Thursday, June 17, 2010

டீ கடை பெஞ்சு

அப்படியும் இப்படியுமா, வாரத்துக்கு ஒரு பதிவு/இடுகை என்று ஆகி விட்டது..... எப்போவாவது ரெண்டு.
வேலை பளு அதிகமாய் இருக்கிறது என்றாலும் "வெட்டி பேச்சு" பேசிய வாய், சும்மா இருப்பேனா என்கிறது.

சரி, அப்போ எதையாவது எழுதி தொலை என்று மனம் சொன்னாலும், என்ன எழுதுறது - எதை எழுதுறது  - எதை பத்தி எழுதுறதுனு ஒரே குடைச்சல்........ ஓகே,  அந்த "thinking process"  பற்றி எழுதுனா என்னானு தோணுச்சு......

1 .  சமையல் குறிப்பு:

"திருமணத்துக்கு முன், அம்மா வீட்டு சமையலில் மூக்கு முட்ட சாப்பிட மட்டும்  தெரிந்து வைத்து இருந்தவள், திருமணத்துக்கு பின் வேறு வழி இல்லாமல்  சமைக்க வந்தவள், நான்.    பசி பத்தும் செய்யும் - என்னை சமைக்க வச்சது.  இப்போ ஓரளவு தேறிட்டேன்......   நம்ம பதிவுலக சமையல் மகாராணிகள், ராணிகள், இளவரசிகள் அளவுக்கு இல்லைனாலும்,  ஏதோ சபையில அரசிக்கு பின்னால இருந்து சாமரம் வீசும் - விசிறி கொண்டு இருக்கும் - அந்த பெண்கள் அளவுக்கு சமைக்கிறேன் என்று பேசிக்கிறாங்க..... வேற யாரு,  என் சமையலை சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைத்த பாவப்பட்டவங்க தான்..... இதுல குறிப்பும் போட்டேன்னு வைங்க....... நாட்டுல கரண்டி பஞ்சம் வர வரைக்கும், எல்லோரும் கையுல கரண்டி தூக்கிக்கிட்டு அடிக்க வருவீங்க..... வேணாம்......... விட்டுருவோம்.

2 .   சினிமா விமர்சனம்:

வீட்டுல DVD ல பாத்தாலும் சரி, தியேட்டர்ல பாத்தாலும் சரி -  ஒரே kids friendly movies என்கிற அளவில்,  இப்போ  வீட்டு நிலவரம்.....   எழுதுனா Shrek 4 அல்லது The Spy Next Door பத்திதான் விமர்சனம் எழுதணும்..... அந்த படங்கள் மட்டும் பாக்குற அளவில் இருக்கிறவங்க யாரும் என் பதிவுகளை வாசிக்கிறதில்லை என்று சர்வே சொல்லுது..... அவ்வ்வ்வ்.....

3 .  குழந்தை வளர்ப்பு:

இதை பத்தி நான் சொல்றதை விட,  "நொய், நொய்னு"  அரிச்சி எடுக்கிற அம்மாவை சமாளிப்பது எப்படி என்று என் பிள்ளைகள் எழுதுனா இன்னும் நல்லா இருக்கும் என்பது என் குழந்தைகளின் தாய் மாமா - அதாங்க, என் தம்பி என்கிற தங்க கம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை........ (இருடா டேய்......உன்னை நேரில் வந்து கவனிச்சுக்கிறேன்....)

4 .  கணவன் மனைவி   உறவு:

என் கணவருக்கு ஏத்த மாதிரி "உப்பு புளி காரம்" போடத்தான் எனக்கு தெரியும்.  பக்கத்து வீட்டுக்காரவுகளுக்கு ஏத்த மாதிரி "சுண்டல் - ஊறுகாய்" போட எனக்கு தெரியாது. எனக்கு தெரியாததை பத்தி நான் எப்படி எழுத முடியும்?

5 .  கவிதை:

இது வரைக்கும் மூன்று கவிதைகள் (அப்படின்னு நினைச்சிக்கிட்டு), என் ப்லாக்ல போட்டு இருக்கேன்.  என்னை தெரிஞ்சவுங்க,   நம்ம தோழி மனது நோகக் கூடாதுனு, "ஆஹா..... கவிதை அருமை. வாழ்த்துக்கள்!" என்று வெளியே சிரிச்சிக்கிட்டு,  உள்ளே அழுதுட்டு சொல்லிட்டு போய்ட்டாங்க...... என்னை தெரியாம, கவிதைனா என்னனு தெரிஞ்சவுங்க, "ஆஹா..... இந்த வசனங்கள் அருமை.  எந்த படத்துல வருது? பகிர்வுக்கு நன்றி," என்று "உண்மை"யை சொல்லிட்டு போய்ட்டாங்க.... அப்புறம், என்ன செய்ய? நம்ம கவுஜையை நாம் தான் அழகு பாக்கணும்னு, Blog archives ல "கவிதை" னு தனியா label போட்டு,  frame மாட்ட வேண்டியதா போச்சு...  இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்த பக்கம் போக வேண்டாம்னு இருக்கேன்.

6 .   sports:

கிரிக்கெட்,  soccer , பாஸ்கட் ball , ஹாக்கினு எழுதுற குரூப் - விளையாட்டின் வரலாறு, பூகோளம், அறிவியல், கணக்குனு பக்கம் பக்கமா எழுதி பின்னி பெடல் எடுக்கிறாங்க.... நான் இன்னும் விளையாடுற கண்ணாமூச்சி,  Sequence கார்டு கேம்,  Pictionary , Taboo , Guesstures எல்லாம்  டிவி ல நேரடி ஒளிபரப்பு ஆகுற அளவுக்கு எப்போதான் வரப் போகுதோ?  ச்சே.....

7 .  இந்திய அரசியல் :

நாட்டு நடப்பு, அவல நிலை, அவசர நிலை பத்தி எல்லாம்,  என் ப்லாக்ல -  நான் பாலாய் பொங்கி - பன்னீராய் தெளிச்சி எழுதுனாலும் எழுதலனாலும் - அது பாட்டுக்கு ஒரு பக்கம் நாறிக்கிட்டு தான் இருக்குது....... போபால் gas வழக்குல, ஏற்கனவே நீதிபதிகள் காமெடி பண்ணிட்டாங்க..... என்னை மாதிரி ஆளுகளுக்கு அவங்க வேலை வைக்கல.
முதல, என் மனசாட்சி என்னை பாத்து கேள்வி கேக்குது: "இந்தியாவுல election நேரத்துல எல்லாம், நீ இங்கே குப்பை கொட்டிக் கிட்டு இருக்கே,  அங்கே உன் பெயருல தவறாம ஏதோ ஒரு கட்சியில இருந்து ஒரு ஆளு போய் கள்ள வோட்டு போட்டுட்டு போறாங்க...... அதுக்கே, நீ கண்டுக்காம இருக்கியே?  உனக்கே இது அசிங்கமா தெரியல?"
இருங்க, ஒரு நிமிஷம். இந்த ipod volume  இப்படி கூட்டி வச்சுட்டேன் என்று வைங்க,  "டொட்ட டோய்ங் ..." சத்தத்துல,  மனசாட்சி சத்தம் கேக்கல.  அப்பாடி!

8 .  பதிவுலக அரசியல்:

அப்படின்னு ஒண்ணு இருக்குறதே, சிலர் சொல்லி தான் எனக்கு  தெரிஞ்சுது. - ஆனால் புரியல.  தெரியாத மேட்டர் மட்டும் இல்ல, புரியாத மேட்டர் கூட எனக்கு வேண்டாம்.  இப்போதைக்கு, பதிவுலகம் - ஒரு தோழமை கட்சி.

9 . உலக பிரச்சினைகள்:

ப்லாக் டீ கடை பெஞ்சுல - எல்லாத்தையும் பத்தி பேசலாம் - உலக ஞானம் வளத்துக்கலாம் - என் சிந்தனைகளை கொட்டிக்கலாம் - என் ஆதங்கத்தை தெரிவிச்சிக்கலாம் - விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் - தகவல் பகிர்ந்துக்கலாம் - கோபப்படலாம் - நொந்துக்கலாம் -  சரி, சரி  - பிரச்சினைகளை தீர்த்துக்க முடியுமா? முற்று புள்ளி வைக்க முடியுமா?  ஒரு பதிவு கணக்குக்கு அப்போ அப்போ ஏதாவது எழுதிடணுமா?  இல்லைனா, உலக அக்கறை - கரிசனம் இல்லைன்னு ஆகி விடுமா?  ம்ம்ம்ம்........

10 .  டி.வி. நிகழ்ச்சிகள்:

நித்தி மேட்டர்ல சன் டிவி எப்போ ஒரு வரைமுறை இல்லாமல் தணிக்கை பற்றி கவலைப்படாமல் - குழந்தைகள் பார்ப்பார்களே என்ற கவலை இல்லாமல் நடந்து கொண்டதோ, அன்றே - சன் டிவி connection கான்செல் செய்து விட்டேன்.    - கமென்ட் போட்டுக்கிட்டு - பதிவுல நொந்து கிட்டு - புலம்பிக்கிட்டே சன் டிவி பாக்கிறதை விட - இந்த புறக்கணிப்பு என் மனசுக்கு ஆறுதலா இருக்குது..... சில விஷயங்களில் வெட்டி பேச்சு  இல்லை. நேரடி action எடுக்கிறது என் ஸ்டைல். இப்படி எல்லோரும் கட் பண்ணி இருந்தால், சன் டிவியோ மற்ற டிவியோ மக்கள் சொல்ற மாதிரி கேட்டுத்தானே ஆகணும்.

தம்பட்டம் தாயம்மா:  "அடியே சித்ரா!  நுனிப்புல் மேய்ஞ்ச மாதிரி மட்டும் வச்சுக்கிட்டு, முக்கியமான பத்து டாபிக் பத்தி முழுசா deal பண்ணாம, எப்படி ஏழு மாசத்துல 74 இடுகைகள் போட்டு வந்துருக்கே?  அப்போ வெட்டி பேச்சு என்று இருக்கிற உன் ப்லாக்ல என்னதான் எழுதிக்கிட்டு இருக்கிற?"

ஆஆஆஆஆஆ........... அதான் இன்றைய வெட்டி பேச்சு இடுகை...... எப்பூடி?

86 comments:

எல் கே said...

vettipecchu arumai

Unknown said...

சமையல்...எங்க வூட்டுலயும் அதே ..
பிள்ளைகள் அம்மா செய்யும் டார்ச்சர் .. அந்த தம்பி சரியா சொல்லிருக்கு ..
கணவன் - மனைவி- உப்பு, புளி, மிளகா ..
அரசியல்- (பதிவுலக)
என்னமோ சொல்ல வந்தீங்க..
ஒண்ணுமே சொல்லல.. இதுக்குப் பேருதான் பூசி மொழுகுறதா..

Chitra said...

இல்லைங்க, பூசி மெழுகல..... நான் கருத்து சொல்ற அளவுக்கு இந்த விஷயத்துல, எனக்கு அலசி ஆராய தெரியல.... தெரியாததை ஒத்துக்கணும்ல. அதான் சொல்லி இருக்கேன். :-)

எல் கே said...

//இதை பத்தி நான் சொல்றதை விட, "நொய், நொய்னு" அரிச்சி எடுக்கிற அம்மாவை சமாளிப்பது எப்படி என்று என் பிள்ளைகள் எழுதுனா இன்னும் நல்லா இருக்கும் என்பது என் குழந்தைகளின் தாய் மாமா - அதாங்க, என் தம்பி என்கிற தங்க கம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை........ (இருடா டேய்......உன்னை நேரில் வந்து கவனிச்சுக்கிறேன்....)/

ella thangamanigalum padika vendiya ondru

Chitra said...

////ella thangamanigalum padika vendiya ondru////


..... ha,ha,ha,ha..... sariyaa pochchu!

சசிகுமார் said...

அக்கா தம்பிக்கு ஒரு டீ சொல்லுங்க, அப்படியே டீ குடிச்சிகிட்டே படிப்போம் என்ன எழுதி இருக்கீங்கன்னு.

Paleo God said...

மிக்க நன்றி தாயம்மா!! :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹிஹி.. குழந்தை வளர்ப்பு.. உங்க தம்பி சொன்னது தான் சரிங்கோ..!! :D :D

// பக்கத்து வீட்டுக்காரவுகளுக்கு ஏத்த மாதிரி "சுண்டல் - ஊறுகாய்" போட எனக்கு தெரியாது//
ஹா ஹா... சித்ரா..... :D :D
என்னங்க இது.. இப்படி போட்டு தாளிக்கிறீங்க..;) ;)

//என்னை தெரிஞ்சவுங்க, நம்ம தோழி மனது நோகக் கூடாதுனு, "ஆஹா..... கவிதை அருமை. வாழ்த்துக்கள்!" என்று வெளியே சிரிச்சிக்கிட்டு, உள்ளே அழுதுட்டு சொல்லிட்டு போய்ட்டாங்க...... //

ஸப்பாஹ்ஹ...முடியலங்க... :D :D
உங்களிடம் என்னவெல்லாம் திறமை இருக்குன்னு தெரியுது.. :) ;)

//நான் பாலாய் பொங்கி - பன்னீராய் தெளிச்சி எழுதுனாலும் எழுதலனாலும் - அது பாட்டுக்கு ஒரு பக்கம் நாறிக்கிட்டு தான் இருக்குது....... //
எஸ். எஸ்.. ரொம்ப ரொம்ப கரெக்டுங்கோ... :D :D ;) ;)

//நித்தி மேட்டர்ல சன் டிவி எப்போ ஒரு வரைமுறை இல்லாமல் தணிக்கை பற்றி கவலைப்படாமல் - குழந்தைகள் பார்ப்பார்களே என்ற கவலை இல்லாமல் நடந்து கொண்டதோ, அன்றே - சன் டிவி connection கான்செல் செய்து விட்டேன்//

நித்தியா.. என்னங்க.. செல்ல பேரல்லாம்... :P :P :P

//ஆஆஆஆஆஆ........... அதான் இன்றைய வெட்டி பேச்சு இடுகை...... எப்பூடி?//\

சூப்பரு... வெட்டிப்பேச்சு சூப்பரு.....!!
இப்போ புரியுதுங்க...தெளிவா புரிஞ்சு போச்சு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!!!

Anonymous said...

சூப்பர் தான்!

கண்ணா.. said...

புரோபைல் போட்டோவில் கண்ணாடி சூப்பர்..

ஏங்க பெண்களுக்காவது சமையல் குறிப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டு குறிப்பு, அழகு குறிப்புன்னு யோசிக்கவாது கொஞ்சம் விஷயம் இருக்குது. எங்க நிலமைய நினைச்சு பாத்தீங்களா..?

பதிவு எழுதலாம்னு யோசிக்க ஆரம்பிச்சாலே எக்ஸாம் ஹால்ல பேப்பரை வாங்கி வைச்சுட்டு ’ஙே’ ந்ன்னு முழிச்சுகிட்டு இருக்கற மாதிரியே உக்கார வேண்டி யிருக்கு.. சரி ஏதாவது சினிமா விமர்சனம் எழுதாலாம்னு பாத்தா அதுக்குள்ள படத்தை பத்தி 20-30 விமர்சனமாவது வந்துருது.

இந்த கொடுமையெல்லாம் போதாதுன்னு நாஞ்சிலு வேற காதல் கவுஜ எழுதி உசுர வாங்குறான்..கூகுளாண்டவா இதுக்கு நீதான்யா ஓரு முடிவு கட்டணும்

அன்புடன் அருணா said...

வெட்டிப்பேச்சு சூப்பரு.....!!

அஷீதா said...

"நொய், நொய்னு" அரிச்சி எடுக்கிற அம்மாவை சமாளிப்பது எப்படி என்று என் பிள்ளைகள் எழுதுனா இன்னும் நல்லா இருக்கும்//


வொய் ப்ளேட் சேம் ப்ளேட் :))))))))

அஷீதா said...

மொத்ததில் கலக்கல்:))))))))))))

தமிழ் உதயம் said...

இந்த நேரத்துல் உங்க "சும்மா..சும்மா..சும்மா.."ன்னு - நீங்க போட்ட பதிவை நினைச்சுகிட்டேன்.

புரோபைல் போட்டோவில் கண்ணாடி சூப்பர்..

கண்ணாடி தான் ரெம்ப சிறிசா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

(என்றைக்கும்) சுவாரஸ்யமான பேச்சு:)!

Uma said...

//சில விஷயங்களில் வெட்டி பேச்சு இல்லை. நேரடி action எடுக்கிறது என் ஸ்டைல். இப்படி எல்லோரும் கட் பண்ணி இருந்தால், சன் டிவியோ மற்ற டிவியோ மக்கள் சொல்ற மாதிரி கேட்டுத்தானே ஆகணும்.//
இது நல்லா இருக்கு :)

AkashSankar said...

இது கூட நல்ல இருக்கே...

அமுதா கிருஷ்ணா said...

அடிக்கடி இந்த ipod சத்தத்தை கூட்டி வைக்க வேண்டி இருக்கு சித்ரா...

VELU.G said...

நல்லா கொடுக்கறாங்கய்யா டீட்டெய்லு

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு இருக்கா எழத ...

இது எதுவுமே தெரியாம இரண்டாம் வருடத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கேனே

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

vasu balaji said...

//8 . பதிவுலக அரசியல்:

அப்படின்னு ஒண்ணு இருக்குறதே, சிலர் சொல்லி தான் தெரியுது - ஆனால் புரியல. தெரியாத மேட்டர் மட்டும் இல்ல, புரியாத மேட்டர் கூட எனக்கு வேண்டாம். இப்போதைக்கு, பதிவுலகம் - ஒரு தோழமை கட்சி.//

இந்த கழுவற மீன்ல நழுவற மீனுன்னு சொல்லுவாங்களே. இது அதெல்லாம் விட தூக்கி அடிச்சிட்டு, கழுவ கூட வேணாம், குளிச்சிட்டு நேர குழம்புக்குள்ளன்னு சொல்ற சமாளிப்பால்லா இருக்கு:))

Chitra said...

/////இந்த கழுவற மீன்ல நழுவற மீனுன்னு சொல்லுவாங்களே. இது அதெல்லாம் விட தூக்கி அடிச்சிட்டு, கழுவ கூட வேணாம், குளிச்சிட்டு நேர குழம்புக்குள்ளன்னு சொல்ற சமாளிப்பால்லா இருக்கு:))///

.... விடை தெரியாத நிறைய கேள்விகள், எனக்கு இருக்கிறப்போ புரியல என்று தானே அர்த்தம். அறை குறை புரிதலோடு, கருத்து சொல்ல எனக்கு தெரியவில்லை. இது உண்மை.

பின்னோக்கி said...

எழுத ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டு இவ்வளவு எழுதியிருக்கீங்களே

நாடோடி said...

ப‌திவு எழுத‌ இவ்வ‌ள‌வு கார‌ண‌ங்க‌ள் இருக்கிற‌தா?.....

ஜெய்லானி said...

திடீர்ன்னு ஏன் இந்த சந்தேகம் ..

Asiya Omar said...

டீ கடை பெஞ்சு ,கூட்டு செய்தி அருமை,சூடாக டீ குடிச்ச திருப்தி போச்சே,வாயை பிளந்திட்டு வெட்டிப்பேச்சு கேட்டதால டீ ஆறிடுச்சு.

செந்தில்குமார் said...

10-துன்பம் யாரவிட்டுச்சி ( சாலமன் )
9-குடியேரிய இடம் அப்படி எங்களை கோச்சிக்கிட்டா எப்புடி
8-அய்யே பாவம் ( தம்பி ) குழந்தைகளும்தான்
7-அவ்வளவும் உண்மை
6-நல்லமுடிவு ஆனாலும் நீங்களும் ஒரு கவிதாயினி
5-கருப்பு துணி பக்கத்துல இல்ல இருந்த கண்ணை கட்டிக்கிட்டு இருப்பேன் யப்பா சாமி...மு....

4-நல்லாவே அரசியல் செய்திருக்கிங்க ஒரு நிமிஷம். இந்த ipod volume இப்படி கூட்டி வச்சுட்டேன் என்று வைங்க, "டொட்ட டோய்ங் ..." சத்தத்துல, மனசாட்சி சத்தம் கேக்கல. அப்பாடி!
3-இங்கேயிமா கட்சியா அய்யே அம்மா நிங்க நல்லாயிருப்பிங்க வேனாம் கேக்காதிங்க.ங்க..ங்க..ங்க..
2- இப்படியேல்லாம் வேர மனசுல நினப்பு இருக்கா....
1-connection கட் பன்னுனது ஓகே மெயின் பியுச யாரு புடுங்குரது...

எதொ எங்களாள முடிஞ்சது அம்புட்டுத்தான்

உண்மையா பேசவும் எழுதவும் நல்ல தில் வேணும்

இங்கே
ஒரு சலியூட் சித்ரா....உங்களுக்கு

ராஜவம்சம் said...

மெய்யாழுமே நல்ல எஸ்கேப்

நஜீபா said...

//என் கணவருக்கு ஏத்த மாதிரி "உப்பு புளி காரம்" போடத்தான் எனக்கு தெரியும். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்கு ஏத்த மாதிரி "சுண்டல் - ஊறுகாய்" போட எனக்கு தெரியாது. எனக்கு தெரியாததை பத்தி நான் எப்படி எழுத முடியும்?//

இது தான் ஹை-லைட்! கலக்கல்ஸ்!!!!

Riyas said...

அது சரி பதிவு எங்க,, கானல்லயே..

Mahi_Granny said...

kids friendly movies list பார்த்த போதே தெரிந்தது . சித்ரா உங்கள் பேச்சு வெட்டி அல்ல. நிஜமாவே variety பேச்சு

Prathap Kumar S. said...

//சில விஷயங்களில் வெட்டி பேச்சு இல்லை. நேரடி action எடுக்கிறது என் ஸ்டைல்.//

அப்ப இனி வெட்டிப்பேச்சு சித்ரா இல்லை... அதிரடி ஆக்ஷ்ன் சித்ரா....:))

dheva said...

// டி.வி. நிகழ்ச்சிகள்:

நித்தி மேட்டர்ல சன் டிவி எப்போ ஒரு வரைமுறை இல்லாமல் தணிக்கை பற்றி கவலைப்படாமல் - குழந்தைகள் பார்ப்பார்களே என்ற கவலை இல்லாமல் நடந்து கொண்டதோ, அன்றே - சன் டிவி cஒன்னெcடிஒன் கான்செல் செய்து விட்டேன். - கமென்ட் போட்டுக்கிட்டு - பதிவுல நொந்து கிட்டு - புலம்பிக்கிட்டே சன் டிவி பாக்கிறதை விட - இந்த புறக்கணிப்பு என் மனசுக்கு ஆறுதலா இருக்குது..... சில விஷயங்களில் வெட்டி பேச்சு இல்லை. நேரடி அcடிஒன் எடுக்கிறது என் ஸ்டைல். இப்படி எல்லோரும் கட் பண்ணி இருந்தால், சன் டிவியோ மற்ற டிவியோ மக்கள் சொல்ற மாதிரி கேட்டுத்தானே ஆகணும்.
//



வெட்டிபேச்சுன்னு டைட்டில் வச்சுக்கிட்டு.....கலக்கல் உண்மைகளை...சர்வ சாதரணமா சொல்லிட்டு போறீங்க......! சில பேர் சீரியஸா எழுதுறேன் பேர்வழின்னு மொக்கை கச்சேரி நடத்துறாங்க.....!

மேலே நீங்க சொல்லியிருக்கிற மேட்டர் ரொம்ப டச்சிங் சித்ரா....! எல்லோரும் நினைக்கிறாங்க....சமுதாயத சீர்த்திருத்ததுல நம்ம பங்கு இருக்கணும்னா....பெரிசா ஏதோ செய்யணும்னு....இப்பசி நினைச்சிகிட்டே எதுவுமே செய்யாமே...சும்மா குறை சொல்லிட்டு திரிவாங்க...!

நீங்க செய்து இருப்பது கூட ஒரு சீர்திருத்தம்.....தான் சித்ரா....அடுத்த தலைமுறை மேல இருக்குற...ஒரு பெரிய......அக்கறைன்னு கூட சொல்லுவேன்....வெட்டிப்பேச்சுன்னு டைட்டில் மட்டும்தான்.....ஆனா Really ur Blog means Lot.........

I wouldl like give my big......SALUTES....... TO YOU chitra...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அரிச்சி எடுக்கிற அம்மாவை சமாளிப்பது எப்படி என்று என் பிள்ளைகள் எழுதுனா இன்னும் நல்லா இருக்கும் என்பது//

நான் இதபத்தி நண்பர்கிட்ட பேசுனேன். குழந்தைங்க parentsthollai.blogspot.com அப்டின்னு ஆரமிக்க போறாங்களாம். எதுக்கும் நீங்க உஷாரா இருங்க.

வால்பையன் said...

டீல சர்க்கரை கொஞ்சம் அதிகம்!, கொஞ்சம் டிகாசன் ஏத்துங்க!

நீங்க போட்டிருக்குற கண்ணாடி ஒன்னு பார்சல் அனுப்பினா வசதியாக இருக்கும், நைட்டு தெருவுல எந்த நாயும் பயப்பட மாட்டிகுது!

Madhavan Srinivasagopalan said...

//இப்படி எல்லோரும் கட் பண்ணி இருந்தால், சன் டிவியோ மற்ற டிவியோ மக்கள் சொல்ற மாதிரி கேட்டுத்தானே ஆகணும்.//

Very True..

சுசி said...

//என்னை தெரிஞ்சவுங்க, நம்ம தோழி மனது நோகக் கூடாதுனு, "ஆஹா..... கவிதை அருமை. வாழ்த்துக்கள்!" என்று வெளியே சிரிச்சிக்கிட்டு, உள்ளே அழுதுட்டு சொல்லிட்டு போய்ட்டாங்க...... //
அவ்வ்வ்வவ்.. என்னைய தெரியலேனா கூட சொல்றாங்களே சித்ரா..

கணவன் மனைவி உறவு சூப்பர்.

//இப்போதைக்கு, பதிவுலகம் - ஒரு தோழமை கட்சி//
அப்போ எதிர்காலத்தில??

டிவி நிகழ்ச்சிக்கு உங்க ஆக்ஷனுக்கு பாராட்டுக்கள்.

ஜெயந்தி said...

டீ கடை பெஞ்ச் சரியா இருந்துச்சு. சிரிச்சு முடியல.

Hai said...

//(இருடா டேய்......உன்னை நேரில் வந்து கவனிச்சுக்கிறேன்....)//

குரைக்கிற நாய் கடிக்காது சிரிக்க வைக்கிற சித்ராக்கா ம(ஆ)த்துல அடிக்க மாட்டீங்கன்னு உங்க தம்பிக்குத் தெரியாதா என்ன?

ஹேமா said...

தாயம்மா....சித்ரா....ரொம்பக் குறையுதுஉங்க ....உங்க ....
என்னாது !ஆனாலும் உலக வலம் நல்லாவேயிருக்கு எப்பவும் போல இல்லாட்டியும் !

பருப்பு (a) Phantom Mohan said...

முடியல!

உலகத்தில எல்லாத் தம்பிகளும் ஒரே மாதிரி இருக்காங்க, நானும் என் அக்காவுக்கு இதே தான் சொன்னேன். அப்புறம் அந்த விளையாட்டப்பத்தி சொன்னது, என் உள்மனசுல உள்ளத அப்பிடியே சொல்லிட்டீங்க. பக்கம் பக்கமா பிரிச்சு மேஞ்ச நம்ம என்னத்த எழுதிறது, எங்களையும் கொஞ்சம் மனசு வச்சு திருந்துங்கப்பா, நாங்களும் பொழைக்க வேண்டாமா?

Vidhya Chandrasekaran said...

நடத்துங்க..

திருவாரூர் சரவணா said...

எங்க...டீக்கடை பெஞ்சுல என்னவோ எழுதப்போறதா சொன்னீங்களே? அது எங்க?

க ரா said...

அதான் இன்றைய வெட்டி பேச்சு இடுகை...... எப்பூடி? -- சூப்பருதான்.அது என்னங்க புரபைல் போட்டோ. எங்கங்க உங்களுக்கு இப்படில்லாம் கண்ணாடி கிடைக்குது :-).

Romeoboy said...

கலந்து கட்டி எழுதிடிங்க..

தூயவனின் அடிமை said...

சகோதரி ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்............அது தாங்க வெட்டிபேச்சு

Menaga Sathia said...

சூப்பர்ர்ர் போங்க?? இப்படிலாம்கூட பதிவு எழுதலாம்னு ஐடியா கொடுக்கிறீங்க பாருங்க அங்கதான் நீங்க இருக்கிங்க...சித்ரா வாழ்க!!

சாந்தி மாரியப்பன் said...

சித்ராக்கா... சூடா ஒரு டீ போடுங்க :-)))))

ரிஷபன் said...

என் கணவருக்கு ஏத்த மாதிரி "உப்பு புளி காரம்" போடத்தான் எனக்கு தெரியும். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்கு ஏத்த மாதிரி "சுண்டல் - ஊறுகாய்" போட எனக்கு தெரியாது. எனக்கு தெரியாததை பத்தி நான் எப்படி எழுத முடியும்?

அப்படிப் போடுங்க அருவாளை!

எப்பூடி.. said...

இராமாயணத்தை மணி நவீனமாக்கி குடுக்கல, அப்பிடி கதை புஸ்தகங்கள்ல வாசிச்சதை உல்டாவா உங்க வாழ்க்கையில நடந்திச்சின்னு எழுதிநீங்கிண்ணா சூப்பரா இருக்கும் :-)

சிநேகிதன் அக்பர் said...

சரிதான் மேடம்.

//என்னை தெரியாம, கவிதைனா என்னனு தெரிஞ்சவுங்க, "ஆஹா..... இந்த வசனங்கள் அருமை. எந்த படத்துல வருது? பகிர்வுக்கு நன்றி,//

யாருங்க அந்த நல்லவங்க.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//ப்லாக் டீ கடை பெஞ்சுல - எல்லாத்தையும் பத்தி பேசலாம் - உலக ஞானம் வளத்துக்கலாம் - என் சிந்தனைகளை கொட்டிக்கலாம் - என் ஆதங்கத்தை தெரிவிச்சிக்கலாம் - விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் - தகவல் பகிர்ந்துக்கலாம் - கோபப்படலாம் - நொந்துக்கலாம் - சரி, சரி - //

சொந்த வாழ்கையை பாதிக்காத வரை
பிளாக்கில் பிரச்சினை இல்லை(இல்லீங்க கம்பியூட்டெர் முன்னாடியே உக்காந்திருந்தா பொண்டாட்டி பிள்ளையெல்லாம் நாங்க இருக்கிறது நெனைப்பிருக்கான்னு
கேக்கீறாங்க..)

goma said...

நல்ல ஸ்பைசியான கொத்துப்பராட்டா...

செம ஹாட் மச்சி

ஸ்ரீராம். said...

கதம்பமா எல்லாத் தலைப்பையும் தொட்டு எழுதிட்டீங்க...சூப்பர்...

காஞ்சி முரளி said...

Thanks....

தெய்வசுகந்தி said...

//இதை பத்தி நான் சொல்றதை விட, "நொய், நொய்னு" அரிச்சி எடுக்கிற அம்மாவை சமாளிப்பது எப்படி என்று என் பிள்ளைகள் எழுதுனா இன்னும் நல்லா இருக்கும் // same blood. என் பையன் (6 வயசு) உன் தொல்லை தாங்கலமான்னு, லீவுக்கு இந்தியா போயிட்டான். பொண்ணுக்கு இன்னும் அந்த அளவு சொல்ல தெரியல. அதனால கூட இருக்கறான்னு நெனைக்கைறேன்.

உங்க வெட்டிப்பேச்சு ரொம்பவே நல்லா இருக்குதுங்க சித்ரா!!!

GEETHA ACHAL said...

ஆஹா...என்ன அருமையாக வெட்டி பேச்சு...பேசி இருக்கின்றிங்க...ச...சா....எழுதி இருக்கின்றிங்க....

தாராபுரத்தான் said...

மகளே உன் சமர்த்து.. தம்பட்டம் தாயம்மாவிடம் எச்சரிக்கையாய் இரு..

தாராபுரத்தான் said...

மகளே உன் சமர்த்து.. தம்பட்டம் தாயம்மாவிடம் எச்சரிக்கையாய் இரு..

SUFFIX said...

டீக்கடை பெஞ்சுல உக்காந்து வெளிப்படையா, தெள்ளத்தெளிவா சொல்லிட்டீங்க, அந்த கண்ணாடி போன வாரம் திருவிழாவுல வாங்கியதா?

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சன் டிவி connection கான்செல் செய்து விட்டேன். - கமென்ட் போட்டுக்கிட்டு - பதிவுல நொந்து கிட்டு - புலம்பிக்கிட்டே சன் டிவி பாக்கிறதை விட - இந்த புறக்கணிப்பு என் மனசுக்கு ஆறுதலா இருக்குது..... சில விஷயங்களில் வெட்டி பேச்சு இல்லை. நேரடி action எடுக்கிறது என் ஸ்டைல்//

இது சூப்ப‌ரு

Athiban said...

உண்மையிலே வெட்டிப்பேச்சுதான். இருந்தாலும் அருமை.

priyamudanprabu said...

அப்படியும் இப்படியுமா, வாரத்துக்கு ஒரு பதிவு/இடுகை என்று ஆகி விட்டது..... எப்போவாவது ரெண்டு.
வேலை பளு அதிகமாய் இருக்கிறது என்றாலும் "வெட்டி பேச்சு" பேசிய வாய், சும்மா இருப்பேனா என்கிறது.
///////

அட விடுங்க
நானெல்லாம் மாசத்துக்கு ஒரு பதிவு போடுரதே பெரிசு

priyamudanprabu said...

3 . குழந்தை வளர்ப்பு:

இதை பத்தி நான் சொல்றதை விட, "நொய், நொய்னு" அரிச்சி எடுக்கிற அம்மாவை சமாளிப்பது எப்படி என்று என் பிள்ளைகள் எழுதுனா இன்னும் நல்லா இருக்கும் என்பது என் குழந்தைகளின் தாய் மாமா - அதாங்க, என் தம்பி என்கிற தங்க கம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை........ (இருடா டேய்......உன்னை நேரில் வந்து கவனிச்சுக்கிறேன்....)
///////

உங்க நேர்மி எனக்கு பிடிச்சிருக்கு

Anonymous said...

நான் ஆஜர். அப்படியே என் வைப்பக்கத்து அப்பப்ப வாருங்க

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப ஸ்வார்ஸ்யமாய் போய்க்கிட்டு இருக்கு!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

///Chitra said... ....

விடை தெரியாத நிறைய கேள்விகள், எனக்கு இருக்கிறப்போ புரியல என்று தானே அர்த்தம். அறை குறை புரிதலோடு, கருத்து சொல்ல எனக்கு தெரியவில்லை. இது உண்மை. ///

100% correct Chitra.

அம்பிகா said...

எதை எழுதனாலும, ரசிக்கிற மாதிரி எழுதுறது சித்ராவின் ஸ்பெஷாலிட்டி.
அழகான நிஜங்கள்.

Madumitha said...

இது..இது.. இதுதான்
ரொம்ப பிடிச்சிருக்கு.
சன் கனெக்‌ஷனைக்
கட் பண்ணியதைத்தான்
சொல்றேன்.

கமலேஷ் said...

தோழி யாரும் உங்கள எந்த கேள்வியும் கேட்டுடக் கூடாதுன்னு
நீங்களே கேள்வியும் கேட்டு
அதுக்கு நீங்களே பதிலும் சொல்றீங்களா...
இந்த டெக்னிக்கும் நல்லாத்தான் இருக்கு...
தொடருங்கள்...

ஹுஸைனம்மா said...

//ஒரு பதிவு கணக்குக்கு அப்போ அப்போ ஏதாவது எழுதிடணுமா? இல்லைனா, உலக அக்கறை - கரிசனம் இல்லைன்னு ஆகி விடுமா? ம்ம்ம்ம்........//

மிகச் சரியான கேள்வி சித்ரா. அப்படி எழுதித்தான் நம் கவலையைக் காட்ட வேண்டுமென்றில்லை. எல்லாருக்கும் நமது கடமையுணர்ச்சிக்குக் கணக்குக் காட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

//நேரடி action எடுக்கிறது என் ஸ்டைல். இப்படி எல்லோரும் கட் பண்ணி இருந்தால், சன் டிவியோ மற்ற டிவியோ மக்கள் சொல்ற மாதிரி கேட்டுத்தானே ஆகணும்//

அதேதான்! நான்கைந்து மாதங்களாக எப்பவாவது டிவிடி வாங்கிப் பார்ப்பது அல்லாமல் என் வீட்டில் டிவி ஆன் செய்யப்படுவதே இல்லை!! And we dont miss anything!!

அன்புடன் மலிக்கா said...

//இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்த பக்கம் போக வேண்டாம்னு இருக்கேன்//

இப்படியெல்லாம் சொல்லக்கூடாது ஓகே.
உடனே கற்பனை டீய குடிச்சிகினே கவி ஆவிய பறக்கவிடுங்க சீக்கிரம்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

nice one Chitra.

மங்குனி அமைச்சர் said...

காலேஜ் கலாட்டா பத்தி யோசிக்காம விட்டிகளே ???

Karthick Chidambaram said...

இவ்வளவு அழகா பேசிட்டு ... வேட்டிபேச்சுங்கிறீங்க ...!
பாராட்டுக்கள்.

Ahamed irshad said...

Super...

Anonymous said...

சித்ரா ஜி எழுதின பத்து டோபிகும் சூப்பர் தான் பா ..


"என் கணவருக்கு ஏத்த மாதிரி "உப்பு புளி காரம்" போடத்தான் எனக்கு தெரியும். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்கு ஏத்த மாதிரி "சுண்டல் - ஊறுகாய்" போட எனக்கு தெரியாது. எனக்கு தெரியாததை பத்தி நான் எப்படி எழுத முடியும்?"



மேலே சொன்னது ரொம்ப அருமையா இருக்கு ...

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க உங்க வெட்டிப்பேச்சு

prince said...

//நுனிப்புல் மேய்ஞ்ச மாதிரி மட்டும் வச்சுக்கிட்டு,//

fill in the blanks .... மாதிரி மீதம் உள்ளவைகளை நாங்களே யுகிச்சிக்கனுமா???அவ்வ்வ்வவ்

Malar Gandhi said...

Haha, nice post, enjoyed reading ur hilarious write-up.

மனோ சாமிநாதன் said...

இது வெறும் வெட்டிப்பேச்சில்லை! சுவாரஸ்யமான அலசல்!

வருண் said...

***8 . பதிவுலக அரசியல்:

அப்படின்னு ஒண்ணு இருக்குறதே, சிலர் சொல்லி தான் எனக்கு தெரிஞ்சுது. - ஆனால் புரியல. தெரியாத மேட்டர் மட்டும் இல்ல, புரியாத மேட்டர் கூட எனக்கு வேண்டாம். இப்போதைக்கு, பதிவுலகம் - ஒரு தோழமை கட்சி.***

நல்ல முடிவுங்க, சித்ரா! எப்போவுமே இதேபோல் வச்சுக்கிட்டீங்கனா உங்களை "வின்" பண்ண யாரும் இல்லை!

எட்வின் said...

ஃபோட்டோ எல்லாம் அசத்துறீங்க. ம்ம்ம்ம்ம் நடக்கட்டும். என்னது சன் டிவிய கட் பண்ணிட்டீங்களா? நல்ல முடிவு தான்.

நீங்க வெட்டிப் பேச்சுன்னு பேரு வச்சிருக்கும் போதே லைட்டா டவுட் வந்திச்சி... நெல்லைக்காரங்க வேற. அருவாவுக்கு கேக்கவா வேணும். நீங்க நடத்துங்க....

Jaleela Kamal said...

ha hha
இதான் ஒரிஜினல் டீ கடை பெஞ்சு.

உலக பிரச்ச்சனை, பதிவுலகம் சூப்பர்

தாயம்மா நீ கலக்கு தயாம்மா

பதிவு 100 ஐ தொட்டு வெட்டி பேச்சுக்கே னிறைய விருது வங்க்கின ஆள் நீங்கல் ஒரு ஆலாதான் இருககனும்

Chitra said...

அனைவருக்கும் நன்றி. டீ கடை பெஞ்சு அரட்டை போல இந்த வெட்டி பேச்சு இருக்குது. ஹா,ஹா,ஹா,ஹா,...

Mythili (மைதிலி ) said...

Thaayammaa, Unna minja yaaraalappaa mudiyum...