Monday, February 22, 2010

cricket தொடர்பதிவு.


 தொடர் பதிவுக்கு அழைத்த, மீன் துள்ளியான் அவர்களுக்கு நன்றி. 
(அவர் கிரிக்கெட் ஆட்டத்தை வேடிக்கை பாக்க போனா, என் கையிலேயும் மட்டையை கொடுத்துட்டு, கிரிக்கெட் ஆடுங்க அப்படின்னு ஒரு நெல்லை மண் பாசத்துல சொல்லிட்டார்.)

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்:
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.  
(வெட்டி பேச்சு::   நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. அப்படின்னு நினைக்கிறேன்.)

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
(வெட்டி பேச்சு::  ஆமாம், கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே கிரிக்கெட் விளையாடியதாக, கல்வெட்டான் குழி கல்வெட்டு சொல்கிறது. அவர்கள் பெயர்கள், உங்களுக்கு தெரிந்தால், அவர்கள் பேர் சொல்லி புகழ் பரப்புங்க. இல்ல, "ஆயிரத்தில் ஒருவன் - பாகம் 2 பட ரிலீஸ் ஆக வெயிட் பண்ணுங்க.)

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
(வெட்டி பேச்சு:: இந்த தொடர் பதிவு "கொலைக்கு" ரெண்டு கூட்டாளி வேற வேணுமாம். யாருக்கு இந்த பதிவு பாத்துட்டு தோணுதோ , அவங்க அடுத்து போட்டு தள்ளலாம்..)

 காசு வாங்கிட்டு - bet கட்டிக்கிட்டு -  மேட்ச் fixing செஞ்சு -  advertisements மூலமாகவும் கல்லாவை நிரப்பிக்கிட்டு -  சண்டை போட்டு - scandals ல அகப்பட்டு - கிசு கிசு வில வந்து - அரசியல் காமெடி பண்ணிக்கிட்டு -  இத்தனைக்கும்  முன்னால பின்னால நடுவுல அப்போ அப்போ கிரிக்கெட் விளையாட்டையும் கவனிச்சிக்கிட்டு வந்த வீரர்கள் லிஸ்ட்,  ரெண்டு வருஷமா தொலைஞ்சு போச்சு. நோ டச்.
question paper ஒன்றை திடீர்னு நீட்டியவுடன் - பதில்கள் தப்பா ரைட் ஆ என்று குழம்பிய வேளையில் -   நமது தோழர் பட்டாள கிரிக்கெட் சிங்கம், தினேஷ் அவர்கள்  உடனே காப்பி அடிக்க பதில் பேப்பர் நீட்டிட்டார். 

சீரியஸா பதில் சொல்லும் முன், ஒரு நிமிடம் என் நண்பர்கள்குல கிரிக்கெட் மாணிக்கங்களுக்கு ஒரு மரியாதை சல்யூட்.

இவர்கள் இன்னும் சென்னை 600028 படத்தின் சாயலில், கடல் தாண்டியும் ஒரு ஈடுப்பாட்டுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறார்கள். 

தன் மனைவியை பிரசவத்துக்காக Houston மருத்துவமனையில் காலையில் சேர்த்து விட்டு, டாக்டர் இடம் பேசிய போது, அவர் அன்று மதியத்துக்கு மேலதான்  பிரசவம் ஆகும் என்று சொல்லியதும் மறு வினாடியே சந்தோஷமாக பக்கத்தில் உள்ள கிரிக்கெட் கிரௌண்ட்க்கு போய் ஏற்கனவே ஒத்து கொண்டிருந்த மேட்ச்க்கு umpire ஆக நின்ற ஜெயந்தியின் கணவருக்கு முதல் சல்யூட். 

விடிய காலை மூன்று மணிக்கு என்றாலும் எழுந்து, பக்கத்தில் உள்ள குஜராத்தி ஒருவர் நடத்தும் மொடேல் ஹால் ஒன்றில் மேட்ச் பார்க்க போன நண்பர் குழு -  இந்தியாவுக்கு கொடி பிடித்து, டிவிக்கு இந்த பக்கம் நின்னாலும் கை தட்டி விசில் அடித்து, பாக்கிஸ்தான் ரசிக கூட்டத்துடன் ரகளை ஆகி, அமெரிக்க போலீஸ் வந்து எச்சரிக்கை செய்து அனுப்பும் அளவுக்கு "கிரிக்கெட் எங்கள் பேச்சு, இந்திய டீம் எங்கள் உயிர் மூச்சு" என்று இருப்பவர்களுக்கு  ஒரு சல்யூட். 50 இன்ச் டிவி க்கு முன்னால இருந்த 20 அடி ரூமில்  நடக்க இருந்த எல்லை போர் நிறுத்தப்பட்டது. 

20/20 மேட்ச் பற்றிய நண்பர் கருத்தரங்கில்: 
கிரிக்கெட் விளையாட்டு, adrenaline rush க்காக மட்டும் பார்க்கவில்லை, எங்களுக்குள் தூங்கி கொண்டிருக்கும் தேசிய உணர்வையும் தட்டி எழுப்பும் அம்சமாக பார்க்கிறோம். அதை, 20/20 டீம்ஸ் என்று பிரித்து அயல் நாட்டினரையும் உள்ளுக்குள் விட்டு, யார் யார் எங்கே என்று புரியாமல் தெரியாமல், ஏதோ பொழுதுபோக்கு சினிமா மாதிரி ஆகிவிட்டதை கண்டித்து, புறக்கணித்து கொண்டிருக்கும் மற்றொரு நண்பர் குழுவுக்கு ஒரு மரியாதை. 
(அதில் ஒரு நண்பர் கமென்ட் - தமிழ் சினிமாவில், மதுரை பக்கம் ஒரு ஊரில் காதலிக்கிறவன், கனவு சீன் மட்டும் ஸ்விஸ் மலைக்கு முன்னால் டூயட் ஆட வெளிநாடு போகிற மாதிரி, இந்தியாவுக்குள்ள இருக்கிற டீமில் அப்போ அப்போ  வெளிநாட்டு முகங்கள்  தலை காட்டுது.  மனதில் ஒட்ட மாட்டேங்குது.)

சரி, இனி சீரியல் கில்லிங்:

1. பிடித்த கிரிக்கெட் வீரர் : Sachin Tendulkar, Viv Richards, Kapil Dev

2.
பிடிக்காத கிரிக்கெட் வீரர் : Javed Miandad, Aamer Sohail

3.
பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : Wasim Akram

4.
பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : Debasis Mohanty

5.
பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : Shane Warne

6.
பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : Sanath Jayasuriya

7.
பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : Sachin Tendulkar

8.
பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் :

9.
பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : Brian Lara

10.
பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : Aamer Sohail

11.
பிடித்த களத்தடுப்பாளர் : Jonty Rhodes

12.
பிடிக்காத களத்தடுப்பாளர் : Anil Kumble

13.
பிடித்த ஆல்ரவுண்டர் : Kapil Dev, Imran Khan

14.
பிடித்த நடுவர் : Venkat Raghavan

15.
பிடிக்காத நடுவர் : Steve Bucknor

16.
பிடித்த நேர்முக வர்ணனையாளர் : Tony Greg

17.
பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : Ramiz Raja

18.
பிடித்த அணி : West Indies (Sir Gary Sober’s Team), Indian (MS Dhoni’s Team), Australia (Steve Waugh’s Team)

19.
பிடிக்காத அணி : Pakistan

20.
விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- India, Australia, South Africa

21.
பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- Bangladesh VS West Indies

22.
பிடித்த அணி தலைவர் : Kapil Dev, Imran Khan, Ganguly, Dhoni, Sir Sobers

23.
பிடிக்காத அணித்தலைவர் : Shahid Afridi

24.
பிடித்த போட்டி வகை : Test (only on the 5th day J last session)

25.
பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : Sachin, Shewag

26.
பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : Sidhu - Mongia

27.
உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : Viv Richards

28.
சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : Sachin Tendulkar, Shane Warne

29.
பிடித்த விக்கெட் கீப்பர் : Gilchrist, Dhoni


hello மக்களே, நான் இதில் ஈ அடிச்சான் காப்பி செஞ்சிருக்கேன் என்று சொல்லி இருக்கேன். கூகிள் ஆண்டவரையும் தினேஷ் ஆண்டவரையும் துணைக்கு அழைத்தேன். அந்த லிஸ்ட் உக்கு மேல உள்ளதுதான் ஒரிஜினல் சரக்கு. தொடர் பதிவில் விளையாடினேன். ஜோக் ஆ எடுத்துக்கோங்கப்பா. பர்சனல் சாய்ஸ் கிடையாது. இந்த லிஸ்டுக்கு நான் கிரெடிட் வாங்க முடியாது.
 

71 comments:

Paleo God said...

இந்த 8வதுதான் இடிக்கிது..:)
--

நீங்களாவது வுமென் கிரிக்கெட் பார்க்கலாம்..:))

Prabu M said...

சந்தர்பால் இடதுகை துடுப்பாட்டக்காரர் அக்கா....

ஆரம்பத்தில் கிரிக்கெட் பற்றிய சுவாரஸ்யத்தொகுப்பு ரொம்ப அருமை அக்கா....
சீரியல் கில்லிங்கைவிட எனக்கு அதுதான் ஞாபகத்தில் நிற்கிறது....
தொட்டுத் தொட்டு அழகாய் முடிக்கப்பட்ட சின்ன சின்ன மத்தாப்புகள் போலத் தொகுப்பு ஒவ்வொன்றும் அழகு :)

மொஹாண்டியை யெல்லாம் இன்னும் ஞாபகம் வெச்சிருக்கீங்களே....
மொத்தத்தில் சூப்பர்ப்!!

ISR Selvakumar said...

எனக்கும் எட்டாவது இடிக்குது.
ஷங்கர் சொன்னது போல சித்ரா தலைமையில் ஒரு பெண்கள் டீம், பெண்கள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்கலாம். முந்தாநேத்து இந்திய பெண்கள் அணி 3 ரன்னில் இங்கிலாந்திடம் தோற்ற கதை யாருக்காவது தெரியுமா?

settaikkaran said...

எனக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமேயில்லீங்க! இருந்தாலும் இதுலே இவ்வளவு விஷயம் இருக்கா? எவ்ளோ பெரு ஞாபகம் வச்சிருக்கீங்க? இதுக்கே ஒரு ஷொட்டு!

Chitra said...

hello மக்களே, நான் இதில் ஈ அடிச்சான் காப்பி செஞ்சிருக்கேன் என்று சொல்லி இருக்கேன். கூகிள் ஆண்டவரையும் தினேஷ் ஆண்டவரையும் துணைக்கு அழைத்தேன். அந்த லிஸ்ட் உக்கு மேல உள்ளதுதான் ஒரிஜினல் சரக்கு. தொடர் பதிவில் விளையாடினேன். ஜோக் ஆ எடுத்துக்கோங்கப்பா. பர்சனல் சாய்ஸ் கிடையாது. இந்த லிஸ்டுக்கு நான் கிரெடிட் வாங்க முடியாது.

Prathap Kumar S. said...

ஆமா 8 வது ல ஏன் யாரையும் குறிப்பிடலை... அட்லீஸ்ட் என்பேரையாவது போட்டுருக்கலாம்...

ஷங்கர்ஜீ சொன்னா மாதிரி ஏன் பெண்கள் கிரிக்கெட் டீமை எல்லாரும் மறந்துட்டாங்க...நீங்களாவது எழுதியிருக்கலாம்..

Chitra said...

பெண்கள் கிரிக்கெட் டீம் - இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை. அப்புறம் பாருங்க, அதுக்கும் கூகிள் பண்ணி கலாய்ச்சிருவோம்ல.

vasu balaji said...

இது வேறயா:))

சசிகுமார் said...

ஏங்க ராகுல் டிராவிட் பேர விட்டுடீங்க No. 27 அவருக்கு கொடுங்க அதுக்கு தகுதியான ஆள் தான் அவர், அருமையான பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

எல்லாம் ஆங்கிலத்துல இருக்கும் போதே நினைச்சேன்.. கட் & பேஸ்டா தான் இருக்கும்னு :))

Chitra said...

மக்கா, .......... பின்ன இதெல்லாம் சீரியஸா எடுத்து எழுதினா, எல்லோரும் மட்டையை தூக்கிகிட்டு என்னை அடிக்க வந்துருவாங்கனு தான். ஹி,ஹி,ஹி,....

சங்கர் said...

வலையுலக மகளிர் அணி, ஸாரி, மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சித்ராக்கா, வாழ்க வாழ்க

Chitra said...

கொள்கை பரப்பு செயலார் பதவிக்கு apply பண்றாப்புல இருக்கு. ஓ, கிரிக்கெட் அணியா? தலைவினதும் கட்சினு நினைச்சிட்டேன்.

வேலன். said...

அது எப்படி கிரிக்கெட்டிலும் பூந்து விளையாடுறீங்க..சமையலிலும பூந்து விளையாடுறீங்க...இப்பவே பாருங்க உங்களுக்கு மகளிர் அணி தலைவி பதவி கொடுத்துட்டாங்க...தூள்கிளப்புங்க சகோதரி..... வாழ்க வளமுடன் வேலன்.

புலவன் புலிகேசி said...

8வதில் சச்சினை உட்டுட்டீங்களே...

சங்கர் said...

//கொள்கை//

அதெல்லாம் வேற இருக்கா

அந்த பதவி வேணாம், பொருளாளர் பதவி ஓகே :)

Chitra said...

இப்போ "காசா? பணமா?" போனா போகுது. அந்த பதவி உங்களுக்கு கொடுத்துட்டா போச்சு.

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு, சிக்ஸர் அடிச்சிட்டீங்க.

SUFFIX said...

பிடித்தது பிடிக்காதது பற்றிய ஆராய்ச்சி இருக்கட்டும், ஒரிஜினல் முன்னுரை ’அக்மார்க்’. நல்லா எழுதியிருக்கீங்க சித்ரா.

Unknown said...

யக்கா நீங்க என் முந்தின கமெண்டை போடாம மட்டுறுத்திட்டிங்க. பரவாயில்ல.

இதையாவது போடுங்க.

உங்க நண்பர் தினேஷ் (coincidentally என் நிஜப் பேரும் அது தான்) உங்களை நல்லா பழி வாங்கிட்டார்.. :))

கண்ணா.. said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இந்த 8வதுதான் இடிக்கிது..//

இடிக்குதுன்னா கொஞ்சம் தள்ளி நில்லுங்க..:)

//தன் மனைவியை பிரசவத்துக்காக Houston மருத்துவமனையில் காலையில் சேர்த்து விட்டு, டாக்டர் இடம் பேசிய போது, அவர் அன்று மதியத்துக்கு மேலதான் பிரசவம் ஆகும் என்று சொல்லியதும் மறு வினாடியே சந்தோஷமாக பக்கத்தில் உள்ள கிரிக்கெட் கிரௌண்ட்க்கு போய் ஏற்கனவே ஒத்து கொண்டிருந்த மேட்ச்க்கு umpire ஆக நின்ற ஜெயந்தியின் கணவருக்கு முதல் சல்யூட். //

போகுற போக்குல போட்டு கொடுத்தீட்டீங்களே..

Vettipullai said...

chithu... எப்படி இத்தனை ஹாஸ்யமாக எழுதமுடியுது..உங்களுக்கு... என் பேனா அழுது வடியுது எப்ப பாரு... i envy you... keep writing... I have an ultimate motive behind this... நீங்க எழுதிட்டே இருந்தா நான் சிரிச்சுட்டே இருப்பேன்... :)

Chitra said...

முகிலன், இந்த கமென்ட் போட்டுட்டேன். சரிதானே?
dinesh - பேர் இருந்தாலே என்னை பழி வாங்கணும்னு தோணும் போல. ஹா,ஹா,ஹா,ஹா.....

Unknown said...

//Vetti pullai said...
chithu... எப்படி இத்தனை ஹாஸ்யமாக எழுதமுடியுது..உங்களுக்கு... என் பேனா அழுது வடியுது எப்ப பாரு... i envy you... keep writing... I have an ultimate motive behind this... நீங்க எழுதிட்டே இருந்தா நான் சிரிச்சுட்டே இருப்பேன்... :)//

சித்ராக்கா பேனால எழுதுறதே இல்ல. நேரா கம்ப்யூட்டர்ல தட்டிடறாங்க. அதான்..

Chitra said...

வெட்டி புள்ளை - நீங்க ஏன் அழுவுணி பேனாவை கையில் வச்சுருக்கீங்கனு தெரியலியே? அந்த டப்பாவில் இருக்கும் சிவப்பு நிற பேனா வச்சு எழுதினால், சிரிப்பானியாய் இருக்குமாம். வெட்டி பேச்சில் சொன்னாங்க.

கண்ணா.. said...

சித்ராக்கா,

நானும் கமெண்ட் போட்டேனே....வரலை..

ஓளிச்சு வச்சுருந்தா போட்ருங்க ப்ளிஸ்... என்னால திரும்ப எல்லாம் டைப்ப முடியாது... பேசிக்கலி ஐம் சோம்பேறி..

:)

கண்ணா.. said...

சித்ராக்கா,

நானும் கமெண்ட் போட்டேனே....வரலை..

ஓளிச்சு வச்சுருந்தா போட்ருங்க ப்ளிஸ்... என்னால திரும்ப எல்லாம் டைப்ப முடியாது... பேசிக்கலி ஐம் சோம்பேறி..

:)

Chitra said...

இருங்கப்பா, இந்த மெயில் சுருக்கு பை மாதிரி மடிச்சு வச்சுக்குது. சில சமயம் மிஸ் பண்ணிடுறேன்.

Chitra said...

SUFFIX, இவர் ஒரு petition பரமசிவம். கொடுத்த மனுவுக்கு பதில் வரலை என்று இன்னொரு மனு கொடுத்துட்டார்.
என் முன்னுரைக்கு, "அக்மார்க்" முத்திரை கொடுத்த SUFFIX அவர்களுக்கு நன்றி.
இனி வெட்டி பேச்சு, அக்மார்க் முத்திரையுடன் வெளியாகும்.

Chitra said...

நன்றி, வேலன் சார். உங்க "ஜாலி" கமென்ட் நல்லா இருக்குங்க.

Chitra said...

உமன் கிரிக்கெட் நீங்க பாக்ககூடாதுனு தடை விதிச்சது தெரியாது, ஷங்கர் சார் (பலா பட்டறை)
உங்கள் சார்பாகவும் நான் பாக்கிறேன்.

Chitra said...

பிரபு.எம். - நான் கிரிக்கெட் விளையாண்டதை விட, வெடிச்ச பட்டாசு - பிடிச்ச மத்தாப்பு நல்லா இருக்குனு சொல்லிட்டார்.

Chitra said...

புலிகேசி சார், சச்சின் இன்னும் காம்ப்ளான் பூஸ்ட் குடிக்கிறதை விடலை. சரி, ..............

Chitra said...

சேட்டைக்காரன் கொடுத்த ஷொட்டு, நண்பர் தினேஷ்க்கு பார்சல் செய்யப் படுகிறது.

ஜெட்லி... said...

//20/20 மேட்ச் பற்றிய நண்பர் கருத்தரங்கில்:
கிரிக்கெட் விளையாட்டு, adrenaline rush க்காக மட்டும் பார்க்கவில்லை, எங்களுக்குள் தூங்கி கொண்டிருக்கும் தேசிய உணர்வையும் தட்டி எழுப்பும் அம்சமாக பார்க்கிறோம்.//

i liked it....!!


விதிமுறைகள்லே உங்க ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணீட்டிங்க....
ரைட்.....

Chitra said...

விதிமுறைகள் - award ceremony (கரெக்டா நண்பர்கள் பார்த்து கொடுத்துட்டேன்) - ரெண்டு விஷயத்திலும் சிறப்பு விருந்தினரா இருந்திட்டு, விளயாட்டு ஆரம்பிக்கும் போது தினேஷ் கையில் மட்டையை தூக்கி கொடுத்துட்டு, விசில் ஊதி ஆரம்பிக்க சொல்லி ஒதிங்கிட்டேன்.

Chitra said...

நாஞ்சில், பெண்கள் கிரிக்கெட் டீம் பத்தி தெரிஞ்சா எழுத மாட்டோமா? இதுக்கே காப்பி அடிக்க வேண்டி இருக்கு. அதுக்கு "டீ" தான்.

Chitra said...

பாலா சார், என்ன சார் - ஏதோ கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடி மாதிரி இங்கே டீல்ல விட்டுட்டீங்க. "அதான் இது."

Unknown said...

yaaraiumee kupdalayee ???

Chitra said...

என் புகழ் (அப்படி ஒண்ணு வேற இருக்கா?) மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்களை தந்த சசிகுமார் அண்ணாச்சிக்கு நன்றி.

Vidhya Chandrasekaran said...

:))

Chitra said...

இதை படிச்சிட்டு, உங்களுக்கு "தொடர் கொலை வெறி" வந்தா, நீங்கதான் அடுத்து எழுதணும். மக்களே, இப்போ பேனா மூடி எழுதுவார்.

Chitra said...

vidhya: :-D

மங்குனி அமைச்சர் said...

மேடம் நீங்க இவ்வளவு சொல்லியும் நம்ம புள்ளைகளுக்கு புரியமாட்டேன்குதே (புத்திசாலி பயபுள்ளைக) , என்னத்த சொல்ல?
அப்புறம் இந்த ஐடியா கூட நல்லாருக்கே!!!!!!! நானும் சமையல் குறிப்பு எழுத போறேன் (நீங்களும் ரகசியமா ஹெல்ப் பன்ணனும்)

Chitra said...

கண்டிப்பாக. ரகசியமா என்ன? open ஆகவே சமையலில் தாளிச்சிடுவோம்.

ஹுஸைனம்மா said...

//அந்த லிஸ்ட் உக்கு மேல உள்ளதுதான் ஒரிஜினல் சரக்கு. தொடர் பதிவில் விளையாடினேன். ஜோக் ஆ எடுத்துக்கோங்கப்பா.//

இதுதான் திருநெல்வேலிக்காரங்க மகிமை; ஊழல் பண்ணாலும் உள்ளதச் சொல்லிடுவோம்ல!!

நாடோடி said...

கலக்குங்க. லிஸ்ட் நல்லா இருக்கு..8-வது மறந்து போச்சா?

Radhakrishnan said...

மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள், அப்படியே பதினம தொடர் ஒன்றையும் எழுதி விடுங்கள். அதற்காக அழைப்பு விடுக்கின்றேன்.

திவ்யாஹரி said...

இதை படிச்சிட்டு, உங்களுக்கு "தொடர் கொலை வெறி" வந்தா, நீங்கதான் அடுத்து எழுதணும். மக்களே, இப்போ பேனா மூடி எழுதுவார்.

எல்லாத்துலயும் காமெடி சேர்த்துக்குறீங்க சித்ரா.. ச்சே.. காமெடில எல்லாத்தையும் சேர்த்துக்குறீங்க.. நல்லாருக்கு..

நட்புடன் ஜமால் said...

கில்லி தண்டான்னா கலக்கலாம், கிரிக்கட்டு ஜாரி

--------

செல்வா அண்ணே ஏற்கனவே பெண்கள் அனி சேர்த்து ஆட்டம் போய்கிட்டு தான் இருக்கு

சந்தேகம் இருந்தால் மீண்டும் ஒரு போட்டோ போடுங்க முகபுத்தகத்தில் ...

Unknown said...

ஆஆஆஆஆ நீங்களுமா பாவம் கிரிக்கெட் விடுங்க

ரிஷபன் said...

ஸாரி .. இது என் ஃபீல்ட் இல்ல..

தமிழ் உதயம் said...

சாதனையாளர் கும்ப்ளே வை சரிக்கிட்டீங்க.

suvaiyaana suvai said...

கிரிகெட் மறந்து போச்சு:(

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ப்ரஸண்டேஷன் ரொம்ப..ரொம்ப...வித்யாசமாய் இருந்தது!!

சுசி said...

செம.. கலக்கல் சித்ரா..

ரொம்ப சிரிச்சுட்டேன்..

Romeoboy said...

\\ இந்த லிஸ்டுக்கு நான் கிரெடிட் வாங்க முடியாது //

என்ன ஒரு தன்னடக்கம் தலைவிக்கு.

நசரேயன் said...

//ஜோக் ஆ எடுத்துக்கோங்கப்பா//

நீங்க என்ன சொன்னாலும் ஜோக்குதான்

Thenammai Lakshmanan said...

ரவி சாஸ்த்ரி கவாஸ்கர் கபில்தேவை எல்லாம் பிடிக்காதா சித்து

ஹேமா said...

சித்ரா..எனக்கு கிரிக்கெட் பத்தி ஒண்ணுமே தெரியாது.என்னமோ எழுதியிருக்கீங்க.வாசிச்சேன்.
எப்பவும்போல சிரிக்க வைக்க நீங்கதான் தோழி.

பித்தனின் வாக்கு said...

நல்லா எழுதியுள்ளீர்கள். பிடித்தது, பிடிக்காதது எல்லாம் நீங்க சொன்னதா? இல்லை அதுக்கும் உதவியாளரா?. கபில்,சர்.சோபர்ஸ்,விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான் களின் பெயரை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

Jerry Eshananda said...

பதிவை படித்தேன்,பின்னூட்ட காமெடிகள் பதிவையே மிஞ்சி விட்டது," நல்லா புகுந்து விளையாடுறீங்களே"

வரதராஜலு .பூ said...

//பதிவை படித்தேன்,பின்னூட்ட காமெடிகள் பதிவையே மிஞ்சி விட்டது,"//

ரிப்பீட்டேய்

கார்கி தொடர்ந்தத படிச்சிங்கிளா?
http://www.karkibava.com/2010/02/blog-post_24.html

Chitra said...

எல்லோருக்கும் நன்றி.

Chitra said...

அடுத்த தொடர் பதிவுக்கு அழைத்த V.Radhakrishnan sir - ஏன் சார், ஏன்? பதின்ம வயது தொடர் எழுதணுமா?
இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு எழுதினா, இன்னும் நல்லா இருக்கும்னு பதின்மவயது சுந்தரனாந்தா அடிகள் சொல்லிட்டார்.

மீன்துள்ளியான் said...

thanks chitra akka,, thodar eluthinathuku

மரா said...

ஆகா.......நீங்களும் எழுதிட்டீங்களா..இன்னும் நான் தான் பாக்கி.நல்ல உழைப்பு.உங்க நேர்மைக்கு வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது .பகிர்வுக்கு நன்றி

goma said...

சித்ரா
இந்த மேடை எனக்கான மேடை இல்லை.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என்று பின்னூட்டம் போட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் ,என் மனசாட்சி ,என்ன புரிஞ்சுதுன்னு நல்லா இருக்குன்னு எழுதினே ?என்று வாட்டி வறுத்தெடுத்து விடும்

மங்குனி அமைச்சர் said...

மேடம் உங்க வூட்டுகாரரு போன் நம்பர் குடுங்க கொஞ்சம் சமையல் டிப்ஸ் கேட்கனும். ஆமா நீங்க ரொம்ப பிசி மேடம் எந்த ப்ளாக் கமெண்ட்ஸ் போனாலும் நீங்க இருக்கீங்க (சும்மா டமாசு)

க.பாலாசி said...

இந்தளவுக்கு காமடி பண்றவங்களா நீங்க...தெரியாமப்போச்சே....