Saturday, October 24, 2009

சிரிச்சு சிரிச்சு வந்தா......

"சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்......."

ஆமாம், சீனா தானா ன்ன என்ன? "சிரிச்சு சிரிச்சு வந்தா சீக்கு தானா ஓடிபோயுடும் டோய்...." என்று இருக்குமோ? அது என்னவாகவும் இருந்துட்டு போகட்டும்.
என்னை வாய் விட்டு சிரிக்க வைத்த சிலரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. எனக்கு நகைச்சுவை உணர்வை ஒரு கலையாக அறிமுகம் படுத்தி வைத்தது என் அப்பாதான். St.Xavier's schoolil கணக்கு வாத்தியார் திரு.பொ.ம.ராசமணியாக இருந்தாலும் அவரது நகைச்சுவைதான் அவரை பலருக்கு அடையாளம் காட்டியது.  முதன் முதலில் அவர் சொல்லி நான்  ரசித்து சிரிச்ச ஜோக் இன்னும் ஞாபகம் இருக்கிறது. சின்ன வயதில் எனக்கு ஏனோ அந்த ஜோக் அவ்வளவு பிடித்திருந்தது.

கோயிலில் இரண்டு கிழவர்கள் சந்திக்கிறார்கள்:
ஒருவர்: உனக்கு கோவில்பட்டியா?
அடுத்தவர்: இல்ல. எனக்கு கோவில்பட்டி.
முதலாமவர்: அப்படியா. நான் கோவில்பட்டியோனு நினைச்சேன்.

இதில்  சம்பந்தப்பட்டவர்கள் அல்ல இதை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குதான் இது  ஜோக். அவர்களுக்கு புரியாத புதிர். முதலாமவர் அடுத்தவர் எந்த ஊர்க்காரர் என்று நினைத்து இருப்பார் என்று புரிந்தும் புரியாமலும் ரொம்ப சிரித்தேன். ஜோக் என்றாலே புளி போட்டு முழுக்க விளக்கி சொல்ல தேவையில்லைதானே.

 நாங்கள் Texas இல் இருந்த வருடங்கள் மறக்க முடியாதவை. முதலில் அந்த ஊர் பேரைச் சொன்னாலே பலர் சிரிக்க ஆரம்பித்து விடுவீர்கள். "Lubbock" - லபக். சத்தியமா அதுதான் நாங்க Texasil இருந்த ஊர் பேரு.
"எங்க இருக்கீங்க?"
"ஒரு நிமிஷம், வாயில் இருக்கிறதா லபக்குனு முழிங்கிட்டு சொல்றேன். ஆஹ் ... லபக்."
"லபக் லபக்குனுக்றீங்க. மெல்ல சாப்பிட்டுட்டு சொல்லுங்க."
"அதான். லபக்."
"??????!!!!!!"

  விவேக் "லார்ட் லபக் தாஸ்னு" சொல்லும் போதெல்லாம் என் கணவருக்கு உள்ள பட்ட பெயர் விவேக்குக்கும்  தெரிஞ்சு போச்சான்னு இருக்கும். என் கணவர் அங்கு professor ஆக இருந்ததால், அந்த universityil படிக்க வந்த நம்மூர் மக்களின் நட்பு எனக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பல அனுபவ பாடங்களை லபக்கில்தான் கற்று கொண்டேன்:

"wrong time + wrong people = பிரச்சனைகள்.
"wrong time + right people = நம்பிக்கை.
"right time + wrong people = கவலைகள். (tragedy)
"right time + right people = சந்தோஷம். (comedy)

இதில் எனக்கு நிறைய equation # 4 apply ஆச்சு.
Real lifeil எனக்கு வடிவேலுகளையும் விவேக்குகளையும் கடவுள் நண்பர்களாக தந்து இருக்கிறார்.
அவர்களில் சிலரை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்:

சாய் சுந்தர்:
எங்கள் தோழி தேனம்மாள் அவரை phoneil கூப்பிட்டப்ப, "சாய், நான் தேனா பேசறேன்" என்றதுக்கு,
"நீங்க தேனா பேசுங்க இல்ல பாலா பேசுங்க. ஆனால் யாருன்னு சொல்லிட்டு பேசுங்க!" என்றார்.
தன் கல்யாண photo ஆல்பத்தில் புது மனைவியுடன் பாபா ரஜினி மாதிரி "கதம் கதம்"னு தைரியமாக போஸ் கொடுத்து நின்றவர்.

விஸ்வநாதன்:
டப்பாங்குத்து ஆட்டத்தில் கலக்கு கலக்கி எதையுமே யதார்த்தம் என்ற பேரில் பேசி எங்களை சிரிக்க வைத்தவர். சமைக்கும் போது எதை கேட்டாலும், "தேவையான அளவு போடு" என்பார். "தேவையான அளவுன்னா எவ்வளுவு?"
"எனக்கு இது தேவையானு" திருப்பி கேட்பார்.  இப்போ Houston தமிழ் சங்கங்களில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் comedy drama போட்டு கலக்கி கொண்டு இருக்கிறார்.

கார்த்திக்:
"தீபாவளிக்கு என்ன பிளான்?"
"கார்த்திக், எனக்கு christmas தான்."
"சித்ரா, உங்களை என்ன எனக்காக பூஜையா பண்ண சொல்றேன்.  தீபாவளி சாப்பாடு சமச்சி போடுங்கதான்னு சொல்றேன்." என்று என்னை தீபாவளி வருடா வருடம் கொண்டாட வைத்தவர்.

ராதாகிருஷ்ணன்:
அசத்தப் போவது யாருக்கு சூப்பர் candidate. எல்லா actors மாதிரி நடித்து காட்டி டான்ஸ் ஆடுவார். சிவாஜி, MGR, கமல், ரஜினி (அதில் 80s ரஜினி, 90s ரஜினி என்று), பாக்கியராஜ், விஜயகாந்த், T.ராஜேந்தர் இப்போ உள்ள ஹிட்ஸ் ஆன டப்பங்குத்து பாட்டுக்கு ஆடினா எப்படி இருக்கும் என்று அவர் செய்வதை பார்த்து வயிறு வலிக்க சிரித்து இருக்கிறேன்.

மற்றும் புபேஷ், அஜய், மது, தீபா, சித்தார்த், ராஜேஷ், ராஜ் மோகன் என்று பட்டியல் நீண்டாலும், மும்மூர்த்திகளான குமாரையும் திநேஷையும் ஆனந்தையும் மிஞ்ச முடியாது. அவர்களை பற்றி பின்னொரு நாளில் ..........

12 comments:

goma said...

உங்கள் பதிவுகள் ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி வந்து விழுந்துட்டே இருக்கு...நாங்களெல்லாம் லபக் லபக்ன்னு லபக்கிட்டு இருக்கோம்...விக்கினா தண்ணீர் நிலாவிலேருந்து எடுத்துக்கிறேன் ...இப்போதைக்கு அதுதானே ரெண்டு பேருக்கும் ,பொதுவா, தெரியர மாதிரி, இருக்கு.

goma said...

please remove ,Word Verification from your comment box.
[go to settings ...you will be able to locate that .click NO to word verification]

தமிழினிமை... said...

Chithra,GOMA ammaavum namma BAEMILI dhaan theriyuma?she is also an "IGNATIAN".BY the way u r blessed by a good lot of IN NEEDand INDEED.my regards to all of them for making your life so beautiful.good jobda..ROCK. VAAZHHA VALAMUDAN

தமிழினிமை... said...

If u r on facebook please notify..im on facebook as AMUDHA THAMIZH.send me a request.take care

Chitra said...

Goma Madam, Word verification illanaa, automated comments vara chance irukkaam. edhukku vambunnu vaichuchukitten.

Chitra said...

Illada, Amudha. Facebook account irukkunnu ninaikeeREN. Innum active participation aagalai. E-mailil meet paNREn.

Chitra said...

aiyO aiyO..... Goma madam, nenja thottutteenga. nilaavE vaa..... Goma madamukku oru vaNakkam thaa. adikkadi blog varudhullaa? pudhu viLakkumaaru varat varatunnu irukkudho ennavo? paakkalaam..... :-)

goma said...

ஒய்ட் ஹவ்ஸில் தீபாவளி கொண்டாட்டமும் இப்படித்தான் தொடங்கியிருக்குமோ?

goma said...
This comment has been removed by the author.
goma said...
This comment has been removed by a blog administrator.
Chitra said...

Goma Madam, What a small world! Give our regards to your husband.......

Chitra said...

Goma madam, en commentai delete panna sonneenga. pannitten.....