"ஹலோ! "
"ஹலோ!"
"சித்ராவா? பிஸியா இருக்கீங்களா? சும்மா இருக்கீங்களா?"
" இப்போதான் எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து, சும்மா வந்து உட்கார்ந்தேன். என்ன விஷயம்?"
"சும்மா தான் கூப்பிட்டேன். இன்று எனக்கு காய்ச்சல் என்று வேலைக்கு போகவில்லை. சும்மாதான் இருந்தேன். சும்மா இருக்கோமே - சும்மா, யாரையாவது கூப்பிட்டு, சும்மா பேசலாமேன்னு, சும்மா தோணுச்சு. "
"நானும் சும்மாதானே இருப்பேன் என்று நினைச்சிட்டீங்க."
"சும்மா சொன்னேன். சும்மா கோபப்படாதீங்க. உங்களை கூப்பிட்டு பேசி நாளாச்சு. சும்மா, அப்படி இப்படினு பிஸியா நாள் எல்லாம் - சும்மா ஜெட் வேகத்துல பறக்குது."
"சும்மா. இதுக்கெல்லாம், சும்மா கோபம் வருமா?"
" நீங்க, சும்மா விளையாடுறீங்கனு தெரியும். "
"உங்க வீட்டுக்காரங்க ஆபீஸ் போயாச்சா?"
"அவருக்கு என்ன? சும்மா லீவ் போட்டு, நம்ம பக்கத்துல இருந்து, சும்மா கவனிக்க முடியுமா? வேலைக்கு போயாச்சு. ஆனால், ஒரு வாட்டியாவது, சும்மா ஒரு போன் பண்ணி, சும்மாவாச்சும் நான் எப்படி இருக்கேன் என்று சும்மா கேட்டு இருக்கலாம்."
"அவர் ஆபீஸ்ல் சும்மா இருந்தா, சும்மா கூப்பிடாம இருப்பாரா?"
"தெரியுது. ஆனாலும் அவரை சும்மா தேடுது. "
"ரொம்ப கஷ்டமா இருக்கா?"
"இல்ல. சும்மா வெறும் காய்ச்சல்தான். இப்போதான் ஊருக்கு போன் செய்து, என் அம்மாவிடம் சும்மா பேசினேன்."
"அம்மா, எப்படி இருக்காங்க?"
"சும்மா, அதை இதை நினைச்சு கவலைப் பட்டுக்கிட்டே இருக்காங்க."
"உங்க தாத்தா, எப்படி இருக்காங்க?"
"எப்போ பார்த்தாலும் சும்மா தலை வலிக்குது கால் வலிக்குது அப்படிங்கறார். டாக்டர், தாத்தாவுக்கு ஒண்ணும் இல்ல. வயசாச்சுல. சும்மா அப்படிதான் வலிக்கும்னுட்டார்."
"உங்க அப்பா, எப்படி இருக்காங்க?"
"retirement க்கு அப்புறம், சும்மா அங்கே இங்கே போய்ட்டு வந்து டைம் பாஸ் பண்றார்."
"உங்க தங்கை?"
"படிச்சு முடிச்சிட்டாள். சும்மாதான் இருக்கிறாள். சும்மா இருக்கிறதுக்கு, சும்மா ஒரு கம்ப்யூட்டர் course ஏதாவது படிக்கலாமேன்னு - சும்மா போய்க்கிட்டு இருக்கா."
"ஓ. "
"நீங்க அடுத்த மாதம், ஒரு weekend சும்மா இருந்தீங்கனா, சும்மா இந்த பக்கம் - எங்க வீட்டுக்கு, சும்மா வாங்களேன்."
"எதுவும் விசேஷமா?"
"இல்லை. சும்மாதான். சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சும்மா விசிட் பண்ணா நல்லா இருக்கும்."
"பார்க்கலாம்."
"சும்மா வாங்க. அப்புறம் சும்மாதான் சொன்னேன் என்று வராமா இருக்காதீங்க."
"அப்புறம் போன் பண்றேன்."
"கண்டிப்பா வரணும். வந்தா, சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்."
"சும்மா இருந்தா, சொல்றேன்."
"சும்மா சொல்லாதீங்க. வாங்க."
" ஹா,ஹா,ஹா,ஹா.... நான் இப்போ வெளியே போகணும். நான் போனை வைக்கிறேன். நீங்க சும்மாவே இருங்க."
"மனுஷிக்கு காய்ச்சல்னா, சும்மா சும்மா போன் பண்ணி, சும்மா பேசி, சும்மா தொந்தரவு படுத்திக்கிட்டு ....... கொஞ்சம் சும்மா இருக்க மாட்டாளா, என்று நினைச்சிட்டீங்களா?"
"இல்ல. நல்லா ரெஸ்ட் எடுங்க."
அப்புறம், சும்மா இருக்கும் போது, சும்மா யோசித்து பார்த்தேன். அப்பொழுதுதான் புரிந்தது - அவளது சும்மாவில் ஒளிந்து இருந்த அவளது அன்பும், ஏக்கங்களும், வேதனைகளும், ஆதங்கங்களும், கவலைகளும், ஆசைகளும்.
இது முதலிலேயே தெரியாம போச்சே...... தெரிந்து இருந்தால், சும்மா பேசிக்கிட்டு இருக்காமல், ஆதரவாக சும்மா கூட கொஞ்ச நேரம் பேசி இருந்திருப்பேனே........
சும்மா......... சும்மா ஒரு வார்த்தைதான் - ஒன்றும் இல்லாத வார்த்தை. ஆனாலும் - சும்மாவுக்கு, எத்தனை ஆழமான அர்த்தங்கள் - தமிழில். ............
பி.கு.:
சும்மா - ஒரு வார்த்தை - இங்கிலீஷ்ல எத்தனை வார்த்தைகளை, சும்மா கையாளுது தெரியுமா?
Idle
Just like that
for no reason
not doing much
not really
for free
not really meaning it
often
unintentional
untrue
goofy
(please, let me know, if there is more......) - சும்மாதான்......... பரிசு எல்லாம் இல்லை.
ஹிந்தி மொழியில்: சும்மா என்பதற்கு முத்தம் என்று பொருளாம். சர்தாங்க.
அப்புறம் சும்மா, இதை யூத்புல் விகடனுக்கு அனுப்ப தோணுச்சு. சும்மா அனுப்பினேன். செம பதில் வந்துச்சு:
அன்புடையீர்,
தங்கள் படைப்பு வெளியிடப்பட்டது. விகடன் முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.
நன்றி.
www.vikatan.com
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/chitrastory260410.asp
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/
- யூத்ஃபுல் விகடன்
எல்லா புகழும் இறைவனுக்கே!
115 comments:
ஆஹா சும்மா , சும்மா என்று சொல்லியே சும்மாவே ஒரு கலக்கல் பதிவு . நல்ல இருக்கிறது .
மிக்க நன்றி, ஷங்கர். சும்மா சொல்லலியே....
சும்மா சும்மா எழுதி அசத்திடீங்க.யூத் விகடன்ல உங்கள் படைப்பு வந்ததற்கு வாழ்த்துக்கள்
///அப்புறம் சும்மா, இதை யூத்புல் விகடனுக்கு அனுப்ப தோணுச்சு. சும்மா அனுப்பினேன். செம பதில் வந்துச்சு:
அன்புடையீர், தங்கள் படைப்பு வெளியிடப்பட்டது. விகடன் முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி. நன்றி. www.vikatan.com
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/chitrastory260410.asp - யூத்ஃபுல் விகடன்////////////
இன்னும் உங்களின் பல பதிவுகள் வெளிவர என் வாழ்த்துக்கள் !
சும்மா இருக்க மாட்டேங்களா
வாழ்த்துக்கள்
சும்மா இருக்கும் போதுதான், சும்மா இப்படி ஐடியாவெல்லாம் வருது.
//தங்கள் படைப்பு வெளியிடப்பட்டது. விகடன் முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.//
வாழ்த்துக்கள்!
சும்மா சொல்லவில்லை :)
சாகித்ய அகாதெமிக்கு வாழ்த்துகள் (சும்மா!)
:)
நீங்க சும்மா சொன்னாலும், பலிச்சுருச்சுனா? சும்மா தான் சொன்னேன்.
சும்மா கலக்கிட்டீங்க போங்க..
ஆனா நிறைய இடத்துல சும்மா சும்மா “சும்மா”ங்கிற வார்த்தைய வலுக்கட்டாயமா திணிச்ச மாதிரி இருந்தது. சும்மாவே நாம நிறைய எடத்துல யூஸ் பண்ணுவம். அப்பிடியே எழுதியிருக்கலாம்..
சும்மாதாங்க சொன்னேன். தப்பா எடுத்துக்காதிங்க.
சும்மா சொல்லக் கூடாது.
சும்மா பின்னீட்டிங்க.
சும்மா போக முடியுமா.
சும்மா பிடியுங்க வாழ்த்துக்களை:)!
பாராட்டுக்கள் சித்ரா!!
சும்மாயிருப்பதே சுகமுன்னு ஒரு சித்தர் சொல்லியிருக்காரு! சும்மா பதிவு சூப்பர்!
சும்மா அதிருதில்லே?
அது சரி தேனம்மைக்கு இதுல ஏதாவது பங்கு இருக்கா?
சும்மா.. நல்லாருக்கு
கேபிள் சங்கர்
ஹலோ சும்மா வெக்கப்படாதீங்க மேடம்.. சும்மா கைய கொடுங்க.. வாழ்த்துக்கள்!! ஹிஹி...
நானும் சும்மா இருக்கும்போது ஒரு நாள் உங்களுக்கு ஃபோன் அடிக்கிறேன்
Super topic. Honestly, how many times do we use this word...Next is the word Aparam. I think in a conversation these 2 are the mostly used. But chitra next time I talk to you...I will be extra cautious !
After reading could not stop singing the - Chuma Chuma song by Prabhudeva !!
Do you remember the song??.
நீங்க சும்மா இருக்கும் போதே இத்தன சும்மாவா...
சும்மா தூள் பண்ணிட்டீங்க போங்க..
சும்மா தாங்க இந்த பக்கம் வந்தேன்..
வந்ததுக்கு சும்மா ஒரு கமெண்ட் போட்டேங்க..
அப்புறம் சும்மா, சும்மா ஊர் சுத்தாம..
ஒரு இடத்துல சும்மா இருங்க.. :D
சும்மா இருக்கும் போது இதை யோசனை பண்ணி எளுதுநீன்களா
இல்ல சும்மா எழுதுவோம் என்று எளுதுநீன்களா
சும்மா தான் கேட்டேன் அக்கா!
யூத் விகடன்ல உங்கள் படைப்பு வந்ததற்கு வாழ்த்துக்கள்
சும்மா தான் சொன்னேன் என்று நினைகாதிங்க!
Very happy about Youth vikatan publishing.. Congrats..
All the very best to you.. :)
சும்மா கலக்கல் பதிவு :)
நானும் சும்மா இருக்கிறப்ப படிச்சிட்டேன்..
சும்மா சொல்லக் கூடாதுங்க.. சும்மா சும்மா நீங்க பதிவுபோட்டாலும்...சும்மா சூப்பரா இருக்குங்க! அட சத்தியமா நான் சும்மா சொல்லலீங்க.... நிஜம்தாங்க....! வாழ்த்துக்கள் தோழி!
சித்ரா யுத் ஃபுல் விகடனில் இந்த பதிவு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
சும்மா சும்மா சும்மா5 மணிக்கு சும்மா சும்மா நீயும் நானும் சும்மா சும்மா இந்த பாடல் தான் ஞாபகம் வருது,
சும்மா சும்மா சும்மா கலக்கலான சும்மா பதிவு
எனக்கும் சும்மா படிச்சிட்டு சும்மா போக முடியல , அதான் சும்மா ஒரு பாட்டு..
சும்மா ஒரு பதிவை போட்டு சும்மா கலைக்கிட்டீங்க போங்க.. சும்மா ஒரு வாழ்த்து சொல்லலானு சும்மா வந்தேன். சும்மா பதிவு சும்மா அருமை...வாழ்க சும்மா வளமுடன்,சும்மா வேலன்v
வாழ்த்துக்கள்!!! இத சும்மா சொல்லல,
உண்மையாத்தான் சொல்றேன்.
யூத்ஃபுல் விகடனில் உங்கள் படைப்பு வந்த்தற்கு வாழ்த்துக்கள்........
இத கூட "சும்மா"தாங்க சொன்னேன்...நம்பக்கூடாது ஆமா...
congrats :)
சும்மா கலக்கலா இருக்குங்க.
யூத் விகடன்ல உங்கள் படைப்பு வந்ததற்கு வாழ்த்துக்கள்
இந்த் பதிவுல "சும்மா"ங்கிற வார்த்தை எத்தனை தடவை வந்திருக்குனு சும்மா சொன்னா நால்லா இருக்கும். சும்மா தான் கேட்டேன். முடிஞ்சா சும்மா டிரை பண்ணி பாருங்க... இப்ப சும்மா தானே இருக்கீங்க... சும்மாதான் கேட்டேன்.. வாழ்த்துக்கள்!!!!!!!!!
ஆஹா யூத் விகடனில் வந்திருக்கா!!கலக்குங்க !! (எப்புடி அந்த வார்த்தை இல்லாம எழுதினேன் பாத்தீங்களா??)
சும்மா எண்ணிப்பார்தேன் எத்தனை சும்மா சும்மா எழுதியிருக்கீங்கன்னு. மொத்தம் எழுவது தடவை சும்மா எழுதி இருக்கீங்க. சும்மா சொல்ல்க்கூடாது. எப்படி சும்மா இருக்கும்போது இப்படி சும்மா யோசிப்பீங்களா ?சும்மாவே இப்பிடின்னா அப்புறம் வேலையில சும்மா தூள் கிளப்பிட மாட்டீங்க. கோவிச்சிகாதிங்க சும்மா சொன்னேன்.
ஹிந்தியில் ச்சும்மான்னா முத்தம் சும்மா இல்லை. சும்மா இருந்த ஆளை சும்மா சொல்லி நினைவு காட்டீடீங்க
---ஜெய்லானி டிவி
சும்மாவ சும்மா எழுதி ஜமாச்சிடீங்க.யூத் விகடன்ல உங்கள் படைப்பு வந்ததற்கு வாழ்த்துக்கள்
//ஹிந்தி மொழியில்: சும்மா என்பதற்கு முத்தம் என்று பொருளாம். சர்தாங்க//
சும்மாச்சொல்லலையே!
நானும் சும்மாத்தான் சொன்னேன்..
சும்மான்னா சும்மாவா.
யூத்விகடனில் வருதுன்னா சும்மாவா..
.வாழ்த்துக்கள்
சும்மா சொல்லக்கூடாது! கலக்கி எடுத்து இருக்கீங்க. யூத்ஃபுல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள் சித்ரா! Congrats!
சும்மா சூப்பர் சித்ரா!! சும்மா சொல்லல உண்மையிலேயே சொல்றேன். வாழ்த்துக்கள்!
சும்மா சொல்லலை..சும்மனாங்காட்டியும் சொல்லை. சும்மனாச்சுக்கும் சொல்லலை..சும்மா, சும்மா சுமார்
இல்லைசூப்பர்
congratts akka! namba nellaiyooda pugal ungalala paravuthu!!!...:)
உண்மைதான். சும்மாங்கிற வார்த்தைக்கு தான் எத்தனை அர்த்தம் இருக்கு.
சும்மா இருந்தேனா சும்மா சித்ராவைப்பார்க்கலாம்னு சும்மா வந்தா இங்க எல்லாரும் சும்மா வந்திருந்தாங்க,நானும் சும்மா இல்லை நிஜமா வாழ்த்து தெரிவிச்சுக்கறேன்.அட அடா சும்மா கலக்கீட்டீங்க.நான் எப்பவும் சும்மா தான் இருப்பேன்,நீங்க சும்மா இருந்தால் வாங்க.
அது என்னா, இப்போல்லாம், கடைசியா ஒரு பன்ச்!
இதுல மொழிகளுக்கிடையேயான ஆராய்ச்சி வேற! எங்கேயே போய்ட்டீங்க!
யூத்தா இருக்கிறவங்கல்லாம் இந்த வார்த்தையை அவ்வளவா யூஸ் பண்ணமாட்டோம்! இதெல்லாம் வேலையில்லைம வெட்டியா (உங்க தலைப்புக்கும் இதற்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை) இருக்கிறவங்க சொல்றது!
நீங்களும் பெரிய எழுத்தாளராகிட்டீங்க! வாழ்த்துக்கள்
கொஞ்சம் வெட்டி பேச்சு அல்ல, சும்மா வெட்டி பேச்சு. அங்கீகாரத்திற்கு வாழ்த்துகள். சும்மா இருப்பதே சுகம்னு இருக்காம அருமையா சும்மா பத்தி எழுதிட்டீங்க. சும்மா ஏதாவது செஞ்சிட்டு இருந்தாத்தான் சுகம்னு காட்டிய அழகிய பதிவு.
"சும்மா" வ எண்ணி களைச்சிட்டன்
சித்ரா...சும்மா சும்மான்னு
சும்மா ஒரு பதிவு.
சும்மா சொல்லக்கூடாது.
சூப்பர் சித்ரா.
அவளது சும்மாவில் ஒளிந்து இருந்த அவளது அன்பும், ஏக்கங்களும், வேதனைகளும், ஆதங்கங்களும், கவலைகளும், ஆசைகளும்.//
அடகண்டு பிடிச்சிட்டியா சித்து என்னோட சும்மாவிலும் இவ்வளவு அர்த்தம் இருக்குன்னு ..நன்றீடா..வாழ்த்துக்கள் கூட யூத்ஃபுல்ல வந்ததுக்கு
சும்மா இருந்தீங்கனா, சும்மா மேலும் இதுபோல பல பதிவுகளை எழுதுங்கள். விகடனில் இடம்பெற்றது வாழ்த்துக்கள்.
சும்மா சும்மா எழுதி அசத்திடீங்க
இது நான் அன்னிக்கே விகடன்ல படிச்சிட்டேனே!! நல்லாருக்கு சித்ரா!!
சும்மா சும்மா இப்படியே பேசிகிட்டு இருந்தீங்க சும்மா நான் அழுதிடுவேன் சும்மா சொல்லிபுட்டேன்
இந்த பக்கத்தில், இதுவரை சும்மா என்கிற வார்த்தை 186 தடவை வருகிறது.. :) (இதில் இருக்கும் சும்மாவையும் சேர்த்து)
சும்மா வந்தேன்.
சும்மா கலக்குறீங்க!
சும்மா சொல்லல...
நல்லாயிருக்குங்க
சும்மா கலக்கறீங்க.
வாழ்த்துக்கள் சித்ரா
சும்மா .....சும்மா ....சூப்பர் பதிவு...
சும்மா சும்மா இதேதான் ச்ஹொலுரேனோ?
போன் எடுத்ததும் இதே (சும்மா ) இங்கேயும் எல்லோரும் சொல்றாங்க....
வாழ்த்துக்கள்.......
தூள் கிளப்பீட்டீங்க ..
விகடன் வந்தமைக்கு வாழ்த்துக்கள் - உங்களுக்கு இல்ல , விகடனுக்கு !
சும்மா சொல்லக்கூடாது!! நீங்கல்லாம் தமிழ் சினிமா ல இருக்க வேண்டிய ஆளு !!
- மச்சான்ஸ் !!
கலக்கல்.யூத்புல் விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.
விகடனும் சும்மா இல்லீங்க
வாழ்த்துகள் ...
சும்மா...சும்மா...பின்னிட்டீங்க...
ம்ம்ம்ம்ம்! நாங்கெல்லாம் சும்மா இருக்கோங்கிறத கண்டு பிடிச்சிட்டீங்க போல...! பதிவு ‘சும்மா’ ஜெட் வேகத்துல இல்ல போவுது..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸொய்ய்ய்ய்ங்ங்..
//இப்போதான் எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து//
இது சும்மாதான சொல்றீங்க...
சும்மா..சும்மா..சும்மா...சும்மா....சும்மா.....சும்மா...... எம்மா.... ஆளவிடுங்க.........
அருமையான இடுகை...ரசித்துப்படித்தேன்...
வாழ்த்துக்கள் (இளமை விகடன்...)
சும்மாவே எழதி சும்மாவே பின்னிட்டீங்க சித்ரா...எத்தனை சும்மான்னு எண்ணி முடிப்பதற்குள் மயக்கம் வந்துடுச்சு....விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துக்கள்!!
சும்மா நல்லாயிருக்கு சித்ரா டீச்சர். யூத்புல் விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சித்ரா சும்மா தான் உங்கள் பதிவு யூத் விகடன்ல வந்து இருக்கு இல்ல .. சும்மால இவ்வளவு விசயம் இருக்கா , சும்மா கலக்கலா இருந்துச்சு....
அம்மா... இவ்வளவு சும்மாவா?...
என்ன கொலவெறி...???
இப்படி சும்மா சும்மா எல்லாமா பதிவு போடுவாங்க...
அட, இதப்பார்ரா விகடன்லயுமா..???
சும்மா எழுதுனதுக்கே இப்படியா ???
கலக்குங்க சித்ரா மேடம்...!!!
சும்மா பின்னிட்டீங்க போங்க...
யூத்புஃல் விகடனுக்கு வாழ்த்துகள்:)
கலக்கிட்டிங்க போங்க.
யூத் ஃபுல் விகடனில் வெளியானதுக்கு வாழ்த்துகள்.
(தேவையான இடத்தில் சும்மா சேர்த்துக்கொள்ளவும் )
வெற்றி தொடர்க
சும்மா தான் வந்தேன்.. சும்மா நான் தான் சொன்னேன்னு யூத் விகடனுக்கு அனுப்பியதாலே, சும்மா வார காசிலே, சும்மா எனக்கு ஒரு கட்டிங் வேணும்.
சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அந்த வார்த்தையை சும்மா சும்மா ஓரண்டை இழுத்து பதிவு எழுதியிருக்கீங்க?
சும்மாதான் இப்படி கேட்டேன். இந்த கேள்வியை சும்மா விட்டுடுங்க.
இந்த பதிவு விகடன்ல முகப்பு பக்கத்துல வந்ததுக்கு வாழ்த்துக்கள்.
அமர்க்களம்.
எங்கள் ப்ளாக்கிலும் சில நாட்கள் முன்பு இந்த மாதிரி ஒரு முயற்சி செய்திருந்தோம்...
அதை இங்கே பார்க்கலாம்
http://engalblog.blogspot.com/2009/09/blog-post_14.html
அட.. சும்மா கலக்கிட்டிங்க சித்ரா..
வாழ்த்துக்கள்.
சும்மா இப்படியா மொக்கை போடறது....
சும்மாதான் சொன்னேன்னு சும்மா நினைக்காதிங்க....
:))
"சும்மா"வின் பெருமையை எடுத்துக்காட்டியதற்கு "அது" உங்களுக்கு நன்றி சொன்னது கேட்டதா?
எனக்குக் கேட்டது! :)))
//
//
சும்மா கொஞ்சம் இடம், இருக்கட்டுமேன்னுதான்...
சும்மா கலக்கிட்டீங்க
யூத்ஃபுல் விகடன் முகப்புலே சும்மா..சும்மா..க்கு மேல யார் கதை வந்திருக்கு பாருங்க
சும்மாவே சூப்பரா எழுதற நீங்க (முறைக்காதீங்க ப்ளீஸ்..) சும்மா இங்கே பின்னி எடுத்திருக்கிறீர்கள்... சும்மாவா, ஆங்கில வார்த்தைகளுடன் விளக்கம். சும்மா சொல்லக்கூடாது! ரொம்ப அருமை... நெஜமா சும்மா சொல்லலைங்க!....
பிரபாகர்...
சும்மா,கும்மீட்டீங்க மாம்சு. :-)
சும்மா நீங்க எழுதியிருக்க கதையை ... சும்மா தான் படிச்சேன்... சும்மா சொல்லக்கூடாது ரொம்ப நல்லா இருக்கு..... சும்மா பேச்சுக்கு சொல்லறேன்னு நினைச்சுகாதீங்க.. ஐயோ !!! சும்மாவே தாங்க முடியலைப்பா .
அட போங்க சித்ரா... ஹைதராபாத்துல இருக்கும்போது, சும்மா சும்மா இந்த சும்மாங்கிற வார்த்தை பயன்படுத்தியதால் ரெண்டு பொண்ணுங்க கலவரமாகி என்னைய தனியா கூட்டிகிட்டு போயி... அப்புறமா அர்த்தத்தை சொன்னாங்க...
அதுக்கப்புறம் என்னமோ தெரியல... அடிக்கடி சும்மா சும்மா... பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா-னு பாட்டு வாயில வந்துகிட்டே இருந்தது... ;-)
@Chitra...when people feel lonely..or they have time to kill....they simply (chumma) call someone known or a dear friend..just to enjoy their company...to exchange news..and to keep in touch....But this seems to be an overdose of "chumma"..And I believe that one does not seek a particular time or reason to call a friend..GH
Akooow..... innaa en comments ku badhil sollamaattiyaa..?
:-(:-(:-(
akkaa..... Chummaa nacchinu, Chummaa kalakkaalaa, Chummaa seenaa irukku....
சும்மா படைப்பீர்கள் என்று வாழ்தியது உண்மையாகிவிடும் போல உள்ளது.
அட சும்மா ஒரு வாழ்த்து
சொல்லலாம்னு வந்தா..
இங்கே இத்தனை சும்மாவா..?
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
எங்கிட்டு போறதுனாலும்
சீக்கிரமா போகணும்னு..!!
சித்ரா, சும்மா என்பது பூஜ்யம் மாதிரி. தனியா இருந்தா மதிப்பில்லை. எதனோடாவது சேர்ந்தாச்சுன்னா செம மதிப்பு.
சும்மா கமெண்ட போடலாம்னு வந்தேன்.. ஆனா எதுவுமே போடாம சும்மாவே போறேன்.
அப்புறம் சும்மா, இதை யூத்புல் விகடனுக்கு அனுப்ப தோணுச்சு. சும்மா அனுப்பினேன். செம பதில் வந்துச்சு:
அன்புடையீர்,
தங்கள் படைப்பு வெளியிடப்பட்டது. விகடன் முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.///
சும்மா கெளப்பீட்டீங்க சித்ரா!!
தேனக்கா சும்மான்னு கலக்கலா ஒரு வலைப்பூவை வைத்து அருமையா கலக்குறாங்க. நீங்க சும்மா சும்மான்னு கலக்கலா ஒரு பதிவு எழுதியிருக்கீங்க. நல்லா இருந்தது பதிவு.
ஆனந்த விகடன்ல வெளியானதுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.
ச்சும்மா ஒன்னை வச்சுக்கோங்க. :))
சும்மா இந்தப்பக்கம் வந்தேன்....
சும்மா இருக்கறீங்களான்னு பார்க்கலாம்னு....
பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html
சும்மா சொல்ல கூடாது.. சித்ரான்னா சும்மாவா?!!!!
சும்மா கலக்கிட்டீங்க!
ஆனா பதிவு சும்மா இல்லை, கலக்கல்.
லீவு விட்டாச்சுல ...இனி நாங்களும் சும்மா புகுந்து வெள்ளாடுவோம்ல.
சும்மா , சும்மா என்று அசத்தல் சித்ரா.
அனைவருக்கும் நன்றி. சும்மா சொல்லவில்லை. உண்மையில், அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
சும்மா இருந்தபோது சும்மா எழுதியது.
http://anjjamvakuppu.blogspot.com/2006/11/blog-post_18.html
சும்மா ககக்குறிங்க..... உங்களுக்கு மே தின வாழ்த்துக்கள்.(இது சும்மா இல்ல)
unkalaip patri:
http://sirippupolice.blogspot.com/2010/04/3.html
வாழ்த்துக்கள் மேடம்
happy may 1st
யூத் விகடனில் உங்கள் படைப்பு வந்ததற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!
சும்மா இருப்பதே சுகம் என்பார்கள். நீங்கள் பல ‘சும்மா’க்களை வலைப்பின்னலிட்டு சுகமான பதிவாக்கி விட்டீர்கள்!
First of all Congrats for getting this published in vikatan.... apram... ellarukum indha summafobiava ottivitteenga pola..... adhillaadha commente illengra alawuku.... ;-)
Summava veche summa chaadhichuputeenga ponga.... eppudi ippudilaam..... neenga engayoooooooooopoiteenga....... ;-)
hee...he! romba unmai! ippadippatta "summa" anubhavangal enakkum nigazhnthullathu! :) very interesting read! :D
சும்மா கலக்கிட்டீங்க போங்க
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்
காலைலே இருந்து சும்மாதான் இருந்தேன்
ஒருதடவைதான் சொல்வேன்
சும்மா சும்மா சொல்ல முடியாது . . . . அடிக்கடி
இந்த பக்கம் வந்தேன் .அப்படியே உங்களை சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன்
சும்மா கொஞ்சமா குடுங்க போதும்
சும்மா இருக்கும் போது எங்க வீட்டுக்கு வாங்களேன்
சும்மா சொல்லக்கூடாது அன்னிக்கு நீங்க போட்ட டீ சூப்பர்
இது மாதிரி கிட்டதட்ட 16 வகை இருக்குறதா படிச்சிருக்கேன். மறந்து போச்சு
ஞாபகம் வந்தா சொல்றேன். சும்மா இல்லை நெசமாத்தான்
இனியன் பாலாஜி
இத்தனை சும்மா-வா!
தாங்க முடியலையே
சும்மா
1.
நோக்கம் பிரதிபலன் இல்லாமல்
சும்மா வந்தேன்./தாத்தா சும்மா
கதை சொல்ல மாட்டார். காலை பிடித்து விட வேண்டும்.
2.
செய்வதற்கு எதுவும் இல்லாமல்
இரண்டுட் வருஷமாக வீட்டில் சும்மாதான்
இருக்கிறேன்
3.
பயனில்லாமல்
தண்ணீர் சும்மா போய்க் கொண்டிருக்கிறது.
4.
தயக்கம் இல்லாமல்
எனக்கு வந்த கடிதம் தான் சும்மா படித்துப் பார்
5.
அதிகம் கவனம் இல்லாமல்
பாடங்களை சும்மா ஒரு முறை படித்தால் போதும்.
பரீட்சை எழுதி விடுவேன்.
6.
எதிர்பார்ப்பது இல்லாமல்
குழந்தை இருக்கிற வீட்டுக்கு சும்மா போகமுடியுமா?
7.
அடிக்கடி
தேவை இல்லாமல்
சும்மா பணம் கேட்டு தொந்தரவு செய்யாதே
அவர் வீட்டுக்கு ஏன் சும்மா போகிறாய்
8
எளிது
கதை எழுதுவது என்றால் சும்மாவா
சும்மா சொல்லவில்லை
நான் சொல்லியபடியே அகராதி எடுத்து தேடி மொத்தம் எத்தனை சும்மா இருக்கிறதோ
அத்தனையும் தந்து விட்டேன்
இனியன் பாலாஜி
சும்மா அப்படியே உங்க பதிவ பாக்கலாம்னு வந்தேன்.
சும்மா சொல்ல கூடாது..
நல்லாவே இருக்கு..
சும்மா இருந்தாலும் இப்படி எல்லாம் யோசிக்கிறிங்கள???
வாழ்த்துக்கள்..
சும்மாங்க ஒரு வார்த்தையை வச்சே இவளவு பேசலாமா...நல்லா ரசிக்கும் படி இருக்குங்க...
சும்மா தூள் கிளப்பிட்டீங்க, போலிருக்கு......சும்மா சொல்லக் கூடாது, கலக்கிட்டீங்க.
சும்மா எனது பின்னோட்டத்தை நீக்கிவிட்டால் சும்மா இருப்பேனா?
Post a Comment