சரி, இப்போ அடுத்த கட்ட டொச்சு கேள்விகளுக்கு:
6. நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா அவர்கள் பேசற டாப்பிக் கண்டிப்பாக....
பொண்ணுங்களை பற்றி இருக்கும்
சமீபத்தில் பார்த்த நல்ல சினிமா, கெட்ட சினிமா பற்றி இருக்கும்
முந்தினநாளு சரக்கடித்த மட்டையான மேட்டரு பற்றி இருக்கும்
சமீபத்தில் பார்த்த நல்ல சினிமா, கெட்ட சினிமா பற்றி இருக்கும்
முந்தினநாளு சரக்கடித்த மட்டையான மேட்டரு பற்றி இருக்கும்
ஆனா இந்த பொண்ணுங்க நாலுபேர் ஒண்ணு சேர்ந்தா அவ்ளோ நேரம் பேசி பேசி சிரிக்கிறாங்களே
அப்படி எதைப்பத்தி பேசுவாங்க...?
1. அதேதான்....... மற்ற பெண்களை பற்றி - உறவினர் அல்லது தோழிகள் அல்லது சண்டை கோ(தோ)ழிகள், அலட்டல் பொண்ணுங்க, முகமே தெரியாத/பரிச்சயம் இல்லாத பொண்ணுங்களை கூட விட்டு வைக்கிறது இல்லை.
நீங்க பேசுனா அரட்டை - நாங்க பேசுனா gossip - புரணி - அப்படின்னு சொல்றீங்க.
நீங்க பேசுனா அரட்டை - நாங்க பேசுனா gossip - புரணி - அப்படின்னு சொல்றீங்க.
அதேதான் ......... சினிமா - டிவி ப்ரோக்ராம் - கலை நிகழ்ச்சிகள் - சமையல் - உணவகங்கள் - புத்தகம்.
அதேதான் ....... அடித்த திருட்டு தம்மு, சரக்கு இருந்தால் அதை பற்றி ...... அஸ்க்கு புஸ்க்கு... இப்படி சொல்லுவோம்னு நினைச்சீங்களா....... ஆசை... தோசை....
2 . குழந்தைகளை வைத்து பெருமை பாராட்டி கொள்ளல்.
3 . ஷாப்பிங் - லேட்டஸ்ட் ஐட்டம்ஸ், புது கடை, தள்ளுபடி விலை, etc ...etc....
4 . பெருமூச்சு விட வைக்கும் தனக்கு கிடைக்காத வாழ்க்கை அல்லது பொருட்கள்.
5 . தான்தான் டாப்பு என்ற வகை பெருமை பேச்சுக்கள் - இல்லையென்றால் - தான்தான் பாவப் பட்ட ஜென்மம் என்ற வகை பேச்சுக்கள்.
6 . பள்ளி - காலேஜ் கால லூட்டிகள், கலாட்டா - சைட் அடித்த "ஹீரோஸ்" - தன்னை சைட் அடித்த "ஹீரோஸ்" பற்றி ....
7 . பேச காரணம் வேணுமா என்ன? ஒண்ணுமே இல்லைனா கூட - எதையாவது மணிக்கணக்காக பேச கண்டு பிடிச்சு பேசப்படும்.
ஆயிரம் பொற்காசுகளை ஒரு சின்ன பர்சில் திணிக்க திணறும் "திருவிளையாடல்" தருமியின் கேள்வி:
7 . நாங்க ஒரு சின்ன purse வைத்து சமாளிக்கிறோம். ஆனால், நீங்கள் எங்கே போனாலும் ஒரு பெரிய purse - இல்லை என்றால் - ஒரு பெரிய hand bag தூக்கிட்டு போறீங்களே, அப்படி என்னதான் அதில் இருக்கும்?
1 . Driver's License - credit card/cheque book - money - hand-kerchief or tissues - hand-sanitizer or lotion - make-up items (optional) - sanitary napkins (optional) - first-aid kit (optional) - photos/camera (optional) -
mint/mouth refresher (optional) - pen - cell phone - keys.
mint/mouth refresher (optional) - pen - cell phone - keys.
2. ஏதாவது ஒரு லிஸ்ட் அல்லது சின்ன குறிப்பேடு இருக்கும்.
3. தேவைப்பட்டால், குடை - தண்ணீர் பாட்டில் கூட இருக்கும்.
3. தேவைப்பட்டால், குடை - தண்ணீர் பாட்டில் கூட இருக்கும்.
4 . குழந்தைகள் இருந்தால் வேற கேள்வியே இல்லை - ஒரு மினி மார்ட் உள்ளே இருக்கும்.
5. "மத்திய பிரதேசத்தில்" பிரச்சினை செய்யும் பின் சீட்டு (இருக்கை) " தீவிரவாதிகளை" சமாளிக்க ஒரு பின் அல்லது ஒரு சின்ன ஷார்ப் object .
sample for American humour:
5. "மத்திய பிரதேசத்தில்" பிரச்சினை செய்யும் பின் சீட்டு (இருக்கை) " தீவிரவாதிகளை" சமாளிக்க ஒரு பின் அல்லது ஒரு சின்ன ஷார்ப் object .
sample for American humour:
சும்மா இருந்தாலும் கிண்டி விட்டுப் போகிற "கோள்மூட்டி" குப்புவின் கேள்வி :
8 . பசங்க முன்னாடி வேற பசங்களை பத்தி உயர்த்திச்சொன்னா அதை கண்டுக்கறதில்லை...அதுவே பொண்ணுங்க முன்னாடி மத்த பொண்ணுங்களை உயர்த்திச்சொன்னா ஏதோ கரியிற மாதிரி வாடை அடிக்குதே அது ஏன்???
1. ஒரே வார்த்தை - பொறாமை.
2 . ஈகோவுக்கு ஒத்து வராது.
3 . தன்னைத்தான் மற்றவர்களை விட better என்று நினைத்து எல்லோரும், குறிப்பாக ஆண்கள் அதிகம் நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மண் விழுந்து விடுவது பிடிக்காது.
4 . எப்போதும் உண்மை இல்லை. பெருந்தன்மையாக அதை ஏற்றுக் கொண்டு பாராட்டி பேசுவது உண்டு.
5 . தன்னை கடுப்பேத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் சில சமயம் ஆண் அப்படி பேசும் போது - நக்கல் அல்லது குத்தல் பதில்கள் தரப்படும். அந்த கடுப்பான பதில்களுக்கு காரணம்: அந்த பெண் மேல் உள்ள எரிச்சல் அல்ல, அந்த ஆண் மேல் உள்ள எரிச்சல் தான்.
காதல் கப்பல் கரை சேரும் நாள் எப்போ என்று காத்து இருந்து, கதை கந்தல் ஆன "காத்தாடி" காத்தவராயன் கேட்கிறார்:
9 . அது ஏன் பொண்ணுங்க பசங்களா வந்து லவ்வை சொல்லனும்னு எதிர்பார்க்குறாங்க... இதனால எத்தனை லவ்வு பெயிலிராயிருக்கிறது. அது ஏன் இப்படி பண்ணுறாங்க????
1 . எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருந்து கொள்வோமே என்று ஒரு நினைப்புதான்.
2 . இப்போ எல்லாம், பெண்களும் காதலை முதலில் தெரிவிக்கிறாங்களே .... ஆளை பிடிச்சு இருந்தா கேக்குறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.....
3 . நேரிடையாக சொல்லாமல், கண்களாலோ இல்லை குறிப்பாலோ சொல்லுவார்கள். அது புரியாத மாங்க மண்டைக்கு, காதல் எதற்கு என்று ஒதுங்கி சென்று இருக்கலாம்.
3 . நேரிடையாக சொல்லாமல், கண்களாலோ இல்லை குறிப்பாலோ சொல்லுவார்கள். அது புரியாத மாங்க மண்டைக்கு, காதல் எதற்கு என்று ஒதுங்கி சென்று இருக்கலாம்.
4 . வெளிப்படையாக சொன்னால் தன்னை பற்றி ரொம்ப cheap ஆக நினைத்து விடுவார்களோ என்ற உணர்வு. ஈகோ தரும் பயம்.
5 . காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ஆண்களை விட பெண்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள். அது ஒரு பலவீனம்.
5 . காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் ஆண்களை விட பெண்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள். அது ஒரு பலவீனம்.
6 . தனக்கு பின்னால் ஆண்கள் கெஞ்சி கொண்டு அல்லது லோ லோனு வழிந்து கொண்டு வருவது இன்னும் பிடிக்கும் - பெருமை என்று கருதப்படும்.
7 . ஆணாய் வந்து சொல்வது, தன் அழகுக்கு - இல்லை, திறமைக்கு உள்ள recognition என்று நினைத்து கொள்வதால்.
10 . ஆண்கள் திருமணத்துக்கு பின்னும் - குழந்தைகள் பிறந்த பின்னும் இன்னொரு பெண்ணை பார்த்து ஜொள்ளுவதையும் அதை பற்றி பேசிக் கொள்ளுவதும் தவறாக கருதப்படுவதில்லை. ஏன், பெருமையாக கூட நினைத்து பேசுகிறார்கள். ஆனால், பெண்கள் திருமணத்துக்கு பின் ஜொள்ளவே மாட்டார்களா? அதை பற்றி வேறு பெண்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா? அப்படியே பகிர்ந்து கொள்ளும் பெண்களை பற்றி, பெண்களே என்ன நினைக்கிறார்கள்?
1 . சும்மா பாக்குறது தானே ..... ஒண்ணும் தப்பு இல்லை. அதை மற்ற தோழிகளிடம் சொல்வது - அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை, நம்பிக்கையை பொறுத்தது.
2 . பொதுவாக, திருமணமான பெண்கள் அப்படி செய்வது இல்லை. வீட்டு கடமைகள் , கவலைகள் தான் மேலோங்கி நிற்கும். அப்படியே இருக்கிறது என்றாலும் சினிமா ஹீரோ என்ற ஒரு public இமேஜ் கொண்ட குறுகிய வட்டம்தான்.
3 . பெண்கள் சொன்னால், ஏதோ கற்பே போன மாதிரி மற்றவர்கள் பேச ஆரம்பித்து விடுவார்களே என்ற பயம் ஒரு காரணம். எதுக்கு வம்பு என்று ஒதுங்கி விடுவது.
4 . மற்றவர்களிடம் சொல்வது இல்லை - கதை/கவிதையில் கற்பனை நாயகனாய் ரசிப்பதுண்டு.
5 . சில பெண்களுக்கு double personality உண்டு. ஊருக்காக ஒரு முகம்/வரைமுறை - உள்ளுக்குள் மடிந்து கொண்டு இருக்கும் உண்மை முகம்/ஆசைகள்/கனவுகள். பார்த்தாலே தப்புதான் என்று அடக்கி கொள்கிறார்கள். இன்னும் அந்த சுதந்திரம் வரவில்லை - குறிப்பாக தமிழ் பெண்களுக்கு.
6 . இந்த கேள்வியை கேட்ட ஆண்கள் எத்தனை பேரு , தன் மனைவி, இன்னொருவரை பார்த்து சும்மா சைட் அடிப்பதை முழு மனதோடு ஏற்றுக் கொள்வார்கள்?
இத்துடன் இந்த கேள்வி-பதில் நேரம் முடிவடைகிறது. இந்த பதில்களால் யாராவது ஒருத்தரின் "அறிவுக்கண்" - "மனக்கண்" திறக்கப்பட்டால், இந்த சர்வே பதில்கள் பெரும் பலனை தந்ததாக கருதப்படும். ப்ளீஸ் - உங்கள் "நெற்றிக்கண்"ணைத் திறந்து விடாதீர்கள். :-)
நன்றி: கேள்விகள் அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.
உங்களது அனைத்து கேள்விகளையும் சேர்க்க இயலாததற்கு மன்னிக்கவும்.
நன்றி: பதில்களை அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றி.
உங்களது அனைத்து பதில்களையும் சேர்க்க இயலாததற்கு மன்னிக்கவும்.
நன்றி: எனக்காக படங்களை கண்டு பிடித்து கொடுத்த கூகிள்க்கு நன்றிகள் பல. அந்த படங்களை போட்டு வைத்த தளங்களுக்கும், நன்றிகள் பல.... :-)
பின்குறிப்பில் ஒரு முன் அறிவிப்பு: அடுத்த கட்ட நேயர் விருப்பம் டாபிக் கமென்ட்டில் வரவேற்கப்படுகின்றன..... இன்னும் Airtel - BSNL - கூட எனக்கு கமிஷன் டீல் ஒத்து வராததால், யாரும் SMS அனுப்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.