Monday, February 15, 2010

சமையல் "அட்டூழியம்"

எனது முந்தைய பதிவுகளில் ஒன்று  - சமையல் கலை -
http://konjamvettipechu.blogspot.com/2009/10/samayal-kalai.html


அதில் குறிப்பிட்டிருந்த  பிரியாணி ரெசிபி கதை  வேண்டும் என்று, அதை படித்த சிலர் கேட்டு,  ரொம்ப ஆர்வமா தொல்லை  பண்ணிட்டாங்க.  கவனிக்க: பிரியாணி  ரெசிபி அல்ல - ரெசிபி கதை வேண்டும் என்று.

சரி, அந்த ரெசிபி சொந்தக்காரர்,  "சமையல் அட்டூழியங்கள்"  நாயகன் ஆன, மாண்புமிகு தினேஷ் அவர்களிடம் அனுமதி கேட்டேன்.

அவரின் அனுமதி பதில்: (நிஜமா, இப்படித்தான் அவர்  இ-மெயிலில்  சம்மதம் அனுப்பி இருந்தார்.)

"ஆட்டு தலையில தண்ணிய தெளிச்சாச்சு. அது தலைய ஆட்டாமய இருக்கும். பிரியாணிக்கு ஆடு ரெடி........!" 

 வெட் கிரைண்டர் அப்படியே சுத்துனா - எத்தனை  நாள்தான் கொசுவத்தி  சுருளையே சுத்திக்கிட்டு இருக்கிறது.
மேலும், இது சமையல் சம்பந்த பட்ட பதிவு வேற ------------------------

நாங்கள்  Texas இல் இருந்த நேரம், ஒரு நாள் தினேஷுக்கு,  நண்பர்களுக்கு தன் கையால சமைச்சு போடணும்னு,  எங்க கிரகம் - நேரம் -  சரியில்லாத நேரத்துல தோணிடுச்சு.   மற்ற  நண்பர்கள்  எட்டு  பேருக்கும்,  மாலை ஆறு மணிக்கு போன் பண்ணி, "இன்னைக்கு நான் சிக்கன் பிரியாணி பண்றேன். சித்ரா வீட்டுக்கு கொண்டு வந்துடுறேன்.  எல்லோரும் அங்கே ஒரு ஒம்பது மணிக்கு, டின்னருக்கு  வந்துருங்க" என்று சொல்லியாச்சு.

எனக்கும்  போன் பண்ணி,  "சித்ரா,   இன்னைக்கு  நீங்க சமைக்க வேண்டாம். நான் சிக்கன் பிரியாணி செஞ்சு கொண்டு வரேன்" என்ற பில்ட்-அப் வேற.
ஒவ்வொருத்தராக எட்டரை மணியில் இருந்து வர ஆரம்பித்தார்கள்.  ஆனால் வர வேண்டியவங்க  வர ஒம்பது அரை ஆயிட்டு.
பிரியாணி செய்து கொண்டு வர இவ்வளவு நேரமானு கேக்கணும்னு தோணுச்சு. கேள்வி கேட்டா மட்டும் போதுமா? பதில்னு ஒண்ணு இருக்கணும்ல.

தினேஷ் உடன், நண்பர் ஸ்ரீநாத். அவர் கையில் ஒரு  பெரிய குக்கர்.  விட்டா, சிக்கன் என்ன, ஒரு முழு ஆட்டையே  உள்ளே வச்சு பிரியாணி பண்ணிடலாம். அப்படி ஒரு சைஸ்.

எல்லோரும் ஆசையாய் பார்க்க,  ஸ்ரீநாத் ஏதோ Burj Khalifa வுக்கு திறப்பு விழா துபாயில நடத்துற மாதிரி பதவிசா குக்கர் மூடியை திறந்து வைத்தார். தினேஷ், என்னை சிறப்பு விருந்தினர் மாதிரி, "சித்ரா, முதலில் நீங்க. அப்புறம் நாங்க" என்று சொல்லி தட்டை என் கையில் கொடுத்தார். ( என்னை அன்று முதல் பலி கொடுத்ததுக்கு, தினேஷ் --- இன்று இந்த பதிவில் -  உங்க இமேஜ், டோட்டல் டேமேஜ் பழி(லி)  வாங்கல்.)

பக்கத்தில போனா, பிரியாணி வாசனை மிஸ்ஸிங்.  கரண்டியை உள்ளே விட்டா, சிக்கன் பீஸ் மிஸ்ஸிங்.
இங்கே  பசி,  விஷயம் தெரியாம  இமய மலையின் உச்சத்தில் கொடி நாட்டிக்கிட்டு  இருக்கு.
 குக்கருக்குள் எட்டி பாத்தேன்.  பிரியாணியை,  என்றிலிருந்து இப்படி களி மாதிரி கிண்ட ஆரம்பிச்சாங்கன்னு  தெரியலையே?

"தினேஷ்,  பிரியாணி அரிசி  மாதிரியே தெரியலையே?"
"சித்ரா, என் ரூம் மேட் கிட்டே கேட்டேன். நாம வெறும் பச்சரிசி மட்டும் தான் வாங்குனோம். பிரியாணி அரிசி இல்லைன்னு சொல்லிட்டான். ஆறு அரை மணிக்கு மேல,  இந்தியன் ஸ்டோர்ஸ், அவ்வளவு தூரம் எங்கே போறது? அதான்."

சித்ரா:       "பிரியாணி மசாலா அரைச்சி போட்டீங்களா, இல்ல ரெடிமேட் மிக்ஸ் ஆ?"
தினேஷ்:    " பிரியாணி மசாலா அரைச்சி போட என்ன வேணும்னு யாருக்கு தெரியும்? ரெடி மேட் மிக்ஸ் இருக்குனு தான்   ஆரம்பிச்சேன்.  எல்லாம் அடுப்புல வச்சுக்கிட்டு தேடி பாத்தா, இல்ல."
                   "அப்புறம், என்ன மசாலா போட்டீங்க?"
                    " பாட்டிலில் மஞ்சளா ஒரு ஒரு பொடி இருந்தது."
சுதாகர்:        "டேய், அது மஞ்சள் தூள் டா."
தினேஷ்:       "அது கறி மசால் இல்லையா? சித்ரா, அப்போ மசாலா ஏதும் போடல."

சித்ரா:         " நெய் சாதம் மாதிரி பண்ணி இருக்கலாம்ல."
தினேஷ்:      "நெய் வாங்குறது இல்ல. பட்டர் ஸ்டிக்ஸ் தான்."
சித்ரா:        "அதை உருக்கி போட்டுற வேண்டியதுதானே."
ஸ்ரீநாத்:       "சித்ரா,  மத்தியானம் உருளை கிழங்கு வச்சு என்னமோ பண்றேன்னு,   இருந்த ரெண்டு ஸ்டிக் பட்டர் ஐயும் பாத்திரத்துல போட்டு உருளை கிழங்கை அதில் சறுக்கி விளையாட விட்டு ரோஸ்ட் பண்ணி வச்சான்.  உருளை வறுவல்னு நினைச்சா,  நெய் வறுவலில்,  கொஞ்சம் உருளை இருந்தது.   அப்புறம், பிரியாணிக்கு குக்கர் அடுப்புல வச்ச பிறகு, எண்ணெய் ஊத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டான்."

மது:          "டேய்,  எல்லாம் சரி. சிக்கன் பீஸ் எங்கேடா?"
தினேஷ்:    "நம்ம சுதாகர் கிட்டே சொல்லி நேத்தே சிக்கன் வாங்கி fridge இல் வச்சிடுனு சொன்னேன்."
சித்ரா:         "அப்புறம்?"
தினேஷ்:      "வாங்கிட்டு வந்தவன், fridge இல் வைக்காமல்,  மறந்து போய் கார்லேயே வச்சுட்டான். சம்மர் ஹீட்.  இந்த வெயிலில், நேத்து மதியத்துல இருந்து கார்லேயே இருந்த சிக்கன், இன்னைக்கு சாயந்திரம் போய் எடுத்து பாத்தா, நாத்தம் தாங்கலை. குப்பையில் போட்டுட்டோம். அதுக்குள்ள கடுகு வெடிச்சிட்டு. எல்லோரும், பசியோட வெயிட் பண்ணுவீங்க. இனிமே கடையிலே போய் வாங்கிக்கிட்டு வந்து வச்சா நேரம் ஆயிடுமேன்னு , சிக்கன் போடல."

சித்ரா:        "எப்படி, தினேஷ்?  அப்புறமும் சிக்கன் பிரியாணினு  சொல்லி குக்கர் திறந்து வச்சீங்க?"
தினேஷ்:       "போன வாட்டி பண்ணேன், சித்ரா. நல்லா வந்தது.
சித்ரா:          "நான் நம்பிட்டேன்."
தினேஷ்:        "இந்த வாட்டிதான்  சொதப்பிடுச்சு."
சாலமன்:       "சொதப்பல் என்பது ஒரு சாதாரண வார்த்தைனு நினைச்சேன்." 
மது:              "டேய் மாம்ஸ், உன் தைரியத்தை நான் பாராட்டுறேன் டா. வெறும் மஞ்சள் தூள் போட்ட பச்சரிசி கஞ்சியை குக்கரில் செஞ்சி எடுத்துட்டு வந்து, சிக்கன் பிரியாணி சாப்பிட வந்துரு மாம்ஸ் னு கூப்பிட்ட  பாரு. எப்படி டா? உனக்கு மனசாட்சியே கிடையாதா?"
சித்ரா:         " நீங்க சமைக்க ஆசைப்பட்ட ஐட்டம் பெயரையே,  சமைச்சதுக்கும் வைக்கணும்னு கட்டாயம் இல்ல.    அடுத்த வாட்டி,  சமைச்சிடுங்க. நாங்க வந்து பேர் வச்சுக்குறோம்."

தினேஷ், "I am your best friend, yaar" என்று சொல்வது கேட்கிறது.

எங்கள் நட்பு இரும்பு சங்கிலியால்  பிணைக்கப் பட்டது.  இன்றும், தினேஷ் எங்கள் நெருங்கிய நண்பர். அவருக்கு, இன்னும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.
தளபதி படத்தில்  "காட்டு குயிலு" பாடலில் வரும்:
"என் நண்பன் போட்ட சோறு,   நிதமும் தின்னேன் பாரு -
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்."
எங்களுக்காக:
"என் நண்பன் போட்ட சோறு,  அதையும் தின்னோம் பாரு -
நட்பை கூட கற்பை போல எண்ணுவோம்." என்று பாட்டு பாடும் வானம்பாடி பறவைகள்,  நாங்கள்.

  தினேஷ், இப்பொழுது சென்னையில் வாசம். தினேஷின் அம்மா,  நாங்கள்  ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும், மட்டன் அல்லது சிக்கன்  பிரியாணி வாய்க்கு ருசியாக செய்து தந்து, பெற்ற மகனின் பிரியாணி கடனை அடைத்து கொண்டு இருக்கிறார்கள்.

65 comments:

Paleo God said...

//சித்ரா: "எப்படி, தினேஷ்? அப்புறமும் சிக்கன் பிரியாணினு சொல்லி குக்கர் திறந்து வச்சீங்க?"
தினேஷ்: "போன வாட்டி பண்ணேன், சித்ரா. நல்லா வந்தது.
சித்ரா: "நான் நம்பிட்டேன்."
தினேஷ்: "இந்த வாட்டிதான் சொதப்பிடுச்சு."
சாலமன்: "சொதப்பல் என்பது ஒரு சாதாரண வார்த்தைனு நினைச்சேன்."
மது: "டேய் மாம்ஸ், உன் தைரியத்தை நான் பாராட்டுறேன் டா. வெறும் மஞ்சள் தூள் போட்ட பச்சரிசி கஞ்சியை குக்கரில் செஞ்சி எடுத்துட்டு வந்து, சிக்கன் பிரியாணி சாப்பிட வந்துரு மாம்ஸ் னு கூப்பிட்ட பாரு. எப்படி டா? உனக்கு மனசாட்சியே கிடையாதா?"
சித்ரா: " நீங்க சமைக்க ஆசைப்பட்ட ஐட்டம் பெயரையே, சமைச்சதுக்கும் வைக்கணும்னு கட்டாயம் இல்ல. அடுத்த வாட்டி, சமைச்சிடுங்க. நாங்க வந்து பேர் வச்சுக்குறோம்."

தினேஷ், "I am your best friend, yaar" என்று சொல்வது கேட்கிறது. //

எப்படிங்க ..????

ஏதோ அரிசியாவது போட்டாரே இல்லன்னா மஞ்ச தண்ணி ஊத்தி திருவிழாதான்...:)))

செம சிரிப்பு..:)

goma said...

ரொம்ப சிக்கனமா, சிக்கனே இல்லாம சிக்கன் பிர்ர்ர்ர்ர்ர்யாணி பண்றது எப்படிங்க...

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

"ரசமான" நிகழ்வு

settaikkaran said...

இப்பல்லாம் சமையல் குறிப்பு சம்பந்தப்பட்ட பதிவையெல்லாம் தேடித்தேடிப் படிக்கிறேன். அதுலேயும் இந்த பிரியாணி சூப்பரோ சூப்பர்!

சைவகொத்துப்பரோட்டா said...

நகைச்சுவை மிக்க எழுத்து நடை, ரசி(சிரி)க்கும்படி இருக்கிறது. கஞ்சி நல்லா இருந்திச்சா :))

ஜெய்லானி said...

///அப்புறம், என்ன மசாலா போட்டீங்க?"
" பாட்டிலில் மஞ்சளா ஒரு ஒரு பொடி இருந்தது."
சுதாகர்: "டேய், அது மஞ்சள் தூள் டா."
தினேஷ்: "அது கறி மசால் இல்லையா? சித்ரா, அப்போ மசாலா ஏதும் போடல."////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நட்புடன் ஜமால் said...

மிக அருமைங்க சித்ரா

பிரியாணியை சிரிப்பாணி ஆக்கிட்டீங்க.

அப்புறம் ஒரு அர்ஜண்ட் வேண்டுகோள் தினேஷுக்கு எதுனா பரிசு கொடுக்கனுமுன்னு தோனிடிச்சி அதுவும் நானே என் கையால - தயவு செய்து விசாவும்+டிக்கெட்டும் எடுக்க சொல்லுங்க அவரை - வேண்டாம் வேண்டாம் அவர் சிக்கன் இல்லாமலே சிக்கன் பிரியாணி செய்தவரு - அவரை நம்பி எதுவும் விட முடியாது - நீங்களே அவரை கூட்டிகிட்டு போய் எடுத்து அனுப்புங்க


தினேஷாஆஆஆஆஆஆஆஆ - இரு வாறேன் ...

Prathap Kumar S. said...

ஹஹஹஹ.... சிக்கனே இல்லாம சிக்கன் பிரியாணியா?? சபாஷ்.... நாங்க அரிசியே இல்லாம பிரியாணி வச்ச கதைல்லாம் உண்டு... கலக்கல் அனுபவம்...

// நண்பர் போட்ட சோறு அதையும் தின்னோம் பாரு// சிரிப்பை அடக்கமுடில சித்ரா டீச்சர்...

CS. Mohan Kumar said...

தினேஷ் இப்ப சென்னையிலா? பாக்கனுமே அவரை :))

நாடோடி said...

கொஞ்சம் புளியை கரைச்சி ஊத்தி புளி சாதமா பண்ணி இருக்கலாம்...தினேஷ் தப்பு பண்ணிட்டாரு..ஐடியா கொடுக்க சரியான ஆள் இல்லைனு நினைக்கிறேன்...

ISR Selvakumar said...

ஹா..ஹா..ஹா..
பிரியாணியை வைத்து நகைச்சுவையை கிண்டியிருக்கும் சித்ராவுக்கு பாராட்டுகள். ஃபிளாஷ்பேக்கை வர்ணிக்க கொசுவத்திக்குப் பதில் கிரைண்டர் . . . அடச்சே..இத்தனை நாளா எனக்கு இது தோனாமப் போச்சே.
”நண்பன் போட்ட சோறு” பாடல் வரிகளை இதைவிட சுவையாக நக்கல் அடிக்க முடியாது. இந்த ஒரு கிண்டலுக்காகவே நான் ”தமிழ் படம்” போல spoof சிந்தித்தால், அதில் சித்ராவுக்கு இடமுண்டு.

கண்ணா.. said...

//சேட்டைக்காரன் said...
இப்பல்லாம் சமையல் குறிப்பு சம்பந்தப்பட்ட பதிவையெல்லாம் தேடித்தேடிப் படிக்கிறேன். அதுலேயும் இந்த பிரியாணி சூப்பரோ சூப்பர்//

ஏனுங்கோ...உங்களுக்கு கல்யாணம் ஆக போகுதாங்கோ.....சமையல் குறிப்பெல்லாம் தேடிதேடி படிக்குறீங்களே...அதான் கேட்டேன்...


@ சித்ராக்கா,

பதிவு வழக்கம்போல் நகைச்சுவையில் பட்டையை கிளப்புது...

goma said...

பதிவு வழக்கம்போல் நகைச்சுவையில் ’பட்டையை’ கிளப்புது...

பிரியாணி பண்ணும்போது பட்டை இல்லாமலா..

கண்ணா.. said...

//goma said...
பதிவு வழக்கம்போல் நகைச்சுவையில் ’பட்டையை’ கிளப்புது...

பிரியாணி பண்ணும்போது பட்டை இல்லாமலா..//

யக்கா...நீங்களும் இப்பிடி கும்மி அடிக்க ஆரம்பிச்சா நாடு தாங்காது சொல்லிட்டேன்..

:)

தமிழ் உதயம் said...

சமையல் கதை நன்றாக இருந்தது. பிரியாணி நன்றாக இருந்தது என்று சொல்ல முடியாதே.

Unknown said...

// என் நண்பன் போட்ட சோறு, அதையும் தின்னோம் பாரு -
நட்பை கூட கற்பை போல எண்ணுவோம்." என்று பாட்டு பாடும் வானம்பாடி பறவைகள், நாங்கள். //

ஹா ஹா...,ஆமா அன்னிக்கு சாப்புடிங்களா இல்லயா

சசிகுமார் said...

உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

// " நீங்க சமைக்க ஆசைப்பட்ட ஐட்டம் பெயரையே, சமைச்சதுக்கும் வைக்கணும்னு கட்டாயம் இல்ல. அடுத்த வாட்டி, சமைச்சிடுங்க. நாங்க வந்து பேர் வச்சுக்குறோம்."//

இது:)!

//தினேஷின் அம்மா, நாங்கள் 'ஒவ்வொரு முறை' சென்னை வரும் போதும், மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி வாய்க்கு ருசியாக செய்து தந்து, பெற்ற மகனின் பிரியாணி கடனை அடைத்து கொண்டு இருக்கிறார்கள்.//

கந்து வட்டி:))))???

டவுசர் பாண்டி said...

//"ஆட்டு தலையில தண்ணிய தெளிச்சாச்சு. அது தலைய ஆட்டாமய இருக்கும். பிரியாணிக்கு ஆடு ரெடி.//

அட இதனால தான் , ஆடு தலீய ஆட்டுதா , நானு இன்னாவோ !! வெட்றதுக்கு அது பர்மிசன் குடுக்கர்த்துக்கு தான் தலீய ஆட்டுது இன்னு
நென்ஜெம்பா, இப்ப தானே பிரியுது !!

சாருஸ்ரீராஜ் said...

HA HA.... VERY NICE ONE

SUFFIX said...

//சித்ரா: ”நெய் சாதம் மாதிரி பண்ணி இருக்கலாம்ல.//

ஆமா இது மாதிரி எத்தனை முறை பிரியாணிய் நெய் சாதமா மாத்தியிருக்கோம்!!

SUFFIX said...

நல்ல வேளை, அப்போ வீட்ல அரிசியாவது இருந்துச்சு, அதுவும் இல்லைன்னா, என்ன பிரியாணி சமைச்சிருப்பாரோ? தினேஷ் நீங்க சமையலில் எக்ஸ்பர்ட்டுன்னு இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு.

vasu balaji said...

சொன்னதுக்காக இருக்கிறத கிண்டி அதுக்கு பிரியாணின்னு தைரியமா பேரும் வெச்ச அந்த நேர்மைய பாராட்ட வேணாமா:))

ஜெட்லி... said...

பிரியாணினு சொன்ன அந்த
படத்தை போட்டிருந்தால் இன்னும்
கலக்கலாக இருந்துருக்கும்.....

Kanchana Radhakrishnan said...

நானும் tvr ம் வயிறு வலிக்க சிரித்தோம்.

Anonymous said...

ஹிஹி.. பிரியாணி..

எனக்கு என்னைக்கு தான் சமைக்க வருமோ..

என்னுடைய பிரியாணியும் பிரியாணி மாதிரி தான்

Santhappanசாந்தப்பன் said...

முதல்ல, ப(ழி)லி வாங்கிட்டு... கடைசியா, நட்பு, தளபதி பாட்டுன்னு நல்லா கிரைண்டர் சுத்தி இருக்கீங்க... ஹி..ஹி.... பாவம் தினேஷ் அம்மா....

ஒரு பிரியாணிக்காகப் போரா... பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது...

Jaleela Kamal said...

சித்ரா சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி ம்ம் கதை சூப்பர், இவ்வவளவு சிரிப்பு ஆனால் டென்ஷனுடன் சிக்கன் இல்லாம எடுத்து வந்த தினேசுக்கு எப்படி இருந்திருக்கும்,

இத பிரியாணி அட்டூஷியம் ரொம்ப ஜோராவே இருக்கு.

பிரியாணி நாஸியா ஓடோடி வந்துட்டாஙக் யார் நமக்கு போட்டிய அட்டூஷியம் பண்னது என்று.. ஹி ஹி

Vidhya Chandrasekaran said...

ROTFL:))

செ.சரவணக்குமார் said...

//வானம்பாடிகள் said...

சொன்னதுக்காக இருக்கிறத கிண்டி அதுக்கு பிரியாணின்னு தைரியமா பேரும் வெச்ச அந்த நேர்மைய பாராட்ட வேணாமா:))//

நிச்சயமா பாராட்டணும்.

சூப்பர் சித்ரா டீச்சர். சிரிச்சு முடியல.

சென்ஷி said...

சிரிப்புத்தோரணம் கட்டித் தொங்க விட்டுட்டீங்க :)) ரொம்ப நல்லாயிருக்குது...

கலகலப்ரியா said...

haha chitra.. superb kali... i mean briyani... arumai..

ஹுஸைனம்மா said...

//சமைச்சிடுங்க. நாங்க வந்து பேர் வச்சுக்குறோம்."//

ஹி.. ஹி.. எங்க வீட்டில தினந்தினம் பெயர் சூட்டும் விழாதான்!!

கிரைண்டர் சுத்துனதும் அருமை!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

நல்லா க்ரைண்டர் ஓட்டி இருக்கீங்க..

நானும் சமைச்சுட்டுத்தான் பேரு வைப்பேன்.. :P ஆனா வாழ்நாளில் இது போல வைச்சதில்லையே..

நீங்க நட்புக்கு மரியாதை குடுக்கறவர்ன்னு நல்லா தெரியுது ..

அன்புத்தோழன் said...

/ "எப்படி, தினேஷ்? அப்புறமும் சிக்கன் பிரியாணினு சொல்லி குக்கர் திறந்து வச்சீங்க?" /

ஆனாலும் நீங்க ரொம்ப பாவங்க ஹ ஹ.... இந்த கேள்விய நீங்க கேக்கறப்போ உங்க reaction எப்டி இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசுச்சு பாத்தேன்.... ஹ ஹ.... முடில....

// "டேய் மாம்ஸ், உன் தைரியத்தை நான் பாராட்டுறேன் டா. வெறும் மஞ்சள் தூள் போட்ட பச்சரிசி கஞ்சியை குக்கரில் செஞ்சி எடுத்துட்டு வந்து, சிக்கன் பிரியாணி சாப்பிட வந்துரு மாம்ஸ் னு கூப்பிட்ட பாரு. எப்படி டா? உனக்கு மனசாட்சியே கிடையாதா?"//

ஹ ஹ ஹ.... நொந்து நூலா போயி அந்து அவளா போயி கேட்டுருக்காரு மது....

(தினேஷ் மனசாட்சி : நம்ம கிட்ட ரொம்ப எதிர்பாத்ருபாய்ங்கிலோ.....?)

அன்புத்தோழன் said...

// நீங்க சமைக்க ஆசைப்பட்ட ஐட்டம் பெயரையே, சமைச்சதுக்கும் வைக்கணும்னு கட்டாயம் இல்ல. //

உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது .... ஆனா அவருக்கு.....? ஹ ஹ ஹ.....

Thenammai Lakshmanan said...

இது மகா அட்டூழியம் சித்ரா நல்ல வேளை இதுனால வரும்போதெல்லாம் பிரியாணியா ரொம்ப நல்ல அம்மா அவங்க

ஹேமா said...

சித்ரா...எப்பிடிப்பா.
நீங்கதான் இப்பிடின்னா...உங்ககூட சேர்ந்தவங்களுமா !
முடியல சிரிச்சு !

புலவன் புலிகேசி said...

//"ஆட்டு தலையில தண்ணிய தெளிச்சாச்சு. அது தலைய ஆட்டாமய இருக்கும். பிரியாணிக்கு ஆடு ரெடி........!" //

ஆஹா..இன்னா கண்டுபிடிப்பு...!

//சுதாகர்: "டேய், அது மஞ்சள் தூள் டா."
தினேஷ்: "அது கறி மசால் இல்லையா? சித்ரா, அப்போ மசாலா ஏதும் போடல."//

அடக் கொடுமையே...

திவ்யாஹரி said...

மது: "டேய் மாம்ஸ், உன் தைரியத்தை நான் பாராட்டுறேன் டா. வெறும் மஞ்சள் தூள் போட்ட பச்சரிசி கஞ்சியை குக்கரில் செஞ்சி எடுத்துட்டு வந்து, சிக்கன் பிரியாணி சாப்பிட வந்துரு மாம்ஸ் னு கூப்பிட்ட பாரு. எப்படி டா? உனக்கு மனசாட்சியே கிடையாதா?"
சித்ரா: " நீங்க சமைக்க ஆசைப்பட்ட ஐட்டம் பெயரையே, சமைச்சதுக்கும் வைக்கணும்னு கட்டாயம் இல்ல. அடுத்த வாட்டி, சமைச்சிடுங்க. நாங்க வந்து பேர் வச்சுக்குறோம்."

ஹா..ஹா..ஹா.. சரியான காமெடிங்க..

Ramesh said...

அப்பாடா. உம்ம்ம் ஏ..ஏ!

தத்துபித்து said...

oh seedless fruit mathiri ithu chickenless briyani ya?
but its nice.

Romeoboy said...

\\பெற்ற மகனின் பிரியாணி கடனை அடைத்து கொண்டு இருக்கிறார்கள்//

அவர் பண்ணிய பாவத்தை பாவம் அவரின் அம்மா அடைகிறார்.

Mythili (மைதிலி ) said...

சிக்கன் இல்லா சிக்கன் பிரியாணி எளிமையாக தயாரிப்பது எப்படி என்று பஹிர்ந்து கொண்டமைக்கு நன்றி . உன் நண்பரை பார்த்தா சமைக்க தெரிந்தவர் மாதிரி தெரியல... ஜமாய்க்க தெரிந்தவர் மாதிரி இருக்கு.. உன்னையே வெறும் சோறு கொடுத்து பிரியாணின்னு நம்ப வச்சிருக்காருன்னா பாரேன்.

Jerry Eshananda said...

அட்டூழியம் தாங்க முடியல...[.ரசித்தேன்.]

Abu Khadijah said...

ரொம்ப நன்றாக இருந்தது.

ஆபிஸ்ல படித்து தானாக சிரித்துக் கொண்டிருந்தேன், நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.

ரிஷபன் said...

மணக்குது பதிவு.. பிரியாணின்னா இனி உங்க கலாட்டா தான் நினைவு வரும் போல

suvaiyaana suvai said...

ஹ ஹ எங்க வீட்டில தினம் பெயர் சூட்டும் விழாதான்!! ரொம்ப நல்லாயிருக்கு!!

☀நான் ஆதவன்☀ said...

:))))) சிரிச்சுட்டேஏஏஏஏஏஏஏஏஎ சிரிக்கேன்

பத்மநாபன் said...

சரியான தாளிப்பு .....
இந்த பதிவை பார்த்த தினேஷ் , அடுத்த முறை நீங்கள் வரும்பொழுது , அவரது கையாலே பிரியாணி செய்து தருவதற்கு , அவரது அம்மாவிடம் சிறப்பு அனுமதி வாங்கிவிட்டார் . பூர்வாங்க வேலைகளில் இறங்கிவிட்டதகவும் தகவல் .பதிவுப்பழிக்கு விருந்துப்பழி ..... சென்ற முறையை விட இன்னமும் சிறப்பாக (??? ) அமைவதற்கு நடவடிக்கை தீவிரம் ......

க ரா said...

பிரியாணி சூப்பர்.

நசரேயன் said...

இவ்வளவு பிரச்சனை நடந்து இருக்கோ?
நான் கடைசியா வந்து பிரியாணி சாப்பிட்டேன் போல இருக்கு

கமலேஷ் said...

அய்யையோ.... சாமி என்ன உட்ருங்க...இது மேல என்னால சிரிக்க முடியாது...வயிறு எல்லாம் வலிக்குது...அப்படியேம, கிரேசி மோகன் காமெடி படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதுன மாதிரி இருக்கு.... ரொம்ப நகைசுவை ரசனையுள்ள ஆளுங்க
நீங்க...வாழ்த்துக்கள் நடத்துங்க...

வேலன். said...

தினேஷ் இங்க மெட்ராஸ்ஸில் தானே இருக்காரு...நானும் டவுசரும் போய் முதலில் பிரியாணி சாப்பிட்டு வருகின்றோம்.
பதிவு அருமை சகோதரி...

வாழ்க வளமுடன்.
வேலன்.

அன்புடன் மலிக்கா said...

அம்மாடியோ சிரிப்புதாங்கல சிஸ்டர் சூப்பர் சூப்பரப்பூஊஊஊ..

Mohan said...

ஒவ்வொரு பதிவும் எப்படி கலகலப்பா எழுதறீங்க? வாழ்த்துக்கள்!

சுசி said...

//பெற்ற மகனின் பிரியாணி கடனை அடைத்து கொண்டு இருக்கிறார்கள்.//

அப்போ படிச்ச எங்களோட கடனை??

சூப்பரா எழுதி இருக்கீங்க சித்ரா.

Jerry Eshananda said...

அடுத்த அட்டூழியம் [பதிவு]எப்போ?

Radhakrishnan said...

ஹா ஹா! சுவாரஸ்யமாக இருந்தது, மிகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. நேற்று என் மகன் கூட மஞ்சள் தூளை எடுத்துத் தண்ணீரில் கலக்கி குடித்தால் ஜலதோசம் சரியாகிவிடும் என்றான். ;)

Pavithra Srihari said...

rolling and laughig out loud... kannula ellam thanni thanni yaa varuthu ... sema post ...

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா - தினேஷ் வாழ்க - உங்கலலனைவரின் கற்பு போன்ற நட்பு வாழ்க - சென்னை சென்று அசலை வட்டியுடன் - கந்து வட்டியுடன் வசூலிக்கும் திறமை வாழ்க

எவ்வளவு சிந்தனைகள் - அத்தனையும் முத்துகள் - அருமை அருமை

நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா

குடந்தை அன்புமணி said...

சிக்கன் பிரியாணி சாப்டும்போதெல்லாம் இனி உங்க ஞாபகம் வந்துரும்னு நினைக்கிறேன்... ஹ....ஹா....

Unknown said...

//Approaching everything in life with a sense of humor - a blessing - given by God through my father's genes.
//

உங்கள் தந்தையாருக்கு எமது வந்தனங்கள்..

priyamudanprabu said...

அம்மா தாயே .. அலுவலகத்துல சிரிப்ப அடக்க முடியல .. வேலைல இருந்த டென்சனே குறைஞ்சுடுச்சு ..நன்றி

Anonymous said...

sema comedy........