Sunday, January 30, 2011

ஆயினும் காதல் செய்வேன்

உலகம் முழுவதும் February 14th தான் காதலர் தினம் கொண்டாடும்.  நானும் என் கணவரும்  மட்டும், January 31st அன்று கொண்டாடுவோம்.  அதை, எங்கள் திருமண நாள்னு சொல்லிக்கிறாங்க.
  ரைட்டு .... அப்படியே புல்லரிச்சு போனவங்க எல்லாம், அபௌட் டர்ன், ப்ளீஸ்! நன்றி....

"தை பிறந்தா - எத்தனை பேருக்கு வழி கிடைக்கும்  - எத்தனை பேருக்கு வலி கிடைக்கும் " என்று  நிச்சயிக்கப்படுகிறது,   அப்படின்னும் சொல்லிக்கிறாங்க.........

                                                    
நான் திருமணம் ஆனப்போ எப்படி இருந்தேன் என்று  ஏற்கனவே எழுதி இருக்கேனே.
link:

   திருமண நாள் ஸ்பெஷல் பதிவா, என் கணவர் உதித்த சில "பொன்மொழிகள்" பகிர்ந்து கொள்கிறேன்.  படிச்ச பிறகு,  தலைப்புக்கு அர்த்தம் தெரியும்.

நான்:  இன்னைக்கு friend,  கனி கிட்ட பேசினேன்.  ஊரில,  அவங்க பக்கத்து வீட்டுல ஒருத்தங்க,  குடிச்சு குடிச்சே சொத்தை எல்லாம் அழிச்சிட்டு குடும்பத்தை கஷ்டப்பட வச்சுட்டாராம். 
சாலமன்:   இப்படி இவங்க எல்லாம்  பண்றதுனால தான் , drinks எடுக்கிற  அத்தனை பேருக்கும் கெட்ட பேரு.....
நான்: என்ன சொன்னீங்க?
சாலமன்:  இல்லை,  தண்ணி அடிக்கிறது  எவ்வளவு கெடுதல்னு சொன்னேன். 

நான்:  கண்ணா,  J.C.Penney ல 60 % Savings  னு Sales  (நம்மூரு ஆடி தள்ளுபடி விற்பனை மாதிரி)  போட்டு இருக்காங்கடா.... இன்னைக்கு ஈவ்னிங், ஷாப்பிங் போகலாம்.
சாலமன்:  குட்டிம்மா,  இன்னைக்கு ஈவ்னிங், வீட்டிலேயே இருக்கலாமே. எனக்கு 100 % Savings.

நான்:  எங்க ஊரு பக்கம், பொங்கல் நேரம் எப்படி களை கட்டும் தெரியுமா?  அழகா கோலங்கள் போட்டு, நடுவில பொங்கப்பானை வச்சு ........... அசத்துவாங்க.  அன்னைக்கு செய்ற பொங்கலும் ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்கும். எல்லாம் மிஸ் பண்றேன்.
சாலமன்:  ஆமாம். பொங்கல் நேரம்,   பெண்கள் ஸ்பெஷல் ஆக இருக்கும். ரொம்ப மிஸ் பண்றேன்.
நான்:  என்னது? பெண்களா?
சாலமன்:  பொங்கல்னு தான் சொல்ல நினைச்சேன். சாரி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி போச்சு.

நான்,   மியாமி பீச்சில்,  ஜொள்ளி கொண்டு இருந்த ஒரு வயதானவரை காட்டி, " இந்த கிழட்டு வயசிலேயும் குளுகுளுனு ஜொள்ளு விட கேக்குதே. கொடுமை!
சாலமன்:  A man is as old as he feels; a woman is as old as she looks.  அப்படின்னு நான் சொல்லல. வேறு யாரோ சொல்லி வச்சது, இப்போ ஞாபகம் வந்தது. 


நான்:  இந்த ஸ்வீட் நல்லா இருக்கா?
சாலமன்:  லாஸ்ட் டைம் செய்து இருந்தது இன்னும் நல்லா இருந்துச்சு.
நான்:  அப்போ,  இன்னைக்கு செய்தது  நல்லா இல்லையா?
சாலமன்:  சே, சே..... அப்படி நான் சொன்னா,  எனக்கு டைம் நல்லா இல்லைனு அர்த்தம்.

 As I always say, "there is never a dull moment in our married life."  எங்கள் இருவரையும் இணைத்து வைத்த, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்றேன்.  Praise the Lord!


படங்கள்:  கூகிள். நன்றி.

Sunday, January 23, 2011

வெள்ளை மணல் உருகி....

பொங்கல் வாரம், அமெரிக்காவில் உள்ள  நியூ மெக்ஸிகோ மாநிலம் பற்றி எழுதி இருந்தேன்.  இந்த மாநிலம், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களை  விட ரொம்ப வித்தியாசமாக இருக்கும். Santa Fe யில் உள்ள Adobe ஸ்டைல் வீடுகள் பற்றி சொல்லி இருந்தேன்.

 இன்று,  அந்த மாநிலத்தில் உள்ள "White Sands National Monument Park" பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன்.  பதிவு நீளமாக தெரிவதற்கு படங்கள் தான் காரணம்.  நான் எடுத்த படங்களை போடாமல், கூகிள் தலையில பாரத்தை போடுறேன். ஏன்னு நீங்களே அப்புறம் தெரிஞ்சுக்குவீங்க..... ;-)


275 சதுர மைல்களுக்கு,  வெள்ளை பாலைவனமாக அழகு மிளிர காட்சி அளிக்கும் இடம் இது.  பனி மாதிரி எங்கு பார்த்தாலும்  வெள்ளை மணல். .......  உலகத்திலேயே பெரிய ஜிப்சம்  மணல் மேடுகள் இதுதான் என்று சொல்லிக்கிறாங்க... (World's largest Gypsum Dune Field)


அங்கு அதிகமாக கிடைக்கும் சுத்தமான ஜிப்சம் (Hydrous Calcium Sulfate)  , காற்றினால்  கொண்டு வரப்பட்டு இப்படி மணல் மேடுகளாக டெபாசிட் ஆகி விடுகிறதாம்.  அதீத குளிரும் வெயிலும் உள்ள இந்த இடத்தில் கூட சில தாவரங்களும் மிருகங்களும் தங்களுக்கு ஏற்ற இடமாக adopt செய்து கொண்டு நிம்மதியாக இருக்குதுங்க...


 இப்படிப்பட்ட இடத்தை பற்றி மேலும் தகவல் வேணும்னு நினைக்கிறவங்க - அது எப்படி உருவாகியது?  என்ன என்ன இருக்குது? எதனால் இருக்கிறது?  லொட்டு லொசுக்குனு  - கேள்வி கணைகளை தொடுக்கிறவங்க :
http://www.nature.nps.gov/geology/parks/whsa/index.cfm 
அமெரிக்க govt .  கொடுத்து இருக்கிற மேல  உள்ள லிங்க் கிளிக் பண்ணி முழு விவரங்களும்  தெரிஞ்சிக்கோங்க.  
மற்றவங்க, மேற்கொண்டு வாசிங்க.....


மற்ற சமயங்களில் குடும்ப படத்தை பார்க்க வர்ற மாதிரி கூட்டம் வந்தாலும்,  இங்கே வெள்ளை மணல் மேடுகள் பின்னே,  பௌர்ணமி அன்று நிலா  உதிக்கும் நேரம் - அந்த கவித்துவமான அழகை காண romantic ஜோடிகள்  வருகை தருகிறார்கள்.  நம்ம தமிழ் படங்கள்ல வர மாதிரி,  chorus ஹம்மிங் உள்ள  background music தான் மிஸ்ஸிங் ஆக இருந்துச்சு....


சூரிய அஸ்தமனம் நேரத்தில்,  அங்கே வாக்கிங் போக வசதி பண்ணி வச்சுருக்காங்க.  அந்த நேரம், நாங்க நடந்து போய்க்கிட்டு இருந்தப்போ,  மாலை நேர சூரிய ஒளி பட்டு, வெள்ளை மணல் மேடுகள் எல்லாம் மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என்று பல நிறங்களில் நிறம் மாறி மாறி ,  இருளை தழுவி கொண்டது. சிறிது நேரத்தில்,  வெள்ளி மின்னல் வெளிச்சம் போல,  முழு நிலா எழும்பி பிரகாசிக்க வைத்தது ........ அதை பழமொழி மாதிரி ஆராயக் கூடாது.... அனுபவிக்கணும்.  சூப்பரோ சூப்பர்!


அப்படியே டூயட் பாடலாமானு நினைச்சா.... அடுத்து கேள்விப்பட்ட நியூஸ்  ஏதோ மணிரத்தினம் சார் படங்கள் "ரோஜா"  - "Dil Se" -   மாதிரி   சீனை மாத்திடுச்சு.   மென்மையான  காதல் கதை சொல்லிக்கிட்டு இருக்கிற போது, மிலிட்டரி என்ட்ரி ஆகிற  மாதிரி,   கதை  தீம் போய்டுச்சு ....  காதல் ரசம் போய் கார்கில் ரசம் ஊத்துச்சு...... வெள்ளை மணல் உருகி,    சிவப்பு தடம் பதிக்கிற  மாதிரி மாறிச்சு.   ..... (அப்பாடி, அர்த்தம் இருக்குதோ இல்லையோ,  ஒரு flow ல  பதிவுக்கு வச்ச டைட்டில் வந்துடுச்சு..... மேல சொல்றேன், கேளுங்க......)
 


 அங்கே பார்க் நடவடிக்கைகளை மேற்பார்வை பார்க்க வந்த ஒரு   Ranger இடம், பேசும் வாய்ப்பு கிடைத்தது.  அவர் சொன்ன தகவல் -  இங்கே எல்லா நேரமும் இப்படி அழகை ரசிக்க  முடியாது  என்று  ஒரு குண்டை தூக்கி போட்டார். இந்த பார்க், 40 % தான் பொது மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டு இருக்கிறது.  60 % இடம்,  அமெரிக்க மிலிட்டரிக்கு  சொந்தமானது.  பொது மக்கள், அங்கே போக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


அது மட்டும் இல்லைப்பா, இந்த ஏரியாவில்  மக்கள் விசிட் அடிக்கிறாங்களே தவிர,  வீடு கட்டி வாழ்றது இல்லை.  ஏன் தெரியுமா?  .... ஷ்ஷ்ஷ்....... யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க..... குறிப்பாக தீவிரவாதிகள் யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.... காதை கொடுங்க... உங்களை நம்பி ராணுவ ரகசியம் மாதிரி இருக்கிற மேட்டர் சொல்றேன். "இங்கேதான் மிலிடரி அப்போ அப்போ Missile Testing எல்லாம் பண்றாங்க..... புதுசா செய்ற பாம் எல்லாம் வெடிச்சு சோதிச்சு பார்க்கிறாங்க..... "  அந்த மாதிரி குண்டு வெடிப்பு சோதனை நேரங்களில், பார்க் ஏரியா மட்டும் இல்லை,  அந்த  ஊரு பக்கம்  முழுவதும் யாரும் போக விட மாட்டாங்க....  எல்லாம் ரோடுகளும் க்ளோஸ் பண்ணி - மிலிட்டரி  காவல் போட்டு விடுறாங்க.... சோதனைகள் முடிந்த பின் தான் திறந்து விடுவாங்க...

 ....  சமாதான வெள்ளை நிற  மணல் பக்கம்,   ஒரு  யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு! 



டெஸ்டிங் இல்லாத நேரங்களில் கூட,  இந்த பார்க் பக்கம் போகும் போது,   திடீர்னு செக் போஸ்ட்  வச்சு நம்மை பற்றிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்டு செக் பண்றாங்க.... முதல் வாட்டி, இப்படியெல்லாம் க்ளோஸ் அப்புல, ஆர்மி ஆட்கள் -  மெஷின்  கன்ஸ் பார்த்தேனா ...... கொஞ்சம் டென்ஷன் ஆகி போச்சு.... நல்ல வேளை,  கையில பாஸ்போர்ட்ல இருந்து  எல்லாம் ரெடி ஆக இருந்ததுனால திரும்பி வந்து இங்கே ப்லாக் எழுதி கிட்டு இருக்கேன்..... இல்லைனா, பிடிச்சுட்டு  போய் அடுத்த missile டார்கெட் ஆக வச்சு இருப்பாங்களோ என்னவோ?  எம்மாடி!  (பில்ட் அப் கொடுக்க வேண்டியதுதான் ...... அதுக்காக இப்படியா என்று யாரும் கேலி பண்ணாதீங்க. அப்புறம் உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் connection உண்டுன்னு ஒபமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன். ஆமா.....!)



என்ன சொல்ல வரேன்னா - இந்த இடத்தை எத்தனை அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போய் பார்த்து இருப்பாங்க என்று தெரியல..... பார்க்காதவங்க, மிலிடரி குண்டு போட்டு டெஸ்ட் பண்ணி பார்க்காத நேரத்துல போய் பார்த்துட்டு பத்திரமாக வாங்க....  அப்புறம், நான் வார்னிங் கொடுக்கலைன்னு சொல்லாதீங்க.....

விரைவில்,  நியூ மெக்ஸிகோவில் உள்ள இன்னொரு சுவாரசியமான இடத்தை பற்றி சொல்றேன். சரியா?  




Tuesday, January 18, 2011

2010 - திருப்பி போடணும்.

 எனது சென்ற பதிவில் -  "நல்லா படிச்சீங்களா?"   -  நான் கேட்டு கொண்ட கேள்விக்கு - சிறப்பான பதிலை தந்து, எனக்கு உதவிய "அரசூரான்" அவர்களுக்கு நன்றி.

அவரின் பதில்:

"//இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?//
குழந்தை சும்மா கேட்காது, ஒற்றை விரலை (அப்பா மாதிரியே) நீட்டி கேட்கும், அப்படியே பதில் சொல்லாம ரிவர்ஸ்ல ஓடிப்போயிருங்க..."

ஹா,ஹா,ஹா,ஹா, ..... அந்த கமென்ட் வாசித்து விட்டு நல்லா சிரிச்சேன். 

 2011 ஆம் ஆண்டை  "வா வா...... வாத்தியாரே, வா...." என்று நான் அழைத்துக்கொண்டிருந்த நேரம்,  பதிவுலக நண்பர் பாலாஜி வந்து , நான் 2010 ஆம் ஆண்டை  திரும்பி பார்த்தே ஆகணும் என்று "தொடர் பதிவு" என்ற பெயரில் ஒரு கண்டிஷன் போட்டுக்கொண்டார்.


மக்கா,   நான் அப்படி என்னதான் (போன வருஷம் மட்டும் அல்ல  - இந்த வருஷமும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்)  "வெட்டி பேச்சு" பேசுகிறேன் என்று திருப்பி போடுறேன். சாரி, திரும்பி  பார்க்கிறேன்.  (எப்படி பார்த்தாலும்,  பானையில் இருக்கிறது தானே அகப்பையில் (கரண்டியில்) வருது.   அவ்வ்வ்....) என் பதிவுகள் வாசிக்கும் அனைவருக்கும்  தெரிந்து இருக்குமே - நான் எதை பத்தியும் உருப்படியா எழுதலனு  உடனே கண்டுபிடிக்க முடியாத மாதிரி, உருப்படியா எழுதிருவேன்னு.  ஹி,ஹி,ஹி,.....

வெட்டி டைம் இருந்தால்,  வெட்டி பேச்சுக்களின் பிறப்பிடமான "டீ கடை பெஞ்சு..." என்ற தலைப்பில் போன ஜூன் மாதம், நான் கிறுக்கியதை பார்த்து "வெட்டி  அறிவை" வளர்த்துக்கோங்க.

போன வருஷம்தான் எனக்கு பதிவுலகில் நல்லா  kick -off ஆச்சு. எனக்கு interesting  விஷயங்கள் நிறைய  நடந்துச்சு.
எல்லா புகழும் இறைவனுக்கே!  

காமெடி மட்டும் அல்ல ... வம்பு, தும்பு,  அப், டௌன்,  ட்ராஜெடி கூட   ......பார்த்தேன்.  ஆனாலும், அதன் சாயல் - வடுக்கள் - எனது பதிவுகளில் தொடர்ந்து  வராத வண்ணம் பார்த்துக் கொண்டு,  வழக்கம் போல எழுதி கொண்டு இருந்தேன்.   வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன்.


அப்புறம்,  13 வருடங்கள்,   நல்ல தோழியாய்  பழகிட்டு, பதிவுலகம் வந்து - அது தந்த போதையில்,  என்னை காயப்படுத்தி, எனது நட்பை தூக்கி எறிந்து விட்ட வேதனையான சம்பவத்தில் இருந்து  --------  முகம் தெரியாது இருந்தும் ,  எழுத்துக்கள் மூலமாகவே அறிமுகம் ஆகி,  சகோதர பாசத்துடன் பழகும் பல நல்ல உள்ளங்களின் அன்பும் நட்பும் கிடைத்த இனிமையான சம்பவங்கள் வரை எல்லாம் நடந்துச்சு.

எல்லாத்தையும் சொல்லி bore அடிக்கணுமா என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ,  பதிவுலகில் ஏற்படும்  எனது   பீலிங்க்ஸ் எல்லாம் கொட்டி,  ஒரு பாட்டு வந்து இருக்கிறது,  நினைப்புக்கு வந்துச்சு.  அதிலே "This is Africa" என்பதற்கு பதில், "This is வெட்டி பேச்சு" னு  போட்டு பார்த்தா - எல்லாமே  கரெக்ட் ஆக இருக்குதுப்பா... lyrics கவனிச்சு பாருங்க....  நான் சொல்றது பில்ட் அப் இல்லை, சரின்னு தெரியும்.



அந்த பாட்டில்,  ஷகிரா மற்றும் "waka ...waka...."  மட்டுமே கவனித்து விட்டு,  அதில் lyrics இருந்துச்சா ஆஆஆ...... என்று அப்படியே 'ஷாக்' ஆகி இருக்கும் நண்பர்களுக்காக, அந்த பாடலின் வரிகள் - Africa வுக்கு பதில், வெட்டி பேச்சு  - சேர்த்து இதோ:

You're a good soldier -
Choosing your battles.
Pick yourself up
And dust yourself off
And back in the saddle.
You're on the frontline
Everyone's watching -
You know it's serious
We're getting closer.
This isn't over.
The pressure is on
You feel it.
But you've got it all
Believe it.
When you fall get up
Oh oh...
And if you fall get up
Oh oh...
Tsamina mina
Zangalewa
Cuz this is வெட்டி பேச்சு.
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
This time for வெட்டி பேச்சு.
This is our motto:
Your time to shine
Don't wait in line.
Y vamos por Todo
People are raising
Their Expectations.
Go on and feed them
This is your moment.
No hesitations.
Today's your day
I feel it.
You paved the way
Believe it.
If you get down
Get up Oh oh...
When you get down
Get up eh eh...
Tsamina mina zangalewa
Anawa aa
This time for வெட்டி பேச்சு .
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
This time for வெட்டி பேச்சு.

எல்லாம் வல்ல இறைவன் அருளால், தொடர்ந்து இந்த வருடமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு" பேச ஆசை..............!