Monday, January 10, 2011

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்

பொங்கல் ஸ்பெஷல் பதிவு என்ன போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்த பொழுது,  நாங்கள் சில வருடங்கள் முன், பொங்கல் சமயம்,  அமெரிக்காவில்,  New Mexico மாநிலத்தின் தலைநகரம் - Santa Fe க்கு சென்ற அனுபவம் ஞாபகம் வந்தது..... கிராமிய சூழ்நிலையில், பொங்கல் கொண்டாடுவது தனி அழகு என்று சொல்லி கொண்டு இருந்த நேரம், என் கணவர் சாலமன், அந்த வருடம் என்னை  ஒரு ஸ்பெஷல் இடத்துக்கு அழைத்து செல்வதாக கூறி, அங்கே அழைத்து சென்றார்.  அமெரிக்காவிலேயே  மிகப் பழமையான தலைநகரம், இதுதான். (The oldest Capital City in USA)     Santa என்றால் புனித - Holy என்று அர்த்தம்;  Fe என்றால் Faith - நம்பிக்கை  என்று அர்த்தம் என்று விளக்கம் தந்தார்.

சரி,  வழக்கம் போல ஊர் சுத்தல் என்று சாதரணமாக கிளம்பி சென்ற எனக்கு ஆச்சர்யம் காத்து இருந்தது.

அமெரிக்காவில் உள்ள மற்ற தலைநகரங்கள் போல அல்லாது, குறைந்த மக்கள் தொகையுடனும்  நிறைய கலை அம்சங்களுடனும் இந்த நகரம் இருப்பது,  இதன் தனி சிறப்பாகும்.  இங்கே ஸ்பெஷல் என்னங்கறீங்க?  அந்த நகரத்தின் கட்டட அமைப்புதான். அப்படியே ஆ ...... னு வாய் பாத்து கிட்டே வந்தேன்.  நம்ம ஊரில், மண் வீடு ஏழ்மையின் சின்னமாக கருதப்பட்டு கொண்டு வரும் வேளையில்,  பெரிய பெரிய ஹோட்டல், மாளிகைகள் எல்லாம் மண் வீடு அமைப்பிலேயே கட்டி, அசத்தி கொண்டு இருக்கிறார்கள்.  வாவ்!

மெக்ஸிகோ மற்றும் ஸ்பெயின் கலாச்சாரமும், அந்த பகுதிகளில் இன்னும் வாழ்ந்து கொண்டு வரும் செவ்விந்தியர்கள் எனப்பட்ட Native Americans பழக்க வழக்கங்களும் இணைந்து  நகரம் முழுவதும் முத்திரை பதித்து  உள்ளன.
இவர்கள் செய்யும் கை வினைப்பொருட்கள் - ஓவியங்கள் - கலை அம்சங்கள் ஒரு பக்கம் நேரடி விற்பனைக்கு கிடைக்கும் வண்ணம்,  நகரம் முழுவதும் கலைக்கூடமாக காட்சி அளித்தது.   இங்கே பாருங்க... மண் குடங்களை அழகாக வரிசைப்படுத்தி வைத்து இருந்தாங்க.....

நியூ மெக்ஸிகோவில் கோடை காலம் - உச்சி வெயில் மண்டையை புளக்கிற மாதிரி இருக்கும்.  Dry Heat வேறு அனல் காத்தடிக்க மிரட்டும்.  குளிர் காலம், அதிக குளிரில் வெடவெடக்க வைக்கும்.  இந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வீடுகள், மண்வீடுகள் தான் (Adobe style - அடோபி)  என்று Native Americans கண்டு பிடித்து கொண்டு,  அதிலேயே பெரும்பாலான வீடுகளையும் கடைகளையும் கட்டி வைக்க, அதையே இன்னும் - "பெரியவா சொல்லிட்டா..... சரியாத்தான் இருக்கும்...." என்று கடைபிடிக்கிறாங்க மக்கா.

 இவர்களது பாரம்பரியத்தை மதிக்கும் பொருட்டு, Old Santa Fe பகுதி முழுவதும் மண்ணின் நிறம் (Earth Tone) கொண்டு பிரதானமாக கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்கள் தான் இருக்க வேண்டும் என்ற அரசாங்க  விதி உண்டு. அதனால், இந்த பகுதியில் உள்ள உணவு விடுதிகளும், கடைகளும்,   வீடுகளும் ,  பெரிய 5 Stars Hotels கூட Adobe Style கொண்டு தான் கட்டப்பட்டு இருக்கின்றன.  நம்ப முடியலியா?  அமெரிக்கா என்றாலே நியூ யார்க் மட்டும் இல்லைப்பா.....

 கீழே உள்ள படங்கள், 5 Star  Hotel Santa Fe மற்றும் Loretta Inn and Spa Resort :  நம்ப முடிகிறதா?


கிறிஸ்தவ ஆலயம் ஒன்று.  மிகப் பழமையான ஆலயம் என்ற பெயர் பெற்ற San Miguel Chapel:


 மண் வீட்டு பங்களா:


இதுவும் அமெரிக்காவில் இருக்கும் வீடுதான்:
 
நிச்சயமா இது அந்த ஊரு நாட்டாமை வீடு இல்லை:






அங்கே விற்பனைக்கு இருந்த ஒரு வீட்டை வேடிக்கை பார்த்தோம்.  முன்னாலே அந்த கொடி இல்லைனா, இது அமெரிக்காவில் இருக்கும் வீடுதான் என்று, அங்கே இருந்த நானே நம்பியிருப்பது கஷ்டம் தான்.





ஒரு வீட்டின் உள்ளே இருந்த வரவேற்பறை:

மேல தாங்கு கட்டையுடன் அப்படியே ஒரு கிராமிய மணம் கமழும் அறை:

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ரூம் ஒன்றின் அறை:
அரிக்கேன் விளக்கு - வண்டி - எதையும் விடல. .....






மேல உள்ள படம், அங்கே இருந்த கடை வீதி: 
ஒரு Native American கடையில் இருந்த ஜமுக்காள போர்வைகள்:

கைத்தறி தொழில் - குயவர்கள்,  மண் பாத்திரங்கள் - மண் வீடுகள்  என்று இந்த தலைநகரம் - கிராம நெடியுடன் அசத்தியது.  அது மட்டும் இல்லைங்க - முத்தாய்ப்பாக -
இங்கு உணவு வகைகளில்,  அதிகம் காரம் சேர்த்து கொள்கிறார்கள்.  வீடுகளின் முன்னும் கடைகளின் முன்னும்,  சிவந்த மிளகாய்களையும் பூண்டுகளையும் மாலைகளாக தொடுத்து காயப் போட்டு இருப்பதை பார்த்து நிஜமா - ஊரு நினப்புல கண்ணுல தண்ணி வந்துட்டுது. 



இப்படியாக ஒரு தலைநகரமே, மண் வீடு - மண் குடம் - என்று  நம்ம ஊரு பொங்கலுக்கு தயாராக இருக்க - - -   நான்தான், அரிசி - வெல்லம் - பருப்பு - கரும்பு - எடுத்துட்டு போகாம போயிட்டேன்.  முதலிலேயே தெரிந்து இருந்தால், அங்கேயே பொங்கல் வச்சு கொண்டாடி இருந்து இருக்கலாம். 
இனி என்ன - வருஷா வருஷம் பொட்டியை கட்டிக்கிட்டு, Santa Fe போய்தான் பொங்கல் கொண்டாடிட்டு  வரணும் போல..... 

ஒரு டவுட்டு:  இந்த Native Americans செய்றது எல்லாமே நம்ம ஊரு சரக்கு மாதிரி இருக்கே..... இவங்க எல்லாருமே,   அந்த காலத்திலேயே நம்ம ஊரு விட்டுட்டு வந்து,  அமெரிக்காவில் முதன்  முதலா டெண்ட்டு போட்டவங்களாக இருப்பாங்களோ?  

அந்த தலைநகரத்தை பத்தி நிறைய எழுதலாம் - அப்புறமா ஒரு நாளு சொல்றேன். ....... இப்போ எல்லோரும் பொங்கல் கொண்டாட போங்க......பட்டணத்தில் தான் இருக்கோமே என்று,   கிராமத்தை மறந்துராதீங்க, மக்கா....... 
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
 


139 comments:

ஆனந்தி.. said...

டக்கரு...

சமுத்ரா said...

good..
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

எல் கே said...

முற்றிலும் புதியத் தவகல். அங்கும் இந்த மாதிரி மண் வீடுகள் உண்டு என்பதைத் தெரிந்து கொண்டேன். இதையெல்லாம் பார்த்தாவது ,மண் வீடு ஏழ்மையின் அடையாளம் என்ற நமது எண்ணம் மாறுமா??

ஆனந்தி.. said...

மக்கா....இங்கே மண் விலை இப்போ செம ஜாஸ்தி...ஆத்துல இருக்கிறதை பூராவும் அல்லு அள்ளுன்னு அள்ளிட்டானுங்க....ஸோ நமக்கு இது ரொம்ப காஸ்ட்லி பா..:)))

Jaleela Kamal said...

சூப்பர் சித்ரா.

ஊரிலேயே மண்பானை செய்யும் இடத்தை கடந்து போனால் நின்று வேடிகை பார்த்து விட்டு போவேன்
அதிலும் இது கலர் கலர் மண் பானை சூப்பரா இருக்கு

ஆனந்தி.. said...

புதுமையான...சுவாரஸ்யமான படங்கள்..தகவல்கள்..கலக்கிபுட்டிங்க மக்கா..:))

ஆனந்தி.. said...

happy pongal kanna..:))

S Maharajan said...

அக்கா சர்க்கரை பொங்கல்
அனுப்பி வைங்க!!!!!!
உங்களுக்கும்,சாலமன் சாருக்கும்,குழந்தைகளுக்கும்,
நண்பர்கள் அனைவர்க்கும்
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான ஊர். ரொம்பவே வித்யாசமா இருக்கு.. பார்க்கும்போதே ரொம்ப சூப்பரா இருக்கே.. அங்கு சென்ற உங்கள் அனுபவம் எப்படி இருந்திருக்கும். படமும் பிடித்து அழகாக அருமையாக எழுதியிருப்பதை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கு சித்ரா..

அருமையான பகிர்வு. உங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

Asiya Omar said...

பகிர்வு அருமை,பொங்கல் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, எவ்வளவு அருமையான படங்கள். இப்போதெல்லாம் கிராமத்து வீடுகள் கூட இப்படி பார்க்க முடிவதில்லை. பகிர்வுக்கு நன்றி.

THOPPITHOPPI said...

அமெரிக்காவிலும் இப்படி வீடா?

அது ஏன் கொடிய வீட்டு வாசல்ல தொங்க விட்டு இருக்காங்க?

அமுதா கிருஷ்ணா said...

photos are super chitra.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் மிக நன்று சித்ரா!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான படங்கள்.

சேலம் தேவா said...

மண்வீடுகளும் நல்லாத்தான் இருக்கு..!!பொங்கல் நல்வாழ்த்துகள் அக்கா..!!

அஞ்சா சிங்கம் said...

கலக்கல் அப்படியே ஒரு பயணம் போயிட்டு வந்த அனுபவம் ......

Asiya Omar said...

நான் ரசிச்சு பார்த்து கிட்டிருந்தேன்,என் மகன்படிக்க லீவில் இருந்தவன் வந்து பார்த்திட்டு heritage village மாதிரி இருககு அழகுன்னு ரசித்தது எனக்கு சந்தோஷ்மாக இருந்தது.

எம் அப்துல் காதர் said...

இப்படியெல்லாம் பதிவ போட்டு எங்களையும் அமெரிக்க பக்கம் இழுத்துடாதீங்க டீச்சர். ஆனாலும் படங்களும் பதிவும் சூப்பர். உங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!!

சாந்தி மாரியப்பன் said...

வித்தியாசமான ஊருதான்..

உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Wonderful. nice pictures. happy pongal

சசிகுமார் said...

தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்துக்கள். பதிவு அருமை வீடுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.

vasu balaji said...

ம்கும். ட்ரெயினேஜ் இருக்கிற அழகுல இங்க ப்ளாஸ்டிக் ஊடுதான் சரி. தண்ணி தேங்குனா கமுத்தி போட்டு துடுப்பு, மோட்டார்னு வச்சி போய் வரலாம்:))

Unknown said...

மண்ணிலே கலை வண்ணம் கண்டார்...
படங்கள் அருமை.

Unknown said...

நல்லவேள.... பொங்கலுக்கு லீவ் போட்டுருவீங்களோனு பயந்தோம்..

இளங்கோ said...

//அமெரிக்கா என்றாலே நியூ யார்க் மட்டும் இல்லைப்பா.....//அதானே.. :)

பொங்கல் வாழ்த்துக்கள்..

Jana said...

தங்களுக்கும் முற்கூட்டிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி.
குறிப்பாக தங்கள் பட வரிசையில் 16வது படத்தில் இருக்கும் இடம்போன்றதொரு நிலம் வேண்டும் என்பதே
பராசக்தியிடமான என் வேண்டுகோள்.

தினேஷ்குமார் said...

அக்கா மண்மனம் கமழ அறியாத புது பழமை அறியவைத்தீர்கள் இன்று சூப்பர் நல்ல பகிர்வு அக்கா ...
அக்கா இனிய பொங்கல் வாழ்த்துக்கள், மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க வாண்டுகளுக்கும் அங்கிளுக்கும் சேர்த்து மனம் பொங்க சொல்கிறேன் பொங்கலோ பொங்கல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா சுற்றிக்காமிச்சீங்க சித்ரா..அழகா இருக்கு.. மண் வீட்டு பால்கனி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

அருமையான பதிவு..! படமெல்லாம்
அட்டகாசம்..! டேங்ஸ் ...!

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

///செய்றது எல்லாமே நம்ம ஊரு சரக்கு மாதிரி இருக்கே..... இவங்க எல்லாருமே, அந்த காலத்திலேயே நம்ம ஊரு விட்டுட்டு வந்து, அமெரிக்காவில் முதன் முதலா டெண்ட்டு போட்டவங்களாக இருப்பாங்களோ? ///


இருக்கும்..இருக்கும்...!

ஸாதிகா said...

சூப்பர் பதிவு..சூப்பர் படங்கள்.பொங்கல் வாழ்த்துக்கள்.

settaikkaran said...

ஒருசில புகைப்படங்களைப் பார்த்ததும், இது அமெரிக்காவா என்ற சந்தேகம் மெய்யாலுமே ஏற்பட்டது. எல்லா நாடுகளுக்கும் அவரவர் பாரம்பரியம் குறித்த அக்கறை இருப்பது அறிய சந்தோஷமாக இருக்கிறது.

இனிய பொங்கல் வாழ்த்துகள்! :-)

Sumi said...

Its my long time wish to visit New mexico.your post kindled it further more.Iam a big time fan of Red Indian culture, movies, places etc., .There is a similar place near the colorado region , Mesa..something..OOps I forgot the name. Have you been there..

Unknown said...

Hey akka,

Iniya pongal vaalthugal!!Kalakkureenga!!:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com/

வெட்டிப்பேச்சு said...

அருமையான பகிர்வுக்கு நன்றிகள்..

மாணவன் said...

பதிவும் படங்களும் சிறப்பு

பகிர்வுக்கு நன்றி

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

சித்ரா படங்களை இங்கு பார்க்கும் போதே வைத்த கண் எடுக்க மனமில்லை நேர்த்தி கலா ரசனை வியக்கவைக்கிறது, நேரில் கண்ட நீங்கள் மெய் மறந்து இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை..

Mythili (மைதிலி ) said...

அமெரிக்காவே ஒரு வித்யாசமான ஊரு தான்.... எல்லாமே அங்க இருக்கு.. பழசு, புதுசு... ஹும்ம்... நல்ல தகவல்

Unknown said...

படங்கள்ல இருக்கற வீடுகள் எல்லாம் ஓவியங்கள் மாதிரி இருக்கு..

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில இப்படித்தான் வீடுகளை செட் போட்டு வைச்சிருப்பாங்க..

உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

2010 ஆம் ஆண்டு தமிழ்மண முன்னணிப் பதிவுகள்ல 16வது இடம் வந்ததற்கு வாழ்த்துக்கள்ங்க..

NADESAN said...

arumai nice photos

wish you happy pongal

nellai p. nadesan
dubai

Gayathri Kumar said...

vithyasamana american oor. Happy Pongal..

க.பாலாசி said...

ரொம்ப நல்ல பகிர்வுங்க.. ஆச்சர்யமாகவும் இருக்கிறது...படங்களும்...

உங்களுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் பதிவு...படங்கள் சூப்பரோ சூப்பர்...
பொங்கல் வாழ்த்துக்கள்..

Madhavan Srinivasagopalan said...

முடிந்தவரை.. இயற்கையுடன் ஒத்துப் போவது தனி சுகம்தான்..

Unknown said...

படங்க எல்லாம் ரொம்ப நல்லாயிருக்குங்க, நல்ல தகவல்கள், பேசாம நீங்க பத்திரிகையாளராகிடுங்க, நல்ல தொகுத்து அளிக்கிறீங்க :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

ADHI VENKAT said...

ஆச்சரியமா இருக்கு. அங்க கூட மண் வீடுகளா? பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

அய்யோ நம்பவே முடியல சூப்பரா இருக்கு.

ரொம்ப அழகா இருக்கு திரும்ப திரும்ப
பார்கக தோனுது.

பொங்கல் வாழ்த்துகள்!!

அசத்தலான பகிர்வுக்கு நன்றி சித்ரா..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை,
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Interesting post Chitra. Thanks for sharing at the correct time.

கவி அழகன் said...

புதியத் தவகல் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

சுசி said...

அருமையான தகவல் சித்ரா.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

அக்க்க்க்கக்கா....! சூப்பர் படங்கள் அக்கா.

பொங்கல் கொண்டாடுங்க. வாழ்த்துகள்.

தமிழ் உதயம் said...

என் இனிய கிராமத்து நினைவுகளே ன்னு தலைப்பு வைச்சு இருக்கலாம். பொங்கலோ பொங்கல்.

அன்புடன் அருணா said...

அட!அட!ஆச்சரியம்!

goma said...

பொங்கலோ பொங்கல்
அருமையான பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

pongal spl post is ok

சி.பி.செந்தில்குமார் said...

the images in blog must b with in 5, to open quickly...

சி.பி.செந்தில்குமார் said...

even in foreign, the soil pot r used? pleasant and shock news, thanx for sharing chitra..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பகிர்வு
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

போட்டோ அனைத்தும் அருமையாக உள்ளது ...

Anonymous said...

அருமையான பதிவு கூடவே அட்டகாசமான படங்கள்..
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சித்ராக்கா! :)

பனித்துளி சங்கர் said...

அமெரிக்காவில் இப்படியும் ஒரு இடமா வியப்பாகத்தான் இருக்கிறது . அறிந்துகொள்வதற்கும், மகிழ்ந்து செல்வதற்கும் அழகிய பதிவு தந்த வாழ்த்துக்கள் .

சிநேகிதன் அக்பர் said...

அட! என்ன ஒரு அருமையான தகவல்.

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் சித்ரா.

vanathy said...

சித்ரா, நல்ல பதிவு. அழகான படங்கள்.

pichaikaaran said...

புதிய தகவல்கள்

எப்பூடி.. said...

சூப்பர் பதிவு,பொங்கல் வாழ்த்துக்கள்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

பதிவும், படங்களும் அருமை !

ஸ்ரீராம். said...

ஆச்சர்யப் படுத்தும் படங்கள்...உள்ளே பார்க்கும்போது அவ்வளவு பழமை தெரியவில்லையோ...? இப்படியும் இடங்கள் இருக்கு என்று தெரிந்து கொண்டேன்.

ராஜவம்சம் said...

புதிய தகவல் பகிர்வு வாழ்த்துக்கள்.

Mahi_Granny said...

கலிபோர்னியாவிலும் ஸ்பானிஷ் மிசினரிகளால் கட்டப்பட்ட mission churches கூட இதே adobe வகை தான் அம்மி, ஆட்டுக்கல் கூட பார்த்து இருக்கேன். எந்த புதுக் கட்டிடங்களும் கட்டத் தடை உண்டு சில இடங்களில் .நல்ல பகிர்வு.

ம.தி.சுதா said...

பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா... மிகவும் கவர்ச்சியான படங்கள் இட்டுள்ளீர்கள் (நமிதா கோபிக்கப் பொறாங்க..)

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

vinu said...

iiiiiiiiiiiyame the 75thu vaalthuuuuuuuuuuuuu

vinu said...

illiyaa appo ippo correctaaaaa

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

படங்கள் மிக அருமை.

நேரில் பார்த்ததைப்போன்று உணர்ந்தேன்.

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம் emmaa appoodiye anga vazhra makkalaiyum padampudichchup potrukkalaame!
அவர்களும் நம்ம ஊருஆளுகமாதிரியா இருப்பாகளா.அல்லது அந்தநாட்டு ஆளுகமாதிரியா?விடுமுறயைக்கூடப்
பயனுள்ள பயணமாகச் செய்திருக்கிறாய்.
நல்ல ரசிப்பு!+சிரிப்பு! பொங்கல் வாழ்த்துக்கள்!நல்லது.

அம்பிகா said...

nice photos

wish you happy pongal

Suni said...

Very nice Post.
தமிழ்மணம் 2ம் சுற்றில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள். இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

நிலாமதி said...

மிகவும் அழகாக நம்மூர் மண் மணம் வீசுகிறது.படங்களும் அருமை. உங்கள் பதிவு. பொங்கல் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பாசம் அன்பு பொங்க வாழ்த்துக் கள்

Alarmel Mangai said...

ஊரும், மண் வீடுகளும் அழகு..

பொங்கல் வாழ்த்துக்கள்...

Unknown said...

அருமையான பதிவு சித்ரா.. புகைபடங்கள் அழகு..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

raji said...

பதிவிலேயே கிராமிய மணமும் பொங்கல் திருநாளின் மணமும் கமழ்கிறது.பகிர்வுக்கு நன்றி

vanjimagal said...

Please can you send me the picure of manpanaikaL. It is so beautiful.
Enjoyed reading your blog. we may celebrate pongal in cold weather.
Thanks
Pachain@gmail.com

தூயவனின் அடிமை said...

நல்லா பகிர்வு. இப்படி ஓர் ஊர் இருப்பதை நானும் அறிந்து கொண்டேன்.

வருண் said...

***அங்கே விற்பனைக்கு இருந்த ஒரு வீட்டை வேடிக்கை பார்த்தோம். முன்னாலே அந்த கொடி இல்லைனா, இது அமெரிக்காவில் இருக்கும் வீடுதான் என்று, அங்கே இருந்த நானே நம்பியிருப்பது கஷ்டம் தான்.***

பார்க்கப் பாளையம்கோட்டை வீடு மாதிரி இருக்கு. நீங்க சொல்றதாலே நம்புறேன் இது அமெரிக்காவுல இருக்குனு :))

ஹேமா said...

அருமையான படங்கள்.எவ்வளவு அழகாக வைத்திருக்கிறார்கள்.

Learn said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Saraswathi Ganeshan said...

Enjoyed your post & Happy Pongal wishes to you & to your family

Unknown said...

சூப்பர்! fotos கலக்கல்! :-)

ஆமினா said...

மண்வீடா???

மழ வந்தா என்ன செய்வாங்க? ;)

ரவி said...

போட்டோஸ் நல்லாருக்கு.

உங்கள ஒரு விளாட்டுக்கு அழைச்சிருக்கேன்.

http://tvpravi.blogspot.com/2011/01/blog-post_11.html

அன்புடன் மலிக்கா said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

புதுமையான சுவாரஸ்யமான படங்கள் தகவல்கள் கலக்கிட்டிங்க சித்ரா.....க்கா

Unknown said...

கடைசி போட்டோ கவிதை ...

GEETHA ACHAL said...

அருமையான பகிர்வு...நானும் இதனை HGTVயில் பார்த்து இருக்கின்றேன்...ஆனால் அதனைவிட அழகாக படம் பிடித்து காட்டி அசத்துவிட்டிஙக் சித்ரா...வாழ்த்துகள்...

Madurai pandi said...

Wish u happy pongal !!!!

Ramesh said...

அருமையான பகிர்வு சித்ரா.. அமெரிக்காவா இது.. ஆச்சரியமாக இருக்கிறது.. படங்கள் மிக அருமை.. நேரில் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தைத் தருவதாக இருக்கிறது உங்கள் பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி..

அரசூரான் said...

//சிவந்த மிளகாய்களையும் பூண்டுகளையும் மாலைகளாக தொடுத்து காயப் போட்டு இருப்பதை பார்த்து நிஜமா - ஊரு நினப்புல கண்ணுல தண்ணி வந்துட்டுது//
பூண்டு மிளகாய் எல்லாத்தையும் பார்த்து நாக்கில் எச்சிலும் ஊறி இருக்கனுமே? அந்த ஹிஸ்டாரிக் ரவுட் 66 பயணமே சுகமான பயணம்தான். உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Udayakumar Sree said...

என்னோட கூர வீட்டுக்குள்ள அழகுபடுத்த ஐடியா குடுத்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ்...

கோமதி அரசு said...

//நம்ம ஊரில், மண் வீடு ஏழ்மையின் சின்னமாக கருதப்பட்டு கொண்டு வரும் வேளையில், பெரிய பெரிய ஹோட்டல், மாளிகைகள் எல்லாம் மண் வீடு அமைப்பிலேயே கட்டி, அசத்தி கொண்டு இருக்கிறார்கள்.//

நல்லா அசத்தி இருக்கிறார்கள்.
அருமையான மண் வீடுகள்.

படங்களும் அருமை.பகிர்வுக்கு நன்றி சித்ரா.

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

KParthasarathi said...

Wow,Chitra.i have no other word to express my appreciation for your unique way of making your readers be acquainted with Santa Fe

arasan said...

ஆச்சரியமாதான் இருக்குங்க ..
அசத்தல் பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்துக்கள்

செந்தில்குமார் said...

பழங்காலத்தின் கட்டடகலையை ஞாபகபடுத்தும் ஒரு நல்ல பகிர்வு அதுவும் சித்ராவின் கைவண்ணத்தில் இன்னும் கொஞ்சம் மெருகுடன்
நிழல் படங்கள் சொல்லுகிரது நீங்கள் சொல்லதவிக்கும் சொற்களை…..நிஜமான நிழல் படங்கள் ம்ம்ம்ம்…..இங்கே என் வணக்கங்கள் உங்களுக்கு….
ஆச்சரியமாகத்தான் பார்த்தேன்….அமெரிக்காவில் இப்படியும் ஒரு இடமா…
சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக….ஒரு விசிட்

நாகரங்களில் நறுமணம் அற்ற நாகரிக பொங்கல்
கிராமங்களில் மண் மணம் கமழும் பொங்கல்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்……சித்ரா

G.M Balasubramaniam said...

பிறிதொரு பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து வந்தேன். ஒரு வலைப்பூ தோட்டத்தையே நீங்கள் தொடர்வது கண்டேன். உங்கள் பதிவில் பலருக்கும் தெரியாத(என்னையும் சேர்த்து)விஷயங்கள் . பகிர்வுக்கு நன்றி. மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்

செல்வா said...

இவ்ளோ அழகான வீடுகள் இருக்குதா ?
நம்ப முடியல அக்கா . அதிலும் உங்க டவுட்டு ஹி ஹி ..!

சுந்தரா said...

படங்களும் பதிவும் மிகமிக அழகு சித்ரா.

மண்வீடுகளில் சில, அமீரகத்திலிருக்கிற அரபிகளின் பழங்கால வீடுகளின் அமைப்பில் இருக்கிறது.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

ஆயிஷா said...

அருமையான படங்கள்.அருமையான

பகிர்வு.இனிய பொங்கல் திருநாள்

வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வும், புகைப் படங்களும் சித்ரா!

கொஞ்சம் மாடர்னா, 'கிச்சுக் கிச்சு தாம்பாளம், கிய்யா கிய்யா தாம்பாளம்' போல!

பாலராஜன்கீதா said...

//http://konjamvettipechu.blogspot.com/2010/01/happy-birthday-kanna.html
சாலமன் ........... கண்ணா என்று நான் அன்பாய் அழைப்பவர்................என் ஆருயிர் கணவர் ............ ஜனவரி 12, பிறந்த நாள் கொண்டாடுபவர்.
HAPPY BIRTHDAY, கண்ணா!//
சாலமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் உங்களிருவருக்கும் அட்வான்ஸ் திருமண நன்னாள் வாழ்த்துகள்.
கன்னித்தீவு கதை முடியவேகூடாது என வேண்டிக்கொள்கிறோம்.
:-)

Avargal Unmaigal said...

படங்களும் சொல்லிய விதமும் அருமை. படித்து முடித்ததும் டிஸ்கவரி சேனலை பார்த்தது போல இருந்தது. அடுத்த தடவை அங்கே போனால் மண் பானைகளை வாங்கி அனுப்பவும். மண் பானையில் சமைத்து சாப்பிட ஆசைப்டும் தமிழன்

Kurinji said...

மிகவும் ஆச்சர்யமாக இருக்கு சித்ரா! பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

Anonymous said...

அட்லாண்டாவில் கடும் பனிப்பொழிவு என்பதால் எங்க client எல்லாரும் வீட்ல இருந்து வேலை செய்யறாங்க. சென்னைல என்னதான் climate இருந்தாலும் நாங்க மட்டும் ஆபிஸ் வந்துதான் கடமை செய்யணுமாம்...என்ன கொடுமை சித்ரா இது...

Satya said...

I wish I could read all this in english... I am not tamilian and cant read...

குறையொன்றுமில்லை. said...

உண்மைலயே அருமையான பதிவு.

Jayanthy Kumaran said...

My Hearty Pongal Wishes to you dear..!
Wonderful post with awesome pics...very informative..!
Tasty appetite

Unknown said...

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

Malar Gandhi said...

I too was taken by surprise...looking at the big mansion like mud houses...in TV.

அன்புடன் நான் said...

படங்கள் மிக மிக அழகுங்க.....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துகள்

சிவகுமாரன் said...

மிகவும் புதிய, வியப்பான , அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

raji said...

சகோதரி சித்ராவிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன்.தங்களின் பதிவுகள் எல்லாமே தகவல் களஞ்சியமாகவும் பயனுள்ளவையாகவும் உள்ளன.அவ்வாறிருக்க தங்களின் தலைப்பு மட்டும் 'கொஞ்சம் வெட்டிப்பேச்சு' என்பதாக இருப்பது உடன்பாடாக இல்லை.தவிரவும் 'அப்பாவுடன் அரட்டை நேரம்' போன்ற பதிவுகளுக்கு இந்த தலைப்பு பொருத்தமாக இல்லாததாக எனக்கு தோன்றுகிறது.ஏனெனில் எந்த ஒரு மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தந்தை ஸ்பெஷல்தான்.அப்படி இருக்க பொ.ம.ராசாமணி அவர்களின் பேச்சுக்கள் அடங்கிய பதிவு வெட்டிப் பேச்சாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.கருத்தில் தவறிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.தங்கள் 'ப்ளாக்' கிற்கு வந்த நாள் முதலாய் கூற விரும்பினேன்.தயக்கம் இருந்தது.முரணாக கூறியிருப்பின் சகோதரியை மன்னிக்கவும்

raji said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பவள சங்கரி said...

படங்களெல்லாம் அழகு சித்ரா. பொங்கல் வாழ்த்துக்கள்.

raji said...

எனது கருத்துக்கு மதிப்பளித்து பதிலுரைத்தமைக்கு நன்றி

Prabu Krishna said...

அந்தக் கால இந்தியா இந்த கால அமெரிக்காவில் ஆச்சர்யம்தான். நல்ல பதிவு. ♥♥♥

JAYANTHI DINESH said...

Chitra...Romba arpudhamana padaipu..Unga blog padichi piraga comments kudukka romba nalla oru muyarchi indha pongal thirunaalil dhaan mudinjadhu...Romba gramiya manam veesara marri oru nelivu sulivu illadha yedharthamanaa padaipu..migavum paaratukku uriyadhu...Iniya pongal nalvazhthukkal ellorukkum...Chellam & selvam ku Diya koorum Wishes....Pulliku purandhadhu poonai aagumaa....

JAYANTHI DINESH said...

Chitra...Romba arpudhamana padaipu..Unga blog padichi piraga comments kudukka romba nalla oru muyarchi indha pongal thirunaalil dhaan mudinjadhu...Romba gramiya manam veesara marri oru nelivu sulivu illadha yedharthamanaa padaipu..migavum paaratukku uriyadhu...Iniya pongal nalvazhthukkal ellorukkum...Chellam & selvam ku Diya koorum Wishes....Pulliku purandhadhu poonai aagumaa....

இராஜராஜேஸ்வரி said...

In Jaipur Government ordered as pink paint in the outer side of the buildings. So Jaipur is called The pink City. Like that city MUD city. l.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

ஆர்வா said...

பொங்கல் பதிவு அருமை..
படங்களெல்லாம் அழகு

போளூர் தயாநிதி said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!முடிந்தவரை.. இயற்கையுடன் ஒத்துப் போவது தனி சுகம்தான்.

எம் அப்துல் காதர் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

Unknown said...

இடம் பற்றிய அறிமுகம் சூப்பர்.
பொங்கல் வாழ்த்துக்கள்.

Lingeswaran said...

Your article always has unique style.
கலக்கல் நடையில் எழுதுறீங்க அக்கா...

Lingeswaran said...

கலக்கலா எழுதுறீங்க அக்கா...

Suni said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Unknown said...

புதிய படங்கள்;தகவல்.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

அருமையான புதிய தகவல்களை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் சித்ரா! இங்கும்கூட சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இந்த ஸ்டைலில் உண்டு.

Srini said...

” இவங்க எல்லாருமே, அந்த காலத்திலேயே நம்ம ஊரு விட்டுட்டு வந்து, அமெரிக்காவில் முதன் முதலா டெண்ட்டு போட்டவங்களாக இருப்பாங்களோ? ”
---------------------------
- அதனாலதான் அவங்க “Native Americans" ஓ ?

கிரி said...

சித்ரா ரொம்ப வித்யாசமா இருக்கு! இதை அவங்க அப்படியே மாறாமல் வைத்து இருப்பது நிஜமாகவே ஆச்சர்யமாக உள்ளது!

சரி இதை பார்க்க போறேன்னு பேர்வழின்னு நம்ம மாதிரி ஆளுங்க போவதால் எதுவும் பாதிப்பு ஏற்படுகிறதா! :-)