ஒரு சுவாரசியமான பயணம் முடிந்து, உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
எங்கள் பயணத்தின் போது, மெக்ஸிகோ நாட்டில் இருந்து வந்து, அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் இருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் Oct. 31 வர இருக்கும் Halloween பார்ட்டிக்காக ஷாப்பிங் செய்து கொண்டு இருந்த பொழுது என்னை அணுகி, ஒருவர் ஸ்பானிஷ்ல் பேச ஆரம்பித்தார்.
"Habla no Espanol. Solo Ingles," என்றேன். எனக்கு தெரிந்த பத்து ஸ்பானிஷ் வார்த்தைகள் வைத்து அவ்வளவுதான் சொல்ல முடிந்தது. அவர் ஆச்சர்யத்துடன் என்னை பார்த்து விட்டு, அரை குறை ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் accent உடன், "You, no Mehican!" (மெஹிக்கன்) என்றார். அட பாவிங்களா! கொஞ்சம் (??) chubby ஆக இருந்து, கருத்த முடியுடன், 5 1/4 அடியில் இருந்தாலே, Mexico பொண்ணுன்னு முத்திரை குத்திட்டாங்களே! "NO, NO, PAIS (பாயிஸ் - நாடு) INDIA," என்றேன்.
பதிவராச்சே! விடுவோமா? "வெட்டி பேச்சு" அங்கேயும் தொடர்ந்தது... அவரது அரை குறை ஆங்கிலமும், எனது குறைவே குறைவான ஸ்பானிஷ்ம் - மீதி நாட்டிய முத்திரைகளுமாக புதிய "மொழி"யில் "தகிடதோம்" செய்து சேகரித்த தகவல்கள்:
Halloween டாபிக்ல ஆரம்பித்த பேச்சு, எங்கே போய் முடிந்தது என்று பாருங்க! நான், இலக்கண சுத்தமாக ஆங்கிலத்தில் பேசினால், புரிந்து கொள்ள சிரமப்பட்டார். என்னுடைய ஸ்பானிஷ் விட அவரது ஆங்கிலமே நன்றாக இருந்ததால் - அவரே பெரும்பாலும் பேசினார். "You no seeing " என்ற ரீதியில் அவர் பேசியதை - "நீ பார்த்ததில்லையா?" என்று நான் எளிதில் புரிந்து கொண்டேன். நாங்க எப்பூடி!!!!
நவம்பர் 1 - All Saints Day மற்றும் நவம்பர் 2 - All Souls Day என்று பல கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. மெக்ஸிகோவில் நவம்பர் 2 - பெரிய விசேஷமான நாளாம். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குடும்பத்தில் இறந்து போன உறவினர்களை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் நாளாம்.
Oct. 15 முதல் Nov. 2 வரை கோலாகலம்தானாம் ...... நம்மூரு ஊர் திருவிழா மாதிரி சொன்னார். குடும்ப கல்லறைகள் இருக்கும் இடத்துக்கு, Family Reunion என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஊர் திருவிழா போல ஆஜர் ஆகி விடுகிறார்கள். எல்லா கல்லறைகளும் வெள்ளை அல்லது பெயிண்ட் அடிக்கப்பட்டு, புல்லு பூண்டுகள் எல்லாம் நீக்கி சுத்தமாக்கப்பட்டு, நிறைய மலர்களால் அழகாக அலங்காரம் செய்யபடுகின்றன. இறந்து போன உறவினர்களின் விருப்ப உணவு வகைகள் அனைத்தும் சமைத்து கொண்டு வருகிறார்கள். ஒரு சின்ன பூஜை மேடை போல அமைத்து, உணவு வகைகளை படைத்து, ஸ்பெஷல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கிறார்கள்.
வாழைப்பழம், பத்தி, தேங்காய் மூடி எல்லாம் இருக்குமா என்று கேட்கலாம் என்று நினைத்தேன்..... அவற்றிற்குரிய ஸ்பானிஷ் வார்த்தைகளும் சரி, எனது அபிநயமும் சரி - ரொம்ப கேவலமாக வந்ததால், அந்த முயற்சிக்கு "சங்கு" ஊதிட்டேன்.
skull சாக்லேட்:
Nov. 2 - அந்த விசேஷ நாளை: "Day of the Dead" என்று அழைக்கிறார்கள். Skeletons and Skulls போல செய்யப்படும் பொருட்கள், கடைகளில் ஏராளமாக அலங்காரப் பொருட்களாக விற்கப்படுகின்றன. Halloween நேரத்து Scary கதைகள் போல கேட்டு கொண்டு இருந்த என்னை, நாங்கள் இருந்த கடையில் ஒரு பிரிவுக்கு அழைத்து சென்று காட்டினார்: எலும்பு கூடு - மண்டை ஓடு போன்ற அமைப்பில் உள்ள சாக்லேட்கள். அதை வாங்கி போய், இறந்தவர்களுக்கு வைக்கும் படையலில் மறக்காமல் வைப்பார்களாம். நல்லா கிளப்புறாங்க பீதியை! யம்மாடி!
அமெரிக்கா வந்த பின்னும், இந்த traditional customs விடாமல் வருடா வருடம் மெக்ஸிகோ செல்வதாக சொன்னார். அடுத்த வருஷம் பொங்கல் வைக்க ஊருக்கு போகணும் என்று சொல்ல ஆசையாக இருந்தது. ம்ம்ம்ம்...... பெருமூச்சு!
கீழ் உள்ள படத்தில்: ஒரு இனிய தமிழ் கிராமம் அல்ல - ஒரு இனிய மெக்ஸிகோ கிராமம்:
அடுத்து அவர் சொன்ன விஷயம், சுவாரசிய களஞ்சியம். வீட்டில் படிக்கட்டுகள் போல மேடை அமைத்து இருப்பார்களாம். அவர் சொன்னதை பார்த்தால் - கொலு வைக்க அமைக்கும் மேடை போல இருந்தது. எந்த அளவுக்கு புரிந்தது என்று பார்க்க கூகிள்னேன். அப்படித்தான் தெரியுது. அந்த ஸ்பெஷல் ஆல்ட்டர்ல, குடும்பத்தில் இறந்தவர்களின் புகைப்படங்கள், மலர்கள், அவருக்கு பிடித்த சின்ன சின்ன பொருட்கள், உணவு பொருட்கள், பானங்கள் (விருப்பப்பட்ட குளிர் பானங்கள் அல்லது காபி அல்லது பீர் அல்லது Tequila பாட்டில்) , மெழுகுவர்த்திகள், பத்திகள், சின்ன பொம்மைகள் எல்லாம் வைத்து அலங்கரித்து வைப்பார்களாம். இனிப்பினால் (candy) செய்யப்பட்ட சின்ன skulls (மண்டை ஓடுகள்) எடுத்து வைத்து, ஒவ்வொன்றிற்கும் பின்னால் இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர் எழுதப்பட்டு வைக்கப்படுகிறது.
கீழ் உள்ள படத்தில், Mexican கொலு:
நவம்பர் மாதம் இரண்டாம் நாள், இறந்து போன குடும்பத்து ஆத்துமாக்கள் வீட்டிற்கு விஜயம் செய்யும் என்று நம்புகிறார்கள். அதான் இத்தனை ஏற்பாடாம்! காக்கா உருவத்திலா என்று கேட்க நினைத்து, கைகள் இரண்டையும் விரித்து நானே பறக்க எத்தனிக்கையில், அவரே அண்டங்காக்கைகள் பற்றி பேச ஆரம்பித்ததும், வாலை சுருட்டி - சாரி, கைகளை மடக்கி கொண்டேன்.
குடும்பத்தினர் அனைவரும் கூட்டு குடும்பத்தினர் போல - வேறு எந்த ஊர்களில் இருந்தாலும் தங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுகிறார்கள். கல்லறைகளுக்கு சென்று, அங்கேயே விழா கொண்டாட்டம்! மெக்ஸிகோவில் பிரசித்தி பெற்ற மரியாச்சி (Mariachi Band - மரப்பாச்சி இல்லையாம் மரியாச்சியாம்) இசைகுழுவினரின் கச்சேரி, வாண வேடிக்கைகள், பிக்னிக் உணவுகள் எல்லாவற்றுடன் அமர்க்களப்படுமாம். விடிய விடிய நிகழ்ச்சிகள் - ஜெபங்கள் என்று இருக்குமாம்.
குடும்பத்தில் இறந்து போனவர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவது மட்டும் அல்ல, குடும்பத்தின் பெருமைகளை மதித்து - உறவுகள் பலப்படுத்தப்படவும் - வேலை நிமித்தமாக பல ஊர்களில் இருக்கும் குடும்பத்தினர் - தங்கள் குடும்பத்தின் வேர் பதிந்து உள்ள இடத்தில் சங்கமிப்பதும் இந்த நாளில் என்று சொன்னார். அட அடடா....... நம்மூரு நாட்டமை குடும்பங்கள் ரேஞ்சுக்கு சொல்லிட்டாரே! என்ன, அங்கே ஆலமரத்தடி - இங்கே கல்லறையடி - அம்புட்டுத்தேன்!
HAPPY HALLOWEEN!
117 comments:
HAPPY HALLOWEEN!
Mexican Golu soopparoo
சித்ரா ரொம்ப நன்றி. ரொம்ப நாள் இதை பற்றி சரியாய் தெரியாம இருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன்
HALLOWEEN பத்தி நிறைய தெரிஞ்சுக்க வச்ச எங்க சித்ராக்கு மண்டை ஓடு சாக்லேட் பார்சல் :))
//நாளை உனது நாள்//
என்னமா தலைப்பு வச்சிருக்கீங்க.. ம் ம்..
ஒரே வரில தத்துவம் எல்லாம் மூட்டை கட்டிட்டீங்களே :)
ஏங்க நீங்க மாட்டுக்கு சொல்லிக்காம காணமா போயிட்டீங்க.. நான் ஒரு பதிவ போட்டுட்டு சப்போட் பண்ண ஆள் தேட வேண்டியிருக்கு :)
//நீங்க மாட்டுக்கு///
மாட்டுக்கு ???
ஹேப்பி ஹாலோவீன்
நிறைய புது தகவல்கள். மெக்ஸிகன் கொலு சூப்பர்.
தெரியாத பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!
அந்த கொலுவில் வாழையெல்லாம் வைத்துக் கட்டியிருக்கிறார்கள் போலயே.
நான் எனது இடுகைகளை jeejix-இல் இணைத்திருந்தேன். அதில் சன் டி.வி-க்கு சில கேள்விகள் என்ற இடுகை கடந்தவாரத்தில் அதிகம் படிக்கப்பட்ட இடுகையாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஐநூறு பரிசினை பெற்றிருந்தது. ஆனால், அந்த பரிசினை பேபால் (paypal) மூலமாகத்தான் பெற்றுக்கொள்ளமுடியுமாம். அதென்ன பேபால்? அந்த பரிசினை பெற்றுக்கொள்வது எப்படின்னு யாராவது பரிசு வாங்குனவங்க சொல்லுங்களேன்.....குறிப்பாக வெட்டிபேச்சு சித்ராக்கா, உங்கள் இடுகையும் பரிசு பெற்றிருந்தது. நீங்களாவது சொல்லுங்களேன்.
பயங்கர திகிலான பயணம் போல. பகிர்வுக்கு நன்றி
wow...very interesting n informative post Chitra...ur presentation is excellent n love your lively writeup...just had a wonderful trip with you...Thanx for sharing dear..:)
Tasty Appetite
அட!! கொலு போலதான் இருக்கு.
புது தகவலாய் இருந்தது எனக்கு..உடன் வந்த போல உண்ர்வை ஏற்படுத்தி விட்டது படங்களும் உங்கள் பகிர்வும்...
ஹேப்பி ஹாலோவீன்
சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்
சித்ராக்கோய்...!!!
வர வர விக்கிப்பீடியா ரேஞ்சுக்கு பதிவுப் போட ஆரம்பிச்சாச்சா...!!! பதிவு சும்மா கம கமன்னு கலக்கலா இருக்கு...விக்கிப்பீடியாக்காரங்க சண்டைக்கு ஏதும் வரமா இருந்தா சரிதான்.
அடிக்கடிக் காணாம போறீங்க! உங்க காத்து அங்கிருந்தே என் மேலேயும் வீசுதுப் போல. நானும் 1 மாசம் பெங்களூர் போறேன். முடிஞ்சா பதிவு எழுதறேன். அதேப்போல முடிஞ்சா நண்பர்களோட பதிவுகளை படிக்கிறேன். உங்க சவகாசம் என்னையும் இப்படி ஊர் சுத்த வைச்சுடுச்சுப் போல... விதி யாரை விட்டது.
பார்ரா! புதுசு புதுசா நெறைய விழாவை பத்தி சொல்றீங்கோ! நன்றி!
உங்கள் இடுகை ஒவ்வொன்றும் அருமை.அம்மாடி எவ்வளவு விஷயம் பேசியிருக்கீங்க.பகிர்வுக்கு மிக்க நன்றி.மண்டை ஓடுன்னா பயம் இந்த சாக்லேட்டை பார்த்ததில் கொஞ்சம் பயம் போனமாதிரி...ஹி.ஹி...
HAPPY HALLOWEEN
சுவாரச்யமான தகவல்கள்.
பன்மொழி வித்தகியா நீங்க;))
அப்புறம் அந்த ஸ்கல் சாக்லேட் எனக்கு பார்சல்:))
நாளை உனது நாள்-ன்னு சொல்லிட்டு கல்லறைக்கு பக்கத்தில் உட்கார்ந்து (குடும்ப) கதை வேறையா?
நீங்க சரியா காதுல வாங்கல... அது மரப்பாச்சிதான்... எனக்கு கண்ணத்துல கைவச்சி படுத்திருக்கே அந்த பிங்க் மரப்பாச்சி வேணும்.
அட பாவிங்களா! கொஞ்சம் (??) chubby ஆக இருந்து, கருத்த முடியுடன், 5 1/4 அடியில் இருந்தாலே, Mexico பொண்ணுன்னு முத்திரை குத்திட்டாங்களே! //
ஆமா ஆமா அந்த ரெண்டாவது போட்டோவப் பார்த்தாலே தெரியிது.:)
சுவாரசியாமான பதிவு... நல்லாயிருக்கு..
இந்தியால கடலைத்தாண்டிப் போயிட்டா எல்லா பயலுக்கும் குடும்பம் கிடையாது கலாச்சாரம் கிடையது ஒட்டு கிடையாது உறவு
கிடையாதுன்னு சொல்லிக்கிட்டு திரியறாங்க..
நீங்க நாட்டாமை தீர்ப்ப மாத்தி எழுதிட்டீங்க .. இனியாவது புரிஞ்சுக்குவாங்களா..?
கொலுல அது என்ன வாழைமரமா..என்ன ஒரு அழகா
அலங்கரிச்சிருக்காங்க..
Very interesting and lot of information. It is as if we had gone there in person. The heading is super with philosophical touch which is true too.
Great post keep posting.
பல ஊர்களில் இருக்கும் குடும்பத்தினர் - தங்கள் குடும்பத்தின் வேர் பதிந்து உள்ள இடத்தில் சங்கமிப்பதும் இந்த நாளில் என்று சொன்னார். அட அடடா....... நம்மூரு நாட்டமை குடும்பங்கள் ரேஞ்சுக்கு சொல்லிட்டாரே!/////
ஒரு வேலை நாட்டமை படம் பார்த்து இருப்பாரோ
******கல்லறை சுவடுகள்
கடல் தாண்டியும்
கரைவதில்லை
முடிவில்லா பயணம்******
அக்கா சுற்றுபயணம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததா.....
Hi,
Happy halloween!!Lovely clicks...:)
Dr.Sameena@
www.myeasytocookrecipes.blogspot.com
HAPPY HALLOWEEN!
சுவாரசியமா இருக்குது....
அருமையான தகவல் சித்ரா... வித்தியாசமான தகவல்களா எப்படித்தான் தேடிப்பிடிக்கிறீங்களோ.. அந்த சாக்லேட் மண்டை ஓடு... சூப்பர்.. தலைப்பை நான் வேற விதமா புரிஞ்சுக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன்..
படிச்சு முடிச்சதும்... நாளையேவா... அடப்பாவின்னு இருந்துச்சு.. இப்படி பீதிய கிளப்பறீங்களே...
//என்னது நானு யாரா? said. "வர வர விக்கிப்பீடியா ரேஞ்சுக்கு பதிவுப் போட ஆரம்பிச்சாச்சா...!!! பதிவு சும்மா கம கமன்னு கலக்கலா இருக்கு...விக்கிப்பீடியாக்காரங்க சண்டைக்கு ஏதும் வரமா இருந்தா சரிதான்." //
ஏலே பசுபதி,, யாருலே நா நினைச்சதை எழுதினது.. 'என்னது, நானு யாரா'ன்னு சொல்லுறாரா.... இந்த நாட்டாமை யாருன்னு சொல்லலாம்.. வண்டிய பூட்டப்பு..
பதிவு நல்லாயிருந்ததுங்க..
HAPPY HALLOWEEN..
நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டோம் , அந்த கொலு போட்டோ சூப்பர்.
happy haloween
"நாளை உனது நாள்" - ம்ஹ்ஹும் இதுக்கு இதுதான் அர்த்தமா.. பொருத்தமான தலைப்பு..
rendaavathu photovil unga pair very beautifull
chubby ஆக இருந்து, கருத்த முடியுடன், 5 1/4 அடியில் இருந்தாலே,
aanaa photovil pink dressil rombaveaa slimmaaga irrupathupolla irrukiratheaaaaaaaaaaaa
good share. thank you
எச்சூச்மி அந்த ரெடாவதா இருக்கு உங்க பேமிலி போடோ ரொம்ப அழகா இருக்கு மேடம்
பகிர்வுக்கு நன்றி மேடம்.
இது மாதிரியே இன்னும் நிறைய பேர அபிநயம் புடிச்சி பயமுறுத்துங்க..!! ஹி.ஹி..ஹி...
தலைப்பே டெரர் தான் உள்ளே எலும்பு கூடுகள் ...
எப்படியெல்லாம் அபிநயம் பிடிச்சிருப்பீங்கன்னு யோசிச்சி பார்க்கிறேன்
நான் 20 நாட்கள் ஈரான் நாட்டின் ஒரு தீவில் ( கிஷ் ஐலண்ட் ) இருந்தேன், அவர்களுக்கு தெரிந்த எந்த மொழியும் எனக்கு தெரியவில்லை, சிரிச்சே ஓட்டினேன் நாட்களை, சில அபிநயங்களோடு ...
சுவாரசியமான பகிர்வு
அருமையான தகவல்கள் சித்ரா.
அருமையாகவும் சுவாரசியமாகவும் பகிர்ந்துள்ளீர்கள் சூப்பர்
புரோபைல் போட்டோவும் மாற்றிவிட்டீர்கள்போல் நன்றாக உள்ளது
பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
எல்லா புது தகவல்களும் நல்லா இருக்கு HAPPY HALLOWEEN!!
Intresting...
Pictures are nice..
நிறைய நம்ம ஊர் திருவிழாக்களில் உள்ள அம்சங்கள் நிறைய இருக்கு இல்ல.
thanks cithra.happy halloween
பின்றீங்க போங்க...ஒரே ட்ரிப் மயமா இருக்கு....:))
//பதிவராச்சே! விடுவோமா? "வெட்டி பேச்சு" அங்கேயும் தொடர்ந்தது... அவரது அரை குறை ஆங்கிலமும், எனது குறைவே குறைவான ஸ்பானிஷ்ம் - மீதி நாட்டிய முத்திரைகளுமாக புதிய "மொழி"யில் "தகிடதோம்" செய்து சேகரித்த தகவல்கள்:
///
அந்த மொழிக்கு என்ன பேரு வச்சீங்க அக்கா ..?
//என்ன, அங்கே ஆலமரத்தடி - இங்கே கல்லறையடி - அம்புட்டுத்தேன்!//
மெக்ஸிகோவுல கூட இந்த அளவுக்கு இருக்கா ..?
நம்பவே முடியலை , ஆனா நல்லா இருக்கு அக்கா ..௧!
தெரியாத பல தகவல்கள். சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.
நாய் வித்த காசு குலைக்காது! மண்டை ஓடு சாக்லெட் கசக்காது! அய்.. தத்துவம்!
ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!
http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html
Halloween patriya thagaval migavum arumai.
நல்லா பகிர்வு சகோ... நிறைய விசயங்கள்...
நான், இலக்கண சுத்தமாக ஆங்கிலத்தில் பேசினால், புரிந்து கொள்ள சிரமப்பட்டார்.
sithraaசித்ரா,இதை நாங்க நம்பிட்டோம்.நீங்க இங்கிலீஷ் பேசுவீங்களா?
An informative post written in her inimitable interesting style
very interesting!!
எலும்புக்கூடு சாக்லேட்டா .. நல்லா கிளப்புறாய்ங்கயா பீதிய.. சாக்லெட்டை பார்க்கவே பயமா இருக்கு..சித்து..
abinayam ,, serndhu varadhaala ... ROFL ... amreica var irundhaalum ... amnjakarai maari thaan pola irukku
போட்டோக்கள் அருமை தகவலும் சூப்பர்.
//அட!! கொலு போலதான் இருக்கு//
thakaval therinthu koNdeen
நாளை உனது நாள்! அப்படின்னு ஆவிகளைக் கூப்பிடுரிங்களா ? :)
மெக்சிகோ பாதுகாப்பில்லாத நாடு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.. அது உண்மையா!
@Giri: Corruption is a severe problem. To read more on:
http://en.wikipedia.org/wiki/Crime_in_Mexico
நல்ல தகவல்கள், சித்ரா. நான் chubby அல்ல. ஆனால், சில சமயங்களில் ஹாய்! Senorita என்று ஸ்பானிஷில் சொல்கிறார்கள். நான் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை ஹோலா ( டோரா பார்த்து கற்றுக் கொண்டது ) என்று சிரிப்பேன்.
welcome back..
"நான் எளிதில் புரிந்து கொண்டேன். நாங்க எப்பூடி!!!! "
தென் தமிழகத்தின் அறிவுய் கூர்மையை, உலக அரங்கில் நிரூபித்தற்கு நன்றி... வாழ்த்துக்கள்..
சுவையான தகவல்கள் , இழையோடும் நகைச்சுவை என அமர்க்களம்..
சித்திரம்........ உங்களுக்கு பண்டிகை வாழ்த்துகள்.
முன்னோர்களை நினைவு கூர்வதில், சில அடிப்படை விஷயங்கள் பெரும்பாலான இனங்கள் மற்றும் மதங்களில் ஏறத்தாழ ஒன்று போல் தான் உள்ளது.
எனக்கென்னமோ நீங்க பதிவெளுதிறதுக்காகவே ஊரூரா சுத்திரமாதிரி இருக்கு :-)
***வாழைப்பழம், பத்தி, தேங்காய் மூடி எல்லாம் இருக்குமா என்று கேட்கலாம் என்று நினைத்தேன்..... அவற்றிற்குரிய ஸ்பானிஷ் வார்த்தைகளும் சரி, எனது அபிநயமும் சரி - ரொம்ப கேவலமாக வந்ததால், அந்த முயற்சிக்கு "சங்கு" ஊதிட்டேன்.***
நல்லவேளை, தப்பிச்சாரு அந்த அப்பாவி மெக்ஸிகன்! :)))
nalla thakavalkal...
eppothum pola nakaichuvai nirampi vazhikirathu :)
பரவாயில்லைங்க...ஒரு வித வித்தியாசமான ட்ரிப்தான்....
புதிய புதிய கலாச்சாரம் வாழ்க்கைமுறைகள்...ஆச்சர்யமா இருக்கு....!
எல்லாமானது வாழ்க்கை!Hope you had nice time.!
Thank you for sharing.....!
பல புதிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
நம்ம ஊரே பரவாயில்லை போல உள்ளது..நல்ல பதிவுதான்ம்மா..
தெரியாத தகவல்கள் அழகிய படங்களுடன்..மெக்ஸிக்கன் கொலு அருமை:-)
Hi,
Nice post.
2 days leave கேட்டுட்டு 5 days காணாம போய்றீங்க.
"நான், இலக்கண சுத்தமாக ஆங்கிலத்தில் பேசினால், புரிந்து கொள்ள சிரமப்பட்டார்." எல்லாம் என் class வந்ததுனாலனு சேர்த்து சொல்லியிருக்கலாம். :-)
profile pic super.
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
HALLOWEEN பத்தி நிறைய புது தகவல்கள் பேசியிருக்கீங்க.பகிர்வுக்கு மிக்க நன்றி.
இதைப்போல் இன்னும் அங்குள்ள பண்டிகைகளைப்பத்தி எழுதுங்க..
புது புது தகவலா போடுரீங்க,உஙளுக்கும் பண்டிகை வாழ்த்துக்கள்
அருமையாக ஹாலோவீன் நாளைப் பற்றி எழுதி உள்ளீர்கள்.
நம்ப ஊற் கொலு மாதிரி உள்ளது. 5படி,வாழைமரம், மலர் அலங்காரம் என்று அழகோ அழகு.
நிச்சியம் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஹாலோவீன் வாழ்த்துக்கள்!
உங்களது பதிவுகள் 'இதயம் பேசுகிறது' மணியன் பாணியை விட யதார்த்த மாகவும் நகைச்சுவை உணர்வோடும் உள்ளது. உங்களது பதிவுகளை பதிப்பிக்க முயலலாம். வாசகர்களுக்கு ஒரு பயணக் கருவூலம் கிடைக்கும்.
வாழ்த்துக்கள்.
படங்கள் அருமை. ஹாலோவின் வாழ்த்துக்கள்!
மெக்சிகோ மக்களும் கிட்டதட்ட இந்தியர்கள் போலவே, குடும்ப அமைப்பை ரொம்ப மதிக்கின்றனர். எனக்குப் பிடித்த நாடு மற்றும் மக்கள். ஒரே ஒரு தடவை மட்டும் போயிருக்கிறேன். நிறைய பார்க்க வேண்டும் அங்கே. கந்தசாமியில் கொஞ்சமே கொஞ்சம் காட்டி ஏமாற்றி விட்டார்கள்!
எங்கள் வாண்டுவின் பள்ளியிலும் நாளை கொண்டாட்டமாம். ட்ரிக்கா ட்ரீட்டான்னு இன்னும் முடிவு பண்ணலே!
கொஞ்ச நாள் போனா இதுக்கும் விடுமுறை விட்டாலும் விடுவாங்க போல :)
ஹாலோவின், இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு வந்ததாகக் கேள்வி. 'அறுவடைத் திருநாள்' ன்னு அதுக்கு பேராம்.
கட்டுரையும் படங்களும் ரொம்ப சுவாரசியம்.
//வாழைப்பழம், பத்தி, தேங்காய் மூடி எல்லாம் இருக்குமா என்று கேட்கலாம் என்று நினைத்தேன்..... அவற்றிற்குரிய ஸ்பானிஷ் வார்த்தைகளும் சரி, எனது அபிநயமும் சரி - ரொம்ப கேவலமாக வந்ததால், அந்த முயற்சிக்கு "சங்கு" ஊதிட்டேன்.//
LOL!!!!! :)))))
நல்ல பகிர்வுங்க... இதுல முத்துலட்சுமி அக்காவோட முதல் கமெண்ட்டையே நானும் சொல்லிக்கிறேன்.
super ka... :))
//
Balaji saravana said...
HALLOWEEN பத்தி நிறைய தெரிஞ்சுக்க வச்ச எங்க சித்ராக்கு மண்டை ஓடு சாக்லேட் பார்சல் :))
//
Repeattuuuu..
மெக்சிகோ இந்திய சாயலில்தான் இருக்கிறது ...
வேக வேகமான நடையில் பதிவு எழுதுறீங்க... படிச்சு முடிச்சா மூச்சு வாங்குது...
பதிவு கலக்கல்...
இங்க நானும் வந்து போனேனு சித்ரா கிட்ட சொல்லிடுங்கப்பா..
nice. Thanks for sharing
பல அதிசய தகவல்கள். மிக்க நன்றி சித்ரா.
மெக்ஸிகோ கண்ட சித்ரா டீச்சர் வாழ்க
வேட்டிபேச்சே இவ்ளோ useபுல்லா இருக்கே.....
Habla no Espanol. Solo Ingles
அப்படினா என்னாக்கா ..? சொல்லவே இல்லையே....
Superb...
India pathi eluluthanum nu uthvekam vanthuruchu...
படம் எல்லாம் சூப்பர் அக்கா!..:)
அவங்க ஊரில் Halloween கு வீட்டு வாசல்ல பரங்கிக்காய் வைப்பாங்களா?
dear chitra, ur blog is wonderful. very interesting n informative:) pl do visit my new bog when u find time.
Cheers:)
shalini
happy halloween!!!
மொழி படத்துல வரும் வரிகள்
இதயத்தின் மொழிகள் தெரிந்து விட்டால் மனிதனுக்கு மொழிகள் தேவை இல்லை
இயற்கையின் மொழிகள் தேய்ந்து விடில் மனிதனுக்கு மொழியே தேவை இல்லை ..
நம்ம ஊரு பக்கம் எல்லாம் படையல் வைப்போமே அதே பழக்கம் தான் போல் :) ஆச்சர்யமா இருக்கு
ரொம்பவும் சுவாரஸ்யமான தகவல்கள் சித்ரா! நம்ம ஊர் தவசம் தான் ஞாபகம் வந்தது! நாடுகளும் மொழிகளும் கலாச்சாரமும் வெவ்வேறு என்றாலும் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கின்றன! புகைப்படங்கள் எல்லாம் அருமை!
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்
தெரியாத பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!
ஃஃஃஃஃஃஅவரது அரை குறை ஆங்கிலமும், எனது குறைவே குறைவான ஸ்பானிஷ்ம் - மீதி நாட்டிய முத்திரைகளுமாக புதிய "மொழி"யில் "தகிடதோம்" செய்து சேகரித்த தகவல்கள்:ஃஃஃஃஃஃஃ
அக்கா அதை எனக்கும் சொல்லித் தாங்களேன்... சில வேளை உதவலாம்...
Yes!!! You really take after Mejicana!!! :-) And, I like learning different cultures! I like this post!!!
மெக்சிகன் சுண்டல் பத்தி எதுனா தெரிஞ்சுதுங்களா?
RESPECTED MADAM!
I FEEL LIKE GOING AROUND THE WORLD AFTER SEEING YOUR "BLOG" & THE BLOGS YOU ARE FOLLOWING! THANK YOU VERY MUCH---PADMASURY(once lived at 'PETTAI-VEERABAGU NAGAR)
anga poyum kolupommaiya? parattugal nallaezhuthareenga.
polurdhayanithi
I AM BACK - CHITRA MADAM
Happy Halloween chitra...naan US aa romba miss pannurayen pa...those r happy days da.....thanx for sharing..
//5 1/4 அடியில் இருந்தாலே, Mexico பொண்ணுன்னு முத்திரை குத்திட்டாங்களே! "NO, NO, PAIS (பாயிஸ் - நாடு) INDIA," என்றேன்.//
அது என்ன (பாயிஸ் - நாடு)?
நல்லா ஊர் சுத்துரிங்க போங்க...
Hi akkaa...
சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்
HAPPY HALLOWEEN!
அந்த நாள்..தளிர்கள் வேர்களைத் தேடி செல்லும் நன்னாள் போல இருக்கிறது.போற போக்கைப் பார்த்தால்,
மெக்சிகோவும், நம்ம மேட்டுப் பாளயமும் ஒண்ணு தான் போல இருக்கு..கலாச்சார ரீதியில்!
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!
ஹேப்பி ஹாலோவீன்
1 வாரத்துகுள்ளே வந்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஎன் சித்துமேடமக்கா..
நிறைய புது தகவல்கள்
அசத்துறீங்கக்கஓவ்வ்வ்..
நல்ல பதிவு சித்ரா...
எனக்கும் ஹாலோவின் அனுபவம் உண்டு நான் ஜெனிவாவில் எனது பயிற்ச்சிகாலத்தின் போது அந்த விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன் ம்ம்ம்ம் அருமையான் அருமையான தருனங்கள் அது .....
Post a Comment