கடந்த ஒரு வருடத்தில், எனக்கென்று வாங்கி கொடுக்கப்பட்ட நான்காவது செல் போன் மீண்டும் பணால்........ யாராவது திருடி இருந்தால், சப்பை மேட்டர் என்று தள்ளி இருக்கலாம். ஆனால்...... வீட்டுக்குள்ளேயே....... என்ன ஆச்சு? எங்கே போச்சு? யாம் அறியோம் பராபரமே! தொலைந்து போய் விட்டது. சரி, சரி...... "கொசு வலை" தத்துவம் நினைவு படுத்தி விட்டீர்கள். நான் தொலைத்து விட்டேன்.
இரண்டு வாரங்களாக வீட்டில் தேடி பார்க்கிறேன். இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. அடிக்கடி, காணாமல் போகும் ஒற்றை sock(s), பேனா, பென்சில், ஷாப்பிங் லிஸ்ட், சாவி கொத்து, நண்பர்களின் முகவரிகள் அடங்கிய டைரி , இன்னும் பிற ஐட்டம்ஸ் கூட்டத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று சென்று விட்டதோ என்னவோ?
என் முந்தைய செல் போன் என்ன ஆச்சு என்று ஆர்வம் தாங்கமால் கேட்கும் அன்பர்களுக்கு:
மாவு கிரைண்டர் சுத்துது: (வெட்டி பேச்சில், வழக்கமாக வரும் flashback தான். வேற என்ன?)
ஒரு நாள் குளிருக்கு இதமாக, சூடாக மசாலா டீ குடித்து கொண்டே, என் தோழர் பூபாவிடம் செல்லில் பேசிக்கொண்டு இருந்தேன். பூபா என் மொக்கை கடியை, நண்பர் என்ற முறையில் பொறுத்து கொண்டாலும், அந்த sleek ஆன செல் போன் தாங்க முடியாது, என் கையில் இருந்து வழுக்கி , அடுத்த கையில் பிடித்து கொண்டிருந்த டீ கப்புக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது. அருமை நண்பரிடம் விஷயத்தை சொல்ல, land line போன் எடுத்து கூப்பிட்டேன்.
நான் பதட்டத்துடன் சொல்லியதை பொறுமையுடன் கேட்ட நண்பர்:
"சித்ரா, cell battery யை கழற்றி உடனே dry பண்ணுங்க."
நான் துடுக்காக பேசுவதாக நினைத்து கொண்டு:
நான் துடுக்காக பேசுவதாக நினைத்து கொண்டு:
"உடனேனா, எப்படி? microwave oven க்குள் தான் வைக்கணும்."
பூபா சளைக்காமல்: "வைங்க. ஆனால், சரியாக ஏழாவது நொடியில் வெளியே எடுத்துடுங்க."
நான்: "அது என்ன ஏழு வினாடிகள் கணக்கு?"
பூபா: "எனக்கும் ஒரு வாட்டி, செல் போன்ல தண்ணி பட்டுருச்சு. microwave oven க்குள் பத்து வினாடிகள் வைத்து on பண்ணி விட்டேன். சரியாக எட்டாவது நொடியில் டப்புன்னு ஒரு சத்தத்தோட செல் போன் வெடிச்சு தீ பொறிவந்து விட்டது. அவ்வளவுதான். என் செல் போன் கதை முடிஞ்சது."
பூபா சளைக்காமல்: "வைங்க. ஆனால், சரியாக ஏழாவது நொடியில் வெளியே எடுத்துடுங்க."
நான்: "அது என்ன ஏழு வினாடிகள் கணக்கு?"
பூபா: "எனக்கும் ஒரு வாட்டி, செல் போன்ல தண்ணி பட்டுருச்சு. microwave oven க்குள் பத்து வினாடிகள் வைத்து on பண்ணி விட்டேன். சரியாக எட்டாவது நொடியில் டப்புன்னு ஒரு சத்தத்தோட செல் போன் வெடிச்சு தீ பொறிவந்து விட்டது. அவ்வளவுதான். என் செல் போன் கதை முடிஞ்சது."
இந்த அனுபவத்தை கேட்டதும், மைக்ரோவேவ் பக்கம் திரும்பாமல், என் பார்வை துணி காய வைக்கும் டிரையர் பக்கம் ஒரு நொடி போகாமல் இல்லை. செல் போன் எடுத்து ஒரு முறை பார்த்தேன். எந்த emergency care செய்தும் காப்பாற்ற முடியாதபடி, கதை முடிந்து இருந்தது.
"ஆமாம், இப்பொழுது மறுபடியும் புது போன் தொலைச்சிட்டியே. வீட்டுக்காரர் என்ன சொன்னார்," என்று ஆர்வத்துடன் நீங்கள் கேட்டீர்கள் என்றால் - கேட்கணும் - கேட்பீங்க........
இரண்டு நாட்களாக வீடு பூரா இண்டு இடுக்கு விடாமால் தேடிய போது, கிடைத்தது என் செல் போன் அல்ல. என் கணவர், ஒன்றரை வருடங்களுக்கு முன் தொலைத்த ipod. ipod தொலைத்த விஷயத்தை, அது வரை என்கிட்டே மனுஷன் சொல்லவே இல்லை. ஆக, அவர் கப்சிப். என்ன பொருத்தம்? ஜாடி கேத்த மூடி நாங்கள் தான்.
கிடைக்கும் - அடுத்து வேற எதையாவது தொலைத்து விட்டு தேடும் போது, நிச்சயம் இந்த செல் போன் கிடைக்கும். ஆனால், அப்பொழுது தேடப்படும் அந்த பொருள் கிடைக்காது. அதற்கு, நான் வேற எதையாவது தொலைக்க வேண்டும்.
வாழ்க்கை தத்துவம் # 9,327. இதற்கு பின்னாலும் ஏதாவது கர்மம் இருக்குமோ?
152 comments:
//இதற்கு பின்னாலும் ஏதாவது கர்மம் இருக்குமோ? ///
எதுக்கும் ஒரு நல்ல மந்திரவாதியை பார்த்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.. நம்ம கிட்ட கைவசம் ஆள் இருக்கு.. ஆனால் நீங்க தொலைச்ச பொருளை விடா ஜாஸ்தியா செலவு ஆகும்.. பரவாயில்லையா?
செல் போன் - செல் பேய் அல்ல. உங்கள் "உதவிக்கு" நன்றி. ஹா,ஹா,ஹா,.....
ஒரு கருத்து சொல்லலாம்னு தோணுது. ஆனா நல்லா இருக்காது. வேண்டாம். :-)
அம்மணி அந்த செல் போன்க்கு ஒரு கால் பண்ணி பாருங்க . ரிங் கேக்கும்ல .. பாவம் ரங்க்ஸ்
Dr., நன்றி சொல்லணும் என்று தோன்றுது. அது நீங்கள் கருத்தை சொல்வதற்கா சொல்லமால் இருப்பதற்காகவா என்று தெரியவில்லையே...... :-)
அது தொலைந்து போய் இருக்கு என்பதே எனக்கு மறு நாள் தான் தெரியும். அதற்குள், battery charge தீர்ந்து போய் விட்டது. so, அந்த பிளான் வொர்க் ஆகவில்லை, LK.
நீங்க ரெம்ப நல்லவங்க.
எங்க வீட்டுக்கு வந்து ரெண்டு செல்போனை தொலைச்சிட்டு போங்க.
இதை படிக்கும்போது ஏகப்பட்ட
தடவ, என்னோட சைக்கிள் வீல் பின்னால் சுத்துது,
அதனால நான் "cell"லுகிறேன் :))
தமிழ்: செய்தாலும் செய்து விடுவேன்......... :-(
வாளு போயி கத்தி வந்த மாதிரி செல்லு போய் ஐபாட் கிடைச்சுதா.....
தேடல்ல இது எந்த வகை.....?
அஹமத், இது எந்த வகை தேடல் என்று தான் அர்த்தம் தேடி கிட்டு இருக்கேன். ha,ha,ha,ha....
எப்படியோ மைக்ரோவ் ஓவனும், லேண்ட்போனுமாவது கிடைச்சிதே..!
:)
Actually, microwave oven and land-line phone என் கிட்ட இருந்தும் "தப்பிச்சு" இன்னும் இருக்கே......!
செல்போன் தொலைஞ்சது சொல்றதுலேயும் நல்ல காமெடி.ஆனாலும் பாவம்ங்க ரங்ஸ். திட்டவும் முடியாமா மாட்டிக்கினு?
//இதற்கு பின்னாலும் ஏதாவது கர்மம் இருக்குமோ?//
இருக்கும் இருக்கும். அங்க ஏதாவது நல்ல சாமியார் கெடைச்சா குறி கேளுங்களேன்.
:)
’செல்’ லவா..மறந்த கதை சொல்லவா:))) இந்த பாட்டில்ல கவனம் வந்திருக்கணும்?
////அங்க ஏதாவது நல்ல சாமியார் கெடைச்சா குறி கேளுங்களேன்.///
நீங்க வேற....... நானே இப்படி பத்து வாழ்க்கை தத்துவத்தை வைத்து தியான மண்டபம் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா...
நான் "செல்"ல மறந்த தலைப்பை நீங்க சரியா "செல்"லிட்டீங்க.
/நீங்க வேற....... நானே இப்படி பத்து வாழ்க்கை தத்துவத்தை வைத்து தியான மண்டபம் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா./
பேஷா ஆரம்பிங்கோ. இங்க பாண்டிச்சேரி பிராஞ்சுக்கு என்னை இன்சார்ஜா போட்டுருங்கோ.
டீலா நோ டீலா? ஒரே வார்தை ஓஹோன்னு வாழ்க்கை. ஓகே
:)
ஓஹோ டீல், இது. ஓகே.
செல் போன் தேடும் போது ஐ-போடு கிடைச்சது மாதிரி, இன்னைக்கி வேற எதையாச்சும் தொலைச்சுட்டு, அதை தேடுங்க செல் போன் கிடைக்க வாய்ப்பு இருக்கு, என்னப்பா இது சில பேர் பின்னூட்டங்களை காணவில்லைன்னு அங்கே தேடிட்டு இருக்காங்க, இது என்ன ஸ்பெஷல் ‘காணாப்போகும்’ வாரமோ?
SUFFIX, யாருடைய பின்னூட்டங்கள்? அதையும் என் வீட்டில் தொலைச்சிருந்தா, கிடைக்க ஒன்றை வருடங்கள் ஆகும். சொல்லி புட்டேன்.
\\ தமிழ் உதயம் said...
நீங்க ரெம்ப நல்லவங்க.
எங்க வீட்டுக்கு வந்து ரெண்டு செல்போனை தொலைச்சிட்டு போஙக//
ரிப்பீட்டு..:)
முத்துலெட்சுமி மேடம், உங்கள் வீட்டில் வந்து தொலைக்கவாவது என் செல் போன் சீக்கிரம் கிடைக்கட்டும். :-)
\\யாம் அறியேன் பராபரமே!\\
இடிக்குதே!! ”யாம்”ன்னா அறியோம்ன்னு வரணும். ”யான்”னா அறியேன்னு வரணும்.
இதுதான் தமிழ் சிங்குளர் புளூரல் மேட்டர்.
நீங்க ”ஒற்றை sock(s)” என குறிப்பிட்டதால் சொல்ல நேர்ந்தது.
:-)
பேசாம பொது இடத்தில் டம்ளருக்கு சங்கிலி போட்டு கட்டியிருப்பது போல, நாய் சங்லிலியை மாட்டி, ஜன்னலில் கட்டிவிட்டால் எப்படி தொலைந்து போகும்? செய்து பார்க்கலாமே!
இதோ திருத்தி கொள்கிறேன். சே, இதான் படிக்கும் போது, தமிழ் டீச்சர் பிடிக்கலை என்றாலும் கட் அடிக்காமல், கிளாஸ் அட்டென்ட் பண்ணி இருந்திருக்கணும். :-)
அட, அட, அட......! கொஞ்சம் அந்த சட்டத்தை கீழே வைத்து விட்டு , உங்கள் கையை கொடுங்க. கை குலுக்கி பாராட்டணும். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.....!
இந்த பிரச்சினைக்காகத்தான் நான் பிரெண்ட்ஸ்ங்க மொபைலை தொலைக்கிறது..
அவங்களும் சேர்ந்து தேடுவாங்க....
:))
அப்படி செய்யலாம் தான், கண்ணா. அப்புறம் தோழர்கள் தொலைந்து போய் விடுவார்களே - இவள் சங்கார்த்தமே வேண்டாம் என்று. ஹி,ஹி,ஹி,ஹி....
//டந்த ஒரு வருடத்தில், எனக்கென்று வாங்கி கொடுக்கப்பட்ட நான்காவது செல் போன் மீண்டும் பணால்...//
என்னாது.......நாலாவது போனாஆஆ.....
பாவம் சாலமன் அண்ணன்.
ஹலோ கண்ணா, அவரே சும்மா இருக்கார். நீங்களே சொல்லி கொடுப்பீங்க போல......
அக்கா ஊருக்கு வரும் போது சொல்லுங்க,அப்படியே எங்க வீட்டுக்கு
வந்திட்டு போங்க வரும் போது புது செல்போன் வாங்கிட்டு வாங்க,நானும் செல்போன் மாத்தனும் ட்ரை பண்ணுகிறேன் முடியல,உங்க புண்ணியத்துல எனக்கு கிடைக்கும்
வரும் போது, காருக்கு spare tire மாதிரி, spare செல் போன் கொண்டு வரணும் போல. :-)
நல்ல வேளை உங்கள தாக்காம அது தற்கொலை பண்ணிகிச்சே. அதுவரைக்கும் சந்தோஷம்:)
ஹா,ஹா,ஹா,ஹா,.... Vidhya, தாக்கி இருந்தா, நானே டீ கப்புக்குள்ள தள்ளி இருப்பேனோ என்னவோ? ஹா,ஹா,ஹா,ஹா....
சாவிக் கொத்தை நான் தொலைப்பதும் ஆளைக் கூப்பிட்டு உடைப்பதும் இன்று வரை தொடர்கிறது:(! உங்க கட்சியில சேர்த்துக்குங்க:)!
ஹையா, நம்ம கட்சிக்கு ஆள் கிடைத்து விட்டது.
நல்ல வேளை நீங்க தப்பிச்சீங்க , இல்லைன்னா போன் கூடவே நீங்களும் இல்ல கானாம போய் இருப்பீங்க!!
Jailani, அந்த "சந்தோஷத்தை" யாருக்கும் கொடுக்க மாட்டேன். :-)
பரவாயில்லையே நான் மட்டும்தான் அப்படி இருக்கிறேன் என்று நெனச்சா நம்ம நண்பர்களும் அப்படிதானா. பேஸ் பேஸ் பிரமாதம்
செல் பேசி நீரில் அல்லது தேனீர் போன்றவற்றில் விழுந்தால் அதை எடுத்து செல்லை அகற்றி பின் இரண்டையும் நெல் உமிக்குள் வைத்தால் இரண்டு நாட்களில் ஈரம் அனைத்தும் உறிஞ்சப்பட்டு விடும் என்றும் ஃபோன் பழைய படி வேலை செய்யும் எனவும் எங்கோ படித்த ஞாபகம். முயற்சிக்கவும். நஸ்டம் ஒன்றும் இல்லை.
என்னப்பா இது சில பேர் பின்னூட்டங்களை காணவில்லைன்னு அங்கே தேடிட்டு இருக்காங்க, இது என்ன ஸ்பெஷல் ‘காணாப்போகும்’ வாரமோ?
///
எனக்கும் பின்னூட்டங்கள் சிலவும் காணாமல் போய்விட்டன!!!
:-))))
//எதுக்கும் ஒரு நல்ல மந்திரவாதியை பார்த்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.. நம்ம கிட்ட கைவசம் ஆள் இருக்கு.. ஆனால் நீங்க தொலைச்ச பொருளை விடா ஜாஸ்தியா செலவு ஆகும்.. பரவாயில்லையா?//
யாரு நம்ம நாஞ்சிலானந்தாவா தல.
//அட, அட, அட......! கொஞ்சம் அந்த சட்டத்தை கீழே வைத்து விட்டு , உங்கள் கையை கொடுங்க. கை குலுக்கி பாராட்டணும். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.....!//
இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் டைமிங் சென்ஸ். கலக்குங்க.
அடுத்து ஏதாவது தொலையுங்கள் அப்போதுதான் தொலைந்த போனும் , எங்களுக்கு ஒரு இடுகையும் கிடைக்கும்.
விரைவில் தொலைக்க சாரி கிடைக்க வாழ்த்துகள்.
சித்ரா இதில் நான் உங்களுக்கு அக்கா.என் செல் போன் போன வாரம் தொலைந்து போய் அது தொலைந்து போனதே நாலு நாட்களுக்கு தெரியாமல் இருந்தேன் .அலுவலகத்தில் அதை யாரோ வைத்துவிட்டு போய்விட்டார்கள் என்று ஏலம் விட்டபோது தான் தெரிந்தது நான் என் கைபேசியை தொலைத்ததே .கிடைத்ததற்கு ஒரு எஸ்.கே .சி .பார்ட்டி வேற
சித்ரா நல்ல பகிர்வு,முன்பு ஒரு முறை தோழி ஸாதிக்கா செல்லை தொலைத்து விட்டு நியுஸ்பேப்பர் பாய் திரும்ப வந்து கொடுத்த கதை படித்த நினைவு,இது மாதிரி நானும் என்னைவிட்டு செல்லாத செல்லை எங்கேயாவது போட்டுட்டு புதுசுக்கு ஆட்டையை போடலாமான்னு பர்ர்க்கிறேன்.
இன்னும் ரெண்டு தொலஞ்சு போன செல்லப்பத்தின கதைய சொல்லவே இல்லையே
இப்படித்தான் எங்க சாச்சி (சித்தி) லேசா சாம்பார் கொட்டின ஃபோன துடைக்கனும்னு வாஷ் பேசின திறந்து நல்லா கழுவி...
நல்லா தொலைச்சீங்க போங்க..
ஜாடிக்கு ஏத்த மூடி... சரியாத்தான் அமைஞ்சுருக்கு.. வாழ்த்துகள்.
த்ஸோ த்ஸோ.... :((
:))
தேடப்படும் பொருளை விட, தேடுதல் சுகமானது
அடுத்த முறை, செல்போன் வாங்கியதும், அதற்ககு உங்க வீட்டு அட்ரஸ்,அவசர தொலைபேசி எண்கள் போன்றவற்றை சொல்லிக்கொடுத்திடுங்க..
தொலஞ்சாலும் திரும்பி வந்திடும்..
( அடச் சே.. இந்த கமென்ஸ்ச 2015-ல போடுவதற்க்கு பதில இப்பவே போட்டுட்டேனே..சாரிங்க..)
இன்னொரு போன் வாங்கி அதை தொலைச்சிடுங்களேன்.. அதை தேடும்போது இந்த போன் கிடைச்சிடுமில்லையா!! :-)))
LOL :)
சொல்லுபோனா திரும்பி வரும். செல் போனா திரும்பி வருமா? :-))
செல்போன் இல்லாட்டி கை உடைஞ்ச மாதிரி இல்ல இருக்கும் :)
வேற போன் வாங்கிட்டீங்களா.. இல்லையா....?
எங்க வீட்டுல பேனாதான் வாரம் ஒன்றாவது தொலையும். யாரும் தேடுவதில்லை. தேடுவதற்குப் பதில் புதுப்பேனா.
வருடாவருடம் போகிக்கு வெள்ளையடிக்கும்போது சில பேனா மூடிகளும், நிறைய பென்சில்களையும் கண்டெடுக்கிறோம்.
தொலைந்த பேனாக்கள் பென்சில்களாகிவிடுகின்றனவா..?
நான் ஆரம்பத்துல படிச்சதும் கிரைண்டருக்குள்ளதான் போட்டிட்டீங்களோன்னு நெனச்சேன்.. காப்பி டம்ளர்தானா...?
//கையில் பிடித்து கொண்டிருந்த டீ கப்புக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது//
அட சாமீ என்னா பில்டப்பு........
//சட்டம் நம் கையில் said...
பேசாம பொது இடத்தில் டம்ளருக்கு சங்கிலி போட்டு கட்டியிருப்பது போல ஜன்னலில் கட்டிவிட்டால் எப்படி தொலைந்து போகும்? செய்து பார்க்கலாமே!//
இந்தமாதிரி ட்ரை பண்ணுங்க...
வீடு அரண்மனை மாதிரி பெரிசா இருந்தா எப்பவும் இந்தப் பிரச்சனைதாங்க :-))
சரியான ஜாடிக்கேத்த மூடி.
அண்ணாத்தே உசாராயிருங்கோ மேடம்
எங்கோ போயிக்கிட்டுயிருக்காங்க
சொ[செ]ல் போன் சொல்லாமல் போச்சாம்
Memory loss....
Eat memory plus...
:)
உங்க செல்போன் புண்ணியம் செய்துருக்குங்க,விடுங்க பாவம் அதை வேற ஏன தேடி மறுபடியும் அதற்க்கு தொந்தரவு கொடுக்க போறீங்க....அது இந்நேரம் எவ்வளவு சந்தோஷத்தில் இருக்கோ தெரியல..ம்ம்ம் அது தப்பிச்சுடுச்சு...நாங்க???????????
உண்மைதான் சித்ரா.இப்படி தொலைந்து போன செல்போன்கள் எததனை..எத்தனை.. இப்பொழுது விற்றால் 500 ரூபாய்க்கு கூட விலை போகாத செல்போனை வைத்துக்கொண்டு(நிம்மதியாக) இருக்கிறேன்.கிடைத்த நல்ல மொபைல்களை எல்லாம் இழந்து விட்டு..புதியதாக வாங்கவும் மனதில்லாமல்.அதே போல் வீட்டில் இருக்கும் ஒற்றை சாக்ஸ் ஒரு மூட்டை உள்ளது.தூக்கிப்போடவும் மனதில்லாமல்.எப்படியாவது ஜோடி கிடைத்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில்..(உங்கள் பதிவைப்பர்த்துட்டு மனதை தேத்திக்கறேன்..ஹி..ஹி..ஹி..)
அதானா சங்கதி.நானும் செல் ஃபோனில் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தேன்....
”நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் செல்லைத்தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவிக்க வேண்டாமா ...அதற்கு ஒரு வழி பண்ணுங்கள்
போக்கிரி படத்தில் வடிவேலு சொல்வது போல் "மறுபடியும் செல்லு போச்சே..."அப்படின்னு தானே டயலாக் பேசினீங்க?
மூணு வருஷமா ஒரே ஃபோன் வச்சிருந்த ஆளு நான். ஒரு வருஷத்துக்கு நாலு ஃபோனா???!!
//இதற்கு பின்னாலும் ஏதாவது கர்மம் இருக்குமோ? //
மர்மம்தான் இருக்கும், அதென்ன கர்மம்?
ஒன்றரை வருஷமா, அவர்கிட்ட ஐ-பாட் இல்லாததைக் கவனிக்கவே இல்லியா நீங்க? ஆச்சர்யம்!!
ஆபீஸ் எடுத்து கொண்டு போய், அங்கேயே வைத்து கொண்டு பாட்டு கேட்கிறார் என்று நினைத்து விட்டேன். ரொம்ப நல்லவ, நான். ஹி,ஹி,ஹி.....
எப்புடி உங்களால மட்டும் முடுயுது
அஹா என்ன ஒற்றுமை நீங்க செல்லை தொலைத்துட்டு தேடுறீங்க , நான் என்னவரின் சிம்கார்டை தொலைத்து விட்டு தேடிக் கொண்டு இருக்கிறேன் ... (அது இப்போதைக்கு எந்த குப்பையில இருக்கோ - பொங்கலுக்கு முன்னாடி கொடுத்தது)
மேடம் என்கிட்ட ஒரு நோகிய கேமரா மொபைல் இருக்கு , அது வேன்ன எடுத்துக்குங்க , நீங்க தொலைக்க நெனச்சாலும் அது தொலையாது , தண்ணி , டீ, காப்பி , மைக்ரோ வோவன் , ட்ரையர் எதுனாளையும் அத ஒன்னும்பண்ணமுடியாது
அமைச்சரே, என்னை கண் கலங்க வச்சிட்டீங்க...... அந்த மொபைல் மாடல், உங்கள் "வீட்டில்" பாத்துட்டு இன்னும் கலங்கி போய்தான் இருக்கேன்....... இப்படி தெளிய வச்சு அடிக்கிறீங்களே...... ஹா,ஹா,ஹா.....
Thank you Akbar, for the token of loving regards - விருது
சாலமன் சார் ரொம்ப கொடுத்து வைத்தவரு..
:-) என்ன கொடும சாலமன் சார் இது.... ஹ ஹ...
சரி உங்களுக்காக நான் என்னோட போலீஸ் மூளைய use பண்ணி ஒரு ஐடியா கண்டுபுடிச்சுருக்கேன்...
நல்லா யோசிச்சு பாருங்க சித்ரா மேடம்.... செல்ல தொலைச்சு ஐபாட் கண்டுபுடிச்சுருக்கீங்க.... அப்போ ஐபாட் தொலைச்சா????
இப்புடி லாஜிக்கா யோசிச்சுருந்தீங்கன்னா எப்பவோ.... :-)) ஹ ஹ...
உங்கள் லாஜிக் இல்லாத லாஜிக் அப்ரோச் நல்லா இருக்குங்க...... ipod தொலைத்தால், ரெண்டு ஒற்றை socks மாட்டுமோ என்னவோ......
ஹையா...நம்ம எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் அமைக்கலாம் போலிருக்கே!
ஆனால், சங்கப் பொருளாளர் நான்தான். ஹி,ஹி,ஹி....
//Chitra said...
ஆனால், சங்கப் பொருளாளர் நான்தான். ஹி,ஹி,ஹி..//
தொலைச்ச செல்ஃபோனுக்கெல்லாம் கணக்கு சரியா இருக்குமா?
:-)(:- ?
இங்கே "கணக்கு" பார்த்து, தொலைச்ச செல் போன் கணக்கை சரி பண்ணிடலாம்னு தான்.
//இதற்கு பின்னாலும் ஏதாவது கர்மம் இருக்குமோ?//
இருந்தாலும் இருக்கும், எதுக்கும் வீட்டை ஒருமுறை புல் ஆக search பண்ணி பாருங்க.
நான் போன வருடம் ஒரு செல்போன் தொலைத்தேன். அதுக்கு இன்னும் இவர்கிட்ட வாங்கி கட்டிட்டு இருக்கேன்.
அடுத்தவாட்டி, அவர் "கச்சேரி" ஆரம்பிக்கும் போது, என்னை மாதிரி நீங்கள் இல்லையேன்னு சந்தோஷப் பட சொல்லுங்க. :-)
நல்லவேளை எங்க வீடு தங்கமணி இந்தபக்கம் வரலை .. வந்தா ???
பதிவையும் பின்னூட்டங்களையும் படிச்சுட்டு இதயத்தைத் தொலைத்து விட்டேன் நான்.
ஒன்றரை வருடங்கள் கழித்து உங்களுக்கு கிடைத்து விடும். கவலை படாதீர்கள், ஸ்ரீராம்.
LK, வந்தா ஒண்ணும் இல்லை. சந்தோஷமாக சிரிச்சிக்கிட்டு போய் இருப்பாங்க. :-)
வாழ்க்கைல ஒண்ணை தொலைச்சுத்தான் இன்னொன்னு தேடனும் அப்படிங்கற தத்துவம் இதுலேருந்து தெரியுது...
சே...பிரதாப்பு ,பின்னுறடா நீயி...
தாங்கள் இந்தியா வரும் போதோ இல்லை என் குரு கில்மானந்தா
அமெரிக்கா வரும்போதோ கர்மம் குறித்து விளக்குவார்.....
கில்மானந்தா, ஏற்கனவே நாஞ்சிலானந்தாவிடம் tuition எடுத்து விட்டாரோ? என்ன கர்மம்டா இது?
அட..அட.. அடடே.. நம்ம ஜாதி.. ஹிஹி.. உங்க சங்கத்தில் நானும் சேர்ந்து விடுகிறேன்.
நேத்து கூட செல் காணாம போச்சு.. எனக்கு ஒரு அசிஸ்டன்ட் வைக்கனும்னு அவர் சொல்றார்..:D :D
சாலோ கிட்ட சொல்லி..அந்த ஐடியா வேணும்னா ட்ரை பண்ணுங்களேன்..:P :P
அப்பா..உங்க பேச்சிலிருந்து செல்போனு்ககு தற்காலிகமாக விடுதலை சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.
***
"உடனேனா, எப்படி? microwave oven க்குள் தான் வைக்கணும்."
பூபா சளைக்காமல்: "வைங்க. ஆனால், சரியாக ஏழாவது நொடியில் வெளியே எடுத்துடுங்க."
நான்: "அது என்ன ஏழு வினாடிகள் கணக்கு?"
பூபா: "எனக்கும் ஒரு வாட்டி, செல் போன்ல தண்ணி பட்டுருச்சு. microwave oven க்குள் பத்து வினாடிகள் வைத்து on பண்ணி விட்டேன். சரியாக எட்டாவது நொடியில் டப்புன்னு ஒரு சத்தத்தோட செல் போன் வெடிச்சு தீ பொறிவந்து விட்டது. அவ்வளவுதான். என் செல் போன் கதை முடிஞ்சது."***
LOL!
பொதுவாக 12 மணி நேரம் 250 செல்ஸியஸில் ஹீட் பண்ணி செய்ய வேண்டிய கெமிக்கல் ரியாக்ஷனை 1-2 நிமிடங்களில் மைக்ரோவேவ்ல செய்வாங்க!
உங்க பேட்டரி, மற்றும் உங்க "liquid crystal display" எல்லாமே ஹீட் சென்சிட்டிவ் கெமிக்கல்ஸால் ஆனவைதான்!
When you microwave it, it can undergo all sort of reactions and get converted to some other compound which will not have the same property! :)))
''அடிக்கடி, காணாமல் போகும் ஒற்றை sock(s), பேனா, பென்சில், ஷாப்பிங் லிஸ்ட், சாவி கொத்து, நண்பர்களின் முகவரிகள் அடங்கிய டைரி , இன்னும் பிற ஐட்டம்ஸ் '''
நான் எங்க வீட்டில் என்று இருந்தேன்..
இது எல்லார்வீட்டிலும் நடப்பத்தானா?
என் பைய செல்லை தொலைத்துவிட்டு
செல் இல்லாமல் இன்று ரிலாக்ஸ் ஆக இருக்கிரேன் என்று சொன்னான்.
யாரு கேட்டாலும் செல்ல மாட்டேன் .......நான் வேணுன்னா ஒரு missed call கொடுக்கவா
வருஷத்துக்கு நாலு போனா சித்ரா இது என்ன அநியாயம் ... எனக்கு மட்டும் ஒன்னு தான் கிடைக்குது ...
வருஷத்துக்கு நாலு போனா சித்ரா இது என்ன அநியாயம் ... எனக்கு மட்டும் ஒன்னு தான் கிடைக்குது ...
வருஷத்துக்கு நாலு போனா சித்ரா இது என்ன அநியாயம் ... எனக்கு மட்டும் ஒன்னு தான் கிடைக்குது ...
//மாவு கிரைண்டர் சுத்துது: //
அரிசியும், உளுந்தும் கொடுத்தா அரைத்து கொடுப்பீங்களா?
ரொம்ப நல்லா இருந்தது சித்ரா நீ மொபைல் துலைச்ச அழகு.. எதுக்கும் ஒரு புது மொபைல் வேகம் வாங்கு.. உன்னை கூப்பிட வசதியா இருக்கும். சல்லுன்னு நாலு மொபைல் தொலைச்சுட்டு.. ஒரு I pod தொலைந்து போனதையும் ஏன் compare பண்ணுற?? நான் வாங்கின முதல் மொபைல் போன் தான் இன்னமும்.. கழுதை தொலஞ்சு போகமாட்டேங்குது... தலையை சுத்தி நானே தான் ஒரு நாள் எறியணும்.
most of the time mine will hide under under the sofa....try one more time..
most of the time mine will hide under under the sofa....try one more time..
Thank you, Basker. Thats where I found the ipod. :-)
Mythili, I am your best friend, yaar......... :-)
Nasareyan, கொசுவத்தி சுத்தி, எத்தனை பேர் கொசு விரட்டி இருக்காங்கனு முதல கேட்டு சொல்லுங்க. அப்புறம், நான் அரைச்சி தாரேன். ஹா,ஹா,ஹா,ஹா.....
அட பாவமே. நாலு மொபைலா? எப்டீங்க வீட்ல தொலைக்கிறீங்க? அதுவும் மொபைல? அது தான் எப்பவுமே நை நைனு சத்தம் போட்டிட்டிருக்குமே. மொபைல் ஸ்டான்ட் ஆங்காங்கே வாங்கி வையுங்க. அதில் மட்டும் மொபைல்லை வைத்தால் துலையாது.
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################
// அப்பொழுது தேடப்படும் அந்த பொருள் கிடைக்காது. அதற்கு, நான் வேற எதையாவது தொலைக்க வேண்டும். //
கண்டிப்பாக, எங்க வீட்டிலும் இப்படித்தான் தொலைத்த பொருள் கிடைக்காது, ஆனா வேற எதையாது தோடும் போது இதுதான் முதலில் கிடைக்கும். செல் பேன் நணைந்து விட்டால் பேட்டரியைக் கழட்டி விட்டு ஒரு நாள் வெய்யிலில் வைத்தால் போதும். நீங்க வேணா தோசைக்கல்லில் போட்டு சுட்டுப் பாருங்கள்.
எந்த ஒரு பொருளையும் ஒழுங்கா ஹாண்டில் பண்ண வேண்டும், எதையும் எடுத்தா எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். ஒரு ரெகுலாரிட்டி மெயிண்டன் பண்ணினால் எந்தப் பொருளும் காணமல் போகது. சும்மா வெட்டியா அரட்ட்டை அடிக்க வேண்டியது,போட்டா போட்டது போட்டபடி போனல் அப்புறம் அவசியம்ன்னு தோடுறப்ப கிடைக்காது. ஒரு சுத்த டிசிப்பிளின் கிடையாது. சித்தன் போக்கு சிவன் போக்குன்னு போக வேண்டியது. அப்புறம் அதைக் காணேம்,இதைக் காணேம்ன்னு தேட வேண்டியது.
ஹே சித்ரா என்ன மாமியார் மாதிரி அட்வைஸ் பண்றானேன்னு யோசிக்காதே, இது எல்லாம் எங்க அண்ணன் நான் தொலைத்து தேடும் போது சொன்னது. இது . (என்ன பதிவு போடலாமுன்னு குழம்பிக்கிட்டு இருந்தேன், வழக்கம் போல ஜடியா கொடுத்து விட்டாய்)
நானும் அக்கரையா கேட்டுக்குவேன், அதான் ஆண்டவன் இரண்டு காது கொடுத்துருக்கான் இல்லை. இந்தப் பக்கம் வெளிய விட்டுருவேன். நன்றி.
ஆகா ஒரு கற்பனை நினைச்சுப் பார்க்கவே, நல்லா சிரிப்பு வருது.
சித்ரா கையில் ஒரு டிரம்ஸ் வைத்துக் கொண்டு,
வாலு போயி கத்தி வந்தது டும் டும்,
செல்லு போயி ஹைபாடு வந்தது டும் டும்
என்று தட்டினால் எப்படி இருக்கும். அய்யே அது நான் இல்லை. நான் இப்ப சிங்கப்பூரில் இல்லை, அடிக்க துரத்தாதிங்க.
நான் அண்டார்ட்டிக்காவுக்கு ஓட்டம்.
அண்ணாச்சி, எங்கள் வீட்டில் நான் மட்டும் இல்லை. இரண்டு குட்டி சுட்டி புயல்கள் உண்டு. அவர்கள், லீலைகளை மறந்து விட்டீர்களே........ நான், கண்டிப்புக்கார அம்மா இல்லை. அதனால்........... :-)
பாசத்துடன் தந்த அறிவுரையின் தன்மையை உணர்ந்து நெகிழ்ந்து விட்டேன், அண்ணாச்சி. :-)
சிரிச்சி முடியல சித்ரா.
8 நிமிட மைக்ரோ ஓவன்....
சூப்பர்.
I am so happy that you liked it. Yes, we may act stupid, but those are the moments/memories which we carry with us for lifetime. :-)
எதையாவது தொலைச்சு இது கிடைச்சதும் மறக்காம எங்களுக்கு சொல்லிடுங்க.
நான்காவது செல்ஃபோன்ல ரெண்ட பத்தி மட்டும் சொல்லி இருக்கீங்க.. மீதி ரெண்டு??
இனிமே எதாவது காணேம் அல்லது எதாவது முக்கிய பிரச்சனை என்றால் உடனடியாக கடவுளுக்கு ஒரு ரூவாய்(அல்லது ஒரு டாலர்) போடுவதாக வேண்டிக் கொள். உடனடியாக நடக்கும், பின்னர் அருகில் இருக்கும் கோவிலில் போட்டுவிடு.
சித்ரா , பத்மா நு "செல்லை" செல்லவிட்டவங்க நெறைய பேரு இருப்பீங்க போல.. பேசாம இதையும் ஒரு தொடர் பதிவா மாத்திடலாமே ..!
ஒரு 2 பேரை நீங்க கூபிடுங்க.. ! :) :)
நல்லா யோசைனையாய் தெரியுது, அண்ணாச்சி (பித்தனின் வாக்கு)
தொடர் பதிவா? ஹா,ஹா,ஹா,ஹா....
செல்போன் தொலைந்து தேடியதில்
அப்புறம்...
செல்போன் தொலைந்த விவரத்தை கணவரிடம் மறச்சிட்டீங்க போல...
ம்ம்ம்... நடக்கட்டும்... என்ன கர்மம் இருந்தா என்னங்க... நாம காரியத்தில் கண்ணா இருந்தால் கர்மம் என்ன செய்யும்.
கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்ததை.........................
குமார் சார், மறைக்கிறது இல்லை. By this time, I am very comfortable telling him the truth. இப்படி செய்திகளை நோகாமல் சொல்ல பழகி போச்சு. ஹி,ஹி,ஹி,ஹி,....
ungalukku enna nogama solliduveenga. unga veetu rangsthan paavam
He got used to me and my carelessness. :-)
அடடே! இது தினம் எங்கள் வீட்டில் நடக்கும் கதை தானே!
வாழ்க்கை தத்துவம் சோ நைஸ்:)
செல்லாது..செல்லாது..."இப்படி என்னை கடைசியா பின்னூட்டம் போட வைக்கிறது செல்லாது."
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_08.html
(தெரிவிப்பதற்கு தாமதமாகிவிட்டது)
நல்லா தொலைக்கிறீங்க மேடம்.
அம்முணி உங்க வீட்டு சோஃபா இடுக்குகள்ள தேடிப்பாருங்க அம்முணி...
உங்க வீடு ரொம்ப சுத்தபத்தமா இருக்குமோ...? :-)) சின்ன பசங்க இருக்கிற வீட்டுலயும் உஷாரா இருக்கணும். என் பிரெண்டோட பையன் இருக்கான்... அவன் நைசா வீட்டுச் சாவி, டிவி ரிமோட் இப்புடி எல்லாத்தையும் ஜன்னல் வழியா கீழ எரிஞ்சுருவான்... (என் நண்பன் இருக்கிறது 8 வது மாடி) இந்த சின்ன பைய்யனுக்கு ஏதாவது லஞ்சம் கொடுத்தாத் தான் உண்மைய சொல்லுவான்... :-)
எப்படியோ, அக்காவுக்கு லாபம் தான்..
அமாம்.. வீட்டுக்குள் தான் தொலைந்து போனதா.. இல்லை, உங்கள் கணவரையும் மற்றும் மற்றவர்களையும் நம்ப வைக்க ஏதேனும் சதி வேலையா...?
எதாக இருப்பினும் ரசித்தேன்,,,
நன்றி,,,..
பதியை சதி செய்து ஏமாற்றும் வேலை செய்ய, அறியா உள்ளமப்பா இது........!!!!
நம்பிட்டேன்...
ஹிஹி..
எங்க வீட்டில் ஒரு குட்டி நாய் உள்ளது..ஏமாந்தால், சாக்சை திருடிக் கொண்டுபோய் அவன் இடத்தில் வைத்துக் கொள்வான்..இரண்டு ஜோடி சாக்சில் இருந்து ஒவ்வொன்றைக் கொண்டு போய் விடுவான்.. கிழித்து நார் நாராக்கி விடுவான்.. ஆனால், செல் போன் எல்லாம் எடுக்க மாட்டான்... உங்கள் வீட்டில் அது போன்று ஏதாவது நாய் உள்ளதா...?
இது ஐடியா....!!! சாக்கு சொல்லி குற்றவாளி கூண்டுல நிக்க வைக்கிறதுக்காகவது ஒரு நாய் வளக்கணும் போல. ஹா,ஹா,ஹா.....
ஆன்லைன்லதான் இருக்கீங்களா....?
நீங்க இப்ப எந்த தேசத்தில் இருக்கீங்க..?
ஜாடிக்கேத்த மூடிதான் ..... ஒரே கலக்கல் காமெடியா இருக்கு சித்ரா!
உங்க வீட்டுகாரர் சம்பாரிக்கிறத எல்லாம் செல் வாங்கியே காலி பண்ணிடுவீங்க போல இருக்கு!!! நகைச்சுவையான பதிவு !!!! உங்களுக்கு வந்திருக்குற பின்நூட்டங்களைப்பார்த்தால் தலை சுற்றுகிறது. பெரிய ரசிகர் பட்டாளமே வைத்திருப்பீர்கள் போலிருக்கிறது.....!!!
பிரகாஷ், நான் இந்தியாவின் கொல்லைபுறமான அமெரிக்கா என்ற தேசத்தில் இருக்கேன் என்று சொன்னால், நம்பிடுங்க. ப்ளீஸ்.
கவிதன், நன்றிகள் பல. "இது அன்பால் சேர்ந்த கூட்டம்." தலைவர் படங்கள் எத்தனை, விசில் அடிச்சு பார்த்து இருக்கோம். இவ்வளவு கூட பேச மாட்டோமா?
Thank you very much for your valuable comments, votes and parinthurai.
Thank you for reading my post.
Thank you for "youthful vikatan" for referring this post as "good blogs".
See you all next week in this "blog world"
//"இது அன்பால் சேர்ந்த கூட்டம்."//
eppadi ammani mudiyala
bye bye have a gr8 week end
அமெரிக்காவுல எல்லா செல்போனும் ப்ரீதானாமே.. வேற ஒன்னு வாங்கிடுங்க...
அவன் கொடுக்கிற ப்ரீ செல் போனுக்கு ரெண்டு வருட contract plan போடணும். போக, நாம் காட்டுற மாடல் எல்லாம் கொடுக்க மாட்டான்.
//நீங்க வேற....... நானே இப்படி பத்து வாழ்க்கை தத்துவத்தை வைத்து தியான மண்டபம் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா// அக்கா, உங்களோட ஒரே சிஷ்யனான இந்த தக்குடுவை மறந்துவிடாதீர்கள்...:) பதிவு பிரமாதம், சரியான ஜோடிதான்...:)
மஞ்சூர் ராசா, செல் மட்டும் தேடி கொண்டு இருப்பவளை , நெல் உமி யையும் சேர்த்து தேட சொல்லியதுக்கு நன்றி. :-)
Akka,
எனக்கு கிடைத்த விருதுவினை உங்களுடன்பகிர்ந்து இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்
http://maarasa.blogspot.com/2010/04/blog-post_11.html
romba mosam.. en comment ku mattum badhilae podalai.. unga kooda doo doo doo doo doo :(
Sasikumar, T.V.Radhakrishnan sir, Akbar, padma, Asiya, Raghavan sir, Vidhoosh, பார்வையாளன் , pattaapatti, amaithi chaaral, Uma Madam, chettaikkaaran, saba, chinna Ammini, Deva, Selva Anna, Balasi sir, ulavan, Anbudan Malikka, erumbu, Saadhika, Shashiga, Goma Madam, Saravanan:
Thank you very much for your valuable comments.
Ananthi, Assistant - cell phone க்கா? எதுக்கு? ஹா,ஹா,ஹா,ஹா....
//romba mosam.. en comment ku mattum badhilae podalai.. unga kooda doo doo doo doo doo :(// repeeeeatuu
இப்போதைக்கு என்னுடைய "ஒரே" சிஷ்யரே (தாங்களே declare செய்துள்ள படி ), நம்ம assistant தானே என்று பதில் சொல்லாமல் விட்டு விட்டேன். இதுக்கெல்லாம் வருத்தப் பட்டா, உங்களை நம்பி தியான மண்டபம் எப்படி ஒப்படைக்கிறது?
உங்கள் பதிவு நான் கையில் கட்டியிருந்து கடிகாரத்தைத் தொலைத்தது ஞாபகம் வருகிறது. கடிதத்தை பெட்டியில் போடும்போது இதையும் சேர்த்துப் போட்டுவிட்டேன் என பிள்ளைகள் கேலி பண்ணினார்கள்.
ஆனால் கையில் கட்டியிருந்தேனா என்பதும் ஞாபகம் இல்லை!!
பரவாயில்லை, சித்ரா.. எனக்கு எதைத் தொலைத்தேன் என்று தெரியாமல் ரொம்ப நேரம் முழித்துக் கொண்டிருப்பேன்!!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
:))
Post a Comment