"என்னலே, மண்டை இடிக்கி. தைலம் தாவே."
"ஏ புள்ள, பசிக்கி. எப்ப சோத்தக் கண்ணுல காட்ட போறே?"
"மாப்பிள்ளை, என்ன இங்குட்டும் அங்குட்டும் லாந்திக்கிட்டு இருக்க. ஒரு இடத்தில இருந்தா என்ன?"
"தாயீ, வராட ஆழி மாதிரி. திம்சுகட்டை சும்மா திங்கு திங்கு னு ஆடும்."
"நான் வரது தெரியாம பஸ்சு வருதானு ஆன்னு பாத்துட்டு நிக்கா."
இந்த வட்டார பேச்சு நெல்லை கிராமங்களில் மட்டும் இல்லை, டவுன் பக்கத்திலும் சாதாரணமாக கேட்கலாம்.
பின்வருபவை எல்லாம் நான் எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டிலும் கடை தெருவிலும் நண்பர்கள் வீட்டிலும் பேருந்து நிலையங்களிலும் மற்ற இடங்களிலும் கேட்டு என் மனதில் இன்னும் நின்று அப்போ அப்போ வந்து கிச்சு கிச்சு மூட்டி என்னை சிரிக்க வைக்கும் நக்கல் பேச்சுக்கள்:
"ஏண்டா மாப்புள்ளை, மப்பும் மந்தாருமாய் ஒரு பொண்ணு போக கூடாதே. பின்னாலேயே போறீயே."
"டேய், அது என் மாமா பெண்ணுதான்லே. சும்மா கிடையும்."
"தாமிரபரணி ஆத்துல தண்ணி கரை நிறையா ஓடினாலும், நாய் நக்கிதான் குடிக்குமாம். அப்ப கைய புடிச்சு கூட்டிட்டு போறதை விட்டுட்டு ....."
"செவ்வாய் தோஷம் உள்ள என் பொண்ணுக்கு ஒரு வழியா அமஞ்சி வந்திட்டு. என்ன ஒண்ணு. மாப்பிள்ளை பையனுக்கு வயசு 39 ஆம்."
"அப்ப மாப்பிள்ளை பையன்னு சொல்லாதே. பையர்னு சொல்லு."
"எப்ப பாத்தாலும் தேடி வந்து அஞ்ச கொடு பத்தக் குடுன்னு படுத்துரீய."
"மொத்தமா ஏதாவது குடு. அப்ப நீ என்னை தேடி வந்து படுத்தாம இருக்கியான்னு பாக்கிறேன்."
"கல்லறைக்கு போறதுக்கு ஊர்வலம் ஆரம்பிச்சாச்சு."
"ஆமா, வண்டி ஏதாவது ஏற்பாடா? இல்ல நடந்துதான் எல்லோரும் வரணுமா?"
"போய் சேந்த சித்திக்கு மட்டும்தான் வண்டி. மத்தவங்களுக்கு நடராஜா service தான்."
"துவையல் ஏன் ரொம்ப குறைவா இருக்கு?"
"கரண்ட் போயிட்டு. அம்மியில கொஞ்சமா அரைச்சேன்."
"இத்தனூண்டு அரைச்சிட்டு dining tableukku வேற வரணுமா? அம்மியிலேய இருக்கு. ரெண்டு இட்லியை அதிலே வைச்சே சாப்பிடுன்னு சொல்லாம விட்டியே."
"சொர்ணா மாமியாரையும் நாத்தனாரையும் ஏத்திக்கிட்டு ஆட்டோ எங்கே போகுது?"
"ஆட்டோ இப்ப எங்கே போகுதுன்னு தெரியாது. ஆனா இவங்க ஏறி இறங்கினா நிச்சயமா பட்டறைக்கு (workshop) போகும்."
"ஏலே, சட்டப் பையிலே காசு கொஞ்சம் வச்சிக்கடா. உன் அத்தை பொண்ணு மூணு பேரும் கல்யாணத்தன்னைக்கு முதலிரவுக்கு போக விடாம மறிப்பாளுக. காசு கொடுத்தாதான் விடுவாளுக."
"சும்மா இரும்மா. நான் வேண்டான்னு சொன்னேனா? மூணையும் சேத்து கூட்டிட்டே உள்ளே போயிறேன்."
"என்னலே, என்ன சாப்பாடுல போடுறே?"
"ஏழு வகை காய்கரியோட போடறேன்."
"ஒரு ஆடு வாங்க வக்கில்லை. காய் கூட கறின்னு வார்த்தையை சேர்த்ததும் கத்திரிக்காய்க்கும் முருங்கைக்காய்க்கும் நாலு காலும் வாலும் முளைக்கவா போகுது?"
9 comments:
Hi Chitra,
Vehu Joar! Itha, itha than naan edhirparthen! Pechile mattum illama ezhuthilayum killadinnu kamichitiye! Jamaai! Yaam petra inbam peruha ivvaiyaham!
Anbudan,
Komi
(via e-mail)
From Nirmal: (via e-mail)
Chitra,
Unga blog kalakuthu ponga....sema comedya irruku....Innaiku lunch sapittuvittu...headphonela pattu kettukittu... appadiye oru coffee adichittu unga blog padichikittu irunthen....antha Tirunelveli Halwa post padichittu irunthen....ennaiyum ariyama konjam overa sirichiten....enn boss ethuko ennai parka vanthavar...naan pattuku thaniya sirikiratha parthu kalaichittu poyitar.....
Unga writing style supera irruku ...great ...keep going.....
Have fun....
regards,
Nirmal
ரொம்ப சூப்பருங்க, நானும் இந்த ஒரிஜினல் சாந்தி அல்வாக் கடையில் தான் வாங்குவேன். ஆனா புரேட்டாக் கடையில் சாப்பிட முடியாது. நான் புல்லா வெஜ் மற்றும் நான் நெல்லை செல்வது சபரிமலையாத்திரையின் போது. அணேகமாய் அடுத்த மாதம் பத்தாம் தேதி நான் நெல்லையில் இருப்பேன். நகைச்சுவை அருமை. நன்றி.
கொடுத்து வச்சவங்க..... shanthi sweets mixture and alwaa சாப்பிடும்போது, என் சார்பாகவும் ஒரு வாய் வச்சுகோங்க..... ஹ்ம்ம்...
நமக்கும் திருநெல்வேலி பக்கத்தில் தான் ஊரு....
ஆன இதுவரைக்கும் ஒரு அஞ்சு தடவை தான் போயிருப்பேன்...
நீங்க ஊரை ரொம்ப மிஸ் பண்றீங்கனு புரியது.
நக்கல் கொஞ்சம் தூக்கல்தான் ...
ருசியை இன்னும் மறக்கவில்லை போல் தெரிகிறது .. இப்போ கூட ஊருக்கு போன அங்கே போறது உண்டு ..
அம்மா தான் கொஞ்சம் வருத்தப்படுவாங்க இங்கே வந்தும் கடைல போய் சாப்பிடனுமா என்று
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
நெல்லை தமிழ், நெல்லை நக்கல், நெல்லை அல்வா, நெல்லை உணவு, நெல்லை தாமிரபரணி, நெல்லை கடைகள் , இன்னும் பல ......... எப்படி மறக்க முடியும்?
ஹா ஹா .. ஆபீஸ்ல இருக்கிறேன் அதனால் சத்தம் போட்டு சிரிக்க முடியல .. சிரிகாமயும் இருக்க முடியல. செம கலக்கல் ஜோக்ஸ் ..
//"எப்ப பாத்தாலும் தேடி வந்து அஞ்ச கொடு பத்தக் குடுன்னு படுத்துரீய."
"மொத்தமா ஏதாவது குடு. அப்ப நீ என்னை தேடி வந்து படுத்தாம இருக்கியான்னு பாக்கிறேன்."
"ஏலே, சட்டப் பையிலே காசு கொஞ்சம் வச்சிக்கடா. உன் அத்தை பொண்ணு மூணு பேரும் கல்யாணத்தன்னைக்கு முதலிரவுக்கு போக விடாம மறிப்பாளுக. காசு கொடுத்தாதான் விடுவாளுக."
"சும்மா இரும்மா. நான் வேண்டான்னு சொன்னேனா? மூணையும் சேத்து கூட்டிட்டே உள்ளே போயிறேன்." //
க்ளாஸ் :)))
Post a Comment