Monday, May 17, 2010

தங்க "மலை" ரகசியம்.

 யாரெல்லாம் அட்சய பாத்திரம் நிரம்ப தங்கம் வாங்கி வச்சிட்டீங்க? கையை தூக்குங்க, பார்க்கலாம்....... 
இப்போ, அப்படியே கையை மடக்கி தலையில் குட்டி கொள்ளுங்கள். மோதிர கையால் குட்டு வாங்கினால், நல்லதாம். அதான் சொன்னேன்.....
இந்த வார சிறப்பு செய்தியில் முக்கிய இடம் பெறுவது - "தங்கம், சொக்க தங்கம் - இந்த பொன்தங்கம,  அதிகம் சேர்க்கப்படும் பூமியை - முக்கியமாக பூமியில் அதிகமாக சேர்க்கப்படும் இடமான இந்தியா - அதிலும் விசேஷம் பாருங்க -  தென் இந்தியா பற்றி பார்ப்போம்.
 http://economictimes.indiatimes.com/markets/commodities/Akshaya-Tritiya-to-revive-gold-sales/articleshow/5878861.cms
சென்ற வருட அக்ஷய திருடிய (ஆங்கிலத்தில் Tritiya என்று டைப் செய்தால் வந்த வார்த்தை இதுதான்....ம்ம்ம்ம்........ திருத்தவா? வேண்டாமா? ம்ம்ம்ம்ம்ம்......) நாளில் - அந்த பொன்னான நன்னாளில் -   விற்பனையான 45 டன்கள் தங்கத்தை விட, இந்த வருடம் அதிகம் விற்பனை.  இதற்கு காரணம் என்னனு கேட்டாக்க, புல்லரிச்சு போயிரும். World Gold Council (WGC) அறிக்கை படி, இந்த வருட திருத்திய (அய்யோ, அய்யோ..... இப்போ டைப் செய்தால், இப்படி வருதே...... எப்போதான் மக்களை திருத்துறதோ?)  நாள், ஞாயிற்றுகிழமையில் வருவதால், வியாபாரம் அமோகம்.  

 SL Industries முதலாளி,  விவேக் ஜெயின்,  இந்த வருட ஆர்டர், போன  வருடத்தை  விட   25% - 30% கூடி இருக்குது என்று தனது Gold Refinery யில் இருந்து தங்கத்தை உருக்கி கொண்டே சந்தோஷமாகசொல்லி இருந்தார்.

ஏப்ரல் வரையில் மட்டுமே,  இந்தியாவில்  இறக்குமதி ஆகி இருக்கும் தங்கம் அளவு - 126 டன்கள். அம்மாடியோவ்....... இந்தியா ஏழை நாடென்று சொன்னால்................... போங்க சார், தமாஷ் பண்ணாதீங்க.........
"In January to April this year, gold imports into India were at 126 tonnes, up 74% on year, provisional data from the Bombay Bullion Association shows. Demand has revived in India after a dismal performance in 2009 when the worst monsoon in 37 years lowered gold sales with the year recording 339.8 tonnes of gold imports, down 19% from 2008."

  சென்ற வருடம் அக்ஷய திரிதிய நாளில் மட்டும் விற்கப்பட்ட 45 டன்கள் தங்கத்தில், 10 டன்கள் விற்கப்பட்டது   கேரளாவில் தானாம்.    ஆமாம், கேரளாவில் தான் கம்யுனிசம்,  பாசி பருப்பு பாயாசம் எல்லாம் கொடி கட்டி பறக்கும் என்று எதிர் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.  கம்யுனிசம் வாழ்க! கேரளாவில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் இடமாம். ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..... 


இதுவரை, தங்கம் வாங்குவதில் முன்னணி இடத்துக்கு தமிழ் நாடும் ஆந்த்ராவும் தான் போட்டி போட்டு கொண்டு இருந்தன. இப்பொழுது கேரளா, நம்மை பின்னுக்கு தள்ளி கொண்டு இருக்கிறது.  சீக்கிரம் ------ இந்த போட்டியில் தமிழ் நாடு  ஜெயிக்கணும்....... நம்ம அரசிய தலைவர்களின் குடும்பங்கள் எல்லாம் என்ன செய்யுறாங்க?  ஷ்ஷ்ஷ்ஷ்.......

அக்ஷய திரிதிய நாளை கடந்த ஆறு வருடங்களாகத்தான் கேரளா மாநிலத்தில் பெருவாரியாக அனுசரிக்க ஆரம்பித்து இருக்கிறார்களாம்.   முளைச்சு மூணு இலை விடல, அதற்குள் தமிழ் நாடு, ஆந்த்ராவை முந்துதே....... ஒரு ஓட்டோவில் போய், ரெண்டே பெனியனும் ஒரு வல்லிய ஒரேஞ்சும் வாங்கி வந்தால் மதி என்று இருந்தவர்கள்,  இப்போ அரை டன் தங்கம் வாங்கி வந்தால் மதி என்று மாறி விட்டார்களே!   எண்டே குருவாயுரப்பா!


பொன்னு பதுங்குற  இடங்களை பற்றி பார்த்தோம். இப்போ, பொன்னு ஒளியும்  இடம் பற்றி பார்ப்போம்.
http://en.wikipedia.org/wiki/United_States_Bullion_Depository

அமெரிக்காவில் இருக்கும்  கென்டக்கி மாநிலத்தில் இருக்கும் Fort Knox எனும் இடத்தில் தான் Gold Reserves உள்ள safe vault சுரங்கம் இருக்கிறது.  Federal Reserve Bank of New York சுரங்க தங்க சேமிப்புக்கு அடுத்த அதிகமான தங்க சேமிப்பு கிடங்கு இங்குதான் உள்ளது.  சுமார் 4600 டன் தங்கம் இங்கு உள்ளது. (நியூ யார்க் வங்கியில், சுமார் 5000 டன்) 


underground




 
அமெரிக்கா கணக்கு காட்டுதாம்.  கணக்கு........ கணக்கில் வராத தங்கத்தை, இந்தியாவில்  கணக்கு எடுத்தால், இந்த இடத்தை தென் இந்தியாவுக்குத்தான் உலக அளவில் தர வேண்டும் என்று, தம்பட்டம் தாயம்மா சொல்லி இருக்கிறாள். 
  
தங்கமான வாழ்த்து:  

கடந்த வாரம் முழுவதும் - நேரிலும், போன் மூலமாகவும், இ-மெயில் வழியாகவும், தங்கள் பதிவுகளில் இடுகைகள் மூலமாகவும் (குறிப்பாக தேனம்மை அக்காவுக்கும் வேலன் சாருக்கும்) - வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.  

என் கணவரும் எங்கள் நண்பர்களும்  surprise party ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள். ஐஸ்-கிரீம் அபிஷேகமும் முட்டை அபிஷேகமும் இனிது நடந்தது.  பார்ட்டி கலகல கலாட்டா .......... வீட்டுக்கு திரும்பி வர, கார் சீட்டில் பலூன் நிரப்பி அபிஷேகப் பொருட்கள் காரை நாஸ்த்தி பண்ண விடாமல், பத்திரமாக என்னை அனுப்பி வைத்தார்கள்.   சூப்பர் பவனி........!!!!!!  தேனம்மை அக்கா, எனக்கு "ஜாலி பலூன்" என்ற பட்டப் பெயர் வைத்தது சரிதானோ?


மேலும், ஒரு வாரம்,  நன்கு ஊர் சுற்றினோம்.  பொழுது போனதே தெரியவில்லை. பிறந்த நாள் (வாரம்) கொண்டாட்டத்தில் மூழ்கி விட்டதால் ப்லாக் பக்கம் வர முடியவில்லை.  யாருக்கும்,  பின்னூட்டம் இடவில்லை.  இனி தொடரும்.........

என்னை பொறுத்த வரையில், ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் சமயம்,  I celebrate life. I am alive to have a lively and lovely life.  இறைவனுக்கு புகழ்!  so , அடித்து தூள் கிளப்பிட்டோம்ல.  ........... 

 

115 comments:

எல் கே said...

belated birthday wishes chitra. have a gr8 year ahead.. valakam pola kalakungal

Ananya Mahadevan said...

சித்ரா,
வெரி சாரிப்பா.. உங்க பர்த்டே மிஸ் பண்ணிட்டேன். மெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ். பிலேட்டட் விஷஸ். :))
வழக்கம்போல கல கல ரிப்போர்ட். இனி அக்‌ஷய த்ரிதியைக்கு தங்கம் வாங்குறவங்களுக்கு ஒரு பல்பும் சேர்த்தே குடுக்கணும்!


// ஒரு ஓட்டோவில் போய், ரெண்டே பெனியனும் ஒரு வல்லிய ஒரேஞ்சும் வாங்கி வந்தால் மதி என்று இருந்தவர்கள், இப்போ அரை டன் தங்கம் வாங்கி வந்தால் மதி என்று மாறி விட்டார்களே! எண்டே குருவாயுரப்பா!
// சிரிச்சு சிரிச்சு வயித்த வலி! முடியல! எப்படி இப்படி எல்லாம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி உங்க வீட்டுக்காரர்கிட்ட எவ்ளோ தங்கம் வாங்குனீங்க..

Chitra said...

நான் தங்கம் வாங்கவில்லை என்று மிகவும் பெருமையுடன் சொல்லி கொள்கிறேன்.
:-)

நாடோடி said...

த‌ங்க‌ம‌லை ர‌க‌சிய‌த்தை இப்ப‌டி வெளிப்ப‌டையா போட்டு உடைச்சிட்டீங்க‌ளே!!!!!!!! லேட்டா இருந்தாலும் லேட்ட‌டா என்னுடைய‌ வாழ்த்து... உங்க‌ளுடைய‌ பிற‌ந்த‌ நாளுக்கு..

Kousalya Raj said...

தங்கத்தை பற்றி எவ்வளவு செய்தியா? அந்த பெண்ணிற்கு கழுத்து வலிக்க வில்லையா? உங்கள் எழுத்துக்கள் நகைச்சுவை இழையோட மிகவும் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து படிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். belated happy birthdayto you friend.

சாந்தி மாரியப்பன் said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்ரா. அடுத்த பிறந்த நாள் வரைக்கும் சொல்லலாமாக்கும் :-)))

அம்மாடியோ!!! இவ்வளவு தங்கத்தை சுமக்கிறதுக்கே பிரம்மா மாதிரி நாலஞ்சு கழுத்து ஆர்டர் செய்யணும் போலிருக்கே!!!.

Ahamed irshad said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. தங்க கட்டுரை அருமை...

///சென்ற வருடம் அக்ஷய திரிதிய நாளில் மட்டும் விற்கப்பட்ட 45 டன்கள் தங்கத்தில், 10 டன்கள் விற்கப்பட்டது கேரளாவில் தானாம். ஆமாம், கேரளாவில் தான் கம்யுனிசம், பாசி பருப்பு பாயாசம் எல்லாம் கொடி கட்டி பறக்கும் என்று எதிர் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. கம்யுனிசம் வாழ்க! கேரளாவில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் இடமாம்.///

கேரளாவாசிகள் இல்லாத இடம் ஏதுங்க... வளைகுடாவையே வளைச்சாச்சே அப்புறம் ஏன் தங்கம் அதிகம் வாங்கமாட்டார்கள்.... இன்னொன்று ஒரு வேலைக்குச் சேர்ந்தால் முதலில் பெஞ்சை தொடைப்பார்கள், இன்னொரு நாள் அந்த பெஞ்சிலேயே உட்கார்ந்து முதலாளியாகி இருப்பார்கள்... இதில் இருக்கும் "உள்குத்து" என்னான்னே தெரியலைங்க...

பத்மா said...

நல்ல பதிவு சித்ரா .நீங்களே (நாங்களே ) தங்கம். நமக்கு எதற்கு தங்கம் ?

ராஜ நடராஜன் said...

படங்கள் கண்ணைக் கட்டுதே!

(ஆனாலும் நான் தங்க பிரியன் அல்ல)

S Maharajan said...

//இதுவரை, தங்கம் வாங்குவதில் முன்னணி இடத்துக்கு தமிழ் நாடும் ஆந்த்ராவும் தான் போட்டி போட்டு கொண்டு இருந்தன. இப்பொழுது கேரளா, நம்மை பின்னுக்கு தள்ளி கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ------ இந்த போட்டியில் தமிழ் நாடு ஜெயிக்கணும்....... நம்ம அரசிய தலைவர்களின் குடும்பங்கள் எல்லாம் என்ன செய்யுறாங்க? ஷ்ஷ்ஷ்ஷ்.......//

அதானே?

சரி நீங்க வாங்குனதை சொல்லவே இல்லை

சைவகொத்துப்பரோட்டா said...

பிறந்த நாள் கொண்டாட்டங்களை முடித்து திரும்பி
இருக்கும் "தங்க" மங்கையை வலை உலகம் வரவேற்கிறது :))

Kasaly said...

தம்பட்டம் அம்மா நல்ல கலக்கலான பதிவு மென்மேலும்
தொடர வாழ்த்துகள், அப்புறம் அடங்காத பெண்கள் ஆசைகளுக்கு
அளவே இல்லை.இந்த பெண்களின் பொன் மோகம் தேசத்தின்
சாபம்....திருந்தட்டும்!!!!!!

dheva said...

அச்சச்சோ.... உங்க பிறந்த நாள்னு தெரியாம போச்சே....பரவாயில்லை .. இப்போவே.... சொல்லிக்கிறேன்...பதிவுலக சூப்பர் ஸ்டாரினிக்கு துபாய்...கொஞ்சம் வெட்டிப்பேச்சு தலைமை வாசகர் மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள்....

தங்கமான கட்டுரைக்கும்....வாழ்த்துக்கள் சித்ரா!

VELU.G said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

தங்கத்தைப்பற்றி தங்கமான தகவல்கள்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பிறந்த நாள் கொண்டாட்டங்களை முடித்து திரும்பி
இருக்கும் "தங்க" மங்கையை வலை உலகம் வரவேற்கிறது :)) //

இதை நான் க‌ன்னா பின்னாவென‌ வ‌ழிமொழிகிறேன்!!!!!!

கேர‌ளாவில் இன்றைய‌ த‌ங்க‌ விலை ரூ 1750/ கிராம் வ‌ர‌லாற்றில் முத‌ன் முறையாக‌

SUFFIX said...

இந்த அக்‌ஷய திருதி சமீபத்தில் தான் கேள்விப்படுகிறேன், இது எங்கிருந்து வந்துச்சோ தெரியல, என்ன தான் சொல்லுங்க சித்ரா பெரியவங்க ஒரு பழமொழி வச்சிருக்காங்க ’காச மண்ணுல இல்லாட்டி பொன்னுல போடு’!!

பிறந்த நாள் வாரம் இனிதே அமைந்ததில் எங்களுக்கும் சந்தோஷம்.

Kasaly said...

சிகப்புக் கலர் சேலைகள் தேங்கி கிடந்தால் அதற்கொரு அய்திகத்தை அவிழ்த்துவிடுவார்கள். உடனே ஆடு மாடுகள் போல பக்தர்கள் ஜவுளி கடைகளுக்குப் படையெடுப்பார்கள்.
அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த அட்சய திருதியை என்பதும்.
நகை வியாபாரி வைத்த நெருப்பு பற்றிக் கொண்டு எரிகிறது. அந்த ஒரு நாளில் மட்டும் தேங்கிக் கிடக்கும் நகைகள் எல்லாம் காலியாகிவிடும்.
அவனுக்குக் கல்லாப் பெட்டி நிரம்பும். கடன் வாங்கி பவுன் வாங்கிய பாமர மக்களுக்கோ வட்டிதான் வளரும். அடகு வைத்த பொருள்தான் மூழ்கும்.

Unknown said...

ஸ்.. ப்பா... எவ்ளோ தங்கம், நாமெலாம் பேருல வேண்ணா வச்சுக்கலாம்,

நாஸியா said...

வாழ்த்துக்கள் சகோதரி!

**

இப்பல்லாம் தங்கத்த பார்த்தாலே கடுப்பா இருக்கு! :(

யாசவி said...

Ohhh Wishes to you and many more returns :)

regarding gold reserve you can see in Hollywood movie

ஹேமா said...

சித்ராவுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.கட்டுரை தங்கம்தான்.எனக்குத் தங்கத்தில் ஈடுபாடு இல்லை சித்ரா.அதனால் கவலையில்லை.

Jaleela Kamal said...

ஹா ஹா சித்ரா இப்ப எல்லாம் தங்கத்த பார்த்தாலெ நெருப்பா சுடுது..


அநத கல்யான ஜோடிக்கு தங்கம் போதுமா?

Karthick Chidambaram said...

//நான் தங்கம் வாங்கவில்லை என்று மிகவும் பெருமையுடன் சொல்லி கொள்கிறேன் ....//

Ithu nallairukku

prince said...

கஞ்சிக்கி வழி இல்லாதவன் கிட்ட போயி தங்கமலை ரகசியம் சொல்றேன் வா! அப்படின்னூட்டு அடுத்தவன் அபேஸ் பண்ணி வச்சிருக்க தங்கத்தை காட்டினா வைத்தெரிச்சல் வராம என்னசெய்யுமாம்...


(anyway good post with lot more information.Thanks)

ஜெட்லி... said...

படத்தில் அந்த பெண் போட்டிருக்கும் தங்கம் எத்தனை டன்
இருக்கும்?? என் இப்படி போட்டு இருக்காங்க??

சுசி said...

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்ரா.

தமிழ் உதயம் said...

காலம் மாறும். இந்திய பெண்களின் தங்கத்தின் மீதான மோகமும் மாறும்.

செ.சரவணக்குமார் said...

நல்ல இடுகை. வாழ்த்துக்கள்.

malarvizhi said...

வாழ்த்துக்கள் ,சித்ரா. ஸ்.. ப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே!

Paleo God said...

அமெரிக்காவில் இருக்கும் கென்டக்கி மாநிலத்தில் இருக்கும் Fort Knox எனும் இடத்தில் தான் Gold Reserves உள்ள safe vault சுரங்கம் இருக்கிறது. //

இப்பத்தான் புரியிது நீங்க ஏன் வெட்டிக்கிட்டே பேசறீங்கன்னு!! :)

Anitha Manohar said...

vaazhthukkal.

நட்புடன் ஜமால் said...

துவக்கத்துலேயே குட்டு வச்சிட்டிய

தாங்களும் இங்கு பின்னூட்டியவர்கள் போலவும் பெண்கள் இருந்துவிட்டால் (தங்கம் வேண்டாமுன்னு) எங்களுக்கு ஜாலி தான்.

:)

நல்ல இடுக்கை

நேசமித்ரன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இடுகை பயனுள தகவல்கள் உள்ளாடக்கியிருக்கிறது

Yoganathan.N said...

பிலேடட் பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ரா ஜி. :)

அன்புத்தோழன் said...

Ada.. neengalum indha May dhaana..... Appo namellam ore katchi.... ;-) Na inniki dhanga porandhen..... Anyway, belated b'day wishes..... May God Bless You...

Menaga Sathia said...

பதிவு வழக்கம் போல் கலக்கல்!! படங்கள் கண்ணைக் கட்டுது...பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லபடியாக முடிந்ததில் சந்தோஷம்...

Muruganandan M.K. said...

தங்கத்தின் மவுசு இப்படி ஏறுகிறதா? புரியவில்லை. விரிவான தேடலுடன் அழகான பதிவு.
காலம் தாழ்த்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜெயந்தி said...

தங்கமான இடுகை.

Madhavan Srinivasagopalan said...

தங்க - மலை(குவியல்) சரி.. ரகசியம் ஏதுமில்லையே..
கட்டுரை எழுதியவிதம் நன்றாக இருக்கிறது..

Asiya Omar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்ரா.தங்க மலை ரகசியம் சுவாரசியமாக இருந்தது.அடிச்சி தூள் கிளப்பிட்டீங்க.விசில் சத்தம் ஒன்று தான் குறை.

அன்புடன் அருணா said...

/ I celebrate life. I am alive to have a lively and lovely life./
That's the spirit Chitra!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு உங்க பயணமும்
சாரோட அறிமுகமும்..:)
இருந்தாலும் நம்ம ஊரு படம் மாதிரி இல்ல ஹீரோ அறிமுகம்..

பிரபாகர் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி!

பெருமூச்சுதான் விடமுடியுது இன்னிக்கு தங்கம் விக்கிற விலைக்கு!

பிரபாகர்...

அன்புத்தோழன் said...

Jaleela said...

//அநத கல்யான ஜோடிக்கு தங்கம் போதுமா?//

ஜலீலாக்கா... இது உங்களுக்கே அநியாயமா தெரில.... அதென்ன போதுமா கல்யாண ஜோடிக்குனு கேக்குறீங்க..... மாப்ளைய கொஞ்சம் பாருங்க.... பாவமா இல்ல... நியாயமா பாத்தா போதுமா கல்யாண பொண்ணுக்குன்னு மட்டும் தன் கேட்டுருக்கணும்.... ;-)

Anonymous said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்ரா.
உங்கள் பதிவைப் படிச்ச பிறகு தங்கத்தைப் பார்த்தாலே
அலர்ஜியா இருக்கு.. (அட நம்புங்கப்பா)

வெங்கட் said...

நீங்க சொன்னது சரிதானுங்க..
உங்களை மாதிரியே எல்லா
பொண்ணுங்களும் இருந்திட்டா
எவ்ளோ நல்லா இருக்கும்..!!!!

settaikkaran said...

பின்னூட்ட திலகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவிப்பதிலும் பின்தங்கி விட்டேன். லேட்டானாலும் அக்ஸப்ட் பண்ணிக்கோங்க! :-)

நாளொரு பதிவும் பொழுதொரு பின்னூட்டமாய் நீடூழி வாழ்க!

vasu balaji said...

இல்லைங்களே. தங்க விற்பனை டல்லாமே. அதுவும் மூக்குத்தி, கம்மல் தான் அதிகமாம். கேக்கவே சந்தோசமா இருந்திச்சி. :))

Jerry Eshananda said...

தங்கமான வாழ்த்துகள்.

சுந்தரா said...

வாழ்த்துக்கள் சித்ரா!

நிறைய நகைச்சுவையும் தெரிஞ்சுக்கவேண்டிய விஷயங்களுமாக பதிவு ரொம்ப நல்லாருக்கு.

க.பாலாசி said...

//நம்ம அரசிய தலைவர்களின் குடும்பங்கள் எல்லாம் என்ன செய்யுறாங்க? ஷ்ஷ்ஷ்ஷ்.......//

நம்மாளுங்க அப்டியொன்னும் கேனைங்க இல்லையே... எப்டில்லாம் மறைச்சி வைக்கனுமோ அப்டில்லாம் வெச்சிருப்பாய்ங்க...

goma said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தங்கமே தங்கம்

முகுந்த்; Amma said...

Belated Happy birthday wishes Chitra.
Your post related to indian obsession towards gold is super.

good one.

ரிஷபன் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.. பளபளப்பாய்..

ராமலக்ஷ்மி said...

தலைப்பும் வெட்டிக் கொடுத்த விவரங்களும் அருமை சித்ரா:)!

பிறந்த தினம் குதூகலமாய்க் கழிந்தது அறிந்து சந்தோஷம். மீண்டும் என் வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

Belated birthday wishes, Chithra!
May you have always happiness and pieceful life with full of laughter!!

மாதேவி said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ரா.

அக்ஷய திரிதிய தங்கம் பெண்கள் விழித்துக்கொண்டால் சரி்.

Prasanna said...

யய்யாடி :)

ஆடுமாடு said...

'தங்க'மான ஸ்டோரி.

Mythili (மைதிலி ) said...

தங்கத்தை பற்றி புதிய தகவல்கள்... ம்ம்ம்.... நல்லா இருக்கு. எனக்கு தங்கத்தில் ஆர்வம் இல்லாமைக்கு கடவுளுக்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்க மலை ரகசியம் என்பது இதுதானோ??

கும்மாச்சி said...

பிறந்த நாள் நல வாழ்த்துகள் சித்ரா. உங்கப் பதிவ வைத்து ஒரு தொடர் பதிவு போடலாம் என்று ஓர் யோசனை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஏயப்பா இவ்வளவு தங்கமான மனசா உங்களுக்கு.. எவ்வளவு தங்கத் தகவல். அசத்திட்டீங்க சித்ரா...

நான் எப்பவும் லேட்டுதானா.. இன்னக்கியும் லேட்டா வந்திட்டேனே சே..

Chitra said...

தொடர் பதிவு...... தங்கமான யோசனை.
:-)

நசரேயன் said...

டீச்சர் உங்க பிறந்தநாளுக்கு நாங்க விருந்து வச்சிக்கிறோம், பணத்தை மறக்காம அனுப்பி வையுங்க

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

அந்த கல்யாண பெண்ணை கடதிடலமா கா !!!!

belated birthday wishes ka,,,,

Sukumar said...

வாழ்த்துக்கள் அக்கா...!!

'பரிவை' சே.குமார் said...

தங்கத்தைப்பற்றி தங்கமான தகவல்கள்.

ILA (a) இளா said...

//நியூ யார்க் வங்கியில், சுமார் 5000 டன்) ///
இது தெரியாம அது மேலயே நடந்து எல்லாம் கூட போயிருக்கேன். அடுத்த முறை போனாக்கா தொட்டு கும்பிட்டுக்கனுங்க

Unknown said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

சிநேகிதன் அக்பர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ரா.

தங்கம் பற்றிய கட்டுரை அருமை.

சிநேகிதன் அக்பர் said...

@அஹமது இர்ஷாத்

//முதலில் பெஞ்சை தொடைப்பார்கள், இன்னொரு நாள் அந்த பெஞ்சிலேயே உட்கார்ந்து முதலாளியாகி இருப்பார்கள்... இதில் இருக்கும் "உள்குத்து" என்னான்னே தெரியலைங்க...//

அதெல்லாம் தொழில் ரகசியம் பாஸ்.

அரசூரான் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்... பிறந்த நாள் (வாரம் இல்ல மாதம்... நாங்க எல்லாம் வாழ்த்து சொல்லனும்ல)

தங்க "மலை" ரகசியம் கிடக்கட்டும், நீங்க போட்ட படத்தில் ஒரு தங்கமணி (அவ்வ்வ்) இருக்காங்களே அவங்க வீட்டு முகவரி கொடுங்க... சும்மா... அவங்க போட்டிருக்கிற தங்க "மாலை" ரகசியம் தெரிஞ்சிக்கலாமேன்னு ஒரு ஆசை.

வருண் said...

*** I celebrate life. I am alive to have a lively and lovely life. இறைவனுக்கு புகழ்! so , அடித்து தூள் கிளப்பிட்டோம்ல***

I wonder, how would you feel if your husband (Mr. Solomon) buys you couple of Golden maple coins as a birthday gift?

http://en.wikipedia.org/wiki/Canadian_Gold_Maple_Leaf

Gold is just a brainless heartless metal but for some reason I love gold too! May be because I am an "Indian"? :)

Anyway, belated happy birthday wishes to you, Mrs. Solomon :)

Chitra said...

Mr.Varun, Solomon will never do the error of buying me something, which I would not appreciate. :-)

வருண் said...

***Chitra said...
Mr.Varun, Solomon will never do the error of buying me something, which I would not appreciate. :-)

May 17, 2010 2:34 PM***

I guess it was only my mistake! :) I am learning, Chitra! Take it easy :)

Chitra said...

I am. I am. ha,ha,ha,ha,ha....
:-)

Alarmel Mangai said...

இதெல்லாம் நகைக் கடைக்காரங்க செய்யற சதி...
போட்டோக்களில் உள்ள மணப் பெண்களைப் பார்த்து சிரிப்பதா, அழுவதான்னு தெரியலை...

எப்போது திருந்தும் இந்த உலகம், தங்கமே ஞானத் தங்கமே....

ஜெய்லானி said...

////நான் தங்கம் வாங்கவில்லை என்று மிகவும் பெருமையுடன் சொல்லி கொள்கிறேன் ....//


தம்பட்டம் தாயம்மான்னு பேரு வச்சிட்டு இப்படி சொல்வது சரியில்லையே...

Chitra said...

தம்பட்டம் தாயம்மா வேறு - நான் வேறுங்க....... ஹையோ..... ஹையோ.....!

Thenammai Lakshmanan said...

தாங்ஸ்டா சித்து..:)) வாழ்த்துக்கள்.. தங்க மகளே... அடிக்க வராதே,, ஹிஹிஹி

சொல்லச் சொல்ல said...

// யாரெல்லாம் அட்சய பாத்திரம் நிரம்ப தங்கம் வாங்கி வச்சிட்டீங்க? கையை தூக்குங்க, பார்க்கலாம்.......
இப்போ, அப்படியே கையை மடக்கி தலையில் குட்டி கொள்ளுங்கள்.//

"செம பஞ்ச்"

SpicyTasty said...

Belated B'day wishes chitra. You have agreat blog and so happy to see a tamil blog. Feels like home. Now you are tempting me to buy some gold :-) Thats a very informative post...

mightymaverick said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல வேளை தங்கத்துக்கு ஒரு அட்ஷய திரிதியை என்று கொண்டு வந்தது போல், வெள்ளிக்கு ஒரு தினம், வைரத்துக்கு ஒரு தினம் என்று கொண்டு வராமல் இருக்கிறார்களே... சாப்பாட்டுக்கு சிங்கி அடித்தாலும், தங்கத்துக்கு பொங்கி எழும் இந்தியர்கள் வாழ்க... 10 ஆண்டுகளுக்கு முன் வரையில் இந்த திரிதியை பற்றி தங்க வியாபாரிகளுக்கே தெரியாது... யாரோ கொளுத்திப் போட்டு இன்னிக்கு நல்லா பத்தி எரியுது... நானும் இதுக்கு முன்னே ஒரு திரிதிய நாளில் தங்கம் வாங்கினேன்... ஆனால் எனக்கு ஒண்ணும் அப்படி எல்லா செல்வங்களும் கொட்டிக்கிட்டு வரவில்லை என்பதினால், நான் திருந்தி, தேவைப்படும் பொருட்களில் மட்டுமே முதலீடு செய்கிறேன். என்னை திருத்திய திரிதியைக்கு ஜே.

goma said...

அமெரிக்காவில் இருக்கும் கென்டக்கி மாநிலத்தில் இருக்கும் Fort Knox எனும் இடத்தில் தான் Gold Reserves உள்ள safe vault சுரங்கம் இருக்கிறது. Federal Reserve Bank of New York சுரங்க தங்க சேமிப்புக்கு அடுத்த அதிகமான தங்க சேமிப்பு கிடங்கு இங்குதான் உள்ளது. சுமார் 4600 டன் தங்கம் இங்கு உள்ளது. (நியூ யார்க் வங்கியில், சுமார் 5000 டன்)

அதானே பார்த்தேன் .தங்க சேமிப்புக் கிடங்கில் வசிக்கும், சித்ரா தங்கத்தைப்பற்றி எழுதியதில் ஆச்சரியம் இல்லை

பித்தனின் வாக்கு said...

very very hearty belated birthday to u. wishs to kunalan sir also.
realy very sorry, due to work presure and system availability i unable to come blog side. sorry i missed ur birthday.

neenga thangam vaangavillai, but unga husband ungalukkku theriyaama oru 80 kg thangam vankivittar. theriyuma?????

பித்தனின் வாக்கு said...

i am realy sorry chitra, inga adikkara veyilla enakku mandai kulambi vittathu. instead of solaman, i mention as kunalan. realy sorry.

Jaleela Kamal said...

Jaleela said...

//அநத கல்யான ஜோடிக்கு தங்கம் போதுமா?//

ஜலீலாக்கா... இது உங்களுக்கே அநியாயமா தெரில.... அதென்ன போதுமா கல்யாண ஜோடிக்குனு கேக்குறீங்க..... மாப்ளைய கொஞ்சம் பாருங்க.... பாவமா இல்ல... நியாயமா பாத்தா போதுமா கல்யாண பொண்ணுக்குன்னு மட்டும் தன் கேட்டுருக்கணும்.... ;-) //


அன்பு தோழன் மாப்பிள்ளைக்கு உள்ளுக்குள்ள பயம்,. கல்யாண [பொண்ணு டிரெஸ் மாற்றுவது போல் , நகையையும் தினம் மாற்றனும் வேற டிசைனில் வேண்டு என்றூ கேட்டுட்டா?? ஐய்யகோ

ஹுஸைனம்மா said...

//இப்போ அரை டன் தங்கம் வாங்கி வந்தால் மதி என்று//

மதி என்றால் அறிவு என்றும் அர்த்தம் உண்டே, அதனாலதான் போல!!

அதுசரி, கேதன் தேசாய் மலையாளியா? ;-)))

சசிகுமார் said...

இந்த பெண்மணியின் படத்தை எங்கே இருந்து பிடித்தீர்கள். அவர்களை விட அந்த தங்கம் வெயிட்டாக இருக்குமோ. "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" படத்திலேயே தெரிகிறது. அழகுக்காக போடும் நகைகள் அழகையே கெடுக்கிறது இங்கே.

ஸாதிகா said...

நல்ல தகவல்.பயனுள்ள இடுகை.நானும்தான் உங்கள் இடுகையைப்படித்துவிட்டு முதல் பத்து பின்னூட்டங்களுக்குள் போட்டு விடணும் என்று முயற்சி பண்ணுகிறேன்.முடியவே இல்லையே.

ஸ்ரீராம். said...

அட..அந்த நெக்லஸ் பார்த்தாலே பயமா (?) இருக்குங்க...

எட்வின் said...

வாழ்த்துக்கள் அக்கா

//சீக்கிரம் ------ இந்த போட்டியில் தமிழ் நாடு ஜெயிக்கணும்....... நம்ம அரசிய தலைவர்களின் குடும்பங்கள் எல்லாம் என்ன செய்யுறாங்க? ஷ்ஷ்ஷ்ஷ்.......//

புதுசா எந்த ஐ.பி.எல் டீம் வாங்கலாமுன்னு யோசனைல இருக்காவளோ!!! இல்லன்னா... என்ன சினிமா எடுக்கலாமுன்னு யோசிக்காவளா இருக்கும்.

அண்ணாமலை..!! said...

அட்சய திரிதியை ஆரு கெளப்பி விட்டான்னு தெரியலை..!!
தமிழ்நாடு, ஆந்திராவெல்லாம் அல்ரெடி ஃபுல்லுன்னு நினைக்குறேன்..!!
அதான் கேரளா முந்திக்கிட்டு இருக்கு...

Radhakrishnan said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உலகம் பூராவும் இந்த தங்கமலை ரகசியம் பிரபல்யம் தான்.

தாராபுரத்தான் said...

தங்கமலை ரகசியம் தெரிந்துகிட்டேன்ம்மா..நலமா?

Matangi Mawley said...

hey.. belated happy b'day first of all.. :)

unmai thaan.. ennaa .. say oru 3 varusham munnadi koodi ippadi oru craze illa... aktchaya thrithiyangara perla! thideernu mulaiththa saamiya pola engernthu thaan ippadi mulaiththathu ithunu puriyala!

சௌந்தர் said...

தங்கம் விலை என்ன ஏறினாலும் வாங்குகிறார்கள் மக்கள்

தக்குடு said...

kalyanam panninda kerala ponnaithaan pannikkanumpaa!!..:)))

Chitra said...

தங்கமான கமெண்ட்ஸ், மற்றும் விலை மதிப்பில்லா வோட்டுக்கும் பரிந்துரைக்கும் நன்றிகள் பல.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

mightymaverick said...

//kalyanam panninda kerala ponnaithaan pannikkanumpaa!!..:))) //



தம்பி தகடு (தக்குடு), இது உங்கண்ணன் அம்பிக்கும், அந்த வைஷுவிற்கும் தெரியுமா?

Vishy said...

Many many more happy returns Chithra.

I am surprised about the comments about Gold. It is a great investment tool. அட்சய திருதியையோ ஏதோ ஒரு காரணமோ, தங்கம் வாங்குவது ஒரு sensible investment. பங்குச் சந்தையிலும், சீட்டுக் கம்பெனிகளிலும் பணம் போடுவதை விட தங்கமாக வாங்குவது நல்லது. காரிலும் உடைகளிலும் பணத்தை செலவழித்து அந்தஸ்தை காண்பிப்பதை விட நகையாக வாங்குவது better. Literalaa போட்டுகிட்டு “மினுக்குகிட்டு” திரிஞ்சாலும் மதிப்பு குறையாது.
http://en.wikipedia.org/wiki/Gold_as_an_investment

சரி, இதைப் படிச்சுட்டு என்னோட மனைவி என்னோட புன்”னகை” யை புடுங்காம இருந்தா சரி..

Chitra said...

தங்கம் வாங்குவது ஒரு investment ஆக இருக்கலாம். ஆனால், திரிதிய நாளில் என்ற மூட நம்பிக்கையை வளர்க்கும் பழக்கத்திற்காக வாங்குவதும், வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்காக வாங்குவதும் எப்படி சரி என்று சொல்ல முடியும்?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹாய் சித்ரா.. எப்பவும் போல் பின்னிடீங்க..
நானும் தங்கம் எல்லாம் வாங்கலை..
என் கணவர், அட்சய திரிதியை... நம்மள விட கடைக்காரனுக்கு ரொம்ப நல்லதுன்னு, சொன்னார்.. கரெக்ட் தான்.. விற்பனை விவரம் பார்த்தா அப்படி தான் தெரிது :P :ப
வாழ்த்துக்கள்.. :)

Vishy said...

அட்சய திருதியை என்பது மூடநம்பிக்கை என்பதை விட இது வியாபார உத்தி. மக்களை நம்ப வைக்கும் விளம்பரம்.. இதுவும் Mother's day, Father's day போலத்தான்.. முடிந்தால் தினம் தங்கம் வாங்குங்கள்.. முடியாவிட்டால், இந்த பெயரை முன்னிட்டாவது தங்கம் வாங்குங்கள்.. தீபாவளி, பொங்கல் இது எல்லாமுமே ஒரு வகையான உத்திதான்.. புதுத்துணி உடுத்த, சந்தோஷமாய் இருக்க பெரியவர்கள் கண்டுபிடித்த காரணம்.. அட்சய திருதியை அன்று எல்லாரும் தண்ணி அடியுங்கள்னு சொன்னாதான் தப்பு.. தங்கம் வாங்குங்கனு சொன்னா.. பல்லிருக்கறவங்க பக்கோடா சாப்பிடட்டுமே..

அம்பிகா said...

\\பிறந்த நாள் கொண்டாட்டங்களை முடித்து திரும்பி
இருக்கும் "தங்க" மங்கையை வலை உலகம் வரவேற்கிறது \\
:-)))

Priya said...

படங்களுடன் விளக்கங்களும் நல்லா இருக்கு.
Belated B'day wishes Chitra.(என்ன நல்லா என்ஜாய் பண்ணிங்களா?)

கண்மணி/kanmani said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

படம் போட்டு வயித்தெரிச்சலைக் கிளப்புவது ஞாயமா

Priya dharshini said...

Ungal blog miga arumai..full of positive energy..yarukku pidikathu...my happy birthday wishes to u...

thiyaa said...

super
gold is good

அன்புடன் மலிக்கா said...

லேட்டா சொன்னாலும் வாழ்த்து வாழ்த்துதான்[இப்படிதான் சொல்லிக்கோனும் இல்லையின்னா டீச்சர் அடிப்பாங்க]

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம்.

அப்பாடி!!!!!!!!!!!!!!!

இந்த தங்கம் போதுமா
இல்லை இந்தபொண்ணுக்கு
இன்னும் தங்கம் வேணுமா.

தங்தா வேணாமுன்னா சொல்லிருவோம்..

ஜெயந்தி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

Jayanthy Kumaran said...

Dear Chitra,
Thanks for your visit to 'Tasty Appetite' n for your sweet comments.
You have a very informative space here..Am your new follower now..;)
Will be visiting here often.
And,
Some awards are waiting for you in my blog. Plz stop by to collect them.

பின்னோக்கி said...

சுவாரசியமான செய்தி.

அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு அனுப்பும் பணத்தில், தங்கம் வாங்குவதாக ஒரு செய்தி. உண்மையா ? :)