Approaching everything in life with a sense of humor - a blessing - given by God through my father's genes.
Friday, May 28, 2010
Leave application
Respected Sir/Madam:
As I am "suffering" from few commitments in the real world; I request you to grant me leave for few days from the blog world. May.29th, Saturday through June 6th, Sunday - please forgive my absence from my blog write-up and from your blog's pinnoottams and votes.
Thanking you.
Sincerely
"vetti pechchu" Chitra
ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......... !!!
Monday, May 24, 2010
ஆண் பேச நினைப்பதெல்லாம் .......
எங்கே ரொம்ப நாளாக போஸ்ட் எதையும் காணோம் என்று நமது "ரசிக பெருமக்கள் கூட்டம்" கேட்க ஆரம்பிச்சாட்டாங்க.... நிஜமா, ஒரு research பண்ணிக்கிட்டு இருந்தேன். unbiased results வர வேண்டும் என பலரை contact செய்து, ஆண்கள் பேச நினைப்பதில், சில "உண்மைகளை" தெரிந்து கொண்டேன். துப்பறிந்து கண்டு பிடித்தவை, இதோ!
DISCLAIMER: இந்த "வாக்குமூலத்தை", என் கணவரிடம் வாங்க முயன்ற போது, சிரித்து விட்டு ரொம்ப விவரமா "s " ஆகி விட்டார். அவர் என் கூடயே இருந்து குப்பை கொட்டணுமே ...... சரி, புளச்சு போங்கனு விட்டுட்டேன்.
கேள்விகளுக்கு பதில் அளித்த ஆண்கள் ஒவ்வொருவரும், அவர்கள் அனுபவத்தில் தெரிந்தது என்று நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஒரே கண்டிஷன் தான் போட்டார்கள். அவர்கள் பெயரை போட்டு, மனைவியிடமோ girlfriend இடமோ மாட்டி விடக் கூடாது. ஒத்துக் கொண்டேன்.
நான், ரொம்ப நல்லவா....................!!! நம்புங்க......!
சில சுவாரசியாமான "வாக்குமூலங்களை" இங்கே தொகுத்து தந்து, பகிர்ந்து கொள்கிறேன்.
மற்றும், விதிவிலக்குகள் எல்லா ஆராய்ச்சி முடிவுக்கும் உண்டு. இவை உங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால்: ஹா,ஹா,ஹா,ஹா,....... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி........ ஹோ.ஹோ,ஹோ,ஹோ,ஹோ....... (சார், உங்களை பார்த்தா பாவமா இருக்குதுங்க......ஆனாலும் சிரிப்பை அடக்க முடியல......)
ஆண்களின் பார்வையில்:
"எப்படி இருக்க? வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
காபி டீ குடிக்க போலாமா, மாம்ஸ்?"
(அல்லது ............ சேர்ந்து "தண்ணி" அடிக்க போலாமா?)
"எப்படி இருக்க? என்ன இவ்வளவு வெயிட் போட்டுட்ட?
(இல்லை என்றால், என்ன diet ல் இருக்கியா? இப்படி மெலிஞ்சிட்ட)
இந்த கலர் சாரி (அல்லது டிரஸ்) நல்லா இருக்குது.
உன் அம்மாவுக்கு, மூட்டு வலி சரியா போச்சா?
உன் அப்பாவுக்கு, பல் வலி சரியா போச்சா?
உன் தம்பி, இப்போ என்ன பண்றான்?
உன் அக்கா வீட்டில் பிரச்சினை சரியா போச்சா?
உன் மகனுக்கு அப்புறம் காது வலி வரல இல்ல?
உன் நாத்தனார் இன்னும் சண்டைக்கு வராங்களா?
உன் ஆபீஸ் ஜொள்ளு சபா, இன்னும் தொல்லை பண்ணுதா?
நீ இன்னும் அதே வீடுதானா இல்லை, வீடு மாறிட்டியா?
நீ..................??????"
கேள்வி மேல கேள்வி இருவரும் கேட்டு கொண்டு, சந்திக்காத நாட்களில் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் அப்டேட் செய்யப்படும்.
"எனக்கு பசிக்கிற மாதிரி இருக்குது" ------------- எனக்கு பசி வயிற்றை கிள்ளுது.
"எனக்கு களைப்பாக இருக்குது " ................... தூங்க போகலாம் என்று இருக்கிறேன்.
"கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்றேன்." .................. கிரிக்கெட் மேட்ச் (sports) டிவியில் பார்க்க போறேன்
.................... Facebook/internet ல டைம் பாஸ் பண்ண போறேன்.
கணக்கு:
வீர பிரதாபங்கள்:
நண்பர்களிடம் = "வகுத்து" சொல்லப்படும் ;
மனைவியிடம்/girlfriend இடம் = " பெருக்கி:சொல்லப்படும்;
"figure " பிரதாபங்கள்:
நண்பர்களிடம் = "கூட்டி" சொல்லப்படும்;
மனைவியிடம்/girlfriend இடம் = "கழித்து" சொல்லப்படும்.
compliment:
கணவன்: "சேலை (அல்லது சுடிதார்/டிரஸ்) புதுசா?"
மனைவி: "நீங்கதானே என் கூட வந்து, இதை பார்த்து, கடையிலேயே ரொம்ப நல்லா இருக்குது..... நல்லா இருக்குதுனு சொல்லிக்கிட்டு இருந்தீங்க. நீங்க வாங்கி கொடுத்தது தான்."
கணவன் மனதுக்குள்:
" கடையில் வைத்து நல்லா இருக்குதுன்னு சொன்னது, இந்த சாரியை (டிரஸ்) பாத்துனு நினைச்சிட்டா போல. நான் தப்பிச்சேன்."
சொல்ல நினைக்கும் பதில்:
.............. நல்லா இருந்தா, அதை முதலிலேயே சொல்லி இருக்க மாட்டோமா?
...............கடையில் பார்த்தப்போ, இதை விட நல்லா இருந்த மாதிரி ஞாபகம்.
................சாரி நல்லாத்தான் இருக்குது, நீ கட்டிய பின்னும்......
சொல்ல நினைக்கும் பதில்:
................. அப்படி வேற உனக்கு நினைப்பு இருக்கா?
................. ஆளை விடு.
"அப்போ பிடித்து இருந்தது...."
சொல்ல நினைக்கும் பதில்:
.............. அவளை மட்டும் இல்ல...... அவளை போல இருக்கிற.....
............... கனவு வேறு, ஆசை வேறுனு தெரியாதா?
................ சீ, சீ .... இந்த பழம் புளிக்கும் கதையா ஆனப்புறம் வேற என்ன?
.................. ஹூம்........ பிடித்து என்ன செய்ய?
சொல்ல நினைக்கும் பதில்:
........... "அந்த பிங்க் கலர் சாரி, லோ ஹிப் ல கட்டிக்கிட்டு போனவதானே?"
............. "துப்பட்டா போட்டு மறைச்சாலும், சுடிதார்ல சிக்னு இருந்தவதானே?"
..............." ஒருத்தியா? அங்கே ஒரு கல(ர்) கல(ர்) கூட்டமே போகுது. யாரைன்னு பாக்குறது தெரியாம முழிக்கிறேன்."
.............. " என்னை ஓரக் கண்ணால பார்த்துக்கிட்டே போனாளே. அவளா?"
............... " எனக்கு ஒண்ணு மாட்டாதானு அலையும் போது, இவ எல்லாம் கண்ணுல பட மாட்டாளே. இப்போ போய்...."
.............."அடிக்கடி இந்த பக்கம் வரதே அதுக்குதானே."
"பரிவுடன்" கேட்கும் இரண்டு வார்த்தைகளின் அனர்த்தங்கள்:
.................... "இன்னைக்கு என்ன நோண்டலோ?"
....................." PMS???"
....................." இன்னைக்கு வரும் போது எனக்கு இருந்த நல்ல 'ஜிங்கு ஜங்கா' மூடுக்கு டாடா!"
................... "இந்த மாத quota இன்னும் முடியலியா?"
................... " எதுவா இருந்தாலும், அதுக்கு நான் காரணமாக இருக்க கூடாது"
................... " புது பிரச்சனையா? இல்லை எப்போவோ உள்ளதின் தொடருமானு தெரியலியே."
..................... " ஆரம்பிச்சாட்டாம்மா ....... ஆரம்பிச்சிட்டா......"
..................... " என் எஸ்கேப் ரூட் எங்கே இருக்குது?"
...................... " என் வீட்டாளுங்க இப்போதைக்கு ஊரில் இருந்து வரலியே. அப்புறம் என்ன?"
......................." காரணம் கண்டிப்பா நான் தெரிஞ்சிக்கணுமா?"
...................... " காரணம் என்னனு இப்போ சொல்றியா? இல்ல, ஒரு டிவி மெகா சீரியல் டிராமா சீன் நடத்திட்டு, அப்புறம் சொல்ல போறியா?"
..................... " என்ன பாத்தா, 'இங்கே புலம்பலும் பொருமலும் வரவேற்கப்படும்" என்று நெத்தியில் எழுதி ஒட்டுனவன் மாதிரியா இருக்குது?"
எல்லாம் இன்ப மயம்:
ஒரே அர்த்தம் - "இன்னிக்கு 'உம்ம்ம்மா - - - - - யம்ம்ம்ம்மா' வேணும்."
சொல்வது பல வழிகளில்:
"இன்னைக்கு என்ன விசேஷம்? ரொம்ப அழகா இருக்கே!"
" இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்."
"உனக்கு இது பிடிக்குமே. அதான் வாங்கிட்டேன்."
"எதுக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு களைச்சு போற?"
"நீ சிம்பிளா வந்தா கூட, நச்னு இருக்குது."
தெரிந்தவர் ஒருவரின் " affair" வெளியாகும் போது:
பிறரிடம் பேசும் போது: "எப்படித்தான், பொண்டாட்டிக்கு (girlfriend க்கு) துரோகம் பண்ண, அவனுக்கு மனம் வந்ததோ?"
மனதுக்குள்:
................ கொடுத்து வச்சவன்.
................ அவன் எப்போதுமே, risk taker - adventurer - நினைத்ததை முடிப்பவன்.
.................. போயும் போயும் அவள் கூடயா? வேற ஆளு கிடைக்கலியா?
................. தெரிஞ்சவங்க நாலு பேருக்கு பயப்படறேனோ இல்லையோ, இங்கிலிஷில் தெரிஞ்ச நாலு எழுத்துக்காக யோசிக்கிறேன். அவை:
A .....I......D......S......
................ இருக்கிற ஒண்ணுக்கே, எனக்கு வாங்கி போட்டு கட்டுப்படி ஆக மாட்டேங்குது..... இல்லைனா.....
தத்துவ ஜொள்ஸ்:
Women - - - - You can't live with them or without them.........
Sixth Sense வந்து எத்தனை முறை அறிவுப்பூர்வமாக பேசி warn செய்தாலும், மற்ற ஐந்து senses , ஓவர் ரியாக்ட் செய்து "வெற்றி" பெறுகின்றன.
இன்னும் இருந்தால், கமெண்ட்ஸ் போட்டு பகிர்ந்து கொள்ளுங்கள். :-)
பி.கு.: 1:
இந்த அகராதி தொகுப்பு சமூக சேவைக்காக - - - யாரும் எனக்கு சிலையும் வைக்க வேண்டாம் - பாமும் வைக்க வேண்டாம்.
பி.கு. 2:
ஆண் மக்கள், திறந்த புத்தகமாக கொட்டிட்டாங்க..... இப்போ, எனது அடுத்த வெட்டி ஆராய்ச்சி, பெண்கள் அறிக்கைகளுக்கு, அர்த்தங்கள் என்ன என்று தொகுக்கலாம் என்று இருக்கிறேன். Questionnaire தயார் செய்ய வேண்டும். பதில் தெரிய வேண்டிய கேள்விகள் மற்றும் சங்கதிகள் கமெண்ட்ஸ் போடும்போது போட்டால், investigate செய்ய ஆரம்பித்து விடுவேன். கூடுமானவரை unbiased ஆக இருக்க முயற்சி பண்றேன்........ (ஸ்ஸ்ஸ்ஸ்...... அப்பா........ இவங்களை நம்ப வைக்கிறதுக்கு உள்ள........ ...ம்ம்ம்ம்......)
அடுத்த Ph.D. இதுலதான்..... அதுக்காக: " டாக்டர் சித்ரா, வாழ்க!" என்று எல்லாம் - ப்ளீஸ் - யாரும் இப்போவே சொல்லாதீங்க....... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க........ சரியா?
நோ அருவாள் or bad words . நன்றி. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.......
படங்கள்: நன்றி டு கூகுள்.

தோழர்கள் இருவர் வெகு நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டால்:
"எப்படி இருக்க? வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா?
காபி டீ குடிக்க போலாமா, மாம்ஸ்?"
(அல்லது ............ சேர்ந்து "தண்ணி" அடிக்க போலாமா?)
அதே வேளையில், தோழிகள் இருவர் வெகு நாட்கள் கழித்து சந்தித்து கொண்டால்:
"எப்படி இருக்க? என்ன இவ்வளவு வெயிட் போட்டுட்ட?
(இல்லை என்றால், என்ன diet ல் இருக்கியா? இப்படி மெலிஞ்சிட்ட)
இந்த கலர் சாரி (அல்லது டிரஸ்) நல்லா இருக்குது.
உன் அம்மாவுக்கு, மூட்டு வலி சரியா போச்சா?
உன் அப்பாவுக்கு, பல் வலி சரியா போச்சா?
உன் தம்பி, இப்போ என்ன பண்றான்?
உன் அக்கா வீட்டில் பிரச்சினை சரியா போச்சா?
உன் மகனுக்கு அப்புறம் காது வலி வரல இல்ல?
உன் நாத்தனார் இன்னும் சண்டைக்கு வராங்களா?
உன் ஆபீஸ் ஜொள்ளு சபா, இன்னும் தொல்லை பண்ணுதா?
நீ இன்னும் அதே வீடுதானா இல்லை, வீடு மாறிட்டியா?
நீ..................??????"
கேள்வி மேல கேள்வி இருவரும் கேட்டு கொண்டு, சந்திக்காத நாட்களில் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் அப்டேட் செய்யப்படும்.
ஆணின் தெளிவான பேச்சு:
"எனக்கு பசிக்கிற மாதிரி இருக்குது" ------------- எனக்கு பசி வயிற்றை கிள்ளுது.
"எனக்கு களைப்பாக இருக்குது " ................... தூங்க போகலாம் என்று இருக்கிறேன்.
"கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்றேன்." .................. கிரிக்கெட் மேட்ச் (sports) டிவியில் பார்க்க போறேன்
.................... Facebook/internet ல டைம் பாஸ் பண்ண போறேன்.
கணக்கு:
வீர பிரதாபங்கள்:
நண்பர்களிடம் = "வகுத்து" சொல்லப்படும் ;
மனைவியிடம்/girlfriend இடம் = " பெருக்கி:சொல்லப்படும்;
"figure " பிரதாபங்கள்:
நண்பர்களிடம் = "கூட்டி" சொல்லப்படும்;
மனைவியிடம்/girlfriend இடம் = "கழித்து" சொல்லப்படும்.
compliment:
கணவன்: "சேலை (அல்லது சுடிதார்/டிரஸ்) புதுசா?"
மனைவி: "நீங்கதானே என் கூட வந்து, இதை பார்த்து, கடையிலேயே ரொம்ப நல்லா இருக்குது..... நல்லா இருக்குதுனு சொல்லிக்கிட்டு இருந்தீங்க. நீங்க வாங்கி கொடுத்தது தான்."
கணவன் மனதுக்குள்:
" கடையில் வைத்து நல்லா இருக்குதுன்னு சொன்னது, இந்த சாரியை (டிரஸ்) பாத்துனு நினைச்சிட்டா போல. நான் தப்பிச்சேன்."
girlfriend அல்லது மனைவியின் கேள்விகளும் அதற்கு ஆண் சொல்ல நினைக்கும் பதில்களும்:
"இந்த சாரி (அல்லது டிரஸ்) நல்லா இருக்குதா?"
சொல்லும் பதில்: "ரொம்ப நல்லா இருக்குது."சொல்ல நினைக்கும் பதில்:
.............. நல்லா இருந்தா, அதை முதலிலேயே சொல்லி இருக்க மாட்டோமா?
...............கடையில் பார்த்தப்போ, இதை விட நல்லா இருந்த மாதிரி ஞாபகம்.
................சாரி நல்லாத்தான் இருக்குது, நீ கட்டிய பின்னும்......
ஒரு expensive பொருள் காட்டி, "வாங்கலாமா? அழகா இருக்குமே."
சொல்லும் பதில்: "அழகுக்கே அழகா?"சொல்ல நினைக்கும் பதில்:
................. அப்படி வேற உனக்கு நினைப்பு இருக்கா?
................. ஆளை விடு.
"அந்த நடிகைதான், உங்களுக்கு பிடிக்குமா?"
சொல்லும் பதில்: "முந்தி பிடிக்கும். அவ்வளவுதான்." or"அப்போ பிடித்து இருந்தது...."
சொல்ல நினைக்கும் பதில்:
.............. அவளை மட்டும் இல்ல...... அவளை போல இருக்கிற.....
............... கனவு வேறு, ஆசை வேறுனு தெரியாதா?
................ சீ, சீ .... இந்த பழம் புளிக்கும் கதையா ஆனப்புறம் வேற என்ன?
.................. ஹூம்........ பிடித்து என்ன செய்ய?
"அங்கே போன பெண்ணைத்தான பார்த்தீங்க?"
சொல்லும் பதில்: "பொண்ணா? எங்கே? பொண்ணு ஒருத்தி போனாளா, என்ன?"சொல்ல நினைக்கும் பதில்:
........... "அந்த பிங்க் கலர் சாரி, லோ ஹிப் ல கட்டிக்கிட்டு போனவதானே?"
............. "துப்பட்டா போட்டு மறைச்சாலும், சுடிதார்ல சிக்னு இருந்தவதானே?"
..............." ஒருத்தியா? அங்கே ஒரு கல(ர்) கல(ர்) கூட்டமே போகுது. யாரைன்னு பாக்குறது தெரியாம முழிக்கிறேன்."
.............. " என்னை ஓரக் கண்ணால பார்த்துக்கிட்டே போனாளே. அவளா?"
............... " எனக்கு ஒண்ணு மாட்டாதானு அலையும் போது, இவ எல்லாம் கண்ணுல பட மாட்டாளே. இப்போ போய்...."
.............."அடிக்கடி இந்த பக்கம் வரதே அதுக்குதானே."
"பரிவுடன்" கேட்கும் இரண்டு வார்த்தைகளின் அனர்த்தங்கள்:
கணவன்/boyfriend கேட்கும் கேள்வி: "என்ன ஆச்சு?"
உள்ளே இருக்கும் "பீலிங்க்ஸ்":
................... "அதுக்குள்ள அழ ஆரம்பிச்சிட்டியா?"உள்ளே இருக்கும் "பீலிங்க்ஸ்":
.................... "இன்னைக்கு என்ன நோண்டலோ?"
....................." PMS???"
....................." இன்னைக்கு வரும் போது எனக்கு இருந்த நல்ல 'ஜிங்கு ஜங்கா' மூடுக்கு டாடா!"
................... "இந்த மாத quota இன்னும் முடியலியா?"
................... " எதுவா இருந்தாலும், அதுக்கு நான் காரணமாக இருக்க கூடாது"
................... " புது பிரச்சனையா? இல்லை எப்போவோ உள்ளதின் தொடருமானு தெரியலியே."
..................... " ஆரம்பிச்சாட்டாம்மா ....... ஆரம்பிச்சிட்டா......"
..................... " என் எஸ்கேப் ரூட் எங்கே இருக்குது?"
...................... " என் வீட்டாளுங்க இப்போதைக்கு ஊரில் இருந்து வரலியே. அப்புறம் என்ன?"
......................." காரணம் கண்டிப்பா நான் தெரிஞ்சிக்கணுமா?"
...................... " காரணம் என்னனு இப்போ சொல்றியா? இல்ல, ஒரு டிவி மெகா சீரியல் டிராமா சீன் நடத்திட்டு, அப்புறம் சொல்ல போறியா?"
..................... " என்ன பாத்தா, 'இங்கே புலம்பலும் பொருமலும் வரவேற்கப்படும்" என்று நெத்தியில் எழுதி ஒட்டுனவன் மாதிரியா இருக்குது?"
எல்லாம் இன்ப மயம்:
ஒரே அர்த்தம் - "இன்னிக்கு 'உம்ம்ம்மா - - - - - யம்ம்ம்ம்மா' வேணும்."
சொல்வது பல வழிகளில்:
"இன்னைக்கு என்ன விசேஷம்? ரொம்ப அழகா இருக்கே!"
" இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்."
"உனக்கு இது பிடிக்குமே. அதான் வாங்கிட்டேன்."
"எதுக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு களைச்சு போற?"
"நீ சிம்பிளா வந்தா கூட, நச்னு இருக்குது."
தெரிந்தவர் ஒருவரின் " affair" வெளியாகும் போது:
பிறரிடம் பேசும் போது: "எப்படித்தான், பொண்டாட்டிக்கு (girlfriend க்கு) துரோகம் பண்ண, அவனுக்கு மனம் வந்ததோ?"
மனதுக்குள்:
................ கொடுத்து வச்சவன்.
................ அவன் எப்போதுமே, risk taker - adventurer - நினைத்ததை முடிப்பவன்.
.................. போயும் போயும் அவள் கூடயா? வேற ஆளு கிடைக்கலியா?
................. தெரிஞ்சவங்க நாலு பேருக்கு பயப்படறேனோ இல்லையோ, இங்கிலிஷில் தெரிஞ்ச நாலு எழுத்துக்காக யோசிக்கிறேன். அவை:
A .....I......D......S......
................ இருக்கிற ஒண்ணுக்கே, எனக்கு வாங்கி போட்டு கட்டுப்படி ஆக மாட்டேங்குது..... இல்லைனா.....
தத்துவ ஜொள்ஸ்:
Women - - - - You can't live with them or without them.........
Sixth Sense வந்து எத்தனை முறை அறிவுப்பூர்வமாக பேசி warn செய்தாலும், மற்ற ஐந்து senses , ஓவர் ரியாக்ட் செய்து "வெற்றி" பெறுகின்றன.
இன்னும் இருந்தால், கமெண்ட்ஸ் போட்டு பகிர்ந்து கொள்ளுங்கள். :-)
பி.கு.: 1:
இந்த அகராதி தொகுப்பு சமூக சேவைக்காக - - - யாரும் எனக்கு சிலையும் வைக்க வேண்டாம் - பாமும் வைக்க வேண்டாம்.
பி.கு. 2:
ஆண் மக்கள், திறந்த புத்தகமாக கொட்டிட்டாங்க..... இப்போ, எனது அடுத்த வெட்டி ஆராய்ச்சி, பெண்கள் அறிக்கைகளுக்கு, அர்த்தங்கள் என்ன என்று தொகுக்கலாம் என்று இருக்கிறேன். Questionnaire தயார் செய்ய வேண்டும். பதில் தெரிய வேண்டிய கேள்விகள் மற்றும் சங்கதிகள் கமெண்ட்ஸ் போடும்போது போட்டால், investigate செய்ய ஆரம்பித்து விடுவேன். கூடுமானவரை unbiased ஆக இருக்க முயற்சி பண்றேன்........ (ஸ்ஸ்ஸ்ஸ்...... அப்பா........ இவங்களை நம்ப வைக்கிறதுக்கு உள்ள........ ...ம்ம்ம்ம்......)
அடுத்த Ph.D. இதுலதான்..... அதுக்காக: " டாக்டர் சித்ரா, வாழ்க!" என்று எல்லாம் - ப்ளீஸ் - யாரும் இப்போவே சொல்லாதீங்க....... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க........ சரியா?
நோ அருவாள் or bad words . நன்றி. ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.......
படங்கள்: நன்றி டு கூகுள்.
Labels:
தத்துவ உளறல்கள்
Awards
மீண்டும் என்னை விருது மழையில் நனைய வைத்து விட்டார்கள். விருதுகளை வாரி வழங்கிய அன்பு உள்ளங்கள்,
ஜே (Jay) க்கும் http://tastyappetite.blogspot.com/2010/05/award-moments.html
ஜெயந்திக்கும் http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
நன்றிகள் பல.

Monday, May 17, 2010
தங்க "மலை" ரகசியம்.
யாரெல்லாம் அட்சய பாத்திரம் நிரம்ப தங்கம் வாங்கி வச்சிட்டீங்க? கையை தூக்குங்க, பார்க்கலாம்.......
இப்போ, அப்படியே கையை மடக்கி தலையில் குட்டி கொள்ளுங்கள். மோதிர கையால் குட்டு வாங்கினால், நல்லதாம். அதான் சொன்னேன்.....

இந்த வார சிறப்பு செய்தியில் முக்கிய இடம் பெறுவது - "தங்கம், சொக்க தங்கம் - இந்த பொன்தங்கம, அதிகம் சேர்க்கப்படும் பூமியை - முக்கியமாக பூமியில் அதிகமாக சேர்க்கப்படும் இடமான இந்தியா - அதிலும் விசேஷம் பாருங்க - தென் இந்தியா பற்றி பார்ப்போம்.
http://economictimes.indiatimes.com/markets/commodities/Akshaya-Tritiya-to-revive-gold-sales/articleshow/5878861.cmsசென்ற வருட அக்ஷய திருடிய (ஆங்கிலத்தில் Tritiya என்று டைப் செய்தால் வந்த வார்த்தை இதுதான்....ம்ம்ம்ம்........ திருத்தவா? வேண்டாமா? ம்ம்ம்ம்ம்ம்......) நாளில் - அந்த பொன்னான நன்னாளில் - விற்பனையான 45 டன்கள் தங்கத்தை விட, இந்த வருடம் அதிகம் விற்பனை. இதற்கு காரணம் என்னனு கேட்டாக்க, புல்லரிச்சு போயிரும். World Gold Council (WGC) அறிக்கை படி, இந்த வருட திருத்திய (அய்யோ, அய்யோ..... இப்போ டைப் செய்தால், இப்படி வருதே...... எப்போதான் மக்களை திருத்துறதோ?) நாள், ஞாயிற்றுகிழமையில் வருவதால், வியாபாரம் அமோகம்.
SL Industries முதலாளி, விவேக் ஜெயின், இந்த வருட ஆர்டர், போன வருடத்தை விட 25% - 30% கூடி இருக்குது என்று தனது Gold Refinery யில் இருந்து தங்கத்தை உருக்கி கொண்டே சந்தோஷமாகசொல்லி இருந்தார்.
ஏப்ரல் வரையில் மட்டுமே, இந்தியாவில் இறக்குமதி ஆகி இருக்கும் தங்கம் அளவு - 126 டன்கள். அம்மாடியோவ்....... இந்தியா ஏழை நாடென்று சொன்னால்................... போங்க சார், தமாஷ் பண்ணாதீங்க.........
"In January to April this year, gold imports into India were at 126 tonnes, up 74% on year, provisional data from the Bombay Bullion Association shows. Demand has revived in India after a dismal performance in 2009 when the worst monsoon in 37 years lowered gold sales with the year recording 339.8 tonnes of gold imports, down 19% from 2008."
சென்ற வருடம் அக்ஷய திரிதிய நாளில் மட்டும் விற்கப்பட்ட 45 டன்கள் தங்கத்தில், 10 டன்கள் விற்கப்பட்டது கேரளாவில் தானாம். ஆமாம், கேரளாவில் தான் கம்யுனிசம், பாசி பருப்பு பாயாசம் எல்லாம் கொடி கட்டி பறக்கும் என்று எதிர் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. கம்யுனிசம் வாழ்க! கேரளாவில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் இடமாம். ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.....
இதுவரை, தங்கம் வாங்குவதில் முன்னணி இடத்துக்கு தமிழ் நாடும் ஆந்த்ராவும் தான் போட்டி போட்டு கொண்டு இருந்தன. இப்பொழுது கேரளா, நம்மை பின்னுக்கு தள்ளி கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ------ இந்த போட்டியில் தமிழ் நாடு ஜெயிக்கணும்....... நம்ம அரசிய தலைவர்களின் குடும்பங்கள் எல்லாம் என்ன செய்யுறாங்க? ஷ்ஷ்ஷ்ஷ்.......
அக்ஷய திரிதிய நாளை கடந்த ஆறு வருடங்களாகத்தான் கேரளா மாநிலத்தில் பெருவாரியாக அனுசரிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாம். முளைச்சு மூணு இலை விடல, அதற்குள் தமிழ் நாடு, ஆந்த்ராவை முந்துதே....... ஒரு ஓட்டோவில் போய், ரெண்டே பெனியனும் ஒரு வல்லிய ஒரேஞ்சும் வாங்கி வந்தால் மதி என்று இருந்தவர்கள், இப்போ அரை டன் தங்கம் வாங்கி வந்தால் மதி என்று மாறி விட்டார்களே! எண்டே குருவாயுரப்பா!
பொன்னு பதுங்குற இடங்களை பற்றி பார்த்தோம். இப்போ, பொன்னு ஒளியும் இடம் பற்றி பார்ப்போம்.
http://en.wikipedia.org/wiki/United_States_Bullion_Depository
அமெரிக்காவில் இருக்கும் கென்டக்கி மாநிலத்தில் இருக்கும் Fort Knox எனும் இடத்தில் தான் Gold Reserves உள்ள safe vault சுரங்கம் இருக்கிறது. Federal Reserve Bank of New York சுரங்க தங்க சேமிப்புக்கு அடுத்த அதிகமான தங்க சேமிப்பு கிடங்கு இங்குதான் உள்ளது. சுமார் 4600 டன் தங்கம் இங்கு உள்ளது. (நியூ யார்க் வங்கியில், சுமார் 5000 டன்)
underground
அமெரிக்கா கணக்கு காட்டுதாம். கணக்கு........ கணக்கில் வராத தங்கத்தை, இந்தியாவில் கணக்கு எடுத்தால், இந்த இடத்தை தென் இந்தியாவுக்குத்தான் உலக அளவில் தர வேண்டும் என்று, தம்பட்டம் தாயம்மா சொல்லி இருக்கிறாள்.
தங்கமான வாழ்த்து:
கடந்த வாரம் முழுவதும் - நேரிலும், போன் மூலமாகவும், இ-மெயில் வழியாகவும், தங்கள் பதிவுகளில் இடுகைகள் மூலமாகவும் (குறிப்பாக தேனம்மை அக்காவுக்கும் வேலன் சாருக்கும்) - வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
என் கணவரும் எங்கள் நண்பர்களும் surprise party ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள். ஐஸ்-கிரீம் அபிஷேகமும் முட்டை அபிஷேகமும் இனிது நடந்தது. பார்ட்டி கலகல கலாட்டா .......... வீட்டுக்கு திரும்பி வர, கார் சீட்டில் பலூன் நிரப்பி அபிஷேகப் பொருட்கள் காரை நாஸ்த்தி பண்ண விடாமல், பத்திரமாக என்னை அனுப்பி வைத்தார்கள். சூப்பர் பவனி........!!!!!! தேனம்மை அக்கா, எனக்கு "ஜாலி பலூன்" என்ற பட்டப் பெயர் வைத்தது சரிதானோ?
மேலும், ஒரு வாரம், நன்கு ஊர் சுற்றினோம். பொழுது போனதே தெரியவில்லை. பிறந்த நாள் (வாரம்) கொண்டாட்டத்தில் மூழ்கி விட்டதால் ப்லாக் பக்கம் வர முடியவில்லை. யாருக்கும், பின்னூட்டம் இடவில்லை. இனி தொடரும்.........
என்னை பொறுத்த வரையில், ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் சமயம், I celebrate life. I am alive to have a lively and lovely life. இறைவனுக்கு புகழ்! so , அடித்து தூள் கிளப்பிட்டோம்ல. ...........
Labels:
மண் வாசனை
Sunday, May 9, 2010
தெய்வ நம்பிக்கை
எனக்குள்ள தெய்வ நம்பிக்கை பற்றி எழுத வேண்டும் என்று, முகிலன் ஒரு தொடர் பதிவுக்கு, அழைத்து இருந்தார்.
முகிலன்: தெய்வ நம்பிக்கை உண்டா?
சித்ரா: கண்டிப்பாக. என் மேல ஏதாவது நம்பிக்கை இல்லாமாலா, நான் எத்தனை தடவை சொதப்புனாலும், மீண்டும் மீண்டும் , தெய்வம் எனக்கு சான்சு தருகிறார்?
முகிலன்: தெய்வத்துக்கு, உங்கள் மேல் நம்பிக்கை உண்டா என்று கேட்கவில்லை. உங்களுக்கு, தெய்வ நம்பிக்கை உண்டா என்று கேட்டேன்.
சித்ரா: ஓ. உண்டு.
முகிலன்: எப்பொழுது இருந்து என்று சொல்ல முடியுமா?
சித்ரா: சின்ன வயதில், கோவிலுக்கு போகலைனா - பொய் சொன்னா - சாமி, தண்டனை கொடுத்திடுமோ என்ற பயம் உண்டு.
முகிலன்: அப்புறம்?
சித்ரா: நான், Loyola Convent ல படிக்கும் போது, ஒரு retired சிஸ்டர் வந்து, Catechism டீச் பண்ணுவாங்க.
சிஸ்டர் ஸ்ரிலா (Cyrilla) தான், எனக்கு முதலாக "அன்பே கடவுள்" என்ற concept ல் கடவுளை பார்க்க வைத்தார். பரவாயில்லையே, இது கூட நல்லா இருக்கு என்று கேட்டு கொண்டு இருந்தேன்.
முகிலன்: அதை ஏற்று கொண்ட பின், கடவுள் மேல் இருந்த பயம் போய் விட்டதா?
சித்ரா: ஆமாம். St.Ignatius Convent போக ஆரம்பித்ததும், விளையாட்டு அதிகம் ஆகி விட்டது. நானும் நிமா என்ற தோழியும், religious வகுப்பு (catechism) நேரங்களில், லூட்டி நேரமாக மாற்றி கொள்ளும் அளவுக்கு போய் விட்டது.
முகிலன்: என்ன செய்வீர்கள்?
சித்ரா: உடைந்த பலூன் பீஸில் பபுள் செய்து, உள்ளங்கையில் கீச்ச் கீச்ச் என்று தேய்ப்பதில் இருந்து, பொட்டு வெடி வைக்கிற வரை சகலமும்.
முகிலன்: மாட்டிக்கலியா?
சித்ரா: தெய்வம், எங்கள் மேல் வைத்து இருந்த அன்பினால், சிரிச்சிட்டு போய்ட்டார் என்று நினைக்கிறேன். ஆனால், அந்த அளவுக்கு எங்கள் மேல் அன்பு வைக்காத டீச்சர்ஸ், எங்களுக்கு தண்டனை கொடுத்துக்கிட்டு இருப்பாங்க...... அவ்வ்வ்வ்......
முகிலன்: பாவம்.
சித்ரா: ஆமாங்க, எத்தனை முறை தான் பெஞ்ச் மேல - desk மேல ஏறி நின்னு மற்ற students தலைகள் மட்டும் பாத்துக்கிட்டு, யார் யார் நேர் உச்சி எடுத்து தலை சீவி இருக்கிறாங்க, யார் யார் கோண உச்சி எடுத்து தலை சீவி இருக்கிறாங்க - எடுத்த வகிடில், அப்போ அப்போ சிலருக்கு கிராஸ் ஆகிற பேனை வேடிக்கை பாத்துக்கிட்டு - யார் எண்ணெய் வச்சுக்கிட்டு வந்துருக்காங்க - யார் ஷாம்பூ போட்டு குளிச்சிக்கிட்டு வந்திருக்காங்க - டீச்சர் சொல்லி கொடுக்கிற மேட்டர் மத்தவங்களுக்கு தலைக்கு உள்ளே போகுதா, மேல போகுதா என்று "அழகு" பார்ப்பது?
முகிலன்: 'பாவம் டீச்சர்ஸ்' என்று சொன்னேன்.
சித்ரா: ஓ.
முகிலன்: அப்புறம் என்ன ஆச்சு?
சித்ரா: அப்புறம், 11th படிக்கும் போது, ரொமோலா (Romola) மிஸ் வந்தாங்க. அவங்க சொல்லி கொடுக்கும் போது, என்னையும் அறியாமல், வாலை சுருட்டி வைச்சிக்கிட்டு கேட்க தோணுச்சு.
முகிலன்: அவர்கள் சொல்லி கொடுத்ததில், இன்றும் நீங்கள் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்ன?
சித்ரா: 1. தெய்வம், மற்றும் தெய்வ நம்பிக்கை என்பது ஒரு பொருள் இல்லை. இந்தா இருக்கு, பாத்துக்க - புரிஞ்சிக்க என்று சொல்ல. அது ஒரு abstract feeling. அறிவுக்கு எட்ட வேண்டிய விஷயம் இல்லை. மனதுக்கு பிடித்து, உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டிய விஷயம்.
2. It is a matter of Personal relationship.
3. தெய்வ நம்பிக்கை என்பது பரிணாம வளர்ச்சிக்கு உரிய ஒரு நம்பிக்கை. Belief in God, evolves. If it does not, then your faith is dead. To keep your faith alive, you should keep it growing - wider and deeper.
4. Faith is not a destination; it is a journey.
5. தெய்வ நம்பிக்கை இல்லை என்று சொல்லும் பலர், மத கோட்பாடுகள் - வழக்கங்கள் - மத தலைவர்கள், போதகர்கள் பிடிக்காமல் தான் விலகி போய் விடுகிறார்கள்.
Concept of God is one thing. Concept of Religion is another thing.
மத நம்பிக்கையையும் தெய்வ நம்பிக்கையையும் வேறு படுத்தி பார்க்க எனக்கு கற்று தந்தார்.
இதற்கு மத்தியில், ஒரு குழப்பமும் இல்லாமல், தனியாக இயேசு கிறிஸ்து மேல் தீவிர பற்றுதல் வந்ததும் இந்த கால கட்டம்தான்.
முகிலன்: சரி. அப்புறம், நீங்கள் நிமாவை சந்திக்கவே இல்லையா?
சித்ரா: சந்திச்சேன்.
முகிலன்: எப்பொழுது?
சித்ரா: என் திருமண நாள் அன்று, மாப்பிள்ளை வீட்டார், மணப்பெண் என்னை அழைத்து கொண்டு கோவிலுக்கு காரில், மெல்ல ஊர்வலமா அழைத்து சென்று கொண்டு இருந்தபோது, என் மனதில் பல தயக்கங்களும் "பயங்களும்" டென்ஷனும். அப்போ, திடீர் என்று, "சித்ரா" என்ற பரிச்சயமான குரல் கேட்டு திரும்பி பார்த்தால், நிமா - சிரித்தபடி காருக்கு அருகில் வந்து என் கையை பிடித்து கொண்டாள்.
சாலமன் உறவினர் ஒருவர் தான் அவள் கணவர். மாப்பிள்ளை வீட்டார் உறவாக அவளும் இருக்கிறாள்.
நாங்க ரெண்டு பேரும் ஒரே குடும்பத்தில் வந்து சேர வைத்த தெய்வம் - அவர், எவ்வளவு நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்று காட்டியது.
முகிலன்: ஹா, ஹா,ஹா,ஹா,ஹா,........God bless those families. ஹா,ஹா,ஹா,.....
சரி, உங்களுக்கு பிடித்த பைபிள் வசனம் ஏதாவது?
சித்ரா: எனக்கு பைபிள் வசனங்களில் மிகவும் பிடித்து, எனது தினசரி வாழ்க்கையின் ஆதாரமாகவும் வைத்திருக்கும் வசனம், இதுதான்:
"கவலைப் படுவதனால், யார் தன் வாழ்நாளில் ஒரு மணி நேரத்தைக் கூட்டி கொள்ள முடியும்" என்று மத்தேயு 6:27 சொல்வதும் பிடிக்கும். நான் நினைத்தது நடக்கவில்லை என்றாலும், சாதாரணமாக எடுத்து கொண்டு போக முடிகிறது.
முகிலன்: "தெய்வம் இல்லை" என்று கூறுபவர்களிடம் தர்க்கம் செய்தது உண்டா?
சித்ரா: ஒரு முறை மட்டும்.
முகிலன்: என்ன ஆச்சு?
சித்ரா: எங்கள் நண்பர், ஸ்ரீ அதிகம் படித்தவர். கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பி பேசுபவர். ஒரு நாள், ஸ்ரீ, நான், அனில் மூவரும் பேசி கொண்டு இருந்தபோது, பேச்சு கடவுள் பற்றி திரும்பியது.
ஸ்ரீ, "கடவுள் - தெய்வ நம்பிக்கை - எல்லாம் முட்டாள்களின் கண்டுபிடிப்பு. அறிவு பூர்வமான செயல் இல்லை. There is no scientific proof. 'கடவுள் இல்லை' என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், intellectual மக்களுக்கு மட்டும் வருகிறது" என்ற ரீதியில் பேசி கொண்டு போனார்.
எனக்கு, அப்பொழுது, இந்த மாதிரி யாராவது பேசினால், "அது அவர் கருத்து. அமைதியாக கேட்டு கொள்ள வேண்டும். அதை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. அதே மாதிரி, நான் பேசி போதித்தால், அவர் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை," என்று பொறுமையாக கேட்க முடியாத குணம் இருந்தது. அவர் என்னை முட்டாள் என்று சொல்லியது போல ஒரே பீலிங்க்ஸ். உடனே, ' எடுறா அருவாள' ரேஞ்சுக்கு, பலத்த வாக்குவாதம்.
பிறக்கிற மனிதன் ஒவ்வொருவனும் இறக்க வேண்டும். இறந்த பின் என்ன நடக்கும் என்று, இறந்த யாரும் என்னிடம் வந்து சொல்லவில்லை. நான் இறந்த பின், ஒரு வேளை, கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருந்து, அவரை நான் நேரில் பார்த்து டீல் பண்ண வேண்டி வந்தால், என்ன செய்வது?
உயிரோட இருக்கும் போது, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று நான் முடிவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், life goes on.
கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு, நான் இறந்த பின், அவர் இல்லை என்று தெரிய வந்தால், எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. I would have been dead and gone by then. ஆனால், இல்லை என்று சொல்லி விட்டு, இருக்கிறார் என்று தெரிய வந்தால்.......??? Almighty கூட எந்த வழக்கு செல்லும்? எதற்கு வம்பு?
எனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் இருக்கு. இன்னைக்கு தூங்கப் போனா நாளைக்கு காலையில், நல்ல சுகத்தோட எந்திரிச்சு வேலைக்கு போவேன் என்று கூட நம்புறேன். அப்படி, நம்பிக்கையோட நம்பிக்கையா இதுவும் ஒண்ணு இருந்துட்டு போகட்டுமே, " என்று அனில் சொல்லி முடித்தார்.
அதுவரை, scientific research என்ற ரிவால்வருடன் ஸ்ரீயும், psychological search என்ற ரிவால்வருடன் நானும் போட்டுக் கொண்டு இருந்த கவ்பாய் சண்டைக்கு மத்தியில், அனில் ஒரு practical bomb தூக்கிப் போட்டதும் சிரித்து விட்டு, அமைதி ஆனோம்.
அடுத்த கட்டமாக, என் வாழ்க்கை சிறக்க மட்டுமே - என் சுயநலத்துக்காகவே தெய்வ நம்பிக்கையை பிடித்து கொண்டு இருக்க கூடாது என்பது எனக்கு புரிந்தது. கிறிஸ்துவின் "மலை பிரசங்கம்" வாயிலாக, மனித நேயம் என்ற இன்னொரு dimensionல் என் நம்பிக்கை திரும்பியது. இது இன்றைய நிலவரம். இன்னும் வளரும். வளர வேண்டும். உணர வேண்டும்.
இது எனது நம்பிக்கையின் தேடல், ஆழம், புரிதல் மட்டுமே.
முகிலன்: நன்றி, சித்ரா.
சித்ரா: நன்றி, முகிலன். அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? சரி, சரி, வாசிப்பாங்க என்று ஒரு நம்பிக்கைதான். ஹி,ஹி,ஹி......
Here we go:

"This is the day the LORD has made;
let us rejoice and be glad in it." Psalm 118:24

"இது கர்த்தர் உண்டு பண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக் கடவோம்." சங்கீதம் 118:24
"கவலைப் படுவதனால், யார் தன் வாழ்நாளில் ஒரு மணி நேரத்தைக் கூட்டி கொள்ள முடியும்" என்று மத்தேயு 6:27 சொல்வதும் பிடிக்கும். நான் நினைத்தது நடக்கவில்லை என்றாலும், சாதாரணமாக எடுத்து கொண்டு போக முடிகிறது.
சித்ரா: ஒரு முறை மட்டும்.
முகிலன்: என்ன ஆச்சு?
சித்ரா: எங்கள் நண்பர், ஸ்ரீ அதிகம் படித்தவர். கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பி பேசுபவர். ஒரு நாள், ஸ்ரீ, நான், அனில் மூவரும் பேசி கொண்டு இருந்தபோது, பேச்சு கடவுள் பற்றி திரும்பியது.
ஸ்ரீ, "கடவுள் - தெய்வ நம்பிக்கை - எல்லாம் முட்டாள்களின் கண்டுபிடிப்பு. அறிவு பூர்வமான செயல் இல்லை. There is no scientific proof. 'கடவுள் இல்லை' என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், intellectual மக்களுக்கு மட்டும் வருகிறது" என்ற ரீதியில் பேசி கொண்டு போனார்.
எனக்கு, அப்பொழுது, இந்த மாதிரி யாராவது பேசினால், "அது அவர் கருத்து. அமைதியாக கேட்டு கொள்ள வேண்டும். அதை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. அதே மாதிரி, நான் பேசி போதித்தால், அவர் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை," என்று பொறுமையாக கேட்க முடியாத குணம் இருந்தது. அவர் என்னை முட்டாள் என்று சொல்லியது போல ஒரே பீலிங்க்ஸ். உடனே, ' எடுறா அருவாள' ரேஞ்சுக்கு, பலத்த வாக்குவாதம்.
சிறிது நேரம் கழித்துதான், நண்பர் அனில் அமைதியாக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரையும் ஒரு சப்போர்ட்க்காக இருவரும் அழைத்தோம்.
அனில்: " எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று அறிவுப்பூர்வமாக விளக்கத் தெரியாது. இன்னைக்கு நான் நல்லா இருக்க, கடவுள் பங்கு எவ்வளவு தூரம் இருக்குது என்றும் தெரியாது. ஒண்ணு மட்டும் தெரியும்.பிறக்கிற மனிதன் ஒவ்வொருவனும் இறக்க வேண்டும். இறந்த பின் என்ன நடக்கும் என்று, இறந்த யாரும் என்னிடம் வந்து சொல்லவில்லை. நான் இறந்த பின், ஒரு வேளை, கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருந்து, அவரை நான் நேரில் பார்த்து டீல் பண்ண வேண்டி வந்தால், என்ன செய்வது?
உயிரோட இருக்கும் போது, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று நான் முடிவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், life goes on.
கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு, நான் இறந்த பின், அவர் இல்லை என்று தெரிய வந்தால், எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. I would have been dead and gone by then. ஆனால், இல்லை என்று சொல்லி விட்டு, இருக்கிறார் என்று தெரிய வந்தால்.......??? Almighty கூட எந்த வழக்கு செல்லும்? எதற்கு வம்பு?
எனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் இருக்கு. இன்னைக்கு தூங்கப் போனா நாளைக்கு காலையில், நல்ல சுகத்தோட எந்திரிச்சு வேலைக்கு போவேன் என்று கூட நம்புறேன். அப்படி, நம்பிக்கையோட நம்பிக்கையா இதுவும் ஒண்ணு இருந்துட்டு போகட்டுமே, " என்று அனில் சொல்லி முடித்தார்.
அதுவரை, scientific research என்ற ரிவால்வருடன் ஸ்ரீயும், psychological search என்ற ரிவால்வருடன் நானும் போட்டுக் கொண்டு இருந்த கவ்பாய் சண்டைக்கு மத்தியில், அனில் ஒரு practical bomb தூக்கிப் போட்டதும் சிரித்து விட்டு, அமைதி ஆனோம்.
அடுத்த கட்டமாக, என் வாழ்க்கை சிறக்க மட்டுமே - என் சுயநலத்துக்காகவே தெய்வ நம்பிக்கையை பிடித்து கொண்டு இருக்க கூடாது என்பது எனக்கு புரிந்தது. கிறிஸ்துவின் "மலை பிரசங்கம்" வாயிலாக, மனித நேயம் என்ற இன்னொரு dimensionல் என் நம்பிக்கை திரும்பியது. இது இன்றைய நிலவரம். இன்னும் வளரும். வளர வேண்டும். உணர வேண்டும்.
இது எனது நம்பிக்கையின் தேடல், ஆழம், புரிதல் மட்டுமே.
முகிலன்: நன்றி, சித்ரா.
சித்ரா: நன்றி, முகிலன். அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? சரி, சரி, வாசிப்பாங்க என்று ஒரு நம்பிக்கைதான். ஹி,ஹி,ஹி......
Labels:
தெய்வ நம்பிக்கை
Tuesday, May 4, 2010
உலக பார்வையில், முத்திரை பதிக்கும் இந்தியர்கள்
வணக்கம்: செய்திகள் வாசிப்பது: தம்பட்டம் தாயம்மா -
டண்டனக்க டங்கு டங்கு டையிங் ..........
"May 10 - 2010 - TIME Magazine - The 100 most influential people in the world: அறிவித்துள்ளது.டைம் பத்திரிகையில் வெளியிடப் பட்டிருக்கும் நூறு பெயர்களில், இந்தியர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கதே.
இவர்களை அடையாளம் கண்டு கொண்டு, உலக அரங்கில் கௌரவப் படுத்திய டைம் பத்திரிக்கைக்கு நன்றிகள் பல தெரிவிக்கப்படுகின்றன. இவர்களின் பெயர்கள் விவரமும் இவர்களை பரிந்துரைத்தவர்களும் விவரமும் இதோ:
1. மன்மோகன் சிங்:
இவரை இந்த பட்டியலில் சேர்க்க பெயர் கொடுத்தவர்: இந்த்ரா நூயி (chairwoman and CEO of PepsiCo)
2. சேட்டன் பகத்: (Chetan Bhagat)
இவர் பெயரை சேர்க்க முன் மொழிந்தவர்: A.R. ரெஹ்மான்
இவரது நாவல் கதைகளான One night @the Call Center ; and Five point Someone ( 3 Idiots ஹிந்தி திரைப்படம், இந்த கதையின் தழுவல்)
3. Dr. Atul Gawande
பரிந்துரைத்தவர்: Tom Daschle
இவர் எழுதிய, "Checklist Manifesto" என்ற நூல் மிகவும் பிரபலமானது. ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் விரிவுரையாளரகவும் (Professor) இருக்கும் இந்த மருத்துவரின் ஆராய்ச்சிகள், அறுவை சிகிச்சை பிரிவில் பெரிய வெற்றிகளை கண்டுள்ளன. இவர், கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது அவரது ஆலோசனை குழுவில் இருந்தவர்.
4. Amartya Sen:
(The Philosopher of human development)
பரிந்துரைத்தவர்: Niall Ferguson
திரு. சென், Nobel Prize வாங்கியவர்:
He is a Professor at Harvard University. மேற்கு வங்காளத்தில் பிறந்தவர். வயது 76. "Poverty and Famines" என்ற புத்தகத்தில், தான் 1943 வருடத்தில் மேற்கு வங்காளத்தில் பஞ்ச காலத்தில் பட்ட கஷ்டங்களையும், மற்ற ஏழைகள் சந்தித்த சோதனைகளை பற்றியும் எழுதி உள்ளார். மனித வளம் அளவிடப்பட, இவரின் கருத்தையே மூலதனமாக U.N. and World Bank பயன் படுத்துகின்றன. (His idea of measuring human development)
5. Sanjit 'Bunker' Roy:
பரிந்துரைத்தவர்: Greg Mortenson
இவரது "Barefoot College", மூன்று மில்லியன் ஏழை மாணவர்களுக்கு மேலாக தயார் படுத்தி, Solar Engineers, architects, ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தொழில்களுக்கு உருவாக்கி தந்துள்ளது.
6. P. நம்பெருமாள்சாமி:
அரவிந்த் கண் மருத்துவமனை, chairman
பரிந்துரைத்தவர்: Brian Mullaney.
http://www.indiapost.com/health-science/7477-Indian-eye-care-provider-wins-15m-Hilton-Humanitarian-Prize.html
7. Sachin Tendulkar
பரிந்துரைத்தவர்: தீபக் சோப்ரா
ஜெய் ஹோ!
8. Dr. Kiran Mazumdar-Shaw
1 பில்லியன் டாலர் மதிப்புள்ள Biocon International நிறுவனர்.
பரிந்துரைத்தவர்: Lance Armstrong
Photo taken during the launch of cancer-fighting drug:
ஒவ்வொரு வருடமும், இந்திய கிராமங்களில் வாழும் ஒரு லட்சம் மனிதர்களுக்கு , மருத்துவ insurance க்காக இரண்டு மில்லியன் டாலர் நன்கொடை வழங்குகிறார். பெங்களூரில் பத்து மில்லியன் டாலர் பொருட் செலவில் ஒரு புற்று நோய் மருத்துவமனை நிறுவ உள்ளார். அங்கு, ஏழை புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்யும் எண்ணமும் உண்டு.
இவர்கள் அனைவருக்கும், தம்பட்டம் தாயம்மாவின் பாராட்டுக்கள்! இந்தியர்கள் பலரும் , அடுத்து வரும் வருடங்களில் இடம் பெற வாழ்த்துக்கள்!
இதே நேரத்தில், இதிலும் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் வராமல் இல்லை. உலக செம்மொழிகளில் ஒன்றான தமிழில், தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான "தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது. பலத்த விசாரணைக்குப் பின், வருத்தத்துடன் காரணம் தெரிவித்து உள்ளது. தமிழ்மணம் பரிந்துரைகளை டைம் பத்திரிகை கணக்கில் சேர்த்து கொள்ள மறந்து விட்டார்களாம். வடை போச்சே! இதற்கு கண்டனம் தெரிவித்து, இந்த செய்திகளை நிறைவு செய்வது: "என்றும் உங்கள் பிரிய தம்பட்டம் தாயம்மா"
விரைவில், மீண்டும் சந்திக்கும் வரை: வணக்கம்!
டண்டனக்க டங்கு டங்கு டையிங் ..........
Labels:
மண் வாசனை
Monday, May 3, 2010
தப்பு கணக்கு:
பலருக்கு தெரிந்த செய்தியாக இருக்கலாம். ஆனால், கருத்துக்காக இங்கே:
இயற்கைக்கு முரணாக சென்றால் என்ன ஆகும்?
மனுஷன் கையை வைச்சா...... அது ராங்கா போய் விடும்.
http://www.mentalfloss.com/blogs/archives/20692
வாசித்து பாருங்கள்!
சில zoo authorities, animals in captivity வைத்து ....................... என்ன கொடுமை, இது? அந்த zoo சுவரில் முட்டிக்க வேண்டியதுதான்.
கணக்கே தப்பாக:
A + A = A
B + B = B
if,
A = male lion and B = Tigress (ஆண் சிங்கமும் பெண் புலியும்)
A + B = Liger
A = female lion and B = male tiger (பெண் சிங்கமும் ஆண் புலியும்)
A + B = Tiglon
லிகர்: Liger:
மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Liger
டிக்லான் : Tiglon:
மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Tiglon
These are real photos (from Google Images) போட்டோ ஷாப் உதவி இல்லாமலே, இப்படி சும்மா விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இயற்கைக்கு மாறாக செல்லும் போது, விபரீதங்கள் தான். அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்பி என்ன பலன்?
Save the Planet - Save it wisely - Save it in the nature's way. இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள். Artificial harmones, Artificial creatures.............Where is the boundary line? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... முடியல..... கடவுள் படைப்புக்கு எதிராகவும் இருக்குது. பரிணாம வளர்ச்சிக்கு எதிராகவும் இருக்குது! மூன்றாவது க்ரூப்பா, இப்படி கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்க.....
பி.கு.:
மற்ற பதிவர்கள் சொல்லும் போது அப்புறம் இப்புறம் என்று தள்ளி போட்டுக் கொண்டு இருந்த போது, நேத்து என் கனவில் சிங்கம்புலியும் புலிசிங்கமும் வந்து புலம்பியதால் ............ இருங்க, இருங்க...... சிங்க்லியும் புல்ங்கமும் வந்து புலம்பியதால், உடனே எழுதிட்டோம்ல.........
Labels:
entertainment media
Subscribe to:
Posts (Atom)