Tuesday, January 18, 2011

2010 - திருப்பி போடணும்.

 எனது சென்ற பதிவில் -  "நல்லா படிச்சீங்களா?"   -  நான் கேட்டு கொண்ட கேள்விக்கு - சிறப்பான பதிலை தந்து, எனக்கு உதவிய "அரசூரான்" அவர்களுக்கு நன்றி.

அவரின் பதில்:

"//இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?//
குழந்தை சும்மா கேட்காது, ஒற்றை விரலை (அப்பா மாதிரியே) நீட்டி கேட்கும், அப்படியே பதில் சொல்லாம ரிவர்ஸ்ல ஓடிப்போயிருங்க..."

ஹா,ஹா,ஹா,ஹா, ..... அந்த கமென்ட் வாசித்து விட்டு நல்லா சிரிச்சேன். 

 2011 ஆம் ஆண்டை  "வா வா...... வாத்தியாரே, வா...." என்று நான் அழைத்துக்கொண்டிருந்த நேரம்,  பதிவுலக நண்பர் பாலாஜி வந்து , நான் 2010 ஆம் ஆண்டை  திரும்பி பார்த்தே ஆகணும் என்று "தொடர் பதிவு" என்ற பெயரில் ஒரு கண்டிஷன் போட்டுக்கொண்டார்.


மக்கா,   நான் அப்படி என்னதான் (போன வருஷம் மட்டும் அல்ல  - இந்த வருஷமும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்)  "வெட்டி பேச்சு" பேசுகிறேன் என்று திருப்பி போடுறேன். சாரி, திரும்பி  பார்க்கிறேன்.  (எப்படி பார்த்தாலும்,  பானையில் இருக்கிறது தானே அகப்பையில் (கரண்டியில்) வருது.   அவ்வ்வ்....) என் பதிவுகள் வாசிக்கும் அனைவருக்கும்  தெரிந்து இருக்குமே - நான் எதை பத்தியும் உருப்படியா எழுதலனு  உடனே கண்டுபிடிக்க முடியாத மாதிரி, உருப்படியா எழுதிருவேன்னு.  ஹி,ஹி,ஹி,.....

வெட்டி டைம் இருந்தால்,  வெட்டி பேச்சுக்களின் பிறப்பிடமான "டீ கடை பெஞ்சு..." என்ற தலைப்பில் போன ஜூன் மாதம், நான் கிறுக்கியதை பார்த்து "வெட்டி  அறிவை" வளர்த்துக்கோங்க.

போன வருஷம்தான் எனக்கு பதிவுலகில் நல்லா  kick -off ஆச்சு. எனக்கு interesting  விஷயங்கள் நிறைய  நடந்துச்சு.
எல்லா புகழும் இறைவனுக்கே!  

காமெடி மட்டும் அல்ல ... வம்பு, தும்பு,  அப், டௌன்,  ட்ராஜெடி கூட   ......பார்த்தேன்.  ஆனாலும், அதன் சாயல் - வடுக்கள் - எனது பதிவுகளில் தொடர்ந்து  வராத வண்ணம் பார்த்துக் கொண்டு,  வழக்கம் போல எழுதி கொண்டு இருந்தேன்.   வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன்.


அப்புறம்,  13 வருடங்கள்,   நல்ல தோழியாய்  பழகிட்டு, பதிவுலகம் வந்து - அது தந்த போதையில்,  என்னை காயப்படுத்தி, எனது நட்பை தூக்கி எறிந்து விட்ட வேதனையான சம்பவத்தில் இருந்து  --------  முகம் தெரியாது இருந்தும் ,  எழுத்துக்கள் மூலமாகவே அறிமுகம் ஆகி,  சகோதர பாசத்துடன் பழகும் பல நல்ல உள்ளங்களின் அன்பும் நட்பும் கிடைத்த இனிமையான சம்பவங்கள் வரை எல்லாம் நடந்துச்சு.

எல்லாத்தையும் சொல்லி bore அடிக்கணுமா என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ,  பதிவுலகில் ஏற்படும்  எனது   பீலிங்க்ஸ் எல்லாம் கொட்டி,  ஒரு பாட்டு வந்து இருக்கிறது,  நினைப்புக்கு வந்துச்சு.  அதிலே "This is Africa" என்பதற்கு பதில், "This is வெட்டி பேச்சு" னு  போட்டு பார்த்தா - எல்லாமே  கரெக்ட் ஆக இருக்குதுப்பா... lyrics கவனிச்சு பாருங்க....  நான் சொல்றது பில்ட் அப் இல்லை, சரின்னு தெரியும்.



அந்த பாட்டில்,  ஷகிரா மற்றும் "waka ...waka...."  மட்டுமே கவனித்து விட்டு,  அதில் lyrics இருந்துச்சா ஆஆஆ...... என்று அப்படியே 'ஷாக்' ஆகி இருக்கும் நண்பர்களுக்காக, அந்த பாடலின் வரிகள் - Africa வுக்கு பதில், வெட்டி பேச்சு  - சேர்த்து இதோ:

You're a good soldier -
Choosing your battles.
Pick yourself up
And dust yourself off
And back in the saddle.
You're on the frontline
Everyone's watching -
You know it's serious
We're getting closer.
This isn't over.
The pressure is on
You feel it.
But you've got it all
Believe it.
When you fall get up
Oh oh...
And if you fall get up
Oh oh...
Tsamina mina
Zangalewa
Cuz this is வெட்டி பேச்சு.
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
This time for வெட்டி பேச்சு.
This is our motto:
Your time to shine
Don't wait in line.
Y vamos por Todo
People are raising
Their Expectations.
Go on and feed them
This is your moment.
No hesitations.
Today's your day
I feel it.
You paved the way
Believe it.
If you get down
Get up Oh oh...
When you get down
Get up eh eh...
Tsamina mina zangalewa
Anawa aa
This time for வெட்டி பேச்சு .
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
This time for வெட்டி பேச்சு.

எல்லாம் வல்ல இறைவன் அருளால், தொடர்ந்து இந்த வருடமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு" பேச ஆசை..............!

101 comments:

ஆனந்தி.. said...

கண்ணா...கிரேட் டா..

ஆனந்தி.. said...

We're getting closer.
This isn't over.
The pressure is on
You feel it.
But you've got it all
Believe it.

This time for only you..
Not just "சும்மா..."

அமுதா said...

/*தொடர்ந்து இந்த வருடமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு" பேச ஆசை..............! */
நிறையவே பேசுங்க.... எங்களுக்கு பொழுது நல்லா போகணும்ல?

Jaleela Kamal said...

ஹா ஹா

போன பதிவே நான் பாதி தான் டீச்சர் படிச்சேன், அதுக்காக பெஞ்சு மேல ஏத்தப்படாது.
எப்படியாவது இன்று படிச்சி ஒப்பிக்கிரேன்

ஹிஹி வெட்டி பேச்சு, சூப்பர் பேச்சு.
எப்படி இம்மாப்பெரிய பதிவு..

ஸாதிகா said...

(வெட்டிப்பேச்சு) பேசுங்க..பேசுங்க..பேசிகிட்டே இருங்க.

க ரா said...

தொட்ர்ந்து கலக்குங்க :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆஹா..பாட்டு நல்லா சேத்திருக்கீங்க..
ஆனா வெட்டிப்பேச்சுன்னு பேரை வச்சாலும் நிஜம்மா ஜென் தத்துவம் மாதிரி .. இதுல இருந்து நிறைய கத்துகிறோம்.. ரொம்பல்லாம் புகழல..எதையும் நீங்க அணுகற விதம் க்ரேட்ப்பா..

தொடர்ந்து பேசுங்க.. பேசுங்க பேசிக்கிட்டே இருங்க..

HVL said...

'நிறைய வெட்டிப் பேச்சு' பேசுங்க!நாங்க வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு கூட படிப்போம்.

மொக்கராசா said...

2010 நல்ல திருப்பி போட்டேங்க.....நீங்க நடத்துங்க உங்க வழியில்.....

sathishsangkavi.blogspot.com said...

வெட்டிப்பேச்சு.... கலக்கல்...

Vidhya Chandrasekaran said...

செலவே இல்லாம ஷகிராவ வச்சு ஆல்பம் போட்டாச்சா:))

சமுத்ரா said...

இன்னும் நிறைய வெட்டுங்க...

S Maharajan said...

தொடர்ந்து பேசுங்க..

பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க..

ராமலக்ஷ்மி said...

//தொடர்ந்து இந்த வருடமும்//

எல்லா வருடமும்.

//பேச ஆசை..............!//

கேட்க எங்களுக்கும் ஆசை. நினைவில் இருக்கட்டும்:)! வாழ்த்துக்கள் சித்ரா.

பாலா said...

ஆமா, அக்கா, இந்த மேட்டர் ஷகிராவுக்கு தெரியுமா??? rofl

சென்ற ஆண்டில் உங்கள் பதிவுகளை திரும்பி பார்க்கும் பொது, முன்ன பின்ன செத்து இருந்தால் தானே? பதிவு தான் என்னை மிகவும் பாதித்தது... இனி வரும் வருடங்களில் இது போல எந்த பதிவும் வரக்கூடாதென பிரார்த்திக்கிறேன் !!

Unknown said...

அக்கா அந்த பாட்டு எடுத்ததே உங்க பிளாக்க பார்த்துதான், அதுக்குள்ள புட்பால் மேட்ச் வந்ததால அங்க கொஞ்சம் ரிலீஸ் பண்ணிட்டாங்க போல, நல்லாவே திரும்பி பார்த்து இருக்கீங்க :-)

எல் கே said...

நல்ல நினைவுக் கூறல் . இந்த வருடம் மகிழ்ச்சியை மட்டும் அளிக்கட்டும்

Madhavan Srinivasagopalan said...

:-)

KANA VARO said...

இந்த வருடமும் உங்களுக்கு நன்றாகவே கழியும் அக்கா! உங்க 'வெட்டி பேச்சை' கேக்க நாங்க எத்தினை பேர் இருக்கம். தைரியமா எழுதுங்க.

அருண் பிரசாத் said...

waka waka வெச்சே ஒரு பதிவா....

ம்...ம்...விளங்கிடுச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம்...ம்...விளங்கிடுச்சி

test said...

தொடர்ந்து கலக்குங்க! :-)

Anonymous said...

செமத்தியா எழுதியிருக்கீங்க சித்ராக்கா!
இந்த வருசமும் வெட்டிப் பேச்சு டெரர்ரா இருக்கணும் :)

KParthasarathi said...

நிறைய பேரு பேசற நல்ல பேச்செல்லாம் உங்க வெட்டி பேச்சுக்கு இணையாகாது. உங்க பேச்சு தனி ரகம்.ஒரே கும்மாளம்.எல்லா விஷயங்களையும் உங்களுக்கே உரித்தான ஹாஸ்ய உணர்வோடு எழுதுவது உங்களுக்கு கை வந்த கலை. கொஞ்சம் இல்லை.நிறைய எழுதி எங்களை எப்போதும் போல சிரிக்க சிந்திக்க வைத்து கொண்டே இருங்க. .வயது உண்டு. வாழ்த்துகிறேன்!!

raji said...

claps to u chithra.

ரொம்ப எமொஷனலாய்ட்டேன்.வேற ஒண்ணும் சொல்லவே வர மாட்டேங்குது.

வெட்டிப் பேச்சு விவரமான பேச்சுதான்

Unknown said...

இந்த முறையும் சுவையான பேச்சு ...
வெட்டிப்பேச்சுக்கான பேம்லி சாங், தீம் சாங் ஓகே...
குடும்பத்துல யாராவது காணாம போனா பாடி ஒண்னு சேர்ந்திரலாம்..

தமிழ் உதயம் said...

இப்ப எங்க நீங்க வெட்டி பேச்சு பேசுறிங்க. புரியொஜனமா தான் பேசுறிங்க.

அஞ்சா சிங்கம் said...

வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன்........////////////////////

இதில் என்ன சந்தேகம் நிச்சயமாக மாபெரும் வெற்றி ..................

மங்குனி அமைச்சர் said...

அப்புறம், 13 வருடங்கள், நல்ல தோழியாய் பழகிட்டு, பதிவுலகம் வந்து - அது தந்த போதையில், என்னை காயப்படுத்தி, எனது நட்பை தூக்கி எறிந்து விட்ட வேதனையான சம்பவத்தில் இருந்து /////

ரொம்ப கஷ்டமான விஷயம்ங்க ............. சரி விடுங்க .........சியர் அப்

ஆர்வா said...

இந்த வருஷமும் இதே போல் வெட்டியாகவே போக வாழ்த்துக்கள்..ஹி..ஹி..

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

settaikkaran said...

//காமெடி மட்டும் அல்ல ... வம்பு, தும்பு, அப், டௌன், ட்ராஜெடி கூட ......பார்த்தேன். ஆனாலும், அதன் சாயல் - வடுக்கள் - எனது பதிவுகளில் தொடர்ந்து வராத வண்ணம் பார்த்துக் கொண்டு, வழக்கம் போல எழுதி கொண்டு இருந்தேன். வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன்.//

நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை! வம்பு,தும்பு, அப்,டௌன், ட்ராஜெடி இதெல்லாம் நானும் பார்த்தேன். ஆனால், அதன் சாயல்களையும் வடுக்களையும் எனது பதிவுகளில் வெளிப்படுத்தி எனது பலவீனத்தை பகீரங்கப்படுத்தியிருக்கிறேன். அந்த வகையில் நீங்கள் பெற்றிருப்பது எத்தகைய வெற்றி என்பதையும், இத்தனை பேர்களின் அன்புக்கு நீங்கள் பாத்திரமாயிருப்பதன் உண்மைக்காரணம் உங்களது இந்த அணுகுமுறைதான் என்பதனையும் உணர முடிகிறது.

உங்களது பயணம் மென்மேலும் வெற்றிகளை நோக்கித் தொடரட்டும்! :-)

'பரிவை' சே.குமார் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வெட்டிப் பேச்சு தொடரட்டும் அக்கா.

Kousalya Raj said...

உங்க எழுத்து யாரையும் ரசிக்க வைக்கும் சித்ரா. சோகத்தை கூட மறைச்சிட்டு சந்தோசமா சொல்ல உங்களால் தான் முடியும்பா.

கடந்த வருடத்தின் வெற்றி இந்த வருடமும் தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

வலைப்பூவின் பெயர் மட்டுமே வெட்டிப் பேச்சு. ஆனால் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் இந்த வலைப்பூவின் உயிர் மூச்சு! ஆஹா கவிதை மாதிரி வருதே...:) நல்ல பகிர்வு சகோ. இந்த வருடத்திலும் நிறைய இடுகைகள் இட்டு எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_18.html

சி.பி.செந்தில்குமார் said...

I APPRICIATE U NOT ONLY FOR WRITTING STYLE AND ALSO FOR HUMANITY, HUMOR, AND GOOD MIND.. CONGRATS

சி.பி.செந்தில்குமார் said...

the flash back is nice

மாணவன் said...

இந்த வருடமும் வெட்டிப்பேச்சு தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...

vinu said...

kadichile shakiraa paatyea remix pannyyaaachchaaaaa;


nadaththunga nadaththungaaa


ha ha ha ha [unga stylil]

MANO நாஞ்சில் மனோ said...

பேசுங்க மக்கா பேசுங்க....

suneel krishnan said...

Tsamina mina zangalewa
இது ஏதாவது சாப்பிடுற பொருளா ?
வாழ்த்துக்கள்ங்க ,தொடர்ந்து கலக்குங்க

எம் அப்துல் காதர் said...

நேற்று ஒரு பதிவு போட்டாச்சு! இன்று ஒரு பாட்டெழுதி... ஆல்பம் போட்டாச்சு!! நாளை என்ன குறும்படமா என்றெல்லாம் கேட்கமாட்டேன். அமெரிக்கா விலிருக்கும் நீங்கள் அதை நிறைவேற்ற நிறைய சாத்திய மிருக்கு!! சரியா??... ஹா.. ஹா.. ஹா.. ஹா..

பதிவு சூப்பர் கலக்கல்ஸ் டீச்சர்!!

ஸ்ரீராம். said...

வெட்டிப் பேச்சுகளை வெட்டி குவித்துக் கொண்டே இருங்கள்...எவ்வளவோ சோக சம்பவங்கள் இருந்தும் நீங்கள் சொன்னது போல உங்கள் எழுத்துகளில் அது பிரதிபலித்ததில்லை. பதிமூன்று வருடத் தோழி பற்றி சொன்னது மனதைத் தொட்டது. வாழ்த்துக்கள்.

NADESAN said...

இந்த வருடமும் நிறைய வெட்டி பேச்சுக்கள் எங்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறோம்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

Muruganandan M.K. said...

புல் ரவுண்ட் போய் சுவையாக அள்ளித் தெளித்திருக்கறீர்கள்.
சுவார்ஸமாக இருந்தது.

சசிகுமார் said...

நல்லா தான் திரும்பி பார்த்து இருக்கீங்க

ஆயிஷா said...

வெட்டிப் பேச்சு... கலக்குங்க....

Jana said...

ஷாக்கிராவின் திஸ் டைம் போர் அப்ரிக்காவை விட்டுவிட்டு, தங்கள் கோணத்தில் நான் யோசித்தது உண்டு. ஸேம்... பீலிங்ஸ்...தொடர்ந்து பேசுங்க..

G.M Balasubramaniam said...

After reading your last post Ithought of making my comment to request you to share some useful informations like what you had done in your earlier post instead of omly vettippaechu. But when I see such a lot of people like whatever you write, I feel my comment will only incur the wrath of many. As such now I will only say , do what you like so long as it does no harm to anyone. Am I too conservative.?

Anonymous said...

:))

Prabu M said...

கலக்கி எடுத்திருக்கீங்க அக்கா!!
waka waka பாட்டுல வெட்டிப்பேச்சு, வெட்டிப்பேச்சுன்னு சேர்த்து!!! ஹ் ஹ ஹ ஹாஅ
நல்லா சிரிக்கிறது வேற... ரசிச்சு சிரிக்கிறது வேற... 2010ல் நிறைய தடவை ரசிச்சு சிரிச்சிருக்கிறேன் உங்களுடைய கொஞ்சம் வெட்டிப்பேச்சில்!!

2010 ஃபெப்ரவரியில்தான் எனக்கு சித்ரா அக்கா அறிமுகம்!! :)

இதை ஜஸ்ட் ஓர் அறிமுகம்னு சொல்லிட மாட்டேன்... ஒவ்வொரு இண்ட்ராக்ஷனும் ஓர் அனுபவம்!

எந்த விஷயம் எடுத்துக்கிட்டாலும் அதுல முழு மனதோடு ஈடுபடுத்திக்கொண்டு பெர்ஃபெக்டா முடிக்கிற உங்களுக்கு 2011ல் நிச்சியம் உயரங்கள் சாத்தியமாகும் அக்கா... வாழ்த்துக்களுடன்....

உங்க ஆன்லைன் தம்பி...
பிரபு எம்!!

goma said...

வ்ர்ட்டிப்பேச்சு புதுப் புது கிளைகளாக வளர்கிறது......பாராட்டுக்கள்

சேலம் தேவா said...

உங்களுக்காகவே பாடின ஆல்பம் மாதிரியே மேட்ச் ஆகுது.கலக்குங்க சித்ராக்கா..!! :-)

ADHI VENKAT said...

இந்த வருடம் உங்கள் எழுத்து மேலும் வளர வாழ்த்துகள். என்னுடைய பிளாக்கர் அப்டேட் ஆவதில்லை. மூன்று பதிவுகள் போட்டுள்ளேன். முடிந்த போது படிக்கவும்.

தூயவனின் அடிமை said...

//2010 - திருப்பி போடணும்//

என்னது பிலிம் மை திருப்பி ஓட்டுனுமா?.....

பேசுங்க..பேசுங்க..பேசிகிட்டே இருங்க.

RVS said...

ஷகிராவ வச்சு சென்ற வருஷ நினைவுகள் போட முடியும்ன்னு செஞ்சு காமிச்சதுக்கு நன்றி. அடி தூள்... ;-)

Priya said...

இயல்பான எழுத்துக்களால் கவர்ந்திடும் நீங்க, தொடர்ந்து இதேப்போல எழுதி கலக்குங்க...
ஷகிரா லிரிக்ஸ் சூப்பர்:)

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

இந்த வருடம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .

Menaga Sathia said...

க்ரேட் சித்ரா,,இந்த வருடமும் தொடர்ந்து சூப்பரா கலக்குங்க...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வெட்டிப் பேச்சு பேச...
தொடர்ந்து பேச...
வாழ்த்துக்கள்!

Gayathri Kumar said...

very nice flash back. Best wishes for this year too..

Jayanthy Kumaran said...

Keep up the good work Chitra...love your posts..very lively n enjoyable...keep them coming..:)
Tasty appetite

Suni said...

தலைவலி student,
sorry தலைவலின்னு சொன்னீங்களே இப்போ எப்படி இருக்கு?
க‌ட்அடிச்சிட்டு ஆட்டம்,பாட்டத்தோட ஆர்ப்பாட்டமா இருக்கீங்க. கட் பண்ணதுக்கு பெஞ்சு மேல ஏறி நின்னு A to Z ஐ தலைகீழா Z to A வரை சொல்லணும்.

Anonymous said...

பேசுங்க பேசுங்க நாங்க கேக்குறோம்!!!!

Mahi_Granny said...

''எல்லாம் வல்ல இறைவன் அருளால், தொடர்ந்து இந்த வருடமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு பேச ஆசை..............!''கொஞ்சம் அல்ல , நிறையவே பேசுங்க. கேட்க ரெடி

GEETHA ACHAL said...

சூப்பரோ சூப்பர்ப்....அருமையாக இருக்கு...

எப்படி சித்ரா இப்படி எல்லாம்....

ஹேமா said...

சிதரா...உங்க கற்பனையே கற்பனை.அபாரம்.வாழ்த்துகள் தோழி !

ம.தி.சுதா said...

அக்கா சகீராவைக் கூட விட்டு வைக்க மாட்டிங்களா... ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

Geetha6 said...

செமத்தியா கலக்குறீங்க !!

செல்வா said...

கண்டிப்பா வெற்றி பெற்றுட்டீங்க அக்கா !!

Unknown said...

// முன்ன பின்ன செத்து இருந்தால் தானே? பதிவு தான் என்னை மிகவும் பாதித்தது...//

ஆனால் அதிலிருந்து வெகு விரைவில் மீண்டு வந்தீர்கள், மற்றவர்களால் இந்த அளவு முடியுமா என்பது சந்தேகமே?

ஆமினா said...

//எல்லாம் வல்ல இறைவன் அருளால், தொடர்ந்து இந்த வருடமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு" பேச ஆசை..............! //

நாங்க இருக்குற வரை வெட்டி பேச்சுக்கு பஞ்சமே இருக்காதுங்கோ :)

சுசி said...

//வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன்.//

நினைக்காதிங்க.. வெற்றியேதான்.

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு சித்ரா! 2011 முன்னிலும் அழகானதாக‌ அமைய இனிய வாழ்த்துக்கள்!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தொடர்ந்து கலக்குங்க...சித்திராக்கா

வேலன். said...

கலக்குங்க...கலக்குங்க...கலக்கிட்டேஇருங்க...

வாழ்க வளமுடன்.
வேலன்.

முத்துசபாரெத்தினம் said...

அடகண்ணு கண்ணு ஒடனேபடிச்சுட்டு கருத்து எழுதிட்டியேம்மா. நா ஒண்ணொண்ணாக் கண்டுபிடிச்சு எழுதறதுக்குள்ள ரொம்பநேரமாயிருது.அந்தநேரத்துலதான் யாராவதுவர்ராங்க போன்வருது வேலக்காரி வர்ரா.அதுலவேற நேரம்போயிருது.ஒன்னோட ப்லாக் ல வர்ரமாதிரி நெறய்ய டிசைன் எல்லாம் செய்யணும்னு எனக்கு ஆசை. செய்யத்தெரியலை.இத எழுதவே அரை மணி நேரமாச்சும்மா. நல்லது.

Anonymous said...

இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் புரியாம நான் படுற பாடு இருக்கே.... இந்த ஷகிரா தங்கச்சி பாட்டுக்காவது அர்த்தம் சொன்னீங்களே. ரொம்ப தேங்க்ஸ் சித்ரா அவர்களே!

முத்துசபாரெத்தினம் said...

ஏம்மா ஒன்னோடநட்பைப்போயி தூக்கியரிஞ்சா அந்தநட்பு நல்லநட்பாத் தெரியலையேம்மா. போகடும்விடு
இவ்வளவுபேர் உன்னை விரும்பி
எழுதுறோம்ல.கற்றாரைக் கற்றாரே
காமுறுவர்.அதுதான் நல்லது.

Anonymous said...

இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் புரியாம நான் படுற பாடு இருக்கே.... இந்த ஷகிரா தங்கச்சி பாட்டுக்காவது அர்த்தம் சொன்னீங்களே. ரொம்ப தேங்க்ஸ் சித்ரா அவர்களே!

ரிஷபன் said...

எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்க என் பிரார்த்தனையும்.
வெட்டிப் பேச்சு அல்ல.. விவரமான பேச்சு!

Prabu Krishna said...

வம்பு கேள்வி

இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் சொல்லுறீங்க இப்போ வர்ற ஒரு தமிழ் பாட்டுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?
(உதாரணம்: உஸ்ஸுமு லார்ஸேய்)

sury siva said...

வைரட்டியாக பல பேசிவிட்டு
வெட்டி பேச்சு இதுவென்றால் !

பகிர்ந்தவிதமும் அழ்கு.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

சி.பி.செந்தில்குமார் said...

இப்பத்தான் லேபிள் பார்த்தேன்.. சும்மா.. ஹா ஹா செம நக்கல் தான். சரி சரி.. புது பதிவு போடலையா?

Asiya Omar said...

ஒன்ஸ் மோர் வாசிக்கிற அளவு பதிவுலகில் கொடி கட்டி பறக்கறீங்க,சித்ரா..
பாட்டு போட்டு அசத்திட்டீங்க.தொடர்ந்து பேசுங்க ,பேசுங்க...

கோமதி அரசு said...

//எல்லாம் வல்ல இறைவன் அருளால், தொடர்ந்து இந்த வருடமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு" பேச ஆசை.....//

ஒவ்வொரு வருடமும் பேசிக்கொண்டு இருங்கள். அன்பு உள்ளம் கொண்டவர்கள் கேட்பார்கள்.

உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

காமெடி மட்டும் அல்ல ... வம்பு, தும்பு, அப், டௌன், ட்ராஜெடி கூட ......பார்த்தேன். ஆனாலும், அதன் சாயல் - வடுக்கள் - எனது பதிவுகளில் தொடர்ந்து வராத வண்ணம் பார்த்துக் கொண்டு, வழக்கம் போல எழுதி கொண்டு இருந்தேன். வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன்.]]

இதுதாங்க மேட்டரு ...

வெற்றி என்பது தோல்வியுறாமல் இருப்பதே.

தக்குடு said...

கவுண்டமணி குரலில், "அடகொக்கா மக்கா! waka wakaவை வெச்சே ஒரு பதிவு போட உன்னால மட்டும் தான் முடியுமாத்தா"...:)

இந்த ஆண்டும் சிறக்க வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
தக்குடு

சிவகுமாரன் said...

நல்ல selection . Knaanஇன் waving flag கேட்டிருக்கிறீர்களா ? waka wakaவை விட நன்றாய் இருக்கும் lyrics.

அணில் said...

அழகான ஆட்டத்திலேயே மெய் மறந்திடுறோம், அப்புறம் எப்படி உங்களை மாதிரி பாடல் வரிகளை ஆராய்வது?
G.M Balasubramaniam இவரு என்ன சொல்றாருன்னே இந்த மரமண்டைக்கு விளங்க மாட்டீங்கிது.

பாலராஜன்கீதா said...

சித்ராசாலமன் இனிய மண நாள் வாழ்த்துகள்

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

vinu said...

94

vinu said...

95

vinu said...

96

vinu said...

97

vinu said...

98

vinu said...

99

vinu said...

100

appadi oruvaliyaa naanum centam pottaachuuuuuuuuuuuu

priyamudanprabu said...

MMM DO THE SAME THIS YEAR

மைதீன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Anisha Yunus said...

நல்ல வேளை அந்த வீடியோக்கு கரோகேல பாடாம விட்டீங்களே....இந்த பாடலை உல்டா பண்ணி ஷகீரக்கே அனுப்பி வெக்கலாமே.... நடத்துங்க... நடத்துங்க...