Sunday, December 19, 2010

விருந்திலே, ஒரு இருதயம் முளைக்குதோ?

 கிறிஸ்துமஸ் சீசன் ........  எங்கே பார்த்தாலும் அலங்காரங்களும் .....  அழகு விளக்குகளும்....பரிசு மழையும் விருந்துகளும்....... வேட்டும் வெட்டும் தான்....

எல்லாம் ஜாலியாகத்தான் போய்க்கிட்டு இருந்தது. அப்புறம்,  சர்ச்ல நடந்த ஒரு விருந்துக்கு, ஒரு அமெரிக்க தோழி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தாள்.  மேலும், அந்த விருந்து - ஒரு fund raiser என்பதால், நன்கொடைக்கு குறைந்தது இருபது டாலர்கள் ஆவது கொடுக்க ரெடி ஆக வரச் சொன்னாள். ....... சூப்பர் விருந்துதான்........ கேக்ஸ் .... ஐஸ் கிரீம்னு கொடிகட்டி பறக்கும்னு ஓகேனுட்டேன்......  ஏதோ கல்யாணத்துல பேருக்கு மொய் எழுதிட்டு, மொக்கிட்டு வர மாதிரி ...... ஹி, ஹி, ஹி , ......

 வாசலில் வைத்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு டோக்கன் நம்பர் கொடுக்கப்பட்டது.  அந்த நம்பர் குறித்து வைத்து இருக்கும் டேபிள் - chair - இல் அமர்ந்து கொள்ள சொன்னார்கள்.  விருந்துக்கு டோக்கன்???  ம்ம்ம்ம்.....

உள்ளே நுழைந்து பார்த்தால்,  15  பேருக்கு மட்டும் ஒரு பெரிய வட்ட மேஜை.... அழகான விரிப்புகள்,  கோல்ட் ரிம் போட்ட தட்டுக்கள்,  விலை உயர்ந்த நாப்கின்ஸ்,  கோல்ட் plated fork , ஸ்பூன் என்று  ரிச் லுக்கில் அமர்க்களப் பட்டது.

அடுத்து  சின்ன மேஜைகள்.  அதில், சாதாரண தட்டுக்கள்,  காகித நாப்கின்ஸ்,  பிளாஸ்டிக் போர்க், ஸ்பூன் என்று ரொம்ப சிம்பிள் ஆக இருந்தது.  35 பேர்கள், அங்கே உட்காரும் வண்ணம்  மிடில் கிளாஸ் லுக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அடுத்து  தரையில்,   பத்து பத்து பேராக -  ஐந்து குழுக்களாக -  அமர்ந்து சாப்பிடும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு தரை விரிப்பு கூட கிடையாது. மண் கிண்ணங்கள் வைக்கப் பட்டு இருந்தது.  தண்ணீருக்கு சின்ன குவளைகள். அவ்வளவுதான்.

எல்லோர் முகத்திலும் ஆச்சரியமும் குழப்பமும்...... ஏன் இந்த பாராபட்சம்?  அதிகமாக நன்கொடை வழங்குவோருக்கு  என்று பிரித்து வைத்து இருப்பார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. கொடுக்கப்பட்ட டோக்கன் நம்பர் படிதான் விருந்துக்கு அமர சொன்னார்கள்.  அமைதியாக அமர்ந்தோம். எனக்கும் தோழிக்கும்   சாதாரண நடுத்தர மக்களின்  இருக்கைகள் கிடைத்து இருந்தன.  பெரிய மேஜையை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டாலும்,  மண் கிண்ணத்தை விட இதுவே தேவலாம் என்று தோன்றியது.  தப்பு ....தப்பு.... தப்பு.... அப்படி நினைக்கிறது தப்பு.... என்று மைன்ட் வாய்ஸ் சொன்னாலும்,  ம்ஹூம்......

உணவு பரிமாறப்பட்டது..... அலங்கார மேஜைக்கு - கோழி - விலை உயர்ந்த Filet Mignon என்று எல்லாமே மணம் கமழ கமழ கொண்டு வைத்தார்கள்.  எல்லாமே உயர்ந்த ரக பானங்கள் - உணவு பதார்த்தங்கள்.


எங்கள் மேஜைக்கு,  ஆளுக்கு இரண்டு பிரட் டோஸ்ட் - கொஞ்சம் வெண்ணையுடன், மற்றும்  சிறிது வெள்ளை சாதம் அதற்கு ஏற்றார் போல ராஜ்மா மாதிரி வழவழ கொழகொழனு  பீன்ஸ் வகை ஒன்று இருந்தது.  (எனக்கு பிடிக்கவே பிடிக்காத கிட்னி பீன்ஸ்.......ஐயே..... போன பதிவில், நான் சொல்லி இருந்ததை கேட்டு விட்டு, யாரோ என் சாப்பாட்டு மேல கண்ணு, காது,  மூக்கு, கை, கால் எல்லாம் வச்சுட்டாங்கபா!)  சுத்தமான தண்ணீரும் தரப்பட்டது.

கீழே உட்கார்ந்து இருந்த ஐம்பது பேரும் பாவம்ங்க.......  அந்த கிண்ணத்தில், வெறும்   வெள்ளை சாதம் மட்டும் கொடுக்கப்பட்டது.  அதுவும் ஏதோ ஒரு வயசு குழந்தைக்கு இருக்கும் அளவுதான்.   தண்ணீரும் கொஞ்சமே!


எல்லோருமே சாப்பிட சங்கோஜப்பட்டு கொண்டு இருந்தார்கள்...... குறிப்பாக,  அலங்கார மேஜைகாரர்கள்.......  அவர்களால், எதையுமே கண்டுகொள்ளாத மாதிரி சாப்பிடவும் முடியவில்லை - வேஸ்ட் பண்ணவும் தோன்றவில்லை. நெளிந்தார்கள்.   அனைவரும் அமைதியுடன் கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட முனைந்தோம்.  சாப்பிட முடிந்ததற்கும் அதிகமாய் உணவு வகை - ஒரு பக்கம் ;   ஏதோ ஒன்றை வயிறு நிறைய சாப்பிடும் படி  ஒரு பக்கம் ;  கால் வாயிற்றுக் கூட சாப்பிட வழியில்லாமல்,  மற்றவர்கள் ஒரு பக்கம் ............

விருந்துக்கு ஏற்பாடு செய்த குழு,  முன்னால் வந்தது.  அவர்கள் தெரிவித்த அறிக்கையில்,
" இன்றைய விருந்து உங்களுக்கு வித்தியாசமாக இருந்து இருக்கும். இதற்கு பெயர் - Hunger Banquet.
இந்த பாகுபாடு கண்டு, உங்களுக்குள் பல எண்ணங்கள் தோன்றி இருக்கலாம்.  நாங்கள் நூறு விருந்தினர்களை அழைத்தோம்.

அலங்கார மேஜையில் 15 பேருக்கு - அடுத்த மேசைகளில் 35 பேருக்கு - கீழே 50 பேருக்கு என்று இடம் ஒதுக்கினோம்.
உலகில்,   இப்படித்தான் ஒவ்வொருவரின் பசியும் சமாளிக்கப்படுகிறது.

15 % மக்கள் - பகட்டுக்காக விருந்து உணவுகளில் செலவிட்டு - வேஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
35% மக்கள் - நடுத்தர வகுப்பினர் -  பிடித்ததோ இல்லையோ,  ஏதாவது வயிறு நிறைய சாப்பிட கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.
50 % மக்கள்  - சரியான  உணவு  இல்லாமல்  - கொடிய  பசியில்  வாடி  கொண்டு  இருக்கிறார்கள்.

இந்த ஏற்ற தாழ்வு - முரண்பாடுகளை உங்களுக்கு விளக்குவதே எங்கள் நோக்கம்.

பசிக்காக உண்ணுங்கள் - பகட்டுக்காக உண்ணாதீர்கள்.
அறுவடை கால ஆசிர்வாதங்களை  பிறருடன்  பகிர்ந்து கொள்ள, 
மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் விருந்து உண்ணலாம். 
கிடைப்பதை சந்தோஷமாக - இறைவனுக்கு நன்றி சொல்லி,   உண்ணுங்கள் . 
இது கூட கிடைக்காதா என்று ஏங்கி நிற்கிறவர்களை மறந்து விடாதீர்கள்.
உங்கள் பசி மட்டும் நீங்க போதுமானது இருக்கிறதா என்று பார்த்து கொண்டு இருக்காதீர்கள். 
மற்றவர் பசி நீக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவ மறக்காதீர்கள்.
எக்காலத்திலும் உணவையோ உணவு பொருட்களையோ விரயம் ஆக்காதீர்கள்.

இன்று நாங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் பசியில் மரித்து கொண்டு இருக்கும் சிறுவர்களுக்கு உணவு வழங்க நன்கொடை வசூலித்து கொண்டு இருக்கிறோம். உங்களால் இயன்றதை தாருங்கள், " என்று பேசி முடித்தனர்.

எல்லோர் விழிகளிலும் கண்ணீர்.   தங்கள் உணவை , மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணத்தான் தோன்றியதே தவிர, கிடைத்த வரை லாபம் என்ற மனப்பாங்கு யாரிடமும் இருக்கவில்லை.   எத்தனையோ கட்டுரைகள் - புகைப்படங்கள் - டாகுமெண்டரி படங்கள் - இது சம்பந்தமாக பார்த்து இருக்கிறேன்.  அவை ஏற்படுத்தாத பாதிப்பை,  அந்த விருந்து எனக்கு ஏற்படுத்தியது.
இந்த நல்ல மெசேஜ் தான்,  எனது புத்தாண்டு மெசேஜ் ஆகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கொண்டாட்ட நேரங்களிலும்,   அனுதின உணவு நேரங்களிலும் - மற்றவர் பசியை மறந்து விட வேண்டாம்.

எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும்  புது பொலிவுடன் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
Merry Christmas and Happy New Year!

ஒரு அறிக்கை:

 அன்புள்ள தந்தை குலமே - தாய் குலமே ............ உங்கள் பொன்னான வாக்குகளை - இலவச  பிளாஸ்டிக் குடம் - இலவச டிவி - இலவச வாஷிங் மஷீன் - பிரியாணி பொட்டலம் - எதுவும் கொடுக்காமல், தமிழ்மண தேர்தலில்  கூசாமல்  மூன்று "தொகுதிகளில்" நிற்கும் எனக்கு -  வோட்டு போட சொல்லி கேட்கிறது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது..... இருந்தும்,  அன்பால் சேர்ந்த கூட்டம், கொஞ்சம் அசந்து இருக்கிற நேரத்தில் கேட்டால், வோட்டு போட்டுருவாங்களேனு கேட்டுப்புட்டேன்.

பெண்பதிவர்கள் தொகுதி (பதின்ம வயதினிலே)  - நகைச்சுவை தொகுதி  (சமையல் அட்டூழியம்) -  பயண கட்டுரை தொகுதி  (அமெரிக்காவில் ரங்குஸ்கி)

வெற்றி பெற்றால் - எனக்கு கொண்டாட்டம் - தோல்வி என்றால் அந்த சோகத்தை, எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன். 


முக்கிய அறிவிப்பு:

 கிறிஸ்துமஸ் லீவு விட்டாச்சு..... நம்ம ப்லாக்குக்கும் சேர்த்துதான்..... அதனால்,  ஜனவரி ஐந்தாம் தேதி வரை - எந்த பதிவும் வெட்டி பேச்சில் வராது என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.  உங்கள் பதிவுகளிலும் - பின்னூட்டங்களில்  - அதுவரை சந்திக்க இயலாது என்று  பீலிங்க்ஸ் உடன் அறிவித்து  கொள்கிறேன்.  மக்காஸ், அதற்குள்  என்னை மறந்து விடாதீங்க....  மீண்டும் ஜனவரி ஐந்தாம் தேதி அன்று - புது பொலிவுடன் - புத்தாண்டில் சிறப்புடன் சந்திப்போம்.

242 comments:

«Oldest   ‹Older   201 – 242 of 242
துளசி கோபால் said...

அட! உண்மையாவே அதிசயமான விருந்துதான்.

இந்த மாதிரி சமயங்களில் அந்த நிமிசத்துக்கு மனம் குழைஞ்சு போயிருது. கணக்கா இல்லாம தாராளமா கொடுக்கும் உணர்ச்சி வந்துரும்.

எல்லாம் நல்லதுக்குத்தான்.


கிறிஸ்மஸ் விடுமுறையை மகிழ்ச்சியாக் கொண்டடிட்டு வாங்க.

விழாக்கால வாழ்த்து(க்)கள்.

Unknown said...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள், சித்ரா.

வித்தியாசமான மிகவும் பாராட்டத்தக்க விருந்து. என் அனுபவத்தில் இந்த 15% மக்கள்தான் அமெரிக்காவில் அதிகம் என்பது வேதனையான உண்மை. நிறைய தடவைகள் வீணாகும் உணவைப் பார்த்து வயிறு எரிந்திருக்கிறேன்.

Hai said...

சகோதரிக்கு கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்கள் எழுத்துக்கு நான் அடிமை அக்கா ,,,,,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

தூயவனின் அடிமை said...

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். தமிழ் மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

HAPPY CHRISTMAS AND PROSPEROUS NEW YEAR!!!
SUPER MESSAGE

Rajesh kumar said...

சித்ரா ஜி... உங்கள் பதிவு படித்தேன். ஒரு நல்ல விஷயம் செய்ய தூண்டுறதுக்கு வார்த்தைகளை விட அவர்கள் விருந்தளித்த விதம் ரொம்ப ஆழமா நம்ம மனசில பதிஞ்சி தூண்டு கோலா அமஞ்சிருச்சு. எத்தனையோ பேர் சும்மா ரெண்டு சினிமா கிசு கிசு ப்ளாக் எழுதிட்டு எழுத்தாளர்னு சொல்லிட்டு திரியுறாங்க. நீங்க இவ்ளோ நல்ல விஷயத்த எழுதிட்டு ப்ளாக் பேர வெட்டிப் பேச்சுனு வச்சிருக்கீங்க. நல்ல நகைமுரண்தான் போங்க ;-)

Gnana Prakash said...

அருமையான பதிவு ... இது எந்த இடத்தில்?

தாராபுரத்தான் said...

கிறிஸ்துமஸ்..வாழ்த்துக்கள்.
குழந்தைகளுக்கும்..மாப்பிள்ளைக்கும் .

சி.பி.செந்தில்குமார் said...

ஹேப்பி கிறிஸ்மஸ் ஆனா நீங்க 10 நாள் லீவ் எடுப்பது ஓவர்.

சி.பி.செந்தில்குமார் said...

நியூ இயர் அன்னைக்கு ஃபிரெஷ்ஷாக ஒரு பதிவு போடவும்

சி.பி.செந்தில்குமார் said...

ஓப்பனிங்க் நல்லா இருந்தாதான் வருஷம் பூரா நல்லாருக்கும் (என்னே ஒரு செண்ட்டிமெண்ட்)

வேலன். said...

தமிழ்மண விருது கிடைக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

வா......................வ்..!

என்ன ஒரு கிரியேட்டிவ் ஐடியா?
விருந்து கொடுத்தவர்களின் சிந்தையை எண்ணி வியக்கிறேன்.

//எத்தனையோ கட்டுரைகள் - புகைப்படங்கள் - டாகுமெண்டரி படங்கள் - இது சம்பந்தமாக பார்த்து இருக்கிறேன். அவை ஏற்படுத்தாத பாதிப்பை, அந்த விருந்து எனக்கு ஏற்படுத்தியது.//--அஃதே.. அஃதே.. அஃதே...

கூடவே சேர்த்துக்கொள்ளுங்கள்...

அதை புத்தியில் உறைக்கிறமாதிரி கொடுத்த உங்கள்...

"எழுத்து நடையிலே பல இருதயங்கள் முளைக்குமோ..."

நன்றி, சூப்பர் பதிவு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

NADESAN said...

HAPPY X MAS AND NEW YEAR

NELLAI P. NADESAN
AMERAKAM

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை..நல்ல பகிர்வு..
உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா..

Unknown said...

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வித்தியாசமான முறையில் விருந்து.
நல்ல மெசேஜ்.
தமிழ் மணத்தில் வெற்றி பெற வாழ்த்த்துக்கள்

போளூர் தயாநிதி said...

விருந்திலே அப்படி ஒரு அனுபவமா ? உங்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

அமுதா கிருஷ்ணா said...

அருமையான விருந்து..கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Unknown said...

Great message Chitra. Thanks for sharing this with us.

Rama

'பரிவை' சே.குமார் said...

விருந்து மூலமாக சொன்ன விதம் அருமை.

உங்களுக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

அருமையான மெஸேஜ் சொல்லி விட்டீர்கள் சித்ரா இந்தப் பதிவின் மூலம்! நெகிழ வைத்தது மனதை!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய கிருஸ்துமஸ் மற்றும் புது வருட வாழ்த்துக்கள்!!

சிவகுமாரன் said...

செவிட்டுல அறைஞ்ச மாதிரி இருந்தது விருந்து.
பகிர்வுக்கு நன்றி.
கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

சித்ரா, தலைப்பே அருமை. பதிவின் ஒவ்வொரு வரிகளும் நெஞ்சில் பதிவு செய்யப்பட்டு விட்டது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிறிஸ்துமஸ்,மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்!

தமிழ்மணத்தில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!

செந்தில்குமார் said...

நல்ல விருந்து... அறிவுக்கு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!! சித்ரா..

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு "அவார்ட்" கொடுத் திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

தூயவனின் அடிமை said...

சகோதரி உங்களுக்கு என்னுடைய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நெல்லி. மூர்த்தி said...

அவர்கள் விருந்து படைத்தார்கள், விஷயத்தை விதைத்தார்கள். நீங்கள் வலையினில் மட்டுமல்ல வாசிப்பவர்களின் மனதினிலும் நன்றாகவே பதிவிட்டுள்ளீர்கள். அதென்ன... அலுவலம் இல்லையெனில் பதிவெழுதக் கூடாதா? ஒருவேளை அவ் விடுமுறையில் நகர் உலா சென்று பல புதிய அனுபவங்களுடன் சந்திக்க இருக்கின்றீர்களா?

நெல்லி. மூர்த்தி said...

அவர்கள் விருந்து படைத்தார்கள், விஷயத்தை விதைத்தார்கள். நீங்கள் வலையினில் மட்டுமல்ல வாசிப்பவர்களின் மனதினிலும் நன்றாகவே பதியவிட்டுள்ளீர்கள். அதென்ன... அலுவலம் இல்லையெனில் பதிவெழுதக் கூடாதா? ஒருவேளை அவ் விடுமுறையில் நகர் உலா சென்று பல புதிய அனுபவங்களுடன் சந்திக்க இருக்கின்றீர்களா?

Learn said...

கலக்கல்

அன்புடன் நான் said...

உங்க பதிவு எப்பவும் ஜாலியா இருக்கும்

ஆனா இந்த பதிவு கொஞ்சமல்ல நிறையவே தாக்கத்தை உண்டாக்கிவிட்டது....
என்னில் புதிய சிந்தனைகளையும் ஏற்படுத்திவிட்டது....

உங்க பகிர்வுக்கு நன்றி..... வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

சில காலம் வலைப்பக்கம் வர இயலவில்லை ... மகனை கான தாயகம் சென்றிருந்தேன்... அதோடு வேலை நேரம்மும் கரணம்.

Thoduvanam said...

Wish you a very very Happy New Year
have a nice vacation..The message for hunger is really touching thru the feast you had..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதுவருட வாழ்த்துக்கள் அக்கா

Vijiskitchencreations said...

சித்ரா, கொஞ்சம் லேட்டா வந்து வாழ்த்து சொல்கிறேன்.

நல்ல அழகான படங்களோட எழுதி அசத்திட்டிங்க.

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

அருமையான விருந்துங்க. என்ன ஒன்னு..? ஜனவரி ஒன்னுல 2011ல விருந்துக்கு வந்தா நோ எண்ட்ரி போர்டு. சோ சேட்!

வந்தது வந்துட்டேன். வாழ்த்திட்டு போயிடறேன். புத்தாண்டு வாழ்த்துகள் சித்ஸ்.

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டும் கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராஜவம்சம் said...

தமிழின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியலில் உங்கள் பெயரும் வாழ்த்துக்கள்.

Suni said...

leave over
Tommorrow classkku vanthidunga
Happy new Year

Unknown said...

பொங்கல் தின வாழ்த்துக்கள்!

«Oldest ‹Older   201 – 242 of 242   Newer› Newest»