடியல......... Perfect Radiance - பரிபூரண சர்மம் - மாசு மருவற்ற மென்மையான (???) அழகு - எல்லாம் சிகப்பழகுக்கு மட்டும் தான் என்று பெரிய ஆராய்ச்சி எல்லாம்  பண்ணி கண்டுபிடிச்ச மாதிரி  சொல்லிட்டாகப்பு....... அதை நிசம்னு நினைச்சு, இந்த பயபுள்ள இப்படி அலையுதே!!!

சிகப்பழகு கிரீம் அதிகம் பயன்படுத்துவதால்  வரும் தீமைகள் பற்றி:
 http://www.naturalnews.com/022893.html

ம்ம்ம்ம்........

119 comments:

NaSo said...

உண்மைதாங்க. சிகப்பு தான் அழகுன்னு நம்மை இந்த விளம்பரதாரர்கள் மாற்றிவிட்டார்கள். எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் திருந்த மாட்டேன்கிறார்கள்.

NaSo said...

எப்போது உலக அழகியாக ஒரு இந்தியர் தேர்வு செய்யப்பட்டாரோ அப்போதே இந்த சிகப்பழகு கிரீம்கள், சோப்புக் கம்பனிக்காரகள் இந்தியாவை ஒரு சிறந்த சந்தையாக மாற்றிக் கொண்டார்கள். நம் மனதில் சிகப்பு தான் உண்மையான அழகு எனப் புகுத்தி, அவர்களின் வியாபாரத்தை உயர்த்திக் கொண்டார்கள்.

Ramesh said...

//போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே!


செம..

ஆமாங்க... லட்சனத்துக்கும் அழகுக்கும் வித்தியாசம் புரியாம அப்புறம் நாம எப்படி இருக்கமோ அதுக்குத் தகுந்த பொண்ணு அமைஞ்சா போதும் அப்படிங்கற நினைப்பும் இல்லாம.. இவங்க பன்ற அழும்பு ரொம்ப ஓவர்தான்..

a said...

தற்கொலைக்கு முயன்ற மனிதர் பாவம்......... அதுவும் கடைசி நொடிகளில் அவரின் மனநிலை...... கொடுமை...........
அழகு என்பதை பலபேர் தப்பாக புரிந்துகொண்டுள்ளார்கள்.........

Arun Prasath said...

இப்டி எல்லாம் கூடவா பொண்ணு வேணாம்ன்னு சொல்லுவாங்க? மைன்ட் ல வெச்சுகரேன்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகு பொருட்கள வச்சி தொடர்ந்து ஏமாத்திட்டு தான் இருக்காங்க.

goma said...

நினைப்ஸ் தான், புளைப்ஸ் கெடுக்த்ஸ்.
அருமையான பன்ச் இக்கால மக்காஸ் பாஷையில் சொல்லியிருக்கிறீர்கள்

எல் கே said...

சிகப்பு அழகில்லை எல்லாம் இந்த விளம்பரங்களும் சினிமாக்களும் பண்ற தொல்லை

sathishsangkavi.blogspot.com said...

மனசுதாங்க அழகு...

மொக்கராசா said...

என் நண்பர்களில் எத்தனையோ பேர் இந்த மாதிரி 'வெள்ளை தோலுக்கு' ஆசைப்பட்டு நிம்மதி இல்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தோலை நம்புறவன் சுத்த முட்டாள் இதை உங்கள் ரவியிடம் சொல்லுங்கள்.

vasu balaji said...

இதுக்கு வாழ்க்கை போச்சேன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.:)

இளங்கோ said...

//நினைப்ஸ் தான், புளைப்ஸ் கெடுக்த்ஸ்.//
Hahha :)

Madhavan Srinivasagopalan said...

ஒரு நொடி -- தீர்மானிக்கிறது விதியை......

பெண் பார்த்த கதையை நினைத்து அவர் மீது பரிதாபம்தான் வருகிறது..

Kousalya Raj said...

வெளி தோற்றம் (நிறம் ) மட்டுமே அழகு இல்லை. இன்னும் இதை புரிந்து கொள்ளாமல் இருந்தால் இந்த மாதிரித்தான் புலம்ப வேண்டி இருக்கும்...

நல்ல பகிர்வு சித்ரா...

pichaikaaran said...

நல்லவராக வாழ்கிறோம் என்ற மன நிம்மதியே உண்மையான அழகு

தமிழ் உதயம் said...

வெள்ளை தான் அழகுங்கிற நினைப்பில் வளர்ந்தவர்களின் மனநிலை. வேறென்ன சொல்வது.

அமுதா said...

தற்கொலை - ஒரு நொடி தவறு வாழ்க்கையையே மாற்றிவிட்டதே அவருக்கு மட்டுமா? அவராவது போய் செர்ந்துவிடுவார்...குடும்பத்தில் இருப்பவர்கள்?


அழகு - என்ன என்று சொல்ல? நிறைய பேர் அழகு என்று இப்படிதான் திரிகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம்... சினிமாவில் கூட சாதாரணமாக/அசிங்கமாக இருக்கும் பையனைத் தேடி தேவதையே வருவாள்.... ஆனால் ஏன் ரிவர்ஸ் நடப்பதில்லை?

Unknown said...

சூப்பர்! அந்த தற்கொலை போசிடிவே திங்கிங் & மாப்பிள்ளை வடை! :-))
சினிமா மாதிரி நடந்து இருக்கு!

Kurinji said...

romba romba nalla post chitra..

arasan said...

சித்ரா மேடம்
ரெண்டும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது..
அடிச்சி தூள் கெளப்பிட்டிங்க வாழ்த்துக்கள்..
அந்த ரவிக்கு கல்யாணம் நடக்கிறது ஒரு பெரிய ??????????? தான்..
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..
நான் மிகவும் ரசித்தேன்..

சுந்தரா said...

முதல் சம்பவம் :(

இறக்கிறவரைக்கும் எப்படியாவது பிழைத்துவிடமாட்டோமா என்று எதிர்பார்த்தபடியே செத்திருப்பார் அவர்.

இரண்டாவது...இன்னும் எத்தனைகாலம்தான் இந்தக் கலர் மாயை பிடிச்சு ஆட்டுமோ?

((கேட்டா, அடுத்த ஜெனரேஷனாவது அழகா, சிவப்பா பிறக்கணும்னு ஆசைதானாம்...சொல்லிக்கிறாங்க :) ))

துளசி கோபால் said...

ஏற்கெனவே சிகப்பா இருக்கும் பொண்ணுகளைத்தானே விளம்பரத்தில் காமிக்கிறாங்க.

உண்மையில் ஒரு காக்காயை வெளுப்பாக்கிக் காமிச்சால்தான் நம்புவேன்.

யாரும் எஸ்பிஸிஏகிட்டே வந்தி வச்சுடாதீங்கப்பா!

Chitra said...

////ஏற்கெனவே சிகப்பா இருக்கும் பொண்ணுகளைத்தானே விளம்பரத்தில் காமிக்கிறாங்க.

உண்மையில் ஒரு காக்காயை வெளுப்பாக்கிக் காமிச்சால்தான் நம்புவேன்.////

சரியாக சொல்லி இருக்கிறீங்க, துளசி மேடம்.

துளசி கோபால் said...

oops....

வத்தி வச்சுறாதீங்கன்னு இருக்கணும் சித்ரா..

வடைன்னதும் ஆடிப்போயிட்டேன் போல:-)

வினோ said...

நம்ம ஆளுங்க யோசிக்கவே மாட்டங்க...

ஹுஸைனம்மா said...

நண்பர் சொன்னதுபோல, அந்தப் பொண்ணுக்குத்தான் நல்ல நேரம் உண்மையில்!!

Jaleela Kamal said...

மிகசரியான பதிவு,
நல்ல வேலை அந்த பொண்ணு தம்பித்ட்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே,
இரண்டு வடை போன சமாச்சாரமும் மிக அருமை

sakthi said...

அப்படியே ஒரு அபௌட் டர்ன், ப்ளீஸ். போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே!

ம்ம்ம்

மனதில் வைத்து கொள்கிறேன் பாஸ்

சைவகொத்துப்பரோட்டா said...

ஹையோ...ஹையோ... :))

pudugaithendral said...

வடை போனதை நினைச்சு அவர் பட்ட கஷ்டம் பாவம்பா....

'பரிவை' சே.குமார் said...

அழகு என்பதை பலபேர் தப்பாக புரிந்துகொண்டுள்ளார்கள்...

ராமலக்ஷ்மி said...

இரண்டு பகிர்வும் காலத்துக்கு அவசியமானவை.

// வெள்ளை தான் அழகுனு - சோப்பு, கிரீம் கம்பெனிகாரன் தவிர வேற எவனும் சொன்னதில்லை.//

அதே அதே:))!

vinu said...

nammalukkum ponnu paaka aarambichu irrukkaanga paarpomm enna aaguthunnu

இம்சைஅரசன் பாபு.. said...

//வாழ்க்கையின் எல்லையை நோக்கி ஓட நினைத்து கொண்டு இருந்தீர்கள் என்றால் - அப்படியே ஒரு அபௌட் டர்ன், ப்ளீஸ். போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே! //

இந்த ஒரு வரி உங்கள் மொத்த பதிவிற்கு அழகு

Anonymous said...

இந்த vivel சோப்புல இருந்து எல்லா சிகப்பழகு கிரீம்கள் வரை இந்த "கலர் மேஜிக் கொசுக்கடி" தொல்லை தாங்க முடியல//
2ஹஹா ஆமா கரெக்டா சொன்னீங்க

அம்பிகா said...

உண்மைதாம்ப்பா. நிஜமாகவே இந்த விளம்பரங்கள் ...தாங்க முடியல. அதை நம்பி கண்டதையும் பூசி இருப்பதையும் நிறைய பேர் கெடுத்துக் கொள்கிறர்கள்.. அவசியமான பகிர்வு.

ISR Selvakumar said...

கட்டுரை எழுதப்பட்டிருக்கும் கோணத்திற்கு எதிரான மனநிலை உடையது நமது சந்தை!

இது மனித மனங்களின் தடுமாற்றத்தையும், ஏமாற்றத்தையும் தனது பணம்பறிக்கும் வசதிக்காக உருவாகி வளர்ந்துவரும் சந்தை.

இதனை வெற்றி கொள்ள ஒரே வழி தனது தோற்றத்திலும், திறமையிலும் நம்பிக்கை வைப்பதுதான்.

Gayathri Kumar said...

You have given great messages thru this post!

வைகை said...

இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் வடை என்ன, வடை சுட்ட எண்ணெய் கூட கிடைக்காது!!! கிடைக்கக்கூடாது!!!( அப்பா!! என்ன ஒரு வயித்தெரிச்சல்)

Unknown said...

:( ;)

Anonymous said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க சித்ராக்கா!
வண்ணத்தில மட்டுமே ஒருவரது மதிப்பை எடை போடுவது மிகத் தவறு!

RVS said...

// "அறுப்பு காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி"//
புதுசா கத்துக்கிட்டேன்... நன்றி.. ;-)

THOPPITHOPPI said...

நீங்களும் வடை வாங்க ஆரம்பிச்சிட்டீங்கலானு நினைச்சேன். உங்களை சுத்தி நடக்கும் விஷயங்களை நல்லா கவனிக்கிரிங்க

தினேஷ்குமார் said...

என்ன வென்று சொல்வது
மதில் மேல் பூனை
நானாக இருந்தாலும்
என்னோடு மதில் மேல்
பயணிக்க ஒரு பூனை
இல்லாமலா போகிடும்

அக்கா கரக்டா ..............

வெங்கட் நாகராஜ் said...

முதலாவது விஷயம்: நம்பிக்கைதானே வாழ்க்கை. இரண்டாவது விஷயம்: கருப்பே அழகு காந்தலே ருசி என்பது நிறைய பேருக்கு புரிவதே இல்லை.

சசிகுமார் said...

நாம கொஞ்சம் கலரா இருந்தா யாருக்கும் புடிக்காதே, ஹி ஹி ஹி

Unknown said...

எத்தனையோ இடங்கள்ல பொண்ணு கலர் கம்மியா இருக்குன்னு ரிஜெக்ட் பண்ணிட்டு.. அவங்க மனசை நோகடிச்சுட்டு போறாங்க..

.. அப்புறம் தற்கொலை பண்ணிட்டு செத்தவர் பாவம்..

கோமதி அரசு said...

//போரட்டமாய் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கே//.

அருமை.

நல்லபதிவு.

விளப்பரங்கள் எல்லாமே பொய் தான். அதை புரிந்து கொள்ளாத மக்கள் இருக்கும் வரை என்ன செய்வது.

அழகு நிறத்திலா

சிவகுமாரன் said...

அம்மாடி ... எவ்வளோ பெரிய விஷயம், இப்படி சுளுவா சிரிக்கிறாப்பல சொல்லிபுட்டீக
.

Unknown said...

வடை மட்டுமில்ல உயிரும் போயிருச்சே

Prabu M said...

சிரிப்புதான் வருதுக்கா அமெரிக்க மாப்பிள்ளைய நினைச்சா.... :-)

Vidhya Chandrasekaran said...

வாழ்க்கை அழகானது. முதல் செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.

சாந்தி மாரியப்பன் said...

பொண்ணு தப்பிச்சிக்கிச்சேய்ய்ய்ய் :-)))))

எப்பூடி.. said...

//வெள்ளை தான் அழகுனு - சோப்பு, கிரீம் கம்பெனிகாரன் தவிர வேற எவனும் சொன்னதில்லை. //

இது சூப்பரு.

Asiya Omar said...

கொஞ்சம் வெட்டி பேச்சுன்னு தான் பேரு,ஆனால் அத்தனையும் உருப்படி தான் மக்கா !

சத்ரியன் said...

// "அறுப்பு காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி" //

அட சாமிகளா...! எலிக்கேவா....? செரி தான்!

சத்ரியன் said...

//நினைப்ஸ் தான், புளைப்ஸ் கெடுக்த்ஸ். //

சித்த்த்ஸ் பஞ்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

சத்ரியன் said...

//பனமரம் நிறத்துல அப்பா வந்து நிற்கிறார். உரிச்சு வச்ச பனங்கிழங்கு நிறத்துல மகள் இருப்பாள்னு நான் நினைச்சேனா?//

கொஞ்ச நேரம் பொறுத்திருக்கலாமே முருகா.....!
(கலரென்ற சொல்லுக்கு முருகா...பக்தி பாட்டு ஞாபம் வந்துருச்சி.)

ம.தி.சுதா said...

அக்கா இன்றும் நல்ல கருத்துள்ள விடயங்களை பதிவிற்கெடுத்தள்ளீர்கள் அருமை...

அதிலும் தற்கொலை பற்றி ஒன்று சொல்லட்டமா உலகத்திலேயெ துணிச்சலான செயல் தன்னை கொல்வது தானாம்...

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம் இப்பிடித்தான் யோசசிக்காம நெறையப்பேர்
வாழ்க்கையைக் கெடுத்துக்கிறாங்கம்மா.
மனிதப்பிறவி கடவுள்நமக்குக் கொடுத்துள்ளபரிசு.நம்மால் முடிந்தநல்லதையெல்லாம் சாதித்துக்
காட்டவேண்டும். நல்லது.
{தேனுவிடம் கேட்டு,தேனு சொல்லிக்கொடுத்தபடி எழுதினேன்.}தகவல்கிடைத்ததற்கு
பதில் போடவும்

ஸாதிகா said...

// "சுடும் வரை, எனக்கு பயம் இருந்தது. எனக்கு இருந்த கஷ்டங்களை மட்டுமே நினைத்து கொண்டே இருந்தேன். பயம் குறைந்தது. உடனே சுட்டு விட்டேன். அடுத்த நொடியே, நான் நினைத்தது போல இறக்காமல் இருந்த பொழுது, வாழ்க்கையின் அருமை புரிந்தது. மரண பயம் வந்து விட்டது. என் பிரச்சனைகளை எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் என்று தோன்றி விட்டது. நான் வாழ ஆசைப்படுகிறேன். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்,//இறக்கும் முன்னர் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டார்,

சிவராம்குமார் said...

பா.விஜய் கருப்பை வெச்சு அப்படி ஒரு பாட்டு எழுதியும் திருந்த மாட்டேனு அடம பிடிக்கிராங்கல!

ராஜவம்சம் said...

தற்கொலை கோழைகள் செய்யும் ஒரேயொரு வீரச்செயல்.

அழகு என்பது மனது சார்ந்தவிசயம் வெள்ளையா அசிங்கமா உள்ளவங்களும் இருக்காங்க.
கருப்பா கலையா லஷ்சனமா உள்ளவங்களும் இருக்காங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆக முருகனுக்கு வள்ளி இல்லை ஒரு வாளி கூட கிடைக்காது

vanathy said...

இப்படி எல்லா பெண்களும் வெள்ளையா இருக்கும் ஆண்களை தான் திருமணம் செய்வேன் என்று சொன்னால் நிறைய ஆண்கள் கன்னியங்களாகவே திரிவாங்க.

அன்பரசன் said...

//போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே! //

கரெக்ட்.

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு.
என்னத்த சொல்ல???

மாணவன் said...

//போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே! //

அருமையான வரிகள்...

“வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான பார்க்கனும்”

ரவி சார் இப்படியே கலரான பொன்னுதான் வேணும்னு திரிஞ்சாருன்னா இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது

அருமையான பகிர்வு
தொடருங்கள்
நன்றி

பவள சங்கரி said...

நல்ல பகிர்வு சித்ரா. வாழ்த்துக்கள்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நினைப்ஸ் தான், புளைப்ஸ் கெடுக்த்ஸ். //
ஹா ! ஹா! ஹா!

கே. பி. ஜனா... said...

இதை நிறைய பேர் படிக்க பிரார்த்திக்கிறேன்!

R. Gopi said...

சிவப்பு வேஸ்ட். போரிங்க்பா

சி.பி.செந்தில்குமார் said...

serious matter,comedy title

சி.பி.செந்தில்குமார் said...

all of the men thinking whitish,reddish girls r beauty,

all of the women thinking not so and so and they r not thinking about colour

சி.பி.செந்தில்குமார் said...

"அறுப்பு காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி" .

நினைப்ஸ் தான், புளைப்ஸ் கெடுக்த்ஸ்.

citra touching?

ஜோதிஜி said...

பின்னால் உள்ள பச்சை வண்ணம் இதமாக இருந்தாலும் பதிவு திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது சித்ரா.

வானவன் யோகி said...

மிக அருமையான கருத்துக்கள்.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்....

எப்படி நான் படித்த அத்தனை தளங்களிலும் தாங்கள் பின்னூட்டமிட்டதைக் காண முடிகிறது.இது எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது?

தாங்கள் உறங்குவீர்கள்தானே?!!!!!...

Riyas said...

//போராட்டமாய் இருந்தாலும், வாழ்க்கை வாழ்வதற்கே! //

உண்மை உண்மை..

Starjan (ஸ்டார்ஜன்) said...

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..

அரசூரான் said...

முதல் சம்பவம் சோகம்தான்... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

ரவியைப் போல் எனக்கு ஒரு நண்பர் (என் மாணவன்), கல்லூரி நாட்களில் அவனை நண்பர்கள் காக்கா என்றே அழைப்பார்கள், பிடிவாதமாக வெள்ளையான பெண் தான் வேண்டும் என்று... காத்திருந்தது அவனுக்கு கைகூடியது. அப்போது நான் கேட்டேன், இது சரியா என்று, அவன் சொன்ன வார்த்தைகள் என் மனதில் இன்றும் பசுமரத்து ஆணியாய். “சார் உங்களுக்கே தெரியும் என் நண்பர்கள் என்னை எப்படி அழைப்பார்கள் என்று, அதை நான் என் பள்ளிப் பருவத்திலிருந்து அனுபவித்து வருகிறேன், அதன் வலி எனக்குத்தான் தெரியும், என் மகனோ/மகளோ அதை அனுபவிக்க வேண்டாமே என்றான்” அவன் வலியை புரிந்து கொண்டு உதவினேன்.
சித்ரா... பாவ(ம்)ங்க ரவி, செவ செவன்னு ஒரு வெள்ளகாரப் புள்ளைய பார்த்து வைய்யுங்க.

வருண் said...

The first story (suicide) is really sad. :(

The second one is, kid of funny :)

All kind of people to make the world!

Chitra said...

நாகராஜசோழன் MA said...

நம் மனதில் சிகப்பு தான் உண்மையான அழகு எனப் புகுத்தி, அவர்களின் வியாபாரத்தை உயர்த்திக் கொண்டார்கள்.


..... Buyer Beware என்று மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டியதுதான்.

Chitra said...

அரசூரான் said...

“சார் உங்களுக்கே தெரியும் என் நண்பர்கள் என்னை எப்படி அழைப்பார்கள் என்று, அதை நான் என் பள்ளிப் பருவத்திலிருந்து அனுபவித்து வருகிறேன், அதன் வலி எனக்குத்தான் தெரியும், என் மகனோ/மகளோ அதை அனுபவிக்க வேண்டாமே என்றான்” அவன் வலியை புரிந்து கொண்டு உதவினேன்.
சித்ரா... பாவ(ம்)ங்க ரவி, செவ செவன்னு ஒரு வெள்ளகாரப் புள்ளைய பார்த்து வைய்யுங்க.


......சாரிங்க...... ஒரு ஆணுக்கே இந்த நிலைமை என்றால், பெண்ணுக்கு? அவளுக்குள்ள உணர்வுகளை யார்தான் மதிக்கிறார்கள்? விவேல் சோப்பு விளம்பரத்தில் கூட, ஏதோ வெள்ளையாய் இல்லை என்பதால், அவளின் கருத்துக்களை புறக்கணிப்பது போல தான் காட்டுகிறார்கள். இது கண்டனத்துக்கு உரியது.

Chitra said...

பிரியமுடன் ரமேஷ் said...

லட்சனத்துக்கும் அழகுக்கும் வித்தியாசம் புரியாம அப்புறம் நாம எப்படி இருக்கமோ அதுக்குத் தகுந்த பொண்ணு அமைஞ்சா போதும் அப்படிங்கற நினைப்பும் இல்லாம.. இவங்க பன்ற அழும்பு ரொம்ப ஓவர்தான்..

..... :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனசுதாங்க அழகு

Chitra said...

எல்லோருக்கும் தனி தனியாக பின்னூட்டம் இடலாம் என்று வந்தேன். ஒவ்வொரு கருத்தும், அருமையாக இருக்கிறது. ஆனால், நேரம் இன்மை காரணமாக எல்லோரும் பதில் பின்னூட்டம் இட இயலவில்லை. எல்லோருக்கும் மிக்க நன்றிங்க..... சமூதாயத்தில், கண்டனம் தெரிவித்து புறக்கணிக்க வேண்டிய பல காரியங்கள் புரையோடி கிடக்கின்றன. பெரும்பான்மையோர், அதை சாதாரணமாக எடுத்து கொண்டு, தங்களை அறியாமல், காயப்பட்டு கொண்டோ - அல்லது யாரையாவது காயப்படுத்தி கொண்டோ தான் இருக்கிறார்கள்.

ஹேமா said...

மனித மனங்களின் பிரதிபலிப்பு இரண்டு நிகழ்வுகளுமே !

தாராபுரத்தான் said...

கவனிக்கபட வேண்டிய செய்திகள்.

ஹரிஸ் Harish said...

அமாவாசையும் பௌர்ணமியும் சேர்ந்து வந்தாப்புலதான் இருக்க//

இது நல்லா இருக்கே.,,

சௌந்தர் said...

கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு.... :)

ஒரு துப்பாக்கி கொடுங்க "என்ன யாருக்கா" சொல்ல மாட்டேன்

Anonymous said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க சித்ராக்கா!

//தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
ஒரு வினாடியில் "வடை" போச்சே! - 37/37
Chitra//
அக்கா கலக்குறீங்க!!!!

ஆனந்தி.. said...

சித்து...இது தத்துவ உளறல் இல்லை...சத்தியமான அறிவுரை..விழிப்புணர்வு...கலர் காட்டி இன்னும் பெண்ணை..மாப்ப்ஸ் ஐ கழிக்கிற கும்பல் இருந்துட்டே தான் இருக்கு...நீங்க சொன்ன ரெண்டு சம்பவங்களும் ரொம்பாஆஆஆஆ யோசிக்க வைத்தது சித்து...வெரி குட் வெரி குட்...:)))

ஆதி மனிதன் said...

ஹ்ம்ம். நீங்க சொல்றீங்க. யாரு கேக்குறா?

ஆனால் நான் நிறைய D.M.K அதான் கருப்பு சிகப்பு ஜோடிகளை பார்த்திருக்கேன். அதிலும் கறுப்பு பெரும்பாலும் ஆண்கள்தான். நானே நினைத்ததுண்டு. இதுவே அந்த பெண் கறுப்பாக இருந்தால் இவர் அந்தப் பெண்ணை கல்யாணம் செய்திருப்பாரா என்று.

Madurai pandi said...

"இதுவும் கடந்து போகும்" ... எப்ப எந்த பிரச்சனை வந்தாலும் நான் மனசுல நினைத்துகொள்ளும் வாக்கியம்..

என்னோட காலேஜ் வாத்தியார் ஒரு தடவை இப்டி சொன்னார் "வெள்ளையா இருந்த நக்கியா சாப்பிட போற? "
அதுக்கு நாங்க மனசுல சொன்னது "அவரு மட்டும் வெள்ளையா பொண்டாட்டிய கட்டி இருக்காரூ !!! "

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரவிக்கு என்னுடைய வாழ்த்தை சொல்லிடுங்க...( அட.. நிசமாத்தான்...)


( வயசான, தோல் சுருங்குமே.. அப்ப என்ன பண்ணுவாருனு கேட்டு, அதை பதிவா போட்டா, இன்னும் நல்லாயிருக்கும்..ஹி..ஹி)

அதுகிட்ட( அவங்கனு சொல்லமாட்டேன்..) , கலரை பார்க்காதே.. குணத்தைப்பாருனு சொல்லிப்பாருங்க.. விளங்கினா.. தப்பிச்சார்.. இல்ல... ஊ..ஊ...ஊ..தான்.. ஹி..ஹி

மனோ சாமிநாதன் said...

முதல் சம்பவம்:

இதுபோல நிறைய இடங்களில் நடக்கிறது. முக்கியமாக, உடல் நலத்தைப்பற்றி யார் சொன்னாலும் கேட்காமல் ‘எனக்கு டாக்டரிடமெல்லாம் போகும் பழக்கமில்லை. எனக்கு எதுவும் நேரவும் நேராது’ என்று சொல்வது, திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்ததும் விபரீதம் புரிய டாக்டரிடம் ‘ எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சுவது!!

இரண்டாவது சம்பவம்”

நிறத்தை மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு சரியான நெத்தியடி!!
நல்ல பதிவு சித்ரா!

வெட்டிப்பேச்சு said...

அருமையான பகிர்வுகள். இரண்டையும் தனித்தனியே போட்டிருந்தீர்களானால் impact அதிகமாக இருந்திருக்கும். இவைகள் நிச்சயம் சிந்தனைக்குரிய செய்திகள்.

வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

//அழகு பொருட்கள வச்சி தொடர்ந்து ஏமாத்திட்டு தான் இருக்காங்க.//
இருந்தாலும் காசு கொடுத்து வாங்கத்தானே செய்யுறோம்...

MANO நாஞ்சில் மனோ said...

//சிகப்பு அழகில்லை எல்லாம் இந்த விளம்பரங்களும் சினிமாக்களும் பண்ற தொல்லை//
சரியாக சொன்னீர்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

//நினைப்ஸ் தான், புளைப்ஸ் கெடுக்த்ஸ்.
அருமையான பன்ச் இக்கால மக்காஸ் பாஷையில் சொல்லியிருக்கிறீர்கள்//
ஆமாம் மக்கா.....:]]

MANO நாஞ்சில் மனோ said...

//மனசுதாங்க அழகு...//
yes yes....100%

ADHI VENKAT said...

நிறைய பேர் இப்படித் தான் இருக்கறாங்க. கறுப்பு ,வெள்ளைன்னு இதில் என்ன இருக்கு. மனசு சுத்தமா இருந்தா போதும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Very good post Chitra. Well done.

செல்வா said...

/ "சுடும் வரை, எனக்கு பயம் இருந்தது. எனக்கு இருந்த கஷ்டங்களை மட்டுமே நினைத்து கொண்டே இருந்தேன். பயம் குறைந்தது. உடனே சுட்டு விட்டேன். அடுத்த நொடியே, நான் நினைத்தது போல இறக்காமல் இருந்த பொழுது, வாழ்க்கையின் அருமை புரிந்தது. மரண பயம் வந்து விட்டது. என் பிரச்சனைகளை எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் என்று தோன்றி விட்டது. நான் வாழ ஆசைப்படுகிறேன். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்," //

ரொம்ப அருமையான பாடம் அக்கா .!

அஞ்சா சிங்கம் said...

அழகு - எல்லாம் சிகப்பழகுக்கு மட்டும் தான்.////
இது நாம் அடிமையாய் இருந்த காலத்தில் இருந்து தொன்று தொட்டு வருது.
தாழ்வு மனப்பான்மை வெளிப்பாடு.
எனக்கு மா நிறம் தான் பிடிக்கும்.
மைண்டேனன்ஸ் செலவு கம்மி பாருங்க.

Unknown said...

ஒரு கட்டத்திற்கு பிறகு வெளித்தோற்றம் , தோலின் நிறம் என்பதெல்லாம் பொருள் அற்றதாகவே மாறிவிடுகிறது..

Unknown said...

//நல்லவராக வாழ்கிறோம் என்ற மன நிம்மதியே உண்மையான அழகு//

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அர்த்தமுள்ள பதிவு. அதை நகைச் சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அர்த்தமுள்ள பதிவு. அதை நகைச் சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள்.

ஸ்ரீராம். said...

இரண்டு அனுபவமுமே யோசிக்க வைத்தது...

மோகன்ஜி said...

சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது உங்கள் பதிவு .brilliant

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

வெட்டியில்லைங்க வெவரமாத்தான் இருக்கு.

எம் அப்துல் காதர் said...

//நினைப்ஸ் தான், புளைப்ஸ் கெடுக்த்ஸ்.// உங்க அளவுக்கு எனக்கு சிரிக்கவராது. இருந்தாலும் ட்ரை பண்றேன்.ha ha ha ha ha

ரிஷபன் said...

”அந்த பொண்ணுக்கு கோவிலுக்கு வந்த நல்ல நேரம்டா. தப்பிச்சிட்டா!"

கடவுள் எப்படி எல்லாம் காப்பாத்தறார்..

Vaitheki said...

மிகவும் நல்லா விடயங்கள் நகைச்சுவையோடு சொல்லி இருக்கும் பாணி சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த பதிவு தெனாலி என்ற இணைய இதழில் உங்கள் பெயர் மற்றும் இணைப்புடன் வெளிவந்துள்ளது. பார்க்க....
http://www.thenaali.com/inner.php?id=399

priyamudanprabu said...

தற்கொலை எண்ணம் வந்தால் உங்க பதிவ படிக்க சொல்லணும்,......

(இதுக்கு வாழ்வதே மேல்னு தோணும்)

priyamudanprabu said...

அழகு கலரலையா இருக்கு ??

நந்திதாதாஸ் அழகில்லையா?

லைலா என்னடா அழகு நல்லாவே இல்லைன்னு மஜ்னுவோட நண்பன் சொன்னானாம் ,அதுக்கு மஜ்னு அவள் அழகு உன் கண்ணுக்கு தெரியாது

அவளின் காதலனாகிய இந்த மஜ்னுவின் கண்ணால் பார்த்தால்தான் தெரியும்-ன்னு , எப்பவுமே நாம் நேசிப்பவர்கள்/நம்மை நேசிப்பவர்கள் நமக்கு அழகுதான்

கிரி said...

என்ன நினைத்தாலும் அவருக்கு வரப்போகிறவர் தான் வரப்பொகிறார்..அதிக எதிபார்ப்பு ஏமாற்றத்தில் முடியும்.சில நேரங்களில் எதிர்பார்த்தது நடக்கலாம்.

பொண்ணு கிடைக்காத போது தான் அவருக்கு அருமை புரியும்

Anonymous said...

முதல் கதைய படிச்சி கஷ்டமா போச்சு..
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...