Sunday, May 9, 2010

தெய்வ நம்பிக்கை

எனக்குள்ள தெய்வ நம்பிக்கை பற்றி எழுத வேண்டும் என்று,  முகிலன் ஒரு தொடர் பதிவுக்கு,  அழைத்து இருந்தார்.
Here we go: 

முகிலன்:   தெய்வ நம்பிக்கை உண்டா?
சித்ரா:      கண்டிப்பாக. என் மேல ஏதாவது நம்பிக்கை இல்லாமாலா, நான் எத்தனை தடவை சொதப்புனாலும், மீண்டும் மீண்டும் , தெய்வம் எனக்கு சான்சு தருகிறார்?
முகிலன்:   தெய்வத்துக்கு, உங்கள் மேல்  நம்பிக்கை உண்டா என்று கேட்கவில்லை.  உங்களுக்கு, தெய்வ நம்பிக்கை உண்டா  என்று கேட்டேன். 
சித்ரா:       ஓ. உண்டு.

முகிலன்:   எப்பொழுது இருந்து என்று சொல்ல முடியுமா?
சித்ரா:     சின்ன வயதில்,  கோவிலுக்கு போகலைனா - பொய் சொன்னா -  சாமி,  தண்டனை கொடுத்திடுமோ  என்ற பயம் உண்டு. 

முகிலன்:   அப்புறம்?
சித்ரா:     நான்,  Loyola Convent ல படிக்கும் போது, ஒரு retired சிஸ்டர் வந்து, Catechism டீச் பண்ணுவாங்க.
சிஸ்டர் ஸ்ரிலா  (Cyrilla)  தான், எனக்கு முதலாக  "அன்பே கடவுள்" என்ற concept ல் கடவுளை பார்க்க வைத்தார்.  பரவாயில்லையே, இது கூட நல்லா இருக்கு என்று கேட்டு கொண்டு  இருந்தேன்.

முகிலன்:   அதை ஏற்று கொண்ட பின்,  கடவுள் மேல் இருந்த பயம் போய் விட்டதா?
சித்ரா:   ஆமாம்.    St.Ignatius Convent போக ஆரம்பித்ததும்,  விளையாட்டு அதிகம் ஆகி விட்டது.  நானும் நிமா என்ற தோழியும், religious வகுப்பு (catechism) நேரங்களில்,  லூட்டி நேரமாக மாற்றி கொள்ளும் அளவுக்கு போய் விட்டது.
முகிலன்: என்ன செய்வீர்கள்?
சித்ரா:  உடைந்த பலூன் பீஸில் பபுள் செய்து, உள்ளங்கையில் கீச்ச் கீச்ச் என்று தேய்ப்பதில் இருந்து,   பொட்டு வெடி வைக்கிற   வரை சகலமும்.

முகிலன்:   மாட்டிக்கலியா?
சித்ரா:   தெய்வம்,  எங்கள் மேல் வைத்து இருந்த அன்பினால்,  சிரிச்சிட்டு போய்ட்டார் என்று நினைக்கிறேன். ஆனால், அந்த அளவுக்கு எங்கள் மேல் அன்பு வைக்காத டீச்சர்ஸ்,  எங்களுக்கு தண்டனை கொடுத்துக்கிட்டு இருப்பாங்க......  அவ்வ்வ்வ்......
முகிலன்:     பாவம்.
சித்ரா:   ஆமாங்க,  எத்தனை முறை தான் பெஞ்ச் மேல - desk மேல ஏறி நின்னு மற்ற students தலைகள்  மட்டும் பாத்துக்கிட்டு,  யார் யார் நேர் உச்சி எடுத்து தலை சீவி இருக்கிறாங்க, யார் யார் கோண உச்சி எடுத்து தலை சீவி இருக்கிறாங்க -   எடுத்த வகிடில்,  அப்போ அப்போ சிலருக்கு கிராஸ் ஆகிற பேனை வேடிக்கை பாத்துக்கிட்டு - யார் எண்ணெய் வச்சுக்கிட்டு வந்துருக்காங்க - யார் ஷாம்பூ போட்டு குளிச்சிக்கிட்டு வந்திருக்காங்க -   டீச்சர் சொல்லி கொடுக்கிற மேட்டர் மத்தவங்களுக்கு தலைக்கு உள்ளே போகுதா,  மேல போகுதா என்று "அழகு" பார்ப்பது?
முகிலன்:   'பாவம் டீச்சர்ஸ்'  என்று சொன்னேன்.
சித்ரா:  ஓ.

முகிலன்:  அப்புறம் என்ன ஆச்சு?
சித்ரா:    அப்புறம், 11th படிக்கும் போது,  ரொமோலா (Romola)  மிஸ் வந்தாங்க. அவங்க சொல்லி கொடுக்கும் போது, என்னையும் அறியாமல்,  வாலை சுருட்டி வைச்சிக்கிட்டு கேட்க தோணுச்சு.

முகிலன்:  அவர்கள் சொல்லி கொடுத்ததில், இன்றும் நீங்கள் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்ன?
சித்ரா:     1.   தெய்வம், மற்றும் தெய்வ நம்பிக்கை என்பது ஒரு பொருள் இல்லை. இந்தா இருக்கு, பாத்துக்க - புரிஞ்சிக்க என்று சொல்ல.  அது ஒரு abstract feeling. அறிவுக்கு எட்ட வேண்டிய விஷயம் இல்லை. மனதுக்கு பிடித்து, உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டிய விஷயம்.
                2.     It is a matter of   Personal relationship.
                 3.   தெய்வ நம்பிக்கை என்பது  பரிணாம வளர்ச்சிக்கு உரிய ஒரு நம்பிக்கை.  Belief in God, evolves. If it does not, then your faith is dead.  To keep your faith alive,  you  should keep it  growing - wider and deeper.
                 4.     Faith is not a destination; it is a journey.
                 5.   தெய்வ நம்பிக்கை இல்லை என்று சொல்லும் பலர்,   மத கோட்பாடுகள் - வழக்கங்கள் - மத தலைவர்கள், போதகர்கள்  பிடிக்காமல் தான் விலகி போய் விடுகிறார்கள்.   

Concept of God is one thing. Concept of Religion is another  thing. 
மத நம்பிக்கையையும்  தெய்வ நம்பிக்கையையும்  வேறு படுத்தி பார்க்க எனக்கு கற்று தந்தார்.   

இதற்கு மத்தியில்,  ஒரு குழப்பமும் இல்லாமல்,  தனியாக இயேசு கிறிஸ்து மேல் தீவிர பற்றுதல் வந்ததும் இந்த கால கட்டம்தான். 


முகிலன்:   சரி. அப்புறம், நீங்கள் நிமாவை சந்திக்கவே இல்லையா?  
சித்ரா:   சந்திச்சேன்.  

முகிலன்:    எப்பொழுது?
சித்ரா:  என் திருமண நாள் அன்று, மாப்பிள்ளை வீட்டார், மணப்பெண் என்னை அழைத்து கொண்டு கோவிலுக்கு காரில்,  மெல்ல ஊர்வலமா அழைத்து  சென்று கொண்டு இருந்தபோது, என் மனதில் பல தயக்கங்களும் "பயங்களும்" டென்ஷனும்.  அப்போ, திடீர் என்று, "சித்ரா" என்ற பரிச்சயமான குரல் கேட்டு திரும்பி பார்த்தால், நிமா - சிரித்தபடி காருக்கு அருகில்  வந்து என் கையை பிடித்து கொண்டாள்.  
சாலமன் உறவினர் ஒருவர் தான் அவள் கணவர். மாப்பிள்ளை வீட்டார் உறவாக அவளும் இருக்கிறாள். 
நாங்க ரெண்டு பேரும் ஒரே குடும்பத்தில் வந்து சேர  வைத்த தெய்வம் - அவர்,  எவ்வளவு நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்று காட்டியது. 
முகிலன்:  ஹா, ஹா,ஹா,ஹா,ஹா,........God bless those families.  ஹா,ஹா,ஹா,.....


சரி, உங்களுக்கு பிடித்த பைபிள்  வசனம் ஏதாவது?
சித்ரா:    எனக்கு பைபிள் வசனங்களில் மிகவும் பிடித்து, எனது தினசரி வாழ்க்கையின் ஆதாரமாகவும் வைத்திருக்கும் வசனம்,  இதுதான்:

 "This is the day the LORD has made;
       let us rejoice and be glad in it."   Psalm 118:24
"இது கர்த்தர் உண்டு பண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக் கடவோம்."  சங்கீதம் 118:24

    "கவலைப் படுவதனால், யார் தன் வாழ்நாளில் ஒரு மணி நேரத்தைக் கூட்டி கொள்ள முடியும்" என்று மத்தேயு 6:27 சொல்வதும் பிடிக்கும்.  நான் நினைத்தது நடக்கவில்லை என்றாலும், சாதாரணமாக எடுத்து கொண்டு போக முடிகிறது. 

முகிலன்:  "தெய்வம் இல்லை" என்று கூறுபவர்களிடம் தர்க்கம் செய்தது  உண்டா?
சித்ரா:  ஒரு முறை மட்டும்.

முகிலன்:  என்ன ஆச்சு?
சித்ரா:  எங்கள் நண்பர், ஸ்ரீ அதிகம் படித்தவர்.  கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பி பேசுபவர். ஒரு நாள், ஸ்ரீ, நான், அனில் மூவரும் பேசி கொண்டு இருந்தபோது, பேச்சு கடவுள் பற்றி திரும்பியது.

ஸ்ரீ,  "கடவுள் - தெய்வ நம்பிக்கை - எல்லாம் முட்டாள்களின் கண்டுபிடிப்பு. அறிவு பூர்வமான செயல் இல்லை.  There is no scientific proof.   'கடவுள் இல்லை' என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்,  intellectual மக்களுக்கு மட்டும் வருகிறது"  என்ற ரீதியில் பேசி கொண்டு போனார்.

எனக்கு, அப்பொழுது, இந்த மாதிரி யாராவது பேசினால், "அது அவர் கருத்து. அமைதியாக கேட்டு கொள்ள வேண்டும். அதை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.  அதே மாதிரி, நான் பேசி போதித்தால், அவர் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை," என்று பொறுமையாக கேட்க முடியாத குணம் இருந்தது.  அவர் என்னை முட்டாள் என்று சொல்லியது போல ஒரே பீலிங்க்ஸ்.    உடனே, ' எடுறா அருவாள'  ரேஞ்சுக்கு,   பலத்த வாக்குவாதம்.

சிறிது நேரம் கழித்துதான், நண்பர் அனில் அமைதியாக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரையும் ஒரு சப்போர்ட்க்காக இருவரும் அழைத்தோம்.
 அனில்:    " எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று அறிவுப்பூர்வமாக விளக்கத் தெரியாது.  இன்னைக்கு நான் நல்லா இருக்க, கடவுள் பங்கு எவ்வளவு தூரம் இருக்குது என்றும் தெரியாது. ஒண்ணு மட்டும் தெரியும்.

 பிறக்கிற மனிதன் ஒவ்வொருவனும் இறக்க வேண்டும்.  இறந்த பின் என்ன நடக்கும் என்று, இறந்த யாரும் என்னிடம் வந்து சொல்லவில்லை. நான் இறந்த பின், ஒரு வேளை, கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருந்து, அவரை நான் நேரில் பார்த்து டீல் பண்ண வேண்டி வந்தால், என்ன செய்வது?

உயிரோட இருக்கும் போது, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று நான் முடிவு எடுத்துக்  கொள்ளாவிட்டாலும்,  life goes on.

கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு, நான் இறந்த பின், அவர் இல்லை என்று தெரிய வந்தால், எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. I would have been  dead and gone by then. ஆனால், இல்லை என்று சொல்லி விட்டு, இருக்கிறார் என்று தெரிய வந்தால்.......??? Almighty கூட எந்த வழக்கு செல்லும்? எதற்கு வம்பு?

எனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் இருக்கு.  இன்னைக்கு தூங்கப் போனா நாளைக்கு காலையில்,  நல்ல சுகத்தோட எந்திரிச்சு வேலைக்கு  போவேன் என்று கூட நம்புறேன். அப்படி, நம்பிக்கையோட நம்பிக்கையா இதுவும் ஒண்ணு இருந்துட்டு போகட்டுமே, "  என்று அனில் சொல்லி முடித்தார்.

அதுவரை, scientific research என்ற ரிவால்வருடன்   ஸ்ரீயும், psychological search என்ற  ரிவால்வருடன்   நானும் போட்டுக் கொண்டு இருந்த கவ்பாய் சண்டைக்கு மத்தியில், அனில் ஒரு practical bomb தூக்கிப் போட்டதும் சிரித்து விட்டு, அமைதி ஆனோம்.

அடுத்த கட்டமாக, என் வாழ்க்கை   சிறக்க மட்டுமே -  என் சுயநலத்துக்காகவே தெய்வ நம்பிக்கையை பிடித்து கொண்டு இருக்க கூடாது என்பது எனக்கு புரிந்தது.     கிறிஸ்துவின் "மலை பிரசங்கம்"  வாயிலாக, மனித நேயம்  என்ற இன்னொரு dimensionல்  என் நம்பிக்கை திரும்பியது. இது இன்றைய நிலவரம். இன்னும் வளரும். வளர வேண்டும்.  உணர வேண்டும்.

இது எனது நம்பிக்கையின் தேடல், ஆழம், புரிதல் மட்டுமே.

முகிலன்:   நன்றி, சித்ரா.
சித்ரா:      நன்றி, முகிலன்.  அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா?  சரி,  சரி, வாசிப்பாங்க  என்று ஒரு நம்பிக்கைதான்.  ஹி,ஹி,ஹி......

108 comments:

Dr.Rudhran said...

very well written. happy to read this blog.

Unknown said...

யாரு வாசிச்சாங்களோ இல்லையோ நான் வாசிச்சிட்டேன்..

//அடுத்த கட்டமாக, என் வாழ்க்கை சிறக்க மட்டுமே - என் சுயநலத்துக்காகவே தெய்வ நம்பிக்கையை பிடித்து கொண்டு இருக்க கூடாது என்பது எனக்கு புரிந்தது. கிறிஸ்துவின் "மலை பிரசங்கம்" வாயிலாக, மனித நேயம் என்ற இன்னொரு dimensionல் என் நம்பிக்கை திரும்பியது. //

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை சித்ராக்கா..

பிரபாகர் said...

நானும்தான் வாசிச்சேன் தினேஷ்...

சொன்ன விதம் அருமை சகோதரி!

பிரபாகர்...

Unknown said...

நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்

நன்றி: சுவாமி ஓம்கார்

S Maharajan said...

//சித்ரா: நன்றி, முகிலன். அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? சரி, சரி, வாசிப்பாங்க என்று ஒரு நம்பிக்கைதான். ஹி,ஹி,ஹி......//

நானும் வாசித்துவிட்டேன் அக்கா.

ISR Selvakumar said...

தங்கை சித்ரா,
இதுவரை நீ எழுதியதிலேயே இதுதான் சிறந்த பதிவு! மிகக் கடினமான சமாச்சாரத்தை மிக எளிமையாக வார்த்தைகளில் வெளிக்கொண்டு வந்திருக்கிறாய்.

சைவகொத்துப்பரோட்டா said...

அட!! இந்த பேட்டி நல்லா இருக்கே!!

Asiya Omar said...

அருமையான கலந்துரையாடல்.சித்ரா பாராட்டுக்கள்.உங்களால் இவ்வளவு அழகாக விளக்கம் கொடுக்க முடிந்ததே அதற்கே கடவுளிற்கு நன்றி செலுத்த வேண்டும்.

Ms.Chitchat said...

Very interesting post. Very truly written.

சங்கர் said...

ஒரு வழியா ஒரு தொடர் பதிவு முழுசா எழுதிட்டீங்க போலருக்கு :))

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் சித்ரா மேட‌ம்... அருமையான‌ சிந்த‌னை..அருமையான‌ எழுத்துந‌டை.

Unknown said...

Hm.. Nadula oru commercial break vitrukalaammo.. :-)

பத்மா said...

அருமையா எழுதிருக்கீங்க சித்ரா .எத்தன பெரிய விஷயம்!! ஈசியா சொல்லிட்டு போய்டீங்க!
very good

T.V.ராதாகிருஷ்ணன் said...

நான் வாசிச்சிட்டேன்..
அருமை Chitra

goma said...

நகைச்சுவையும் யதார்த்தமும் குறும்பும் கலந்த ,ஒரு மதகுரு ,பேசியது போல் இருந்தது.

Anonymous said...

Hmm interesting..

பத்மநாபன் said...

முழுமையாக வாசிக்க வைத்தது ..அது தான் இறையுணர்வு ..உருவகங்கள் மாறலாம் உணர்வு ஒன்று தானே .

கண்ணகி said...

உங்கள் நம்பிக்கை வாழ்க..

தேவன் மாயம் said...

அட! ஓரளவு முழுவதும் படித்துவிட்டேன்!!!!!!!!

mightymaverick said...

நானும் முழுசா படிச்சுட்டேன்... அத்தோட நான் எங்கோ படிச்ச ஒரு சிறு கருத்தையும் பகிர்ந்துக்கிறேன்... "கடவுள் என்பவர் கண்ணாடி போல... அவர் நமக்கு முன்னால் தான் இருக்கிறார்... ஆனால் அவரை பார்க்கக்கூடிய அளவுக்கு நம் பார்வை சரியாக இல்லை..."

Vishy said...

அருமையான பதிவு.. இது எவ்வளவு நீளமாயிருந்தாலும், இதை படிச்சாலே உலகத்துல பாதி பிரச்சினை தீர்ந்து போயிடும்..

you have an amazing knack of narrating the most difficult concepts in a lighter vein.. உங்க அப்பாவோட blessingsகறத விட வேற என்ன சொல்ல முடியும்..

ஜெய்லானி said...

//கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு, நான் இறந்த பின், அவர் இல்லை என்று தெரிய வந்தால், எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. I would have been dead and gone by then. ஆனால், இல்லை என்று சொல்லி விட்டு, இருக்கிறார் என்று தெரிய வந்தால்.......??? Almighty கூட எந்த வழக்கு செல்லும்? எதற்கு வம்பு? //

தீவிரமான நாத்திகவாதிகளின் கேள்விக்கு இந்த ஒரு பதிலே சரியன சவுக்கடி.

ஆடுமாடு said...

//அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? //

வாசிச்சுட்டேன் சாமி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான பேட்டி :)

vasu balaji said...

எல்லாரும் சாலமன் பாப்பையா தீர்ப்பு மாதிரியே எழுதுறாங்களே கடவுளே!:))

Pavithra Srihari said...

Superb Chitra ... I just dunno what to say about this .. a small post but definitely learnt a lot ... andha practical bomb .. bible phrases .. bench mela nikkarathu .. superbbb

Jaleela Kamal said...

ஹா ஹா எவ்வளவூஊஊஉ பெரிய பேட்டி,

ஆடுமாடு said...
//அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? //

வாசிச்சுட்டேன் சாமி.///

இந்த பதிலும் அவர் இனைத்திருக்கும் போட்டோவும் நல்ல மேட்சாகுது

dheva said...

//இது கர்த்தர் உண்டு பண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக் கடவோம்." சங்கீதம் 118:24//


சித்ரா... தெரிஞ்சோ தெரியாமலோ நாம ரெண்டு பேரும் ஒரே சப்ஜெக்ட தொட்டு எழுதி இருக்கோம்....! உங்களின் வரிகள் வெகுளியாய் கடவுளை கொண்டு வந்திருக்கின்றன்... ! மிக நேர்த்தியான ஒரு கட்டுரை....ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சேன்! சூப்பர்!

Madhavan Srinivasagopalan said...

//கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு, நான் இறந்த பின், அவர் இல்லை என்று தெரிய வந்தால், எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. I would have been dead and gone by then. ஆனால், இல்லை என்று சொல்லி விட்டு, இருக்கிறார் என்று தெரிய வந்தால்.......??? Almighty கூட எந்த வழக்கு செல்லும்? எதற்கு வம்பு?//


HA HA HA... nice post.

மங்குனி அமைச்சர் said...

//சித்ரா: நன்றி, முகிலன். அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? சரி, சரி, வாசிப்பாங்க என்று ஒரு நம்பிக்கைதான். ஹி,ஹி,ஹி.....///


உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..................... அப்பா ,
இன்னும் படிக்கல , இருங்க ஒரு வாரம் லீவு போட்டு வந்து படிக்கிறேன்

க.பாலாசி said...

//சரி, சரி, வாசிப்பாங்க என்று ஒரு நம்பிக்கைதான். //

உங்கள் நம்பிக்கை பலித்தது...

அனிலோட கருத்துக்கள் நல்லாயிருக்கு....

Anitha Manohar said...

அன்பின் சித்ரா,

உண்மை உணரவைத்த உன்னத பதிவு. என்னிடமும் இதே கருத்து உண்டு. அதை உங்கள் எழுத்தில் கண்டதில் பெரும்கிழ்சியடைகிறேன். நெல்லையைச் சேர்ந்தவர் என்பதில் எனக்கும் பெருமை.

வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

ஐடியா நல்லாருக்கு சித்ரா...

Santhappanசாந்தப்பன் said...

மிக‌ சிற‌ந்த‌ ப‌திவு!!! ஆழ்ந்த‌ சிந்த‌னை...!!

Ananya Mahadevan said...

சித்ரா,
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.. :)

Anonymous said...

படிக்க சுகமாயிருந்தது சித்ரா

malar said...

'''பிறக்கிற மனிதன் ஒவ்வொருவனும் இறக்க வேண்டும். இறந்த பின் என்ன நடக்கும் என்று, இறந்த யாரும் என்னிடம் வந்து சொல்லவில்லை. நான் இறந்த பின், ஒரு வேளை, கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருந்து, அவரை நான் நேரில் பார்த்து டீல் பண்ண வேண்டி வந்தால், என்ன செய்வது?''

இதை இப்போ ஒரு சில நாத்திக வாதிகளும் ஏத்து கொள்கிறார்கள்..

பெரிய பதிவாக இருக்கிறதே என்று படிக்க யோசித்தேன் படித்த பிறகு இது ஒரு நல்ல பதிவு ....விஷயம் இருக்கு....

எட்வின் said...

இதவிட தெளிவா, நளினமா, புரியும்படி தெய்வநம்பிக்கைக்கு விளக்கம் கொடுக்க முடியுமான்னு தெரியல அக்கா. உங்களைக் குறித்து பெருமைப்படுகிறேன்

//Faith is not a destination; it is a journey// நிச்சயமாகவே அது journey தான், எனினும் பயணங்களில் வரும் இடையூறுகள் தான் சில நேரங்களில் பயணத்திற்கு தடையாக இருக்கிறது.

//கிறிஸ்துவின் "மலை பிரசங்கம்" வாயிலாக, மனித நேயம் என்ற இன்னொரு dimensionல் என் நம்பிக்கை திரும்பியது. இது இன்றைய நிலவரம். இன்னும் வளரும். வளர வேண்டும். உணர வேண்டும்.//

உங்கள் வாழ்வு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

ஏனுங்க இவ்வளவு சீக்கிரம் முடிசிடீங்க, இன்னும் ரெண்டு பக்கம் போட்டிருக்கலாமே. அவ்வளவு சுவாரஸ்யமாக போச்சு. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. நான் சொன்னதை எல்லாம் நம்பிடீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்புறம், 11th படிக்கும் போது, ரொமோலா (Romola) மிஸ் வந்தாங்க. அவங்க சொல்லி கொடுக்கும் போது, என்னையும் அறியாமல், வாலை சுருட்டி வைச்சிக்கிட்டு கேட்க தோணுச்சு.//

இதில் இருந்து எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சித்ரா 11 வரை படித்திருக்கிறார்.

settaikkaran said...

//அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? சரி, சரி, வாசிப்பாங்க என்று ஒரு நம்பிக்கைதான். ஹி,ஹி,ஹி......//

என்ன அப்புடிக் கேட்டுப்புட்டீக? நாங்க படிச்சோமில்லா? நல்லாவே இருக்கு! கருத்தும் சரி, வடிவமும் சரி-சூப்பர்!

பனித்துளி சங்கர் said...

வித்தியாசமான முறையில் தெய்வ நம்பிக்கை பற்றி சொல்லி இருக்கும் விதம் மிகவும் அருமை .

வேலன். said...

வாசிப்பாங்களான்னு சொல்லியே அனைவரையும் வாசிக்க வைத்துவிட்டீர்கள். வாழக் வளமுடன்,வேலன்.

Radhakrishnan said...

தெளிவான சிந்தனை.

ராமலக்ஷ்மி said...

நானும் முழுசா வாசிச்சிட்டேன் சித்ரா.

//இது எனது நம்பிக்கையின் தேடல், ஆழம், புரிதல் மட்டுமே. //

அதைப் பகிர்ந்த விதம் அருமை.

அப்புறம் அந்த கான்வென்ட் கதை..:)))!

ஹேமா said...

எங்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை சித்ரா.உங்க மனசுக்கு இருக்குன்னா இருக்கு.இல்லன்னா இல்ல.
நம்பிக்கைகள் தொடரவேணும்.
அதுவும் ஆரோக்யம்.

Priya said...

//"இது கர்த்தர் உண்டு பண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக் கடவோம்." சங்கீதம் 118:24//....எனக்கும் பிடித்த வாசகம்.

பேட்டி மிக இயல்பா வந்திருக்கு. ஆனா அதில் அடங்கியுள்ள விஷயம்தான் எவ்வளவு பெரியது.கடைசிவரை பொறுமையாக படிக்க முடிந்தது. வாழ்த்துக்கள் சிதரா!

Prasanna said...

நடுவில் கொஞ்சம் காமெடி வந்தாலும் நீங்கள் ஒரு சீரியஸ் பதிவு எழுதி விட்டீர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் :)

மாதேவி said...

அருமை சித்ரா.

movithan said...

ஐயோ அக்கா ,எனக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லையே.

சொல்லச் சொல்ல said...

Loyola வில் 3ஆம் கிளாஸ் ஞானம் டீச்சரும், Ignatius சில் 6ஆம் கிளாஸ் சுகிர்தா டீச்சரும் எங்களுக்கு பாடம் நடத்தாமல் உங்கள் வாலை எப்படி சுருட்டன்னு திட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த சித்ரா அக்கா நீங்க தானா!! ஹா, ஹா!!! . நல்ல பதிவு. ஒவ்வொரு stages சும் நம் மனம் எப்படி பக்குவப்படுதுன்னு ஒரு ஆட்டோகிராப் ஏஏஏஏஏ ஓட்டிடீங்க!

அன்புடன் அருணா said...

செலிப்ரிடி ஆகிட்டேயிருக்கீங்க சித்ரா!

Menaga Sathia said...

சூப்பர்ர் கலந்துரையாடல்..அழகா சொல்லிருக்கிங்க...

ரிஷபன் said...

என் சுயநலத்துக்காகவே தெய்வ நம்பிக்கையை பிடித்து கொண்டு இருக்க கூடாது என்பது எனக்கு புரிந்தது. முழுக்க முழுக்க ஆழ்ந்து படிக்க வைதத நடை..

ஹுஸைனம்மா said...

சித்ரா, வளரும், வளர்ந்துவரும், வளர்ந்துவிட்ட பருவங்களில் ஒருவரின் மனங்களில் இறைநம்பிக்கைக் குறித்து ஏற்படும் மாற்றங்களை அழகாச் சொல்லிருக்கீங்க!!

//கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு, நான் இறந்த பின், அவர் இல்லை என்று தெரிய வந்தால், எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. I would have been dead and gone by then. ஆனால், இல்லை என்று சொல்லி விட்டு, இருக்கிறார் என்று தெரிய வந்தால்.......??? Almighty கூட எந்த வழக்கு செல்லும்?//

இதேதான் (முன்னாள்) பெரியார்தாசனும் சொன்னது!! இந்தப் புரிதல்தான் அநேகமாக எல்லாருக்குமே தெய்வத்தின்மீது நம்பிக்கைவர ஒரு காரணமும்கூட!!

முகுந்த்; Amma said...

அருமையான இடுகை. எழுதின விதமும் அருமையா இருக்கு சித்ரா.
வாழ்த்துக்கள்.

Ramesh said...

நல்லதொரு பதிவு பகிர்வுக்கு நன்றி சித்ரா..
மதம் பற்றி .....
தெய்வம் வேண்டாம் தெய்வ நம்பிக்கை போதும்..
சிம்பிள் அன்ட கிறேட் சித்திரா

Unknown said...

@Chitra..Ungal visuvaasam ungalai kaapathuum..Good work..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

சித்ரா.. ரொம்ப அருமையான பதிவு.. ஒரு வார்த்தை விடாமல் படித்தேன்..!
எனக்கும் அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை உண்டு.. அதே போல், கடவுளை மட்டுமே காரணமாய் சொல்லாமல் நம் கடமையையும் செய்வதும் முக்கியம் என நம்புபவள் நான்..

உங்க பதிவில், கடவுளின் பால் உங்கள் ஆழமான அன்பு தெரிகிறது..
அவர் உங்களை என்றும் இதே போல் ஆசிர்வதித்து.. வழி நடத்த வேண்டுகிறேன்..

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..!!

pattchaithamizhan said...

Vazhakkam pool vaartthai jaalam thaan....
ithan moolam thaangal sollavarum karutthu enna kaa..?
puriyala kaa...

Dineshapps said...

Truly blessed to have read this post. Out of all the normal issues and problems in life so nice to read this blog. i am sure everyone was so intrigued to read till the end. So happy to see Dr. Rudhran's comments for a friend of mine.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

A good post Chitra. I like the way you put forward your views.

Mythili (மைதிலி ) said...

Nalla pathivu chitra !!! Sure, there is a difference in believing in god and being religious. I am happy that I am not religious.

Ignatius convent matter super. Athilum antha paen matter. Sila samayangalla mun benchila irukkavanga thalaya paarththaa ore tensionaa irukkum...

தமிழ் உதயம் said...

கடவுள் குறித்த உங்கள் நம்பிக்கையே, உங்கள் வாழ்க்கையை சரியாக நகர்த்தி செல்லும்

நசரேயன் said...

// உடனே, ' எடுறா அருவாள' ரேஞ்சுக்கு, பலத்த வாக்குவாதம்.//

இங்கே தான் நீங்க நெல்லை மாவட்டம் என்பது தெரிகிறது

நசரேயன் said...

முகிலன்: அப்புறம்?

நசரேயன் : யோவ் இங்க என்ன கதையா சொல்லுறாங்க

முகிலன்: பாவம்.

நசரேயன் : படிக்கிற நாங்களும் தான்

நசரேயன் said...

முகிலன்: அவர்கள் சொல்லி கொடுத்ததில், இன்றும் நீங்கள் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்ன?

நசரேயன் : எந்த கடையா இருந்தாலும் நல்லா கும்மி அடிப்பேன்

நசரேயன் said...

//சித்ரா: நன்றி, முகிலன். அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? சரி, சரி, வாசிப்பாங்க என்று ஒரு நம்பிக்கைதான். ஹி,ஹி,ஹி.....//

இவ்வளவு நேரமும் கேள்வி கேட்ட முகிலனுக்கு ஆட்டோ அனுப்புறோம்.

நான் said...

மிக மிக ந்ல்ல கருத்துகள் ..ஆனால் நீங்கள் மதத்தை விளம்பரபடுத்தாமல் இருந்தால் புனிதனாய் நான் இருப்பேன்...

அம்பிகா said...

\\யாரு வாசிச்சாங்களோ இல்லையோ நான் வாசிச்சிட்டேன்..\\

very nice post

GEETHA ACHAL said...

நல்ல கருத்துக்கும்...நீங்களும் ஸ்குலில் பெஞ்ச் எறினிங்களா....

கடவுள் இன்றி அனுஅளவும் அசையாது...கடவுள் நம்பிக்கை நிச்சயம் அனைவருக்கும் இருக்கவேண்டும்...

வருண் said...

In your profile itself you have clearly revealed that you are a strong believer in Jesus Christ! So, I am not surprized. :-)))

மின்மினி RS said...

ஐய்யயோ நாந்தான் லேட்டா.., நல்லா சொல்லிருக்கீங்க சித்ரா அக்கா.

Thenammai Lakshmanan said...

மிக அருமை சித்ரா,,மயிலுடன் இந்த பிறந்த நாளில் கெண்டகியில் இருப்பாய் ,, என் மனமும் உங்களோடும்உன் இறை நம்பிக்கையோடும்..வாழ்த்துக்கள் சித்து

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு, நல்ல தெளிவு.

இதுல மொக்கை கமெண்ட் போட பிடிக்கலை.

prince said...

என்ன ஒரு தெளிவான சிந்தனை இன்றைய கால சுழலுக்கு தேவையான பதிவு.யார் மனதும் புண்படாமலும் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்திலும் எழுதிருக்கீங்க. இதை எழுதும் முன்னர் எத்தனை இரவுகள் தூக்கத்தை தொலைத்தீர்களோ தெரியவில்லை " உங்களில் எளியவன் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்"

rajasundararajan said...

பின்னூட்டம் இட்டவர்களில் யாருக்கும் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் கடவுளுக்கான தேவையும் இல்லை. தேவை என்பது ஒரு முரண். வெள்ளாடுகளின் ஐயம்/தயக்கம் அச்சத்தால் வருவது. அச்சம் என்பது ஓர் உணர்வு. தேவை என்பது நிலைமை. பசி ஓர் உணர்வு அல்ல நிலைமை. வாழ்வுக்கும் சாவுக்குமான முரண். செம்மறிகள் மதியால்/மனத்தால் அல்ல, வயிற்றால் அறிகின்றன.

வந்தியத்தேவன் said...

நல்லா எழுதியிருக்கின்றீர்கள் அக்கா, தெய்வ நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் நாம் எவரையும் நிர்ப்பந்திக்கமுடியாது

Hai said...

நல்லாத்தான் எழுதுறீங்க அக்கா. நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு எழுதும் விதம் வாசிக்க இனிமையாயிருக்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

//இன்னைக்கு தூங்கப் போனா நாளைக்கு காலையில், நல்ல சுகத்தோட எந்திரிச்சு வேலைக்கு போவேன் என்று கூட நம்புறேன். அப்படி, நம்பிக்கையோட நம்பிக்கையா இதுவும் ஒண்ணு இருந்துட்டு போகட்டுமே,//

அதேதான் சித்ரா, வாழ்க்கையின் மீது பிடிப்புவர ஏதாவது ஒரு நம்பிக்கை வேண்டியிருக்கு. அது ஏன் கடவுள் நம்பிக்கையா இருக்கக்கூடாது.

Alarmel Mangai said...

சிந்தனையிலும், எழுத்திலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது...

ஸாதிகா said...

படிக்கும் பொழுது மகிழ்வாக இருந்தது சித்ரா.பெரிய பேட்டி என்றாலும் இனிய பேட்டி.

SUFFIX said...

நல்ல பகிர்வு சித்ரா, தங்களுக்கே உரிய நடையில் எழுதியுள்ளீர்கள், இப்பிரபஞ்சம், நாம் அறிந்தும் அறியாத படைப்பினங்கள் இது பற்றி சிந்தித்தாலே இறைவனைப் பற்றிய தெளிவு கிடைத்துவிடும். இறை நம்பிக்கை மனிதனுக்கு பலமும் பலனும் கூட!!

CS. Mohan Kumar said...

Good post; read it fully; thanks

pichaikaaran said...

"இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா"

I read fully and enjoyed..good post

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா, தெளிவா உங்க நம்பிக்கையை சொல்லிருக்கீங்க. மகிழ்ச்சியா இருக்கு வாசித்ததும்.

அஷீதா said...

எப்பா பெரிய பதிவு தான்...ஆனால் அருமையாக சொல்லி இருக்கீங்க தெய்வ நம்பிக்கை பற்றி :))

நேசமித்ரன் said...

சொன்ன விதம் அருமை

தெளிவா இருக்கு உங்க பார்வை

நட்புடன் ஜமால் said...

ஒரு வார்த்தை கூட-குறைத்து விடாம படிச்சேன்.

நம்பிக்கை என்பதை நம்பிக்கையோடு சொல்லியிருக்கீங்க.

Anonymous said...

சூப்பர்.. இதை படிக்க வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி சொல்வதா.. எங்கேயோ இருக்கும் சித்ராவின் கருத்தை தெரிந்துக்கொளல்ல வாய்ப்பு தந்த இந்த அறிவியல் முன்னேற்றத்துக்கு நன்றி சொல்வதா ? எதுவா இருந்தாலும்.. நல்ல இருந்தா சரி .. :)

அரசூரான் said...

சித்ரா, முழுமையா படித்தேன். 999 வார்த்தைகள். "தெய்வ நம்பிக்கை" என்கிற தலைப்பையும் சேர்த்தா 1001 வார்த்தைகள். 2 படம். சொன்னா நம்புங்க... நான் வார்த்தைகளையும் கூட்டிப் படித்தேன். சும்மா பதிவையே படிச்சோம், சுவையான பதிவை படிக்க மாட்டோமா என்னா?

அழகா சொல்லி இருக்கீங்க... நமக்கு "மதம்" பிடிக்காதவரை, தெய்வ நம்பிக்கை நம்மை உயர்த்த உதவும்.

ஸ்ரீராம். said...

"இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா"//

கடவுள் மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ...வாசகர்கள் மேல சந்தேகம் இருக்கு...!

அன்புடன் மலிக்கா said...

சித்ரா: நன்றி, முகிலன். அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா? சரி, சரி, வாசிப்பாங்க என்று ஒரு நம்பிக்கைதான். ஹி,ஹி,ஹி......//

அப்பாடீஈஈஈஈஇ நானும் வாசித்துவிட்டேன் சூப்பரு..

Admin said...

அருமையாக இருக்கிறது...

"உழவன்" "Uzhavan" said...

//எடுத்த வகிடில், அப்போ அப்போ சிலருக்கு கிராஸ் ஆகிற பேனை வேடிக்கை பாத்துக்கிட்டு //
 
நல்லா பேன் பார்ப்பீங்க போல :-)
செம காமெடியான பதிவு.

Menaga Sathia said...

அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்ரா!!

தாராபுரத்தான் said...

கடவுள்..இரக்கம் உள்ள இடத்தில் மட்டும்..உன்னிடம் இருப்பார்..

karthik said...

wish you many more happy birthday sister tooooooooo uuuuuuuuuu

Jaleela Kamal said...

பிறந்த நாள் வாழ்த்துகக்ள் சித்ரா/

malar said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....

movithan said...

wish ur happy birth day

'பரிவை' சே.குமார் said...

நானும்தான் வாசிச்சேன்.

சொன்ன விதம் அருமை சகோதரி!

மனோ சாமிநாதன் said...

தேர்ந்த எழுத்தாளரின் அருமையான எளிமையான நடை!
எண்னங்களின் சத்தியப் பிரவாகத்தை கவிதையாக நேர்மையுடன் சொல்லும் பாங்கு!
நீங்கள் முன்பு சொன்ன ‘அன்பிலும்’ இப்போது சொல்லும் ‘மனித நேயத்திலும்’ இது போன்ற எத்தனையோ விஷயங்கள் அடிபட்டுப்போகின்றன என்பதுதான் வாழ்வின் நிதர்சனம்!

அன்புத்தோழன் said...

Yaaru padika poraana keteenga.... oru vaartha vidaama padichuten.... edha pathi comment podradhune therila..... Anil nu anilkutty madhri sinnadha peru vechrukaare thavira niyaanam romba perusaa iruku.....

Aaha mothathula subham.... Ellam avan seyal... :-)

கமலேஷ் said...

அழகான பதிவு தோழி...வாழ்த்துக்கள்...

அண்ணாமலை..!! said...

பல விடயங்களை அலசி, ஆராய்ந்து இருக்கீங்களே...!!
நல்ல பதிவு எவ்வளவு நீளமாயிருந்தாலும் படிக்கப்படும்..!
உங்க பதிவை முழுதாவே படிக்க முடிந்தது..!!

Lingeswaran said...

Kindly go through the following link for a article on the few excellent quotes of bible:

http://lingeswaran-ise.blogspot.com/2010/08/blog-post_18.html

அக்கினிக் குஞ்சு said...

நல்ல பதிப்பு சகோதரி வாழ்த்துக்கள்.
"கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு, நான் இறந்த பின், அவர் இல்லை என்று தெரிய வந்தால், எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. I would have been dead and gone by then. ஆனால், இல்லை என்று சொல்லி விட்டு, இருக்கிறார் என்று தெரிய வந்தால்.......??? Almighty கூட எந்த வழக்கு செல்லும்? எதற்கு வம்பு?"
"But கடவுள் உண்டு என்று சொல்லிக்கொண்டு அவர் சொன்னபடி நடக்காமல் இறந்த பின் எந்த முகத்தோடு அவரை சந்திப்பது."

விமலன்