"அவ்வளவு சிக்கனமாகவா கொண்டாடினாங்க?"
"நீ வேற.....! ஹிந்து பேப்பர் பார்க்கலியா?"
((photo: Thanks to Outlook India)http://www.dnaindia.com/img/1359680.jpg
ஹிந்து பேப்பர் மட்டும் இல்லை. இப்போ, BBC நியூஸ் வரைக்கும் பார்த்துட்டேன். :-(
பக்கத்து மாநிலம் தானே எக்கேடோ போகட்டும் என்று விட முடியுமா?
"தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடியவர் வந்த மாநிலத்து ஆளாச்சே. பாத்துட்டு நெஞ்சு பொறுக்குதில்லை, இந்த நிலை, குலை கெட்ட மனுஷியை கண்டால்......
2010 - மகளிர் தினத்தை ஒட்டி - மகளிர்க்கு திருஷ்டி பூசணிக்காயாய் இவளை பற்றிய செய்தி.
தண்ணீரை வீணாக்காதீங்கனு விழிப்புணர்வை கொண்டு வர, உலகமே அலறுகிற நேரத்துல, பணத்தை வீணாக்கி ஒரு பிறந்த நாள் திருவிழா.
அடுத்த வருகிற வம்சங்களுடைய தவிக்கிற வாய்களுக்கு தண்ணி இருக்கட்டும் என்று சொன்னா, இங்கே ஒருத்தி, இப்போவே அவளுடைய மாநில மக்களின் வாயி வயிறு எல்லாம் காய போட்டுட்டு, இப்படி கூத்தடிச்சா?????
வரலாறை திருப்பி பார்த்தால், மாயாவதியின் மாய லீலைகள் 2003 வருடமே பரபரப்பை ஏற்படுத்தி இருக்குங்க. 51 கிலோ கேக் வெட்டி, 100,000 லட்டுக்கள், 60 quintals காணக்கில் சிறப்பு மலர்கள் கொண்டு கொண்டாட்டம் களை கட்டி இருக்கு. இரண்டு பொருட்காட்சி விழாக்களும் நடந்துருக்கு. எல்லோரும் அப்போதே சாதாரணமா எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க. இப்போ விரலுக்கு ஏத்த வீக்கமா, " அப்போவே நான் தில்லாலங்கடி. இப்ப நான் ஜகஜால கில்லாடி. சும்மா விடுவேனா?" என்று வூடு கட்டி அடிச்சு ஒரு விழா கொண்டாடியிருக்காங்க.
முன்னாள் ஆசிரியை முதல் மந்திரியா வந்தா, நாம் எல்லா விஷயத்திலேயும் முந்திக்கலாம் என்று ஆசை மயக்கத்தில் இருந்த உத்தர் பிரதேச மக்கள், முகத்தில் அடிச்சு எழுப்ப தண்ணீரை வீணாக்காமல் சேர்த்து வைக்க வேண்டும். இதை அவர்களுக்கு மட்டும் வந்த சோதனையா நினைச்சு சும்மா இருக்கமுடியாது. தனக்கு, பிரதம மந்திரி பொறுப்பு மேல ஒரு ஆசை என்று சொல்லி இருக்காங்க. அப்படி ஆயிட்டாங்கனு வைங்க, இந்தியாவுக்கே மஞ்சாத் தண்ணி தெளிக்க வேண்டும். தண்ணீரை இப்போவே சேமிச்சு வைங்க.
இந்த மாதிரி தலைவர்கள் ஆட்சியில், மக்கள் கண்களே வற்றாத ஜீவநதிகளாய் இருக்கும்.
தேசிய நதிகள் எல்லாம், தேசிய, மாநில தலைவர்கள் வீடுகளுக்கு மட்டும் கால்வாய் வெட்டி திருப்பிவிடப் பட்டிருக்கும்.
மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் நல வாழ்வு திட்டங்களுக்கு, நஷ்ட ஈட்டு தொகைக்கு எல்லாம் கஜானா காலி என்ற கையை விரிச்ச மகராசி, தன்னை விட உயரமான அளவில் ஒரு லஞ்ச பண மாலையை பெருந்தன்மையா வாங்கி கொண்டு, தன் எடைக்கு மேல எடை அளவு கொண்ட கேக் வெட்டி , ரொம்ப "க(இ)ஷ்டமான" மன நிலையோட பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க. எல்லோரும் அதை பார்த்துட்டு, நமக்கு என்ன என்று இந்த விஷயத்துல கை கழுவிட்டு போகணும்னா கூட, தண்ணி வேணும். ஒரு பில்லியன் மக்களுக்கு மேல கை கழுவனும்னா எவ்வளவு தண்ணி வேண்டும். தண்ணியை வீணாக்காமல் சேமிச்சு வைங்க.
நம்ம வெட்டி பேச்சு மாதிரி, மக்களே சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுறாதீங்க.
பணத்தையும் அந்த கால தண்ணீர் மாதிரி வீணாக்காமல், இந்த கால தண்ணீர் மாதிரி சிக்கனமாக செலவழிச்சு - நம் நலன் மட்டும் கருதாமல், நமது சந்ததி நலன் கருதியும் ஆக்க வேலைகள் செய்தால் நம்ம நாடு உருப்படும் என்று நம்புவோம்.
எல்லா மாநிலத்து முதலை மந்திரிகள் கவனிக்கவும் - நீங்க பல சந்ததிகளுக்கு சேத்து வச்சுட்டீங்க. மத்தவங்க வாழ உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாதீங்க, ப்ளீஸ். நீங்கள் மக்கள் தலையில் தண்ணி தெளிச்சு, உங்கள் நலனுக்கும் எங்கள் நலனுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியது போதும்.
Conserve the water - Save the water - Save the people of India!!!
79 comments:
//நம்ம வெட்டி பேச்சு மாதிரி, மக்களே சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுறாதீங்க.//
நம்ம சித்ராக்காவே டென்சன் ஆயிட்டாங்க...
கிளம்புங்கடா...டேய்..ஆட்டோவ ஸ்டார்ட் பண்ணுடா...
டேய் ... பொருள எடுத்துங்கங்கடா....
டேய் எவண்டா அவன்...........
என்னது அவன் இல்ல அவளா...!!!??
அப்போ நீங்களே டீல் பண்ணிக்கோங்கக்கா....
நல்ல பதிவு சித்ரா , இப்பொழுதைக்கு மிகவும் அவசியமான பதிவு , இனி எப்பொழுதும் , எங்கு சென்றாலும் பணமாலை தானாம் . எங்கு போய் முடிய போகிறதோ ......
உள்குத்து நிறையா இருக்கு....பார்த்துங்க வண்டி அனுப்பிட போறாங்க..ஏன்னா நீங்க கலய்ச்ச ஆளு அப்படி..மெசெஜ் சூப்பர்..
//இந்த மாதிரி தலைவர்கள் ஆட்சியில், மக்கள் கண்களே வற்றாத ஜீவநதிகளாய் இருக்கும். // True!
பத்து நாளைக்கு முன் உ.பி யில் நடந்த ஜனநேருக்கடியில் (stampede) உயிரிழந்த ஏழைமக்களுக்கு பண உதவி செய்ய, அரசிடம் நிதி இல்லை எனச் சொன்னது இந்த அரசு. வெட்கம், கேவலம்....
Where are we going ?
அப்ப இங்க சினிமா ஆர்ட் டைரக்டரை வெச்சு ரெண்டு கொடியில மேற்கூரை போட்டதெல்லாம் சும்மா ஜுஜுபிதானா?
//இந்த மாதிரி தலைவர்கள் ஆட்சியில், மக்கள் கண்களே வற்றாத ஜீவநதிகளாய் இருக்கும்//
அருமை,
சரி கோவபடதிங்க,
சித்ரா,
இது போன்ற அரசியல் களைகள் தான் சமுதாயத்தை வளர விடாமல் தடுக்கின்றன.
மக்கள் அந்த அளவிற்கா முட்டாளாய் இருப்பார்கள் என சில நேரம் எண்ண வைக்கிறது.
நிறைய உபயோகமான பேச்சு இந்த இடுகையில...
பிரபாகர்.
நம் நலன் மட்டும் கருதாமல், நமது சந்ததி நலன் கருதியும் ஆக்க வேலைகள் செய்தால் நம்ம நாடு உருப்படும் என்று நம்புவோம்.]]
நல்லது :)
save the waterன்ன உடனே ஏதோ அறிவியல் கட்டுரைன்னு நினைச்சேன். இது அம்மா கட்டுரையா?
கட்டுக்கட்டா ரூபாய் நோட்டு மாலை பார்த்தீங்களா? சர்ச்சை இன்னும் போயிட்டிருக்குக்கா!
இப்போ கொண்டாடினது பிறந்த நாளில்ல. கட்சியின் வெள்ளி விழா ஆண்டு. அதுக்கே இப்படி. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?!!
சிரியஸ் பார்வையாளரே!கடைல தண்ணீர் பந்தலே இருக்குது.எது வேணுமுன்னு சொன்னா போதும்.
எனக்கு தூக்கமா வருது.ஒரு தூக்கம் போட்டுட்டு வாரேன்.
சிரியஸ் பார்வையாளரே!கடைல தண்ணீர் பந்தலே இருக்குது.எது வேணுமுன்னு சொன்னா போதும்.
எனக்கு தூக்கமா வருது.ஒரு தூக்கம் போட்டுட்டு வாரேன்.
சவுக்கடி பதிவு! அருமை...!!
இந்த அம்மணியின் அராஜகத்தையும், ஆடமபரத்தையும் கூட சப்பைக்கட்டு கட்டுகிறவர்கள் இருப்பதை நினைத்தால்.....! :-((((
தசரதரின் படபிஷேகம், பரதனின் பட்டாபிஷேகம், பிரித்தானிய மகாராணியின் பட்டாபிஷேகம், அபுதாபி அரசரின் அரண்மனை செலவு பற்றி எல்லாம் கோபப் பட மாட்டீர்கள்.
ஒரு உண்மையான தலித்து தலைவரின் , தொண்டர்களின் கொண்டாட்டம் என்ற உடன் ஏன் கோபம் வந்து விடுகிறது.
நம் தமிழ்நாடு சட்டசபை கட்டிட திறப்பு விழா அழைப்பிதல் கொடுக்க , எட்டு மந்திரிகள் அரசு விமானம், அரசு கார் செலவு செய்து டெல்லி போகலாம்,
தன் கட்சியை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக காஞ்சி புரத்தான், திருக்குவளை தொண்டனுக்கு தங்க மோதிரம் அணிவிக்கலாம்,
திருச்செந்தூர், திருமங்கலம் தேர்தல்களில் வெற்றி பெற்று தந்த மத்திய அமைச்சருக்கு இருபது பவுனில் தங்க செயின் பரிசாக அளிக்கலாம்,
எம்ஜியார் தனது கட்சி கோ ப சே வுக்கு வெள்ளி வாள் வழங்கலாம் .
அவை எல்லாம் ஆடம்பரம் இல்லை.
ஒரு தலித்து தொண்டர்கள் தங்கள் தலைவரை கொண்டாடுவது தானே இங்கே ஆடம்பரம்.
பாவம் ஏதோ கொழந்த ஆசப்படுது... விடுங்க... எவன் வயிறு எப்டிப்போனா என்ன??
அட்டகாசம், ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.........
இயல்பாய் இருக்கிறது எழுத்து நடை
நல்லா எழுதி இருக்கீங்க.
அட தமிழ்மணத்துல சேர்ந்தாச்சா ...சரி சரி நாங்கெல்லாம் நடையக் கட்டிடுறோம்..
இதுக்கப்புறமும் பணமாலைதானாம்.எங்கே திருந்தப் போகுதுங்க
இந்த கால தண்ணீர் மாதிரி :)))
ஒரே பதிவில் ரெண்டையும் மிக்ஸ் செய்து எழுதிட்டீங்க.. சூப்பர்
ஜனநாயகம் என்ற பெயரில் நம் நாட்டில் நடக்கும் இப்படிப்பட்ட கூத்துக்களை யாராலும் தடுக்க முடியாது. நம் கோபம் யாரையும் பாதிக்கப்போவதில்லை. :(
மாயா மாயா எல்லாம் மாயா....
இதெல்லாம் நிலைக்கும்னு நினைக்கிறீங்க????????
நாங்க என்ன அமெரிக்க அரசியல்வாதிகளா..,
எளிமையா இருக்க...
அப்புறம், சித்ரா.
நீங்க அமெரிக்காக்கு போயி ரெம்ப கெட்டு போயிட்டீங்க.
நீங்க நீதி, நேர்மைன்னு பேசி இந்திய கலாசாரத்துக்கு எதிரானவரா மாறிட்டீங்க.
அவசியமான பதிவு
டேய் எடுங்கடா பொருளை அடுத்த பிளைட்டு எப்பன்னு பார்த்து போடுடா டிக்கெட்டை அமெரிக்காவுக்கு.... சித்ராடீச்சருக்கு நாம யாருன்னு காட்டிருவோம்.... யார்கிட்ட
-
கொஞ்சம் காலம் முன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கப் போகிறோம்னு சொன்னப்போ சிரித்தோம். இன்று ஒரு மன நிலை பிறழ்ந்த பெண் mineral water பாட்டில் யோட போகுது. நம்ம என்னிக்குதான் வரு முன் யோசித்தோம். நல்ல சிந்தனை
மாயாவதியை
இனிமேல் ”பண மாலைவதி”
என்று அழைக்கலாமா?
நீங்க வேறங்க. பேப்பர்ல போட்டு நக்கலாடா அடிக்கிறீங்கன்னு திரும்ப 18 லட்சத்துக்கு இன்னோரு மாலை போட்டுக்கிட்டு இதான் பதிலுங்குதாம். ஆமாம். ரூபாய் நோட்டை அப்யூஸ்பண்றது சட்டப்படி குற்றமாச்சேன்னு கேக்கறீங்களா? அது ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா. வெட்டிப் பேச்சு:))
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து நினைந்து .
//ஒரு தலித்து தொண்டர்கள் தங்கள் தலைவரை கொண்டாடுவது தானே இங்கே ஆடம்பரம். //
எங்கடா இந்த மாதிரி யாரையும் காணோமேன்னு பாத்தேன். வந்தாச்சா?
மாயாவதி கழுத்தில் மலைபாம்போன்னு நினைச்சிட்டேன்,பார்க்க எனக்கு அப்படிதான் தெரியுது.
நாம் என்ன சொன்னாலும் எந்த அரசியல்வாதியும் திருந்தப் போவதில்லை.. மக்களையும் கெடுத்து விட்டதுதான் மிச்சம்.. எப்போது வோட் போட பணம் வாங்கியாச்சோ தார்மீக உரிமை இழந்துவிட்டவர்கள் தான் நாம்..
நல்ல பதிவு மேடம்.
நீங்க வேற இரண்டே நாளில் இத மரதுடுவாங்க,,,,அடுத்த கொள்ளை ஆரம்பிக்கபடும் கா
ஐய்யோ ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன், ஆசியா சொல்வது போல் பாம்பு போல் தான் என் கண்ணுக்கும் தெரியுது.
நல்ல வாங்கு வாங்குன்னு வாங்கிட்டிங்க சித்ரா
// அப்போவே நான் தில்லாலங்கடி. இப்ப நான் ஜகஜால கில்லாடி. சும்மா விடுவேனா?" என்று வூடு கட்டி அடிச்சு ஒரு விழா கொண்டாடியிருக்காங்க.//
எனக்கு அரசியில் என்றாலே அலர்ஜி.. இந்த மாதிரி லோலாயி எல்லாம் பார்த்து தான்.. :P :P
உங்க கோவம் புரியுது.. எடுத்து கட்டின விதம் அருமை.. கலுக்குங்க..
என்ன சொல்லி என்ன ஆகா போகுதுங்க..
இப்ப லஞ்ச மாலை..... பிறகு கஞ்சா மாலையே போட்டாலும் ஆச்சர்யமில்லை... :D :D
தமிழ்மண பட்டைய போட்டு சரக்கை பிரிச்சி வேஞ்ச்சிட்டீங்க, அதாவது தண்ணியை சொன்னேன்.
Satire genre வும் நல்ல வருது, சித்ரா, உங்களுக்கு!
நம்மூரு அரசியல் வியாதிங்க ஜோக்கர்னு கை கழுவிற முடியாது போலருக்கே? ஒன்னொண்ணுக்கும் கை கழுவினாலே பில்லியன், பில்லியன் காலன் தண்ணி வேணுமே? அவ்வளவு தண்ணிக்கு எங்க போக?
என்னவோ போங்க...ஒண்ணும் சரியாப் படலை...
@ராம்ஜி_யாஹூ
தலித் குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்து இப்படி முதல்வர் பதவிக்கு வரும் அளவுக்கு உயர்ந்திருக்கும் மாயாவைப் பாராட்டும் அதே சமயத்தில்,
சில மாதங்களுக்கு முன் அவரது சிலைகளையும் கட்சி சின்னமான யானையின் சிலைகளையும் மாநிலம் முழுவதும் பல நூறு கோடி செலவில் நிறுவினாரே? அந்தப் பணத்தை வைத்து தன் இனமான தலித்கள் வளர்ச்சிக்கு செலவழித்திருக்கலாமே?
சில நாட்களுக்கு முன்னால் நெரிசலில் உயிரிழந்த மக்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க பணமில்லை என்று சொன்னவர் இப்படி ஆடம்பர பிறந்த நாள் விழா கொண்டாடி இருக்கலாமா?
குறைந்த பட்சம் தனக்கு விழுந்த ஆயிரம் ரூபாய் நோட்டு மாலையில் இருக்கும் பணத்தை வைத்தாவது கொடுத்திருக்க வேண்டும்.
இங்கே யாரும் மற்ற தலைவர்களின் ஆடம்பரத்துக்குக் கொடி பிடிக்கவில்லை. அவர்களுக்கும் குட்டு வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் மட்டுமே வேறு காரணங்களுக்காக இந்த செயலை நியாயப் படுத்துகிறீர்கள்.
சித்ரா டீச்சர்,
நல்ல நடை.
முதல் பாதியை வாசிக்கையில் ‘என்னத்த சொல்ல’ என்றபடியே தொடர்ந்தால் நல்லா சொல்லியிருக்கீங்க நீங்க.
சித்ரா நீங்க ப்ளாகர்களின் செல்ல பிள்ளை போலும் .எனக்கும் இப்போ .
nice writing
நல்ல கோபம் சித்ரா..இதே கோபம் என்க்குமுண்டு...
க்ளக்..க்ளக். .
:))))))
அசத்தல்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....
செருப்புகள் தயாராகட்டும்...
அர்த்தமுள்ள கோபம். மக்களாய் உணர்ந்து திருந்தாவிட்டால் இந்த திருடர்கள் பொருப்புக்கு வருவதை தடுகக இயலாது.
இந்த பதிவுல என்ன ஒரு பொறுப்புணர்ச்சி, நைஸ் சித்ரா!
நிஜம்தான் சித்ரா முதலில் இருந்து கடைசிவரை தொய்வில்லாமல் நன்றாக விளாசி இருக்கேம்மா மிக அருமை
நல்ல பதிவு சகோதரி...உங்கள் கோபங்கள் நியாயமானதே...வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெ ..யைவிட ரொம்ப மொசமா இருபாளோ?
பதிவு சூப்பர்...
தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்.......
நம்ம ஊர்ல டாஸ்மாக் தண்ணிக்கு மட்டும்
பஞ்சமே வராது.....!!
நல்ல பதிவு சித்ரா!! இந்த பணமாலை விவகாரம் எங்கு போய் முடியுமோன்னு தெரியல...
யார் எக்கேடு கெட்டா என்ன? அரசியல் வாதிக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு.
பாராட்டுக்கள். இந்த பெண்ணைப் பற்றி திட்டி எழுதியதற்கு. பெண் பதிவர்கள் பொதுவாக பெண்களைத் திட்டி எழுதுவதில்லை. மீண்டும் பாராட்டுக்கள்.
நல்ல பகிர்வு .. :)
\\" அப்போவே நான் தில்லாலங்கடி. இப்ப நான் ஜகஜால கில்லாடி. சும்மா விடுவேனா?"//
Super ha ha
நல்லா சொல்லியிருக்கீங்க...
(யாதும் ஊரே யாவரும் கேளிர்)அரசியல் சாக்கடை என்று ஒரு வார்த்தையில் நம்மை விடுவித்து கொள்ள முடியாது. நம்ம வீட்டு latrine பழுதடைந்தால் என்ன செய்வோம்.பக்கத்துக்கு வீட்டுக்கரன் வந்து சரிசெய்யட்டும் என்று சும்மா இருப்போமா என்ன? பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு(United ஸ்டேட்ஸ்) போனாலும் பிறந்த வீட்டை பற்றிய கரிசனை இன்னும் மாறாம எவ்வளவு அக்கறையா விசாரிக்கிறாங்க பாருங்க இந்த அக்கறை நமக்கு இல்லையே என்னும் போது *நெஞ்சுபொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில்*
நல்லா எழுதி இருக்கீங்க.
என்னங்க இந்த அரசியல் வாதிங்க பண்றது ரொம்பவே ஜாஸ்திதாங்க, இவனுங்கள என்னங்க பண்றது ஒண்ணுமே புரியலை. இந்த மானங்கெட்ட மக்களும் கோட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் ஓட்டு போட்டு தொலைக்கிறானே ஒண்ணுமே புரியல. நீங்களாவது என்ன பண்றதுன்னு சொல்லுங்க
நான் தலைப்பு பார்த்து மழை நீர் சேகரிப்பு தொட்டிகட்ட சொல்ல போறிங்கனு நினைசேன் பதிவு பணமழை பற்றி என்று தெரியாம
நன்றி சகோதரி
அரசியல இதெல்லாம் சகஜமப்பா ...
:)
யம்மா சித்ரா உனக்கு ministryல சீட்டு வாங்கித்தரேன்.
இதற்கெல்லாம் ஒரு மாற்று...இது மாதிரி தலைவர்களை திரும்ப அழைக்க, அல்லது தேர்ந்தெடுக்காமல் இருக்க ஒரு வழி பிறக்கணும்..எதிர்காலமாவது நல்லா இருக்கணும்.
நான் கடவுளாக ஆசைப்படுகிறேன் தண்டனைகள் வழங்கவும் வேதனைகள் தீர்க்கவும்
தண்ணி தெளிச்சு வேப்பிலையால அடிச்சி துவைச்சிட்டிங்க.
ஆனா இவங்களை திருத்த முடியாது.
சே..எப்படி இப்படியெல்லாம் இந்த அரசியல்வியாதிகள் ஏமாற்றி பிழைக்கிறாங்களோ, கோவம் கோவமாக வருகிறது சித்ரா!!
நிறைய Blogs-ஐ Follow பண்ணினாலும், Comment பண்ணுவது மிகவும் குறைவு. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது வாசிக்கவென்று ஒதுக்கி உள்ளேன். இன்று எப்படியாவது எல்லோருக்கும் ஒரு வணக்கம் சொல்லுவது என்று நினைத்தேன். So, I am here =))
அவளிவள்னு நீங்க எழுதியதிலேயே உங்கள் கோவம் தெரிகிறது. அது என்ன பண மாலையா? என்னங்க நடக்குது இந்த உலகத்தில.
நானும் சிறு வயதில் இருந்தே பா அபிஷேக் மாதிரி அரசியல்வாதியாக வேணும் என்ற பேராசையுடன் அலைபவள். நண்பர்கள் குழாம் "லூசா நீ" என்று திட்டுவார்கள். ஒரே ஆறுதல் அட்லீட்ஸ் சினிமாவிலாவது என் ஆசையைப் பார்த்தேன். ஆற்றாமையினால் பெருமூச்சு மட்டும் தான் விட முடிகிறது.
ஆனாலும் எங்கள் பேரிலும் பிழை (பெரும் பிழை) இருக்கிறது தானே. எத்தனை பேர் சாக்கடையை சுத்தம் பண்ண ரெடியாக இருக்கிறோம். புதுசா யார் வந்தாலும் தெரிந்த பேயே ஓக்கே என்ற மன நிலையில் இருக்கிறோம். தெரியா ஏஞ்சலுக்கு ஒரு சந்தர்ப்பம் குடுக்கக்கூட தயாராக இல்லை. காதையும் கண்ணையும் இறுக்க மூடிக்கொண்டு தெரிந்த பேயே போதும் என்கிறோம். புதுசா யாராவது வந்தா மொட்டையில் மயிர் பிடுங்குவது மாதிரி தவறுகளை தேடுகிறோம். (மயிர் என்பது சிலோனில் முடியை குறிக்கும். கெட்ட வார்த்தை இல்லை).
எங்களிடையே எங்கே ஒற்றுமை இருக்கிறது ஒன்றாகப் போய் இவங்களை மாதிரியான ஆட்களை தூக்கி கடலில் போட
ஒருத்தனால் தனியாக இந்த சாக்கடை சமுத்திரத்தை சுத்தம் செய்ய முடியாது. மனித இனம் (மனிதம் உள்ளவர்களை தான் குறிப்பிடுகிறேன்) ஒன்றாக சேர்ந்து செய்ய வேண்டியது. எங்கள் குடும்பம் அதனால் நடுத் தெருவுக்கு வரலாம். ஆனாலும் தளராது போராட எங்களுக்கு தான் சக்தி இல்லையே.
அரசியல்வாதி மேல் கோவம் வரவில்லை. கையாலாகாத என்னைப் போன்றவர்களில் தான் எனக்கு கோவம் வருகிறது. சாகும் போது வீணில் வாழ்ந்தேனே என்று நொந்துகொண்டு சாகப் போவது நிச்சயம் . இந்த அளவுக்கு விஷச் செடியை வள விட்ட எங்களை வரலாறு மன்னிக்காது. இதில் மாயாவதி போன்றவர்களை குறை சொல்ல எங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது .
என்னா மேடம் , அவசப் பட்டு பதிவ போட்டிங்களே , இன்னு அவுங்க நாட்டு மக்களுக்கு எவ்ளோ செய்யபோறாங்க
//ஒரு தலித்து தொண்டர்கள் தங்கள் தலைவரை கொண்டாடுவது தானே இங்கே ஆடம்பரம்.//
நண்பரே இதுல ஜாதி பாக்காதீங்க.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க காசு இல்லைன்னு சொன்னாங்க இந்த மேடம் . இப்ப எங்க இருந்து வந்துச்சி இந்த காசு. யோசிங்க நண்பரே.. நீங்களும் நாங்களும் கொடுக்கற வரி பணத்தை எப்படி வீணடிக்கறாங்க அத பாருங்க
கருத்துக்கள் தெரிவித்து, வோட்டு போட்டு, பரிந்துரைத்து - ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
முதல் வருகை புரிந்தவர்களுக்கு, எனது வணக்கம்.
சூப்பர்
மாயாவதி
உ.பியின்
பாடாவதி.
நல்ல பதிவுங்க.
சூப்பர்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
இதெல்லாம் என்ன கொடுமைங்க... நம்ம அரசாங்கமும் கை கட்டி வேடிக்க தான் பாக்குது. எங்க போய் சொல்றது இதையெல்லாம்
very nice Akka., I like your thoughts..., I am really feel happy and feel proud to give comment to your article.. you are such a great talent with nice heart..
Thanks a lot ka..
Post a Comment