நேற்று எங்களுக்கு வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க....
இன்று, வேறு ஒரு பதிவு எழுத தயார் ஆகி கொண்டு இருந்த பொழுது, ஒரு சீரியஸ் பதிவு எழுத வேண்டியதாகி விட்டது.
மன்னிக்கவும்.
இங்கு பரப்பரப்பு இல்லாத பெரிய நியூஸ்.... ஆனால், இந்தியாவில் பரபரப்பா பேசப்படுற நியூஸ் இது, என்று நண்பர் ஒருத்தர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார்.
http://timesofindia.indiatimes.com/world/us/Duped-Indian-students-ignored-red-flags/articleshow/7393658.cms
இதை விட தெளிவாக எழுத முடியாதே ...... உண்மையை சொல்லி இருக்காங்க....
உனக்கென்ன தெரியும்னு கேட்காதீங்க..... இங்கே வெட்டியாக இருக்கிற நேரம் எல்லாம், சில Indian Students' Association உடன் சேர்ந்து ஏதாவது ப்ரோக்ராம் organize செய்வதில், ஒத்தாசையாய் இருப்பது எனது பொழுதுபோக்கு. அவர்களின் மன நிலைகளும் எண்ண அலைகளும் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்புகளும் கிடைத்து இருக்கின்றன.
அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க, "லார்டு லபக் தாஸ்" வீட்டாளுக மட்டும் தான் என்று இருந்தது தான் அந்த காலம். இப்போ, யார் வேண்டுமானாலும் படிக்க வரலாம் என்கிற அளவுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் வந்து இருக்கின்றன.
எல்லாம் செய்து கொடுத்தாலும், கடைசியிலே மாங்கு மாங்குனு படிச்சு எழுதினால் தான் ஒழுங்கான டிகிரி கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
மாணவர்களுக்குரிய F1 டைப் விசா பெற்று, வருபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் பெருகி கொண்டு தான் வந்து இருக்கிறது. இதுவும் நல்ல விஷயம் தான்.
http://www.nriol.com/oisnet/usastudentstats.asp
அந்த லிங்க்ல் உள்ளது படி, 2009 கணக்கு படி அமெரிக்காவுக்கு அதிகமாக படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தில் வந்து இருக்கிறது. அந்த வருடம், 103,260 மாணவர்கள், இங்கே வந்து இருக்கிறார்கள். இதுவும் நல்ல விஷயம் தான்.
மேட்டர் என்னன்னா, இப்படி படிக்க வர எல்லோருமே, "நல்லா படிச்சு, டிகிரி வாங்குறதுதான் என் உயிர் .... என் மூச்சு.... என் கடமை..... என் கட்டுப்பாடு......" என்று வருவது இல்லை. பெயர் வாங்கி உள்ள பெரிய பல்கலைகழகங்கள் எல்லாம் சேர்ந்தால், "rules and regulations" ரொம்ப பேசுறாங்கப்பு..... எனக்கு நோகாமல் நொங்கு எடுக்கணும். அதுக்கு என்னா வழி?" அப்படின்னு இந்தியாவில் இருந்து வருவதற்கு முன்னாலேயோ ..... இல்லை வந்தவுடன், பிரத்யேக Forum ...காரம் மூலமாகவோ எங்கே சீப்பா fees இருக்கும்? எங்கே அமெரிக்க மண்ணுல காலை வச்ச உடனேயே ..... இந்த கையில ஒரு வேலையை கொடுத்து, அடுத்த கையில டாலர்ஸ் கொடுக்கிற மாதிரி இருக்கும் என்று பார்த்து கிட்டு ..... யோசிக்காமல் குதிச்சுடுறாங்க....
வாசித்து பார்த்தால், குறுக்கு வழியில கைலாசம் போக எப்படி ஆலோசனை கேக்குறாங்க..... அது தப்புன்னு சொல்றவங்க பேசுறதை, இந்த காதில் வாங்கி .... அந்த காதில் எப்படி விடுறாங்க என்று தெரியும்.
இந்த மாதிரி மாணவர்களை டார்கெட் செய்து, சில online universities .... சட்டத்தில் இருக்கிற ஓட்டையை .... பெருசாக்கி, தங்களுக்கு சாதகமாக மாற்றி, இந்த மாணவர்களுக்கு வசதியாக்கி கொடுத்து இருக்காங்க. ஒரு டிகிரி வாங்கி முடித்த பின் , அல்லது முடிக்கும் தருவாயில், தாங்கள் படித்து இருக்கும் துறை சம்பந்தமான வேலைகளில் - trainee - ஆக இருக்க மட்டுமே பயன்பட கொடுக்கப்படும் CPT மற்றும் OPT work permits ..... இவர்களுக்கு, university il சேர்ந்த முதல் வாரத்திலேயே கிடைக்கும் படி செய்து விடுகிறார்கள். தங்களின் துறையில் மட்டும் இல்லாமல், பெட்ரோல் பங்க் வேலையில் இருந்து IT வேலை வரை, எல்லா வேலைகளையும் செய்ய இந்த வொர்க் பெர்மிட் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.
இதனால், நியாயமாக அந்த வேலை கிடைக்க வேண்டிய இன்னொரு இந்தியருக்கு கூட அந்த வேலை கிடைக்காமல் போய் விடும் நிலை உள்ளது.
இந்த பல்கலைகழகங்களில், ஆன்லைன் வகுப்புகள் மட்டும் தான். அதுவும் கண் துடைப்புக்காக மட்டுமே. அதை அமெரிக்காவில் எந்த மூலையில் இருந்து கொண்டும், இவர்கள் படிப்பது போல, பாவ்லா கட்டிக் கொள்ளலாம். எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில், கட்டிய fees க்காக ஒரு diploma டிகிரியோ .... ஒரு வெத்து மாஸ்டர்ஸ் டிகிரியோ கொடுத்துடுவாங்க.
இந்த டிகிரியை வைத்து அமெரிக்காவில் எங்கும் வேலை வாங்க முடியாது என்பதை, இந்த மாணவர்கள் புரிந்து கொள்வதில்லை. பெரும்பாலும் இந்த universities எல்லாம், blacklisted ஆக இருக்கும். அதை பற்றியும் இவர்கள் கவலைப்படுவதில்லை.
இப்படிப்பட்ட பல்கலைகழகங்களை தவிர்க்க சொல்லி, எத்தனையோ Forum மற்றும் பல்வேறு வழிகளில் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு.
இப்பொழுது பிடிபட்டு, இழுத்து மூடப்பட்டு இருக்கும் Tri-valley University - ஒரு சீனப் பெண்மணியின் கவனிப்பின் கீழ் இருந்து இருக்கிறது. அந்த பல்கலைகழகத்தின் கட்டடத்தை பார்த்தாலே, அது போலி என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்.
அப்படி இருந்தும் அதில் சேர்ந்தது - 90 % மேலாக இந்தியர்கள்தான். H 1 B வொர்க் விசா வாங்கி வந்து இங்கே வேலை பார்க்கும் சில இந்தியர்களின் கணவருக்கோ, மனைவிக்கோ H 4 விசா (Dependent visa) கொடுக்கப்படும். ஆனால், இந்த விசாவை வைத்து கொண்டு வேலைக்கு செல்ல முடியாது. ஆனால், இப்படிப்பட்ட பல்கலைகழகங்களில் சேர்ந்து கொண்டு, தங்கள் விசா status மாற்றி கொண்டு, வேலைக்கு செல்பவர்களும் உண்டு.
இந்த மாய வலையில், தெரிந்தோ தெரியாமலோ விழும் சில மாணவர்கள், தாங்கள் படிக்க வந்த நல்ல பல்கலைகழகங்களில் இருந்து, மாற்றி கொண்டு - டிகிரி பற்றி கவலைப்படாமல் உடனே பணம் சம்பாதிக்கும் ஆசையில், இங்கே சேர்ந்து விடுவதும் உண்டு.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், Tri-Valley University இல், இது வரை மாட்டி இருக்கும் பெரும்பாலானோர், ஆந்திராவை சேர்ந்தவர்கள். இவர்களில் பலர், தாங்கள் எந்த மாதிரி பாதையில் செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம் என்பதை நன்கு தெரிந்து கொண்டவர்களே.
மாட்டாத வரை, செய்வது தவறல்ல என்ற மன நிலையை என்னவென்று சொல்வது?
இந்த பல்கலைகழகம் பற்றிய சந்தேகம் வரவும், அரசாங்கம் விசாரணை ஆரம்பித்து விட்டது. விசாரிக்கப்பட்ட மாணவர்களில் சிலர், வெளியே தகவல்கள் கொடுத்து அலெர்ட் செய்து இருக்கிறார்கள். அதை பலர் புறக்கணித்து இருப்பது, இப்பொழுது வெளியே வந்து இருக்கிறது. வார்னிங் மெசேஜ்களை சீரியஸ் ஆக எடுத்துக் கொண்ட வெகு சிலரே, உடனே வேறு மாற்று ஏற்பாடுகள் செய்து கொண்டு விலகி விட்டார்கள்.
Tri-Valley University இல் உள்ள மாணவர்களின் தகவல்கள் அத்தனையும் அரசாங்கத்தின் கையில் .....
இதில் வேடிக்கை என்னவென்றால், நானூறுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் முகவரியாக, ஒரே வீட்டின் முகவரியை தந்து இருக்கிறார்கள்.
இப்பொழுது, அந்த ஊரில் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருக்கும் அத்தனை மாணவர்களும் உடனே Immigration office, தொடர்பு கொள்ள சொல்லி உத்தரவு வந்து இருக்கிறது. இதில், H 4 விசாவை மாற்றி விட்டு, "அரசனை நம்பி, புருஷனை கை விட்ட கதையாய் இருக்கும்" இந்தியர்களுக்கு வயிற்றில் புளி கரைத்து இருக்கிறது. ஏனெனில், அவர்களது இந்த டம்மி வொர்க் பெர்மிட் விசா status ரத்து செய்யப்படும் போது, அவர்கள் "out of status" ஆக நேரிடலாம். அதனால், தன் கணவரையோ, மனைவியையோ விட்டு விட்டு இந்தியா திரும்பி செல்லும் நிலை நேரிடலாம்.
இதை போன்ற நிலைகளை தவிர்க்க, இங்குள்ள Immigration lawyers மற்றும் Telugu Association of North America (TANA) வின் உதவிகளை நாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஊரிலேயும், sensation news ஆக்கி, இந்திய அரசாங்கத்தை உதவிக்கு அழைக்கிறார்கள்.
நம்ம நாட்டில் இருக்கும் அரசாங்க விதிகளை மதித்து - அதற்கு உட்பட்டு இருப்பது, ஒவ்வொரு இந்தியரின் மனப்பக்குவத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது ஆக இருக்கலாம். ஆனால், தாய் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வரும் போது, அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை தெரிந்து, அதற்கேற்ப நடக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறதல்லவா?
நம்ம ஊரில், "நம்ம நாட்டாமை வீட்டு பையானாம்.... கேஸ் போடாதே!" என்றோ, "நம்ம MLA வுக்கு வேண்டியவராம். கண்டுக்காதே!" என்றோ சொல்லி, தவறுக்கு தண்டனை இல்லாமல் போவதை சாதரணமாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்ட பலருக்கு, இது கஷ்டம் தான்.
இருந்தாலும் இந்த மாணவர்களுக்கு, எந்தவித discrimination ம் அமெரிக்க அராசங்கம் காட்டவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அது மட்டுமே செய்யப்படுகிறது. விசாரணைக்குப் பின், தெரிந்தே தவறு செய்தவர்களின் விசா - பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவர்கள், வேறு எங்கும் விதிகளை மீறி, சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் முழுதும் எடுத்து முடிக்கும் வரை, அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க chip transmitters காலில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவர்களை, சிறையில் அடைக்க வகை இருந்தும் (giving fraudulent information, knowingly) அப்படி செய்யாமல் , அவர்களை Voluntary deportation - தாங்களாகவே முன் வந்து இந்தியா திரும்ப செல்ல, அமெரிக்க அரசாங்கம் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால், அந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அப்படி திரும்பி இந்தியா செல்ல விரும்பவில்லை. அமெரிக்க அரசாங்கம், இவர்களுக்கு உதவும் வண்ணம் மாற்று ஏற்பாடு செய்து, அமெரிக்காவிலேயே தங்கும் படி செய்ய எதிர்பார்க்கிறார்கள்.
அது எப்படி உனக்குத் தெரியும் அப்படின்னு கேட்கிறீங்களா? TANA மூலமாக இந்த மாணவர்களுக்கு உதவியாக இருக்க முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் TANA Students' Chair ஆக இருக்கும் அஷோக் கொல்லாவுடன் (Ashok Kolla) தொலைபேசியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர் இந்த பல்கலைகழகத்தில் படிக்கவில்லை என்றும், இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள ஆந்திர மாணவர்களின் பிரதிநிதியாக தான் இருப்பதால், TV 9 முதல் கொண்டு பேட்டி தந்து இருப்பதாக தெரிவித்தார். அந்த மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும் இந்திய அரசாங்கம் தலையிட்டு - ஆவன செய்ய வேண்டும் என்று மாணவர்கள்
விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த பல்கலைகழகம் தான் தவறான தகவல்கள் தந்து மாணவர்களை ஏமாற்றி விட்டதாகவும் சொன்னார்.
அந்த மாணவர்களை, victims என்ற பொழுது மட்டும் வந்த சிரிப்பை, ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன். ஒரு பதிவுக்கு உள்ள கமென்ட் போடுவது போல இருந்தால், "ஹா, ஹா, ஹா, ஹா, ஹி, ஹி, ஹி, ஹி, ஹோ, ஹோ, ஹோ, ஹோ, ஹையோ ஹையோ ஹையோ ..... " என்று சிரித்து இருக்கலாம். ப்ச்.....
ஈஸியாக கிடைக்குதே என்று தெரிந்தே சென்ற இந்த மாணவர்கள், victims என்றால், அங்கே தமிழ் மீனவர்களை சுட்டு கொண்டு இருக்கிறாங்கப்பா..... அவங்களை என்னவென்று சொல்வது? முதலில் அதை கவனிங்கப்பா... அப்புறம் இதை பற்றி கவலைப்படலாம்.
ஒழுங்காப் படிக்க வந்து, நல்ல பல்கலைகழகங்களில் இருக்கும் எல்லா இந்திய மாணவர்களையும், Garnier Shampoo products சொல்ற மாதிரி, அமெரிக்காவில் பத்திரமாக பார்த்துக்கிறாங்க.... மரியாதையாகத்தான் நடத்துறாங்க. அவர்களுக்கு, இந்த பிரச்சனை எதுவும் இல்லை.
வேலியில் ஓடுவது ஓணான் என்று தெரிந்தும், எடுத்துக் கொண்டு, இப்பொழுது குத்துதே குடையுதே என்று சொன்னால்? ............ ம்ம்ம்ம்ம்ம்...........
இந்த சம்பவம் கேள்விப்பட்டதும், எங்கள் மாணவ குழுவில் ஒரு தமிழ் நண்பர், "இந்த ஆந்த்ரா பசங்களே இப்படித்தான், சித்ரா.... எப்படியாவது loophole பிடித்து அமெரிக்காவில் தங்க புளப்பை பாத்துக்கிடுவாங்க. இப்போ மாட்ட ஆரம்பிச்சிருக்காங்க!" என்று சொல்லிக் கொண்டு இருந்த பொழுது - அவரை சந்தித்த ஒரு அமெரிக்க நண்பர், "Hey man! Did you hear the news about those Indian students in California?" என்றதும் இவருக்கு முகம் வாடிப் போய் விட்டது. "சித்ரா, எனக்குத்தான் அவங்க ஆந்த்ரா.... இவங்களுக்கு, இந்தியர்கள். என்னையும் அவர்களையும், இந்தியர்களாக பார்க்க மட்டும் தான் இந்த அமெரிக்கனுக்குத் தெரியும். ஆந்த்ரா, தமிழ், மலையாளம் என்று இல்லை.... அதை ஒரு நிமிஷம் மறந்துட்டேன். ஒரு இந்தியன், உலக சாதனை செய்தால், எல்லோருக்கும் பெருமை. ஆனால், இப்படி நேரத்தில் மட்டும் பிரிச்சு பார்க்க நினைச்சிட்டேனே!" என்றார்.
என்னத்த சொல்ல......???? நான் அவர் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தேன்.
106 comments:
சரியான நேரத்தில்..சரியான விழிப்புணர்வு பதிவு அம்மு..
well said :)
//இந்தியன், உலக சாதனை செய்தால், எல்லோருக்கும் பெருமை. ஆனால், இப்படி நேரத்தில் மட்டும் பிரிச்சு பார்க்க நினைச்சிட்டேனே!" என்றார்//
உண்மை!
//அவரை சந்தித்த ஒரு அமெரிக்க நண்பர், "Hey man! Did you hear the news about those Indian students in California?" என்றதும் இவருக்கு முகம் வாடிப் போய் விட்டது.//
இது தான் கண்ணா நாம...இது தான் வெளிநாட்டுகாரனுங்க...இப்படி இருந்தாலும் எங்க போனாலும் உருபடவே மாட்டோம்..நமக்குலையே அடிச்சிட்டு தான் சாவோம் அம்மு....
அந்த அமெரிக்கா போலி universities பட்டியலை பற்றிய லிங்க் கூட இதில் சேர்த்து விடுங்க அம்மு..
nalla review
அருமையாக சொல்லி இருக்கீர்கள் !!
சித்ரா மேடம் இதை பற்றி நான் ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் என்னை முந்தி வீட்டீரகள். எனக்கு கிடைத்த தகவல்களூம் நீங்கள் சொன்ன தகவல்களூம் ஓன்றுதான். நம்மை போல நேர்வழியில் வந்து கடினமாக உழைத்து நாம் சம்பாதித்த நல்ல பெயர்களையும் இந்த மாதிரி ஆட்கள் வந்து கெடுத்து விடுகிறார்கள். இதற்கு காரணம் நம் தலைவர்கள் மற்றும் குறுக்கு வழியில் சம்பாதிக்க கற்று தரும் பெற்றோரகளூம்தான் காரணம்.
எல்லா தெலுங்கு ஆட்களுக்கும் சத்யம் ஓனர் போன்று குறுக்கு வழியில் செல்ல ஆசை....பேராசை பெறு நஷ்டம். இது பற்றி தெரியாத நம் மத்திய அமைசசர்கள் கண்டணம் தெரிவிக்கிறார்கள். மூட்டாள் அமைச்சர்கள்
நல்ல விழிப்புணர்வு பதிவு
ரொம்பச் சரியாச் சொல்லிருக்கீங்க சித்ரா. வெளிநாடுகளில், சட்டதிட்டங்களின்படி நடக்காம ஏமாத்த நினைச்சுட்டு, அப்புறம், “இந்தியன் என்றால் இவர்களுக்கு இளக்காரம்” என்பதும், இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் என்றூ கூப்பாடு போடுவதும் வழக்கமாகிவிட்டது இவர்களைப் போலச் சிலருக்கு.
உங்களின் இந்தப் பதிவைப் படித்த பின்புதான் எனக்கே உணமை நிலை புரிகிறது. பல சமயங்களில் நம் தவறை உணர்வதேயில்லை!!
நன்றி சித்ரா விளக்கமான பதிவுக்கு!
நல்ல விரிவான பதிவு. இது பற்றி நானும் ஒரு சின்ன பதிவு போட்டிருக்கிறேன் வந்து பார்த்துட்டு சொல்லுங்க .....
http://ragariz.blogspot.com/2011/02/political-pages-from-rahim-gazali.html
//ஒரு இந்தியன், உலக சாதனை செய்தால், எல்லோருக்கும் பெருமை. ஆனால், இப்படி நேரத்தில் மட்டும் பிரிச்சு பார்க்க நினைச்சிட்டேனே!" என்றார்//
உண்மைதானே.. புள்ளை நல்ல காரியம் பண்ணினா, என்னைக்கொண்டிருக்குன்னும், அப்படியில்லைன்னா, அவரை(ளை)க்கொண்டிருக்குன்னும் சொல்றோமில்லையா?? அதேமாதிரிதான்.
\\ஈஸியாக கிடைக்குதே என்று தெரிந்தே சென்ற இந்த மாணவர்கள், victims என்றால், அங்கே தமிழ் மீனவர்களை சுட்டு கொண்டு இருக்கிறாங்கப்பா..... அவங்களை என்னவென்று சொல்வது? முதலில் அதை கவனிங்கப்பா... அப்புறம் இதை பற்றி கவலைப்படலாம். //
என்ன அழகா சொல்லிட்டீங்க.. சித்ரா.. பாராட்டறேன்..
மேலும் விதிகளை புறக்கணிச்சு பேராசையில் செய்யும் விளைவுகள் பற்றி எல்லாருக்கும் புரியும்படி சொல்லி இருக்கீங்க..
நடந்தது என்னன்னு தெளிவாகப் புரியமுடிகிறது சித்ரா.
பலருக்கு உதவும் இந்தப் பதிவு.
மிகவும் தேவையான மற்றும் நல்ல பதிவு சித்ரா.
குறிஞ்சி குடில்
நல்ல விழிப்புணர்வு பதிவு.
"Hey man! Did you hear the news about those Indian students in California?" என்றதும் இவருக்கு முகம் வாடிப் போய் விட்டது. "சித்ரா, எனக்குத்தான் அவங்க ஆந்த்ரா.... இவங்களுக்கு, இந்தியர்கள். என்னையும் அவர்களையும், இந்தியர்களாக பார்க்க மட்டும் தான் இந்த அமெரிக்கனுக்குத் தெரியும். ஆந்த்ரா, தமிழ், மலையாளம் என்று இல்லை.... அதை ஒரு நிமிஷம் மறந்துட்டேன். ஒரு இந்தியன், உலக சாதனை செய்தால், எல்லோருக்கும் பெருமை. ஆனால், இப்படி நேரத்தில் மட்டும் பிரிச்சு பார்க்க நினைச்சிட்டேனே!" என்றார்.
எத்தனை உண்மையான விஷயம்..
அருமையான அலசல்.
இந்தியர் என்ற கண்ணோட்டத்தில் நாம் பார்த்தால் பிரச்சனைக்கு ஒரு தீர்வை அனைவரும் சேர்ந்து எடுக்கலாம்
மிக மிக சிறந்த பதிவு. நான் இந்த விவகாரம் வந்த போது சித்ரா இதை பற்றி எல்லாம் எழுதலாமே என்று நினைத்தேன். எழுதி விட்டீர்கள். மகிழ்ச்சி.
அமெரிக்க ட்ரை-வாலி பல்கலைக்கழகத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் எனக்குத் தோன்றிய சில ஐயங்களை ஒட்டி நீங்களும் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். நடுநிலையில் இருந்து எழுதியிருக்கிறீர்கள். நன்று..!
இங்கயும் சுடுது?!!
ரொம்ப தெளிவான பதிவு சித்ரா. இங்கு மீடியா சரியாக விஷயம் தெரியாமல் (அல்லது தெரிந்தும் தெரியாமல் நடித்துக் கொண்டு) மக்களின் உணர்சிகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல் (black listed) வெளியிட முடியுமா ? நமக்குத் தெரிந்தவர்களை மட்டுமாவது காப்பாற்ற இயலும்
அருமையா எடுத்து சொல்லி இருக்கீங்க.விழிப்புணர்வு ஊட்டக்கூடியது.
தெளிவாகவு சிறப்பாகவும் பதிவு செஞ்சிருக்கீங்க....
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றிங்க...
அருமையா சொல்லி இருக்கீங்க சித்ரா.
ஆணி அடித்தது போல் சொல்லி இருக்கிறீர்கள்
//அவர்கள், வேறு எங்கும் விதிகளை மீறி, சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் முழுதும் எடுத்து முடிக்கும் வரை, அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க chip transmitters காலில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.//
நான் கூட இந்த விஷயத்த இங்க பேப்பர்ல பாத்தவுடன் கலைஞர் வசனம் எழுதின மாதிரி பொறுத்தது போதும்.. பொங்கி எழுந்து யாருக்குடா விலங்கு போடறீங்க..? அப்டின்னு பதிவு போடலாம்ன்னு இருந்தேன்.நீங்க சரியான சமயத்தில் இந்த பதிவு போட்டு அமேரிக்காவ காப்பாத்திட்டீங்க..!! ஹி.ஹி..ஹி..
//மாட்டாத வரை, செய்வது தவறல்ல என்ற மன நிலையை என்னவென்று சொல்வது?//
இந்த மன நிலைதான் பல தவறுகளுக்கு வித்திடுகிறது
அவசியமான விழிப்புணர்வு பதிவு
பகிர்வுக்கு நன்றி
இது வெகு முக்கியமான பதிவு .நீங்கள் மிக தெளிவாக அலசி ,உண்மையை ஊருக்கு சொல்லி இருக்கீங்க .ஒரு பக்கம் ,கோவமாகவும் ,எரிச்சலாகவும் -இன்னொரு பக்கம் பாவமாகவும் இருக்கு .சிக்கி கூலும் வரை எதுவும் தப்பு இல்ல என்று எண்ணுவது நம் இந்திய மனசிற்கு ஒன்றும் புதிது இல்ல .என்னத்த சொல்ல !!போகும் இடங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று கூட நம்ம ஆட்களுக்கு தெரியவில்லை !!
//அவரை சந்தித்த ஒரு அமெரிக்க நண்பர், "Hey man! Did you hear the news about those Indian students in California?" என்றதும் இவருக்கு முகம் வாடிப் போய் விட்டது.//
இது தான் கண்ணா நாம...இது தான் வெளிநாட்டுகாரனுங்க...இப்படி இருந்தாலும் எங்க போனாலும் உருபடவே மாட்டோம்..நமக்குலையே அடிச்சிட்டு தான் சாவோம் அம்மு....
Repeatu!
அவசியமான கருத்துக்கள் மேடம்! இன்று நீங்க சொன்னது வெட்டிப் பேச்சு அல்ல! நிஜப் பேச்சு! நன்றி மேடம்!!
நல்ல விழிப்புணர்வு பதிவு.
அப்பாடி எவ்வளவு விஷயம்.அருமை சித்ரா..
வெளிநாடு போறவங்க எல்லாம் ஆசைப்படா விட்டாலும் படிப்பை விட வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை.
உபயோகமுள்ள நல்ல பகிர்வு. ”பேராசை பெருநஷ்டம்” என்பது இவர்கள் விஷயத்தில் உண்மையாகிவிட்டது! :(
சூடான செய்திக்கு உடனே விளக்கம் தந்தது அருமை.
இனிமே தான் இந்தியா ஒரு தூதுவரை தேடி பெரிய கூட்டமாக ஏர்போர்ட்டில் அனுப்பி மெதுவாக் இந்த செய்தியை பாலிஷாக சொல்வாங்க,அதுக்கு நம்ம சித்ராவை கன்சல்ட் செய்தால் போதும்னு வெளி உறவுத்துறைக்கு தெரியனுமே.
நல்லா சொல்லி இருக்கீங்க..
வாசிப்பவர்களை நிறுத்திச் சிந்திக்க வைக்கும் பதிவு !
Hey, you gave totally different perspective on this issue.Thanks for this post. Have shared this in my FB.
Really good article. thanks for sharing.
ம்ம்ம் நானும் கேள்விப்பட்டேன்.. சித்து
சரியான பாதையில் சென்றால் என்றும் நல்லது..
நல்லதொரு விழிப்புணர்வு பதிவுங்க...
தெரிந்தே குழியில் விழும் மாணவர்களை என்னச்செய்ய முடியும்?
அமெரிக்காவில பயில விரும்பும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்..
//நம்மை போல நேர்வழியில் வந்து கடினமாக உழைத்து நாம் சம்பாதித்த நல்ல பெயர்களையும் இந்த மாதிரி ஆட்கள் வந்து கெடுத்து விடுகிறார்கள். இதற்கு காரணம் நம் தலைவர்கள் மற்றும் குறுக்கு வழியில் சம்பாதிக்க கற்று தரும் பெற்றோரகளூம்தான் காரணம்.//
உங்கள் பத்வு நிறைய விஷயங்களை விளக்கியது. இருந்தாலும் மனசில் ஒரு நெருடல். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படட்டும். ஆனால் அதற்காக காடுகளில் விலங்குகளை ட்ராக் செய்வதுபோல், காலில் ரேடியோ காலர்...மனசு சங்கடப்படுகிற்து சித்ரா. They are humans.Are there disparities in treatments.?
Wonderful review....its time to wake up..
Tasty appetite
கொஞ்சம் சீரியஸ் ... ஆனால் ரெம்ப முக்கியம்
மிக தெளிவான விவரங்களை எங்களுக்கு சொல்லிய உங்களுக்கு நன்றிகள்
எத்தனை தகவல்கள் சித்ரா..நான் குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்.. நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது.பயனுள்ள பதிவு அறிய வேண்டிய மாணவர்கள் அறிந்தால் நலம்..
aruami chitra ethuvumee veddi peessu illai.
புரியாத பல உண்மைகளை புரிய வைத்து விட்டீர்கள் குறுக்கு வழி என்பது இந்தியனின் D.N.A. க்குள் இருக்கும் ஒரு சங்கதி என்று நினைக்கிறேன் ...........
பூங்கொத்துப்பா!
என்னத சொல்வது சித்ரா...எல்லாம் ஆசைப்பட்டு மோசம் ஆகிவிடுறாங்க...
நல்ல வழியில் செல்லாமல் இருந்தால் இப்படி தான் ஆகும்...நல்ல பகிர்வு...நன்றி...
என்ன சொல்ல ஏது சொல்ல...
மனம் எப்போதும் உழைப்பின் பலனை யாசிக்கிறது. உடலோ உழைக்க மறுக்கிறது.
தேவையான பகிர்வு, பகிர்விற்கு நன்றி.
நல்ல பதிவு சித்ரா.
//நம்ம ஊரில், "நம்ம நாட்டாமை வீட்டு பையானாம்.... கேஸ் போடாதே!" என்றோ, "நம்ம MLA வுக்கு வேண்டியவராம். கண்டுக்காதே!" என்றோ சொல்லி, தவறுக்கு தண்டனை இல்லாமல் போவதை சாதரணமாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்ட பலருக்கு, இது கஷ்டம் தான்.//
ஆம் பலருக்கு இது கஷ்டம் தான் சித்ரா.
தேவையான சமயத்தில் தேவையான பதிவு.
நல்ல விளக்கங்கள்.
முதலில் மீனவர்களை கவனிப்பது மிக மிக முக்கியமாகும்.
அதை நன்றாக சொல்லிவிட்டீர்கள்.
உங்க போஸ்டிங் ல நெறைய விஷயம் இருக்கும் போல தெரியுது....பொறுமையா படிச்சுதான் கமென்ட் போடணும்..
இங்குள்ள பத்திரிக்கைகள் சொல்லும்
அரைகுறை தகவல்களைக் கண்டு
கொஞ்சம் குழம்பித்தான் போயிருந்தேன்
உங்கள் பதிவு தெளிவாக்கியது வாழ்த்துக்கள்
அற்புதமான அலசல் சித்ரா! ரொம்ப யோசிக்க வைத்து விட்டீர்கள்.இன்னொருமுறை படிப்பேன்.வாழ்த்துக்கள்
ஆசை பேராசை ஆகும் போது இது போலதான்.
கடைசி டச்சிங் அருமை.
இப்போ தான் தெளிவா புரிஞ்சுது. இதுக்கு தான் வெட்டிப்பேச்சு சித்ரா அக்கா வேணும். பிரச்சனையை விலா வாரியா விளங்க வைச்சிட்டாங்க
அப்ப நியூஸில் வந்ததெல்லாம் (அவர்களுக்கே) புரியாத உடான்ஸா!! (அது தான் the great) டீச்சர் !!
தெளிவான் விளக்கம் .நன்றி .வாழ்த்துக்கள்.உங்கள் சேவைக்கு.
***இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், Tri-Valley University இல், இது வரை மாட்டி இருக்கும் பெரும்பாலானோர், ஆந்திராவை சேர்ந்தவர்கள்.***
I dont feel sorry for them at all even if they are innocent. I am telling you, if US had been immigrated by Indians, instead of Europeans, it would have become a third-word country by now!
Indians have a very corrupt mind. They cant control such malpractices easily. I am glad they caught these guys! Think about the people who earn masters from andhra itself in some so and so university?
They should deport all these guys at once. They will certainly find another corrupt way to climb up. Please dont feel sorry for these scumbags! I dont think we need Indians like this in this country to pollute our names!
Chithra - very well said.. nice post..
@varun - why so much of generalization?
விழிப்புணர்வைத் தரும் அவசியமான பதிவு. நன்று சித்ரா.
வேலியில் ஓடுவது ஓணான் என்று தெரிந்தும், எடுத்துக் கொண்டு, இப்பொழுது குத்துதே குடையுதே என்று சொன்னால்? ............ ம்ம்ம்ம்ம்ம்...........
/////
ம்ம்ம்ம்ம்
இந்தியன், உலக சாதனை செய்தால், எல்லோருக்கும் பெருமை. ஆனால், இப்படி நேரத்தில் மட்டும் பிரிச்சு பார்க்க நினைச்சிட்டேனே!" என்றார்//
உண்மை
nice post at the right time.
thanks for sharing :)
மிக மிக மிக அவசியமான பதிவு.
கல்விக் கடன் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் மட்டும் போதாது,, இது போன்ற செய்திகளையும் தெரிந்து எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
பெற்றோர்களும் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தக்க சமயத்தில் வந்த பதிவுக்கு நெஞ்சு நிறைந்த நன்றிகள்.
God Bless You.
விழிப்புணர்வு பதிவு akka!!
Very good article...All students should read this before hey even think about universities..Portrayed in nice way...Kudos Chitra
Good post.. All the wishes!
மிகத்தேவையான அதேவேளை நிதானமான சிறப்பான பதிவு என்று இதை சொல்லிக்கொள்ளலாம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கொண்ட இருக்கறவ இழுத்து முடிஞ்சுக்குறே, குடுத்து வச்ச மகராசி,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....
http://meenakam.com/topsites
http://meenagam.org
காடுகளில் விலங்குகளை ட்ராக் செய்வதுபோல், காலில் ரேடியோ காலர்...மனசு சங்கடப்படுகிற்து சித்ரா. They are humans.Are there disparities in treatments.?
தொலைக்காட்சியில் பார்த்த போது
மிகவும் கஷ்டமாக இருந்தது.
எத்தனை சிரமப்பட்டு கடன்பட்டு
குடும்பத்தைப் பிரிந்து காலில் விலங்குடன்!
NO.... THERE ARE NO DISPARITIES IN THEIR TREATMENTS.... Whether they are White Americans or Indians, whoever breaks the law, and if the law requires to track them by this device, thats what they do it.
அவர்களை சிறையில் அடிப்பதை விட, இது பெரிய விஷயம் அல்ல. எல்லாம், விதிகளுக்கு உட்பட்டதே. நம்மூரில், அந்த பழக்கம் இல்லாததால் அதை தவறான கண்ணோட்டத்துடன் மீடியா காட்டி, sensational news ஆக்குகிறார்கள்.
உங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
NO.... THERE ARE NO DISPARITIES IN THEIR TREATMENTS.... Whether they are White Americans or Indians, whoever breaks the law, and if the law requires to track them by this device, thats what they do it. //
s chitra ..you are right..!!நம்ம ஊரில் தான் செல்வாக்கு பார்த்து எல்லா கூத்தும் பார பட்சமாய் நடக்கும்...பரவாயில்லை..மீடியா மற்றும் வெளியுறவு த்துறை அமைச்சகம் இப்படி தான் துவேஷமாய் மக்களுக்கு இந்த பிரச்னையை கிளப்பி விட்டது..உங்கள் பதிவில் தான் உண்மையின் மற்றொரு பக்கத்தை தெளிவாய் புரிஞ்சுக்க முடிஞ்சது...குண்டு சட்டிக்குள் உட்கார்ந்துட்டே அங்கே நடக்கும் உண்மையாய் சரியாய் உணராமல்..புரியாமல் இருக்கும் கும்பல் தான் இங்கே ஜாஸ்தி சித்ரா..அதை தெளிவாய் இங்கே மீடியா கூட புரிய வைப்பதில்லை..உங்கள் பாரபட்சமற்ற பதிவு பல உண்மைகளை தெளிவாய் உணர்த்தியது ..மீண்டும் நன்றி ..:)
சித்ரா
நான் சிங்கப்பூரில் பத்து வருடத்திற்க்கு மேல் இருந்து விட்டு கடந்த வருடம் தான் போதும்டா சாமி என்று சென்னை வந்தேன் இன்று முழு இந்தியன் நான்
உலக தரத்திற்க்கு ஆசைப்பட்டு மேல்நாடு செல்வது தவறல்ல திரைகடல் ஓடி திரவியம் தேடு என்று முன்னோர்களே சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அந்த திரவியம் மட்டுமே முக்கியமாக தேசத்தையே நாரடிக்க கூடாது, பொய் வாழ்க்கை வரலாறு கொடுத்து வேலை வாங்குதல், பொய் முகவரி கொடுத்து மாட்டி கொள்ளுதல் எல்லாம் அவர்களை மட்டுமல்ல தங்கள் நண்பர் அனுபவித்தது போல் மொத்தமாய் இந்திய பேரையே கெடுத்து விடும்.
நியாயமாக, நியமங்களின் படி கிடைத்தால் வெளிநாடு செல்லலாம் இல்லையேல் இங்கே என்ன முடியுமோ அதையே செய்ய வேண்டும்.
இது வெளிநாடு செல்வதற்க்கு மட்டுமல்ல இது இந்தியாவில் இருந்தாலும் தகும். பொய் பித்தலாட்டம் எங்கும் செல்லாது செல்ல கூடாது.
நன்றி
ஜேகே
சரியான நேரத்தில்..சரியான விழிப்புணர்வு பதிவு பகிர்வுக்கு நன்றி
thank you.your message was so useful..
நன்றி சகோதரி
நல்ல பதிவு
very informative.Thanks
” அந்த மாணவர்களை, victims என்ற பொழுது மட்டும் வந்த சிரிப்பை, ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன் “
இதைவிட வேறென்ன சொல்ல ?
தெளிவா விளக்கிட்டீங்க...
” அவன் செருப்பாலயே அடிச்சாலும் பரவால்ல..அவன் டாலர்தான் வேணும்னு போனா இப்படித்தான் “
கால்ல ட்ரான்ஸ்மீட்டர் என்ன கழுத்துலயே மாட்டுனாகூட பரவால்ல, ஆனா அங்கிருந்து தொரத்தாம இருந்தா போதும்னுகூட நெனைப்பாங்க நம்ம ஆளுங்க...”
சரியான விளக்கத்துடன் எழுதி உள்ளீர்கள்...மீனவன் செத்துக்கிட்டிருக்கான்..அது பெரிசில்லை இவங்களுக்கு..கால்ல கண்காணிப்புக் கருவி மாட்டுனா அய்யோ அம்மாங்கிறாங்க!
>>> Thanks for the info, Sister.
விழிப்புணர்வு படைப்பு அருமை
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
விழிப்புணர்வு பதிவு....
சரியாக சொன்னீர்கள் சகோதரி சித்ரா
பதிவுக்கு அல்ல
நலமா....தமிழா தமிழா பின்னூட்டத்தில் கண்டேன் மீ தெ ஃபர்ஸ்ட் என்று முந்திக்கொண்டீர்களே....உங்கள் மாலைவணக்கம் ,எங்கள் காலை வணக்கம்.
பல புதிய தகவல்கள். மிக்க நன்றி.
Very true. Correct sollirukeenga...
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவியது. தவறு செய்திருந்தால் தண்டனை உண்டு என்ற வார்த்தைக்கு இந்தியாவிலும் வெளி நாட்டிலும்தான் எவ்வளவு வித்தியாசம்? குறுக்கு வழிகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தே வாழத்தான் நம் அரசாங்கம் நம்மை பழக்குகிறது.
புது போட்டோ நல்லா இல்லை.
Fantastic and fabulous awareness post.
தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html
சமூகத்துக்கு தேவையான பதிவு
வாழ்த்துக்கள் சகோ
superb post and thanks for sharing..
தக்க சமயத்தில் ஒரு விழிப்புணர்வு தரும் பதிவு.
பகிர்வுக்கு நன்றி.
அன்புள்ள மேடம்,
தங்கள் ஆலோசனைப்படி Followers widget சேர்த்தாயிற்று. தாங்களும் உறுப்பினரானால் மகிழ்வேன்.
எனது தளத்தில் http://nisshanthan.blogspot.com இன்று ஒரு புதிய கார்ட்டூன் வலைப்படுத்தியுள்ளேன்.கண்டு கருத்துரை வழங்கவும்.
Post a Comment