Sunday, January 23, 2011

வெள்ளை மணல் உருகி....

பொங்கல் வாரம், அமெரிக்காவில் உள்ள  நியூ மெக்ஸிகோ மாநிலம் பற்றி எழுதி இருந்தேன்.  இந்த மாநிலம், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களை  விட ரொம்ப வித்தியாசமாக இருக்கும். Santa Fe யில் உள்ள Adobe ஸ்டைல் வீடுகள் பற்றி சொல்லி இருந்தேன்.

 இன்று,  அந்த மாநிலத்தில் உள்ள "White Sands National Monument Park" பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன்.  பதிவு நீளமாக தெரிவதற்கு படங்கள் தான் காரணம்.  நான் எடுத்த படங்களை போடாமல், கூகிள் தலையில பாரத்தை போடுறேன். ஏன்னு நீங்களே அப்புறம் தெரிஞ்சுக்குவீங்க..... ;-)


275 சதுர மைல்களுக்கு,  வெள்ளை பாலைவனமாக அழகு மிளிர காட்சி அளிக்கும் இடம் இது.  பனி மாதிரி எங்கு பார்த்தாலும்  வெள்ளை மணல். .......  உலகத்திலேயே பெரிய ஜிப்சம்  மணல் மேடுகள் இதுதான் என்று சொல்லிக்கிறாங்க... (World's largest Gypsum Dune Field)


அங்கு அதிகமாக கிடைக்கும் சுத்தமான ஜிப்சம் (Hydrous Calcium Sulfate)  , காற்றினால்  கொண்டு வரப்பட்டு இப்படி மணல் மேடுகளாக டெபாசிட் ஆகி விடுகிறதாம்.  அதீத குளிரும் வெயிலும் உள்ள இந்த இடத்தில் கூட சில தாவரங்களும் மிருகங்களும் தங்களுக்கு ஏற்ற இடமாக adopt செய்து கொண்டு நிம்மதியாக இருக்குதுங்க...


 இப்படிப்பட்ட இடத்தை பற்றி மேலும் தகவல் வேணும்னு நினைக்கிறவங்க - அது எப்படி உருவாகியது?  என்ன என்ன இருக்குது? எதனால் இருக்கிறது?  லொட்டு லொசுக்குனு  - கேள்வி கணைகளை தொடுக்கிறவங்க :
http://www.nature.nps.gov/geology/parks/whsa/index.cfm 
அமெரிக்க govt .  கொடுத்து இருக்கிற மேல  உள்ள லிங்க் கிளிக் பண்ணி முழு விவரங்களும்  தெரிஞ்சிக்கோங்க.  
மற்றவங்க, மேற்கொண்டு வாசிங்க.....


மற்ற சமயங்களில் குடும்ப படத்தை பார்க்க வர்ற மாதிரி கூட்டம் வந்தாலும்,  இங்கே வெள்ளை மணல் மேடுகள் பின்னே,  பௌர்ணமி அன்று நிலா  உதிக்கும் நேரம் - அந்த கவித்துவமான அழகை காண romantic ஜோடிகள்  வருகை தருகிறார்கள்.  நம்ம தமிழ் படங்கள்ல வர மாதிரி,  chorus ஹம்மிங் உள்ள  background music தான் மிஸ்ஸிங் ஆக இருந்துச்சு....


சூரிய அஸ்தமனம் நேரத்தில்,  அங்கே வாக்கிங் போக வசதி பண்ணி வச்சுருக்காங்க.  அந்த நேரம், நாங்க நடந்து போய்க்கிட்டு இருந்தப்போ,  மாலை நேர சூரிய ஒளி பட்டு, வெள்ளை மணல் மேடுகள் எல்லாம் மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என்று பல நிறங்களில் நிறம் மாறி மாறி ,  இருளை தழுவி கொண்டது. சிறிது நேரத்தில்,  வெள்ளி மின்னல் வெளிச்சம் போல,  முழு நிலா எழும்பி பிரகாசிக்க வைத்தது ........ அதை பழமொழி மாதிரி ஆராயக் கூடாது.... அனுபவிக்கணும்.  சூப்பரோ சூப்பர்!


அப்படியே டூயட் பாடலாமானு நினைச்சா.... அடுத்து கேள்விப்பட்ட நியூஸ்  ஏதோ மணிரத்தினம் சார் படங்கள் "ரோஜா"  - "Dil Se" -   மாதிரி   சீனை மாத்திடுச்சு.   மென்மையான  காதல் கதை சொல்லிக்கிட்டு இருக்கிற போது, மிலிட்டரி என்ட்ரி ஆகிற  மாதிரி,   கதை  தீம் போய்டுச்சு ....  காதல் ரசம் போய் கார்கில் ரசம் ஊத்துச்சு...... வெள்ளை மணல் உருகி,    சிவப்பு தடம் பதிக்கிற  மாதிரி மாறிச்சு.   ..... (அப்பாடி, அர்த்தம் இருக்குதோ இல்லையோ,  ஒரு flow ல  பதிவுக்கு வச்ச டைட்டில் வந்துடுச்சு..... மேல சொல்றேன், கேளுங்க......)
 


 அங்கே பார்க் நடவடிக்கைகளை மேற்பார்வை பார்க்க வந்த ஒரு   Ranger இடம், பேசும் வாய்ப்பு கிடைத்தது.  அவர் சொன்ன தகவல் -  இங்கே எல்லா நேரமும் இப்படி அழகை ரசிக்க  முடியாது  என்று  ஒரு குண்டை தூக்கி போட்டார். இந்த பார்க், 40 % தான் பொது மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டு இருக்கிறது.  60 % இடம்,  அமெரிக்க மிலிட்டரிக்கு  சொந்தமானது.  பொது மக்கள், அங்கே போக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


அது மட்டும் இல்லைப்பா, இந்த ஏரியாவில்  மக்கள் விசிட் அடிக்கிறாங்களே தவிர,  வீடு கட்டி வாழ்றது இல்லை.  ஏன் தெரியுமா?  .... ஷ்ஷ்ஷ்....... யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க..... குறிப்பாக தீவிரவாதிகள் யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.... காதை கொடுங்க... உங்களை நம்பி ராணுவ ரகசியம் மாதிரி இருக்கிற மேட்டர் சொல்றேன். "இங்கேதான் மிலிடரி அப்போ அப்போ Missile Testing எல்லாம் பண்றாங்க..... புதுசா செய்ற பாம் எல்லாம் வெடிச்சு சோதிச்சு பார்க்கிறாங்க..... "  அந்த மாதிரி குண்டு வெடிப்பு சோதனை நேரங்களில், பார்க் ஏரியா மட்டும் இல்லை,  அந்த  ஊரு பக்கம்  முழுவதும் யாரும் போக விட மாட்டாங்க....  எல்லாம் ரோடுகளும் க்ளோஸ் பண்ணி - மிலிட்டரி  காவல் போட்டு விடுறாங்க.... சோதனைகள் முடிந்த பின் தான் திறந்து விடுவாங்க...

 ....  சமாதான வெள்ளை நிற  மணல் பக்கம்,   ஒரு  யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு! 



டெஸ்டிங் இல்லாத நேரங்களில் கூட,  இந்த பார்க் பக்கம் போகும் போது,   திடீர்னு செக் போஸ்ட்  வச்சு நம்மை பற்றிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்டு செக் பண்றாங்க.... முதல் வாட்டி, இப்படியெல்லாம் க்ளோஸ் அப்புல, ஆர்மி ஆட்கள் -  மெஷின்  கன்ஸ் பார்த்தேனா ...... கொஞ்சம் டென்ஷன் ஆகி போச்சு.... நல்ல வேளை,  கையில பாஸ்போர்ட்ல இருந்து  எல்லாம் ரெடி ஆக இருந்ததுனால திரும்பி வந்து இங்கே ப்லாக் எழுதி கிட்டு இருக்கேன்..... இல்லைனா, பிடிச்சுட்டு  போய் அடுத்த missile டார்கெட் ஆக வச்சு இருப்பாங்களோ என்னவோ?  எம்மாடி!  (பில்ட் அப் கொடுக்க வேண்டியதுதான் ...... அதுக்காக இப்படியா என்று யாரும் கேலி பண்ணாதீங்க. அப்புறம் உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் connection உண்டுன்னு ஒபமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன். ஆமா.....!)



என்ன சொல்ல வரேன்னா - இந்த இடத்தை எத்தனை அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போய் பார்த்து இருப்பாங்க என்று தெரியல..... பார்க்காதவங்க, மிலிடரி குண்டு போட்டு டெஸ்ட் பண்ணி பார்க்காத நேரத்துல போய் பார்த்துட்டு பத்திரமாக வாங்க....  அப்புறம், நான் வார்னிங் கொடுக்கலைன்னு சொல்லாதீங்க.....

விரைவில்,  நியூ மெக்ஸிகோவில் உள்ள இன்னொரு சுவாரசியமான இடத்தை பற்றி சொல்றேன். சரியா?  




128 comments:

vinu said...

me firsttu

irrunga poi post padichuttu varean he he he

எல் கே said...

வழக்கம்போல் சுவையான விவரணை. அந்த மாலை நேர போட்டோ . அருமை...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை(படங்கள்).

vinu said...

இல்லைனா, பிடிச்சுட்டு போய் அடுத்த missile டார்கெட் ஆக வச்சு இருப்பாங்களோ என்னவோ?


che justu misss; appudi onnu nadanthu irrunthaa embuttu nalaa irrunthirukkum;

goyaala vara vara intha america pasanga eathyumea olungaaa seyrathu illeay

vinu said...

இல்லைனா, பிடிச்சுட்டு போய் அடுத்த missile டார்கெட் ஆக வச்சு இருப்பாங்களோ என்னவோ?


che justu misss; appudi onnu nadanthu irrunthaa embuttu nalaa irrunthirukkum;

goyaala vara vara intha america pasanga eathyumea olungaaa seyrathu illeay

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாவ்.. அழகுங்க.:)

Yaathoramani.blogspot.com said...

சுவாரஸ்யமான பதிவு..நேரில் பார்பதைப்போன்ற
உணர்வினைத் தந்த படங்களும் அருமை..
தொடரவும் வாழ்த்துக்களுடன்...

vinu said...

நான் எடுத்த படங்களை போடாமல், கூகிள் தலையில பாரத்தை போடுறேன். ஏன்னு நீங்களே அப்புறம் தெரிஞ்சுக்குவீங்க..... ;-)

unmayay ulagidam kooraamal; kayamayaaay maraiththa chitraa avargalin saathuryaththai paaraattugirom

ஆனந்தி.. said...

//இல்லைனா, பிடிச்சுட்டு போய் அடுத்த missile டார்கெட் ஆக வச்சு இருப்பாங்களோ என்னவோ? எம்மாடி!//

அப்டி எல்லாம் நடந்துசுனால் அந்த முயற்சி ஊத்திக்கிரும் அவங்களுக்கு....:)))
டூயட் பாடுற மாதிரி தான் இருக்கு இடங்கள்...
அருமையான படங்கள்...அருமையான புது தகவல்கள்...கலக்கல் :))

test said...

சுவாரஷ்யம்! படங்கள் அருமை!

GEETHA ACHAL said...

இவ்வளவு அழகு வாய்ந்த இடம்..கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று...

சூப்பர்ப்...எனக்கு இப்பொழுது அந்த இடத்திற்கு சென்று பார்க்க ஆசை தான்...

மாணவன் said...

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு பதிவும்தான்....

பகிர்வுக்கு நன்றி

மாணவன் said...

//விரைவில், நியூ மெக்ஸிகோவில் உள்ள இன்னொரு சுவாரசியமான இடத்தை பற்றி சொல்றேன். சரியா? //

எதிர்பார்ப்புடன்......

priyamudanprabu said...

சமாதான வெள்ளை நிற மணல் பக்கம், ஒரு யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு!
////

TOUCH....

Unknown said...

:)

priyamudanprabu said...

திடீர்னு செக் போஸ்ட் வச்சு நம்மை பற்றிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்டு செக் பண்றாங்க.... முதல் வாட்டி, இப்படியெல்லாம் க்ளோஸ் அப்புல, ஆர்மி ஆட்கள் - மெஷின் கன்ஸ் பார்த்தேனா ...... கொஞ்சம் டென்ஷன் ஆகி போச்சு....
////

உங்களை பார்த்து அவிக பயந்துட்டாத சொன்னகளே

PriyaRaj said...

cool, nice information sharings dear ...romba nalla achu ...photos r awesome..

KANA VARO said...

படங்கள் கொள்ளை அழகு! தகவல் பகிர்வுக்கு நன்றி

ஜோதிஜி said...

தொடர்கின்றேன்.

S Maharajan said...

வழக்கம் போல கலக்கல்
பகிர்வுக்கு நன்றி அக்கா

பாலா said...

நல்ல தகவல்கள்.. அருமையான படங்கள்.. நன்றி அக்கா..

HVL said...

படங்களும் விவரிப்பும் சுவையாயிருந்தன.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு புகைப்படங்களும் அருமை..

Gayathri Kumar said...

Very informative post and awesome snaps..

ஸாதிகா said...

அருமையான படங்களுடன் சுவாரஸ்யமான தகவல்கள்.

Nagasubramanian said...

அந்த நிலவுள்ள புகைப்படம் அருமைங்க!

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா..ஆஹா.. படம் ஒவ்வொண்ணும் கவித!!.

அந்த அக்காக்கள்லாம் மணல்ல சறுக்கி வெளையாடுறமாதிரி நீங்களும் வெளாண்டீங்களா :-))))))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

படங்களும்.. இடம் பற்றிய விவரித்தலும் அருமை.

Unknown said...

படமெல்லாம் அருமையா இருக்கு, அப்புறம் என்ன டூயட் பாடுனீங்கன்னு சொல்லவே இல்லை? வர வர ரிப்போர்ட்டர் ரேஞ்சுக்கு போயிட்டீங்க அக்கா...

Unknown said...

கூடிய சீக்கிரமே சித்ரா குரோனிக்கள் ஆரம்பிக்க வாழ்த்துக்கள் :-)

தினேஷ்குமார் said...

ஆஹா படமெல்லாம் சூப்பர் அக்கா நல்ல தகவல் அக்கா

தமிழ் உதயம் said...

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் அமெரிக்காவில் உள்ளன. எழுதுங்கள்.

திகில் பாண்டி said...

சித்ராக்கா

உங்க போஸ்ட் எல்லாம் ரொம்ப நாளா படிக்கிறேன்க்கா ரொம்ப அருமையா இருக்குங்க அக்கா.

Madhavan Srinivasagopalan said...

//விரைவில், நியூ மெக்ஸிகோவில் உள்ள இன்னொரு சுவாரசியமான இடத்தை பற்றி சொல்றேன். சரியா? //

oh! Great..

ஆயிஷா said...

சுவாரஸ்யமான தகவல்கள்.
படங்கள் அருமை!

Vidhya Chandrasekaran said...

நேரில் பார்த்த திருப்தியைத் தருகிறது உங்கள் எழுத்து. பகிர்ந்தமைக்கு நன்றி.

arasan said...

சொல்ல வந்தத அழகா சொல்லி இருக்கீங்க ....

நச் பதிவு

G.M Balasubramaniam said...

Thank you for an informative post.You have a lucid style in writing. I appreciate. Please keep it up.

ஹுஸைனம்மா said...

படங்கள் அழகு. வெள்ளை மணல்.. எங்கியோ பாத்த மாதிரி இருக்கே.. ஆங்.. எந்திரன்ல ரஜினியும், ஐஸும் பாடுவாங்களே, அது இங்கியாங்க?

இப்படிக்கு,
எந்தவொரு தலத்தையும் சினிமாவைச்
சம்பந்தப்படுத்தியே ஞாபகம் வைத்திருக்கும்
இன்னொரு பச்சைத் தமிழச்சி!! :-))))))

MANO நாஞ்சில் மனோ said...

இனி நீ அமெரிக்கா போவணும்னு நினைப்பே நினைப்பே நினைப்பே.........
நான் என்னை சொன்னேன்...
.......பதிவு சூப்பர் படங்கள் சூப்பர் [அந்த மிஷைல் ஆத்தீ எஸ்கேப்].............

settaikkaran said...

//.... சமாதான வெள்ளை நிற மணல் பக்கம், ஒரு யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு!//

இந்த முரண்பாடு தான் எங்கும் இருக்கிறது போல. நம்மூர் அணுகுண்டு சோதனையும் தார் பாலைவனத்தில் தானே நடத்துறாங்க...?
புகைப்படங்கள் மிக அருமை. ஒன்ரிறேண்டைப் பார்த்தபோது 'எந்திரன்" படத்தில் தலைவரும் ஐசும் "காதல் அணுக்கள்" பாடல் பாடிய இடம் போலிருந்தது. சூப்பர். :-)

சசிகுமார் said...

சூரியன் மறையும் போது இந்த இடத்தின் அழகு மிக அருமை நல்ல விளக்கங்களுடன் அறிந்து கொண்டேன்.

Chitra said...

அது சவுத் அமெரிக்காவில் இருக்கும் ஒரு இடம் என்று கேள்விப்பட்டேன். இது அமெரிக்காவிலேயே இருக்குதுங்க....ரொம்ப அழகான இடம்ங்க.

Asiya Omar said...

சித்ரா,அருமையான படங்கள்,விளக்கம்,எனக்கு ஒரு வெள்ளை மணல் தெரிகின்றதுன்னு பாட்டே வாயில் வந்து விட்டதுன்னால் பாருங்களேன்,ஒரு வெள்ளை மழை பாடல் நினைவு வருமே.

'பரிவை' சே.குமார் said...

Super... Photos + Article Super.

ராமலக்ஷ்மி said...

வெள்ளை மணல் அழகு. படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி சித்ரா.

எப்பூடி.. said...

தெரியாத சுவாரசியமான தகவல்கள், ப்கிர்விர்க்கு நன்றி.

Jana said...

தலையங்கத்தில் மீண்டும் சித்ரா..இல்லை இல்லை..மீண்டும் கோகிலா சின்னம்சிறுவயதில் பாடல் நினைவுக்கு வந்திச்சு :)

ஆஹா... என்ன அருமையான காட்சிகள். பேசாமல் இப்படி ஒரு இடத்தில் சகல வசதிகளுடனும் ஒரு அழகான வீடு இருந்துவிட்டால் சொர்க்கம் என்று சொல்லுறாங்களே??
அது தேவையில்லை. பகிர்வுக்கு நன்றி அக்கா.

raji said...

சூரியன் மறையும் நேரத்தில் அந்த இடம் அருமை
சூப்பர் ஃபோட்டோஸ்,நன்றி

என் பதிவில் போட்டிக்கு ப்ரசன்டானு போடலையே

சகோதரி சித்ராவிடம் ஒன்று சொல்லவும் ஒன்று கேட்கவும் வேண்டும்

சொல்ல வேண்டியது: என் மகள் தங்களின் "தலையணை சண்டை" போஸ்ட்டை ரசித்து
படித்தாள்.வீடியோக்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.ஆன்ட்டி புதுசா என்ன போட்டிருக்காங்கம்மானு
கேக்கற அளவு உங்க ரசிகை ஆயிட்டா

கேட்க வேண்டியது: அர்ச்சனாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றதா?எப்படி இருக்கிறார்?

Anonymous said...

romba nalla pathivu... ungal ezhuthukkal super... Unga theevira visiri aagivitein...
Reva

வந்தியத்தேவன் said...

உங்கள் பதிவின் உதவியால் விரைவில் நம்ம தலை தளபதிகள் தமன்னா டாப்சி போன்றவர்களுடன் டூயட் பாடலாம். நல்ல படங்களும் விபரணமும் வழக்கமான உங்கள் கிண்டல் கடைசிப் பந்தியில் ஹிஹிஹி.

Unknown said...

உங்க பதிவு அழகு ....நானும் எங்க ஊருல இருக்கிற காடு .ஆறு எல்லாத்தையும் போடுறன் பாருன்க

சுசி said...

அழகா இருக்கு சித்ரா.. அப்டியே இங்க பனி மூடி இருக்கிற மாதிரியே இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா ஓசில ஊர் சுத்தி காட்டுறீங்க. தேங்க்ஸ்

Thenammai Lakshmanan said...

மிஸைல் டார்கெட்டா.. இப்பவே அப்பிடி ஒரு டாக் இருக்குதுன்னு கேள்விப்பட்டேன்.. ஹிஹிஹி ஏன்னா ராணுவ ரகசியங்களை எல்லாம் ப்லாக்கில போட்டு உடைக்கிறியாமே.. :)))

VELU.G said...

நல்ல பகிர்வு படங்களெல்லாம் அருமை

நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்

நன்றி

போளூர் தயாநிதி said...

நல்லபடங்கள் உண்மையில் பாராட்டுகளுக்குரியது காரணம் உலகின் எங்கோ ஒருமூலையில் நடக்கும் விடயங்களை எங்களின் பார்வைக்கு படம் பிடித்து கட்டோது பாராட்டுகளுக்குரியது தானே . நன்றி

Madurai pandi said...

படங்கள் கலக்கல்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விவரங்களோடு படங்களும் பகிர்ந்ததற்கு நன்றி சகோ....

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_24.html

இளங்கோ said...

'வெள்ளிப் பனி உருகி' போல..
வெள்ளை மணல் உருகியா.... ? :)

ADHI VENKAT said...

அழகான இடமா இருக்கு. ஆனா அதுக்கு பின்னாடி இருக்கும் தகவல் கேட்டா பயமா இருக்கு!!!!!!! என்னோட அடுத்த பதிவு போட்டிருக்கேன். UPDATE வருதான்னு தெரியலை.

ஆதி.
http://kovai2delhi.blogspot.com/2011/01/b-b-cho.html

Unknown said...

//உள்ள இன்னொரு சுவாரசியமான இடத்தை பற்றி சொல்றேன். சரியா? //

கொஞ்சம் விவரனையா சொன்னா நல்லா இருக்குமே சகோதரி .. அமெரிக்கா பற்றிய உங்கள் பார்வையை ஒரு தொடராக எழுதவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

படங்கள் அருமை!

Unknown said...

//யாரும் கேலி பண்ணாதீங்க. அப்புறம் உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் connection உண்டுன்னு ஒபமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன். ஆமா.....!)//
அக்கா .அது நாங்க சொல்லவேண்டியது.
அழகான பிக்னிக் போன போல இருக்கு.நன்றி.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்ல பகிர்வு. புகைப்படங்கள் அட்டகாசம் !

vanathy said...

wonderful place & photos.

Prabu Krishna said...

//(பில்ட் அப் கொடுக்க வேண்டியதுதான் ...... அதுக்காக இப்படியா என்று யாரும் கேலி பண்ணாதீங்க. அப்புறம் உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் connection உண்டுன்னு ஒபமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன். ஆமா.....!)//

சரிங்க சரிங்க சரிங்க

Priya said...

//சமாதான வெள்ளை நிற மணல் பக்கம், ஒரு யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு!//......பொதுவா இப்படிதான் போய்கிட்டு இருக்கு;(
அழகான படங்கள், விளக்கமும் நன்றாக இருந்தது!

ராஜவம்சம் said...

படம்+பதிவு இரண்டும் அருமை வாழ்த்துக்கள்.

Prabu M said...

அங்கே அங்கே சஸ்பென்ஸ் வெச்சுப் படுசுவாரஸ்யமா கொடுத்திருக்கீங்க அக்கா...

//.... சமாதான வெள்ளை நிற மணல் பக்கம், ஒரு யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு! //

இந்த வரிகளை ரொம்ப ரொம்ப ரசித்தேன்.....

மொத்தக் கட்டுரையும் அடுத்தடுத்து அழகா ஃப்லோ ஆகிக்கொண்டே போய் நிறைவாக முடிந்தது....
இந்த மாதிரி விஷயங்களை இவ்வளவு சுவாரஸ்யமாக வழங்குவது கடினம்.... அதற்கு ஒரு சல்யூட்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சொன்ன விஷயங்களும் படங்களும் அருமை!

அன்புடன் அருணா said...

ஆஹா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

.... சமாதான வெள்ளை நிற மணல் பக்கம், ஒரு யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு!

அதானே! அவர்கள் வெள்ளை மாளிகைக்குள் இருந்து சிந்திப்பதெல்லாம் கரிய விஷயங்களா?

Menaga Sathia said...

படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிங்க...

மைதீன் said...

சுவாரஸ்யமான தகவல்

வருண் said...

***நல்ல வேளை, கையில பாஸ்போர்ட்ல இருந்து எல்லாம் ரெடி ஆக இருந்ததுனால திரும்பி வந்து இங்கே ப்லாக் எழுதி கிட்டு இருக்கேன்.**

ஆமாங்க அந்தப்பக்கம் போகும்போது எல்லா டாக்குமெண்ட்ஸுடன் போறதுதான் புத்திசாலித்தனம் :)

புகைப்படத்தில் இருக்கிற உங்களை அடையாளம் தெரியலை. :)))

Chitra said...

Disguise ல இருக்கேன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான பதிவு.. படங்கள் அனைத்தும் சூப்பர் சித்ராக்கா...

Lingeswaran said...

தொடருங்கள் அக்கா....தொடருங்கள்...உங்க அட்டகாசமான எழுத்தை...

பவள சங்கரி said...

படங்களும், செய்திகளும் அருமை சித்ரா, வாழ்த்துக்கள்.

Riyas said...

wow beautiful,,,,

ஹேமா said...

அருமையா இருக்கு சித்ரா.உங்க அனுபவிச்சு எழுதுற எழுத்தும்கூட !

goma said...

காதல் ரசம் போய் கார்கில் ரசம் ஊத்துச்சு...... வெள்ளை மணல் உருகி, சிவப்பு தடம் பதிக்கிற மாதிரி மாறிச்சு. ..... (அப்பாடி, அர்த்தம் இருக்குதோ இல்லையோ, ஒரு flow ல பதிவுக்கு வச்ச டைட்டில் வந்துடுச்சு..... மேல சொல்றேன், கேளுங்க......)

இந்த பன்ச்’தானே உங்கள் எழுத்துக்கு அச்சாணி

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான புதிய தகவல்கள்.

ரகசியத்தை நம்பி எங்க கிட்ட சொல்லிட்டீங்க இல்லே...நாங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டோம்!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
அப்படியே டூயட் பாடலாமானு நினைச்சா.... அடுத்து கேள்விப்பட்ட நியூஸ் ஏதோ மணிரத்தினம் சார் படங்கள் "ரோஜா" - "Dil Se" - மாதிரி சீனை மாத்திடுச்சு.

அட.. சித்ரா கூட சினிமா பாதிப்புல இருக்காங்க போல

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு சூப்பரா? படம் சூப்பரா? கண்டுபிடிக்கவே முடியல

Anonymous said...

போகனுமுன்னு நினைச்சாலும் முடியாத இடம்..காட்சிகள் சொன்னவிதமும் படங்களும் கூடவே கூட்டிட்டு போயிட்டீங்க சித்ரா...

suneel krishnan said...

அமெரிக்காவில் -நீங்க சுத்தாத இடமே இல்ல போல :) இதை எல்லாம் படிக்க படிக்க வந்து பாக்கணும் போல இருக்கு ..சூப்பர் ..பட தேர்வுகளும் அருமைங்க ..

ஆமினா said...

//"இங்கேதான் மிலிடரி அப்போ அப்போ Missile Testing எல்லாம் பண்றாங்க..... புதுசா செய்ற பாம் எல்லாம் வெடிச்சு சோதிச்சு பார்க்கிறாங்க..... " //

கண்டிப்பா சொல்ல மாட்டேன் சித்ரா

சுந்தரா said...

வெள்ளை மணல்வெளியின் படங்களும் விவரிப்பும் அழகு சித்ரா.

அஞ்சா சிங்கம் said...

ஆத்தாடி ராணுவ ரகசியங்கள் எல்லாம் என்னமா புட்டு புட்டு வைக்குறீங்க ...........
ஒபாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் ...................

அம்பிகா said...

அருமையான படங்கள்; பகிர்வு. நன்றி சித்ரா.

சேலம் தேவா said...

அப்பப்ப இந்தமாதிரி படமெல்லாம் போட்டு எங்களை மகிழ்விக்கிறீங்க...ரொம்ப சந்தோஷம்...(அய்யய்யோ.. என்னமோ தீயுது.. வயித்தெரிச்சல் அதிகமாயிடுச்சு) ஹி.ஹி..ஹி...

. said...

very nice

by
http://hari11888.blogspot.com

Anonymous said...

Very useful informations. We need not to take visa when you write much about U.S.A. Thanks Sister!!

எம் அப்துல் காதர் said...

வழக்கமா படிச்சிட்டு சிரிச்சிட்டு போற பதிவா இல்லையே ஏன்? படிக்கும் போதே நடுவில் கொஞ்சம் டெர்ரராவும் எழுதி பயமுறுத் திட்டீங்களே இது நியாயமா?? ஹி..ஹி..

Jaleela Kamal said...

ஆஹா ரொம்ப அருமையாக இருக்கு,
பார்க்க பார்க்க பனி சூப்பரா இருக்கு
பனியில் விளையாடினால் ஜல்பு பிடிச்சாதா தாயம்மா

அமுதா கிருஷ்ணா said...

அழகான அருமையான இடம் பகிர்விற்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

அருமையான படங்கள். சுவாரசியமான பதிவு. வாழ்த்துக்கள் சித்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெகுசுவராசியம்...!

தூயவனின் அடிமை said...

சூப்பர்ப்...எனக்கு இப்பொழுது அந்த இடத்திற்கு சென்று பார்க்க ஆசை தான்...

நம்ம பேர கேட்டு ஒபாமா பயந்துட்டா?

பேர் என்னனு கேக்குறிங்களா ?

ஒசாமா பின்லேடன் .

Suni said...

superrrrrrrr

Unknown said...

படங்கள் கொள்ளை அழகு! தகவல் பகிர்வுக்கு நன்றி

Unknown said...

தாமதத்திற்கு மன்னிக்கவும்.
புகைப்படங்கள் அருமை, உங்களின் விவரிப்பு வழக்கம் போல சுவையாக..

Unknown said...

ஏன் இன்னும் இந்த இடங்களில் இன்னும் தமிழ் சினிமாக்காரங்க கேமராவை வைக்கலைனு தெரியலை. உங்க பேச்சைப் பாத்தா, நீங்களே ஒரு படம் எடுக்குற ஐடியா இருக்கும் போலத் தெரியுதே...

Unknown said...

ஆப் த ரெக்கார்டா சொல்லுங்க அக்கா ,எப்படி உங்க பதிவுக்கு மட்டும் அறுபதுக்கு ஓட்டுக்கு மேலதான் விழுகுது (ராணுவ ரகசியமெல்லாம் சொல்லுறீங்க இத சொல்லக்கூடாதா?)

Unknown said...

காணவில்லை...காணவில்லை... தமிழ்மண ஓட்டுப்பட்டையைக் கானவில்லை...

பத்மா said...

thanks for sharing chitra

சக்தி கல்வி மையம் said...

நான் ரொம்ப லேட்டோ?

Jayanthy Kumaran said...

wow...such a lovely place...very interesting info s ...Fascinating clicks Chitra..
Tasty appetite

Anonymous said...

இலவசமா சுத்தி காட்டுனா வேண்டாம்னு சொல்லுவோமா?
படங்கள் அழகா இருக்கு சித்ரா

சிவகுமாரன் said...

அழகழகா இருக்குதுங்க எல்லாம். மதுரையை தாண்டாத எங்களுக்கு அமெரிக்காவை ஃ ப்ரீயா சுத்தி காட்டுறீங்க நன்றிங்க.

சிநேகிதன் அக்பர் said...

நேரில் பார்ப்பது போன்ற விவரிப்பு.

கோமதி அரசு said...

அழகான பதிவு சித்ரா.
அடுத்த சுவாரஸய்மான பதிவை படிக்க காத்திருக்கிறோம்.
படங்கள் எல்லாம் அழகு.

Unknown said...

nice information for me. thanks.. for now like me people can go there in dream only.... but you showed dream in blog. thanks

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல அருமையான விவரிப்புடன் இன்னொரு தகவல்!
யாருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்காத நியூ மெக்ஸிகோவின் அடுத்த பக்கமும் இதைவிட சுவாரஸ்யமாக இருக்குமென நினைக்கிறேன்.
இங்கும் பல நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு தொடர்ச்சியாக‌ sand dunes இருக்கின்றன! இவற்றுக்கும் இப்படியொரு பின்னணி இருக்குமோ என்னவோ?

Avargal Unmaigal said...

நான் எப்படி இந்த பதிவை மிஸ் பண்ணினேண் என்று தெரியவில்லை. அருமையான தகவல்கள்.. அடுத்த தடவை வெகேசன் போகும் போது உங்களிடம் அட்வைஸ் கேட்டுதான் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். அட்வைஸ் தருவிர்கள்தானே??
எனக்கு அமெரிகாவில் பிடித்த இடம் ஓன்றே ஓன்றுதான் அதுதான் நயகரா ஃபால்ஸ் பார்க்க பார்க்க சலிக்காத இடம்

Lingeswaran said...

Thanks akka..

Muruganandan M.K. said...

அருமையான தகவல்கள், சுவையான விளக்கங்கள், கண்ணுக்கு இனிய படங்கள். சிறப்பு.

தாராபுரத்தான் said...

சரி யம்மா.

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/

Unknown said...

//அடுத்த தடவை வெகேசன் போகும் போது உங்களிடம் அட்வைஸ் கேட்டுதான் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். அட்வைஸ் தருவிர்கள்தானே??//


இவ்விடம் அட்வைஸ்கள் சகாய விலையில் வழங்கப்படும்..

Lingeswaran said...

அக்கா....அடுத்த போஸ்ட் இன்னும் எங்க காணோம்?

Thoduvanam said...

Your blogs are really very interesting and posted in an enchanting manner..kudos keep it up..

ksground said...

thank you.your message was so useful..

ksground said...

thank you.your message was so useful..

செந்தில்குமார் said...

அழகான பதிவு சித்ரா...

புகைப்படங்கள்
அவ்வளவும் அருமை அதாவது
உங்கள் பாணியில் முதல் தரம்...

பதிவை படிக்க வந்தா இப்படி மிரட்ட கூடாது ஆம ...

உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் connection உண்டுன்னு ஒபமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன். ஆமா.....!)

கிரி said...

இடம் செமையா இருக்கு! இங்க படம் எடுத்தா பட்டாசா இருக்கும் போல :-)

US ல் ரசிக்க ஏகப்பட்ட அழகான இடங்கள் இருக்கு போல ம்ம்ம் வாய்ப்பு கிடைக்கும் போதே இதைப்போல சென்று வந்து விடுங்கள்.