Monday, October 18, 2010

அமெரிக்காவில் ரங்குஸ்கி

நண்பர்களுடன் அரட்டை கச்சேரி.     பேச்சு, எந்திரன் படம் பற்றி திரும்பியது.  ஒரு நண்பர்,  அதில் வரும் கொசு பிடிக்கும் காட்சி,  அபத்தம் என்று சொன்னார்.
"ரோபோவுக்கு விலை மதிப்புள்ள வைர நகையும்  ரங்குஸ்கியும் ஒன்று.  தான் விரும்பும் பெண், கேட்பதை கொடுக்க வேண்டும் என்று மட்டும் தான் அதற்கு தெரிகிறது. அவள் விளையாட்டாக சொல்கிறாளா இல்லையா என்று ஆராய அதற்கு தெரிவதில்லை என்று விளக்கவே  அந்த காட்சி.  மேலும்,  உணர்வுகள் வந்தாலும்,  மனிதன் எதை உயர்வாய் எண்ணுகிறான் - எதை அபத்தமாய் எண்ணுகிறான் என்பது  அதற்கு புரிவதில்லை என்பதையும் அந்த காட்சி சொல்கிறது,"  என்று இன்னொரு நண்பர் பதில் சொன்னார்.

"இருந்தாலும் அந்த காட்சி டூ மச்.  நீங்களே சொல்லுங்க, சித்ரா," என்றார்.

"ம்ம்ம்ம்......  லாஜிக் மீறல்களுக்கு,  official லைசென்ஸ் வாங்கியவை  Sci-Fi  தீம் மூவிஸ்.  அப்படி ஒரு படத்தில்  வரும் காட்சி டூ மச்சா?  நாங்க யாரு,  real life லேயே  9 மச்,  10  மச் எல்லாம் பார்த்தவங்க...... யாரு  கிட்ட.....  ஹா,ஹா,ஹா,ஹா....  நான் Texas ல உள்ள ஒரு சின்ன ஊரை பற்றி சொல்றேன். முழுவதும் கேட்டு விட்டு,  எது டூ மச்? என்று நீங்கள் சொல்லுங்கள், " என்றேன்.   (மக்காஸ்,  நீங்களும்தான்!)

எல்லோரும் கவனமாக கேளுங்க:

Texas மாநிலத்தில் உள்ள  ஹூஸ்டன் நகரத்தில் இருந்து தென்கிழக்காக 55 மைல்கள் இருக்கும் ஒரு சிறிய ஊரின் பெயர், Clute  (க்லூட்)

  இந்த ஊரில்,   ஜூலை மாதத்தில் வெயிலும் ஈரப்பதமும் (Hot and Humid)   அதிகமாக இருப்பதால்,  கொசுக்கள் அதிகமாக இருக்கும்.  (ஆமாம், ஆமாம், ஆமாம்...... அமெரிக்காவிலும் சில ஊர்களில் -  வெளி இடங்களில் கொசுத் தொல்லை உண்டு.... ஏனோ வீட்டுக்குள் வந்து அராஜகம் பண்ணுவதில்லை..... என்ன மாயம் பண்ணி வைக்கிறாங்களோ? தெரியலியே!)

க்லூட் (Clute)  ஊரில்,  1981 ஆம் ஆண்டு,  இந்த சிறிய ஊருக்குள்ள சுற்றுலா துறையின்  பொறுப்பை எடுத்தவர்கள், வித்தியாசமாக ஏதாவது செய்து,  ஊருக்கு பொருளாதார நிலைமையை மேம்படுத்தவும்,   வெளியூர் மக்களை வரவழைக்க  யோசித்துக் கொண்டு இருந்த வேளையில், உதயமான ஐடியாதான் இந்த "கொசுத் திருவிழா".   (மயங்கி விழாதீங்க ....... உண்மை ...உண்மை..... நான் சொல்வதெல்லாம், உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை.)  ரங்குஸ்கிக்கு திருவிழா!!!
இந்த திருவிழா மூலமாக ஊருக்கு நல்ல வருவாயும்  (பணமும் ) வருகிறது.

பெயரை கேட்டாலே, சிரிப்பு வருதுல?  அந்த ஊரின் முகப்பில் உள்ள ரங்குஸ்கியார் சிலையை பாருங்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில்,  கடைசி வார இறுதியில், மூன்று நாட்களுக்கு இந்த திருவிழா (Clute Mosquito Festival) நடைபெறுகிறது.   country மியூசிக் என்று சொல்லப்படும் நாட்டுப்புறப் பாடல்களின் இன்னிசை கச்சேரிகள் அப்பொழுது  நடக்கும். 

இது டூ மச், சித்ரா.... என்று இப்போவே சொல்றீங்களா?   ஹா,ஹா,ஹா,ஹா,..... இன்னும் கேளுங்க, கேளுங்க.... கேட்டுக்கிட்டே இருங்க.......

அந்த நேரத்தில,  வித்தியாசமான பல  போட்டிகளும் நடைபெறும்.  (கொசுக்கடில என்ன போட்டி அப்படின்னு கேக்குறீங்களா, மக்கா....... பொறுமை. பொறுமை. பொறுமை!)  அவற்றில் முக்கியமான போட்டிகள் மட்டும் இப்போ பார்ப்போம்:  சரியா?

இந்த ஊரிலும் இந்த ஊரை சுற்றி உள்ள ஊர்களிலும் உள்ள City County Officials (அதான்ப்பா .... இந்த ஊரை சுத்தி இருக்கிற பதினெட்டு பட்டியில் இருந்து வரும்  ஊரு பெருசுங்க,   நாட்டாமை  மாதிரிப்பா.....) ,   தங்கள் தங்கள் ஊரின் பேரில் போட்டிகளுக்கு பங்கு பெறும் குழுவுக்கு,  தாங்களே தலைமை பொறுப்பேற்று,  வருவார்கள்.  அவர்களுக்கென்று வேடிக்கையான சிறு சிறு போட்டிகள் (Area County Challenge)  நடைபெறும்.  எந்த வித ஈகோவும் தற்பெருமையும் இல்லாமல், எல்லோரும் சிறு குழந்தைகள் போல குதூகலத்துடன் பங்கு கொள்வார்கள்.  அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற குழுவுக்கு சிறந்த குழுவுக்கான கேடயம் வழங்கப்படும். வெற்றி பெற்ற குழுவின் தலைவர் - அதாங்க அந்த ஊரு நாட்டாமை,  கேடயத்தை தங்கள் ஊருக்கு பெருமிதத்துடன் எடுத்துட்டு போவாங்க......

  Dodge Ball Sting Tournament  -    

இங்கு வயது வரம்பு படி, மூன்று பிரிவுகளாக பிரித்து தனி தனி போட்டியாக  நடத்துவாங்க.... பந்து ஒன்று தான் கொசு மாதிரி பறந்து வரும்.    "பந்துகொசு"  யார் மேல் பட்டாலும், கொசு கடித்து விட்டதாக கருதி ஆட்டத்தை விட்டு வெளியேற்றப் படும் போது, காண வேடிக்கையாக இருக்கும்ப்பா........

 Haystack Dive:  

குழந்தைகள் விரும்பி பங்கு பெறும் போட்டிப்பா.    வைக்கோல் எடுத்து ஒரு சிறிய குன்று போல அடுக்கி வைத்து  இருப்பாங்க . அதனுள்,  சிறிய விளையாட்டு பொருட்கள்,  அப்புறம் ஒரு  டாலர் நோட்டுக்கள்,   T-Shirt , போன்ற குழந்தைகள் விரும்பும் பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும்.  குழந்தைகள் உற்சாகமாய், வைக்கோல் குன்றுக்குள் புகுந்து  பொருட்களை தேடுவாங்க.   கண்டு எடுக்கும் பொருட்கள், அந்த குழந்தைகளுக்கே சொந்தமாகும்.


chitty   chitty -  ரங்குஸ்கி :

Mosquito Calling Contest:    http://mosquitofestival.com/index.html

நாய்க்குட்டியை  வித்தியாசமான சத்தத்திற்கோ -  குரலுக்கோ -  கட்டளைக்கோ  - வரச் சொல்லி பழக்கம் செய்தி இருப்பதை பார்த்து இருப்போம்.  ஆனால்  இங்கு,  போட்டியில் பங்கு கொள்ளும் ஆட்கள், நிகழ்ச்சி நடக்கும் பார்க்கில் (open park)  உள்ள  மேடையில் ஏறி கொண்டு,  வித்தியாசமான குரல் அல்லது சத்தம் எழுப்புவாங்க.   யார் கொடுக்கும் சத்தத்திற்கு முதலில் கொசுக்கள்  கூட்டமாக வந்து  அவர் கிட்ட  மொய்க்கிறதோ  அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.  கொசுக்களின்  தற்செயலான செயலாக இருந்தாலும், பெருமை அழைத்தவர்க்குதான். ஹா,ஹா,ஹா,.... (இப்போ, அப்படியே எந்திரன் படத்துல வரும், "ரங்குஸ்கி" சீன் நினைச்சுக்குங்க..... அந்த அளவுக்கு கூட்டமா வரல.... ஆனா சின்ன கூட்டமா வருதுப்பா....)

கொசு ஒன்றுக்கு - அமரர் சுஜாதா ரங்குஸ்கி என்று பேரு வச்சது போல,  இந்த ஊர்லேயும் விழாவின் நாயகனுக்கு, ஒரு அவதாரம் கொடுத்து பேர் வச்சு இருக்காங்க.....  Willie Man Chew (வில்லி மேன் ச்சூ)   தான் அதன் பெயர்.

கீழே உள்ள படத்தில் Willie Man Chew:  

  ஒரு பெரிய பலூன் கொண்டு செய்யப்பட்டு இருக்கும்.   இந்த திருவிழா முழுவதும் வில்லிக்கு  பெரிய மரியாதை இருக்கும்.  விசேஷமாக தயாரிக்கப்பட்ட T-Shirts , பரிசு பொருட்கள், Mementos,  கைவினைப் பொருட்கள் எல்லாவற்றிலும் இந்த உருவத்தின் படம் பொறிக்கப்பட்டு இருக்கும்.  எப்பூடி!

இது எல்லாம் ஒண்ணுமே இல்லை -  சப்பை மேட்டர்ஸ்  என்பது போல ஒரு போட்டி வருது பாருங்க:
டட்ட  டிங்  டோயன்க்  டட்ட  டிங்கு  டோயன்க்..................!!!

Mr. and Mrs. Mosquito Legs Contest:  

 பங்கு பெறும் ஆண்களும் பெண்களும்,   முழங்கால் கீழ் தங்கள் கால்கள் தெரிகிற மாதிரி  ஆடை  அணிந்து கொண்டு வருவார்கள்.  தம் தம் பெயர் வாசிக்கப்பட வாசிக்கப்பட, மேடையில் நடந்து வருவார்கள். அவர்களில்,  யார் சிறந்த (???) கொசுக்காலை  போல  குச்சிக்கால் உடையவர் என்று நடுவர் குழு தேர்ந்து எடுக்கிறதோ அவர்களுக்கு  பரிசும்,  ஆணுக்கு:  "Mr. Mosquito Leg" மற்றும் பெண்ணுக்கு:   "Ms.  அல்லது Mrs. Mosquito Leg" பட்டமும் வழங்குவார்கள். வேடிக்கையான இந்த நிகழ்ச்சியை காண கூட்டம் காத்து இருக்கும்.  பின்ன..... அழகர் அழகி போட்டி எல்லாத்தையும் இதுக்கு மேல ஒரு வழி பண்ண முடியாதே...... இங்கே பாருங்க, வெற்றி பெற்ற ஒரு பெண்ணை! எவ்வளவு சந்தோஷமாக தன் கால் அழகை காட்டி பெருமை படுறார் என்று...... இதில் விசேஷம் என்னவென்றால், யாரும் கேலி செய்யாமல்,  வெற்றி பெற்றவர்களை உற்சாகமாய்  பாராட்டுவது:  ம்ம்ம்ம்........ 

   நீங்கள் தீராத  கொசுத்தொல்லை என்று எரிச்சலுடன்  புலம்பலாம்.  குறை கூறி கசப்பு உணர்ச்சியில் இருப்பதை விட - கொசுத்தொல்லை  அதிகம் உள்ள ஊரில் -  அதையும் ஊர் வளர்ச்சி சக்தியாக மாற்றி உள்ள Clute ஊர் மக்களை பாராட்டாமல்  இருக்கவும் முடியவில்லை.  .
 
கீழே உள்ள படத்தில், logo பாருங்க.... அமெரிக்க  ரங்குஸ்கி O +  blood,  கப்ல வச்சு எவ்வளவு ரசிச்சு குடிக்குது!
 

 


 என் இனிய தமிழ்  மக்களே:  ஒவ்வொரு அமெரிக்க கிராமத்திலும் இன்னும் நியூ யார்க் போன்ற நகரங்களின் பாதிப்பு இல்லாமல்,  முழுக்க முழுக்க கிராமிய மணத்துடன்  ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டு தான் இருக்கிறது....  அப்படி ஒரு திருவிழாவைத்தான் இன்று  நான் தெரிந்து எடுத்தேன். உங்கள் பார்வைக்கு படம் பிடித்தேன்.  வணக்கம்.

(பி.கு.  டொன் போஸ்கோ நிறுவனம் வழங்கும் குழந்தைகள் மாத பத்திரிகை  "அரும்பு"வில்,  இந்த திருவிழா பற்றிய குறிப்பு எழுதி இருக்கிறேன்.)

121 comments:

sathishsangkavi.blogspot.com said...

Me The First.....

sathishsangkavi.blogspot.com said...

//உண்மை ...உண்மை..... நான் சொல்வதெல்லாம், உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை//

நம்பீட்டோம்....

எல் கே said...

வித்தியாசாமான புதிய செய்தி நன்றி சித்ரா

அமைதி அப்பா said...

உங்களுக்கு மட்டும் இப்படி, எப்படித்தான் செய்தி கிடைக்குதோ?!
நன்று.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சுவாரசியமான தகவல். ஊர எப்படியெல்லாம் பிரபலம் ஆக்குறாங்க!!

Anonymous said...

கொசுவுக்கு ஒரு திருவிழா.. ம் ம்..
செம இன்ட்ரஸ்டிங் சித்ரா...

Gayathri Kumar said...

News on Puthiya thiruvizha Super. Quite interesting.

சாருஸ்ரீராஜ் said...

thanks for the information, intresting

பவள சங்கரி said...

கொசுவக்கூட ஹீரோ, ஹீரோயினி ரேஞ்சுக்கு உயர்த்திப்பிட்டீங்க போங்க......

Ramesh said...

புதிய செய்தி. பகிர்வுக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

அமெரிக்கா என்று பெருசா கற்பனை செய்து வைத்திருப்பதால் இது இன்னும் வியப்பை தருகின்றது

ஜாலியாத்தான் இருக்கு

டாட்

தமிழ் உதயம் said...

டொன்போஸ்கோ நிறுவனங்கும் குழந்தைகள் மாத பத்திரிகை "அரும்பை" பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

சிங்கக்குட்டி said...

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பப்பா ஒரு புறாவுக்கு ...சீ... ஒரு கொசுவுக்கு இவ்வளவு அக்கபோரா ?

விடுங்கப்பா, ஒரு நகைசுவைக்காக வைக்கபட்ட காட்சி அது, அதுக்காக அதுவும் ரஜினி என்றவுடன் நம்ம சித்ரா மாதிரி எத்தனை
பெயரைத்தான் விளக்கி பெரிய பெரிய பதிவுகளை எழுத வைக்கிறீர்கள்.

அந்த வைர நகை சீன் ரோபோவுக்கு மனித உணர்வுகளை கொடுக்க பட்ட பின் வருகிறது, அந்த காட்சி இல்லை என்றால், அடுத்த காட்சியில் வரும் காதலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

இன்னும் கொஞ்சநாள் போனால் ரஜினி நீல கலர் சட்டை அணிந்து வருவது அபத்தம் என்று சொன்னாலும் சொல்வார்கள் :-).

எப்படியோ ஒரு புதிய மற்றும் நல்ல பகிர்வுக்கு நம்ம சித்ராவுக்கு நன்றி!.

அமுதா said...

சுவாரசியம்.
/*எது டூ மச்? என்று நீங்கள் சொல்லுங்கள்*/
இது என்ன விக்ரம்-வேதாள் பாணியா?

Unknown said...

Hai akka,

Neenga oru book publish panna laame..

Dr.Sameena@

www.lovelypriyanka.blogspot.com
www.myeasytocookrecipes.blogspot.com

அன்புடன் மலிக்கா said...

உங்களுக்கு மட்டும் இப்படி, எப்படித்தான் செய்தி கிடைக்குதோ.//

அதேதான் நானும் கேட்கிறேன் சித்து .

நல்ல தகவல்களுடன்கூடய பதிவு..

மங்குனி அமைச்சர் said...

எல்லோரும் கவனமாக கேளுங்க: ///

ஒரு நிமிஷம் மேடம் ,.............................ஓகே மேடம் ரெடி கவனமா கேட்டுகிர்றேன் , நீங்க சொல்ல ஆரம்பிங்க

KParthasarathi said...

அந்த ஊர்ல கொசுவை வைத்து ஒரு திருவிழா எடுக்கறாங்கன்னா,நீங்க அதுக்கு மேலே ஒரு படி போய் ஒரு புராணமே பாடி விட்டீங்க.ரொம்ப பிரமாதம இருந்துதுங்க

Deepan Mahendran said...

நிறைய புதிய தகவல்கள்...
இந்த மாதிரி இன்னும் நெறைய சொல்லுங்க...

Thenammai Lakshmanan said...

அட பாவி சித்து ரங்குஸ்கியையும் பிடிச்சுப் போட்டியே..:))

dheva said...

ரங்குஸ்கி.......மேளாவா சித்ரா?

தலைவர பட சீன்ல இருந்த எக்சைட்மென்ன்ட விட உங்க போஸ்ட் கலக்கல் அன்ட் ஆல் சோ.. இன்ஃபர்மேட்டிவ்ங்க.....


ஒவ்வொரு மக்கள் ஒவ்வொரு கலாச்சாரம் ஒவ்வொரு விருப்பம், ஒவ்வொரு ஃபன், வாழ்க்கை முறையும் சந்தோசங்களும் விருப்பு வெறுப்புகளும் என்று எல்லாம் சேர்ந்ததாய்தான் வாழ்க்கை இருக்கிறது.

நகைச்சுவையின் ஆழத்தில் மெல்லிய ஓட்டமாய் இருக்கும் வாழ்வியல் நியதி...

தட்ஸ் யுவர் வே ஆஃப் பாஸிங்க்... த இன்ஃபர்மேஷன் சித்ரா.. ! சூப்பர்ப்... ...keep rocking....!

ISR Selvakumar said...

ரங்குஸ்கி ஊரை பார்க்க ஆசையாகவும், அதைவிட தயக்கமாகவும் இருக்கு. வரும்போது ஓடோமாஸ் துணையுடன் வருகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொசுவின் அருமை பெருமையெல்லாம் அழகா எடுத்துச்சொன்னீங்க..

கொசுவுககும் கிடைக்குது மரியாதை.

அரும்புபத்தி விவரமா ஒரு பதிவுபோடுங்க..

சசிகுமார் said...

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா

சசிகுமார் said...

//ஏனோ வீட்டுக்குள் வந்து அராஜகம் பண்ணுவதில்லை..... என்ன மாயம் பண்ணி வைக்கிறாங்களோ? தெரியலியே//!

தெரிஞ்சிகிட்டு சீக்கிரம் சொல்லுங்க இதற்காக மாதம் 200 செலவாகிறது.

சசிகுமார் said...

//வித்தியாசமான குரல் அல்லது சத்தம் எழுப்புவாங்க. யார் கொடுக்கும் சத்தத்திற்கு முதலில் கொசுக்கள் கூட்டமாக வந்து அவர் கிட்ட மொய்க்கிறதோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.//

விஷயம் தெரியாத ஆளுங்களா இருக்காங்களே ஒரே ஒரு பலாச்சுளை இருந்தால் போதும் அவருக்கே வெற்றி.

Madurai pandi said...

இருங்க !! கொசு வலை போட்டுட்டு வரேன்!!!

VELU.G said...

யப்பா ஏதோ கொசு மேட்டருன்னு நெனைச்சேன்.

இவ்வளவு விஷயம் நடக்குதா?

நல்ல பகிர்வு

சேலம் தேவா said...

அவனவன் வேப்பிலை,கொசுவத்தி,ஓடோமாஸ்,எலக்ட்ரிக் பேட்டுன்னு கொசுவ இங்க ஒழிச்சிகிட்டு இருக்கோம்.. இதுல இவங்களுக்கு அது திருவிழாவாம்..!! கடுப்ப கிளப்பாதீங்க..!! :-)))

Paleo God said...

வாட் அன் ஐடியா சித்ராஜி! :)

RVS said...

ரெங்குஸ்கி பேரை சொல்லி எவ்ளோ விஷயம் சொல்லியிருக்கீங்க. நல்லா இருந்தது சித்ரா.

Prathap Kumar S. said...

எப்படில்லாம் யோசிக்கிறானுங்க...மொத்தத்துல வெள்ளைக்காரனனுங்களுக்கு லைஃபை என்ஜாய் பண்ணனும்... அதுக்காக இதுக்கு மேலயும் யோசிப்பானுங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super thakavalkal

அருண் பிரசாத் said...

இந்த கொசுக்கள் கடித்து வியாதி அமெரிக்காவில வராதா?

சைவகொத்துப்பரோட்டா said...

அட!! இப்படியும் ஒரு விழாவா!!

சாந்தி மாரியப்பன் said...

கொசுபுராணம் நல்லாவே இருந்திச்சு :-))))

Philosophy Prabhakaran said...

இந்த கொசுவ மருந்தடிச்சு கொல்லுங்கப்பா... எங்க போனாலும் பின்தொடர்ந்து வருது...

sakthi said...

ஆஹா ரங்குஸ்கிக்கு இத்தனை மதிப்பா ???

Udayakumar Sree said...

என் முதல் வருகை. அமெரிக்கா சென்றும், கொஞ்சுத்தமிழில் பதிவு எழுதுவதற்கு முதலில் ஒரு சபாஷ்..

நாம் "too much" என்று சொல்ல இந்த பரந்த உலகில் இன்னும் நிறையவே உள்ளன.

கொசுத்திருவிழா - புதிய செய்தி., மானுடத்தின் ஒரு புதிய முகம்.

அம்பிகா said...

ரங்ககுஸ்கி வித்தியாசமான விழா தான்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வித்தியாசாமான புதிய செய்தி

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப விரிவாதான் சொல்லுறீங்க.. எனக்குத்தான் ஃ புல்லா படிக்க முடியலை..
கண்டிப்பா அப்புறம் சாவகாசமா படிச்சுக்கிறேன்..

ஸ்ரீராம். said...

நம்பவே முடியவில்லை. ஆச்சர்யம். சுவாரஸ்யமான தகவல்கள்.

அரும்பு எங்கு வரும் பத்திரிகை?

சௌந்தர் said...

அந்த சீன் பார்க்கும் போது ரஜினி எஜமான் படத்தில் பட்டம்பூச்சி பிடிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது.

கொசுவுக்கு திருவிழா வா அட டா பெட் மாதிரி கூட வளர்ப்பாங்க போல

ராஜ நடராஜன் said...

//அமெரிக்காவிலும் சில ஊர்களில் - வெளி இடங்களில் கொசுத் தொல்லை உண்டு.... ஏனோ வீட்டுக்குள் வந்து அராஜகம் பண்ணுவதில்லை..... என்ன மாயம் பண்ணி வைக்கிறாங்களோ? தெரியலியே!) //

கொசுத் தொல்லைக்கு முக்கிய காரணம் ஈரப்பதம் என நினைக்கிறேன்.வளைகுடா 45-50 டிகிரி சூட்டுல கொசுவைப் பார்ப்பது மிகவும் கடினம்.அதுவே குளிர்காலமாயிடுச்சுன்னா எங்கேயிருந்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்குதுன்னே தெரியலை.மாலை ஆறுமணிக்கு மேல் அதுக ராஜ்யம்தான்.

வீட்டைச் சுத்தி மரம்,செடிகொடி நட்டுவைக்கிற கூட்டமாச்சே அமெரிக்கா?அப்படியும் கொசு வீட்டுக்குள்ள வரமாட்டேங்குதா?Air Spray போன்றவைகள் காரணமாக இருக்கும்.

கரப்பான் பூச்சிக்கு உலகத்தில இருக்குற அத்தனை மருந்தையும் பவுடர்,ஸ்பிரே,கோழி முட்டை,மைதாவுல மருந்து கலந்துன்னு அடிச்சும் சண்டைக்கு வரும் கரப்பான் Combatன்னு ஒரு அமெரிக்க டூத்பேஸ்ட் மாதிரி மருந்து வச்சா 6 மாசம் ஆட்களைக் காண்பதில்லை.6 மாசம் முடிஞ்சா பாகிஸ்தான்காரன் மறுபடியும் சண்டைக்கு வர்ற மாதிரிதான்:)நாங்கதான் combatங்கிற போபர்ஸ் வெச்சிருக்கிறோமே!

செல்வா said...

அட பாவமே ., இப்படி கூட திருவிழா இருக்கா என்ன ..?
செம காமெடியா இருக்கு அக்கா ..

ராஜ நடராஜன் said...

அமெரிக்கன் ரங்குஸ்கியெல்லாம் எந்திரன் காலத்து பச்சா!

பிள்ளையார் காலத்திலிருந்தே எலியனுக்கு படையல் வைக்கிற கூட்டமாக்கும் நாங்க:)

எம் அப்துல் காதர் said...

//இது எல்லாம் ஒண்ணுமே இல்லை -சப்பை மேட்டர்ஸ் என்பது போல ஒரு போட்டி வருது பாருங்க: டட்ட டிங் டோயன்க் டட்ட டிங்கு டோயன்க்..................!!! //

இந்த மியூசிக் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!ஹா.. ஹா.. ஹா..

Menaga Sathia said...

பகிர்வுக்கு நன்றிங்க...

ஜெயந்தி said...

இதுக்கு பேருதான் பாசிட்டிவ் அப்ரோச். தங்களது குறைகளையே நிறைகளா மாத்திக்கறது.

Kousalya Raj said...

கொசுவை சாதாரணமா நினைச்சுட கூடாதுன்னு தான் திருவிழா கொண்டாடுறாங்க...! இதை ஏன் நாமளும் follow பண்ண கூடாது......! அந்த சந்தோசத்திலாவது கொசு நம்மள கடிக்காம இருக்காதா...??!! :)))

நாடோடி said...

ஆஹா .. சூப்ப‌ர் விழாவா இருக்கே.. :)

இம்சைஅரசன் பாபு.. said...

நம்ம ஊர்லயும் கூடிய சீக்கிரம் இந்த மாதிரி விளைவை எதிர்பார்க்கலாம்

க.பாலாசி said...

வித்யாசமான திருவிழாவா இருக்கே... இங்கல்லாம் கொசுக்களுக்கு திருவிழா எடுக்கலன்னுதான் வீட்டுக்குள்ளையே சுத்துதுங்க போலருக்கு...

Nithu Bala said...

:-) Theriyatha seidhi..vazhakkam pola superb..

Athiban said...

இப்படியெல்லாம் பண்றாங்களா? நம்பவேமுடியல!

மோகன்ஜி said...

ரங்குஸ்கி இப்போ உங்க ஊருக்கு விசா வாங்கிகிட்டிருக்கு! உங்களைப் பாக்கத்தான் வரப போகுதாம்.. "வலை"யை விட்டு வெளியே வராதீங்க சித்ரா!

எஸ்.கே said...

ரொம்ப வித்தியாசமான தகவல்!

Ramesh said...

vara vara ulagathula nadakkura vithyasamana newsa varudhe unga blogla...valthukkal...asathunga..

Unknown said...

அமெரிக்கா வித்தியாசமான பொழுது போக்கு விசயங்களை கொண்டிருப்பது அறிந்து வியப்பாக இருக்கிறது .. நம்ம ஊருல மாரியாத்தாக்கு கூழு ஊத்துரதுக்குள்ள எத்தனை பிரச்சினை ...

Anonymous said...

இதுக்கெல்லாம் போட்டியா..ஸ்வாரஸ்யமாக தொகுத்துள்ளீர்கள்

சிவராம்குமார் said...

அடப பாவிகளா...இதுக்கெல்லாமா திருவிழா கொண்டாடுவாங்க!!!!

ஜெட்லி... said...

டாட்ஜ் பால் கேம் ஆன்லைனில் விளையாடியதாக நினைவு....
நீங்க நேர்ல அந்த கேம்ஆ பார்த்து இருக்கீங்களா...??

vasu balaji said...

கொசு மேட்டர்னு சொல்ல முடியாது இனிமே. இம்புட்டு இருக்கே:))

Suni said...

இந்த மாதிரி கொசு பிடிக்கிர போட்டி, ஈ பிடிக்கிர போட்டி னு போட்டி போட்டுட்டு போய் கலந்துக்கிறதாலா தான் அடிக்கடி class க்கு வர்ற்தில்லையா?

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு சித்ரா:)! அரும்புகளும் ரசித்திருப்பார்கள். வாழ்த்துக்கள்!

எப்பூடி.. said...

எந்த நேரமும் ஷங்கர் கிட்டயிருந்து பாராட்டி phone வரலாம், அலேட்டா இருங்க :-)

ராஜவம்சம் said...

சூப்பர் திருவிழா.

Asiya Omar said...

ரங்குஸ்கி பகிர்வு அருமை.நம்ப முடியலை,நம்பித்தானே ஆகனும்,சித்ரா சொன்னால்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிறுக்குபயபுள்ளக.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///யார் சிறந்த (???) கொசுக்காலை போல குச்சிக்கால் உடையவர் என்று நடுவர் குழு தேர்ந்து எடுக்கிறதோ அவர்களுக்கு பரிசும், ஆணுக்கு: "Mr. Mosquito Leg" மற்றும் பெண்ணுக்கு: "Ms. அல்லது Mrs. Mosquito Leg" பட்டமும் வழங்குவார்கள்.///

கிறுக்குபயபுள்ளக...!நம்மூருல டாக்டர் பட்டமே அள்ளி அள்ளி கொடுத்துக்கிட்டு இருக்கோம்!

Jayanthy Kumaran said...

very interesting post Chitra...your presentation is excellent with a visual feel..thanx dear for sharing..

Tasty Appetite

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்பவே சிரிச்சு ரசிச்சு படிச்சேன்! சூப்பர் போஸ்ட்!

Admin said...

நல்ல பதிவு வித்தியாசமான செய்தி..
பகிர்ந்ததற்க்கு நன்றி

ஈ ரா said...

முதல் முறை இங்கே வருகிறேன்...

நன்று(றி)..

Unknown said...

நல்ல கொசுக்கடி.

தாராபுரத்தான் said...

கொசு..வேடிக்கை..நல்லாத்ன் இருக்குதுங்க.

vanathy said...

நீங்களும் இந்த போட்டிகளில் பங்கு கொள்வீங்களா, சித்ரா????? வித்யாசமான பதிவு.

கிரி said...

ரங்குஸ்கி விஷயம் சுவாராசியமா இருக்கு :-) எந்திரன் படத்து காட்சிய நான் இந்த அளவிற்கு யோசிக்கல.. :-))

வருண் said...

***"இருந்தாலும் அந்த காட்சி டூ மச். நீங்களே சொல்லுங்க, சித்ரா," என்றார்.

"ம்ம்ம்ம்...... லாஜிக் மீறல்களுக்கு, official லைசென்ஸ் வாங்கியவை Sci-Fi தீம் மூவிஸ். அப்படி ஒரு படத்தில் வரும் காட்சி டூ மச்சா? ***

ஒரு மாதிரியா சுத்தி வளச்சி "இல்லை" னு சொல்லீட்டிங்க போல! :)))

Unknown said...

ஆஹா இது தெரியாத விசயமா இருக்கே,தகவலுக்கு நன்றி.இங்கிருக்கும் எனது அலுவலக நண்பர்களுக்கே(fortworth,texas) இதைப்பற்றி தெரியவில்லை

a said...

//
இன்னும் நியூ யார்க் போன்ற நகரங்களின் பாதிப்பு இல்லாமல், முழுக்க முழுக்க கிராமிய மணத்துடன் ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டு தான் இருக்கிறது....
//
நல்ல பதிவு..........

நிச்சியமாக........... நான் பார்த்தவரயிலும் அப்படியே..........

Anonymous said...

சித்ரா யூ ஆர் லவ்வபுல் யா...

ஏனோ இந்த முறை பதிவை படித்ததும் உங்களை பாராட்டனுமுன்னு தோனிச்சி பதிவை தான் 84 பேர் பாராட்டி இருக்காங்களே..

//நாங்க யாரு, real life லேயே 9 மச், 10 மச் எல்லாம் பார்த்தவங்க...... யாரு கிட்ட.....//


அதானா அருவா வெட்டு சித்ராவா கொக்கா.....

ம்ம்ம் கொசுவுக்கும் ஒரு பதிவு..

Anonymous said...

சித்ரா சிரிச்சி முடியலை விட்டுடுங்க நான் வரேன்...

Unknown said...

கொசுவை வைச்சு திருவிழாவா!!.. வித்தியாசமான செய்திதான்..

பாலா said...

நாராயணா.. இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா..
ஆனா Clute க்கு இந்த கவுண்டர் பஞ்ச செட் ஆகாது போலயே!!

நல்ல தகவல் அக்கா !!

தினேஷ்குமார் said...

என்னது 'O'+ive வா அப்ப கொஞ்சம் உஷாராதான் இருக்கணும்.

**சுற்றி திரிவது
என் வழக்கம்
பகிர்ந்து உண்வது
என் பழக்கம்**

அக்கா உங்களுக்குத்தான்

சுசி said...

அருமையான தகவல் சித்ரா.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி..

'பரிவை' சே.குமார் said...

கொசுவுக்கு திருவிழா...

சுவாரசியமான தகவல்.

Anonymous said...

நம்மள கடிக்கிற கொசுவுக்கே இப்டி திருவிழா நடத்துனாங்கனா..
கடி வாங்குற நமக்கு எப்ப்ப்ப்ப்டி திருவிழா நடத்துவாங்க???

ஹுஸைனம்மா said...

எல்லாம் சரி. வீட்டுக்குள்ள கொசு வராம இருக்க, என்ன செய்றாங்கன்னு கேட்காம விட்டுட்டீங்களே, அதில்ல முக்கியம்!!

vasan said...

நுண்ணிய‌ விச‌ய‌ங்க‌ளையும், நுட்பமாய் எழுதி நூற்றுக்கு நூறு வாங்கி விடுகிறீர்க‌ள்.
உங்க‌ளின் ச‌ளைக்காத‌, ச‌லிக்காத‌ பின்னோட்ட‌ங்க்ளும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் பதிவிலும் த‌னி ஸ்கோர் வாங்கிவிடும்.

Jaleela Kamal said...

இந்த கொசு பதிவ படிக்கும் முன் முத்ல்ல வயிற்று வலிக்கு ஒரு மாத்திரை போட்டு கொள்ளனும்

சிரிச்சி சிரிச்சி முடியல, முத்ல்ல விட்டுக்குள்ள வராவ இருப்பதற்கு கேளுங்கங்கள். ஊரில் மாம்பழ சீசனில் அப்பப்பா.

இந்த ரங்குஸ்கி கொசு கடி சூப்பர்

ராஜகோபால் said...

அந்த ஊருல கொசுவுக்கு எல்லாம் கொடபுடிகிராங்களா. வாழ்க!

Narayanan. said...

hi chitra,
u r providing free information service for american tourism... keep it up...!

-/சுடலை மாடன்/- said...

அருமை.

நன்றி - சொ.சங்கரபாண்டி

ம.தி.சுதா said...

உண்மையாக இன்ற தான் அக்கா இந்த ரங்குஸ்கி பற்றி அறிந்தேன் நன்றி அக்கா... ஆக்கம் மிகவும் பிரயோசனமாக இருந்தது...

Free computer tips said...

Supper post sister

Keep it up...

Jayanthy Kumaran said...

Hy dear,

An award is waiting for you at my blog...plz stop by to collect your award..

Tasty Appetite

thiyaa said...

best

Gayathri Kumar said...

Hi! You have received an award. Please visit my site and collect it. Best Wishes.

Suni said...

எல்லாம் கொசு மயம்

கொஞ்சம் விட்டாக்க எல்லாரும் சேர்ந்து கொசுவுக்கு ரசிகர் மன்றம் வைச்சிருவாங்க போல இருக்கு.

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

சி.பி.செந்தில்குமார் said...

செம டைமிங்க் மேட்டரா இருக்கே.எந்திரன் ரிலீஸ் டைம்ல கரெக்ட்டா அந்த சீனுக்கு லிங்க் பண்ணீ ஒரு பதிவா? ம் ம் பிழைச்சுக்குவீங்க

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வித்தியாசாமான புதிய செய்தி

அன்புடன் அருணா said...

அடடா!கொஞ்சம் லேட்டாயிடுச்சு!அருமை!

Pavithra Srihari said...

been reading all the posts regularly and some I share it in my facebook also chitra ka , only thing is me not posting comments here and not being regular on my blog as well ... sirikka sindhikka konjam vetti pechu ... :)

Anisha Yunus said...

ஆஹா....கொசுவுக்கு ஒரு திருவிழா...அதான் சொல்றது, கொசுவா பிறந்தாலும் அமெரிக்கா கொசுவா பிறக்கணும்....ஹ்ம்ம்...எல்லாம் கொடுத்து வச்ச கொசுங்க....சாரி...மனுசங்க.. :))

pichaikaaran said...

மிக மிக வித்தியாசமான பதிவு... புதிய தகவல்களை ஒவ்வொரு பதிவிலும் தருகிறீர்கள்..
மிக்க நன்றி

பவள சங்கரி said...

சித்ரா நான் மின் தமிழில் செய்தி தொகுப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறேன். தீபாவளி மலருக்கு ஒரு நல்ல கட்டுரை உங்க ஸ்டைல்ல எழுதி கொடுங்க சித்ரா, என் மெயில் ஐடி pavalaarasu@gmail.com பதில் அனுப்பவும்.

Shanthi Krishnakumar said...

Interesting and news

Romeoboy said...

இது எல்லாம் அமெரிக்கால மட்டும் தான் சாத்தியம் .. என்னமா யோசிக்கிறாங்க ..

jai said...

டைய் நாராயண இந்த கொசு தொல்ல தாங்க முடியலட ---- அப்படின்ற நாம கௌண்டமணி சார் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது,,,verry funny n intresting

vinu said...

yappaaa intha kosu thollai thaanga mudiyalapaa

மனோ சாமிநாதன் said...

புதிய செய்திகள்! சுவாரஸ்யமாக இருந்தன.
தகவல்களுக்கு அன்பு நன்றி சித்ரா!!

ரோஸ்விக் said...

இதெல்லாம் எனக்கு கொசு மாதிரி-ன்னு அவ்வளவு எளிதா சொல்லிட முடியாது போல...
சுவாரஸ்யமா இருக்கு சித்ரா...:-)

Matangi Mawley said...

Damn interesting!! Hollywood-ku inspiration engernthellaam varuthunnu ippathaan theriyuthu.... namma ennadaanna- intha scene-a "too much" "three much"nu kindal pannikittu pozhutha pokkarom!

very good thakaval!!! thanks for sharing!

KParthasarathi said...

என்ன ஆச்சு?ஐந்து நாட்களாக மௌனம்..ஒண்ணுமே எழுதவில்லையே.கை வசம் சரக்கு இல்லையா?.உங்களுக்கு சரக்கே தேவை இல்லையே. வெட்டி பேச்சுதானே.பின்ன என்ன? உங்கள் ப்ளாக்கு வந்து வந்து கையெல்லாம் வலி.

புல்லாங்குழல் said...

தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையை ரசிக்க தக்கதாக மாற்றி கொண்ட புத்திசாலித் தனத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.சகோதரி சித்ராவுக்கு இரட்டை பாராட்டு. வேடிக்கையாகவே படிப்பினையூட்டும் உங்கள் திறமை பிரிலியண்ட்.

அதிரை என்.ஷஃபாத் said...

ரங்குஸ்கியார் சிலையா? பாஸ் (எ) பாஸ்கரன் ல, மங்கூஸ் மண்டையா னு சொல்ற மாதிரி இருக்கு :)


www.aaraamnilam.blogspot.com

Chitra said...

Very good response for this post.... Thank you all very much!!!

அன்புடன் மலிக்கா said...

சுவாரசியமான தகவல்.
அதோடு கொசுவின் அருமை பெருமையெல்லாம் அருமையா எடுத்துச்சொன்ன சித்துமேடமக்காவிற்க்கு ஒரு ஜே..