Friday, October 23, 2009

பாரதியார் பாட்டு - டி.வி. விளம்பர தமிழில்......

எல்லா வேலையும் முடித்து விட்டு, கொஞ்சம் அக்கடான்னு சன் டிவி பாக்கலாம்முன்னு உக்கார்ந்தா, 90s இல் popularaa  இருந்த actor (act????or) Abbas, 2 bucketsai கையில் வச்சுகிட்டு என்னை பாத்து, "நீங்க உங்க toiletil என்ன செய்றீங்க?" னு கேட்கிறார். நான் காதில்  கேட்டது சரிதானா என்று என் மகள், செல்லத்திடமும் செக் செய்தேன். அவளும் Abbas அப்படிதான் கேட்டதாக சொன்னாள். Toiletil வேற என்ன செய்வாங்க? ஏன்  இந்த கேள்வி?  இவரை கனவு ஹீரோவாக ரசித்தவர்கள் முகம் எப்படி போயிருந்துக்கும் என்று பாக்க தோணியது. ஹ,ஹ,ஹ,....

அதன் பிறகு, இந்த advertisementsil வரும் தமிழ் கொலையை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
இது கொலையே இல்லை வெறும் suicide தான் என்று,  தமிழ் போலீஸ் case file எ close பண்ணீட்டாங்கனு நினைக்கிறேன். யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை:

"நோ, ஒளிஞ்சிருக்கும் பற்சிதைவு!"
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."

இதுதான் இனி future தமிழ் என்றால், எதிர் கால சந்ததியருக்காக நம் தமிழ் பொக்கிஷங்களை மாற்ற வேண்டி வருமே. எப்படியும் கலைஞர் அடுத்த projecta இதை கொண்டு வருவார். translation வேலைக்கு ட்ரை பண்றேன் நான் இப்ப. புரிஞ்சுக்கோங்க, எனக்குதான் அது. தமிழ் நெல்லை இல்ல; தமிழ் சென்னை இல்ல; தமிழ் கொங்கு இல்ல; தமிழ் மதுரை இல்ல; தமிழ் வியாபாரம் இது. தமிழர் வாயர் இளிச்ச. கோனார் உரை தமிழ் பண்ணுவார் என்ன? எல்லோரும் போவாங்க தமிழ் tuition. நுனி நாக்கு தமிழ் பேசும் டிவி தொகுப்பாளினிகள் teachers. Nameetha ஆவாங்க Principal. எழுதுவேன் பாரதியார் பாடல்களை நான் இப்படி:

தமிழ் language போல் அறிந்த யாம் language களில்
காணோம் எங்கும் sweetaa;

சொல்லும்போது red தமிழ் country என்று - பாயுது
காதினிலே honey வந்து .....

பாப்பா விளையாடு ஓடி -
பாப்பா ஆகாது ஓய்ந்திருக்க நீ!

கண்ணம்மா விழிச்சுடர் hot தான் -
sun ஆ? moon ஆ?

சொல்லுங்க இப்ப: எனக்குதான் வேலைனு! இப்ப தொடக்கத்தில் Abbas கேட்ட கேள்விக்கு பதில்: நாங்க என்ன செய்ரோமுன்னு ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க தமிழை toiletil நாறடிக்க விட்டுட்டீங்க......

7 comments:

goma said...

யார் எப்படிப் பேசினாலும் வாசித்தாலும் நஷ்டம் தமிழுக்கு அல்ல.தமிழன்னையை யாரும் அசைக்க முடியாது.ஒரு நாக்கு புரண்டாலும் நூறு நாக்கு அவள் புகழைப் பரப்பிக் கொண்டேதான் இருக்கும் .
உங்கள் தமிழ் பற்று வாழ்க.

goma said...

வியாபாரத்துக்காகத் தமிழை உதாசீனப் படுத்துபவர்களைத் துச்சமாக நினைக்கப் பழகிக் கொண்டால்தான் நல்லது.
சொல்வது யார் என்று யோசித்தால் நிறைய விஷயங்கள் நம்மைத் துன்புறுத்தாது.

Unknown said...

pl we need a section on the latest tamil raps by VJ anthony. Appa was hearing the new songs and asked if they were tamil :-)) avalavu mosam the language n grammer.

Chitra said...

Hello,
Krishna vaanga, vaanga. ideavukku romba nanri. seekiram try paNREn.

Chitra said...

Boss,
I saw the blog. Excellent....
I hereby pronounce you "Lady Thiruvalluvar".
Mr. Valluvar sangam vatchi tamil vazharthar,
Nenga blog vatchi tamil vazhakuringa.
----- Radhakrishnan (via e-mail)

பாலராஜன்கீதா said...

நீங்கள் அந்தக் காலத்தில் தொலைக்காட்சியில் ஜூனூன் தமிழ் கேட்டதில்லையா ?
:-)

பாலா said...

சிரிச்சிட்டேன் நான் இத பட்ச்சி !!
ஏனோ இனி நிலைமை இதுதான் என்று யோசிக்க தோணுது..
நம் தொலைக்காட்சி கலைவாணிகளின் பங்கும் இதில் அடங்கும்..
தமிழ் கேட்கும் பிள்ளைகள் பாவம்.. :))