Tuesday, April 19, 2011

ஈஸ்டர் முயல், முட்டை போடுதா?



நான் அமெரிக்கா வந்த புதிதில்,  ஈஸ்ட்டர் திருநாள் நெருங்கி கொண்டு இருந்த பொழுது, ஆலயத்தில் பல்வேறு வழிபாடுகளில் கலந்து கொண்டோம்.  அந்த சமயம் கடைகளுக்கோ அல்லது ஷாப்பிங்  மால் (mall ) சென்ற பொழுது, ஈஸ்ட்டர்க்கு பொருத்தமான இயேசு உயிர்த்தெழுந்த செய்திகள் வெளியே இல்லாமல்,  எங்கு பார்த்தாலும்  முயல் , கூடை நிறைய வண்ண நிற முட்டைகளை வைத்து இருப்பது போல படங்களும் chocolates மற்றும் அலங்காரங்களும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்  இருந்தன.  ஆண் முயல் - பெண் முயல் போன்று costumes அணிந்து கொண்டவர்களும் தென்பட்டார்கள்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  



இந்தியாவில் இருக்கும் வரை,  ஈஸ்டர் என்பது கிறிஸ்தவ திருநாளாகவும்,  ஈஸ்டர் கொண்டாட இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புமே காரணமாக கேட்டு பழகியவளுக்கு , இது புது மாதிரியாக இருந்துச்சு.  



பொதுவாக உலக நாடுகளின் பார்வையில், அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடாகவே காணப்படுகிறது.  பெரும்பாலான அமெரிக்கர்கள்,  கிறிஸ்தவர்கள் தான்  என்பது உண்மையே.

ஆனால், ACLU என்ற ஒரு க்ரூப் பெரிய அளவில் வந்த உடன்,  எல்லா மதங்களின் (கிறிஸ்தவ மார்க்கம் உட்பட) திருவிழாக்களும் கொஞ்சம் பின் வாங்கி அவரவரின் ஆலயங்களிலும் ஆலயம் சார்ந்த இடங்களிலும் கோவில்களிலும் வீடுகளிலும் என்ற அளவுக்கு குறுக்கப் பட்டு விட்டன.  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் முன் உரிமை கொடுத்து சமமாக மதிக்க வேண்டும் என்ற உணர்வில் பொது இடங்களில், குறிப்பாக அரசாங்க பள்ளிகளில் மற்றும் அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான குறியீடுகளோ வழிபாடுகளோ இருக்க கூடாது என்று சட்டப் பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு ACLU முன்னேறி வந்து இருக்கின்றது.    


Majority   ஆக உள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டுவதில் உள்ள உரிமையை விட,   இங்கு minority   ஆக உள்ள தெய்வ நம்பிக்கை அற்றவர்களின்  உரிமைக்கு முக்கியத்துவம் அதிகம்.  தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் குழந்தைகள்,  அவற்றை பார்த்தால் மனக்குழப்பம் ஏற்படுமாம். 

ACLU பற்றிய விவரங்களுக்கு: 


இது ஒரு புறம் இருக்க,  ஜெர்மனியில்,  கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்பாக வசந்த காலத்தை கொண்டாடும் விதத்தில், செழுமை மற்றும் கருவுறுதிறன்க்கென்று இருந்த  தேவதையான (Goddess of Fertility)  Eostre   என்பவருக்காக கொண்டாட்டங்கள் நடந்து இருக்கின்றன.

  வசந்த காலத்தில் தான்,  நிறைய பறவைகள் முட்டையிட்டு இன விருத்தியில் இருக்கும் என்பதால்,  முட்டை வளமையின் சின்னமாக கருதப்பட்டு வந்து இருக்கிறது.  முயல் இனம்,  குறுகிய நாட்களிலேயே பலுகி பெறுவதற்கு பேர் வாங்கியது.  அதனால் கருவுறுதிறன் சின்னமாக கருத்தப்பட்டு வந்து இருக்கிறது.  வசந்த கால திருவிழாக்களில் (Spring Festival)  இந்த சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சர்யமென்ன?  இதன் பாதிப்பில்,   பதினாறாவது நூற்றாண்டில் முயல் முட்டையிட்ட கதை ஒன்று முதல் முதலாக குழந்தைகளுக்காக சொல்லப்பட்டு வந்ததாக வரலாறு சொல்லுதாம்.  

Easter treats:  White Chocolate and Regular Chocolate bunnies and eggs: 
  


பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் சிலர், அமெரிக்க வந்து செட்டில் ஆன பொழுது, தங்களுடன் தங்கள் பாராம்பரிய பழக்க வழக்கங்களையும் கதைகளையும் சேர்த்து  அமெரிக்கா கொண்டு வந்து பரப்பி இருக்கிறார்கள்.  

ஜெர்மனி மற்றும் அமெரிக்க நாடுகளில்,  பின்னர்  missionaries வந்து கிறிஸ்தவ மதத்தை பரப்பிய பொழுது,  வசந்த காலத்தை ஒட்டி வந்த ஈஸ்ட்டர் திருவிழாவோடு இந்த கதைகளும் ஒட்டி புது வடிவம் பெற்று விட்டன.  இத பார்றா!!!


கிறிஸ்தவ விழாக்களை வெளிப்படையாக பெரிய அளவில் கொண்டாட முறுமுறுத்த ACLU போன்ற அமைப்புகள் கூட, வசந்த காலத்துக்கென்று இருக்கும் - எந்த வித மதங்களின்  சம்பந்தமும் இல்லாத பொதுவான விழாவுக்கோ -  அதன் அடையாளங்களாக  வரும் முயல் - முட்டை போன்ற சின்னங்களுக்கோ தடை சொல்ல முடியவில்லை.  

1970 s  இல் இருந்து, அமெரிக்காவில்  வியாபார நோக்கு (commercialism)  எல்லாவற்றிலும் தலையிட ஆரம்பித்த பின்,  முயல் , முட்டை போடும் கதைகள்  வியாபார திறன் சாயம் பூசப்பட்டு புது உரு பெற்று - ஜெர்மானிய பூர்வீகத்தை தொலைத்து - வீறு கொண்டு வந்து இன்று வரை உலா வந்து கொண்டு இருக்கிறது.




வரும் ஞாயிறு,  ஈஸ்டர் திருவிழா கொண்டாடுகிறோம்.  தெய்வ நம்பிக்கையுடன் இயேசுவை ஆராதித்து ஆலயங்களில் மட்டும் தான் வழிபாடு நடைபெறும்.   ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், குழந்தைகள் குதூகலமாக   ஆங்கே ஆங்கே அவர்களுக்காக  வைத்து இருக்கும் "ஈஸ்டர் முயல் போட்ட சாக்லேட் முட்டைகள்" மற்றும் சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகளை கண்டு பிடித்து  சேகரித்து மகிழ்வார்கள். வீடுகளிலோ,  பூங்காக்களிலோ  இப்படி விளையாட்டுக்கள் நடக்கும்.  அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் நடக்கும் " "Easter Bunny Egg Hunt" மிகவும் பிரசித்தம். 

கீழ் உள்ள படத்தில்,  ஒபமா ஒரு சிறு குழந்தைக்கு முட்டை வேட்டையில் உதவுகிறார்: 



கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் என்று ஒரே வரியில் இந்தியாவில் கொண்டாடிவிட்டு வந்த எனக்கு - இப்படி ஜெர்மானிய பாரம்பரியம்  - நாத்திக பாதிப்பு - வசந்த காலம் -  குழந்தைகள் விளையாட்டு எல்லாம் கலந்து கட்டிய  வித்தியாசமான கிறிஸ்தவ திருவிழாவை கொண்டாடுவது  மலைப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

(கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு கொண்டாடப்படும்  கிறிஸ்துமஸ் கூட,  கிறிஸ்துமஸ் தாத்தா என்று நம்ம ஊரில் அழைக்கப்படும் Santa Claus க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமெரிக்காவில்  கொண்டாடப் பட்டு வருவது, தனி கதை. )

கிறிஸ்தவ நாடு என்று உலகத்தாரால் முத்திரை குத்தப்பட்டு இருக்கும்   ஒரு நாட்டில்,  இப்படித்தான் கிறிஸ்தவ திருவிழாவான ஈஸ்ட்டர் கொண்டாடப்படுகிறது.  இயேசு கிறிஸ்து என்ற பெயர், ஆலயம் (ஜெபக்கூட்டங்கள் சேர்த்து)  மற்றும் வீடுகளில் தவிர  பொது இடங்களில் வெளிப்படையாக சொல்ல  மறைக்கப்பட்டு  (விதிவிலக்குகள் உண்டு) , முயல் முட்டை இட்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. 


அனைவருக்கும்  ஈஸ்ட்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்!   

படங்கள்:  கூகுள் அக்காவுக்கு நன்றிகள். 

 

130 comments:

Unknown said...

புதிய விஷயங்கள் தெரிய வைத்ததற்கு நன்றி சகோ!

Ramesh said...

புதுசு இது புதுசு நமக்கு.
இனிய பெரியவெள்ளி நாள் வாழ்த்துகள்

நிரூபன் said...

ஈஸ்டர் முயல் என்பது, Easter bunny தானே?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புதுசு புதுசா சொல்றீங்களே...

நிரூபன் said...

கலாச்சாரத்தினையும், இறை நம்பிக்கையினையும் வளர்க்கும் இவ் ஈஸ்டர் பண்டிகையானது பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஜெர்மனியர்களின் வருகையினை ஒட்டி வியாபார நிகழ்வாகி விட்டது என்பது தான் என் கருத்து.

Chitra said...

Yes, it is Easter Bunny!

சாருஸ்ரீராஜ் said...

பல புதிய தகவல்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

Unknown said...

இனிய பெரியவெள்ளி நாள் வாழ்த்துகள்

வைகை said...

இப்படி அமெரிக்காவை பற்றி நீங்கள் எல்லாமே பதிவில் சொல்லியதால்..அடுத்த வாரம் நான் அமெரிக்காவுக்கு புக் பண்ணியிருந்த டிக்கெட்ட கேன்சல் பண்ணப்போறேன்! உங்க பதிவ பார்த்தே எல்லாம் தெரிஞ்சிக்கிறேன்! செலவு மிச்சம்! ஹா ஹா

Chitra said...

பொதுவாக பெரிய வெள்ளிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்லை. அன்று தான் இயேசு இறந்த தினமாக கருதப்படுகிறது. அதை தொடர்ந்து வரும் ஈஸ்டர் ஞாயிறு தான் கொண்டாட்டமே.

Madhavan Srinivasagopalan said...

இந்தியாவுல கொண்டாடினா அது ஈஸ்டர்.. (ஈஸ்ட்)
அமெரிக்காவுல கொண்டாடினா அது வெஸ்டர்தான (வெஸ்ட்) ?
--- டவுட்டு..

சாந்தி மாரியப்பன் said...

இவ்ளோ அழகான சாக்லெட் முயல்களை சாப்பிட மனசே வராதே..

Anonymous said...

எல்லாமே கெமேஷலைஸ்ட் ஆகிவிட்டது. ஆனாலும், குதூகலமாக கொண்டாடும் போது சந்தோசமாகத் தான் இருக்கிறது. ஈஸ்டர் எக்ல வளர்ந்த குழந்தைகளுக்கு தேவையான அக்சசரீஸ் வைச்சு கொடுக்கணும் என்று ஒரு போராட்டம் நடத்தாலாம் என்று இருக்கேன். ஹி ஹி.

எல்லோருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதிய தகவல்கள்.. நாமும் உங்கள் பதிவினூடாக அமெரிக்கா பற்றி நிறய விடயங்கள் தெரிந்து கொள்கின்றோம்.

Mahi said...

ரொம்ப நாளா ஈஸ்டருக்கும் முயலுக்கும் முட்டைக்கும் என்ன சம்பந்தம்னு ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது. விளக்கமான பதிவுக்கு நன்றி! :)

உங்களுக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

vasu balaji said...

lot of new info. thanks:)

மொக்கராசா said...

//ஒரு சீரியஸ் கிறிஸ்தவ திருவிழாவை வச்சு ஒட்டு மொத்தமா காமெடி பண்ணிட்டாங்களே! அவ்வ்வ்வ்......
பண்டிகை, திருநாள் எல்லாமே மக்களை ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இருக்க செய்ய மட்டுமே...
இது காமெடி இல்லை என்பது என் எண்ணம்....

ரேவா said...

வழக்கம் போல் அமெரிக்க பற்றியும், அங்கு அவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பற்றியும் தெரிந்து கொண்டோம் சகோ.

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் சகோ.

Asiya Omar said...

இங்கும் தங்க முயல் சாக்லேட் ,முட்டை மார்க்கெட்டில் பார்த்தேன்,இதை யார் வாங்குவார்கள் என்று நினைத்தேன்,ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு என்று உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்...
ஈஸ்டர் வாழ்த்துக்கள் சித்ரா.அமெரிக்க கலாச்சாரத்திற்கும் நமக்கும் நிறைய வித்தியாசம்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

a lot of new informations.thanks chitra

வை.கோபாலகிருஷ்ணன் said...

சித்ரா பெளர்ணமி நிலவே!

ஈஸ்டர், முயல், முட்டை, ஆஸ்திகம், நாஸ்திகம், கிறிஸ்துவம், அமெரிக்கா, வெவ்வேறு நாடுகளின் கொண்டாட்டங்கள், அதன் பின்னனி என எல்லாவற்றையும் பின்னிப்பின்னி ஒரு பதிவு தந்து விட்டீர்கள்.

இவற்றைப்பற்றியெல்லாம் இதுவரை அறிந்து கொள்ளாமல் உள்ள எனக்கு, எல்லா விஷயங்களையும், குழந்தைக்கு உணவு ஊட்டுவதுபோல, வெகு இதமாக அருமையாக, உங்களுக்கே உள்ள தனித்திறமையுடன், வெளியிட்டுள்ளதற்கு, என் மனமார்ந்த பாரட்டுக்கள்.

ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

தொடர்ந்து இது போல அசத்துங்கள்.

அசர மிகுந்த ஆவலுடன்,
உங்கள் கோபு மாமா.

பனித்துளி சங்கர் said...

நானும் இதுவரை அறிந்திராத ஒரு தகவல்தான் இந்த முயல் முட்டை கதை . தெளிவான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

Jerry Eshananda said...

ஈஸ்டர் பெருநாள் வாழ்த்துகள், ஊருக்கு வர்றப்ப நாலு மொசக்குட்டி..பார்சல்.....எம்புட்டு நாளுதான்,....சைடு டிஷ்க்கு ஊறுகாயை வச்சே ஓட்டுறது.

சுசி said...

எனக்கும் இங்க வந்துதான் தெரிய வந்தது சித்ரா..

நல்ல பகிர்வு.

எல் கே said...

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

புதிய தகவலுக்கு நன்றி சித்ரா. பொதுவாகவே மனிதர்கள் தங்கள் இறைவழிபாட்டை தன வீட்டிற்குள் மட்டுமே வைத்துக்கொண்டு, வீட்டிற்கு வெளியில் சக மனிதர்களை மதிக்கும் மனிதனாக இருந்து விட்டால் இந்த புவியில் மதக கலவரங்கள் ஏன் நிகழப் போகிறது?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த டிப்டாப்பாக உயரமாக, காதை விறைத்துக்கொண்டு, டை கட்டிக்கொண்டு, ஃபுல் பேண்ட் ஷர்ட் போட்டு, ஷூ போட்டு, கையில் முழுக்கேரட்டுடன் நிற்கும், முசக்குட்டி வெகு அழகாக உள்ளது. சித்ரான்னா சித்ரா தான். Very Good Presentation. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுடிதாருடன் பெண் முயல் ஒன்றும் காட்டியிருந்தால் இன்னும் நல்லா அழகாக இருந்திருக்குமோ?

நான் என் பதிவில் சுடிதார் வாங்கப் போய்க்கொண்டிருப்பதால் எனக்கு இந்த எண்ணம் வந்துள்ளது, சித்ரா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இங்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, யானைக்குஞ்சு வந்ததுன்னு 16 வயதினிலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

16 ஐ த்திருப்பிப்போட்டால் 61 வயதில், முயல் முட்டையிட்டதை சித்ரா மூலம் கேள்விப்பட்டதில், மயிலு (ஸ்ரீதேவி)போல எனக்கும் சிரிப்பு வந்து விட்டது.

Mythili (மைதிலி ) said...

ஈஸ்டர் பெயர் காரணம் ஒரு வழியா தெரிஞ்சுக்கிட்டேன்....

MANO நாஞ்சில் மனோ said...

இது புதிய செய்தி எனக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

//Majority ஆக உள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டுவதில் உள்ள உரிமையை விட, இங்கு minority ஆக உள்ள தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அதிகம். தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் குழந்தைகள், அவற்றை பார்த்தால் மனக்குழப்பம் ஏற்படுமாம். //


பாருங்கப்பா....நம்ம ஊரும்தான் இருக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

//இதன் பாதிப்பில், பதினாறாவது நூற்றாண்டில் முயல் முட்டையிட்ட கதை ஒன்று முதல் முதலாக குழந்தைகளுக்காக சொல்லப்பட்டு வந்ததாக வரலாறு சொல்லுதாம். //


ஆச்சர்யமா இருக்கே....!!!!

MANO நாஞ்சில் மனோ said...

//கிறிஸ்தவ நாடு என்று உலகத்தாரால் முத்திரை குத்தப்பட்டு இருக்கும் ஒரு நாட்டில், இப்படித்தான் கிறிஸ்தவ திருவிழாவான ஈஸ்ட்டர் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து என்ற பெயர், ஆலயம் (ஜெபக்கூட்டங்கள் சேர்த்து) மற்றும் வீடுகளில் தவிர பொது இடங்களில் வெளிப்படையாக சொல்ல மறைக்கப்பட்டு (விதிவிலக்குகள் உண்டு) , முயல் முட்டை இட்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. ///


மொத்தத்தில் உங்கள் இந்த பதிவு, அமெரிக்காவின் இன்னொரு முகத்தை காட்டி இருக்கிறது!!!!!!!!!!!!!

MANO நாஞ்சில் மனோ said...

உங்களுக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள் சித்ரா.....

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அருமையானப் பகிர்வு.... நன்றி சகோ!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஈஸ்டர் விஷயங்களை தெரிந்து கொண்டேன்... நன்றி அக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....

Gayathri Kumar said...

Very informative!

சசிகுமார் said...

தங்களுக்கும் ஈஸ்ட்டர் தின நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

ஈஸ்டர் வாழ்த்துக்கள் அக்கா

Saraswathi Ganeshan said...

Thanks for sharing these information. Happy Easter Mahi..

Saraswathi Ganeshan said...

Thanks for these information Chitra.. Have miss typed your name..Sorry dear.

பாலா said...

easter eggs என்பதன் பிண்ணணி இன்னக்கி தான் வெளங்குது... நன்றி ஹை !

புனித வெள்ளி வாழ்த்துக்கள் !

ஸாதிகா said...

இதுவரை அறியாத விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி.பளபளக்கும் சாக்லேட் முயல்கள் பார்க்கவே அழகாக இருக்கின்றது.

போளூர் தயாநிதி said...

நானும் இதுவரை அறிந்திராத ஒரு தகவல்தான் இந்த முயல் முட்டை கதை . தெளிவான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

KParthasarathi said...

வழக்கம் போல இந்த திருவிழாவையும் சிறப்பாக புதிய நோக்கோடு எழுதி உள்ளது சந்தோஷமாக இருக்கு.சிறுபான்மையரான நாஸ்திகர்கள் மனம் புண்படகூடாது என்பதில் உள்ள தீவிரம் பக்தர்களின் மனம் புண்படுமே என்பதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.ஆலயங்களில் தடுக்க வில்லையே நல்ல வேளை.
இந்த நன்னாளில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

ஈஸ்டர் கொண்டாடும் தானைத்தலைவி சித்ராக்காவுக்கு வாழ்த்துக்கள்!

ADHI VENKAT said...

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் சித்ரா. பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

Menaga Sathia said...

விளக்கத்திற்க்கு நன்றி..இனிய ஈஸ்டர்திருநாள் வாழ்த்துக்கள்!!

Anonymous said...

அமெரிக்கா பற்றிய சுவையான செய்திகள் உங்கள் எழுத்தில் படிக்கும்போது இன்னும் சுவை

Anonymous said...

ஈஸ்டர் முயல் பற்றி இப்போதான் கேள்விபடுறேன்

Jeyanthi said...

ஈஸ்ட்டர் திருநாள் வாழ்த்துக்கள் !
இப்பதான் எங்க ஆபீஸ் - ல ஈஸ்ட்டர் முயல் choclates and கலர் egg குடுத்தாங்க !
I appreciate this culture, They respect employees and make them feel like part of the family (company). We get choclates and easter eggs :)
Happy long weekend .

vanathy said...

interesting post. Once a lady told me, " this ( egg hunting) is not real Easter. Some people wanted to make money out of every thing so they invented this egg hunting game."

G.M Balasubramaniam said...

அமெரிக்கா பற்றியும் அமெரிக்கர்களைப் பற்றியும் உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது, அவர்களின் சில குணாதிசயங்கள் அவர்கள் மேல் எந்த விதமான அபிப்பிராயங்களைக் கொள்வது என்று பிடிபடாமலேயே போய்விடுகிறது. அவர்களது இன, நிற அபிப்பிராயங்களில் ஏதேனும் மாற்றம்இருக்கிறதா.?WHAT ABOUT THE KKK GROUP.?PLEASE DO NOT GENERALISE. YOU MAY PLEASE WRITE A POSTING ON THAT.,IF IT DOES NOT GO AGAINST YOUR GENERAL NATURE.

ராமலக்ஷ்மி said...

அறியாத தகவல்களை மிக சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்! நன்றி சித்ரா:)!

நசரேயன் said...

உங்களுக்கும் ஈஸ்ட்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்

Chitra said...

Blogger G.M Balasubramaniam said...

அமெரிக்கா பற்றியும் அமெரிக்கர்களைப் பற்றியும் உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது, அவர்களின் சில குணாதிசயங்கள் அவர்கள் மேல் எந்த விதமான அபிப்பிராயங்களைக் கொள்வது என்று பிடிபடாமலேயே போய்விடுகிறது. அவர்களது இன, நிற அபிப்பிராயங்களில் ஏதேனும் மாற்றம்இருக்கிறதா.?WHAT ABOUT THE KKK GROUP.?PLEASE DO NOT GENERALISE. YOU MAY PLEASE WRITE A POSTING ON THAT.,IF IT DOES NOT GO AGAINST YOUR GENERAL NATURE.



.........அமெரிக்கா என்றாலே இப்படித்தான் என்று பல நாடுகளில் ஒரு முத்திரை குத்தப்பட்டு வருவது தெரிந்ததே.... என்னுடைய பதிவுகளில், நான் கண்ட அமெரிக்காவின் பன்முகங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறேன். இங்குள்ளவர்களும் சராசரி மனிதர்கள் தான். பெரும்பாலானோர் சகிப்புத்தன்மை அதிகம் கொண்டவர்கள்.

ஒரே விதமான அபிப்ராயம் கொள்ளாமல், பல விஷயங்களையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான், நான் விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன்.

KKK பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள : http://en.wikipedia.org/wiki/Ku_Klux_Klan

Ram said...

எனக்கு ஒருவகையில நீங்க டீச்சர் போல.. ரொம்ப விசயம் சொல்றாங்கப்பா..

தெய்வசுகந்தி said...

Happy Easter & Long weekend!!

Priya said...

உங்களுக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள் சித்ரா:-)

ஆனந்தி.. said...

அடடா....இவ்வளவு விஷயம் இருக்கா...எல்லாமே அமேரிக்கா பக்கம் ஒரு வித்யாசமா தான் யோசிக்கிராய்ங்க....இந்த கான்செப்ட் நல்லா இருக்கு அம்மு..வசந்த காலம்...கருவுரு காலம்...முயல் முட்டை கான்செப்ட் னு...ஒரே ஜெகஜோதி தான் போ....

ஆமாம் என்ன உங்க ஊரில் முட்டை பற்றாகுறையா? இல்லை நான் முட்டை சாப்ட மாட்டேன்னு வெறுப்பேத்துறேன்களா யுவர் ஆனர்...அன்னைக்கு அந்த ப்ளூ முட்ட...இன்னைக்கு முயல் முட்ட (??!!)..ம்ம்..நீ சரிப்படமாட்ட...இதுக்கு சரிபடமாட்ட :)))

ஆனந்தி.. said...

மதினி!!!...அண்ணன் மற்றும் வீட்டில் குட்டிஸ் மற்றும் எல்லாருக்கும் ஈஸ்ட்டர் தின வாழ்த்துக்கள் (கொஞ்சம் அட்வான்ஸ் ஆ இப்ப) அப்புரமேட்டுக்கு பிரெஷ் ஆ சொல்றேன் ...:)))

ம.தி.சுதா said...

////Majority ஆக உள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டுவதில் உள்ள உரிமையை விட, இங்கு minority ஆக உள்ள தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அதிகம்.////

இந்த இடம் தான் ரச்மென்ரா இருக்கிறது அக்கா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் நூறாவதுபதிவை திருடிய சுயநலக்காரி..

சென்னை பித்தன் said...

புதிய தகவல்கள் பலவற்றை எங்களுக்கு அளிப்பதற்கு நன்றி!

ஸ்ரீராம். said...

திரும்பவும் சில பல புதிய தகவல்கள்.....ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

சாரிக்கா ரொம்ப லேட்டா வந்ததற்க்கு...

இராஜராஜேஸ்வரி said...

இது புது மாதிரியாக இருந்துச்சு.
ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு சித்ராம்மா.
நகைச்சுவையாக எழுதுவது போல் விஷயங்களை அழகாக மனதில் பதிய வைத்து விடுகிறீர்கள்.
நிறைய புதிய விஷயங்கள்.
வாழ்த்துக்கள் சித்ராம்மா.

Lifewithspices said...

Thats a whole lot of info wonderful post!!! Enakku therinjadhuellam anikku leave illa... sunday ila!!!

ஹேமா said...

இனிய வாழ்த்துகள் சித்ரா.இங்கயும் அவிச்ச முட்டை அதுவும் கலர் கலரா நிறையக் கிடைக்கும் இந்த நேரங்களில !

அரசூரான் said...

உங்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.

இன்று ஈஸ்டர் வணிகமயமாக்கப் பட்டுவிட்டது என்பது உண்மையே. கடைகளைத் தேடிச் சென்று நாம் இப்போது பொன்முட்டை இடுகிறோம்... :)

RVS said...

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் சித்ரா! ;-)

சி.பி.செந்தில்குமார் said...

>>>எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஹா ஹா உங்களுக்கேவா...

சி.பி.செந்தில்குமார் said...

குழந்தை முட்டை கலெக்ட் பண்ணும் ஸ்டில் ச்சோ ஸ்வீட்

சி.பி.செந்தில்குமார் said...

யாராவது ஒரு கருத்தோ, டவுட்டோ சொன்னா அல்லது கேட்டா அடுத்த செகண்ட்டே ஒரு லிங்க் கொடுத்து ஆதாரம் காட்டும் உங்க சுறு சுறுப்பும் உழைப்பும் பதிவுலகுக்கு புதுசு.. உதா - இன்றைய பதிவில் கமெண்ட்டில்


KKK பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள : http://en.wikipedia.org/wiki/Ku_Klux_Klan

செங்கோவி said...

நிறைய தகவல்களை அள்ளி விட்ருக்கீங்க..ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்!

Vikis Kitchen said...

Food for thought:) Last week , I discussed certain things you mentioned here with our Parish priest. He too says the same:)...After reading this, I am analyzing myself again:) Timely and touching post dear. How is the preparation going? Happy Easter to you and family, Chithra!

suvanappiriyan said...

புதிய தகவல்கள். வாழ்த்துக்கள்.

ஆகுலன் said...

இப்ப எனக்கு விளங்கிடுத்து
தங்களுக்கும் எனது ஈஸ்ட்டர் தின வாழ்த்துக்கள்.......

Mahan.Thamesh said...

ஈஸ்ட்டர் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்
நன்றி பகிர்வுக்கு.

mamtc said...

This is one other thing I love about America.
I couldnt think of celebrating christmas or easter in India whereas here all the festivals are celebrated with importance to family and kids.
Santa Claus is no thrid cousin of Jesus and Easter bunny didnt help Jesus build any bridge to Jerusalem and Halloween everything.
My kids love to hunt for eggs on easter:)

ஹுஸைனம்மா said...

சுவாரஸ்யமான தகவல்கள். முட்டை என்பது ஒரு புது உயிரின் வரவைக் குறிப்பதால், இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டது என்று படித்திருக்கிறேன். முயல் விஷயம் இங்கு கண்டதில்லை. புது தகவல். முட்டைகள்தான் எங்கெங்கு காணினும்!! :-))))

//எந்த வித மதங்களின் சம்பந்தமும் இல்லாத பொதுவான விழாவுக்கோ - அதன் அடையாளங்களாக வரும் முயல் - முட்டை போன்ற சின்னங்களுக்கோ தடை சொல்ல முடியவில்லை//

நம்ம கலைஞர் டிவியில “பண்டிகைதின சிறப்பு நிகழ்ச்சிகள்” போடுவாங்களே, அதான் ஞாபகம் வருது!! ;-)))))

ஈஸ்டர்தின வாழ்த்துகள் சித்ரா.

பொன் மாலை பொழுது said...

////ஒரே விதமான அபிப்ராயம் கொள்ளாமல், பல விஷயங்களையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான், நான் விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன். ///


Keep going Chitra....:))))

சிநேகிதன் அக்பர் said...

பல புதிய தகவல்கள்.

நன்றி சகோ சித்ரா.

Unknown said...

புதிய செய்திகளுக்கு நன்றி.இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

Tks for lot of info.. Happy Easter Siss.

Amudhavan said...

தாங்கள் கடந்துவர நேரும் அனுபவங்களை சந்தோஷத்துடனும் அதே சமயம் அவை பற்றிய சுவாரசியத் தகவல்களை தோழியுடன் பகிர்ந்துகொள்ளும் வாஞ்சையுடனும் சொல்லிச்செல்லும் உங்கள் பாணி அழகாயிருக்கிறது. தங்களின் தந்தையார் திரு பொ.ம.ராசாமணியின் நகைச்சுவை என்னைக்கவர்ந்த ஒன்று. அந்த நகைச்சுவையின் இழை உங்கள் எழுத்தில் ஓடுவதையும் ரசிக்கமுடிகிறது.வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அமுதவன்.

Thenu said...

மீண்டுமொரு புதுவிதமான விஷயம்.. இந்த வார இறுதியில் என் நண்பர்களுடன் கதைக்க நல்லதொரு பதிப்பு.. கலக்கறீங்க சித்ரா madam... அனைவருக்கும் ஈஸ்ட்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

க.பாலாசி said...

அரிய தகவல்.. நல்ல இடுகை.. உங்களுக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

Anonymous said...

நல்ல பதிவு. வெள்ளை மாளிகையில் பத்து கட்டளைகளும் நீக்கப்பட்டு விட்டது - இது கவலைக்குரிய விஷயம்.

செந்தில்குமார் said...

ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் சித்ரா....

ஈஸ்டர்முயல் முட்டை ..பதியது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

happy Easter wishes Chitra!

all informations are so nice

ராஜ நடராஜன் said...

Long live America's Freedom!

Happy Easter to Your Family!

அ.முத்து பிரகாஷ் said...

இந்த பதிவு ரொம்ப பிடிச்சுது அக்கா.. ஈஸ்டர் பத்தி மட்டுமில்லாது, அதிகம் வெளித் தெரியாத பல விடயங்கள் உங்க பதிவுல நிரம்பி வழியுது .... ACLU பற்றி கூட நீங்க மறைக்காமல் எழுதியிருக்கிறது உங்களோட பெருந்தன்மையை காட்டுது ...அமெரிக்கா ஒருபோதும் கிறித்துவ நாடாக நிறுவப்படவில்லை.குடியரசுத் தலைவர் ஜான் ஆடம்ஸ் காலத்தில் (1797) இஸ்லாமிய நாடான திரிபொலியுடன் அமெரிக்கா செய்துகொண்டஒப்பந்தத்தில், ஐக்கிய அமெரிக்கா கிறித்துவ மதத்தின் அடிப்படையில் நிறுவப்படவில்லை என தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது . தங்களின் பதிவு , ஜெபர்சனின் விருப்பமும் நம்பிக்கையும் இன்னமும் பொய்த்துவிட வில்லை என்பதையும் கோடிட்டு காட்டுகிறது ...

தங்களுக்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் .... முட்டைகள் பெருகட்டும்!... குதூகலம் பரவட்டும்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முயலுக்குட்டி முட்டையிட்டு... யானைக்குட்டி வந்ததுன்னு... சித்ராக்கா சொல்லக் கேட்டு.... happy easter..

உணவு உலகம் said...

புதிய தகவல்கள் எப்போதும் புது விதமா சொல்வது உஙள் பாணி. அட்வான்ஸ் ஈஸ்டர் திருநாள் வாழ்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

HAPPY EASTER CHITHRA. THANK YOU FOR SHARING THIS INTERESTING GOOD NEWS. GOD BE WITH YOU ALWAYS.

Yaathoramani.blogspot.com said...

அரிய தகவல்களுடனும் படங்களுடனும் கூடிய
அருமையான பதிவு தந்த்தமைக்கு வாழ்த்துக்கள்

கொங்கு சாட்டை said...

உங்கள் கருத்துக்கள். அருமை. நான் உங்களை பின் தொடர இன்று முதல்.

நிஷாந்தன் said...

குறள் மாதிரி சுருக்கமாகவும் , தெளிவாகவும், அழகாகவும் ஈஸ்ட்டர் பற்றிய விளக்கங்களைத் தந்திருக்கிறீர்கள். அதனால் குறள் வடிவிலேயே ஒரு நன்றிப் பா !

கர்த்தரின் சரிதையினைப் பளிங்குக் கல்லாலாய
சிற்பமென செதுக்கியமை யழகு .

middleclassmadhavi said...

லேட்டா வந்து விட்டேன் -ஆனால் ஈஸ்டருக்கு முன்னே
புதிய தகவல்களுக்கு நன்றி

கருப்பசாமி பார்த்திபன் said...

குதிரை முட்டை அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் முதன்முறையாக உங்கள் தயவில்
முயல் முட்டைய பார்த்துவிட்டேன்.

செந்நெல்குடி பார்த்திபன்
சிங்கப்பூர்.

Unknown said...

புதிய தகவல்கள் தெரிந்துக்கொண்டோம் நன்றி சித்ரா.. உங்களுக்கு எனது ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

புதிய தகவல்கள்! அருமையான படங்கள்!! அசத்துகிறீர்கள் சித்ரா!

நாடோடி said...

நானும் இப்போது தான் இதைப்ப்ற்றி கேள்விப்ப‌டுகிறேன்..

உங்க‌ளுக்கும், உங்க‌ள் குடும்ப‌த்தின‌ருக்கும் என்னுடைய‌ ஈஸ்ட‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள்..

Jayanthy Kumaran said...

really interesting....thanx for sharing Chitra..
take care n have a nice day..:)
Tasty Appetite

சிவகுமாரன் said...

\\\ தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் குழந்தைகள், அவற்றை பார்த்தால் மனக்குழப்பம் ஏற்படுமாம்.///
அட என்னங்க இது ! அவங்க நம்மளை தானே மனக்குழப்பம் அடஞ்சவங்களா கேலி பேசறாங்க .

சிவகுமாரன் said...

\\\பொதுவாக பெரிய வெள்ளிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில்லை. அன்று தான் இயேசு இறந்த தினமாக கருதப்படுகிறது//

பிறகேன் அது Good Friday?

Chitra said...

நமக்கு இரட்சிப்பு - இயேசுவின் பாடுகள், மரணம் வாயிலாக பாவ மன்னிப்பு ( Salvation) கொண்டு வரப்பட்ட நாளாக கருதப்படுவதால்.

நிஷாந்தன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள். என்றென்றும் தங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் , அன்பும், செல்வங்களும் செழிக்கும் வகையில் இறைவனின் அருள் பூரணமாகக் கிட்டுமாக !

குறையொன்றுமில்லை. said...

உங்க பக்கம் வந்தாலே தெரியாத பல அரிய விஷயங்கள் தெரிந்துகொள்ள
முடிகிரது சித்ரா.

கோமதி அரசு said...

வரும் ஞாயிறு, ஈஸ்டர் திருவிழா கொண்டாடுகிறோம். தெய்வ நம்பிக்கையுடன் இயேசுவை ஆராதித்து ஆலயங்களில் மட்டும் தான் வழிபாடு நடைபெறும். ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், குழந்தைகள் குதூகலமாக ஆங்கே ஆங்கே அவர்களுக்காக வைத்து இருக்கும் "ஈஸ்டர் முயல் போட்ட சாக்லேட் முட்டைகள்" மற்றும் சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகளை கண்டு பிடித்து சேகரித்து மகிழ்வார்கள். வீடுகளிலோ, பூங்காக்களிலோ இப்படி விளையாட்டுக்கள் நடக்கும். அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் நடக்கும் " "Easter Bunny Egg Hunt" மிகவும் பிரசித்தம்.//

சித்ரா புதிய செய்திகளை படிக்க தந்த்தற்கு நன்றி.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.

வசந்தம், எல்லோர் வாழ்விலும் வந்து எல்லோரும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துக்கள்.

Murugeswari Rajavel said...

அரட்டை அரங்கம் என்று பெயர் வைத்து அசத்தல் அரங்கமாக்கினார் விசு.அதுபோல்,இது வெட்டிப் பேச்சு அல்ல,வெவரமான பேச்சு.

Jerji said...

fact remains that Christianity does not belong any where. we wrongly attribute its origin to Western nations. Jesus was born in Asia.
USD has the words "In God we Trust". I think it was Lincoln's quote. Bible says that Abraham was blessed by God as "Through you the nations will be blessed". God keeps up His promise. Through faith one becomes the descendant of Abraham. Yes it is because of this that US is blessed. The day they forget, ignore this their blessing will be cast away.

david santos said...

Happy Easter!

Yoganathan.N said...

எனக்கும் இந்த நந்தேகம் வெகு நாட்களாக இருந்தது. விளக்கத்திற்கு நன்றி. :)

Happy Easter to you too. :)

கொங்கு சாட்டை said...

ஈஸ்டர் தான் முடிந்து விட்டதே அடுத்த பதிவை எழுதலாமே, அன்பு சகோதரி காத்திருக்கிறேன் உங்கள் பதிவுக்கு

Jaleela Kamal said...

நெஜமாவே இப்பதான் ஈஸ்டர். முயல் முட்டை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டேன்,.
ஈஸ்டர் வாழ்த்துகள், வந்து சூப்பர் பதிவு போடுங்க.

சத்ரியன் said...

சித்ராக்கா,

புதுப்புதுத் தகவல்கள்.

மாதேவி said...

படங்களுடன் ஈஸ்டர் பதிவு அழகு.

மாலதி said...

பல புதிய தகவல்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

SpicyTasty said...

That was nice piece of information. Nice pics.

Thenammai Lakshmanan said...

முயல் சாக்லேட் வேணும்... பூஊஊஊ..

இன்றைய கவிதை said...

மிக அருமை தெரியாத விஷயத்தை தெளிவாக எளிமையாக சொல்லி கலக்கிட்டீங்க

முயல் முட்டை போடுமோ போடாதோ ஈஸ்டர் என்பதின் மறு வடிவம் ஓன்று இருக்கிறது என்று அறிய வைத்ததர்க்கு நன்றி சித்ரா

ஜேகே

Malar Gandhi said...

Very informative post, took a trail to ACLU link. Easter Bunny hunt story is wonderful. Hope you guys had a terrific weekend...belated Eater wishes:)

ஹேமா (HVL) said...

விஷயங்கள் புதுசா இருக்கு.இன்னும் நிறைய எழுதுங்க.

NRIGirl said...

Hi Chitra! Greetings. First time here. Your blog was suggested to me by KParthasarathi. Glad to be visiting you. I am also from Tirunelveli.

We just hosted a Easter Egg Hunt for our community children and plan to write it as a post shortly. Check me out sometime.

Will be back to read earlier posts.

Regards,
~ NRIGirl

அஞ்சா சிங்கம் said...

சத்தியமா இந்த விஷயம் எல்லாம் எனக்கு இப்போ தான் தெரியும் ஈஸ்டருக்கும் முட்டைக்கும் என்ன சம்பந்தம் என்று பல முறை குழம்பி இருக்கிறேன் .................

!? கோவை சாட்டை ?! said...

அன்பு அக்கா விடுமுறை போதும், இடுகைகள் வேணும்,