ரொம்ப நாள் கழிச்சு "தம்பட்டம்" தாயம்மாவை சந்திக்க வேண்டியது வந்தது.
"என்ன சித்ரா, ஆளையே காணோமே. பதிவுகள் எழுதுறது கூட குறைஞ்சு போச்சே."
"தாயம்மா, வழக்கமான காரணம் தான். பல வேலைகள் வரும் போது, வெட்டிபேச்சுக்கு டைம் இல்லாம போயிடுது. "
"என்னமோ, பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவு எழுதாட்டி அந்த பணம் போய்ட்ட மாதிரியும் ...... ஹி, ஹி, ஹி, .... விட்டு தள்ளு.."
" அதை ஏன் கேட்குற? ஊரு உலகத்துல , வாரத்துல பத்து பதிவுகள் போடுறவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. வாரத்துக்கு ஒரு பதிவு நான் போட்டு விட்டு படுற பாடு இருக்கே..... அய்யய்யய்யய்யயய்யய்யயோ ........ !!!"
" என்ன ஆச்சு?"
"இப்பெல்லாம் ஒரு பதிவு போட்டா, அதில ஒரு வார்த்தையையோ ஒரு சப்பை மேட்டர் கருத்தையோ பிடிச்சிக்கிட்டு - ஐந்தாறு பேரு கேள்வி கேட்க வந்துடுறாங்க. மெயில்ல பதில் சொல்லியே பொழுது போகுது. ஆரோக்கியமான கருத்து விவாதங்களை நான் வரவேற்கிறேன். அபத்தமான விவாதங்களை அல்ல. "
"உன் சொந்த ப்லாக்ல உன் கருத்தை - உன் பீலிங்க்ஸ்சு சொல்ல உனக்கு உரிமை இல்லையா?"
" கொஞ்சம் வெட்டி பேச்சுக்கும் நேரம் ஒதுக்கி, பதிவு எழுத உட்கார்ந்தா...... இந்த வார்த்தை/கருத்து - இவங்களை காயப்படுத்தி விடுமோ? - இவங்களுக்கு எரிச்சல் படுத்தி விடுமோ? - இவங்களுக்கு வருத்தப்படுத்தி விடுமோ? - இவங்களுக்கு கோபம் உண்டாக்கி விடுமோ? - இப்படி எழுதினால், நான் இப்படித்தான்னு முத்திரை குத்திடுவாங்களோ? அப்படி எழுதினால், என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆயிடுமோ? என்று ஆராய்ச்சி பண்ணி எழுத வேண்டிய நிலையை பார்த்தால் - இன்னும் எதுக்குடா பதிவுகள் எழுதணும்னு தோணுது?"
" ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ......சித்ரா, நீ உன் மனசாட்சிக்கும் கூகுள் சொல்ற சட்ட திட்டங்களுக்கு தான் " I agree" என்று டிக் செய்துதானே ப்லாக் ஆரம்பிச்சு வச்சுருக்கே. உலகத்தில உள்ள ஏழு கோடி தமிழ் மக்களும் - அவங்க மனசுல போட்டு வச்சுருக்கிற சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு எழுதுறேன் என்றா ஒத்துக்கிட்டு ப்லாக் எழுத வந்தே? அப்புறம் எதுக்கு இந்த வீண் கவலை? "
"ஆஹா.... அப்படி ஒண்ணு இருக்கோ? கரெக்ட். அவங்க அவங்க ப்லாக்ல அவங்க அவங்க தான் தனிகாட்டு ராஜா/ராணி!"
"சித்ரா, இப்படி சொல்ற நீயே, சிலர் தங்கள் பதிவுகளில் கவர்ச்சி படங்கள் போடுவதை - தான் வைக்கிறதை - எதிர்க்கிறதா ஒரு பேச்சு இருக்குதே. "
" நான் அப்படி யார்க்கிட்டேயும் சொல்லல, தாயம்மா. அந்த டாபிக் அடிப்படையில் பதிவுகள் இருந்தால், நான் வாசிக்காமல் புறக்கணித்து விடுவேன். அதற்கு காரணம் கேட்டாங்க. அப்படி எழுதுறது அவங்க இஷ்டம். அதற்காக எனக்கு இஷ்டமில்லா பதிவுகளை நான் வாசித்து வோட்டு போடணும்னு என்கிற கட்டாயம் இல்லாததால், அந்த பதிவுகளை ஒதுக்கி வச்சுடுவேன் என்று பதில் சொல்லி இருக்கேன். அவ்வளவுதான்."
"சித்ரா, நீ போன பதிவில் ஒரு பதிலில் கூட - " தமிழ் பதிவுலகில் பிரபலம் ஆக - அதிகம் ஹிட்ஸ் கிடைக்க சொல்லப்படும் காரணங்கள். " - உன்னை சிரிக்க வைக்குதுன்னு சொல்லி இருந்ததற்கு கூட கேள்வி வந்துச்சாமே. "
" ஆமாம், தாயம்மா. இப்போவும் அதையே தான் சொல்றேன். தனக்கு இந்த மாதிரி மேட்டர் தான் - படங்கள் தான் பிடிக்குது - அதை ஆசை தீர தன் பதிவிலும் போட்டு ஜொள்ளிக்கிறேன் ...sorry ..... போட்டு கொள்கிறேன் என்று சொல்லி தங்கள் பதிவுகளில் போட்டுக் கொள்ளட்டுமே. அதை விட்டுப்புட்டு, அப்படி எழுதினால் தான் கூட்டம் சேருது - அப்படித்தான் ஹிட்ஸ் கிடைக்குதுன்னு ஒரு டொச்சு காரணம் சொல்லி - அதையே தமிழ் பதிவுலக வேதவாக்காக புதிய பதிவர்களிடமும் பரப்பி , தான் மட்டும் இல்லை, தமிழ் பதிவுகள் வாசிக்க வருகிறவர்கள் எல்லாருமே "அந்த" மாதிரி முத்திரை குத்துவது போல ஆகிறதே. அந்த மாதிரி இல்லாமல் வரும் என்னை போன்றவர்களின் பதிவுகளையும் வாசிக்க தமிழ் மக்கள் இருக்கிறார்களே? நாம என்ன , கூகுள்ல சினிமா படமா எடுத்து விடுறோம்? ஒரு குலுக்கல் டான்ஸ் வைக்கலைனா commercial success ஆகாதுன்னு சொல்ல? எல்லாமே ஓசிதானே."
"ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, .......... சிரிச்சு முடியல. இப்போ புரியுது. குமுதம் - குங்குமம் - விகடன் போல பத்திரிகைகளின் பிசினஸ்க்காக கொடுக்கிற காரணம், இன்டர்நெட்ல பதிவுகள் எழுதுவதற்கு எப்படி ஒத்து வரும்?
அப்படி கவர்ச்சி படங்கள்தான் பார்க்கணும் என்று இருக்கிற தமிழ் மக்கள் , எதற்கு ஒரு பதிவர் அப்படி ஒரு பதிவு போடுகிற வரைக்கும் காத்து இருக்கணும்? இருபத்துநாலு மணி நேர சர்வீஸ்..... கூகுள் இமேஜஸ் - யுடியூப் என்று இன்டர்நெட்ல எந்த நேரமும் கவர்ச்சியின் உச்சக்கட்ட படங்களுக்கா பஞ்சம்? கம்ப்யூட்டர் ஆன் செய்து - இன்டர்நெட் கனக்ட் பண்ணி வரவங்க - அப்படி படங்களை பார்க்க ப்லாக் பக்கம் வருகிறதற்கு பதிலாக, நேரிடையாக இவங்க படங்களை சுட்டு போடுற சைட் போய், பார்க்கலாமே. இன்டர்நெட்ல காரையே திருட வழி இருக்கிறப்போ, கார் டயர் மட்டும் உருட்டிக்கிட்டு போகிற மாதிரி.... ? "
"அதானே தாயம்மா. அப்புறம், ஒவ்வொரு தமிழ் பதிவர்களும் - தங்கள் தனித்துவத்தையும் - தனி திறமைகளையும் அடையாளம் காட்டத்தானே தனக்குன்னு ப்லாக் வச்சுருக்காங்க. . ஆங்கில பதிவுகள்ல காணப்படுகிற variety , தமிழ் பதிவுகள்ல குறைந்து போகிறதே, ஏன்? ஒரே மாதிரி மோல்ட்லேயே எழுதணும்னு நினைக்கிறதுதானே."
" அப்புறம், ஒரு பதிவுக்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று ஆங்கில பதிவுகள் வாசிக்கும் போது தான் தெரிஞ்சுக்கிட்டேன். கூகுள்ல அந்த அந்த டாபிக் வச்சு பதிவுகள் தேடும் போது, கரெக்ட் ஆக search பண்ணி relevant blog posts லிஸ்ட் பண்ணி காட்டுது. ஆனால், தமிழில் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாம இருப்பது, ஒண்ணுமே புரியல. டைட்டிலேயே ஜொள்ளு விட வாங்க என்று அறிக்கை விட்டு கூப்பிட்டு விட்டு, பதிவில் "ஜெபம் செய்வதன் மகத்துவங்கள்" பத்தி எழுதவா முடியும் ? உனக்கு ஏதாவது புரியுதா, தாயம்மா?"
" அதாவது, ஒரு பதிவுக்கு தலைப்பா - "பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. இப்படி லாஜிக்கே இல்லாத் லாஜிக் உள்ள "ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்" இருக்கிற தமிழ் பதிவுலகில் நீயும் ஒரு தமிழ் பதிவர்னு வெளியில சொல்லியிராத. ஹி, ஹி, ஹி, ஹி, ஹி, ...."
"தாயம்மா, கேலி பண்ணாதே! இவர்களை விட்டால் திருக்குறள்ளேயே , எல்லா தமிழ் மக்களும் வாசிச்சு அதிக ஹிட்ஸ் கிடைக்கத்தான் ஒரு பிரிவுக்கு - "காமத்து பால்" என்று கவர்ச்சியா பேர் வச்சுருக்காங்க என்று சொன்னாலும் சொல்லுவாங்க..... ஹா, ஹா, ஹா, ஹா, ........."
" சில தமிழ் பதிவர்களுக்கு Quantity முக்கியம். எல்லாமே "ரமணா" விஜயகாந்த் மாதிரி statistical information தான். மற்றவர்களுக்கு Quality முக்கியம். இப்படி இரு கோணங்களில் பயணிக்கும் போது, எப்படி பிரபல பதிவர்கள் என்பதற்கும் - பிரபல பதிவுகள் என்பதற்கும் ஒரே மாதிரி இலக்கணம் இருக்க முடியும்?
ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்கள் - யாரும் வாசித்தாலும் வாசிக்கவில்லைஎன்றாலும் எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள்.
சென்ற வாரத்தில் , பதிவுலகில் எட்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் ILA விவசாயி தனது பதிவில்:
http://vivasaayi.blogspot.com/2011/08/blog-post_25.html
மீள் பதிவாக போட்டு இருக்கும் ஒரு பேட்டியில் இருந்து - தமிழ்மணத்தில் மிக முக்கியமானவரான காசி ஐயா என்பவர் சொன்ன அறிவுரையை - கவனிக்கவும்: அறிவுரை தான் - பதிவுலக சட்டம் அல்ல - இங்கே நானும் மேற்கோள் காட்டி கொள்கிறேன் .
" புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் - அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்"
" சித்ரா, ஒவ்வொரு பதிவரும் மனதிற்குள் ஒரு அளவுகோல் (standard) வைத்து இருப்பார்கள் போல. "
தாயம்மா, தமிழ் பதிவுலகில் எல்லோருமே கிணத்து தவளைகள் அல்ல. குறுகிய வட்டத்துக்குள்ளேயே "கொர் குர் குர்...."னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு. சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. இரண்டு பிரிவினர்களின் உரிமைகளையும் நான் மதிக்கிறேன் - அவை, என்னுடைய ப்லாக் எல்லையை தொடாதவரை.
ஓகே, தாயம்மா..... வழக்கம் போல உன்கிட்ட பேசினாலே எனக்கு பல விஷயங்கள் தெளிவா ஆயிடுது. நான் ஒரு பிரேக் எடுத்துக்கிட்டு அப்புறமா சந்திக்கிறேன். "
210 comments:
1 – 200 of 210 Newer› Newest»ME THE FIRST?
போட்டுத் தாக்குறீங்க!
விக்கி வேறு இதில் உள்குத்து வைக்கிறார்!
சகோ என்னமோ சொல்றீங்க சரியாத்தான் புரியல...ஹிஹி!
இதுல உள்குத்து - வெளிகுத்து எதுவும் இல்லை. என் சார்பாக சில விளக்கங்களை சில பதிவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன். குறிப்பிட்டு யாரையும் சொல்லவில்லை.
//இப்பெல்லாம் ஒரு பதிவு போட்டா, அதில ஒரு வார்த்தையையோ ஒரு சப்பை மேட்டர் கருத்தையோ பிடிச்சிக்கிட்டு - ஐந்தாறு பேரு கேள்வி கேட்க வந்துடுறாங்க. மெயில்ல பதில் சொல்லியே பொழுது போகுது. ஆரோக்கியமான கருத்து விவாதங்களை நான் வரவேற்கிறேன். அபத்தமான விவாதங்களை அல்ல. "
//
ரொம்பச் சரிங்க..
என் அனுபவத்தில் இந்த பதிவர் உலகத்தில் மிகுந்த கருத்து வகைபாடுகளைக் காணோம். உற்றுக் கவனித்தால் ஒரு மறைவான குழும அரசியல் வெளிப்படுகிறது. இந்தக் குழும அரசியல் அனைவரையும் அடித்துச் செல்கிறது என்றுதான் சொல்வேன்.
மற்றபடி சிலர் நகைச்சுவையை நன்றாகவே கையாளுகின்றனர்.
எப்படியாயினும் இந்தச் சுதந்திரம் போற்றுதலுக்குரியதே..
உண்மையிலேயே நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
Chitra said...
இதுல உள்குத்து - வெளிகுத்து எதுவும் இல்லை. என் சார்பாக சில விளக்கங்களை சில பதிவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன். குறிப்பிட்டு யாரையும் சொல்லவில்லை.
ஹா ஹா செம காமெடி..
சில தமிழ் பதிவர்களுக்கு Quantity முக்கியம். எல்லாமே "ரமணா" விஜயகாந்த் மாதிரி statistical information தான். மற்றவர்களுக்கு Quality முக்கியம். இப்படி இரு கோணங்களில் பயணிக்கும் போது, எப்படி பிரபல பதிவர்கள் என்பதற்கும் - பிரபல பதிவுகள் என்பதற்கும் ஒரே மாதிரி இலக்கணம் இருக்க முடியும்?///
இதுதான் சரியான புரிதல்.. எழுதும் பதிவுகள் நாட்டை திருத்தவேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் கண்டிப்பாக முகத்தை சுழிக்க வைக்காமல் இருக்கத்தான் முயற்சி செய்கிறேன் :))
வணக்கம் அக்காச்சி,
உங்களின் மன உணர்வு, நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறேன்,
ஆனால்...இந்தத் தமிழ்ப் பதிவுலகில் மட்டும், இலக்கியத் தரமான நல்ல தலைப்புக்களை வைக்கும் போது யாருமே எட்டிப் பார்க்கிறாங்க இல்லையே?
அது தான் கொஞ்சம் புரியாத புதிராக இருக்கிறது, என் ஆரம்ப காலப் பதிவுகளைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியுமே.
சித்திராக்கா உண்மையில் உங்கள் கருத்து மிகவும் சரியானது....
வருகைப்பதிவு.. அப்படி இன்னிக்கு தான் கொஞ்சம் முன்னாடியே பின்னூட்டமிட முடிந்தது..
தமிழ்ப் பதிவுலகில் நல்ல தலைப்புக்களோடு, காத்திரமான படைப்புக்கள் வரவேண்டும் என்றால்,
தலைப்பைப் பார்த்து பதிவினைப் படிக்க வருகின்ற பெரும்பான்மையான வாசகர் வட்டம் மாற வேண்டும்,
>>சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க.
ஹி ஹி விடுங்க,, வலிக்குது..
//"இப்பெல்லாம் ஒரு பதிவு போட்டா, அதில ஒரு வார்த்தையையோ ஒரு சப்பை மேட்டர் கருத்தையோ பிடிச்சிக்கிட்டு - ஐந்தாறு பேரு கேள்வி கேட்க வந்துடுறாங்க. //
கேள்விக்கான பதிலையெல்லாம் தொகுத்து பதிவாக்கி விட வேண்டியது தானே( எண்ணிக்கை கணக்கும் ஆச்சு, நம்ம கருத்தை எல்லோருக்கும் சேர்ந்து சொன்னது மாதிரியும் ஆச்சு)
நிறைய பேர்கள் வாசிப்பதுதான் - ஒரு பதிவின் வெற்றி என்று நான் நினைக்கவில்லை. அந்த பதிவை ஒருவர் மட்டுமே ஆனாலும் மிகவும் ரசித்து வாசித்து, பாராட்டினாலே ஒரு ஆத்ம திருப்திதானே, நிரூபன் சார். ஏதோ வந்தோம், பதிவை வாசித்தோம் என்று மறந்து விட்டு செல்கிறவர்களும் இருக்கிறார்களே.
அஹ்ஹா.. நீங்களும் பரபரப்பு தலைப்பு வைக்க ஆரம்பிச்சுட்டீங்க போல..
இந்த டைட்டிலே நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு சொல்லீட்டுது!
இதுவும்கூட பதிவுலக கவர்ச்சி விதிகளின்படி உங்கள் பதிவுகளிலேயே அதிகூடிய ஹிட்சைப் பெறும் என நினைக்கிறேன்!
அதுவும் சித்ராக்கா (அல்லது ஒரு பெண் - இப்படிச் சொல்வதைத் தவறாக எடுக்க வேண்டாம் -யாரும் எதைப்பற்றியும் பேசலாம்! ) இப்பிடி டைட்டில் வைத்தது ....இன்னும் அதிகப்படுத்தும்!
அவர் அவருக்கு தனி அளவு கோல் உண்டு என்பதே நிதர்சணம் ...
நீங்க அடிச்சி ஆடுங்க சித்ரா ...
///அஹ்ஹா.. நீங்களும் பரபரப்பு தலைப்பு வைக்க ஆரம்பிச்சுட்டீங்க போல.. ///
....இல்லீங்க.... இந்த பதிவில் discuss செய்யப்பட்டு உள்ள டாபிக்குக்கு ஏற்ற மாதிரி என்று தோன்றியதால் வைத்தேன்.
>>
" அப்புறம், ஒரு பதிவுக்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்று ஆங்கில பதிவுகள் வாசிக்கும் போது தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
இப்போ நம்ம மக்களும் இந்த பதிவின் டைட்டிலைப்பார்த்து ஒரு பதிவு அதிகமான மக்களை ரீச் ஆக டைட்டில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருப்பார்கள்
பதிவு மிக ஆழமாக இருக்குது சகோதரி.
நீங்கள் சொல்லும் அத்தனை வார்த்தைகளும் சத்தியமான உண்மை.
நாம் என்ன தேடுகிறோமோ அதை ஆங்கிலத்தில் அப்படியே அடித்து கூகிளில் தேடினால்
முதலில் வரும் இணைப்பு அப்படியே எடுத்துக்கொடுக்கும்.
ஆனால் தமிழில் அப்படி அல்ல என்பது மிகச் சரியே....
கூகிளில் இன்னும் தமிழ் பதிவுகள் சரிவர அலங்கரிப்படவில்லை
எனபது உண்மை எனினும், நம்ம பதிவர்கள் சிலர் இடும் பதிவுகளும் அப்படித்தான்
இருக்கிறது.
ஒன்றும் வேண்டாம் வெறும் தமிழ் என்று தட்டச்சு செய்யுங்கள் அங்கே தமிழ் நடிகைகளும்
தமிழ் (காமக்)கதைகளும் வந்து நிற்கின்றன....
என்ன செய்ய....
பதிவு நல்லா இருக்கு சகோதரி.
>>பாரத்... பாரதி... said...
அஹ்ஹா.. நீங்களும் பரபரப்பு தலைப்பு வைக்க ஆரம்பிச்சுட்டீங்க போல..
ஹா ஹா ஹா விதிவிலக்குகள் சில சமயங்கள் விதிகள் ஆகி விடுவதுண்டு
சித்ரா நெல்லை அருவாளோட கிளம்பிட்டாங்க. இனி எத்தனை தலை உருளப்போகுதோ!!!
/// இப்பிடி டைட்டில் வைத்தது ....இன்னும் அதிகப்படுத்தும்! ///
..... நான் எனக்கு தோன்றியதை தான் எழுதுகிறேன் . மற்றவர்களின் விருப்பு வெறுப்புக்கு என்று இல்லை என்று தான் சொல்ல வந்தேன். ஹிட்ஸ் அதிகம் வேண்டும் என்றால், 18 + என்றும் போட்டு இருப்பேனே. ஹி,ஹி,ஹி,ஹி....
நெத்தியடியோ செருப்படியோ நல்லாத்தான் கொடுத்திருக்கீங்க. சில ஜென்மங்கள் எப்படியோ திருந்தப் போவதில்லை. உங்களைத் தெரிந்தவர்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. சித்ரா என்கிற பெயரே போது, நீங்கள் எப்படி பட்டவர் என்று தெரிய. =)))
பதிவுலகின் உண்மையை வெளிச்சமாக்கறாங்க
/////>>பாரத்... பாரதி... said...
அஹ்ஹா.. நீங்களும் பரபரப்பு தலைப்பு வைக்க ஆரம்பிச்சுட்டீங்க போல..
ஹா ஹா ஹா விதிவிலக்குகள் சில சமயங்கள் விதிகள் ஆகி விடுவதுண்டு ////
..... சொல்ல வந்த விஷயங்களையும் தலைப்புகள் திசை திருப்பி விடுகின்றன என்பதற்கும் இதை ஆதாரமாக வைத்துக் கொள்ளலாமே.
//சி.பி.செந்தில்குமார் said...
>>சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க.
>>>>>>>>>>>
ஹி ஹி விடுங்க,, வலிக்குது..//
சிபி, நீங்க நேர்ல சொன்னாலே கேட்கிறதில்ல. இதுல ஹி ஹி வேற.நெகடிவ் பாய்ண்ட்ஸ் அனைத்தும் உங்களுக்காகவே சொல்லப்பட்டதா ஏன் நினைக்கிறீங்க!
....well-said!!! Thank you very much!
//நான் அப்படி யார்க்கிட்டேயும் சொல்லல, தாயம்மா. அந்த டாபிக் அடிப்படையில் பதிவுகள் இருந்தால், நான் வாசிக்காமல் புறக்கணித்து விடுவேன்//
ஆகா...சித்ராக்கா படிக்காத நம்ம பதிவுகளை பார்க்கணும்! :-)
ம்ம்ம்...நாமளும் நடிகைங்க படம் போட்டிருக்கோம்! அவ்வ்வ்வவ்!
சரி சரி எல்லாரும் லைன்ல வந்து அவங்களுக்கான தொப்பியை எடுத்து மாட்டிக்குங்கப்பா!
தமிழ்மணம் 7
சொந்த செலவில் சூன்யம், மந்திரி ஒதுக்கினார் மான்யம்
மகேந்திரன் has left a new comment on your post "பதிவுலகில் காமத்து பால்":
பதிவு மிக ஆழமாக இருக்குது சகோதரி.
நீங்கள் சொல்லும் அத்தனை வார்த்தைகளும் சத்தியமான உண்மை.
நாம் என்ன தேடுகிறோமோ அதை ஆங்கிலத்தில் அப்படியே அடித்து கூகிளில் தேடினால்
முதலில் வரும் இணைப்பு அப்படியே எடுத்துக்கொடுக்கும்.
ஆனால் தமிழில் அப்படி அல்ல என்பது மிகச் சரியே....
கூகிளில் இன்னும் தமிழ் பதிவுகள் சரிவர அலங்கரிப்படவில்லை
...... very true. You have observed it well.
வணக்கம் சித்ர! தங்களது பதிவை முழுமையாகப் படித்தேன்! என்னால் சீல கேள்விகள் கேட்காமல் இருக்க முடியவில்லை! எனது கேள்விகளுக்கு, பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்!
சும்மா தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க...
நீங்க சொன்னதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை...
>>>>Chitra said...
/// இப்பிடி டைட்டில் வைத்தது ....இன்னும் அதிகப்படுத்தும்! ///
..... நான் எனக்கு தோன்றியதை தான் எழுதுகிறேன் . மற்றவர்களின் விருப்பு வெறுப்புக்கு என்று இல்லை என்று தான் சொல்ல வந்தேன். ஹிட்ஸ் அதிகம் வேண்டும் என்றால், 18 + என்றும் போட்டு இருப்பேனே. ஹி,ஹி,ஹி,ஹி....<<<<
அய்யய்யோ இப்பிடி நீங்க யோசிச்சிடக்கூடாதுன்னு நான் நல்லா யோசிச்சுதான் (அப்படி நினைச்சு!) அந்த கமெண்டைப் போட்டேன்...வழக்கம்போல சொதப்பிருச்சு! அவ்வ்வ்வ்!
ஒத்துக்கிடுரேன்...எனக்கு சொல்ல வர்றதை ஒழுங்கா சொல்லத் தெரியல! :-)
"என்னமோ, பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவு எழுதாட்டி அந்த பணம் போய்ட்ட மாதிரியும் ...... ஹி, ஹி, ஹி, .... விட்டு தள்ளு.."
//
விட்டு தள்ளுங்க!என்ன தோணுதோ எழுதுங்க!வரும் எதிர் கருத்துகளைப்பத்தி கவலைப்படாதிங்க!
வைரமுத்தோட சில வரிக நினைவுக்கு வருது.
உலகின் வாயை தைப்பது கடினம்!
உந்தன் செவிகளை மூடுவது சுலபம!
அவ்ளோதான்!
சங்கவி has left a new comment on your post "பதிவுலகில் காமத்து பால்":
சும்மா தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க...
..... யாரையும் தாக்க இந்த பதிவு இல்லைங்க. என்னை நிம்மதியா - கருத்து சுதந்திரத்துடன் ஒரு பதிவு எழுத விடுங்க என்பதற்கு ஒரு வேண்டுகோள் தான்.
ஆண்டவா இது என்ன சத்திய சோதனை....
உண்மையை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் திரட்டிகள் குப்பைத் தொட்டிகளைப் போல மாறி வெகு நாளாயிற்று. இதில் நல்ல பதிவுகளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
அதிரடி புயல் சித்ரா அவர்களே..இந்தாங்க முதலில் இந்த ஜோடாவை குடித்து விட்டு அடுத்த பதிவில் காமத்து பாலை பற்றி விரிவாக உரைக்கவும்...:-)))))
அய்யய்யோ இப்பிடி நீங்க யோசிச்சிடக்கூடாதுன்னு நான் நல்லா யோசிச்சுதான் (அப்படி நினைச்சு!) அந்த கமெண்டைப் போட்டேன்...வழக்கம்போல சொதப்பிருச்சு! அவ்வ்வ்வ்!
..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... You are so sweet!
எனக்கு ஒன்னும் புரியலை.. இருந்தாலும் ஏதோ சொல்றீங்கன்னு புரியுது...
இப்ப புரியுதா.. புரியலையா... ன்னு கேட்கிறீர்களா?
புரியுது... ஆனா... :-)))
//ஆனந்தி.. said...
அதிரடி புயல் சித்ரா அவர்களே..இந்தாங்க முதலில் இந்த ஜோடாவை குடித்து விட்டு அடுத்த பதிவில் காமத்து பாலை பற்றி விரிவாக உரைக்கவும்...:-)))))//
சோடா கொடுப்பவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கே! :-)
NALLA KARUTHTHU....APPADIEY EN BLOG-m VAANGALEN......
PL. SEND UR MAIL ID TO ME....TO SEND A POST DETAILS...ONLY IM ASKING....THANK U
>>ஆனந்தி.. said...
அதிரடி புயல் சித்ரா அவர்களே..இந்தாங்க முதலில் இந்த ஜோடாவை குடித்து விட்டு அடுத்த பதிவில் காமத்து பாலை பற்றி விரிவாக உரைக்கவும்...:-)))))
ஏற்கனவே அவங்க எஸ்ஸேவே எழுதிட்டாங்க. இந்தக்காவுக்கு அது பத்தலை போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதில் இருந்து சித்ரா மேடம் சொல்ல வருவது என்ன வென்றால்...என் எழுத்து சுதந்திரத்தில் நொள்ளை சொல்ல யாருக்கும் ரைட்ஸ் இல்லை:-)))) என்பதும்...என் எழுத்துகளில் நான் எந்த தேச சேவையும் செய்ய போறது இல்லை என்பதும்....:-)))
யக்காவ்...இம்புட்டு தானா...சரவெடி..இல்லை மிச்சம் எதுவும் இருந்தாலும் அடுத்த பதிவில் போட்டு விடவும்...காமத்து பால் பகுதி ரெண்டு னு...ஹீ ஹீ..:-))
//ஆரோக்கியமான கருத்து விவாதங்களை நான் வரவேற்கிறேன்.
அபத்தமான விவாதங்களை அல்ல. " //
சரியாக சொன்னிங்க சித்ராக்கா
இது போல தான் நானும்
சில விவாதங்களில் தலை காட்டுவதில்லை ஏனெனில் அவர்களுக்கு பதில் சொல்ல
முடியாது என்று இல்லை
அவர்களுக்கு புரியாது என்று
தான் நாம் என்ன கருத்து சொன்னாலும்சிலருக்கு ஜென்மபுத்தி செருப்பால் அடித்தாலும் போகாது.
" சி.பி.செந்தில்குமார் said...
>>ஆனந்தி.. said...
அதிரடி புயல் சித்ரா அவர்களே..இந்தாங்க முதலில் இந்த ஜோடாவை குடித்து விட்டு அடுத்த பதிவில் காமத்து பாலை பற்றி விரிவாக உரைக்கவும்...:-)))))"
ஏற்கனவே அவங்க எஸ்ஸேவே எழுதிட்டாங்க. இந்தக்காவுக்கு அது பத்தலை போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
>>>>>>>>>>>>
இந்தக்கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...ஹிஹி
சரியான பதிவு.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
நண்பர் “வெட்டிப்பேச்சு“ சொன்னதுபோல பதிவுலகில் மறைமுகமாய் குழும அரசியல் இருப்பது உண்மையே.. பதிவுகளில் சொல்ல வந்த கருத்துக்கள் சரியானபடி சென்றடைகிறதோ இல்லையோ, பதிவுகளுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்க வேண்டுமென்பதே குறிக்கோளாக பெரும்பாலும் இருக்கிறது.
//"பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. //
நச்....
பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் உணர்வுகளையே /விருப்பங்களையே பதிவுகளில் எழுதுகின்றனர் என்று சொல்லிவிட முடியாது! சிலர் தங்கள் உள்ளத்தை மறைத்து, உணர்வுகளை மறைத்து - பிறருக்காகவும் எழுதிவருகிறார்கள்!
பெரும்பாலான பதிவர்களின் நிலைப்பாடு என்னவென்றால் தங்களுக்குத் தோன்றியதை, தங்களது உணர்வுகளை எழுத வேண்டும் என்பது!
ஆனால் சிலர் தங்களை மறைத்து, தங்கள் உணர்வுகளைப் பொத்தி வைத்துவிட்டு, தனது வாசகர்களுக்கு என்ன பிடிக்கிறது என்று நாடி பிடித்தறிந்து எழுதுகிறார்கள்!
ஒரு பதிவர் தான் பணிபுரியும் ஆஃபீசில், ரிசெப்ஷனிஸ்ட் ஆகப் பணி புரியும் பெண்ணிடம் கடலை போட்டதாக எழுதியிருப்பார்! ஆனால் உண்மையில் அவர் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்! நடக்காத ஒன்றை நடந்தது போல எழுதி, தனது இமேஜைப் பற்றிக் கூட அவர் பொருட்படுத்தாமல் இருக்கிறார் என்றால், அவர் தனது வாசகர்களுக்குப் பிடித்ததைதான் எழுதுகிறார் என்று அர்த்தம்!
மேலும், ஒரு பதிவரின் வெற்றியானது அவரது பதிவை எத்தனைபேர் படித்தார்கள் என்பதில் தங்கியிருக்கவில்லை என்பது முட்டாள்தனமான கருத்தாகும்! வெறுமனே ஒருவர் மட்டும் படித்து, பாராட்டுவதால் ஆத்ம திருப்தி வந்துவிடுகிறது என்று நீங்கள் சொன்னாலும், அது யதார்த்தம் கிடையாது!
இப்படி ஒருவரிடம் மட்டுமே பாராட்டு வாங்குகிற பதிவர் நாளடைவில் சோர்ந்து, காணாமல் போய்விடுகிறார்!
பலர் பாராட்டும் போதுதான் அவருக்கு உற்சாகம் பிறக்கிறது! ஏன் உங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன்! நீண்டகாலமாக, இண்டிலியில் அதிக ஓட்டுக்கள் பெறும் பதிவராக நீங்களே விளங்கி வந்தீர்கள்! தமிழ்மணத்திலும் உங்கள் பதிவுகளே மகுடம் சூடிக் கொலுவிருப்பதைக் கண்டிருக்கிறோம்!
அப்போதெல்லாம் அவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா? அந்த ஹிட்சுகள் உங்களுக்குத் திருப்தியைத் தரவில்லையா?
ஆனால், நீங்கள் ஹிட்ஸை மேலும் அதிகரிக்கும் நோக்கில், வாசகர்களுக்குப் பிடித்ததை மட்டுமே எழுதுவேன் என்ற நிலைப்பாட்டுக்கு உங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை அறிவேன்! ஒருவேளை இண்ட்லியிலும் தமிழ்மணத்திலும் சிலர் உங்களை முந்தியிருப்பதற்கு காரணம் இதுவோ தெரியவில்லை!
....
"இப்பெல்லாம் ஒரு பதிவு போட்டா, அதில ஒரு வார்த்தையையோ ஒரு சப்பை மேட்டர் கருத்தையோ பிடிச்சிக்கிட்டு - ஐந்தாறு பேரு கேள்வி கேட்க வந்துடுறாங்க. .....
இது தவிர்க்க முடியாதது! பொது மேடையில் , சக பதிவர்களின் நிலைப்பாடுகுறித்து நீங்கள் விமர்சிக்கும் போது, யாரும் கேள்வி கேட்காமல் இருக்க மாட்டார்கள்! அப்படிக் கேள்வி கேட்க கூடாது என்று நீங்கள் கருதினால், இப்படியான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்கவேண்டும்!
எப்படியான எதிர்க்கருத்துக்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சளைக்காமல் எதிர்கொண்டு பதில் கொடுப்பவர்களே, சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைப்பதற்கு தகுதியுடையோராகின்றனர்!
பிரபல ஈழத்துப் பதிவர் நிரூபன் அவர்களை இதற்கு சிறந்த உதாரணமாக என்னால் எடுத்துக் காட்ட முடியும்! அவர் தான் எடுத்துக் கொள்ளும் விவாதப் பொருட்களை, வாசகர்களோடு விவாதிக்கும் திறனே இன்று அவரை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது என்று சொல்வேன்!
எனவே எதிர்க்கேள்வி கேட்ககூடாது என்று என்று நினைப்பவர்கள் வெறுமனே பாட்டி வடை சுட்ட கதையை மட்டுமே எழுதினார் சிக்கல் இல்லை! மாறாக பாபர் மசூதியை உடைத்தது சரிதான்! என்று தலைப்புப் போட்டு எழுதினால் ஆயிரம் பேர் கேள்வி கேட்க வருவார்கள்தான்!
@C.P.S
//ஏற்கனவே அவங்க எஸ்ஸேவே எழுதிட்டாங்க. இந்தக்காவுக்கு அது பத்தலை போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஆமாங்க வாத்யார் சார்...பத்தல...:-)) அநேகமா இது சித்ரா காமிச்ச ட்ரைலர் மாதிரி தான் தோணுது.:-)))..மெயின் பிக்சர் ....க்கு நீங்க எத்தினி அவ்வவ் போடுவீங்க தெரில...:-))))
//பற்றி விரிவாக உரைக்கவும்...:-)))))//
சோடா கொடுப்பவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கே! :-)//
ஹ ஹ...ஹாய் ஜீ..:-))))
//சி.பி.செந்தில்குமார் said...
>>ஆனந்தி.. said...
அதிரடி புயல் சித்ரா அவர்களே..இந்தாங்க முதலில் இந்த ஜோடாவை குடித்து விட்டு அடுத்த பதிவில் காமத்து பாலை பற்றி விரிவாக உரைக்கவும்...:-)))))
ஏற்கனவே அவங்க எஸ்ஸேவே எழுதிட்டாங்க. இந்தக்காவுக்கு அது பத்தலை போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
சொல்லாத விஷயங்கள் நிறைய இருக்கு.. அதையும் சொல்லனும்ல அப்போ தான இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆகும் அதான்.. சில பேருக்கு இந்த சூடு பத்தாதுல.. :)))))
பதிவர்கள் பலவிதம் ?
ஹஹா ...
சிங்கம் களத்தில இறங்கிட்டுடோய் ...
வாழ்க வளமுடன் ..
////பொது மேடையில் , சக பதிவர்களின் நிலைப்பாடுகுறித்து நீங்கள் விமர்சிக்கும் போது, யாரும் கேள்வி கேட்காமல் இருக்க மாட்டார்கள்! அப்படிக் கேள்வி கேட்க கூடாது என்று நீங்கள் கருதினால், இப்படியான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்கவேண்டும்! ////
..... நான் கருத்து விவாதங்கள் செய்கிற அளவுக்கு சீரியஸ் விஷயங்கள் தொடுவதில்லைதான். நான் சாதரணமாக எழுதுகிற மொக்கை பதிவுகளுக்கு கூட - ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கேட்டும் - வேறு மாதிரி அர்த்தம் கொண்டும் கேள்விகள் கேட்கப்படும் போது, விவாதித்துக் கொண்டு இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் பதிவை வாசிக்கும் ஒவ்வொரு பதிவரின் எதிர்பார்ப்புக்கும் - விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் நான் உடன்பட்டு பதிவு எழுதுவது கடினமாக நினைக்கிறேன்.
//இதுல உள்குத்து - வெளிகுத்து எதுவும் இல்லை. என் சார்பாக சில விளக்கங்களை சில பதிவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன். குறிப்பிட்டு யாரையும் சொல்லவில்லை//
அம்மு..உள்குத்து..வெளிகுத்து ஆ னு கேட்டால் ஆமான்னு இனி சொல்லிட்டு போ...இது உன் பதிவு..உன் ஆதங்கம்...உன் கருத்து....
எல்லாருக்கும் விளக்கம் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை...உன் டைம் பாஸ் க்கு ப்லாக் எழுதுற..என்ஜாய்...லூஸு ல விடு,சில லூசுங்களை..:-)))))))
கவர்ச்சியாகவும், நளினமாகவும் தலைப்பு வைத்தால் மட்டுமே அதிக வாசகர்கள் வருவார்கள்! பதிவுகள் ஹிட் ஆகும் என்று சொல்வது தவறாகும்!
இதனை நானும் ஒத்துக் கொள்கிறேன்!
பிரபல பதிவர் சி பி செந்தில்குமார் அவர்கள், சில மாதங்களுக்கு முன்னர் தோழி என்கிற பதிவரை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருந்தார்!
சித்தர்கள் இராச்சியம் எனும் தலைப்பில் அவர் ப்ளாக் வச்சிருக்கார்! சித்தர்கள் பற்றி மட்டுமே அவர் எழுதுகிறார்! திரட்டிகள் எதிலும் அவர் இணைப்பதில்லை!
ஆனால் அவர் பெறும் ஹிட்ஸுகளோ தினமும் 5000 வரை போகிறது! எனவே பதிவுலகுக்கு வரும் புதியவர்கள் சகோதரி தோழியை முன்னுதாரணமாகக் கொண்டு பதிவுகளை எழுதுமாறு இத்தால் சகலருக்கும் அறிவிக்கிறேன்!
ஹி ஹி ஹி .....மேட்டர் என்னான்னா, அப்படி யாரும் பின்பற்றப் போவதில்லை! அப்படிப் பின்பற்றி இனியாரும் ஜெயிக்கப் போவதும் இல்லை!
முடிந்தால் யாராவது ட்ரை பண்ணட்டும்!
///பொது மேடையில் , சக பதிவர்களின் நிலைப்பாடுகுறித்து நீங்கள் விமர்சிக்கும் போது,///
..... நான் மற்றவர்களின் பதிவுகளை விமர்சிக்கவில்லை. என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் - வார்த்தைகளுக்கும் விமர்சித்து - என்னை restrict பண்ணாமல் இருந்தாலே போதுமே. நான் பின்னூட்டம் போட்டாலும், விமர்சிப்பவர்கள் உண்டு. சில பதிவுகளுக்கு வெவ்வேறு காரணங்களால் பின்னூட்டம் போடாமல் இருந்தாலும் விமர்சிப்பது உண்டு. இப்படி பல கட்டுப்பாடுகள். இதை சில மாதங்களாகவே அமைதியுடன் பொருட்படுத்தாமல் தான் எழுதுகிறேன். ஆனால், என் அமைதி கூட வேற அர்த்தம் கற்பிக்கப்பட்டு - முத்திரை குத்தப்பட்டு வரும் போது - நான் சின்ன விளக்கங்களை - எனது பார்வையில் கொடுத்து இருக்கிறேன். அவ்வளவுதான்.
////பொது மேடையில் , சக பதிவர்களின் நிலைப்பாடுகுறித்து நீங்கள் விமர்சிக்கும் போது, யாரும் கேள்வி கேட்காமல் இருக்க மாட்டார்கள்! அப்படிக் கேள்வி கேட்க கூடாது என்று நீங்கள் கருதினால், இப்படியான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்கவேண்டும்! ////
ஆமாங்க...சித்ரா சமையல் குறிப்பு போட்டால் கூட...என்ன நீங்க வெண்ணை-2 கப் னு போட்டு இருக்கேங்க...இது தப்பு..கெட்ட வார்த்தையில் ஏன் திட்டறீங்க..ன்னு கேட்கிறவங்களுக்கு தான் இந்த பதிவுன்னு நான் நினைக்கிறேன்..:-))))
//தமிழ் பதிவுலகில் எல்லோருமே கிணத்து தவளைகள் அல்ல.குறுகிய வட்டத்துக்குள்ளேயே "கொர் குர் குர்...."னு சத்தம் போட்டுக்கிட்டுஇருக்கிறதுக்கு. சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்கபுத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக்லஅவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. இரண்டுபிரிவினர்களின் உரிமைகளையும் நான் மதிக்கிறேன் - அவை,என்னுடைய ப்லாக் எல்லையை தொடாதவரை. //
வெல்செட் சித்ராக்கா! :) ஹாட்ஸ் ஆஃப் டு யூ!
//ஆனந்தி.. said...
////பொது மேடையில் , சக பதிவர்களின் நிலைப்பாடுகுறித்து நீங்கள் விமர்சிக்கும் போது, யாரும் கேள்வி கேட்காமல் இருக்க மாட்டார்கள்! அப்படிக் கேள்வி கேட்க கூடாது என்று நீங்கள் கருதினால், இப்படியான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்கவேண்டும்! ////
ஆமாங்க...சித்ரா சமையல் குறிப்பு போட்டால் கூட...என்ன நீங்க வெண்ணை-2 கப் னு போட்டு இருக்கேங்க...இது தப்பு..கெட்ட வார்த்தையில் ஏன் திட்டறீங்க..ன்னு கேட்கிறவங்களுக்கு தான் இந்த பதிவுன்னு நான் நினைக்கிறேன்..:-)))) //
இதுக்கு மேல விளக்கம் கேக்குறவங்களுக்கு அண்ணா சாலைல ஆளுயர சிலை வைக்கப்படும் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். :)
பாலியல் தொடர்பாகவும், இரட்டை அர்த்தத்திலும், கொஞ்சம் கவர்ச்சியாகவும், நளினமாகவும் எழுதப்படும் பதிவுகளை பலர் ஓடோடிச் சென்று படிக்கிறார்கள் என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன!/
முதலாவது படிக்கும் அனைவரும் மனிதர்கள் என்பது! மனிதனது அடிப்படை உணர்வே பாலியல் உணர்வு்தான்! ஒரு மனிதனுக்கு எத்தனையோவிதமான பசிகள் இருக்கின்றன! ஒவ்வொரு மனிதனும் தனது பசிக்கான உணவு எங்கிருக்கிறதோ, அங்கு ஓடிப் போவது இயற்கையாகும்!
அதுபோல்தான் யாருக்கெல்லாம், கில்மா பிடிக்கிறதோ அவர்கள் அனைவரும் அப்படியான பதிவுகளைப் படிக்கச் செல்கிறார்கள்! ஆன்மீகம் தேவைப் படுபவர்கள் ஆன்மீகத்தைப் படிக்கிறார்கள்!
எனவே ஒவ்வொருவரும், தங்களுக்கு எது தேவையோ அதைத்தான் படிக்கிறார்கள்! ஆகவே கில்மா எழுதுபவர்கள் அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டால், அவற்றைப்படிப்பவர்கள் எங்கு போவார்கள்!
மேலும் கில்மா எழுதுபவர்கள், ஏனைய சப்ஜெக்டில் எழுதுபவர்களை ஓவர் டேக் செய்கிறார்கள் என்ற கவலை, ஏனைய சப்ஜெக்டில் எழுதுபவர்களுக்கு இருக்கிறது என்றால் - அவர்கள் மறைமுகமாக ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார்கள்! அது என்னவென்றால், கில்மாவைத்தான் நிறையப் பேர் விரும்பிப்படிக்கிறார்கள் என்பது!
முகம் சுழிக்க வைக்கும் பதிவுகள்/ பதிவர்கள் என்று முத்திரை குத்தப்படும் பதிவுகளையோ, பதிவர்களையோ மக்கள் வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள் என்றால், பிறகெதற்கு அந்தப் பதிவர்கள் பற்றி, சித்ரா போன்ற நல்ல பதிவர்கள் கவலைப்படவேண்டும?
அவசியமே இல்லையே!
இதிலிருந்து எனக்கொரு உண்மை புலனாகிறது! பதிவுலகில் - கில்மா பதிவுகளையே பலர் விரும்பிப்படிக்கிறார்கள்! ஆனால் விதிவிலக்காக தோழி போன்றவர்கள் இருக்கிறார்கள்!
/இதுக்கு மேல விளக்கம் கேக்குறவங்களுக்கு அண்ணா சாலைல ஆளுயர சிலை வைக்கப்படும் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். :)//
ஹ ஹ...அது மட்டும் இல்லை பாலாஜி...அவர்களுக்கு அருமையான "உண்ணாவிரத விழா" ஏற்பாடு செய்து அறுசுவை விருந்து படைத்து...food சங்கரலிங்கம் அண்ணா தலைமையில் நடத்தப்படும் என்பதை..வெட்கமில்லாமல்..வேதனை படாமல் கூறி கொள்கிறேன்...:-))))
முகம் சுழிக்க வைக்கும் பதிவுகள்/ பதிவர்கள் என்று முத்திரை குத்தப்படும் பதிவுகளையோ, பதிவர்களையோ மக்கள் வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள் என்றால், பிறகெதற்கு அந்தப் பதிவர்கள் பற்றி, சித்ரா போன்ற நல்ல பதிவர்கள் கவலைப்படவேண்டும?
..... நான் கவலைப்படவில்லை என்று சொல்லி கொள்கிறேன். அப்படி எழுதப்படும் பதிவுகள் எனக்கு விருப்பம் இல்லை என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதற்கும் விளக்கம் கேட்டு கேள்விகள் / பின்னூட்டங்கள் அனுப்பி இருக்கிறார்கள். ..... அவர்கள் பதிவில் , அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதி கொள்ளட்டும். ஆனால், அதுதான் பதிவுலகத்தின் விதி - வெற்றி சூத்திரம் என்று சொல்வதையும் அனைத்து தமிழ் பதிவர்களும் - at least நான் ஏற்று கொள்ள அவசியம் இல்லை என்றும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
ஆனந்தி.. said...
@C.P.S
//ஏற்கனவே அவங்க எஸ்ஸேவே எழுதிட்டாங்க. இந்தக்காவுக்கு அது பத்தலை போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஆமாங்க வாத்யார் சார்...பத்தல...:-)) அநேகமா இது சித்ரா காமிச்ச ட்ரைலர் மாதிரி தான் தோணுது.:-)))..மெயின் பிக்சர் ....க்கு நீங்க எத்தினி அவ்வவ் போடுவீங்க தெரில...:-))))
அய்யய்யோ, இது வெறும் ட்ரைலர் தானா? ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
////பொது மேடையில் , சக பதிவர்களின் நிலைப்பாடுகுறித்து நீங்கள் விமர்சிக்கும் போது, யாரும் கேள்வி கேட்காமல் இருக்க மாட்டார்கள்! அப்படிக் கேள்வி கேட்க கூடாது என்று நீங்கள் கருதினால், இப்படியான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்கவேண்டும்! ////
ஆமாங்க...சித்ரா சமையல் குறிப்பு போட்டால் கூட...என்ன நீங்க வெண்ணை-2 கப் னு போட்டு இருக்கேங்க...இது தப்பு..கெட்ட வார்த்தையில் ஏன் திட்டறீங்க..ன்னு கேட்கிறவங்களுக்கு தான் இந்த பதிவுன்னு நான் நினைக்கிறேன்..:-))))
வணக்கம் ஹைக்கூ அதிர்வுகள் ஆனாந்தி மேடம்!
ஒரு சின்ன சமயல் குறிப்பில்கூட, மோசமான பிழைகளைக் கண்டுபிடித்து, ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார் என்றால், அவர் ஒரு மன நோயாளியாகவே இருப்பார்! அப்படியா நபர்களைச் சாடுவதற்காகவே இப்பதிவை சகோதரி சித்ரா எழுதினார் என்பது நீங்கள் சொல்லும் போதுதான் எனக்குப் புரிகிறது! ஆனால் பதிவை படிக்கும் போது அப்படியொரு முடிவை என்னால் எடுக்க முடியவில்லை!
மேலும், இப்படியான சைக்கோ நபர்களால் சித்ராவுக்கு மன உளைச்சல் என்றால், அதனைக் கொஞ்சம் வெளிப்படையாகவும், விலாவாரியாகவும் சொல்லியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான நிலைப்பாடு!
அப்படிச் சொல்லியிருந்தால், நாங்களும் சித்ராவுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்திருப்போம்! அப்படியான அல்ப எண்ணம் கொண்டவர்களைக் கடுமயாக சாடியிருப்போம்!
ஆனால் பதிவைப் படிக்கும்போது அப்ப்டித் தோன்றவில்லை ஆனந்தி!
///முகம் சுழிக்க வைக்கும் பதிவுகள்/ பதிவர்கள் என்று முத்திரை குத்தப்படும் பதிவுகளையோ,///
..... அவரவர் விருப்பத்துக்கேற்ற முறையில் தான் அவரவர் பதிவுகளை தேடி விரும்பி வாசிக்கிறார்கள். ஒவ்வொருவரின் விருப்பத்துக்கேற்ற படியும் பதிவு எழுத நினைப்பவர்கள் சிலர். தன்னுடைய விருப்பத்துக்கேற்ற படி பதிவுகள் எழுதுபவர்கள் , சிலர். நான் என்னுடைய விதிகளின் படி பதிவுகள் எழுதுகிறேன். அதில் , மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளை - விதிகளை நுழைத்து கேள்விகள் கேட்கப்படும் போது என்னுடைய கருத்துக்களை , இந்த பதிவில் பதிலாய் தர முயற்சித்து இருக்கிறேன்.
///ஆனால் பதிவைப் படிக்கும்போது அப்ப்டித் தோன்றவில்லை ஆனந்தி! ///
..... இது யாரையும் குற்றப்படுத்தவோ - என்னை நியாயப்படுத்தவோ - நான் எழுதிய பதிவு அல்ல. என் கருத்து சுதந்திரத்தில் யாரும் தங்கள் விதிகளை - கொள்கைகளை - வெற்றி சூத்திரங்களை புகுத்தி என்னை கேள்வி கேட்க வேண்டியது இல்லை என்று தெளிவுபடுத்தவே இந்த பதிவு. தமிழ் பதிவுகளுக்கு என்று ஒரு standard யாரும் கொண்டு வரவில்லை. ஒருவருக்கு முகம் சுளிக்க வைக்கும் பதிவு, அடுத்தவருக்கு விருப்பமானதாக இருக்கலாம். நான் இருக்கிற ஊரிலேயே, விரும்பி குட்டை பாவாடைகளை அணிந்து கொள்ளும் அமெரிக்க பெண்களும் உண்டு. அப்படி அணிந்து கொண்டு வருபவர்களை கண்டு முகம் சுளிக்கும் அமெரிக்க பெண்களும் உண்டு. ஆனால், யாரும் யாருடைய கருத்துக்கும் உணர்வுகளுக்கும் உரிமைக்கும் தடை விதிப்பதில்லை. I can stay within my blog rights.
..... நான் கவலைப்படவில்லை என்று சொல்லி கொள்கிறேன். அப்படி எழுதப்படும் பதிவுகள் எனக்கு விருப்பம் இல்லை என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதற்கும் விளக்கம் கேட்டு கேள்விகள் / பின்னூட்டங்கள் அனுப்பி இருக்கிறார்கள். ..... அவர்கள் பதிவில் , அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதி கொள்ளட்டும். ஆனால், அதுதான் பதிவுலகத்தின் விதி - வெற்றி சூத்திரம் என்று சொல்வதையும் அனைத்து தமிழ் பதிவர்களும் - at least நான் ஏற்று கொள்ள அவசியம் இல்லை என்றும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.///
நல்லது சித்ரா! நான் ஒரு புதிய பதிவர்! இதுவரை ஒரே ஒரு பதிவை மட்டுமே எழுதியுள்ளேன்! எனக்கு நிறைய ஹிட்ஸ் வாங்க ஆசை!
நான் வெற்றிக்கான சூத்திரமாக, குறிப்பிட்ட சில காலம்வரை கில்மா பதிவுகளையே நம்புகிறேன்! ஆனால் இன்னும் எழுதத் தொடங்கவில்லை!
இப்போது எனது முடிவை ஒத்திவைக்கிறேன்! உங்களைப் போன்ற பிரபல பதிவர்கள் எனக்கொரு வெற்றிச் சூத்திரம் பற்றி எடுத்துரைக்க வேண்டும்!
கண்டிப்பாக நான் பின்பற்றுவேன்! நான் அதிக ஹிட்ஸ் பெறுவதையே எனது ஆத்ம திருப்தியாக கருதுகிறேன்!
இப்போது கில்மா எழுதும் எனது முடிவை ஒத்திவைக்கிறேன்! எனக்கொரு நல்ல வெற்றுச் சூத்திரத்தை சித்ர அவர்களே சொல்லித் தாருங்கள்!
ஒருவேளை உங்கள் வழியை நான் பின்பற்றப் போய், எனது முயற்சியில் தோற்றுவிட்டால், மீண்டும் கில்மாவையே நாடுவேன் என்பதையும் இவ்விடத்தில் அறிவிக்கிறேன்!
அறத்துப்பால் ,பொருட்பால் ,காமத்துப்பால் எல்லாம்
அருமையாத்தான் இருக்கு சகோதரி .அந்த இக்பால்
வரும்முன்னாடி நான் சமைச்சு வைக்க இல்லையெண்டால்
நிட்சயமாய் இன்று என்னை செருப்பால் அடிப்பான்(சும்மா...) என்
அருமை மகன் .ஏற்க்கனவே சொல்லீற்றான் இந்த வலைத்தளம்
போனதில இருந்து பிள்ளைகளையே மறந்துவிட்டாய்
என்று. எழும்ப மனசே வருகுதில்லையே .பகிர்வுதான் நல்லா
இருக்குண்ணா அதுக்குப் போடுற நம்ம உறவுகளின் உணர்ச்சி
நிறைந்த கருத்துப் பகிர்வு அதைவிடவும் நல்லா இருக்கே
சகோதரி. என்ன செய்ய?....உங்க எல்லாரையும் நேரில பாக்கணும்
போல் உள்ளது .அருமை அருமை அருமை உங்கள் ஆக்கங்களும்
விவாதமும் .ஓட்டுப் போட்டாச்சு .............நன்றி பகிர்வுக்கு ....
//"என்னமோ, பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவு எழுதாட்டி அந்த பணம் போய்ட்ட மாதிரியும் ...... ஹி, ஹி, ஹி, .... விட்டு தள்ளு.."
//
மிகவும் ரஸித்தேன். சிரித்தேன்.
வாழ்த்துக்கள். vgk
தமிழ்மணம் 20
புதிய பதிவர்களுக்கு மிகச்சிறந்த அறிவுரைப்பதிவு..!!
தரமிக்க பதிவுகளை எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்படும் வருத்த எண்ணவோட்டம் தான் உங்கள் வார்த்தைகளில் தென்படுகிறது.
வலைப்பூக்களைப் பொறுத்த வரை, ஜனரஞ்சகமான பதிவுகள் மட்டுமே அதிகமான நபர்களை சென்றடைகின்றன என்பது உண்மைதான். தரமிக்க பதிவுகள் என்பது அதிகமான பேர்களை சென்றடையதால், நல்ல பதிவர்களும் தங்கள் பாணியை மாற்றிக்கொள்கிறார்கள். "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்ற நிலைதான் யதார்த்தம்.
வாரத்தில் ஒரு நாளாவது நம் திருப்திக்காகவாவது நல்ல பதிவு எழுதலாம்.
>>>ஆனந்தி.. said...
//பற்றி விரிவாக உரைக்கவும்...:-)))))//
சோடா கொடுப்பவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கே! :-)//
ஹ ஹ...ஹாய் ஜீ..:-))))<<<<
ஹாய்! ரொம்ப நாளைக்கப்புறம்!!! :-)
//தமிழ் பதிவுகளுக்கு என்று ஒரு standard யாரும் கொண்டு வரவில்லை.///
வலைப்பூக்களிலும் தினந்தந்தி வகையும் உண்டு, தினமணி வகையும் உண்டு.., தினமலர் வகையும் உண்டு..
//ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார் என்றால், அவர் ஒரு மன நோயாளியாகவே இருப்பார்! //
ஆமாங்க தல...நான் டீஜென்ட்ஆ சொல்லவந்ததை நீங்க நச்சு னு சொல்லிட்டேங்க..இது தான் பாயிண்ட்...பதிவுலகில் நிறைய மனநோயாளிங்க சுத்துறாங்க :-)) சித்ரா சொன்னது போலே...லோக்பால்...லோக் ஆயுக்தா பத்தி யோ...அணுஉலை பத்தியோ விமர்சனங்களும் கண்டனங்களும் வந்தால்...கூட ஆரோக்கியமான விவாதமாய் தொடரும்...அதை விட்டுட்டு...உப்பு பெறாத சங்கதிக்கு கூட மூக்கை நுழைப்பது இட்ஸ் நாட் பேர் :-))) இங்கே சித்ரா அவர்கள் கில்மா பதிவுகளின் ஹிட்ஸ் பத்தியோ..பாலுணர்வின் பசியினை :-)) பற்றியோ குறிப்பிட விரும்பல..உப்பு பெறாத விஷயங்களை விமர்சனம்ன்கிற பேரில் லூஸு தனமா விதண்டா வாதம் பன்னாதிங்கனு தான்....:-)))
மேலும், இப்படியான சைக்கோ நபர்களால் சித்ராவுக்கு மன உளைச்சல் என்றால், அதனைக் கொஞ்சம் வெளிப்படையாகவும், விலாவாரியாகவும் சொல்லியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான நிலைப்பாடு! //
ஐயோ...ஐடியா மணி..:-)) சித்ரா மேடம் வெளிப்படையா சில விஷயங்கள் சொல்லி "புறா" வே :-))))) பறக்க விட்ருக்காங்க...அட போங்க சார்...பிரபல பதிவர்கள் கிட்டே கேட்டு பாருங்க...சொல்வாங்க..:-)))))))
சித்ராக்கா பிளாக்குல புயலே அடிச்சிட்டு இருக்கு போல :-) என்னை பொறுத்த வரை ஒரு பதிவுல உள்ள விசயங்கள்(கண்டண்ட்) சம்பந்தமாக விவாதமோ கருத்தோ வந்தா அதுக்கு அந்த பதிவர் ரெஸ்பான்சிபிலிட்டு எடுத்துக்கலாம், பதில் சொல்லலாம், ஆனால் பதிவரோட நிலைப்பாட பத்தி கருத்துக்கள் விமர்சனம் பண்ணுறது நல்லா இருக்காது, அவங்கவங்க விருப்பபடி பிளாக் எழுதும் போது, அதை படிக்கிறதும், தவிர்ர்கறதும் படிக்கறவங்களோட விருப்பம்தான், அதை யாரும் கேள்வி கேட்க முடியாது,அதனால பதிவை மட்டுமே பாருங்க, பதிவரை விட்டுடுங்க :====)))
சி்ல கவ்ர்ச்சி தலைப்பு, படங்களை வெச்சி வர்ற ஹிட்ஸ் + ஓட்டுகளை வெச்சி அவங்க எல்லாம் மவுண்ட் ரோட்ல பெரிய பங்களா கட்ட போறாங்கலாம் மேடம்...
கண்டுக்காம ignore செய்யறதுதான் பெட்டர்
\\" ஆமாம், தாயம்மா. இப்போவும் அதையே தான் சொல்றேன். தனக்கு இந்த மாதிரி மேட்டர் தான் - படங்கள் தான் பிடிக்குது - அதை ஆசை தீர தன் பதிவிலும் போட்டு ஜொள்ளிக்கிறேன் ...sorry ..... போட்டு கொள்கிறேன் என்று சொல்லி தங்கள் பதிவுகளில் போட்டுக் கொள்ளட்டுமே//
அதானே.........................
என்னங்க நீங்களே கேள்வி கேட்டு பதிலையும் சொல்லிக்கறீங்க? தி.மு.க.ல சேரப்போறீங்களா?
//Chitra said...
இதுல உள்குத்து - வெளிகுத்து எதுவும் இல்லை.//
அந்த பதிவரை(பதிவர்களை) இப்படி கும்மாங்குத்து குத்திவிட்டு ஒன்றும் இல்லைன்னு சொல்லும் சகோதரி சித்ரா வாழ்க!!
//சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்மணம் 7//
வன்முறையை கையாளாமல் 7 வது ஓட்டு போட்டு அகிம்சையை கடைபிடித்த பதிவர் குல திலகம் சிபி வாழ்க!!
//இதுல உள்குத்து - வெளிகுத்து எதுவும் இல்லை. என் சார்பாக சில விளக்கங்களை சில பதிவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன். குறிப்பிட்டு யாரையும் சொல்லவில்லை.//
யார சொல்றீங்கன்னு புரியல
ஆனால் சர வெடியா இருக்கு
என்ன தீபாவளி கூட வர இன்னும் நாளிருக்கெ????
/samaiyalattakaasam.blogspot.com/2011/08/blog-post_28.html
யாருய்யா அது இப்படி அக்காவை சீண்டி விட்டது?
யோவ் சிபி, விக்கி..இங்க வந்தும் கும்மியா..அநியாயம்யா!
தங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்க்க கூடியதே.....
எந்த ஒரு புது தொடர்பு வடிவமும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் போது அது கொடுக்கு சுதந்திரம் அளவற்றது. காட்சி ஊடகம் வந்த போதும் சரி, இணையம் தலைதூக்கிய போதும் சரி. ஒரு கட்டத்தில் இந்த ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் உங்களின் விருப்பம், இடம் சார்ந்து வடிகட்டப்பட்டு கொடுக்கப்படுகிறது. ஒரே வார்த்தையை கூகிளில் நீங்கள் தேடும் போதும் நான் தேடும் போதும் ஒரே முடிவுகள் வருவதில்லை. பேஸ்புக்கும் இதில் சேரும். ஒரு ஊடகம் அது அளிக்கும் சுதந்திரத்தை இறுக்கும் தருணம் இது. அளவற்ற தகவல்களால் ஊடகம் நிறைந்திருக்கும் போது நீங்கள் இதைத்தான் தேடியிருப்பீர்கள் என்று யாரோ போடும் கணக்குகளால் நமக்கு நான் தேடியதன் முழு முடிவுகள் எப்போதும் கிடைப்பதில்லை.
பதிவுகளும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது உங்களின் இந்தப் பதிவின் மூலம் திண்ணம். இதுதான் வருபவர்களுக்கு பிடிக்கும் என்று விநியோகிக்கப்படுகிறது, வாங்கப்படுகிறது, விதியாக வார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்துக்களுடன் முழுவதுமாக உடன்படுகிறேன்.
//சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. இரண்டு பிரிவினர்களின் உரிமைகளையும் நான் மதிக்கிறேன்//
me too chithra :)
தமிழ் பதிவுலகில் எல்லோருமே கிணத்து தவளைகள் அல்ல. குறுகிய வட்டத்துக்குள்ளேயே "கொர் குர் குர்...."னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு. சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. இரண்டு பிரிவினர்களின் உரிமைகளையும் நான் மதிக்கிறேன் - அவை, என்னுடைய ப்லாக் எல்லையை தொடாதவரை.// உண்மையிலேயே நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
நல்லாத்தான் இருக்கு மேட்டரு
73
74
me distinction.............
Nice reality post
நிறைய பேர்கள் வாசிப்பதுதான் - ஒரு பதிவின் வெற்றி என்று நான் நினைக்கவில்லை. அந்த பதிவை ஒருவர் மட்டுமே ஆனாலும் மிகவும் ரசித்து வாசித்து, பாராட்டினாலே ஒரு ஆத்ம திருப்திதானே// இதுதாங்கா கரெக்ட்..
நல்ல பதிவு. பொதுவாக திடீரென்று நீங்கள் இதை எழுதி விடவில்லையென்றும், தனி மெயிலில் ஏதோ சில கேள்விகள் வந்ததாலுமே இந்தப் பதிவு என்று புரிகிறது. நம் சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கை உரசாத வரைதான். உங்கள் கருத்துகளுடன் முழுவதும் ஒத்துப் போகிறேன்.
புரியுது.
அடங் கொக்கமக்க கலக்குறிங்க அக்கா...!
மண்டையிலேயே கொட்டினாலும் வலிக்காம கொட்டுவீங்களோ:)
பிரபலமாகி விடவேண்டும் என்று ஹிட் கணக்கிற்காக எழுதும் எழுத்து தனது சுதந்திரத்தைக் குறைக்கும் என்பதோடு பெரும் அவஸ்தையானது என நினைக்கிறேன்.உதாரணமா திரைப்படத்தில் நடிக்க துவங்கும் போது இருக்கும் நிலைக்கும் பிரபலமாகிய பின் சுதந்திரமாக சுற்றித்திரியாமல் போவது மாதிரி எழுத்திலும் பிரபலமாகி விட்டால் எந்த கோணத்திலிருந்தாவது எதிர்வினைகள் வந்து சேரும்.
ஆன்மீகம் பிடிப்பவனுக்கு பாலியல் பிடிப்பதில்லை.பாலியல் பேசுபவனுக்கு நகைச்சுவை பிடிக்காமல் போகக்கூடும்.ஆன்மீகம் எழுதும் ஜெயமோகனுக்கும் எதிர் விமர்சனம் இருக்கிறது.நிகழ்வுகளை சொல்லி பாலியலுக்குள் புகுந்து கொள்ளும் சாருவுக்கும் விமர்சனங்கள் உள்ளது.எல்லோருக்கும் எல்லோருடைய எழுத்து நடையோ,கருத்துகளோ பிடிக்கவேண்டிய அவசியமில்லை.
நீங்கள் சொன்னது போல் பிடிக்காததை கடந்து விடுவதே உசிதம்.சிலர் தீவிரமான எழுத்துக்களோடு வருகிறார்கள்.பின் காணமல் போகிறார்கள்.இன்னும் சிலர் மொக்கைகள் போட்டாலும் திண்ணையை காலி செய்யவே மாட்டேன் என்று உட்கார்ந்து கொள்கிறார்கள்:)ரிலாக்ஸ் செய்து கொள்ள மொக்கையும் அவசியமே என்பேன்.எழுத்துக்கான இன்னும் புதிய பரிமாணங்களில் பதிவுகள் பயணம் செய்ய முடியும். சுதந்திரமான கருத்துக்களின் களம் என்பதாலும் நாம் அவவளவு மோசமில்லையென்பதாலும் பதிவுலகை வரவேற்கிறேன்.
//சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. //
அப்ப என்னை புத்திசாலின்னு சொல்லறீங்களா இல்ல முட்டாள்னு சொல்றீங்களா?
>>சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க.
ippadiya ennai Kothu viduvathu...
nam enna seykinrom enbathil thelivaaka irunhthal pothum.
martravar vimarsanam pathi kavalai ethukku?.
பதிவர்களுக்கு பலவிஷயங்களை நன்றாக ஞாபகப்படுத்தி இருக்கீங்க...... புதுப்பதிவர்களுக்கும் ஒரு பாடமா இருக்கும்....!
really nice...
gud
Vinu: Thank you for your seriously numbered comments. ha,ha,ha,ha,ha....
//" ஹா , ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ......சித்ரா, நீ உன் மனசாட்சிக்கும் கூகுள் சொல்ற சட்ட திட்டங்களுக்கு தான் " I agree" என்று டிக் செய்துதானே ப்லாக் ஆரம்பிச்சு வச்சுருக்கே. உலகத்தில உள்ள ஏழு கோடி தமிழ் மக்களும் - அவங்க மனசுல போட்டு வச்சுருக்கிற சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு எழுதுறேன் என்றா ஒத்துக்கிட்டு ப்லாக் எழுத வந்தே? அப்புறம் எதுக்கு இந்த வீண் கவலை? "
//
இந்த பாரா இந்த பதிவிலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி.
இது பதிவு எழுதுற எல்லோருக்குமே பொருந்தும்கிறதால, அவங்கவங்களுக்கு பிடிச்ச மாதிரி எழுதட்டும் சித்ரா அது எப்படி இருந்தாலும் சரி.
இந்த பதிவுலகுக்கு வந்த இத்தனை வருஷத்தில் நான் புரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான். நாம எழுதுறதுக்கு ஏத்த மாதிரி நமக்கு நண்பர்கள் அமைகிறார்கள்.இதுதான் உண்மை.
இது எல்லாவகையான பதிவர்களுக்கும் பொருந்தும்.
நீங்கள் இனி செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு அனாவசியமாக தோன்றும் கேள்விகளை புறக்கணித்து விடுங்கள்.
அவரவர் சுமையை அவர்கள் சுமக்கட்டும்.
/////மேலும் கில்மா எழுதுபவர்கள், ஏனைய சப்ஜெக்டில் எழுதுபவர்களை ஓவர் டேக் செய்கிறார்கள் என்ற கவலை, ஏனைய சப்ஜெக்டில் எழுதுபவர்களுக்கு இருக்கிறது என்றால் - அவர்கள் மறைமுகமாக ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார்கள்! அது என்னவென்றால், கில்மாவைத்தான் நிறையப் பேர் விரும்பிப்படிக்கிறார்கள் என்பது!////
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... கில்மா விஷயங்களும், தமிழ் கலாச்சாரம் போல. அதான் கட்டி காப்பாற்றுவதற்காக மக்கள் இந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள். யாரும் யாரையும் ஓவர்டேக் செய்வதற்கு பதிவுலகம் ஒரு race அல்ல என்று கருதுகிறேன். அதை ஒரு பந்தயம் ஆகவும், வெற்றி பாதையாக கில்மாவையும் மாற்றி இருப்பது கேலிக்குரியதே.
என்ன சித்ரா, ஆளையே காணோமே. பதிவுகள் எழுதுறது கூட குறைஞ்சு போச்சே.//
அதை தானே நாமளும் கேக்குறம்
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr said:
////இப்போது கில்மா எழுதும் எனது முடிவை ஒத்திவைக்கிறேன்! எனக்கொரு நல்ல வெற்றுச் சூத்திரத்தை சித்ர அவர்களே சொல்லித் தாருங்கள்!///
....... Blogworld is a place in the internet for FREEDOM OF SPEECH AND EXPRESSION - not a horse race. வெற்றி - தோல்வி என்ற குறுகிய வட்டத்துக்குள் அடிமைப்படுத்தி உங்கள் எண்ணங்களை வைக்காதீர்கள். ஐடியா மணிக்கே ஐடியா சொல்ற அளவுக்கு எனக்கு ஐடியா இல்லீங்க.
///முதலாவது படிக்கும் அனைவரும் மனிதர்கள் என்பது! மனிதனது அடிப்படை உணர்வே பாலியல் உணர்வு்தான்! ஒரு மனிதனுக்கு எத்தனையோவிதமான பசிகள் இருக்கின்றன! ஒவ்வொரு மனிதனும் தனது பசிக்கான உணவு எங்கிருக்கிறதோ, அங்கு ஓடிப் போவது இயற்கையாகும்!////
...... அடேங்கப்பா.... அப்போ, காமத்து பசியுடன் நிறைய பேரு பதிவுலகம் பக்கம் சுத்திக்கிட்டு இருக்காங்க என்று தெரிஞ்சிக்கிட்டேன். ஹி, ஹி, ஹி, ஹி, ஹி,.....
okங்க.
///ஆனால் அவர் பெறும் ஹிட்ஸுகளோ தினமும் 5000 வரை போகிறது! எனவே பதிவுலகுக்கு வரும் புதியவர்கள் சகோதரி தோழியை முன்னுதாரணமாகக் கொண்டு பதிவுகளை எழுதுமாறு இத்தால் சகலருக்கும் அறிவிக்கிறேன்!
ஹி ஹி ஹி .....மேட்டர் என்னான்னா, அப்படி யாரும் பின்பற்றப் போவதில்லை! அப்படிப் பின்பற்றி இனியாரும் ஜெயிக்கப் போவதும் இல்லை! ////
..... I am not a leader. I am only a blogger. It is good to know the difference between them. பதிவுலகை, ஒரு சினிமா உலகம் போலவும் - ஒரு போட்டி களம் போலவும் பார்ப்பதை விட, தனக்கென்று ஒரு முத்திரை பதிக்க கிடைத்த சுதந்திர இடமாக பார்க்கும் போது, வானமே இல்லை. One can also challenge oneself to bring out one's best side not one's worst. :-)
சந்தனத்துல நல்ல மணத்தையும், சாக்கடையில் கருமத்தையும்தான் எதிர்பார்க்க முடியும். நீங்க நல்ல மணத்தை(வழக்கம் போல)தாங்க.
ரொம்ப நாள் ஆச்சு கோதாவுல இறங்கி. இறக்கிட்டீங்க :)
நன்றி!
கொஞ்சம் புரிஞ்சுது கொஞ்சம் புரியல்ல..
//என் பதிவை வாசிக்கும் ஒவ்வொரு பதிவரின் எதிர்பார்ப்புக்கும் - விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் நான் உடன்பட்டு பதிவு எழுதுவது கடினமாக நினைக்கிறேன்//
சரியா சொன்னீங்க சித்ரா அக்கா
சரியான புரிதலுடன் மிகத்தெளிவாக சுட்டிகாட்டி யதார்த்தமாய் சொல்லியிருக்கீங்க மேம் சூப்பர்...
பதிவுலகில் ஓட்டு ஹிட்ஸ், பிரபலம் என்று ஒன்னுமே கிடையாது எல்லாம் எலக்ட்ரான் துகள்கள் செய்யும் மாயை.. முடிந்தளவு பதிவுகள் மூலம் நல்ல விசயங்களை பகிர்ந்துகொண்டோம் என்ற மன திருப்தியோடு எழுதினால் நல்லது. நீங்கள் சொல்வதுபோல ஹிட்ஸ்க்காக எழுதும் பதிவர்கள் இதை புரிந்துகொள்ளும் வரை அவர்களுக்கு ஹிட்ஸ் என்ற மன பைத்தியத்திலிருந்து விடுதலை கிடையாது :))
//" புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் - அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்" //
Well Said..........
//அப்படி படங்களை பார்க்க ப்லாக் பக்கம் வருகிறதற்கு பதிலாக, நேரிடையாக இவங்க படங்களை சுட்டு போடுற சைட் போய், பார்க்கலாமே. இன்டர்நெட்ல காரையே திருட வழி இருக்கிறப்போ, கார் டயர் மட்டும் உருட்டிக்கிட்டு போகிற மாதிரி.... ?//
ஹா ஹா ஹா நல்ல ஐடியா/..
Chitra: Yenakkum Tamil-la ezhuthanum. KP suggest pannar - oru software. Yedhum easy software irukka? Please let me know...
பின்னூட்டம் எல்லாம் படிச்ச பிறகு இப்ப நல்லா புரிஞ்சது,, நன்றி
என் பிளாக் அப்பிடியில்லதானே :))
@ மகேந்திரன் said...
//ஒன்றும் வேண்டாம் வெறும் தமிழ் என்று தட்டச்சு செய்யுங்கள் அங்கே தமிழ் நடிகைகளும்
தமிழ் (காமக்)கதைகளும் வந்து நிற்கின்றன//
ஆமாங்க நல்ல விடயம் தேடப்போனா கொட்ட விடயம்தான் முன்னாடி வருகுது.. அபச்சாரம் அபச்சாரம்..
ஒரு வரி கூட விடாமல் எனக்கு முந்தைய கமெண்ட் வரை படித்து விட்டேன்.
அக்கா இந்தக் கவலை எனக்கு நிறைய நாள் இருந்தது. ஆரம்பத்தில் Aptitude பற்றி எழுதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இன்று அதை நிறுத்தி வைத்து உள்ளேன்.
நிறைய நல்ல பதிவர்கள் இன்னும் வெளிச்சத்துக்கே வரவில்லை. திரட்டிகளில் இணைக்காமல் எழுதும் நிறைய பதிவர்களும் உள்ளனர்.
அதிகம் குப்பைதான் கிடக்கிறது இங்கே. யாரையும் குறிப்பிட விரும்பவில்லை. மற்றபடி நீங்க சொன்னது போல
//தமிழ் பதிவுலகில் எல்லோருமே கிணத்து தவளைகள் அல்ல. குறுகிய வட்டத்துக்குள்ளேயே "கொர் குர் குர்...."னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு. சிலர் , அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க. இரண்டு பிரிவினர்களின் உரிமைகளையும் நான் மதிக்கிறேன் - அவை, என்னுடைய ப்லாக் எல்லையை தொடாதவரை//
நானும் ஒரு எல்லை வைத்து படிக்கிறேன். தொடர்ந்து படிக்கும் ஒரு நல்லவர் மோசமாக எழுதும் போது சொல்லுவேன் வேண்டாம் என்று. மீறினால் வேறு வலைப்பூவுக்கு செல்ல வேண்டியதுதான்.
இங்கு நடக்கும் அரசியல் எனக்கு இன்னும் புரியவில்லை. இந்த பதிவுக்கு கூட சிலர் படிக்காமல் கமெண்ட் போட்டு இருப்பார்கள், தங்கள் இருப்பைக் காட்ட மட்டும்.
@ NRIGirl சகோ
@ சித்ரா அக்கா
http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_26.html
இங்கே உள்ளது எளிய வழி.
சரியான பதிவு.
////முகம் சுழிக்க வைக்கும் பதிவுகள்/ பதிவர்கள் என்று முத்திரை குத்தப்படும் பதிவுகளையோ, பதிவர்களையோ மக்கள் வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள் என்றால், பிறகெதற்கு அந்தப் பதிவர்கள் பற்றி, சித்ரா போன்ற நல்ல பதிவர்கள் கவலைப்படவேண்டும? ////
தமிழ் பதிவுலகில் - தமிழ் மக்களின் பலத்தை காட்டும் இடமாக இருக்க விடாமல், தமிழ் மக்களின் பலவீனத்தை காட்டும் இடமாக மாற்றி விட்டு, அதுதான் வெற்றியின் வழி என்று சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்ததால் கூட இந்த பதிவு எழுதினேன்.
நல்லா எழுதி இருக்கீங்க.
***" அதை ஏன் கேட்குற? ஊரு உலகத்துல , வாரத்துல பத்து பதிவுகள் போடுறவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. வாரத்துக்கு ஒரு பதிவு நான் போட்டு விட்டு படுற பாடு இருக்கே..... அய்யய்யய்யய்யயய்யய்யயோ ........ !!!"
" என்ன ஆச்சு?" ***
நீங்க ஒரு ஆளுதான் பதிவுலகில் வம்புல மாட்டாமல் யாரையும் கஷ்டப்படுத்தாமல் சுவாரஸ்யமாக எழுதுறீங்கனு இன்னும் நம்புறேன். பாருங்களேன் இன்னும் உங்க பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்து நெகட்டிவ் ஓட்டு ஒருத்தரும் போடலை!
அப்பப்போ (இல்ல எப்போவாவது) உங்க மன அமைதிக்காக இப்படி "தாயம்மாட்ட"ப் பேசித் தீர்த்திடுங்க. It will help a lot!
சித்ரா,
கருத்துச் சுதந்திரம் இல்லாத எந்த இடமும் சர்வாதிகாரம் பேயாட்டம் ஆடும் இடமாகவே இருக்கும்.
பேய்களை விரட்டி அடிக்கும் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவங்க சொந்த பதிவில அவங்க புத்திசாலித்தனத்தை காட்டுறாங்க. சிலர், அவங்க சொந்த ப்லாக்ல அவங்களோட முட்டாள்த்தனத்தை காட்டுறாங்க.// சூப்பருங்கோ..... எனக்கு இந்த வரிதான் ரொம்ப டச்சிங்க் பண்ணிச்சிங்கோ.
//தமிழ் மக்களின் பலவீனத்தை காட்டும் இடமாக மாற்றி விட்டு, அதுதான் வெற்றியின் வழி என்று சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்ததால் //
எது வெற்றிங்கிறதும் அவுங்கவுங்க எண்ணத்துலதானே இருக்கு?
//தமிழ் மக்களின் பலவீனத்தை காட்டும் இடமாக மாற்றி விட்டு, அதுதான் வெற்றியின் வழி என்று சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்ததால் //
எது வெற்றிங்கிறதும் அவுங்கவுங்க எண்ணத்துலதானே இருக்கு?
..... அதையே தான் நானும் சொல்கிறேன். இதுதான் வெற்றி என்று சொல்லி, எதையும் நிர்ணயிக்க வேண்டாம் என்று. மேலும், பதிவுலகம் என்பது போட்டி களம் அல்ல - வெற்றி தோல்வியை நிர்ணயிக்க என்பதும் எனது கருத்து தான். கட்டளை அல்ல. :-)))
பதிவுக்கு தலைப்பு மிக அவசியம்.வீடியோவை மறைக்க என நான் ஒரு பதிவுக்கு தலைப்பு வைத்திரு்ந்தேன்.ஒருவரும் வரவில்லை.அதே பதிவிற்கு நித்தியானந்தா வீடியோவினை மறைக்க என தலைப்பை மாற்றினேன்.ஆயிரம்பேருக்கு மேல் வந்துபார்த்துசென்றார்கள்.எல்லாம் நேரம்...பதிவு அருமை சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அன்புச் சகோதரி
உங்கள் பதிவு முழுவதும்
ஒரு வரியும் விடாமல் ஆமோதிக்கிறேன்
உங்களை உளமாற பாராட்டு
கிறேன் நன்றி!
புலவர் சாஇராமாநுசம்
ஒரு சென்சிடிவ் ஆனா விஷயத்தை கத்தி மேல் நடப்பது போல் அழகாக எழுதியுள்ளீர்கள். உங்கள் கருத்து தான் என் கருத்தும்!
As usual - Madam you never cease to amaze me. Lot of thoughts to ponder.
1. Argumentative Indians - yep, but if you see all the popular blogs they thrive on this arguments, baseless meaningless- strawman arguments.
2.Trolls - Regarding trolls, though they test our patience and hijack every post and debate, they bring lot of viewers maynt be views.
3.Sensitive bunch - These people you got to ignore, they get offended no matter what.
4.Follow me- This bunch doesnt even bother to read what you have written instead "Good post, follow me", especially the giveaway blogs.
5.Free counselors - Some people, I dont know alltime give free advice on what to write and what not to write.
See, if they are regular visitors or friends or followers it is acceptable if not better let them put the junk in black and white in their BLOG.
And check this post, I liked this post as well regarding viewers.
Truth behind blogger comments- abeerfortheshower
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... கில்மா விஷயங்களும், தமிழ் கலாச்சாரம் போல. அதான் கட்டி காப்பாற்றுவதற்காக மக்கள் இந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள்./////
கண்டிப்பாக! இந்த இடத்தில் சில வெட்க கேடான விஷயங்களைச் சொல்கிறேன் கேளுங்கள்!
முதலில், கில்மா போன்ற விஷயங்களை நிறையப்பேர் படிக்கிறார்கள் அல்லது அப்படியான தலைப்பு வைக்கும் போது அதிகம் பேர் எட்டிப்பார்க்கிறார்கள் என்பது நூறு வீதம் யதார்த்தமானது!
இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிலர் கில்மா எழுதுபவர்களை கண்டமேனிக்குத் திட்டித் தீர்க்கிறார்கள்! கலாச்சாரம் என்ற பேரில் அவர்கள் மீது காறி உமிழ்கிறார்கள்! வேடிக்கை என்னவென்றால் கில்மா பதிவுகள் மீது குற்றப்பத்திரிகை வாசிப்போர் - குறித்த கில்மாக்களை எழுத்தெண்ணிப் படித்துவிட்டுத்தான் விமர்சிக்க வருகிறார்கள்!
ஒரு புத்தகத்தை - வாசகர் படிப்பதை விட ஆழமாக, விமர்சகரே படிக்கிறார்!! ஹி ஹி ஹி !!!
உண்மையில் அதிகம் ஹிட்ஸ்களை எதிர்பார்ப்பவர்கள் கில்மாவை நாடுவது ஒன்றும் விரும்பி அல்ல! அது ஒரு கட்டாயம்! கில்மாக்கள்தான் ஒருவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கும் அரிய மந்திரமாகும்!
எனவே இந்த வழியைத் தேர்ந்தெடுக்க பதிவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்! காரணம் படிப்பவர்கள் அதிகளவு இப்படியான விஷயங்களையே நாடுகிறார்கள்!
அன்னா ஹசாரே பற்றி எழுதப்படும் ஒரு பதிவுக்கு இல்லாத வரவேற்பு அடுத்த வீட்டு அம்புஜத்தின் அந்தரங்கம் என்ற தலைப்பில் வரும் ஒரு பதிவுக்கு கிடைத்துவிடுகிறது!
அப்படியானால் தமிழர்களுக்கு கில்மாதான் பிடிக்குமா? அவர்களால் வேறெதையும் ரசிக்க முடியாதா?
ஹா ஹா ஹா காரணம் சிம்பிள்!
இன்றைய பின்னூட்டங்களில் நான் கில்மா எழுதுபவர்களுக்கு ஆதரவாக கதைப்பதன் காரணமாக நான் ஒரு கில்மா பிரியன் என்றோ கில்மா மட்டும்தான் எனக்குத் தெரியும் என்றோ யாரேனும் தீர்மானித்தால் அது ஒரு தவறான தீர்மானமாகவே இருக்கும்!
மேலும் தமிழர்கள் கில்மாவுக்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்! இது ஒரு அவமானமான விஷயமும் கூட! இந்த அவமானத்தை தாங்க முடியாதவர்கள்தான் கில்மா பதிவர்களை எதிர்க்கிறார்கள்!
ஆனால் தீர்வு இதுவல்ல! கில்மா எழுதித்தான் பிரபலமாக வேண்டிய, இக்கட்டான சூழ்நிலை தமிழ் வலையுலகில் இருப்பது குறித்து நான் ஆழமாக கவலைப்படுகிறேன்!
இதற்கான தீர்வும் எனக்குத் தெரியும்! - அது கில்மா பதிவர்களைத் திட்டித் தீர்ப்பது அல்ல!!
மாறாக மனிதனின் அடிப்படை உணர்வாகிய பாலியல் உணர்வுகளைப் பொத்தி வையுங்கள் என்று போதிக்கின்ற எமது கலாச்சாரத்தையும், அந்தக் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கிறேன் என்று புலம்பித் திரியும் பேர்வழிகளையும் முதலில் தூக்கில் போட வேண்டும்!
அமெரிக்காகாரன் பாலியலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை! அப்படியான விஷயங்களை அவன் தேடித் தேடிப் படிப்பதும் இல்லை! காரணம் அவனுக்கு பாலியலை அடக்கவேண்டிய கன்றாவியான கலாச்சாரம் இல்லை!
அவன் பாலியலைக் கடந்து வெளியே வந்துவிட்டான்! நாங்கள்தான் இன்னமும் அந்த சகதிக்குள்ளே கிடக்கி்றோம்! எதை அடக்கி வைக்கிறோமோ - அதைப் பற்றி அறியத்தானே பலரும் விரும்புவார்கள்!
தினமும் புரியாணி சாப்பிடும் ஒருவனது உறக்கத்தில் ஒருபோதுமே புரியாணி சாப்பிடுவதுபோல கனவு வராது! ஆனால் பல வருடங்களாக புரியாணி சாப்பிடாமல் வெறும் சப்பாத்தியே சாப்பிடும் ஒருவனுக்கு எப்போதுமே புரியாணிதான் நினைவுக்கு வரும்!
காரணம் அவனுக்கு புரியாணி மறுக்கப்படுகிறது!
லண்டனில் வசிக்கும் எனது மாமாவின் மகனோடு பேசியபோது, அவன் தனது ஆப்பிள் ஐஃபோனின் டிஸ்பிளே உடைந்து விட்டதாகவும், அதனால் தூக்கி எறிந்துவிட்டதாகவும் சொன்னான்!
எனக்கோ ஐ ஃபோனில் எப்படி அவன் கவனம் இல்லாமல் இருந்தான் என்று ஆச்சரியமாக இருக்கிறது! ஒரு போதுமே ஐ ஃபோனை தொட்டுப்பார்க்காத எனக்கு ஒரு வேளை, அது கிடைத்தால் நான் பூஜைப் பொருளைப் போல மிகவும் பத்திரமாக வைத்திருப்பேன்!
காரணம் சிம்பிளானது! எனது பொருளாதாரத்துக்கு ஐ ஃபோன் என்பது எட்டாக்கனியாக உள்ளது! எனது நினைப்பெல்லாம் அதுவாகவே இருக்கிறது!
லண்டனில் ஐ ஃபோன் என்பது சப்பை மேட்டராக இருக்கிறது! அங்கே அதனை யாருமே கணக்கெடுப்பதில்லையாம்!
யாராவது ஐ ஃபோனைப் பற்றி பதிவு போட்டால் நான் ஓடோடிச் சென்று படிக்கிறேன்! ஹி ஹி ஹி என்னை நினைக்க எனக்கே இரக்கமாக உள்ளது!!
பாலியலைப் பற்றிக் கதைத்தாலே பலர் வெட்ட வருகிறார்கள்! அதைவிட முக்கியமாக கலாச்சாரம் பற்றிக் கதைத்தால் கொலையே பண்ணிவிடுவார்கள்!
ஆனால், இதற்கெல்லாம் பயந்துகொண்டு நான் பதிவுலகத்துக்கு வரவில்லை!
ஆங்கிலேயனுக்கு கம்பியூட்டர் + இண்டெர்நெட் எல்லாம் அதரப் பழசு! நமக்கோ புதுசு!
இண்டெர்நெட் செண்டர்களுக்கு வரும் பலர், கில்மா மேட்டர்களையே அதிகம் பார்ப்பதாக என்னிடம் நெட் செண்டர் ஓனர்கள் சொல்லியிருக்கிறார்கள்!
ஆனால் ஒரு அமெரிக்காகாரன் இண்டெர்நெட்டை ஒருபோதுமே இப்படியான விஷயங்களுக்குப் பயன்படுத்துவதில்லை!
ஆக, தமிழ் கலாச்சாரம் என்பது இன்னமும் தமிழனுக்கு, பாலியல் சுதந்திரத்தை வழங்காத ஒரு, இடியமீனாகவே காணப்படுகிறது!
தமிழனுக்கு பாலியல் சுதந்திரம் கிடைக்கும்வரை - பாலியல் பற்றி அவனது தேடல் தீரப்போவதில்லை! அதுவரை அவன் இணையம் எனும் அட்ஷய பாத்திரத்தில் அறிவியல் பூர்வமான விஷயங்களைத் தேடப் போவதில்லை!
ஏற்கனவே சினிமா எனும் அரிய ஊடகத்தை, தமிழன் தனது பாலியல் உணர்வுகளுக்கு தீனிபோடும் ஒரு வஸ்துவாக பயன்படுத்தி நாறடித்துக்கொண்டிருக்கிறான்!
இப்போது இணையம் தமிழனிடம் வந்து மாட்டிக்கொண்டு முழிக்கிறது!
இன்னும் எதுவெல்லாம் புதுசு புதுசாக வருகிறதோ அதிலெல்லாம் தமிழன் தனது பாலியல் பசிக்கு தீர்வு கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பான்!
தமிழனின் கலாச்சாரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் வரை, கீழ்வரும் அபத்தங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்!
01. மசாலாப் படங்கள் வெற்றியடையும்!
02. கவர்ச்சியான பெண்களின் படங்களை அட்டையில் தாங்கிவரும் புத்தகங்கள் விற்பனை அதிகமாகும்/!
03. கில்மா பதிவுகள் ஹிட் ஆகும்!
04. நித்தியானந்த சாமிகள் உருவாகுவார்கள்!
05. அதுமாதிரி வீடியோக்களை எடுக்க பலர் முயல்வார்கள்!
06. பல கலாநிதி மாறன்கள் அவற்றை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி லாபம் பார்ப்பார்கள்!
07. பல கோபால்கள், இதுமாதிரி விஷயங்களுக்காக சிறப்பு பதிப்பு நக்கீரன்களை வெளியிட்டு தமிழ்நாட்டு மானத்தை கப்பல் ஏற்றுவார்கள்!
ஹி ஹி ஹி ஹி !!! சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா!!
யாரும் யாரையும் ஓவர்டேக் செய்வதற்கு பதிவுலகம் ஒரு race அல்ல என்று கருதுகிறேன்.////
நீங்கள் அப்படிக் கருதினாலும், பதிவுலகில் ஒருவித போட்டி நிலை நிலவுவது உண்மையானது! போட்டி போட்டு ஜெயித்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்! தோற்றவர்கள் - எதுக்குங்க போட்டி போடணும்? என்கிறார்கள்!
சிலரோ காணாமலேயே போகிறார்கள்!
...... அடேங்கப்பா.... அப்போ, காமத்து பசியுடன் நிறைய பேரு பதிவுலகம் பக்கம் சுத்திக்கிட்டு இருக்காங்க என்று தெரிஞ்சிக்கிட்டேன். ஹி, ஹி, ஹி, ஹி, ஹி,...../////
அந்த நிறையப் பேரைப் பார்த்து நீங்கள் ஹி ஹி ஹி ஹி என்று சிரிக்கிறீர்கள்! நானோ, அந்த நிறைப் பேரை, குறைய பேராக மாற்றுவது எப்படி என்று சிந்திக்கிறேன்!
கில்மா விஷயங்களைத் தேடித்தேடிப் படிப்பவர்களின் உளவியல் என்ன என்பதை, அறிவியலாக ஆராய்ந்தால் அவர்கள் மீது இரக்கப்பட தோணுமே தவிர சிரிப்பு வராது!
தமிழனின் இந்த இழிநிலை சிரிப்பதற்கு அல்ல! சிந்திப்பதற்கு!!
தமிழ் பதிவுலகில் - தமிழ் மக்களின் பலத்தை காட்டும் இடமாக இருக்க விடாமல், தமிழ் மக்களின் பலவீனத்தை காட்டும் இடமாக மாற்றி விட்டு, அதுதான் வெற்றியின் வழி என்று சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்ததால் கூட இந்த பதிவு எழுதினேன்.////
வாஸ்தவம்தான்! ஆனால் அதற்குரிய தீர்வை நீங்கள் முன்வைக்கவில்லையே! பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறியவில்லையே!
அவ்வளவு ஏங்க, பின்னூட்டம் போட்ட பலர் கூட, நீங்கள் சொல்ல வருவதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், ஆகா, ஓகோ, சூப்பர் என்று டெம்ப்ளேட் கமெண்ட் தானே போட்டிருக்கிறார்கள்!
யாராவது பிரச்சனைக்கு தீர்வு சொன்னார்களா?
பதிவுலகத்தின் மறுபக்கங்களைக் கிண்டலடித்து சில பதிவர்களின் மனங்களை நோகடிப்பதைவிட, சரியான தீர்வுகளை முன்வைத்து, சீர் திருத்துவதே அறிவுபூர்வமானது!
நானும் நிறைய ஆங்கில வலைப்பூக்கள் படிக்கிறேன்! என்னென்னமோ துறைகளில் பதிவுகள் போட்டு, பட்டையைக் கிளப்புகிறார்கள்! சிலர் தங்கள் பதிவுகளில் கொடுக்கும் ஐடியாக்கள், பெரிய பெரிய கண்டுபிடிப்புக்களுக்கு அடிப்படையாக அமைகின்றன!
அங்கே கில்மாவுக்கு இடமில்லை! ஆனால் தமிழ் வலையுலகம் கில்மாவுக்கு அதிக ஹிட்ஸ் கொடுப்பதற்கு காரணம் - தமிழன் இன்னமும் பசியோடு இருப்பதுதான்!
அப்புறம் அறிவியலாவது - கிறிவியலாவது!!
பசி வந்தால் பத்தும் பறந்து போம்!
தமிழ்மணம் 41
உங்கள் கருத்தோடு 100% உடன்படுகிறேன்...
குமுதம் - குங்குமம் - விகடன் போல பத்திரிகைகளின் பிசினஸ்க்காக கொடுக்கிற காரணம், இன்டர்நெட்ல பதிவுகள் எழுதுவதற்கு எப்படி ஒத்து வரும்? ////
கண்டிப்பாக ஒத்து வரும் காரணம் - படிப்பவர்கள் தமிழர்கள் என்பதால்!
" அதாவது, ஒரு பதிவுக்கு தலைப்பா - "பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. இப்படி லாஜிக்கே இல்லாத் லாஜிக் உள்ள "ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்" இருக்கிற தமிழ் பதிவுலகில் நீயும் ஒரு தமிழ் பதிவர்னு வெளியில சொல்லியிராத. ஹி, ஹி, ஹி, ஹி, ஹி, ...." ////
நீங்கள் சொல்ல வந்த விஷயம் அருமையானது! ஆனால் நையாண்டியாக சிரிப்பது - இதற்கான தீர்வல்ல!!!
சகோதரி சித்ரா அவர்களே, உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இந்த பதிவுக்கு நீங்கள் ”என் எண்ணங்கள்” என்று டைட்டில் வைக்காமல் ஏன் ”பதிவுலகில் காமத்துப் பால்” என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள்.
ஹிட்ஸை தேடித்தானே...# டவுட்டு#
நியாயமான கருத்துக்களை அழகாக முன் வைத்துள்ளீர்கள்.உங்கள் தைரியத்துக்கு ஒரு சலூட்.
:-)
// இப்படி எழுதினால், நான் இப்படித்தான்னு முத்திரை குத்திடுவாங்களோ? அப்படி எழுதினால், என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆயிடுமோ? என்று ஆராய்ச்சி பண்ணி எழுத வேண்டிய நிலையை பார்த்தால் - இன்னும் எதுக்குடா பதிவுகள் எழுதணும்னு தோணுது?" //
இப்படி சொல்கிற நீங்கள்தான்
//அதாவது, ஒரு பதிவுக்கு தலைப்பா - "பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. //
இதையும் எழுதியிருக்கீங்க. நீங்க என்ன எழுதினாலும் கேள்வி கேட்பது எப்படி உங்களக்கு பிடிக்காதோ அது போலவே மற்றவர்கள் எழுதுவதையும் நாம் குறைசொல்லி விமர்சிக்க கூடாது. இது எல்லோருக்கும உள்ள பொதுவான விதிதான்.
சகோதரி, யாராவது ஒரிருவர் படித்தால் மட்டும் போதுமென்றால் ஏன் நீங்கள் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்திருக்கிறீர்கள். ஆன்மிக பதிவுகளாய் போடும் அம்மாவும் மற்ற சிலரும் ஒரு திரட்டியிலும் இணைக்கவில்லை. ஆனால் ரெகுலராய் அவர் எழுதும் அனைத்து கட்டுரையும் வாசிக்க ஒருபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
நமக்குத்தோன்றுவதை நாம் எழுதுவோம் சகோதரி. நமக்கு பிடிக்காத பதிவு போடும்போது மட்டும் நாம் அதை படிக்காமல் விடுவோம். அதைவிட்டுவிட்டு அவரவர் சாமர்த்தியம் ஹிட்ஸ் வாங்குறாங்குவது பிரபலமாவது அனைத்தும். அதைப்பார்த்து நாம் மிரளக்கூடாது..
உங்களுக்கு,"டொச்சு"ம்(ஜேர்மனிய பாஷை)தெரியுமா?
என்னடா இது இப்புடி(பதிவுலகில் காமத்துப் பால்)ஒரு பதிவு பொம்பளப் புள்ள எழுதியிருக்கேன்னு வந்தா......................................?!
மற்றபடி ஐடியா மணியின் கருத்தை ஆமோதிக்கிறேன். ஐடியா மணிமுந்திக்கிட்டாரு.
நம் நண்பர்கள் அப்படி ஆபாசமாய் யாரும் எழுதினால் உரிமையுடன் அன்பாய் சொன்னால் நிச்சயம் செவிமடுப்பர்.
நம்மை இதுதான் பதிவிடவேண்டுமென்று யாரும் எப்படி நம் சுதந்திரத்தில் தலையிட முடியாதோ அப்படியே அனைவருக்கும் எதை பதிவிடவேண்டுமென்ற சுதந்திரம் உண்டு. அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. இது என் கருத்து. யாரையும் புண்படுத்த அல்ல. அதற்காக பதிவுலகு்க்கு நான் வரவும் இல்லை.
நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்பதற்கும், நிறைய ஹிட்ஸ் என்பதற்கும் டெக்னிகலாகவே நிறைய வித்தியாசம் இருக்கிறது.
ஹிட்ஸைப் போலவே, ஓட்டு வாங்குவது என்பதும் பிளாக் எழுதுவதை விட, முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மன்னிக்க வேண்டும் சகோதரி இப்போதுதான் உங்கள் ஆக்கத்தை முழுமையாக வாசித்தேன் .உங்கள் ஆதங்கம் மனவேதனை புரிந்துகொண்டேன் .கவலைய விடுங்க .வழமைபோல் உங்கள் ஆக்கங்களைத் தொடருங்கள் .எல்லாரையும் எல்லா நேரத்திலும் திருப்திகொள்ள வைக்க முடியாது .உங்கள் எழுத்து அது நேர்வழியில் செல்லும்போது பொழுதுபோக்குக் கேள்விகளும் ,சில
தனக்கென புரியாத கேள்விகளும் கேட்கவேண்டும் என்று தோன்றும்போது சிலருக்கு அனாவசிய அரட்டையில் ஈடுபட ஆவல் உண்டாகும் அவை அந்த நேரத்தில்
உங்களைப்போன்ற சிறந்த எழுத்தாளரின் சிந்தனையை
சிதறடிக்கும் வண்ணம் அமைவது வேதனைக்குரிய விடயம்தான் .
அதனால் ஒன்றும் உங்கள் ஆக்கங்களை பிறர் விரும்பாத நிலை
ஏற்படாது .இது உங்களுக்குத் தெரிந்த விடயம் ஆதலால் சற்று ஓய்வுபெறும்வகையில் மகிழ்ச்சியான பதிவுகளில் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள் . காலம் இதற்குப்
பதில் தரும் .மனச்சோர்வை விட்டு விடுங்கள் சகோ .நன்றி பகிர்வுக்கு ..
கடம்பவன குயில் has left a new comment on your post "பதிவுலகில் காமத்து பால்":
// இப்படி எழுதினால், நான் இப்படித்தான்னு முத்திரை குத்திடுவாங்களோ? அப்படி எழுதினால், என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆயிடுமோ? என்று ஆராய்ச்சி பண்ணி எழுத வேண்டிய நிலையை பார்த்தால் - இன்னும் எதுக்குடா பதிவுகள் எழுதணும்னு தோணுது?" //
இப்படி சொல்கிற நீங்கள்தான்
//அதாவது, ஒரு பதிவுக்கு தலைப்பா - "பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. //
இதையும் எழுதியிருக்கீங்க. நீங்க என்ன எழுதினாலும் கேள்வி கேட்பது எப்படி உங்களக்கு பிடிக்காதோ அது போலவே மற்றவர்கள் எழுதுவதையும் நாம் குறைசொல்லி விமர்சிக்க கூடாது. இது எல்லோருக்கும உள்ள பொதுவான விதிதான்.
..... யாரையும் குறை கூறி விமர்சிக்க இந்த பதிவை நான் எழுதவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறேன். இதுதான் வெற்றியின் வழி - என்று சொல்லி - என்னையும் கூட 18 + தலைப்பு வைக்க சொல்லி, நான் கேட்காமலே "அறிவுரை" வழங்கியவர்கள் உண்டு. அது எனக்கு தேவையில்லாத ஒன்று என்று தான் விளக்கம் தர முயற்சித்து இருக்கிறேன். மேலும், - " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க - என்று தான் சொல்லி இருக்கிறேனே தவிர அப்படித்தான் எழுத வேண்டும் நான் பரிந்துரைக்கவில்லை. என் ப்லாக்ல என் பதிவுகளை, என் ஸ்டைல்ல எழுதவும் - என் எண்ணங்களை - என் கருத்துக்களை சுதந்திரமாக சொல்லும் போது - அதை குறை கூறி இப்படித்தான் இருக்க வேண்டும் - இப்படி இருக்க கூடாது என்று எனக்கு வரும் கட்டுப்பாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். இந்த பதிவில் நான் சொல்ல வந்த கருத்துக்கள் திசை திரும்பி போய் இருக்கிறதோ?
///நம் நண்பர்கள் அப்படி ஆபாசமாய் யாரும் எழுதினால் உரிமையுடன் அன்பாய் சொன்னால் நிச்சயம் செவிமடுப்பர்.///
... To write the way they want to write is their wish. I am not criticizing them. ஆபாசமாக எழுத கூடாது என்று எப்படி அவர்களுக்கு தடை விதிக்க எந்த அதிகாரமும் எனக்கு இல்லையோ - அதே போல, ஆபாசமாக எழுதினால்தான் பதிவுகள் விலை போகும் என்று என் போன்ற பதிவர்கள் மேல் திணிக்கவும் அவர்களுக்கு உரிமை இல்லை.
சகோதரி, யாராவது ஒரிருவர் படித்தால் மட்டும் போதுமென்றால் ஏன் நீங்கள் இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்திருக்கிறீர்கள். ஆன்மிக பதிவுகளாய் போடும் அம்மாவும் மற்ற சிலரும் ஒரு திரட்டியிலும் இணைக்கவில்லை.
...... இதைத்தான் சொல்கிறேன். ஆன்மீக பதிவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதைத்தான் செய்ய வேண்டும். மொக்கை பதிவர்கள் தான் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரே மாதிரி முத்திரையும் இமேஜ்ம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? நான் பதிவு எழுத வந்து பல மாதங்கள் கழித்துதான் இன்ட்லியில் இணைக்க ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கு பின் தான் தமிழ்மணத்தில் இணைக்க ஆரம்பித்தேன். அதுவும் பதிவுலக நண்பர்கள் பலரும் உற்சாகப்படுத்தி சொன்ன பிறகு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்ட்லியில் இணைத்த புதிதில், மூன்று வோட்டுக்கள் கூட வாங்கி உள்ளேன். என்னுடைய எழுதும் முறையை மாற்றவே இல்லை. அதிக வோட்டுக்கள் வாங்க வேண்டும் என்று எதையும் புதிதாக முயற்சித்ததும் இல்லை. நான் என் தனித்தன்மையுடன் தான் எழுதி வருகிறேன். அதை பிறரின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்காக நான் மாற்ற வேண்டியதில்லை என்றுதான் சொல்லி இருக்கிறேன்.
////நீங்கள் சொல்ல வந்த விஷயம் அருமையானது! ஆனால் நையாண்டியாக சிரிப்பது - இதற்கான தீர்வல்ல!!!////
...... தீர்வு காண என் பதிவில் நான் counseling கொடுக்கவில்லை. கருத்தரங்கும் நடத்தவில்லை. ஒருவருக்கு சரியெனப்படுவது - மற்றவருக்கு தவறாகப் படலாம் - ஒருவருக்கு வருத்தத்தை தரலாம் - ஒருவருக்கு வேடிக்கையாக இருக்கலாம். அவரவர் எண்ணத்தை அவரவர் பதிவுகளில் வெளிப்படுத்துகிறோம். பதிவுலகில் - சில நடப்புகளை என் பார்வையில் - என் எழுத்தையும் பாதிக்கும் வகையில் இருக்கும் விதிமுறைகளை அடையாளம் கண்டு, இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். அவ்வளவுதான். அவரவர் பதிவில், எப்படி பயணிக்க போகிறார்கள் என்று அவரவர் தான் முடிவெடுக்க வேண்டும். Each one has a different priority. ஒரு பதிவர் தன் பலத்தை முன் நிறுத்தி தன்னை அடையாளம் காட்டப் போகிறாரா? இல்லை, தன்னுடைய பலவீனத்தை காட்டி தன்னை அடையாளம் காட்டப் போகிறாரா? என்பதை அந்த அந்த பதிவர் தான் முடிவெடுக்க வேண்டும். முடிவெடுத்த பின், அதுதான் நியதி - அதை மற்றவரும் பின்பற்ற வேண்டும் என்று விதிக்க முடியாது என்பதையும் கூறி கொள்கிறேன். ஆபாச பதிவுகளுக்கு எதிராக நான் குரல் கொடுக்கவில்லை. இந்த பதிவில், சொல்லப்பட்டு இருக்கும் பதிவுலக வெற்றியின் காரணங்கள் எல்லாமே, என்னிடம் மெயில் மூலமாகவோ - நேரிலோ என்னிடம் சொல்லப்பட்ட காரணங்கள். அவைதான் Fool proof formula என்று பிரச்சாரம் செய்தார்கள். அவை எனக்கு அபத்தமாக தோன்றியதைத்தான் சொல்லி இருக்கிறேன்.
பல கருத்துக்கள் வந்த வழியைத் திரும்பி பார்க்கவைக்கிறது. உங்கள் கருத்தை ஏற்கிறேன்.
ஆனால் ப்ளாக் என்பது இதற்குத்தான் என்று எந்த கட்டுப்பாடும் இல்லாதவரை அவரவர் விருப்பம் போல மற்றவர் முகம்சுழிக்காதவாறு எழுதிக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.
நிதர்சனம்.
Quote:
இதைத்தான் சொல்கிறேன். ஆன்மீக பதிவர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதைத்தான் செய்ய வேண்டும். மொக்கை பதிவர்கள் தான் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரே மாதிரி முத்திரையும் இமேஜ்ம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? நான் பதிவு எழுத வந்து பல மாதங்கள் கழித்துதான் இன்ட்லியில் இணைக்க ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கு பின் தான் தமிழ்மணத்தில் இணைக்க ஆரம்பித்தேன். அதுவும் பதிவுலக நண்பர்கள் பலரும் உற்சாகப்படுத்தி சொன்ன பிறகு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்ட்லியில் இணைத்த புதிதில், மூன்று வோட்டுக்கள் கூட வாங்கி உள்ளேன். என்னுடைய எழுதும் முறையை மாற்றவே இல்லை. அதிக வோட்டுக்கள் வாங்க வேண்டும் என்று எதையும் புதிதாக முயற்சித்ததும் இல்லை. நான் என் தனித்தன்மையுடன் தான் எழுதி வருகிறேன். அதை பிறரின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்காக நான் மாற்ற வேண்டியதில்லை என்றுதான் சொல்லி இருக்கிறேன்.
Unquote:
This particular line, "என்னுடைய எழுதும் முறையை மாற்றவே இல்லை." - I am completely with you in this. I loved your blog because of this very same reason more than anything.
I love the carefree style, honest ,unbiased, non-preaching yet interesting read.
Why do we always have to judge the blogs and force our ideas and opinions and ask the blogger to change his ways and expect him/her to write what we want? Everyone is entitled to their opinion.
Anyway keep up the good job and maintain the unique style you have.
தெளிவினைத் தரும் அருமையான பதிவு
அதிகமானவர்களைப்போய் சேரவேண்டும் என்பதைவிட
பதிவுக்கு வந்து போனவர்களில் அதிகமானவர்கள்
தவறாது திரும்ப வரவேண்டும் என்கிற நோக்கத்தில்தான்
நான் தொடர்ந்து எழுதுகிறேன்
தாயம்மா நிலையில் இருந்து படித்தேன்
மிகவும் பயனூள்ள பதிவாய் இருக்கிறது நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ஓகே,..... வழக்கம் போல உன்கிட்ட பேசினாலே எனக்கு பல விஷயங்கள் தெளிவா ஆயிடுது.//
என்வழி தனிவழி.
You too Chitra.......???
Just ignore those things. Never bother about it.
வாகர்கள் தங்களுக்கு பிடித்த பகுதிகளையே படிகிறார்கள். எல்லோரும் எல்லாவற்றையும் படிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. நான் எனக்கென்று உள்ள வட்டத்தில் தான் சுற்றிவருகிறேன். மற்றவர்களும் அப்படித்தான். அவரவகளுக்கு என்ன வேண்டுமோ,என்ன பிடிக்கிறதோ அதையே செய்வார்கள. அதை பற்றி நமக்கென்ன கவலை.
கேணத்தனமான கேள்விகள் வந்தால் அவைகளையும் புறம்தல்லுவதே நலம். அத விட்டு அவைகளுக்கும் பதில் சொல்லபோக தேவையற்ற உளைச்சல் எதற்கு. அதிக ஹிட்ஸ் வாங்கிய பதிவர்கள் எவரும் மேதாவிகள் என்று அர்த்தமில்லை. ஹிட்ஸ் இல்லாத பதிவுகள் வெறும் சக்கை என்றும் அர்த்தமில்லை. நமக்கு தெரிந்து அநேக மிக சிறப்பான பதிவுகள், பதிவர்கள் ஹிட்ஸ் வாங்கியதே இல்லை. ஆனால் இன்னமும் அவர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும்தானே? காரணம் - அவர்கள் ஹிட்ஸ் தருவது பற்றி கவலை படவில்லை. "தாம் எழுவது யாரையாவது சென்று அடைந்தாலே போதும் " என்ற தெளிவான எண்ணம்தான்.
மற்றபடி இந்த பதிவு பிற பதிவர் நண்பர்களின் ஒரு சுய ஆய்வுக்காகான ஒன்றாகவே நான் கருதுகிறேன். Well done Chitra.!
நிங்க இந்தமதிரி தலைப்பு இது மாதிரி எழுதினா அந்த லிஸ்ட்ல நீங்களும் சேர்ந்துடுவீங்க..அது மாதிரி இருக்க கூடாதுன்னு நினைச்சா அது மாதிரி தலைப்பு வைக்காம எழுதுங்க????
//இந்த வார்த்தை/கருத்து - இவங்களை காயப்படுத்தி விடுமோ? -இவங்களுக்கு எரிச்சல் படுத்தி விடுமோ? - இவங்களுக்கு வருத்தப்படுத்திவிடுமோ? - இவங்களுக்கு கோபம் உண்டாக்கி விடுமோ? - இப்படிஎழுதினால், நான் இப்படித்தான்னு முத்திரை குத்திடுவாங்களோ? அப்படிஎழுதினால், என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆயிடுமோ? என்று ஆராய்ச்சிபண்ணி எழுத வேண்டிய நிலையை பார்த்தால் //
:-) நானும் இதைப்போல முன்பு நினைத்ததுண்டு.. தற்போதெல்லாம் கவலைப்படுவதில்லை.. எழுத நினைப்பதை எழுதிவிடுகிறேன் ஒரு சில அப்போதும் விதிவிலக்காக உண்டு தான் :-)
எப்படி இருந்தாலும் எச்சரிக்கையாக எழுதுவது நல்லது தான். நம்மை அதிகம் பேர் படிக்கவில்லை என்றால் பிரச்னை இல்லை நாம் கூறுவதை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை ஆனால் படிக்கிறார்கள் என்றால் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. இல்லை என்றால் தேவையில்லாத மன உளைச்சல் தான்.
வெட்டிப் பேச்சிலியே இத்தனை விஷயங்களா. விளாசிட்டீங்க:)
நல்ல அலசல் சகோதரி
tamil manam votted
வெட்டிப்பேச்சில் செல்லக்குட்டு வைத்துவிட்டீர்கள்!
http://riyasdreams.blogspot.com/2011/08/way-to-happiness.html
//இதுல உள்குத்து - வெளிகுத்து எதுவும் இல்லை//
ஹா... ஹா...
உண்மைகளை காமெடியாக சொல்லியிருக்கிறீர்கள்.
சித்ரா, மனிதர்கள் அனைவருக்குமே கருத்துச் சுதந்திரமும் வேண்டும்; சுய கட்டுப்பாடும் வேண்டும். நம் செயல்களின் விளைவுகள் நல்லதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் வேண்டும், அவ்வளவே.
அதே சமயம், நம் நண்பர் ஒருவர் தவறு செய்கிறார் எனும்போது அவருக்கு எடுத்துச் சொல்வதில் தவறில்லை என்பதும் என் கருத்து. கருத்துப் பரிமாற்றமே கூடாதெனில், தவறுகள் திருத்தப்படாமல் போய்விடலாம்.
.நீங்கள் தருவது போல, ஆரோக்கியமான கருத்துக்களை அனைவரும் முன் வைப்பதில்லை. ப்லாக் போஸ்ட் - சரியாக புரிந்து கொள்ளாமல், அவர்களின் புரிதலின் படி வம்பு பேச்சுக்கும் , வெட்டி விவாதத்துக்கும், குறை சொல்வதெற்கென்றே தேடி பிடித்து அபத்தமான குறைகளை சுட்டி காட்டும் போதும் - என் கவனத்தில் கொள்ள எனக்கு தோன்றவில்லை. அத்தகைய மறுப்புரைகளையே நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். சரியான கருத்துக்களுக்கு நான் என்றும் உரிய பதில்களையோ மாறுதல்களையோ செய்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும். :-)
தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
நன்றி.
வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com/
ஹுஹும் கண்டிப்பா இதில் வெட்டிப்பேச்சு இல்லை இல்லை....
கண்டிப்பா எல்லாமே நல்ல விஷயங்கள் மட்டுமே இருக்கு.....
அன்பு நன்றிகள் சித்ரா பகிர்வுக்கு....
முதல் முறை படித்த போது எனக்கு ஒன்றும் புரியவில்லை சித்ரா,
மறுபடியும் படித்துவிடு உங்களுடைய பின்னூட்டங்கள்,அதற்கு உங்களின் பதில்கள் அகியவற்றை ஒரு வரி விடாமல் படித்ததும் புரிந்தது.
ஒருவருடைய கருத்து சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுதல் நல்லதல்ல என்று நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி.
//ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்கள் - யாரும் வாசித்தாலும் வாசிக்கவில்லைஎன்றாலும் எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள். //
இது மிகவும் சத்தியமான வார்த்தை.
? ஊரு உலகத்துல , வாரத்துல பத்து பதிவுகள் போடுறவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. வாரத்துக்கு ஒரு பதிவு நான் போட்டு விட்டு படுற பாடு இருக்கே..... அய்யய்யய்யய்யயய்யய்யயோ ........ !!!"
நன்பேண்டா
தோழி உண்மை நிலையை விள்க்கியுள்ளீர்கள் சில பெண் பதிவர்கள் அடியாட்கள் போல் மிரட்டவும் துணிகின்றனர் !
பதிவுகள் பாடப்புத்தகங்கள் அல்ல ஆனால் படிப்பவர்களில் தங்களைப் பெத்தவங்க, அக்கா தங்கை, தான் பெற்ற குழந்தைகளும் இருக்கலாம் என்பதை மறந்திடாமல் பதிவிட்டால் எல்லாம் OK.
" அதாவது, ஒரு பதிவுக்கு தலைப்பா - "பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகள் " என்று வைத்து விட்டு அதை பற்றியே எழுதுனா பெண்கள் கூட வந்து படிக்க மாட்டாங்க. ஆனால், ஆண்களும் வந்து வாசித்து விட்டு கருத்து சொல்லிட்டு போகணும்னா, " முறை பொண்ணு வயசுக்கு வந்துட்டா...!!!" என்று டைட்டில் வைக்கணும் என்று சொல்றாங்க. இப்படி லாஜிக்கே இல்லாத் லாஜிக் உள்ள "ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்" இருக்கிற தமிழ் பதிவுலகில் நீயும் ஒரு தமிழ் பதிவர்னு வெளியில சொல்லியிராத. ஹி, ஹி, ஹி, ஹி, ஹி, ...."
////
ம்ம்ம் கொஞம் சிரிச்சிட்டு பொலமுன்னு உங்க பக்கம் வந்தா ... எதொ சிரியசா பேசுவீக போல சரி... னான் அடுத்த வுடு பாக்குறேன்...
ஹி.ஹி...விட்டுத்தள்ளுமே!
//ஆத்ம திருப்திக்காக எழுதுகிறவர்கள் - யாரும் வாசித்தாலும் வாசிக்கவில்லைஎன்றாலும் எழுதிக்கொண்டு தான் இருப்பார்கள். //
கரெக்டாக சொன்னீங்க..
ஆஹா!!.. செம விளாசல்.
நானும் வந்தேன்.
நானும் வந்தேன்.
நானும் வந்தேன்.
//பதிவுக்கு பத்தாயிரம் கிடைக்கிற மாதிரியும் , பதிவு எழுதாட்டி அந்த பணம் போய்ட்ட மாதிரியும் ..//
பரவாயில்லயே, எங்க குடுக்கறாங்க?
உங்கள் பதிவின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கருத்துக்களை உங்கள் பாணியில் வெளியிட ஏன் தயங்க வேண்டும். எல்லோரையும் திருப்தி செய்யும் வழி இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. உங்கள் பாதையில் பயணம் தொடருங்கள்..
புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் - அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்"
நல்ல கருத்து சித்ரா! விளக்கமான இடுகையும் அருமை!
ஒரு பெண் ஏடாகூடாமாக உடுத்தியிருந்தால் அனைவரும் திரும்பி பார்ப்பது இயல்புதான். ஆனால் அவள் மதிக்கப்படுவது அவள் திறமை மற்றும் தகுதியை வைத்து மட்டுமே. இப்போதைய ஒரு பட ஹீரோயின்கள் மாதிரி என்று கூட சொல்லலாம். இது ப்லாக்கிற்கும் பொருந்தும்தானே.
சபாஷ்...!!என்னோட மனசுல ஓடற பல விஷயங்களை இப்பிடி ஊமை குத்தா குத்தி வெளியேத்திருக்கீங்க :-))
இது வெட்டி பேச்சு இல்லை ..ஓபன் ஹார்ட் சர்ஜரி அதுவும் குளோரோஃபார்ம் குடுக்காமலேயே :-))
நீங்கள் சொல்வது மிக சரி
நானும் கேயாரும் தினமும் ஒரு கவிதை படைக்க முயல்கிறோம் அப்படி இருந்தும் பின்னூட்டம் என்னவோ 4-5 பேருக்கு மேல் இல்லை இருந்தாலும் வெறும் கவிதையும் அதை சார்ந்த பல எழுத்துக்களுமே கேயாரு பதிவார் இப்படி நடக்கிறது என்றே எனக்கு தெரியாது
நன்றி
ஜேகே
வணக்கம் சகோ எப்படி உள்ளீர்கள் நலந்தானே?..இன்று என் தளத்திற்கு வரமுடிந்தால் தவறாமல்
சமூகமளியுங்கள் சகோ .இது எனது அன்பான வேண்டுகோள் .உங்கள் வரவுக்காய் காத்திருப்பேன் .மிக்க நன்றி .
பிரபல பதிவராக மாறினாலே ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து தான் செய்ய வேண்டியுள்ளது போலும்!? நீங்கள் எவ்வளவு மென்மையாக, நகைச்சுவையாக உங்கள் மன உணர்வுகளை / உளைச்சல்களை / ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளீர்கள்! ஆனாலும் தாக்கோ தாக்கு எனத் தாக்கியதாகவும், உள்குத்து / வெளிக்குத்து எனப் பாகுபடுத்தி வந்துள்ள பின்னூட்டங்களும், தர்க்க/குதர்க்க வாதங்களும் கண்டு வியப்பில் ஆழ்கின்றேன். யார்யார் எவரெவரை குறிவைத்து தாக்கிக்கொள்கின்றனர்; எவ்வாறு அணிசேர்கின்றனர் என்பதும் அரசல் புரசலாக அறிய முடிகின்றது. இதில் உணர்ச்சி பிழம்புகளையும், பக்குவமுள்ள பதிவர்களையும் அனைத்து அணிகளிலும் காண நேர்கின்றது. வெற்றி தோல்வி / ஆத்மத்திருப்தி என்பதற்கான விளக்கங்கள் ஒவ்வொரு மனிதர்க்கும் அவரவர் சிந்தனை சார்ந்து வேறுபடுகின்றது என்பதை உணர முடிகின்றது. பதிவுகளுக்கும், பதிவின் தலைப்பிற்க்கும் மட்டுமல்ல.. பதிவர்களின் பெயர்களுக்கும் அவர்கள் இடும் பின்னூட்டமும் சில இடறல்களாகத் தான் தெரிந்தன.
கிடைத்திருக்கும் இலவசச் சேவையினைக்கொண்டு நம் எழுத்து திறனையும் படைப்பாற்றலையும் வளர்த்துக் கொள்ளலாமே! பிறர் மனம் நோகாவண்ணம் அதே வேளையில் சமூகம் சார்ந்த நல்கருத்துக்களைத் தர இயலுகின்றதோ இல்லையோ, சீர்கேட்டிற்க்கு துணை போகாதிருப்பின் அனைவருமே மகிழலாம். பல்சுவை பதிவுகள் வரவேற்கக்கூடியதே! காமம், கில்மா… இவை அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கும் பொதுவான உணர்வு!. பகுத்தறிவு கொண்டுள்ள உயிரினம் மனித இனமாக இருப்பதால் அதனை “இலைமறை காய்மறையாக” வைத்திருப்பதே நலம் என விரும்புகின்றது. நாமனைவரும் விலங்குகள் இல்லையே! பல்சுவை எனும் பெயரில் பலானதையும் சேர்ப்பது ஆரோக்கியமானதல்ல என்பது ஒரு சாரரின் கருத்து. காபியில் சர்க்கரை இருக்கலாம். ஆனால் உப்பைக்கலந்தால்.. ’சூப்’பில் உப்பிருக்கலாம். ஆனால் அதில் சர்க்கரை கலந்தால்… இதுவும் ருசி தான்! இது தான் எனக்குப் பிடித்திருக்கின்றது. மக்கள் நிறைய பேர் இதை விரும்புவதால்தான் நாங்களும் தயாரிக்கின்றோம் என்கின்ற ரீதியில் வாதத்தினை துவக்கினால்.. இதற்கு முடிவல்ல.. சத்துள்ளப் பொருட்களுக்கிடையே (பல்சுவைப் பதிவுகளில்) மளிகைக் கடையினில், மலிவான மது (பாலுணர்வை இச்சையைத் தூண்டும் பதிவு) வேண்டாமே! அதற்கென ஒரு அங்காடி (டாஸ்மார்க்) வைத்து தனியாக பட்டையைக் கிளப்புங்கள்! குடிமக்கள் இடம் தேடி கண்டுபிடித்தாவது வருவார்கள்! கல்லா கட்டலாம்!
குறிப்பு: இது என் சொந்தக் கருத்து. பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் கூறவில்லை. என்னைவிட அனுபவம் வாய்ந்தவர்கள் நிறைந்தது இப்பதிவுலகம் என்பதையும் நானறிவேன். நாம் பிறரை நோக்கலாம். நம்மை நாமே காண வேண்டுமெனில் நமக்கும் ஒரு கண்ணாடி தேவை என்பதை உணர்ந்தவன் நான்! அக்கபோரினில் இல்லாது ஆக்கப்போரினில் தமிழ் பதிவுலகம் இயங்குவதைக் கண்டு பிறர் பொறாமைக் கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என நம்புகின்றேன்!
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
நிறைய பேர்கள் வாசிப்பதுதான் - ஒரு பதிவின் வெற்றி என்று நான் நினைக்கவில்லை. அந்த பதிவை ஒருவர் மட்டுமே ஆனாலும் மிகவும் ரசித்து வாசித்து, பாராட்டினாலே ஒரு ஆத்ம திருப்திதானே,
unmaithan chithra. en puli aval uppumavai oruvar seythu paradiya pothu intha niraivu vanthathu.
innoruvar en oranju pala thol kulampu seythu pathivu potta pothu santhosama irunthathu.
அக்கா ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டன் போல காரணம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்..
இந்த பதிவுலகத்தில என்ன நடக்குதண்ணே தெரியலக்கா...
ஒருவன் சிலர் ஆபாச படம் பட்டுட்டு சம்பந்தமே இல்லாமல் வேறு கோணத்திலும் , நல்ல பதிவையும் போடுகிறார்கள்.
சிலதுகள் அநாகரிகமாய் கதைத்து விட்டு இது தான் நவீன ஆங்கிலம் என ஆங்கிலம் படிப்பீக்குதுகள்.
இவற்றில் பார்க்க கருத்தக்களை நிறுத்தி விட்டு எம் மனத் திருப்திக்கு எழுதிட்டு போகலாம் போல உள்ளது..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
Post a Comment