Approaching everything in life with a sense of humor - a blessing - given by God through my father's genes.
Tuesday, January 4, 2011
ஆண்களின் டிரஸ் ?
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....... அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்களும் கூட போனஸ் ஆக இப்போவே வெட்டி பேச்சில் இருந்து வருகிறது.......
எல்லோருக்கும் இந்த ஆண்டு புது பொலிவுடன் - நம்பிக்கையுடன் ஆரம்பித்து இருக்கும் என்று நம்புகிறேன்..... ஒரு வழியாக - வெற்றிகரமாக - இரண்டு வாரங்களுக்கு மேலாக - ஈமெயில், பதிவுலகம், Facebook பக்கம் வராமல் இருந்து விட்டேன். இதெல்லாம் இல்லாமல் கூட, உலகம் எப்போவும் போல தான் சுத்துதுங்க..... நிஜமா......
இப்போதான் பெட்டி படுக்கையோட ஊரில் இருந்து இறங்கியாச்சு..... கொடுத்த வாக்குப் படி, ஜனவரி ஐந்தாம் தேதி வந்து ஆஜர் போடணும் என்ற கடமை உணர்ச்சியில் இங்கே வந்து எதையோ எழுதிக்கிட்டு இருக்கேன்.
கருத்து - சிந்திக்க - சிரிக்க - எல்லாம் இன்னும் அந்த பெட்டிக்குள்ளேயே இருக்குதோ என்னவோ..... ம்ம்ம் ....
பெட்டியை திறக்கணும் என்று கூட தோணவில்லை..... அதற்குள் வெள்ளி கிழமை வரும் பயணம் கண் முன் வந்து நிக்குது..... ஆஆ......
சரி, அதை விடுங்க மக்காஸ் .......
எங்கள் பயணத்தின் போது, இந்தியாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா வந்து இருக்கும் சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புது வருட திருநாளை குறித்து , ஒரு அமெரிக்க நண்பர், எட்வர்ட் உடன் சேர்ந்து அவர்களுடன் பேசி கொண்டு இருந்த பொழுது, மகேஷ் என்பவர், "புது வருடத்துக்கு எனக்கு டிரஸ் ஊரில் இருந்து கொண்டு வந்து விட்டேன்," என்று ஆங்கிலத்தில் சொல்ல எட்வர்ட் விழித்தார்.
"You wear a women's dress for New Year?"
"No, only Men's dress."
"In India, you have dress for men too?"
ஐயா, சாமி..... இதுக்கு மேல ஏதாவது சொன்னால் - கிழிஞ்சுடும் லம்பாடி லுங்கி என்று ..... மகேஷிடம் இங்கே டிரஸ் என்றால் பெண்கள் அணியும் உடைக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், ஆண்களுக்கு "outfit" அல்லது " clothes" என்றுதான் சொல்வார்கள் என்று விளக்கினேன்.
சுப்பு என்ற தமிழர் அசடு வழிய ஒரு blonde பெண்ணிடம் கடலை போட, மரியாதையுடன் உளறியதையும் மறக்க முடியாது.... ஏதோ இங்கிலீஷ்ல இலக்கணம் சுத்தமாக ....."As I am suffering from fever னு ஆரம்பிச்சு .... Yours sincerely னு முடிக்கிற " ரேஞ்சுல அவளுடைய பேரு கேட்டார்.
"May I kindly know your good name, please?" என -
அந்த பெண் சத்தமாக சிரித்தபடி, "I never knew I had a bad name too..." என்றாள்.
அப்புறம், சுந்தரம் என்ற நண்பர் புதிதாக வந்த சமயம், சாரா என்ற அமெரிக்க பெண் அவருக்கு முதன் முதலாக கடைக்கு சென்று வர உதவ முன் வந்தாள் ..... அவர் வாங்கிய பொருட்களை காரில் வைக்க அவர் காத்து இருப்பது தெரியாமல், சாரா இன்னொரு தோழியிடம் பேசி கொண்டு இருந்தாள். சுந்தரம் பவ்யமாக அவளிடம்,
"I want to open the dicky, please" என்று கேட்க, அவள் கோபத்தில் திட்ட ஆரம்பிக்க .... விவரம் புரியாமல் இவர் முழிக்க.....
அருகில் வந்த இன்னொரு இந்திய மாணவர், சுந்தரத்திடம், " இங்கே கார் பின்பக்கத்தை ட்ரன்க் (trunk) என்றுதான் சொல்வார்கள். நீ சொல்லியது வேற "பொருள்" படும், " என்ற பின் - சுந்தரம் முகத்தில் அசடு வழிய - விஷயம் தெளிந்து சாரா சிரிக்க.....
அட, அட, அட......
ஊருக்கு ஏத்த மாதிரி எதை மாத்துறீங்களோ இல்லையோ...... பேச்சை மாத்த வேண்டியது இருக்கே.....
நெல்லை சீமையில, பிரிட்டிஷ் இங்கிலீஷ் படிச்சுட்டு வந்து, இங்கே அமெரிக்க இங்கிலீஷ்ல குப்பை கொட்டுரோமே..... யம்மா.....சாரி..... மம்மி டோய்..... ஆச்சி டோய்..... டமில் வால்க டோய் !!!
American English vs British English:
அமெரிக்காவுக்கு இந்த வருடம் புதிதாக வருபவர்கள், நோட் தீஸ் பாயிண்ட்ஸ் ப்ளீஸ்...... தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும்..... இருக்கட்டும்.... வேறு ஏதாவது டவுட்டு இருந்தா சொல்லுங்க.... சுந்தரம் அல்லது மகேஷ் வந்து தெளிவு படுத்துவாங்க..... இது போல, நிறைய ஆப்பு வாங்கி கஷ்டப்பட்டு அமெரிக்காவுல அமெரிக்க இங்கலிபீசு படிச்சவுக ஆச்சே......
ஆமா..... உனக்கு எதுவும் இப்படி "மாட்டல்" கதை இல்லையா? என்று கேக்காதீங்க..... நாங்க எல்லாம் உஷார் பார்ட்டிக..... அடுத்தவுக விட்ட தப்புல இருந்தே கப்புன்னு பாடத்தை பிடிச்சிக்கிட்டோம்ல .......
Labels:
அமெரிக்கா ஓ அமெரிக்கா
Subscribe to:
Post Comments (Atom)
120 comments:
கால் சென்டரில் வேலைக்கு சேரும் பொழுது இதுதான் முதல் பாடம்
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
சூப்பர்! சில சொற்கள் தெரிந்து கொண்டேன் BPOவில வேலை செய்யும்போது! :-)
பதிவு படிச்சு இன்னமும் சிரிப்பு அடங்கலை.
Welcome back akkaa :)
Happy New Year to you... :)
இந்த வார்த்தை விளையாட்டுகளினால் சிக்குண்டு தவித்த அவுட்சோர்ஸிங் நண்பர்களின் கதைகளைப் பேசிப்பேசிச் சிரித்திருக்கிறோம் அலுவலகங்களில்.... :)
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
சுவாரஸ்யமான விசயங்கள்...
ஒவ்வொரு ஊரிற்குச் செல்லும் முன்பும் கொஞ்சம் இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
வாங்கக்க வாங்க, நீங்க இல்லாம நம்ம கடை காத்தாடுது, ஆரம்பமே சிரிப்பா இருக்குக்கா, புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
அமெரிக்கன் இங்கிலிபீசுக்கும், பிரிட்டிஷ் இங்கிலிபீசுக்கும் எக்கச்சக்க வித்தியாசம் இருக்குது :-)))
லீவு ஜாலியா போச்சா :-)
அதிரடியா ஆரம்பிச்சிருகீங்க வாழ்த்துக்கள்!!!!
-
கிறுக்கன்
/தெரியாமல், சாரா இன்னொரு தோழியிடம் பேசி கொண்டு இருந்தாள். சுந்தரம் பவ்யமாக அவளிடம்,
"I want to open the dicky, please" என்று கேட்க, அவள் கோபத்தில் திட்ட ஆரம்பிக்க .... விவரம் புரியாமல் இவர் முழிக்க.....
//
ஹ ஹ...வாங்கம்மா நெல்லை ராணி...பதிவுலகமே உங்களை காணோம்னு ஏங்குச்சு..இதுல அடுத்த ட்ரிப் வேறயா...எங்கப்பா அந்த அருவாள எடு..:))
அம்மு...செம காமடி பதிவு...நாங்கலாம் இந்தியா போர்டர் தாண்டினால் ஓட்டை இங்கிலீஷ் வச்சு பக்கா காமடி பீஸ் ஆக்கிடுவாங்கன்னு உணர்த்திட்டிங்க...எங்கப்பா...ரெபிடெக்ஸ் புக் ஒரு பார்சல்...:)) உங்க பதிவை பார்த்து ரொம்ப ஹாப்பி அம்மு...என்கனாலும் போயி தொலைங்க..பட் போஸ்ட் மட்டும் போட்ருங்க...:)))
நீங்க படிச்ச பாடத்தையும் கொஞ்சம் எடுத்து விட்டுருக்கலாம் அம்மிணி..:))
வாங்க சித்ராக்கா..!! புத்தாண்டு வாழ்த்துகள்.கடைசிவரைக்கும் அந்த இங்லிபீஸ நாம கத்துக்க முடியாது போலருக்கே..!! :-((
//.."As I am suffering from fever னு ஆரம்பிச்சு .... Yours sincerely னு முடிக்கிற " ரேஞ்சுல அவளுடைய பேரு கேட்டார்.// LOL! :))
Very good post!
கற்றுக் கொள்ளவேண்டியவை நிறைய இருக்கு.
அந்த அந்த ஊரின் பேச்சு வழக்கை கற்றுக் கொள்வது நல்லது தான்.
நல்ல பாடம், நன்றி சித்ரா.
நாங்க எல்லாம் உஷார் பார்ட்டிக..... அடுத்தவுக விட்ட தப்புல இருந்தே கப்புன்னு பாடத்தை பிடிச்சிக்கிட்டோம்ல .......//
நீங்க யாரு. திருநெல்வேலி. பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம். அல்வாக்கு பேர் பெற்ற ஊராச்சே.
எங்கடா ஆளையே காணோமேனு பார்த்தேன் சொன்ன மாதிரி டான்னு வந்து பதிவு போட்டுட்டிங்க
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....
புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாங்க சித்ராக்கா! உங்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்! பதிவ நினைச்சு இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன். :)
அருமை இப்படி எழுத உங்களால் மட்டும் தான் முடியும் ..........
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....
சிங்கப்பூர் இங்கிலீஸ் இன்னும் காமெடியா இருக்கும் ...
புத்தாண்டு வாழ்த்துக்கள் மாஸ்டர்
அருமையான பதிவு
சுப்பு என்ற தமிழர் அசடு வழிய ஒரு blonde பெண்ணிடம் கடலை போட, மரியாதையுடன் உளறியதையும் மறக்க முடியாது..//
ஹாஹா
எப்போதும் போல நகைச்சுவையான பதிவு... சூப்பர்.. தொடர்ந்து கலக்குங்க..
உங்களுடைய இரண்டு பதிவுகள் தமிழ்மணத்துல செலக்ட் ஆயிருக்கறதைப் பார்த்தேன்.. வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.
புத்தாண்டில் முதல் பதிவிலேயே சிரிக்க வைத்ததற்கு நன்றி.
serithukonda eluthukiren chitra. nall pathivu....
Kurinji
குறிஞ்சி குடில்
அடப்பாவமே இப்படி ஒரு மேட்டர் இருக்கா?
ஒரு முறை.. வெளிநாட்டுக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவருக்கு தனி அரை ஒதுக்கி இருந்தேம். அவர் என்னிடம் 'வேர் இஸ் ரெஸ்ட் ரூம் ?' என்றார்.. நான்.. 'யு ஆர் கமிங் பரம் தார் ஒன்லி' என்றேன்.. அதற்கு அவர் புன்னகியோடு.. 'இன் யு.எஸ், வி கால் toilet as ரெஸ்ட் ரூம்' என்றார்.
உலகம் பூரா ஒரு அர்த்தம்னா.. அவனுகளுக்கு வேற அர்த்தம்.. -- கலிகாலம் டோய்..
நல்லா சுவாரசியமாவே பாடம் நடத்துறீங்க டீச்சர். டீச்சர், எங்கே கிளாஸை கட் அடிச்சிருவீங்களோன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, கரெக்டா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட்டீங்க டீச்சர். இனிமே டெய்லி பாடம் சொல்லித் தரணும் ஆமா.. டிமிக்கி கொடுக்க கூடாது.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
my friend was asking for tissue-paper to a sales girl in burger-king. she laught and corrected him that it is used for different purpose and you should ask napkin.
namma oru hotela poyi napkin kudungannu ketta ennaakum???
இங்கே உள்நாட்டுக்குள்ளேயே நிறைய குழப்பம் இதுலே வெளிநாட்டுலே கேக்கணுமா???அசத்தல்ஸ்!
சுப்பு, சுந்தரத்தோட அனுபவங்கள் சிரிப்பைத் தந்தன.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொங்கலுக்கு அப்போ சொல்லிக்கிறேன்..!
புதுப்பொலிவுடனும் உங்களுக்கே உரிய நகைச்சுவையுடனும் பதிவு அருமை.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நாங்க எல்லாம் உஷார் பார்ட்டிக..... அடுத்தவுக விட்ட தப்புல இருந்தே கப்புன்னு பாடத்தை பிடிச்சிக்கிட்டோம்ல .......
சூப்பர்.
:-)))))))))
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல வாழ்த்துக்கள் :) வலை பக்கம் ஒதுங்கமால் அப்பப்போ இருப்பது கூட நல்லது தான் ,இல்லேன்னா அடிமைத்தனம் வந்துடும் , நீங்க வரமா என்ன மாறி பதிவர்கள் எல்லாம் பெரும் பின்னூட்ட பஞ்சத்துல இருக்கோம் ,வர்ற ஒன்னு ரெண்டு பின்னூட்டமும் காணும் :)
மீண்டும் புதுப்பொலிவுடன் அருமையான பதிவு கலக்கல்...
உங்களுக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Welcome back! Happy new year!
எங்க ஊரு சிங்க்லீஸ் கேட்டா மயக்கம்தான் வரும்!
உண்மையா சொல்றேன் சிரிச்சு பதினைந்து நாளாச்சு!!.
இப்போதான் பொத்திக்கொண்டு அத்தனை சிரிப்பும்
சேர்ந்து வரது.எப்படித்தான் உங்களால சின்ன சின்ன விஷயங்களை கூட இப்படி வேடிக்கையாக சொல்ல முடிகிறது..
இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!!!
சுவாரஸ்யமான விசயங்கள்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
>>>கொடுத்த வாக்குப் படி, ஜனவரி ஐந்தாம் தேதி வந்து ஆஜர் போடணும்
ha ha R U A POLITICIAN?
happy new year and happy pongal
புத்தாண்டு வாழ்த்துக்கள். வ்ழக்கம் போல் ஜாலி+informative பதிவு
..ஏதோ இங்கிலீஷ்ல இலக்கணம் சுத்தமாக ....."As I am suffering from fever னு ஆரம்பிச்சு .... Yours sincerely னு முடிக்கிற " ரேஞ்சுல அவளுடைய பேரு கேட்டார்.
ha ha god comedy
u had made a good comedy matter related english,weldone
i expect u may change yr logo in new year.
when compare with your previous posts, this post shows fresh, due to gap
//ஒரு வழியாக - வெற்றிகரமாக - இரண்டு வாரங்களுக்கு மேலாக - ஈமெயில், பதிவுலகம், Facebook பக்கம் வராமல் இருந்து விட்டேன். //
அந்த அனுபவம் எப்படியிருந்ததுன்னு ஒரு இடுகை போடுங்க! நானாயிருந்திருந்தா இன்னேரம் தலையைப் பிச்சுக்கிட்டு நடுரோட்டுலே நாட்டியம் ஆடியிருப்பேன். :-)
(காலம் தாழ்ந்த) இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இவ்வாண்டும் பதிவுலகில் பட்டை கிளப்புங்க!
Happy New year Chitra..enjoyed reading your post.
happy new year welcome back
nadesan
Welcome back!!!
புத்தாண்டுவாழ்த்துக்கள்.
சித்ரா புதுசா இருக்குது கலக்குங்க தொடர்ந்து.
சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்ததால் வலை பக்கம் வர முடியவில்லை தம்பி சுதா
உங்கள் படைப்பு அருமையாக உள்ளது
Nice one..
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!//இங்கே டிரஸ் என்றால் பெண்கள் அணியும் உடைக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், ஆண்களுக்கு "outfit" அல்லது " clothes" என்றுதான் சொல்வார்கள் // அட...இப்படி எல்லம் இருக்கா?
ஆஹா ஆஹா அங்கேயும் இப்படிதானா ,இடத்துக்கு இடம் பிரச்சினை தான்.
என்னங்க . நேத்து வரைக்கும் உம்முன்னு இருந்தீங்க. இன்னைக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க. சித்ராக்கா வந்துட்டாங்களா ?
நல்ல பாடம்:)!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா.
////ஊருக்கு ஏத்த மாதிரி எதை மாத்துறீங்களோ இல்லையோ...... பேச்சை மாத்த வேண்டியது இருக்கே....////
ஆமங்கக்கா நானும் யாழ்ப்பாணத்து தமிழில அடிக்க மயலுவேன் ஆனால் அது பலருக்கு சிலவேளைகளில் விளங்குவதில்லை... ஹ..ஹ..ஹ..
very interesting post Chitra..Happy New Year..:)
Tasty appetite
வாங்க அக்கா
வணக்கம் புத்தாண்டு வாழ்த்துகள் பொங்கலுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்
உஷார் பார்டிக்கு ( பாட்டி அல்ல ) வாழ்த்துக்கள். கப்புன்னு பிடித்துக்கொள்ளும் உங்களுக்கு ஒருச்பாஷ்........ஆமாம் சில் சமயங்களில் சில் இடங்களில் நம்ம மூக்கு உடைபடுகிறது .அறியாமை தப்பு அல்ல அறிய முயலாமை தான் தப்பு. உங்க பாடத்தியும் எடுத்து விடுங்கோ.
ஹ..ஹா...ஹா.......
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ஹா ஹா
பட்டாசு போல வெடிக்குது பதிவு, ஹிஹி
வருட துவக்கமே அசத்தலாக இருக்கிறது.
உங்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.
சிரிக்கவும் சிரிக்க வைக்கவும் ஒரு மனசு வேணும் சித்ரா.வாழ்த்துகள்.
// நெல்லை சீமையில, பிரிட்டிஷ் இங்கிலீஷ் படிச்சுட்டு வந்து, இங்கே அமெரிக்க இங்கிலீஷ்ல குப்பை கொட்டுரோமே....//
டக்கருல ...சாரா டக்கருல ....நீங்க படிச்ச கல்லூரிய சொன்னேன்.
சிரிப்பு அடங்கலை
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் சித்திரா அக்கா
ஹலோ மைக் டெஸ்டிங்க... 1,2,3....
வணக்கம். புத்தாண்டின் முதல் பதிவு அருமைங்கோ....மேடம்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்!//இங்கே டிரஸ் என்றால் பெண்கள் அணியும் உடைக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், ஆண்களுக்கு "outfit" அல்லது " clothes" என்றுதான் சொல்வார்கள் //
அட..! இது வேறயா?
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா
புத்தாண்டின் முதல் வெட்டிப் பேச்சு, இங்கிலிஷ் பேச்சாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கலக்ஸ்!
சித்ரான்னாலே சுவாரஸ்யம் தான்..இத்தனை கொஞ்சம் குறைந்திருந்ததுன்னே சொல்லலாம்...இதே களைகட்டியாச்சி இப்ப...
as usal cracking[ithula eathaavathu thappu irrukungalaa] post
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
very funny post. இதுல உள்குத்து,வெளிக்குத்து எதுவும் இல்லையே
கலக்குங்க சித்ரா
புத்தாண்டு வாழ்த்துக்கள்,
இங்கிலாந்தில் டிக்கியை பூட் என்கின்றார்கள் விளம்பரத்தை அட்வேர் என்பார்கள் இப்படிப் பல விட்யம் இருக்கு நல்ல ஆராய்ச்சி
//ஆமா..... உனக்கு எதுவும் இப்படி "மாட்டல்" கதை இல்லையா? என்று கேக்காதீங்க..... நாங்க எல்லாம் உஷார் பார்ட்டிக..... அடுத்தவுக விட்ட தப்புல இருந்தே கப்புன்னு பாடத்தை பிடிச்சிக்கிட்டோம்ல .......//
நம்பிட்டோம்க்கா!!!
நகைச்சுவையுடனும் பதிவு அருமை.
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
சித்ரா அக்கா வந்தாதான் கச்சேரி களை கட்டுது!..:) welcome back akka!
இதுக்குத்தான் பத்து வருசமா நான் இங்கிலிசே பேசறதில்லை.
welcome back chitra.. belated happy new year wishes.
எப்படி எல்லாம் பாடம் படிக்க வேண்டியதாயிருக்கு....
வாங்க டீச்சர் நல்லா இருக்கீங்களா? வந்ததும் வாழ்த்து சொல்லிப்புட்டு திரும்ப 'எஸ்' ஆகத்தானா?
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள், சித்ரா.
உங்க பதிவ படிச்சிட்டேன். இன்னும் சிரிச்சி முடிக்கலை
வாழ்க இன்று போல் என்றும்...டவுட் ஒண்ணுமில்லை தாய்..
உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன்! :)
http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html
//அடுத்தவுக விட்ட தப்புல இருந்தே கப்புன்னு பாடத்தை பிடிச்சிக்கிட்டோம்ல //
உண்மைக்குமேவா?? ;))
அம்மா. முடியல. கண்ல தண்ணி வரும் வரை சிரிச்சும் இன்னும் சிரிப்பு முடியல்ல. டிக்கி ஜோக்கும் நைஸ் நேம் ஜோக்கும் க்ளாஸ். இந்த மாதிரி குட் நேம் என்ன என்று யாரும் ட்பதில்லைன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். இங்க இருக்கும் சில வயதான பிரிட்டிஷ் ஆளுங்க (வயதானவங்க) இன்னும் விடல. அவ்வ்வ்வ்
Belated Happy New Year =))
இதுக்கு தான்... ஆங்கிலமும் படிக்கனும்கறது... தமிழ் மொழியில் கூட பல வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்து மருகி வந்ததுதான்...ஆமா அவங்களுக்கு தமிழ் மொழின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா மேடம்...
"In India, you have dress for men too?"
"I never knew I had a bad name too..."
addapavingala ippadi illama pottu nama allungala kollrangha,,americansuuuu
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் !
iyaaaaaaaaaaaaaaa me the 99thu
ayoyoooooo ippavum thoppiyaaaa;
ada pongappaaaa
சுவாரஸ்யமான பதிவு சித்ரா :)
பிள்ளைகள்ட்டேயும் சொல்லிச் சிரிச்சிட்டிருக்கேன் :)
super post!
நானும் இங்கே வந்த புதுசுல இப்படியெல்லாம் பேசியிருக்கிறேன். ஆனா, அமெரிக்கர்கள் யாருமே என்னை கேலி செஞ்சதில்ல, மெதுவா பேசச்சொல்லி புரிஞ்சிக்கிட்டாங்க, இல்ல அவங்க எப்படி பேசணும்னு சொல்லித்தந்தாங்க. என்னை கேலி செஞ்சதெல்லாம், சக இந்தியர்கள் மட்டுமே!
***அவர் வாங்கிய பொருட்களை காரில் வைக்க அவர் காத்து இருப்பது தெரியாமல், சாரா இன்னொரு தோழியிடம் பேசி கொண்டு இருந்தாள். சுந்தரம் பவ்யமாக அவளிடம்,
"I want to open the dicky, please" என்று கேட்க, அவள் கோபத்தில் திட்ட ஆரம்பிக்க .... விவரம் புரியாமல் இவர் முழிக்க.....
அருகில் வந்த இன்னொரு இந்திய மாணவர், சுந்தரத்திடம், " இங்கே கார் பின்பக்கத்தை ட்ரன்க் (trunk) என்றுதான் சொல்வார்கள். நீ சொல்லியது வேற "பொருள்" படும், " என்ற பின் - சுந்தரம் முகத்தில் அசடு வழிய - விஷயம் தெளிந்து சாரா சிரிக்க.....
அட, அட, அட......***
LOL
எனக்கும் இப்போ தான் dress matter தெரிந்தது.நன்றி
வலையுலகம் உங்களை மீண்டும் வரவேற்கிறது....
பென்சில்ல எழுதிட்டு அழிக்க ரப்பர் கேட்ட கதை தெரியுமா உங்களுக்கு?
வெல்கம் பேக் டு பதிவுலகம் .ஆரம்பமே அமர்களம்
இந்த இங்கிலிபீசு படுத்துற பாடு இருக்கே.. :-)))
கலக்கல் பதிவிலிறுந்து ஆரம்பம் வாழ்த்துக்கள்.
விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளுங்க
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html
டிரஸ் விஷயம் இப்பத்தான் தெரியும் சித்ரா. தமிழிலேயே சென்னைத் தமிழில ஆரம்பிச்சு மலேயாத் தமிழ், ஈழத்துத் தமிழ்னு எத்தனையோ இருக்கு. தின்னவேலிக்குப் பக்கத்தூரு நாகர்கோவில்ல பேசின தமிழ் புரியாம முழிச்சவ நான்!!
ஏம்மா இந்தியாவுக்கா வந்திருந்தாய்?
எனக்குத்தெரியாமப்போச்சே.தெரிஞ்சிருந்தா எங்கஊருக்கு எங்கவீட்டுக்குக் கூப்பிட்டிருப்பேனே.வாய்ப்பை விட்டுவிட்டேனோ?இனிமேல் இந்தியா வந்தால் எனக்கு முகூட்டியே சொல்லம்மா.நல்லது.
Akka....Enakkum thevappadum american english...doubt kekkuren..
Akka...unga article semayaa irukku.
pottu thaakkureenga...!
சித்ராக்கா,
மீ த லாஸ்ட்...! சரி விடுங்க , அதனால என்ன புடிங்க... புத்தாண்டு வாழ்த்தையும், பொங்கல் வாழ்த்தையும்!
//சிங்கப்பூர் இங்கிலீஸ் இன்னும் காமெடியா இருக்கும் ...// இத நான் ரிப்பீட்டிக்கறேன்.
அக்கா உங்க மீசையில (இல்லாட்டி என்ன , பேச்சு வழக்குக்காக சேத்துக்கறேன்) மண் ஒட்டின கதைய கொஞ்சம் அவுத்து விடுங்க. இன்னும் கூடுதலா சிரிக்கனும். அதுக்குத்தான்!
எதுக்கு வம்பு? அமெரிக்கா வந்தா வாயை மூடிக்கிட்டு இருந்துடறேன். ஊமைன்னு ஒரே பாடா போயிடும்!!
அது சரி அவிங்க பிஸ்கேட்(பில்கேட் இல்ல) இவிங்க குக்கீஸ் சரி தானே?
ha ha!! :D Sooper-dooper! :D
"good name"/"Dicky" LOLzzzz!!!
Happy Happy New Year to you!! :D
தன் ஊரைப் பற்றிப் பேசுகையில் "Kanalaka Park" என்றார் ஒரு அமெரிக்கர். புரியாமல் பார்க்கின் பெயர் கானாலாகா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு தான் ஒரு அமெரிக்கப்பீட்டர் புரிந்த Linguist மூலமாகத் தெரிந்தது, "Kind of like a" என்பதையே Kanalaka என்று சொல்லியிருக்கிறார் என்று.
அமெரிக்காகாரங்கிட்ட பீட்டருல மாட்டிகிட்ட கதைய இப்புடி பேருப்பேரா பேசிகிட்ருக்கீகளே... நம்ம மெட்ராசுல தமிழ் பேசி நாம்பட்ட பாடு பெரும் பாடு. நாசம்ங்கிற வார்த்தைய வெச்சுகிட்டு கொண்டேபுட்டாய்ங்க்ய!
இந்தப் பதிவையும் மருதை தமிழ் guyன் நீளப்பெயர் பதிவையும் படித்ததும் என் சென்னைத் தமிழ் அனுபவங்கள் நினைவில் அணிவகுத்தன. நினைவுகளை மலர வைத்தமைக்கு நன்றியுடன் உங்களிருவரின் பதிவுகளை reference கொடுத்து ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.
ஊருக்கு வந்துட்டு கொஞ்சம் கூட ஓய்வு இல்லாம ஊரை சுத்தி சுத்தி அதான் இப்பத்தான் லைட்டா நேரம் கிடைச்சுது.சரி லைட்டா இந்தபக்கம் வந்தா மறுபடியும் முதல்ல இருந்து …சிரிச்சி சிரிச்சி….ஆமா நான் தான் டையெடு ஆயிட்டேன்……
ம்ம்ம்ம்……சித்ரா….
நிறையபெருக்கு இப்படி நடக்கும் ஆனாலும் உங்களபத்தி சொல்லாம …….சரி விடுங்க
பொங்கல் வாழ்த்துக்கள்……. சித்ரா
It is ஸேரா...Not சாரா..
//ஒரு காசு said...
நானும் இங்கே வந்த புதுசுல இப்படியெல்லாம் பேசியிருக்கிறேன். ஆனா, அமெரிக்கர்கள் யாருமே என்னை கேலி செஞ்சதில்ல, மெதுவா பேசச்சொல்லி புரிஞ்சிக்கிட்டாங்க, இல்ல அவங்க எப்படி பேசணும்னு சொல்லித்தந்தாங்க.//
Thats normal...
என்னை கேலி செஞ்சதெல்லாம், சக இந்தியர்கள் மட்டுமே//
Thats absolutely normal..Like this post :-)
Post a Comment