Sunday, January 17, 2010

வெற்றியின் ரகசியம்?



ஒரு man - hero வாக இருந்தான். 
அடுத்த கட்டமாக, ஒரு பிரமாண்டமான வளர்ச்சி நிலை.
உலகை காக்கும் பொறுப்பில், முதல் நாள் காலடி எடுத்து வந்தான்.
வழியில் ஒருவரை சந்தித்தான்.
ஹீரோ விடம் பேசியவன், "உங்களிடம் இருக்கும் அபாரமான திறமைகளும், அமானுஷ்ய சக்திகள் மட்டும் உங்களின் வெற்றிக்கு காரணம் ஆகி விடும் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டான்.
உயிரை பணயம் வைத்து ஆரம்பிக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு கேள்வி ஹீரோவின் தன்னம்பிக்கையை ஆட்டம் காண வைத்தது. பலசாலியின் பலவீன மனம் முந்தி கொண்டு கேட்டது:
"என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்."
"எல்லாம் சரி. ஆனால் வாஸ்து  படி, உங்கள் ஜட்டி தப்பான இடத்தில் இருக்கிறது. அதை pant உக்கு வெளியில் போட்டீர்கள் என்றால்............."
"நான் வெற்றி பெற வேண்டும். எதையும் செய்வேன். திறமைகள் சக்திகள் எல்லாம் அப்புறம்தான்."
செய்தான்..........
அவனின் அமானுஷ்ய திறமைகளும் சக்தியும் man, superman ஆக செய்தது.
ஆனால், தன் அறிவுரைதான் அவரின்  வெற்றியின் ரகசியம் என்று வாஸ்து படி உடையை மாற்ற சொன்னவர்,  வெளியில் சொல்ல ஆரம்பிக்க    ..............

வாஸ்துக்கு பின் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், அபத்தங்கள்தான்  அரங்கேறி கேலிக்குரியதாகின்றன.
எங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர், யார் சொல்லியும் கேளாமல், வாஸ்து ஜோசியரை நம்பி, நன்கு நடைபெற்று கொண்டிருந்த தன் வியாபாரம் மேலும் விருத்தி ஆக தன் வீட்டை முழுதும் மாற்றி கட்டினார். குளியறை இருந்த இடத்தில் வரவேற்பு அறையும், வரவேற்பு அறை இருந்த இடத்தில் அடுக்களையும், படுக்கை அறை இருந்த இடத்தில் குளியல் அறையும், அடுக்களை இருந்த இடத்தில் மாடிப்படிகளும், முன் பக்கம் இருந்த வீட்டு வாசலை வேறு பக்கம் நோக்கியும் மாற்றி நிறைய செலவு செய்து கட்டிய மூன்று வருடங்களுக்குள், இன்று அந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டுக்கு வரும் நிலைக்கு வந்து விட்டார். வியாபாரம், படு மோசமான நிலையில் இருக்கிறது. என்ன கொடுமை சார், இது?


பின்குறிப்பு:


ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?



39 comments:

பித்தனின் வாக்கு said...

அந்தக் காலத்தில் மனையடி சாஸ்த்திரம் என்ற ஒன்று இருந்தது. அதில் உள்ள சிலவற்றை இவர்கள் வாஸ்து பேரில் புருடா விடுகின்றார்கள். அக்கினி மூலை,வாயு மூலை,ஜலமூலை,குபேர மாலை பார்த்து கட்டினால் சரி. மற்றது எல்லாம் வெறும் ரீல். ஒன்னு மட்டும் முக்கியம். வடக்கில் வாசல் வைக்கக் கூடாது. இது போதும். நன்றி நல்ல பதிவு. ஊர்ப் பிராயாணம் எப்படி இருந்தது?

ஜெட்லி... said...

//ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?

//

டவுட் வேறயா உங்களுக்கு,அதான் உண்மை......

நான் கூட கில்மாதாசன் சாமியாக ஆகிவிடலாமா
என்று யோசித்து கொண்டிரிக்கிறேன்.....

Prathap Kumar S. said...

வாஸ்துப்படி செய்பவர் நல்லாருக்காரோ இல்லையோ? வாஸ்து சொல்பவர் நல்லாத்தான் இருப்பாரு.
வாஸ்துப்படி அடுக்களையில் இருந்த ஜன்னலை அடைத்த ஒருவீட்டீல் கேஸ் லீக்காகி வெளியற முடியாமல் தீயில் கருகி ஒரு பெண் செத்தார் என்ற செய்தி படித்திருக்கிறேன்.
ஒன்றல்ல ஓராயிரம் பெரியால் வந்தாலும் இவங்க திருந்த மாட்டாங்க...

ரோஸ்விக் said...

ஆத்தாடி, சூப்பர் மேன் ஜட்டி விவகாரத்துலையும் வாஸ்து மாதிரி எவனோ விளையாண்டு இருக்காய்ங்களா?? :-)))

உங்க பின் குறிப்புலே விடை இருக்குத்தா....

முனைவர் இரா.குணசீலன் said...

வாஸ்துக்கு பின் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், அபத்தங்கள்தான் அரங்கேறி கேலிக்குரியதாகின்றன..


தாங்கள் கருதுவது முற்றிலும் மறுக்கமுடியாத உண்மை..

முனைவர் இரா.குணசீலன் said...

ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?

ஆம்!!
மிக விரைவில் பணக்காரன் ஆவது எப்படி என்றொருவன் நூல் எழுதினானாம்..

அதில் இப்படியொரு தலைப்பில் நூல் எழுதுவது பணக்காரனாவதற்கான ஒருவழி என்றானாம்..

ஏமாறுவோர் இருக்கும் வரை
ஏமாற்றுவோர் இருந்துகொண்டே தான் இருப்பார்கள்..

goma said...

வாஸ்துவமான பதிவு

கலையரசன் said...

//ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?//

எனக்கு தெரிஞ்சு வீடே இல்லாத ஒருத்தன்.. எல்லாருக்கும் வாஸ்த்து சொல்லி.. சொந்த வீடு கட்டிட்டான்! இதுக்குதான் வாய் வாஸ்த்து படி இருக்கனுமுன்னு சொல்றது!

Unknown said...

வாஸ்துப்படி நீங்கள் கூட உங்கள் வலைப்பூவில் பின்னூட்டங்கள் முதலிலும் பதிவு அதைத் தொடர்ந்தும் வருவது போல வைத்தால் ஹிட் கூடும் என்று வலையடி சாஸ்திரம் சொல்கிறது... :))))

Romeoboy said...

அக்ச்சுவளா உங்க ப்ளாக் திசை லெப்ட் சைடு இருக்கு அதை மட்டும் ரைட் சைடுல இருக்குற மாதிரி மாதி வைங்க, அப்பறம் பாருங்க உங்க ப்ளாக் தான் கண்டிப்பா மிக பெரிய மொக்கை ப்ளாக் ஆகா அனைத்து ப்ளாகர்களும் சொல்லுவாங்க ..

பின்னோக்கி said...

வாஸ்துக்கு நீங்க குடுத்த எடுத்துக்காட்டு படிக்கும் போது ஷாக் ஆகிட்டேன். சூப்பர் மேன் வாஸ்து பார்த்திருக்கிறார்ன்னு இன்னைக்குத் தான் தெரிஞ்சது :)

ஹுஸைனம்மா said...

//என்று வலையடி சாஸ்திரம் சொல்கிறது...//

இந்த சாஸ்திரம் எழுதுனது ரோமியோ, நீங்களாங்க? நம்பி செய்யலாமா?

சித்ரா:

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!!

CS. Mohan Kumar said...

எதிலும் நம் சௌகரியத்தை தான் பார்க்கணும். நான் வீடு கட்டும் போது வாஸ்து மூலம் சில ஐடியாக்கள் கிடைத்தன. அதில் நான் எது எனக்கு convince ஆகும் விதம் மற்றும் உடனடியாக benefit (காற்று, வெளிச்சம் நன்கு வருவது etc ) உள்ளது மட்டும் எடுத்து கொண்டேன். மற்றவை நிராகாரிதேன்.

vasu balaji said...

வாஸ்து பார்த்து செலவு பண்ணி பேஸ்து அடிச்சவங்கதான் அதிகம்.

Jaleela Kamal said...

///வாஸ்துப்படி நீங்கள் கூட உங்கள் வலைப்பூவில் பின்னூட்டங்கள் முதலிலும் பதிவு அதைத் தொடர்ந்தும் வருவது போல வைத்தால் ஹிட் கூடும் என்று வலையடி சாஸ்திரம் சொல்கிறது... :))))///

வாஸ்து பற்றின பதிவு ரொம்பவே வாஸ்துவமாகதான் இருக்கு , அதுக்கு பின்னால் வரும் பின்னூட்டங்களும் ரொம்பவே வாஸ்துவமா வருது சித்ரா.

( டயட் ரெசிபி ஏற்கனவே சிலது கொடுத்துள்ளேன் இன்னும் போடுகிறேன்)

இதையும் கொஞ்சம் பாருஙக்ள்www.tips-jaleela.blogspot.com சித்ரா கோபத்தை பற்றின டிப்ஸ்கள்,

Unknown said...

சூப்பர் மேன் காஸ்டியும்ல வாஸ்து இருக்கா .., ஹம்ம்..., எக்க சக்கமா மாற்று பார்வை பார்த்து இருக்கீங்க...,
உங்களுக்கு தெரியும் என்று நெனைக்கிறேன் தஞ்சாவூர் பெரிய கோவிலின் நிழல் கீழே விழாது அது போல அன்று கட்டடம் கட்ட இருந்த பல விதிமுறைகளுள் நம்மவர்கள் ஜோசியத்தை கலந்து வியாபாரபடுத்தியதன் எச்சமே வாஸ்து சாஸ்திரம்...

திருவாரூர் சரவணா said...

மனையடி சாஸ்திரம் என்பதில் அடுப்பு, தண்ணீர், படுக்கை அறை இது போன்று சிலவற்றை இந்த இடத்தில் அமைக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அறிவியல் அடிப்படையில் நம் உடல் நலத்தின் மீதான அக்கறையால்தான் அப்படி சொல்லி இருக்கிறார்கள்.இப்போதைய காலகட்டத்தில் அறிவியல்பூர்வமாக விளக்கினால் நாம் புரிந்து நடப்போம். கல்வி அறிவு மிகக் குறைவாக இருந்த கால கட்டத்தில் இவ்வளவு விளக்கம் சொல்ல முடியாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.

மார்கழி மாதத்தில் அந்த அதிகாலைத் தூயமைக்காற்று உடலுக்கு நல்லது என்பதால்தான் திருப்பள்ளி எழுச்சி என்ற வழிபாடு முறையை மக்களிடம் புகுத்தினார்கள். இது போல் தமிழரின் எண்ணற்ற பழக்க வழக்கங்களில் இந்த காலத்துக்கும் மனிதனின் உடலுக்கும் மனதுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் தரும் விஷயங்களைப் பின்பற்றிச்செல்வதில் தவறில்லை. எதையுமே கண்மூடித்தனமாக செயல்படுத்துவதுதான் குழப்பம் ஏற்படுத்துவது மட்டுமின்றி தீமையும் தரும்.

SUFFIX said...

வாஸ்து என்பது காற்றோட்டம், வெளிச்சம் இது போன்ற ஆரோக்கியமான‌ விடயங்களுக்காக தோண்றியதாம், ஆனால் காலப்போக்கில் நமது மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் பணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்களாம்.

Paleo God said...

//வாஸ்துக்கு பின் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், அபத்தங்கள்தான் அரங்கேறி கேலிக்குரியதாகின்றன.//

சரிதான்..அந்த வாஸ்த்துன்ற எடத்துல எல்லா வார்த்தையும் பொருந்தும் போல,,..::))

அண்ணாமலையான் said...

இப்பத்தான் நான் ஏன் இன்னும் சூப்பர் மேன் ஆவாம இருக்கேன்னு தெரிஞ்சுது.. இனிமே பாருங்க .....

கண்ணா.. said...

ஹா..ஹா..நல்ல நகைச்சுவையா எழுதிருக்கீங்க..


வாஸ்து - உண்மையில் அந்த காலத்துல விறகு அடுப்பு யூஸ் பண்ணும் போது தீயும் நல்லா எரியணும் வெக்கையும் வீட்டுக்குள் வரக்கூடாதுன்னு காற்றடிக்கும் திசைக்கு தகுந்தபடி அக்னிமூலை (தென்மேற்கில்) சமயலறை அமைக்கப்பட்டதாம்.

ஆனா இந்த இண்டலிஜெண்டு வியாபாரிகள் கேஸ் அடுப்பு யூஸ் பண்ணுற இந்த காலத்துலயும், அதை சொல்லியே காசு பாக்குறானுவோ....

பிகு:

இது போன்ற வாஸ்து குறித்த பல விஷயங்கள் தெரிந்திருப்பதால் யாரும் போலியிடம் சென்று ஏமாற வேண்டாம். வாழ்வில் ஆஹா...ஓஹோ...வென வளர வாஸ்து பார்ப்பதற்கு அப்பாய்ன்மெண்ட் வாங்க என்னை தொடர்பு கொள்ளவும்

கண்ணா.. said...

ஸாரி ட்ங்க் ஸ்லிப் ஆயிட்டு..

தென்கிழக்கு = அக்னிமூலை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சித்ரா. இப்படி பல கதைகள் எனக்குத் தெரியும்.

சுசி said...

பின் குறிப்ப அப்டியே வழி மொழிகிறேன் :)))

Anonymous said...

இனிக்கு தேதிக்கு மக்களுக்கு அவங்க உழைப்பின் மேல இருக்கற நம்பிக்கைய விட இந்த் ஜோசியம், வாஸ்து மாதிரி விடயங்கள் மேலதான் நம்பிக்கை அதிகமா இருக்கு... மக்களா பார்த்து திருந்தர வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது... ஒங்க எழுத்து நடை நல்லா இருக்குதுங்க... கலக்குங்க...

தாராபுரத்தான் said...

நல்ல சிந்தனை.உங்கள் இருக்கையை இன்றுதான் படிக்கிறேன்,வணக்கம்மா.

Anonymous said...

பின்குறிப்பு சொன்னீங்க பாருங்க . சூப்பர்

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா

வாஸ்து - திடீரென முளைத்து பல விதங்களில் வளர்ந்து இன்று பேயாட்டம் ஆடுகிறது. என்ன செய்வது ....

நல்ல இடுகை நல்வாழ்த்துகள் சித்ரா

மீன்துள்ளியான் said...

கேக்குறவன் கேனய இருந்தா கேப்பைல நெய் வடியுதுன்னு சொல்லுவானுங்க .

ஏமாற்ற ஒரு கூட்டம் .. ஏமாற ஒரு கூட்டம் .

என்ன பண்றது .. வடிவேல் ஒரு படத்துல ஒருத்தர பாது சீன வைத்தியம் சுகருக்கு பச்சை சட்டை போடணும் அப்படிம்பார் ..அது மாதிரி தான் இதுவும் ..

அவன் அவன் வேலைய பாத்தாலே உருப்பட்டுறலாம்

Vishy said...

well.. என்னைப் பொருத்த வரை வாழ்க்கை என்பது இரண்டு சக்கரங்களில் ஓடுகிறது. ஒன்று நம்பிக்கை, மற்றொன்று convenience.. சில பேர் எத்தை தின்னா பித்தம் தெளியும் என்ற வகையில் எதை எதையோ செய்து கொண்டேதான் இருப்பார்கள்..

சரி நான் என்ன சொல்ல வந்தேன்??

கண்ணகி said...

வாஸ்து எல்லாம் காசு உள்ள ஆளுங்களுக்கு. ஒத்த்க்குடிசையில் வாழ்பவர்கள் எல்லாம் எந்த வாஸ்து பார்க்கிறாங்க..நல்ல காற்றும் நல்ல வெளிச்சம் வருவது போல் கட்டும் வீடுகள்தான் தேவை...சூப்பர்மேன் கதை நல்லா இருக்கு...

Thenammai Lakshmanan said...

சித்ரா என்னோட ப்ளாக்கில இருக்குற மீனுக்கும் வாஸ்துவுக்கும் எந்த சம்பந்தமுமில்லைம்மா என்னோட பையன் ப்ளாக்கர்ல இருக்குற எல்லாத்தையும் கேட்ஜெட்டுல போட்டுக் குடுத்துட்டான் ஆத்தாடி இந்த சித்துவுக்கும் அம்முவுக்கும் பதில் சொல்ல முடியலப்பா

சிங்கக்குட்டி said...

//வலையடி சாஸ்திரம்// ஹ ஹ ஹாஹா சூப்பர் :-)

ungalrasigan.blogspot.com said...

சூப்பர்மேன் வாஸ்து பார்த்த கதை சூப்பர்! ஒரு ஜோக்...
“அந்த வாஸ்து நிபுணரை ஏன் எல்லாரும் போட்டு அடிக்கிறாங்க?”
“வாஸ்துபடி ஜன்னல் பின்பக்கத்தில் இருக்கிறதைவிட முன்பக்கம் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாராம்..!”
“சரி, அதனாலென்ன? வாஸ்து நிபுணர்னா சொல்லத்தானே செய்வார்?”
“அட நீங்க வேற! அவர் முன்பக்கம் வைக்கச் சொன்னது அந்தம்மாவோட ஜாக்கெட் ஜன்னலைய்யா!”

புலவன் புலிகேசி said...

இந்த வாஸ்துல்லாம் உண்மையாவே வெட்டி பேச்சுங்க...

ரிஷபன் said...

சுவையான பதிவு..

Priya said...

//ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?//.....இதில ட‌வுட் என்ன சித்ரா, அதுதான் உண்மையா இருக்கனும்!

நசரேயன் said...

//ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து புளப்பு நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ?//

ஆமா.. ஆமா

ஹேமா said...

உங்க கதைக்கு நீதி மாதிரி பின்குறிப்பு நல்லாருக்கே !