Wednesday, March 10, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள் (தொடர் பதிவு)

 எனக்கு பிடித்த பத்து பெண்கள் தொடர் பதிவுக்கு அழைத்த திவ்யா ஹரிக்கு நன்றி.
http://everythingforhari.blogspot.com/2010/03/10.html 

தொடர்  பதிவின் விதி (விதியை நொந்துக்கிறேன்):


1    உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.  
(அப்புறம் பத்து பேரை தவிர லிஸ்டில் இல்லாத மத்தவங்க எல்லாம் குழாய் அடி சண்டை போடுவாங்க. அந்த நேரம், அந்த பத்து பேரும் ஒத்தாசைக்கு வருவாங்கன்னு சொல்ல முடியாது.)

2. வரிசை முக்கியம் இல்லை
(ஆமாம்,  பிடித்த பத்து பேருக்கும் பல் வரிசை, சீர் வரிசை எல்லாம் முக்கியம் இல்லை)
 
3.  ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்.   இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள் இருக்க வேண்டும்.
(துறை என்று சொன்னாங்க, எந்த துறைனு சொல்லலியே...........  பத்து துறையை கண்டு பிடிச்சு, அதில் பத்து பெண்களை கண்டு பிடிச்சு, அவர்களை நமக்கு பிடித்தவர்களா என்று கண்டு பிடிச்சு,  ...............
இப்போ பிடிச்சு, அப்புறம் பிடிக்கலைனா?       ............. இப்போ பிடிக்காமா, அப்புறம் பிடிச்சுதுனா? ........)


இனி ஒரு விதி செய்வோம்.  தொடர் பதிவு என்று இருப்பதை,  நண்டுபிடி பதிவு என்று மாற்ற சொல்லி பதிவர் மாநாட்டில் மனு கொடுக்கலாமா?
ஒரு நண்டை பிடிச்சா, ஒரு ரெண்டு நண்டாவது அது காலை பிடிச்சிக்கிட்டு வரும்.

எனது பதிவுல முன்னோர்கள் எழுதிய இந்த தலைப்பின் நண்டு பதிவை படித்தால் - அறிவியல், ஆன்மிகம், அரசியல், ஆங்கிலம் போன்ற எல்லா துறைகளிலும் வெற்றி பெற்ற பெண்கள் பெயர்களை ஏற்கனவே போட்டு விட்டாங்க.

பிடித்த பெண்கள் லிஸ்ட்:

1.  போக்குவரத்து  துறை:    செசிலியா  -
காலேஜ் போகும் போது,  சில சமயங்கள் பஸ் இல் கூட்ட நேரத்தில்,  என் bag "பிடிக்காமல்" இருந்திருந்தால் நான் foot board ல அம்பேல் ஆகி இருந்து இருப்பேன்.

2.  சமையல்  துறை :   தன் அடுக்களையில் சப்பாத்தி மாவு மட்டும் அல்ல -  எனக்கு, முதல் பதிவுலக விருது கொடுத்து, என் மனதையும் பிசைந்து விட்ட ஜலீலா அக்கா.
என் அவியல் பதிவுகள் அவர்களுக்கு "பிடித்து" இருந்துச்சாம்.

3.  ஊர் சுற்றுலா துறை:  லிண்டா
அமெரிக்கா வந்த புதிதில், பப்பரபான்னு ஒண்ணும் தெரியாமல் முழிச்சிக்கிட்டு இருந்தபோது,  தன்னுடன் ஊர் சுற்ற அழைத்து போனது எனக்கு பிடித்து இருந்தது.

4.  மருத்துவ  துறை:  ராஜம்
இவங்க யார்னே எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு ஒவ்வொரு முறை சளி "பிடிக்கும்" போதும்  - ராஜம் சுக்கு காப்பி பவுடர் பாக்கெட் வழியா வந்து ரொம்ப உதவி செய்றாங்க.  நெல்லை போகும் போதெல்லாம்,  வாங்கி வந்து ஸ்டாக் பண்ணி இருக்கேனாக்கும்.

5.  சினிமா துறை:  ஊர்வசி.
என்னவோ தெரியலை. இவங்க காமெடி எனக்கு பிடிக்கும். பேசும் விதமும் பிடிக்கும்.

6.  அரட்டை துறை:  அலமேலு என்ற அம்மு
அம்முவும் நானும் அரட்டை அடிக்க ஆரம்பித்தால், உலக பிரச்சினைகள் எல்லாம் அலசி ஆராய்ந்து, பிழிந்து எடுத்து முடிவு கண்டு "பிடித்து" விடும் வரை ஓய்வதில்லை.

7.  அரசியல் துறை:  "தூள்"  சொர்ணா அக்கா
பெண்களாய் இருந்தாலும், அரசியல் எப்படி செய்யணும் என்பதை அப்படியே  படம் "பிடித்து" காட்டி இருந்தாங்க.

8.  விளம்பர துறை:   ஹமாம் அம்மா
அந்த அம்மா குடும்பத்துல மட்டும் இருக்கிற ஒரே கவலை/பிரச்சினை - ஹமாம் சோப்பு  வீட்டில் எல்லோரும் உபயோகிக்கிறாங்களா இல்லையா என்பது தான்.  குடும்ப பிரச்சினைகள் எல்லாம் தீர ஹமாம் சோப்பு போட்டு குளிக்கணும் என்று அந்த அம்மா, கண்டு "பிடித்து" இருக்காங்க.

9.  கற்பனை துறை:   பவித்ரா.
ideal girl  - பவித்ரமான அழகு, பவித்ரமான பணிவு, பவித்ரமான மென்மை, பவித்ரமான புன்னகை.
இந்த பெண்ணை, தன் மனதில்  "பிடித்து" வைத்து, கற்பனை குதிரை தட்டி விட்டு சில பேர் (பெரும்பாலும் ஆண்கள்) எழுதும் கவிதைகள் எனக்கு பிடிக்கும்.  (கவனிக்க: அவர்கள் எழுதும் கவிதை கிறுக்கல்கள்  மட்டும் எனக்கு பிடிக்கும். அவர்களின் கிறுக்குத்தனம்  பிடிக்காது)

10.  விண்வெளி துறை:   விண்வெளிக்கு சென்ற - செல்ல போகிற எல்லா பெண்களும் - ஒன்றா இரண்டா - விளக்கம் சொல்ல தேவை இல்லை.

68 comments:

நாஸியா said...

ஹி ஹி... என்னையும் ஏதாச்சும் ஒரு துறையில சேர்த்துக்கோங்க.. அச்சச்சோ விதிய மீற முடியாதோ..

ரொம்ப நல்லா இருக்குங்க...

ஜெட்லி... said...

மறுபடியும் நிபந்தனைகளில் இருந்தே உங்கள் ஆட்டம்
ஸ்டார்ட் ஆயிடுச்சு........
:))

திவ்யாஹரி said...

தொடர் பதிவின் விதிகள் "வெள்ளி நிலா" அவர்களின் உபகாரம் தோழி.. நான் இல்லை.. (இவ்வளவு கேள்வி கேட்பிங்கன்னு தெரிந்திருந்தால் நண்பர் நிபந்தனை போட்டிருக்கவே மாட்டார்.. பாவம்..)
"நண்டு பிடி பதிவு" :)))
மருத்துவத்துறையும்.. விளம்பரத்துரையும் கலக்கல்..
ஹா..ஹா..ஹா.. முடியல.. எப்படி இப்படி எல்லாம்?? தானா வருதா தோழி??????

கண்ணா.. said...

//விண்வெளி துறை: விண்வெளிக்கு சென்ற - செல்ல போகிற எல்லா பெண்களும் - ஒன்றா இரண்டா - விளக்கம் சொல்ல தேவை இல்லை//

ஹா..ஹா... எதிலும் உங்கள் வித்தியாசமான பார்வை அழகு..

நல்ல வேளை கமெண்ட் பாக்ஸை இப்பிடி மாத்திடீங்க... இல்லேன்னா காப்பி அடிக்க முடியலை...

கண்ணா.. said...

திவ்யாஹரிதான் கூப்பிட்டு இருக்காங்களா?

நான் இன்னும் அவங்க பதிவை பாக்கலையே...

எறும்பு said...

வெட்டி பேச்சுத்துறை : சித்ரா..

:)

vasu balaji said...

ஒன்னையும் விட்டு வச்சிறாதீய:)).

/ஒரு நண்டை பிடிச்சா, ஒரு ரெண்டு நண்டாவது அது காலை பிடிச்சிக்கிட்டு வரும்./

ஓ. அப்ப தமிழ் நண்டு இல்ல. அதுன்னா மத்தத போகவிடாமல்ல இழுக்கும்:))

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

வித்தியாசம் இப்ப அதற்கு சித்ரா என்று(ம்) பெயர்

ஹுஸைனம்மா said...

சாதனை படைத்த பெண்கள்னா, நம்மைச் சுற்றி உள்ள ஒவ்வொருவரும் சாதனையாளர்கள்தானே!!

நல்ல முயற்சி; வழக்கம்போல நல்ல நகைச்சுவை!!

சத்ரியன் said...

சித்ரா,

எப்பிடிக்கா...இப்பிடியெல்லாம்...?

goma said...

பள்ளீக்கூடம் போற வழியில் மழை சேறு சகதியில் வழுக்கி விழுந்த உங்கள்த் தூக்கி விட்டேனே மறந்து போச்சா.......தூக்கி விட்டதில் என் ஷோல்டர் எலும்பு சடக்....

goma said...

ஓஹோ உங்களுக்கு எல்லோரும் நண்டு நசுக்குகளாகி விட்டார்களா.....?...இருக்கட்டும் பார்த்துக்றேன்.....

அகல்விளக்கு said...

///நட்புடன் ஜமால் said...

வித்தியாசம் இப்ப அதற்கு சித்ரா என்று(ம்) பெயர்//

கன்னா பின்னான்னு
வழி மொழிகிறேன்...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

வடை போச்சே.......கிட்டத்தட்ட இதே மாதிரி எனது டிராப்ட்-இல் வைத்து இருக்கிறேன்,
மாத்தனுமே.

அண்ணாமலையான் said...

கலக்குங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

Chitra mm..mm..mm..SUPER

Anonymous said...

நல்லாத்தான் யோசிக்கறீங்க :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

விதியையே மதியால் ஒரு பதிவாக்கிட்டீங்க

ISR Selvakumar said...

என்னுடைய பவித்ரா,
தங்கை சித்ராவுக்குள் வந்துவிட்டதில் அளவிட முடியாத திருப்தி.

//ஒரு நண்டை பிடிச்சா, ஒரு ரெண்டு நண்டாவது அது காலை பிடிச்சிக்கிட்டு வரும்.//
இது ஒரு புதிய பிரில்லியண்ட் பிரயோகம். பழைய தொடர் நினைவுகளை காட்சி அமைப்பில் சொல்லும் இந்த உத்தி எனக்கு புதிது.

ராமலக்ஷ்மி said...

நீங்கள் தேர்ந்தெடுத்த பத்து துறைகளும் அதில் பிடித்த பெண்களும்.. அருமை அருமை! உங்களுக்கும் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

நாடோடி said...

வழக்கம் போல சிரிப்பு தான்....

மைதீன் said...

நெல்லைக்கே உரிய நக்கல் உங்களிடம் நான் ரசிக்கிறேன். நானும் நெல்லையில் வளர்ந்தவன்.ம.தி.தா.வில் படித்தவன் .வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துக்கு.

கண்ணா.. said...

மைதின் அண்ணே..

நானும் மதிதா தான் (பாரதியார் படிச்ச ஸ்கூல்லுல்லா)


நீங்க எந்த வருசம்??


ஏகப்பட்ட நெல்லைகாரவுக ப்ளாக் எழுதுறாய்ங்க போல....

இண்டு இடுக்குல ஒளிஞ்சிட்டு இருக்கவுகளையும் கண்டுபிடிச்சா... பதிவர் மாநாடே நடத்தலாம் போல...

SUFFIX said...

சித்ராவான (வித்யாசமா) விதத்தில் இருக்கு, சே...ஜமால் சொன்னத காப்பி அடிச்சு பேஸ்ட்ட முடியாதோ!!

மங்குனி அமைச்சர் said...

போடா போடா புண்ணாக்கு...... (அட ரிங் டோனுன்ங்க )
ஹல்லோ
ம்
......
ம்
....
இல்ல.... ம்ம்ம்
.......
யோவ் என்ன பேசவிடுயா
.......
ம்ம்ம்
.......
டே டோமரு பேசாம அந்த பார்சல சித்ரா மேடம் ப்ளாக்-க்கு அனுப்பு அவுக கதைய முடிசுருவாக

பஹ்ரைன் பாபா said...

" அவர்களின் கிறுக்குத்தனம் பிடிக்காது.." .. அது என்னங்க பசங்க மேல அப்டி ஒரு கோபம்.. இதோட உங்க பதிவுல ரெண்டாவது முறையா இந்த மாதிரி ஒரு வரிய படிக்கிறேன்..ஒரு பையன் லவ் லெட்டர் ன்ற பேர்ல கிறுக்கினா. அவன் எழுத பழகுரான்னு அர்த்தம்.. பச்சை குழந்தை மாதிரி.. ஒரு ஆணிடம் கிறுக்குத்தனம இல்லை என்றால் அவர்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் கவிதையும் இருக்காது.. காதலும் இருக்காது..

இது என்னுடைய கருத்து பின்னூட்டமே தவிர.. தங்களிடம் மாற்றம் எதிர்பார்த்தல்ல..

settaikkaran said...

இந்த மாதிரி எனக்குப் பிடித்த பத்து ஆண்கள்னு யாராவது ஆரம்பிச்சா, நான் பத்து பேருக்கு எங்கே போகிறது? அவ்வ்வ்வ்வ்வ்!!

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

தமிழ் உதயம் said...

இப்படியொரு பதிவை போட, சித்ராவை தவிர வேறு யாரால் முடியும். (ஐஸ் வைக்கல)

ஸாதிகா said...

பிடித்த பெண்கள் விளக்கமுடன் அருமை!

Prathap Kumar S. said...

சூப்பர்,. எல்லாத்துலயும் டாப்பு ராஜம் சுக்குப்பொடிதான்...யாருன்னே தெரியாம அவங்களை புடிச்சிருக்கே...:))

//இந்த மாதிரி எனக்குப் பிடித்த பத்து ஆண்கள்னு யாராவது ஆரம்பிச்சா, நான் பத்து பேருக்கு எங்கே போகிறது? அவ்வ்வ்வ்வ்வ்//

ஏம்பா சேட்டை நான் இருக்கும்போதே இப்படிச்சொன்னா எப்படிப்பா.... பத்துக்குப்பத்தும எம்பேரையே போடலாமே...

Chitra said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. கமென்ட் மற்றும் வோட்டு போட்டு, உங்களுக்கு இந்த பதிவு "பிடித்த" விஷயத்தை தெரிவித்த அன்புக்கு நன்றி.

Chitra said...

நெல்லை பாபா, எனக்கு கோபம் இல்லை. காதல் தென்றல் பிடிக்கும். காதல் சுனாமிகளை பிடிக்காது. என் நண்பர்கள் சிலர், காதலே கதி என்று வாழ்க்கையில் கோட்டை விட்ட கிறுக்குத்தனம் பிடிக்காது என்று சொல்ல வந்தேன்.

அ.ஜீவதர்ஷன் said...

ஆசிரமதுறையில ரஞ்சிதாவை பிடிக்காதா? அல்லது ஆசிரமதுறையே பிடிக்காதா? :-)

Mythili (மைதிலி ) said...

எல்லோரும் history பார்த்து எழுதுவதை விட.. இது ரொம்ப யதார்த்தமா எழுதியிருப்பது நல்லா இருக்கு... தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி.. I will give it a try..

Matangi Mawley said...

:) romba interesting post.. azhagaana vazhi- womens day kondaada!

நசரேயன் said...

ரெம்பவே யோசிக்கிறீங்க

Thenammai Lakshmanan said...

எப்புடீ சித்து இப்புடீயெல்லாம் வித்யாசமா யோசிக்கிறே அருமை டா வழக்கம் போல ஆனா இவ்வளவு கலாய்ப்பேன்னு நினைக்கல ஹிஹிஹி

வேலன். said...

கலக்கிட்டீங்க போங்க...வாழ்க வளமுடன்,வேலன்.

Vidhya Chandrasekaran said...

முடியல..

சசிகுமார் said...

இதில் கவிதையில் கலக்கும் நம்ம தேனம்மை அக்காவையும் சேர்த்து இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். www.honeylaksh.blogspot.com

Asiya Omar said...

இப்படி எல்லாம் வித்தியாசமாக உங்களால் தான் சிந்திக்க முடியும்,interesting.

Jaleela Kamal said...

ஹா ஹா நல்ல யோசித்து யோசித்து எழுதி இருக்கீங்க.

அட பத்து பெண்களில் நானுமா நானுமா......
ஹி ஹி
ராஜம் சுக்கு காப்பி ரொம்ப நல்ல இருக்கு

அது எப்படி சித்ரா இப்படி யோசித்து வித்தியாசமா எழுதுறீங்க.



பார்த்து உங்களை உஷாரா வாட்ச் பன்றார் பஹ்ரைன் பாபா

Priya said...

வழக்கம்போல கலக்கல் !!!!!

அஷீதா said...

hello chitra...neenga romba yosikireenga...konjjam paathukonga...romba use panitengannaa...pirkalathula stock illama poida pogudhu.

super.

Paleo God said...

//அமெரிக்கா வந்த புதிதில், பப்பரபான்னு //

சூப்பர் மீயூசிக்குங்க அது. இந்த காக்க காக்க படத்துல ஜோ அக்கா வரும்போது போடுவாங்களே.. :))

PriyaRaj said...

My 1st visit here..u got nice space...neenga palaiyakottai aa..my dad's native is tirunelveli laa. ... veeravanallur village...everyyear we will go for vacation....mom's is Nagerkoil.. before marriage every leave we will be around there....

பித்தனின் வாக்கு said...

நம்மைச் சுற்றியுள்ளவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து பதிவு போடலாம் என்று இருந்தேன், ஆனா நீங்க முந்திக் கிட்டிங்க. இருந்தாலும் இந்த அளவு சூப்பரா எழுத முடியுமான்னு சந்தேகம்தான். நல்லா எழுதியிருக்கிங்க. என்ன சொல்வது? கிளிப் பிள்ளை போல வழக்கமா சொல்ற அருமையான தொடர் பதிவு. நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நல்ல இடுகை.
குறிப்புக்களும் அருமை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சித்து!
நாம்பாட்டுக்கு ஓட்டுப்போட்டுட்டு சத்தமில்லாமப்போனா விடமாட்டீங்க போல.முடியல,சிரிச்சு முடியல

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இன்னும் சிரிச்சு முடியல.

சுசி said...

செம சித்ரா..

இன்னும் சிரிச்சு முடியல நான்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

// மத்தவங்க எல்லாம் குழாய் அடி சண்டை போடுவாங்க. //
ஹி..ஹி..ஹி.. சூப்பர்..

//அந்த நேரம், அந்த பத்து பேரும் ஒத்தாசைக்கு வருவாங்கன்னு சொல்ல முடியாது//
இது அதை விட சூப்பர்.. ;)

//தொடர் பதிவு என்று இருப்பதை, நண்டுபிடி பதிவு //
எப்படி இப்படீல்லாம்.. செம திங்கிங். ;)

//அமெரிக்கா வந்த புதிதில், பப்பரபான்னு ஒண்ணும் தெரியாமல் முழிச்சிக்கிட்டு//
ஹா ஹா ஹா ... உங்க நன்றி உணர்ச்சிய நா பாராட்டுகிறேன்.. ;)

//சினிமா துறை: ஊர்வசி//
எனக்கும் ஊர்வசிய ரொம்ப பிடிக்கும் ...சித்ரா .. :D :D

//கற்பனை துறை: பவித்ரா//
பெயருக்கேற்ற விளக்கம்... அருமையிலும் அருமை..

மொத்தத்தில் உங்களுக்கு பிடித்த பத்து பெண்களும்.... கலக்கல்ஸ்....
எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறிங்களோ...???

கண்ணகி said...

வடை போச்சு....விளம்பரத்துறையும், கற்பனைத்துறையும் சூப்பர்..

நல்லா சிரிக்க வைக்கறீங்க..சித்ரா.

☀நான் ஆதவன்☀ said...

:)))

எனக்கு பிடித்த பத்து ஆண்கள்னு யாரும் தொடர்பதிவு ஆரம்பிக்கலையே ஏன்? :(

"உழவன்" "Uzhavan" said...

கொஞ்சம் வெட்டிப் பேச்சு நல்லாதான் இருக்கு :-)

Jerry Eshananda said...

// அரசியல் துறை: "தூள்" சொர்ணா அக்கா
பெண்களாய் இருந்தாலும், அரசியல் எப்படி செய்யணும் என்பதை அப்படியே படம் "பிடித்து" காட்டி இருந்தாங்க.//

அதான் முப்பத்தி மூன்று சதவீதம் வேறு கிடைசிரிச்சு இல்ல,அப்புறம் என்ன?உங்களுக்கு கொண்டாட்டம்,எங்களுக்கு திண்டாட்டம்.

Alarmel Mangai said...

நம்மளை ஏதோ அரட்டைக் கச்சேரி ராணியாக்கிப் போட்டீங்களே...
எவ்ளோ உலகப் பிரச்சினையெல்லாம் பேசிப் பேசியே தீர்வு கண்டு பிடிச்சிருக்கோம் ;)
வாழ்க அரட்டைப் பெண்கள்!!!!!
இன்னும் எத்தனையோ உலகப் பிரச்னையைத் தீர்க்கப் போகணும், அப்புறமா வரேன்...

பனித்துளி சங்கர் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோணுது . கலக்கல் . வாழ்த்துக்கள் !

Menaga Sathia said...

ரொம்ப நல்லா காமெடியா பதில் சொல்லிருக்கிங்க சித்ரா....

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப யதார்த்தமா எழுதியிருப்பது நல்லா இருக்கு...

Muruganandan M.K. said...

துறைதுறையாக யோசித்துச் சொல்லியிருக்கிறீர்கள். நல்லா இருக்கு.

ஜெய்லானி said...

நண்டு படம் ஹி...ஹி......

காஞ்சி முரளி said...

சித்ரா மேடத்துக்கு...
வணக்கமுங்கோ...!

எப்படி..
இப்படி...
எதார்த்தமாய்...
எழுத...
எங்கே...
கற்றுக்கொண்டீர்...

10 பேர் என்றால்
தங்களை பாதித்தவர்கள்தானே....

நன்றாய் இருக்கு...

நட்புடன்....
காஞ்சி முரளி........

Madhavan Srinivasagopalan said...

U made this post on 10th march itself. W/o knowing this, I called for you to write in this series of posts on 16th march. What a mistake. Now, I started following your blog, hence will not miss your post (hence no mistake again).

Fan of ..laajee.., said...

nice topic sister... i liked it...

வருண் said...

விதிமுறைகளிலே அந்த அந்தப்பெண் தன்னைப் பிடிப்பதாகவும் எழுதக்கூடாதுனு போட்டிருக்கா?

***மருத்துவ துறை: ராஜம்
இவங்க யார்னே எனக்கு தெரியாது.
ஆனால், எனக்கு ஒவ்வொரு முறை சளி "பிடிக்கும்" போதும் - ராஜம் சுக்கு காப்பி பவுடர் பாக்கெட் வழியா வந்து ரொம்ப உதவி செய்றாங்க. நெல்லை போகும் போதெல்லாம், வாங்கி வந்து ஸ்டாக் பண்ணி இருக்கேனாக்கும். ***

இது நல்லாயிருக்குங்க! :)

அவங்களுக்காவது நீங்க அவங்க ரசிகைனு தெரியுமா?

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா

அருமையான தேர்வு - அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா