Sunday, October 10, 2010

" நண்பன்டா....... அப்படித்தான் சொல்லிக்கணும்"

சில நாட்கள் முன்,  எங்கள் நண்பர்கள் கூட்ட சந்திப்பு:

அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்து கதம்ப  மாலைகள்: (ஆமாம், எங்களுக்கு ரொம்ப முக்கியம் என்று யார் கேக்குறது? நாங்க எப்படியும் சொல்வோம்ல.)
முதல் வெட்டு:
"எங்க டிபார்ட்மென்ட்ல தான்,  சில வருஷங்களுக்கு முன் மிஸ் ராஜஸ்தான் ஆக வந்த பொண்ணு மாஸ்டர்ஸ் டிகிரிக்கு படிக்க வந்து இருக்கிறாள்."

"யாருடா அது?  அந்த மொக்கை பிகர் - மிஸ் ராஜஸ்தான் ஆக இருந்துச்சா?  போட்டி நடந்த அன்னைக்கு மற்ற ராஜாஸ்தான் பொண்ணுங்க எல்லாம் ஒட்டகப் பால் கறக்க போய்ட்டாங்க  என்று நினைக்கிறேன்."

"இதோ பார்ரா - இந்த மிஸ்டர் தமிழ்நாடு  கண்டுபிடிச்சு சொல்லிட்டார்!"

 இரண்டாம் வெட்டு:
"ஏண்டா - ரஜினி பட முதல் ஷோவுக்கு $30  கொடுத்து பார்த்து இருக்கியே.  அவர் பொண்ணு கல்யாணத்துக்கு உன்னையெல்லாம் வர வேண்டாம் என்று சொல்லிட்டார் தெரியுமா?"

" டேய், நானாவது  $30 மட்டும் கொடுத்து ஜாலியா ரஜினி படம் பார்த்தேன்.  உன் கல்யாணத்துக்கு, லாயல் கஸ்டமர் ஆக  எத்தனை லட்சம் செலவழிச்சு போத்திஸ்ல ஜவுளி வாங்கின.  அதுக்கு போத்திஸ் கடை  ஓனர்,  தன் வீட்டு கல்யாணத்துக்கு உன்னை அழைச்சாரா?  உனக்கு ஒரு நியாயம் - எனக்கு ஒரு நியாயமா?"

 மூன்றாம் வெட்டு: 
"ம்ம்..... தனிமையில இனிமை காண முடியுமா?"

"ஏண்டா,  பெருமூச்சு விட்டு புலம்புற?"

"  அழகான பொண்ணுங்க, என்னை கண்டுக்க மாட்டேங்குறாங்க.  அழகா இல்லைனா, நான் கண்டுக்க மாட்டேங்குறேன்.  அதான், என்ன பண்றதுன்னு தெரியல."

"ஒண்ணு மட்டும் தெரியுது.  உன் மூஞ்சை நீ கண்ணாடியில ஒழுங்கா  பார்த்து இருக்கியோ இல்லையோ -  நான்  உன் மூஞ்சை நல்லா பாத்து இருக்கிறேன்டா.   உனக்கு இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்லை."

நான்காம் வெட்டு:
"என்னடா, ரொம்ப நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தியே.  அவள், உன்  லவ்க்கு சரி சொல்லிட்டாளா?"

"நீ வேற எரிச்சலை கிளப்பாத...... அவள் எதிர்பார்க்கிற ஆளு நான் இல்லைன்னு சொல்லிட்டா."

"உனக்கு என்னடா குறைச்சல்?    ஆண்களின் அடையாளம் ஆன வைகிங் (Viking) பனியன் - ஜட்டிகள் - அத்தனை வச்சிருக்கியே."

"டேய், உனக்கு என் கையாலதான் சாவு!"

ஐந்தாம் வெட்டு: 
"என்னடா, புது மாப்பிள்ளை!  உன் மனைவி வகை வகையாய் தினமும் சமைத்து தந்து அசத்துறாங்கனு கேள்விப்பட்டேன். எங்களையெல்லாம் எப்போ சாப்பிடக் கூப்பிட போற?"

"அவளோட அம்மாக்கிட்ட பருப்பு, ரசம், சாம்பார் வைக்கிறது எப்படினு படிக்காம - எங்கேயோ போய் காசு கொடுத்து - cheese stuffed capsicum,  buttered vegetable pasta,  baked mushroom filled  tomatoes, toasted bread masala  - அது இதுனு பேரைக் கேட்டாலே  அஜீரணம் வர மாதிரி உள்ள ஐட்டங்களா படிச்சிட்டு வந்து படுத்துறா... நானே உன் வீட்டுக்கு  வந்து, நல்லா சாப்பிடலாமானு  யோசிச்சிக்கிட்டு இருக்கேன். "

அருவா வெட்டு:  (எனக்குத்தான்)
"சித்ரா, நான் நிறைய ப்லாக்ஸ் வாசிப்பேன்.  ஆண் பதிவர்கள் நிறைய பேர் -  முதலாளித்துவம், சமத்துவம்,  இறைவன் இருக்கிறார்/இல்லை,  முதல் காதல்,  நூறாவது காதல், கள்ள காதல்,  ஜொள்ளியது,  பொய் சொல்லியது,  தண்ணி அடிச்சது, தம் அடிச்சது, பிட் அடிச்சது,  18 + , 28 - ,    மொக்கை போட்டது, குறட்டை போட்டது, சமுதாயத்தில நடக்கிற  நியாயம், அநியாயம்  - அப்படி இப்படின்னு நிறைய டாபிக்ல தைரியமா எழுதுறாங்க..... பெண் பதிவர்கள்ல அப்படி எழுதுறவங்க,  ஒண்ணு ரெண்டு  பேர் தேறினால பெரிய விஷயம்.   நீங்கள் எல்லாம்  எதுக்கு இப்படி  பம்முறீங்க?"

" இது என்ன கேள்வி?   நான் சித்ரா ப்லாக் கூட படிச்சது இல்ல.  ஆனாலும் எனக்கே காரணம் தெரியுதே.  நம்ம  ஊரில இன்னும், ' இந்த அநியாயத்தை தட்டி கேக்க ஒரு ஆண் இல்லையா?' என்றுதானே எதிர்பார்க்கிறாங்க.  'தட்டி கேக்க ஒரு பொண்ணு இல்லையா?', என்று கேக்குற அளவுக்கு நிலைமை வரட்டும். அப்புறம் பாருங்க,  சித்ரா  ப்லாக்ல  என்னமா   பொங்குறாங்கனு!"

சித்ரா:   "எதுக்குப்பா?  குஷ்பூ தங்கை போஸ்ட்க்கு ஆள் தேவைன்னு கேட்டாங்களா என்ன?  முதலில்,  உங்களை எல்லாம்  தட்டி கேட்க "யாருமே" இல்லையா?"

ம்ம்ம்.... இவர்களும் என் நண்பர்கள் தான்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.....

114 comments:

ராமலக்ஷ்மி said...

இரண்டாம் வெட்டு.. ஒரே ரணகளம்:))!


Dr.Sameena Prathap
said...

Hi akka,

Ella vettum supero super...

Paniyaram vera..unniappam vera..i will post panniyaram also soon!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

புதிய மனிதா.. said...

போத்தீஸ் ,வைகிங் தான முடில அசத்தல் அக்கா ..

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

இரண்டாம் வெட்டு அருமை...!

RVS said...

ஆர்க்காட்டார் காதுல விழுந்திரப்போவுது..... வெட்டு வெட்டுன்னு வெட்டியிருக்கீங்க... சித்ரா... ;-)

தமிழ்க் காதலன். said...

அக்கா.., பாவம்க்கா.. நாங்க.., கழுத்துல இரத்தம் வருதா பாருங்க..? உங்க மொக்கைகளிலும் சமுதாய சிந்தனைகளை அழகாக தூவி இருக்கிறீர்கள்... நல்ல மரவள்ளி சிப்ஸ் சாப்பிட்ட திருப்தி. இப்படியே.... போங்க....., இந்தியா வந்துரும்....!!

இளங்கோ said...

//"உனக்கு என்னடா குறைச்சல்? ஆண்களின் அடையாளம் ஆன வைகிங் (Viking) பனியன் - ஜட்டிகள் - அத்தனை வச்சிருக்கியே."//

Very nice. :)

Madhavan said...

:-)

Hanif Rifay said...

நண்பன்டா....மரண வெட்டு... //" அழகான பொண்ணுங்க, என்னை கண்டுக்க மாட்டேங்குறாங்க. அழகா இல்லைனா, நான் கண்டுக்க மாட்டேங்குறேன்// எப்புடி இப்பிடிலாம்....

அருண் பிரசாத் said...

இரண்டாவது வெட்டு கலக்கல்

Balaji saravana said...

நீங்க வெட்டுங்க சாரி கலக்குங்க சித்ரா எப்பவும் போல...
போத்தீஸ், வைக்கிங் வெட்டு செம.. :)

குந்தவை said...

:))

கே.ரவிஷங்கர் said...

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்லீட்டீங்க. வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

நான்காம் வெட்டு, லக...லக...லக...

யாதவன் said...

ஐயோ ஐயோ ஒரே சிரிப்பு கலக்கிடிங்க போங்க

அமுதா said...

அப்படி போடு அருவாள...
இரண்டும் நாலும் வேட்டு தான்

ஸ்ரீராம். said...

இரண்டாம் வெட்டு, நான்காம் வெட்டு ரெண்டும் சூப்பர்...!

சசிகுமார் said...

இரண்டாம் வெட்டும் நான்காம் வெட்டும் படு தூள் மிக அருமை.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நாலாவது வெட்டு சூப்பர்..எல்லாமே கிடா வெட்டுதான்

தியாவின் பேனா said...

நண்பன்டா.

பதிவுலகில் பாபு said...

:-)))

Anonymous said...

அருவா வெட்டு சூப்பரு...ஆறாவது எங்கே சித்ரா?

எல்லாவெட்டும் சிரிப்பு வேட்டு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சித்ரா: "எதுக்குப்பா? குஷ்பூ தங்கை போஸ்ட்க்கு ஆள் தேவைன்னு கேட்டாங்களா என்ன? முதலில், உங்களை எல்லாம் தட்டி கேட்க "யாருமே" இல்லையா?"//

வாங்க வாங்க சீக்கிரம் கோர்ட்டுல சந்திக்கலாம்

நட்புடன் ஜமால் said...

3 4 5 செம

அருவா - ஆழம் பத்தலை :P

எம் அப்துல் காதர் said...

அருவாள கைமாத்தி செம போடு போட்டாச்சு!! எல்லா வெட்டும்
'மின்னல்' வெட்டு போல் பளிச்சிட்டது!!

KParthasarathi said...

vaedikkaiyya irundhadhu kadhamba maalai.

ஹுஸைனம்மா said...

//" நண்பன்டா....... அப்படித்தான் சொல்லிக்கணும்"//

நோ.. யூ ஆர் ராங்.. அப்பிடிச் சொல்லக்கூடாது.

“நண்பேஏஏஏன்டா..” இப்பிடிச் சொல்லணும்!!

வினோ said...

அருமை அருமை..

நாஞ்சில் பிரதாப் said...

நான்காம் வெட்டு செம காமெடி...:))

ப.செல்வக்குமார் said...

//அதுக்கு போத்திஸ் கடை ஓனர், தன் வீட்டு கல்யாணத்துக்கு உன்னை அழைச்சாரா? உனக்கு ஒரு நியாயம் - எனக்கு ஒரு நியாயமா?"//

அட அட ,, நீங்க நல்லா வேட்டி இருக்கீங்க அக்கா ..!!

எஸ்.கே said...

அனைத்தும் அருமை! ரசித்தேன்! சிரித்தேன்!

ப.செல்வக்குமார் said...

// 'தட்டி கேக்க ஒரு பொண்ணு இல்லையா?', என்று கேக்குற அளவுக்கு நிலைமை வரட்டும். அப்புறம் பாருங்க, சித்ரா ப்லாக்ல என்னமா பொங்குறாங்கனு!"//

நீங்க உண்மைலேயே நல்லவங்க ..!! ஹி ஹி ஹி ..

dr suneel krishnan said...

:) வெட்டு ஒன்னு துண்டு நாலு :)

அமுதா கிருஷ்ணா said...

கலக்கல்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

வித்யா said...

இது ரத்த பூமி:)))

தஞ்சாவூரான் said...

எல்லாமே ஆழமான வெட்டுகள்!!
'எல்லாருமே' வெட்டு வாங்கியிருக்காங்க போல!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

போத்தீஸ் முதலாளி ஆனாலும் ரொம்ப மோசம்தான்.....எங்களுக்குக் கூட அழைப்பு இல்ல....நாங்க கூட கர்ச்சீப்பெல்லாம் வாங்கினோம் தெரியுமா? ஹ...ஹா.......அப்பா இன்னைக்கி டென்சன் சித்ரா புண்ணியத்துல.....ரிலாக்ஸ்.........

தமிழ் உதயம் said...

இரண்டாவது வெட்டுல ரஜினி ரசிகைன்னு நிருபிச்சிட்டிங்க.

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

ரொம்ப நாளா இந்த பக்கம் வரமுடியவில்லை..... இன்னைக்கு எப்புடியும் ஒரு கை பார்த்துர்ரதுண்ணு முடிவு கட்டி இதோ வந்து விட்டேன்.
வெட்டு அஞ்ஜு இஸ் good

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐயோ நான் போட்ட கமெண்ட் த காணோம். நான் போய் சிரிப்பு போலீஸ் கிட்ட சொல்றேன்..

வானம்பாடிகள் said...

எங்க அந்த நசரேயரு. இதுக்கும் மேல ஒரு அருவா தனியா வேற தூக்கிட்டு அலையணுமா.:)) வெட்டா இது. கொத்து:))

Nithu Bala said...

Superb:-))

Mrs.Menagasathia said...

ஹா ஹா எல்லா வெட்டும் அசத்தல்...

பிரியமுடன் ரமேஷ் said...

:) கலக்கல்

சுசி said...

ஹஹாஹா.. சூப்பர் சிரிப்பு வெட்டு.

மங்குனி அமைசர் said...

எங்கப்பா அப்பவே சொன்னார் , இந்த பொண்ணுகூட சேராத , இந்த பொண்ணோட பிலாக்க படிக்காதன்னு , கேட்டனா? கேட்டனா? கேட்டனா?
இப்படிக்கு
வீட்டுக்கு போக அட்ரஸ் மறந்து தெருவில் திரிவோர் சங்கம்

நாய்க்குட்டி மனசு said...

சித்ரா திரும்பியாச்சுனா கலக்கல் தொடங்கியாச்சுனு அர்த்தம்.

நசரேயன் said...

எல்லா வேட்டுமே நல்லா இருக்கு

ரஹீம் கஸாலி said...

இந்தப் பதிவு யூத்புல் விகடன் குட் பிளாக் பகுதியில் வந்துள்ளது. வாழ்த்துகள்

Jaleela Kamal said...

வெட்டு எல்லாம் கொட்டு வச்சி சொல்றாப்ல இருக்கு.

ராஜவம்சம் said...

எல்லா வெட்டும் ரசிக்கும்படி இருந்தது நன்றி.

(தாங்கல ஒரே நேரத்தில இத்தனை வெட்டு எப்படிம்மா தாங்கும் நாங்கள்லாம் பச்சபுள்ள தாயம்மா.)

சி.பி.செந்தில்குமார் said...

6 மேட்டரையும் ஜூனியர் விகடன் டயலாக் பகுதிக்கு அனுப்புங்க ,கண்டிப்பா 3 செலக்ட் ஆகும் ,ரூ 300 நச்சயம்

சி.பி.செந்தில்குமார் said...

செம கலக்கல்தான் நக்கல் பகுதிகளை படிக்கறப்ப பெண் எழுதுனது மாதிரியே தெரியல,அவ்வளவு அசத்தல்

sakthi said...

வெட்டு

கலக்கல்ஸ்

போத்தீஸ் வெட்டு

ரசித்தேன்

தெய்வசுகந்தி said...

:-)!

கே.ஆர்.பி.செந்தில் said...

வெட்டு ஒன்னு துண்டு ஐந்து... அருவாவுக்குதான் கைதட்டு ...

goma said...

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேள்விபட்டிருக்கேன்.....இது என்ன வெட்டு ஒண்ணுன்னா, துண்டு பல, பல பலன்னு விழுது......

Gayathri's Cook Spot said...

Unga blog romba nalla irukku. Vettukkal ellam super

ஜெயந்தி said...

எப்பயும் ஜோக்கா இடுகை வரும். இப்போ ஜோக்கே இடுகையா வந்திருக்கு.

asiya omar said...

என்னமா வெட்றீங்க,நீங்க தைரியமாக வெட்டுங்க,தட்டி கேட்க ஒரு கூட்டமே வரும்.செம வெட்டு,5 வது வெட்டு சூப்பர்.

மோகன்ஜி said...

ஐயோ சித்ரா! முதல்ல அருவாள கீழே போடுங்க! நாங்கல்லாம் திருந்திடறோம்!
ஆத்தாடியோவ்!!

பித்தனின் வாக்கு said...

good.
How are you and your kids and kin?

r.selvakkumar said...

எல்லா வெட்டுமே நறுக்!

malgudi said...

சித்ரா அக்கா,
அரிவாளோட கிளம்பிட்டாவே !
எத்தனை தலை உருளப்போகுது எண்டு பயந்திட்டன்.

தமனாவின் பார்வை சூப்பர்.............

Jay said...

Love all the vettus....well said dear...

Tasty Appetite

ப்ரியமுடன் வசந்த் said...

:))

அரசூரான் said...

உங்க வெட்டிப்...சாரி சாரி வெட்டுப் பேச்சில போத்தீஸ போட்டு தள்ளிட்டீங்களே....அவ்வ்வ்.

நிலா முகிலன் said...

வெட்டு ஒன்னு துண்டுகள் பல ன்னு அடிச்சி ஆடிருக்கிங்க.. சூப்பர்.

செந்தில்குமார் said...

ஒரே வெட்டு யம்மாடியோவ் இவ்வளவு துண்டா....சித்ரா

mohamed ashik said...

I came after seeing a lot of votes and comments.

But, nothing special in the article for me but 'mahaamokkai'.

So, it is a great surprise.

Maximum people like the things which are full of nothings, which I understood.

Thanks.

தாராபுரத்தான் said...

vசூப்பர்.......ஸ்

பார்வையாளன் said...

good humour

Gopi Ramamoorthy said...

ரெண்டும் அஞ்சும் சூப்பர்

மதுரை பாண்டி said...

Nalla vettu... aanaalum andha tamanna photo romba super!!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கலக்கல் சித்து..

என்னோட பதிவை பாரும்மா.. தீபாவளி மலருக்கு இன்று அல்லது நாளை படைப்பை அனுப்பும்மா..

Bala said...

ore ranakalame irukku... unga trademark kalai... :DD

வள்ளுவன்வாசுகி said...

http://valluvankathal.blogspot.com/

dheva said...

போத்தீஸ் மேட்டர்...........

என்னால நிஜமாவே ரசிக்க முடிந்தது. !

Anonymous said...

சித்ரா..
ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?

படிச்சு முடியுற வரைக்கும் சிரிச்சுகிட்டே தான் இருந்தேன்.

சிங்கக்குட்டி said...

போத்திஸ் கடை ஓனர் மேட்டர் ஜிவ்வ்வ்வ்வ் கலக்கல் :-)

ஆமா சித்ரா இந்த அநியாயத்தை தட்டி கேக்க ஒரு பொண்ணு இல்லையா? :-)

அப்டியே பொங்கும் போது எங்களுக்கு சொன்னா நாங்களும் வந்து "பொங்கலோ பொங்கல்" பாடிட்டு போவோம் :-).

பட்டாசு said...

//அருவா வெட்டு: (எனக்குத்தான்)
"சித்ரா, நான் நிறைய ப்லாக்ஸ் வாசிப்பேன். ஆண் பதிவர்கள் நிறைய பேர் - முதலாளித்துவம், சமத்துவம், இறைவன் இருக்கிறார்/இல்லை, முதல் காதல், நூறாவது காதல், கள்ள காதல், ஜொள்ளியது, பொய் சொல்லியது, தண்ணி அடிச்சது, தம் அடிச்சது, பிட் அடிச்சது, 18 + , 28 - , மொக்கை போட்டது, குறட்டை போட்டது, சமுதாயத்தில நடக்கிற நியாயம், அநியாயம் - அப்படி இப்படின்னு நிறைய டாபிக்ல தைரியமா எழுதுறாங்க..... பெண் பதிவர்கள்ல அப்படி எழுதுறவங்க, ஒண்ணு ரெண்டு பேர் தேறினால பெரிய விஷயம். நீங்கள் எல்லாம் எதுக்கு இப்படி பம்முறீங்க?"//

அடடே நீங்களும் என்னோட ப்ளாக் வாசிக்கிறீர்களா, ரொம்ப சந்தோஷம்.

ரொம்ப இயல்பான எழுத்து நடை. வாழ்த்துகள்.

நாஞ்சில் மனோ said...

யோவ் மொக்கை போட நாங்கதான் கிடைச்சோமா...........!!! தாளிச்சிட்டீன்களே...........!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாங்க கூடவருசா வருசம் இந்த ஆர் எம் கே வி ல பொடவை எடுக்கறம் .. காசக்காசுன்னு பாக்காம..
அவங்க வீட்டுல ஒரு விசேசத்துக்கும் கூப்பிட்டதில்லங்க.. :)சித்ரா சந்தடி சாக்குல உங்க ப்ளாகை படிச்சதே இல்லைன்னு தைரியமா
சொல்ற நண்பரை முழுக்க எல்லா போஸ்டையும் ஒரே நாளில் படிக்க வைங்களேன்..;)

ரிஷபன் said...

வெட்டினால் சிரிப்பு வழியுதே..

எப்பூடி.. said...

இரண்டாவது வெட்டு ரஜினி எதிர்ப்பாளர்கள் பலபேரோட வயித்தெரிச்சலை அதிகப்படுத்தியிருக்கும் என்பதால் கண்டனங்கள் :-)

அன்புடன் மலிக்கா said...

வெட்டி வெட்டின்னு
வெட்டிப்புட்டீங்களே சித்து..
சிரிச்சி முடியல இன்னும்..

அப்படியே வந்து நம்ம பொக்கிஷ தேவதையை பாருங்க..
http://niroodai.blogspot.com/2010/10/blog-post_12.html

Riyas said...

செம வெட்டு சித்ரா அக்கா.. வெட்டிப்பேச்சுன்னா சும்மாவா..

kutipaiya said...

hehehe.. vera edhuku nanbargal :) :)

தக்குடுபாண்டி said...

5-வது வெட்டுதான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது அக்கா!!...:) அந்த ஆள் சொல்லற மாதிரியே ஏற்ற இறக்கத்தோட மிமிக்ரி பண்ணி பார்த்தேன். சிரிப்பு அடக்க முடியலை!!...:)

Karthikeyan Easwaramoorthy said...

Very nice one. To buy tickets for buses in India, you can visit www.ticketgoose.com

mohan KING OF KITCHEN ART'S CARVING said...

supara erukkunka

denim said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com/

ம.தி.சுதா said...

அக்கா வரக் கொஞ்சம் பிந்திட்டுது நம்ம விட்டில் பெரிய பிரச்சனை அதனுடன் நின்றவிட்டேன்..... (வே)வெட்டுண்ணா (வே)வெட்டு செம (வே)வெட்டு...

அமைதிச்சாரல் said...

ரணகளத்துல அதகளம் பண்ணியிருக்கீங்க சித்ரா :-))))))

Shanthi said...

Super and superb vettus. love your blog
http://shanthisthaligai.blogspot.com/

ஸ்ரீராம். said...

உங்கள் பதிவு விகடன் குட் ப்ளாக்ஸ் பக்கத்தில்...

vanathy said...

haha... very funny. Enjoyed all the jokes.

ஜிஜி said...

வெட்டு அருமையா இருக்கு சித்ரா.வாழ்த்துக்கள்.

DREAMER said...

வெட்டுக்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டுக்கள்..!

-
DREAMER

அன்னு said...

ரெம்ப லேட்டாதான் படிக்கிறேனோ???...இருந்தாலும் எல்லா வெட்டும் செம வெட்டு, மூணாவதும் நாலாவதும், மனசார சிரிக்க வச்சுது....மறுபடியும் காலேஜ் நாட்களுக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல். தேன்க்ஸ்பா:))

Chitra said...

Thank you everyone for your continued support. :-)

மார்கண்டேயன் said...

வெட்டி (பேச்சு) பேசுவீகன்னு தெரியும் . . . இப்ப தாம்லே தெரியுது,

வெட்டிட்டு தான் பேசுவீகன்னு, நீங்க வெட்டுனத,

விகடன் காரவுகளும் வெட்டிட்டாகல்ல . . . கீழ போயி பாருங்கப்பு . . .

http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs.asp

Chitra said...

இந்த பதிவை "யூத்புல் விகடன்" குட் ப்லாக்ஸ்க்கு தேர்ந்தெடுத்த குழுவுக்கு எனது நன்றிகள். அதில் வெளிவந்து இருப்பதை, எனக்கு தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். :-)

Sunitha said...

நான்காம் வெட்டு super வெட்டு

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

ஈ ரா said...

அருவா(ரிமா) வெட்டு ..

தூள்

aruna said...

hello fine pa

aruna said...

fine pa

aruna said...

super

M said...

alla wettum supper

M said...

Hai I am Abilashini
From Srilanka

Alla vattum Suppero supper

Chitra said...

Thank you, Abilashini. :-)

தங்கம்பழனி said...

அட்டா.. நான் எப்படி இத தவற விட்டேன்.. லேட்டான்னாலும்.. ஹிட்! ஹிட் ஹிட்டுதானே.. பதிவைச் சொன்னேன்..ஹி..ஹி..!!

தங்களின் பதிவுகள் ஒவ்வொன்று அருமை.. நன்றி வாழ்த்துக்கள்..!

Jen said...

You made some decent points there. I looked on the internet for the issue and found most individuals will go along with your website. Here's my Safety Sign Shop website by the way.