Monday, August 29, 2011

பதிவுலகில் காமத்து பால்

ரொம்ப நாள் கழிச்சு "தம்பட்டம்" தாயம்மாவை சந்திக்க வேண்டியது வந்தது.

"என்ன சித்ரா, ஆளையே காணோமே. பதிவுகள் எழுதுறது கூட குறைஞ்சு போச்சே."
"தாயம்மா, வழக்கமான காரணம் தான். பல வேலைகள் வரும் போது, வெட்டிபேச்சுக்கு டைம் இல்லாம போயிடுது. "
"என்னமோ, பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவு எழுதாட்டி அந்த பணம் போய்ட்ட மாதிரியும் ...... ஹி, ஹி, ஹி, .... விட்டு தள்ளு.."


" அதை ஏன் கேட்குற? ஊரு உலகத்துல , வாரத்துல பத்து பதிவுகள் போடுறவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. வாரத்துக்கு ஒரு பதிவு நான் போட்டு விட்டு படுற பாடு இருக்கே..... அய்யய்யய்யய்யய்யய்யயோ ........ !!!"
" என்ன ஆச்சு?"


"இப்பெல்லாம் ஒரு பதிவு போட்டா, அதில ஒரு வார்த்தையையோ ஒரு சப்பை மேட்டர் கருத்தையோ பிடிச்சிக்கிட்டு - ஐந்தாறு பேரு கேள்வி கேட்க வந்துடுறாங்க. மெயில் பதில் சொல்லியே பொழுது போகுது. ஆரோக்கியமான கருத்து விவாதங்களை நான் வரவேற்கிறேன். அபத்தமான விவாதங்களை அல்ல. "

"உன் சொந்த ப்லாக் உன் கருத்தை - உன் பீலிங்க்ஸ்சு சொல்ல உனக்கு உரிமை இல்லையா?"

" கொஞ்சம் வெட்டி பேச்சுக்கும் நேரம் ஒதுக்கி, பதிவு எழுத உட்கார்ந்தா...... இந்த வார்த்தை/கருத்து - இவங்களை காயப்படுத்தி விடுமோ? - இவங்களுக்கு எரிச்சல் படுத்தி விடுமோ? - இவங்களுக்கு வருத்தப்படுத்தி விடுமோ? - இவங்களுக்கு கோபம் உண்டாக்கி விடுமோ? - இப்படி எழுதினால், நான் இப்படித்தான்னு முத்திரை குத்திடுவாங்களோ? அப்படி எழுதினால், என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆயிடுமோ? என்று ஆராய்ச்சி பண்ணி எழுத வேண்டிய நிலையை பார்த்தால் - இன்னும் எதுக்குடா பதிவுகள் எழுதணும்னு தோணுது?"

" ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ......சித்ரா, நீ உன் மனசாட்சிக்கும் கூகுள் சொல்ற சட்ட திட்டங்களுக்கு தான் " I agree" என்று டிக் செய்துதானே ப்லாக் ஆரம்பிச்சு வச்சுருக்கே. உலகத்தில உள்ள ஏழு கோடி தமிழ் மக்களும் - அவங்க மனசுல போட்டு வச்சுருக்கிற சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு எழுதுறேன் என்றா ஒத்துக்கிட்டு ப்லாக் எழுத வந்தே? அப்புறம் எதுக்கு இந்த வீண் கவலை? "

"ஆஹா.... அப்படி ஒண்ணு இருக்கோ? கரெக்ட். அவங்க அவங்க ப்லாக் அவங்க அவங்க தான் தனிகாட்டு ராஜா/ராணி!"


"சித்ரா, இப்படி சொல்ற நீயே, சிலர் தங்கள் பதிவுகளில் கவர்ச்சி படங்கள் போடுவதை - தான் வைக்கிறதை - எதிர்க்கிறதா ஒரு பேச்சு இருக்குதே. "

" நான் அப்படி யார்க்கிட்டேயும் சொல்லல, தாயம்மா. அந்த டாபிக் அடிப்படையில் பதிவுகள் இருந்தால், நான் வாசிக்காமல் புறக்கணித்து விடுவேன். அதற்கு காரணம் கேட்டாங்க. அப்படி எழுதுறது அவங்க இஷ்டம். அதற்காக எனக்கு இஷ்டமில்லா பதிவுகளை நான் வாசித்து வோட்டு போடணும்னு என்கிற கட்டாயம் இல்லாததால், அந்த பதிவுகளை ஒதுக்கி வச்சுடுவேன் என்று பதில் சொல்லி இருக்கேன். அவ்வளவுதான்."

"சித்ரா, நீ போன பதிவில் ஒரு பதிலில் கூட - " தமிழ் பதிவுலகில் பிரபலம் ஆக - அதிகம் ஹிட்ஸ் கிடைக்க சொல்லப்படும் காரணங்கள். " - உன்னை சிரிக்க வைக்குதுன்னு சொல்லி இருந்ததற்கு கூட கேள்வி வந்துச்சாமே. "

" ஆமாம், தாயம்மா. இப்போவும் அதையே தான் சொல்றேன். தனக்கு இந்த மாதிரி மேட்டர் தான் - படங்கள் தான் பிடிக்குது - அதை ஆசை தீர தன் பதிவிலும் போட்டு ஜொள்ளிக்கிறேன் ...sorry ..... போட்டு கொள்கிறேன் என்று சொல்லி தங்கள் பதிவுகளில் போட்டுக் கொள்ளட்டுமே. அதை விட்டுப்புட்டு, அப்படி எழுதினால் தான் கூட்டம் சேருது - அப்படித்தான் ஹிட்ஸ் கிடைக்குதுன்னு ஒரு டொச்சு காரணம் சொல்லி - அதையே தமிழ் பதிவுலக வேதவாக்காக புதிய பதிவர்களிடமும் பரப்பி , தான் மட்டும் இல்லை, தமிழ் பதிவுகள் வாசிக்க வருகிறவர்கள் எல்லாருமே "அந்த" மாதிரி முத்திரை குத்துவது போல ஆகிறதே. அந்த மாதிரி இல்லாமல் வரும் என்னை போன்றவர்களின் பதிவுகளையும் வாசிக்க தமிழ் மக்கள் இருக்கிறார்களே? நாம என்ன , கூகுள் சினிமா படமா எடுத்து விடுறோம்? ஒரு குலுக்கல் டான்ஸ் வைக்கலைனா commercial success ஆகாதுன்னு சொல்ல? எல்லாமே ஓசிதானே."


"ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, .......... சிரிச்சு முடியல. இப்போ புரியுது. குமுதம் - குங்குமம் - விகடன் போல பத்திரிகைகளின் பிசினஸ்க்காக கொடுக்கிற காரணம், இன்டர்நெட் பதிவுகள் எழுதுவதற்கு எப்படி ஒத்து வரும்?
அப்படி
கவர்ச்சி படங்கள்தான் பார்க்கணும் என்று இருக்கிற தமிழ் மக்கள் , எதற்கு ஒரு பதிவர் அப்படி ஒரு பதிவு போடுகிற வரைக்கும் காத்து இருக்கணும்? இருபத்துநாலு மணி நேர சர்வீஸ்..... கூகுள் இமேஜஸ் - யுடியூப் என்று இன்டர்நெட் எந்த நேரமும் கவர்ச்சியின் உச்சக்கட்ட படங்களுக்கா பஞ்சம்? கம்ப்யூட்டர் ஆன் செய்து - இன்டர்நெட் கனக்ட் பண்ணி வரவங்க - அப்படி படங்களை பார்க்க ப்லாக் பக்கம் வருகிறதற்கு பதிலாக, நேரிடையாக இவங்க படங்களை சுட்டு போடுற சைட் போய், பார்க்கலாமே. இன்டர்நெட் காரையே திருட வழி இருக்கிறப்போ, கார் டயர் மட்டும் உருட்டிக்கிட்டு போகிற மாதிரி.... ? "


"அதானே தாயம்மா. அப்புறம், ஒவ்வொரு தமிழ் பதிவர்களும் - தங்கள் தனித்துவத்தையும் - தனி திறமைகளையும் அடையாளம் காட்டத்தானே தனக்குன்னு ப்லாக் வச்சுருக்காங்க. . ஆங்கில பதிவுகள் காணப்படுகிற variety , தமிழ் பதிவுகள் குறைந்து போகிறதே, ஏன்? ஒரே மாதிரி மோல்ட்லேயே எழுதணும்னு நினைக்கிறதுதானே."


" அப்புறம், ஒரு பதிவுக்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று ஆங்கில பதிவுகள் வாசிக்கும் போது தான் தெரிஞ்சுக்கிட்டேன். கூகுள் அந்த அந்த டாபிக் வச்சு பதிவுகள் தேடும் போது, கரெக்ட் ஆக search பண்ணி relevant blog posts லிஸ்ட் பண்ணி காட்டுது. ஆனால், தமிழில் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாம இருப்பது, ஒண்ணுமே புரியல. டைட்டிலேயே ஜொள்ளு விட வாங்க என்று அறிக்கை விட்டு கூப்பிட்டு விட்டு, பதிவில் "ஜெபம் செய்வதன் மகத்துவங்கள்" பத்தி எழுதவா முடியும் ? உனக்கு ஏதாவது புரியுதா, தாயம்மா?"


" அதாவது, ஒரு பதிவுக்கு தலைப்பா - "பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. இப்படி லாஜிக்கே இல்லாத் லாஜிக் உள்ள "ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்" இருக்கிற தமிழ் பதிவுலகில் நீயும் ஒரு தமிழ் பதிவர்னு வெளியில சொல்லியிராத. ஹி, ஹி, ஹி, ஹி, ஹி, ...."


"தாயம்மா, கேலி பண்ணாதே! இவர்களை விட்டால் திருக்குறள்ளேயே , எல்லா தமிழ் மக்களும் வாசிச்சு அதிக ஹிட்ஸ் கிடைக்கத்தான் ஒரு பிரிவுக்கு - "காமத்து பால்" என்று கவர்ச்சியா பேர் வச்சுருக்காங்க என்று சொன்னாலும் சொல்லுவாங்க..... ஹா, ஹா, ஹா, ஹா, ........."


" சில தமிழ் பதிவர்களுக்கு Quantity முக்கியம். எல்லாமே "ரமணா" விஜயகாந்த் மாதிரி statistical information தான். மற்றவர்களுக்கு Quality முக்கியம். இப்படி இரு கோணங்களில் பயணிக்கும் போது, எப்படி பிரபல பதிவர்கள் என்பதற்கும் - பிரபல பதிவுகள் என்பதற்கும் ஒரே மாதிரி இலக்கணம் இருக்க முடியும்?


ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்கள் - யாரும் வாசித்தாலும் வாசிக்கவில்லைஎன்றாலும் எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள்.


சென்ற வாரத்தில் , பதிவுலகில் எட்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் ILA விவசாயி தனது பதிவில்:

http://vivasaayi.blogspot.com/2011/08/blog-post_25.html

மீள் பதிவாக போட்டு இருக்கும் ஒரு பேட்டியில் இருந்து - தமிழ்மணத்தில் மிக முக்கியமானவரான காசி ஐயா என்பவர் சொன்ன அறிவுரையை - கவனிக்கவும்: அறிவுரை தான் - பதிவுலக சட்டம் அல்ல - இங்கே நானும் மேற்கோள் காட்டி கொள்கிறேன் .
" புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் - அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்"

" சித்ரா, ஒவ்வொரு பதிவரும் மனதிற்குள் ஒரு அளவுகோல் (standard) வைத்து இருப்பார்கள் போல. "

தாயம்மா, தமிழ் பதிவுலகில் எல்லோருமே கிணத்து தவளைகள் அல்ல. குறுகிய வட்டத்துக்குள்ளேயே "கொர் குர் குர்...."னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு. சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக் அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. இரண்டு பிரிவினர்களின் உரிமைகளையும் நான் மதிக்கிறேன் - அவை, என்னுடைய ப்லாக் எல்லையை தொடாதவரை.

ஓகே, தாயம்மா..... வழக்கம் போல உன்கிட்ட பேசினாலே எனக்கு பல விஷயங்கள் தெளிவா ஆயிடுது. நான் ஒரு பிரேக் எடுத்துக்கிட்டு அப்புறமா சந்திக்கிறேன். "




213 comments:

«Oldest   ‹Older   201 – 213 of 213
பித்தனின் வாக்கு said...

நிறைய பேர்கள் வாசிப்பதுதான் - ஒரு பதிவின் வெற்றி என்று நான் நினைக்கவில்லை. அந்த பதிவை ஒருவர் மட்டுமே ஆனாலும் மிகவும் ரசித்து வாசித்து, பாராட்டினாலே ஒரு ஆத்ம திருப்திதானே,

unmaithan chithra. en puli aval uppumavai oruvar seythu paradiya pothu intha niraivu vanthathu.

innoruvar en oranju pala thol kulampu seythu pathivu potta pothu santhosama irunthathu.

ம.தி.சுதா said...

அக்கா ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டன் போல காரணம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்..

ம.தி.சுதா said...

இந்த பதிவுலகத்தில என்ன நடக்குதண்ணே தெரியலக்கா...

ஒருவன் சிலர் ஆபாச படம் பட்டுட்டு சம்பந்தமே இல்லாமல் வேறு கோணத்திலும் , நல்ல பதிவையும் போடுகிறார்கள்.

சிலதுகள் அநாகரிகமாய் கதைத்து விட்டு இது தான் நவீன ஆங்கிலம் என ஆங்கிலம் படிப்பீக்குதுகள்.

இவற்றில் பார்க்க கருத்தக்களை நிறுத்தி விட்டு எம் மனத் திருப்திக்கு எழுதிட்டு போகலாம் போல உள்ளது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

தக்குடு said...

ஒவ்வொரு விஷயமும் அருவாளோட வெட்டு மாதிரி இருக்கு. பிரபலபதிவர்,ப்ளஸ் ஓட்டு, திரட்டி வார்த்தைகளை கேட்டாலே எனக்கு சிரிப்பு வந்துடும். பழைய சித்ராக்காவா எழுத ஆரம்பிக்கவும். வாழ்த்துக்கள்!!

Anonymous said...

கொஞ்சம் வெட்டி பேச்சு
வேண்டிய பேச்சு தான்...
நன்றி.....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wonderful... nothing else to say...:)

vidivelli said...

நான் தான் கடைசியாள் போல?
அக்கா உங்கள் கருத்து போலவே நானும் சிந்தித்திருக்கிறேன்.நல்ல, எல்லோரையும் தட்டுகின்ற பதிவு.
எழுத்து நடையும் சுவாரசிகமாக வாசிக்க தூண்டிய உங்கள் எழுத்தின் திறமை.பாராட்டுக்கள் அக்கா.

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

dheva said...

இப்போதான் சித்ரா...

பதிவு முழுசா படிச்சே...! கிரேட்...ஷாட்...!

வாழ்த்துகள்..! (தொடர்ந்து எழுதுங்க....)

புல்லாங்குழல் said...

உங்கள் ஆதங்கமும், அலசலும் நியாயமானது சகோதரி!

Thenammai Lakshmanan said...

சித்து மிக நீண்டநாள் கழித்து உன் ப்லாகுக்கு வந்துள்ளேன். கொஞ்சம் நேரமின்மைதான் காரணம்.

அப்புறம் நீ நிறைய ப்லாகுகள் படித்திருக்கிறாய் என நினைக்கிறேன். அதுதான் இப்படி எழுதி இருக்கிறாய்.எனக்கு சரிவர தெரியவில்லை..

உனக்கு பிடித்ததை மட்டும் படித்து கமெண்ட் போடு. இதுவே நான் சொல்லும் அறிவுரை. இதுக்காக ப்லாகில் இத்தனை நாள் இடைவெளி ஏன்..

Karthikeyan Rajendran said...

அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

சாம் ஆண்டர்சன் said...

///எனக்கு காலணிகள் இல்லையே என்று கவலைப்பட்டேன். கால் இல்லாதாவனை காணும் வரை" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நானோ, "எனக்கு சமைக்கத் தெரியவில்லை என்று கவலைப்பட்டேன். மௌஷ்மியை காணும் வரை."// HA HA HA

«Oldest ‹Older   201 – 213 of 213   Newer› Newest»