Monday, August 2, 2010

அவள் ஒரு "தொடர்பதிவு"

உருப்படியாக (????????????????????) நானே ஒரு டாபிக் யோசித்து எழுதி,  ஒரு மாதத்துக்கு மேலாக ஆகி விட்டது.... தொடர் பதிவு தயவில் -  மற்ற பதிவர்கள் கொடுத்த டாபிக் தயவில்   எழுதி .....ஜூலை மாதத்தை  ஓட்டி இருக்கேன் என்று இன்றுதான் பார்த்தேன்.... அவ்வ்வ்வ்.....

அப்படியும் இப்படியுமா போயி ஆகஸ்ட் வந்துவிட்டது.  என்ன எழுதலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன்.... எழுத எத்தனையோ விஷயங்கள்.......... ம்ம்ம்ம்..... என்ன எழுதலாம்?

மீண்டும், இந்த வாரத்தில் வரும் நான்கு நாட்கள் பயணம் தான் நினைவுக்கு வந்தது.  அந்த நாட்களில், ப்லாக் பக்கம் வருவது சாத்தியப் படாதே என்ற "கவலை" வேறு.....  இந்த நினைப்ஸ் மேட் மீ சிரிப்ஸ்  யா.....

எத்தனயோ வேலைகளுக்கு மத்தியில், ஒரு பொழுது போக்காக ப்லாக் என்று ஆரம்பித்து விட்டு,
இப்பொழுது, ப்லாக் வேலை (இடுகைகள்,  பின்னூட்டம்,  லைக், பரிந்துரை) மத்தியில் அத்தனை வேலைகளையும் செய்கிறேனோ என்ற பீலிங்க்ஸ்யா.....   ம்ம்ம்ம்..... என்ன செய்யலாம்?


சரி, இந்த வார quota வுக்கு என்ன எழுதலாம்?  என்னமோ பதிவு  போடலைனா,  கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்து விடும் என்கிற நினைப்பு.... ...... சித்ரா, உனக்கே இது டூ மச்..... மச்சி,  மச்சான்,  மச்சினியா தெரியல?

என்ன பதிவு போட? ம்ம்ம்ம்.....  என்ன இடுகை போட?
யோசிக்காம போடு....... கூகிளார் கொடுத்த "சொத்து" உரிமையோடு ......

"சும்மா"  பற்றி கூட எழுதியாச்சு...... இனி,   சும்மா வேற  என்ன எழுதலாம்?

சமூதாய அக்கறை கொண்டு ஏதாவது எழுதலாம்.  சீரியஸா எழுதுற மூடு இல்லை.... ம்ம்ம்.... வேறு என்ன எழுதலாம்?


ஒரு பெரிய ஆழமான விஷயத்தை எடுத்து,  நாலே பேருக்கு புரிகிற மாதிரி இலக்கியம் எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து,  நாலு பேரு "புலம்புற" மாதிரி மொக்கை எழுதலாம்.....
ஒரு விஷயத்தை எடுத்து,  நாலு பேருக்கு கூட புரியாத மாதிரி எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து,  நாலு பேரு வந்து "கலக்கல் பதிவு" என்று சொல்ற மாதிரி எழுதலாம்.....
ம்ம்ம்ம்....... என்ன எழுதலாம்?

 
 
நம்ம  புளப்பு  "சிரிப்பா சிரிக்கிற" மாதிரி வாழ்க்கை போனால்,   tragedy  -
நம்ம புளப்பை பார்த்து நாமே சிரிக்க முடிந்தால்,  காமெடி.
ம்ம்ம்ம்...... என்ன எழுதலாம்?

 என்னைப் போய் சிலர், "பிரபல" பதிவர் என்று சொல்கிறார்கள்.  இறை அருள்,  பதிவுலக நண்பர்களின் ஊக்கமான பின்னூட்டங்கள்,  அவர்களின் பரிசாக பரிந்துரைகள் மற்றும் "லைக்"கள்,  என்று  இன்னும் "பிற(ர்) பலத்தில்" இருப்பதை சொல்கிறார்களோ?  எல்லோருக்கும் நன்றி சொல்லி எழுதலாம்.... ம்ம்ம்ம்.... எப்படி சொல்லி   எழுதலாம்?

 பதிவுலக நண்பர்கள்,  உள்ளதை உள்ளபடி பின்னூட்டங்களில் சொன்னால்,  என்ன ஆகும்?  எனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் எல்லோரும் உண்மையான feedback மட்டுமே சொல்ல வேண்டும் - ஆலோசனை மட்டுமே தர வேண்டும் என்று சொன்னால் - என்னால் எந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியும் - வரவேற்க முடியும் என்று யோசித்து எழுதலாம்........ ம்ம்ம்ம்ம்ம்...... என்ன எழுதலாம்?


இறைவன் vs மனிதன் என்று ஏதாவது எழுதலாமா?
மனிதன் இருப்பது உருவத்திலா?
மனிதம் உள்ள இதயத்திலா?
 இறைவன் இருப்பதும் உருவத்திலா?
இருக்கும் நம்பிக்கையிலா?
மனிதனின் புரிதல்,  பகுத்து அறிவதிலா?
இறையன்பை  பகுத்து உணர்வதிலா?
ம்ம்ம்ம்ம்ம்........ என்ன எழுதலாம்?

இன்னும் பெண்டிங்ல இருக்கிற தொடர் பதிவு அழைப்புகளுக்கு ஏற்ற மாதிரி யோசித்து எழுதலாம்....ம்ம்ம்ம்.... எப்பொழுது எழுதலாம்?

சரியா போச்சு..... "அவளோட எண்ணங்கள்" என்று தலைப்பு வைத்து இருக்கலாமோ?
சே,..... இந்தியாவில் இருந்து வந்து இருக்கும் நண்பரின் பெற்றோர்களை impress பண்றேன்   என்று அவர்களுக்கு கம்பெனி கொடுக்க,   டிவியில்  பழைய பாலச்சந்தர் படம், "அவள் ஒரு தொடர்கதை" பார்த்து விட்டு,  "ஞே"  "ஞா"  " ஞி"   " ஞீ "   "ஞௌ"   என்று முழிக்கும் போது பதிவு எழுத வரக்கூடாது..... முடிவே இல்லாத முடிவு  .....முடிவு எடுக்க முடியாத/தெரியாத முடிவு ஆகி போச்சுல.....  ஸ்ஸ்ஸ்..... அப்பா.... எனக்கே முடியல...... இதோட முடிச்சிக்கிறேன்.....
The End !!!

ஸ்ரீராம். said... விகடன் குட் ப்லாக்ஸ்ல உங்கள் இந்தப் பதிவு....

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp 

109 comments:

Anonymous said...

சித்ரா படிச்ச பிறகு எனக்கே முடியலை பா ஸ்ஸ்ஸ்...இவ்ளோ நல்ல பதிவு நான் பார்க்கவே இல்லே ..அப்பா...( ஹி ஹி சும்மா தமாஷு )

இனி சூடா ஒரு கப் டீ குடிச்சா தான் நான் எதா கிறுக்க முடியும் ..வரட்டா

Unknown said...

சத்தியமா முடியலீங்க....

எப்பூடி.. said...

என்ன பின்னூடம் போடலாம் ? அப்பிடி போடலாமா? இல்லை இப்பிடி போடலாமா? அல்லது அப்பிடியும் இப்பிடியுமா சேர்த்து போடலாமா, இல்லை அப்பாலிக்கா வந்து போடலாமா? ஒண்ணுமே புரியல. எதுக்கும் ஜோசிச்சு நல்ல பின்னூட்டமாஅப்பாலிக்காவே போடலாம்:-)

a said...

//
ஒரு பெரிய ஆழமான விஷயத்தை எடுத்து, நாலே பேருக்கு புரிகிற மாதிரி இலக்கியம் எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து, நாலு பேரு "புலம்புற" மாதிரி மொக்கை எழுதலாம்.....
ஒரு விஷயத்தை எடுத்து, நாலு பேருக்கு கூட புரியாத மாதிரி எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து, நாலு பேரு வந்து "கலக்கல் பதிவு" என்று சொல்ற மாதிரி எழுதலாம்.....
ம்ம்ம்ம்....... என்ன எழுதலாம்?
//
நாலு வரியில நாலு விதமா நாலு பேருக்கு புரியிறமாதிரி சொல்லி இருக்கீங்க.....

சௌந்தர் said...

என்ன கமெண்ட் போடலாம் ஆராச்சி செய்து கொண்டு இருக்கிறது ஓரு குழு புதிய கற்பனை வாழ்த்துக்கள் அக்கா

Mahi_Granny said...

அவள் ஒரு தொடர் கதையின் தாக்கம் தலைப்போடு விட்டு விட்டீர்களே. என்ன எழுதுவென்பதே ஒரு இடுகையாய். ஜமாய்ங்க சித்ரா

ராம்ஜி_யாஹூ said...

arumai- இதே நடையில் அமைந்த ஒரு பதிவு இங்கே-


http://dubukku.blogspot.com/2006/06/blog-post_07.html

Ramesh said...

அவள் ஒரு தொடர்பதிவு....தலைப்பே கலக்கல்...

பின்னோக்கி said...

என்ன எழுதலாம் - ரொம்ப கஷ்டமான விஷயம் இது. ஆனா, அதை யோசிக்கிற மாதிரியே ஒரு பதிவு போட்டு... ம்..ம்..

Madhavan Srinivasagopalan said...

//உருப்படியாக (????????????????????) நானே ஒரு டாபிக் யோசித்து எழுதி, ஒரு மாதத்துக்கு மேலாக ஆகி விட்டது..//

&

//இப்பொழுது, ப்லாக் வேலை (இடுகைகள், பின்னூட்டம், லைக், பரிந்துரை) மத்தியில் அத்தனை வேலைகளையும் செய்கிறேனோ என்ற பீலிங்க்ஸ்யா....//

நீங்க ரொம்ப நல்லவரா.?. உண்மைய பொசுக்குனு சொல்லிட்டீங்க..

உங்க லிஸ்டுல 'என்னென்னலாம் எழுதலாம்' அப்படீங்கற ஐடெம் மிஸ்ஸிங்..!

அருண் பிரசாத் said...

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

இவங்க சொன்னத வெச்சி எழுதலாமா?

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

இவங்க என்னதான் சொன்னாங்க?

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

பின்னுட்டம் எழுதலைனா பீலிங் ஆகிடுமே!

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

நாம் பின்னுட்டம் போடலைனா, சூரியனே உதிக்காதே!

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

சரி ஒன்னுமே புரியாத மாதிரி பின்னுட்டம் எழுதலாமா?

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

நன்றி, வாழ்த்துக்கள், அருமை - அப்படி எதாவது பின்னுட்டம் எழுதலாமா?

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

சரி எனக்கும் முடியல, என்ன பின்னுட்டம் எழுத? இப்படியே முடிச்சிக்கலாம்

pichaikaaran said...

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்...

Karthick Chidambaram said...

//முடிவே இல்லாத முடிவு .....முடிவு எடுக்க முடியாத/தெரியாத முடிவு ஆகி போச்சுல..... ஸ்ஸ்ஸ்..... அப்பா.... எனக்கே முடியல...... இதோட முடிச்சிக்கிறேன்..... // :):):)

//நாலே பேருக்கு புரிகிற மாதிரி இலக்கியம் எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து, நாலு பேரு "புலம்புற" மாதிரி மொக்கை எழுதலாம்.....
ஒரு விஷயத்தை எடுத்து, நாலு பேருக்கு கூட புரியாத மாதிரி எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து, நாலு பேரு வந்து "கலக்கல் பதிவு" என்று சொல்ற மாதிரி எழுதலாம்.....//

நாளும் தெரிஞ்ச ஆளுங்க நீங்க. :) :):)

vasu balaji said...

ந்ந்ந்ந்ந்நோ! இது வெட்டிப்பேச்சு இல்லை. கொத்து புரோட்டா:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவுலக நண்பர்கள், உள்ளதை உள்ளபடி பின்னூட்டங்களில் சொன்னால், என்ன ஆகும்? எனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் எல்லோரும் உண்மையான feedback மட்டுமே சொல்ல வேண்டும் - ஆலோசனை மட்டுமே தர வேண்டும் என்று சொன்னால் - என்னால் எந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியும் - வரவேற்க முடியும்
/
நல்லா யோசிச்சிருக்கீங்க ..நானும் அப்ப ப்ப இப்படி யோசிப்பதுண்்டு :)

தமிழ் உதயம் said...

வர வர ஞானி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டிங்க.

Chitra said...

sandhya said...

சித்ரா படிச்ச பிறகு எனக்கே முடியலை பா ஸ்ஸ்ஸ்...இவ்ளோ நல்ல பதிவு நான் பார்க்கவே இல்லே ..அப்பா...( ஹி ஹி சும்மா தமாஷு )



.....கம்பெனி பொறுப்பு எடுக்காது என்று போட்டு விடவா?

Chitra said...

கே.ஆர்.பி.செந்தில் said...

சத்தியமா முடியலீங்க....


....இருந்தாலும் படித்து முடித்து இருக்கீங்களே.... நன்றிங்க....

Chitra said...

எப்பூடி.. said...

என்ன பின்னூடம் போடலாம் ?


.......Thank you for the comment!

Chitra said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...நாலு வரியில நாலு விதமா நாலு பேருக்கு புரியிறமாதிரி சொல்லி இருக்கீங்க.....

....Thank you very much.... :-)

Chitra said...

சௌந்தர் said...

என்ன கமெண்ட் போடலாம் ஆராச்சி செய்து கொண்டு இருக்கிறது ஓரு குழு புதிய கற்பனை வாழ்த்துக்கள் அக்கா


....Thank you very much!

Chitra said...

Mahi_Granny said...

அவள் ஒரு தொடர் கதையின் தாக்கம் தலைப்போடு விட்டு விட்டீர்களே. என்ன எழுதுவென்பதே ஒரு இடுகையாய். ஜமாய்ங்க சித்ரா

....Thank you for your blessings!

Chitra said...

ராம்ஜி_யாஹூ said...

arumai- இதே நடையில் அமைந்த ஒரு பதிவு இங்கே-


http://dubukku.blogspot.com/2006/06/blog-post_07.html


...... Thank you for the link. கண்டிப்பாக போய் படித்து பார்க்கிறேன்.

Chitra said...

ரமேஷ் said...

அவள் ஒரு தொடர்பதிவு....தலைப்பே கலக்கல்...

...Thank you very much!

Chitra said...

பின்னோக்கி said...

என்ன எழுதலாம் - ரொம்ப கஷ்டமான விஷயம் இது. ஆனா, அதை யோசிக்கிற மாதிரியே ஒரு பதிவு போட்டு... ம்..ம்..


..... ம்ம்ம்ம்...... ஆங்.... நன்றி சொல்ல மறந்துட்டேன்.... நன்றிங்க....

சிநேகிதன் அக்பர் said...

//எத்தனயோ வேலைகளுக்கு மத்தியில், ஒரு பொழுது போக்காக ப்லாக் என்று ஆரம்பித்து விட்டு,
இப்பொழுது, ப்லாக் வேலை (இடுகைகள், பின்னூட்டம், லைக், பரிந்துரை) மத்தியில் அத்தனை வேலைகளையும் செய்கிறேனோ என்ற பீலிங்க்ஸ்யா..... ம்ம்ம்ம்..... என்ன செய்யலாம்?//

ஹ.ஹ.ஹா... அத்தனையும் உண்மை.

Chitra said...

Madhavan said...நீங்க ரொம்ப நல்லவரா.?. உண்மைய பொசுக்குனு சொல்லிட்டீங்க..


......உண்மையில், உண்மையை சொல்லி விட்டேனே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆமா என்ன சொல்ல வர்றீங்க? a

Chitra said...

அருண் பிரசாத் said...

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

இவங்க சொன்னத வெச்சி எழுதலாமா?


..... எனது பதிவிற்கு, நான் சொல்லியதை வைத்தே எழுதுங்க..... இந்த டிப்ஸ் போதுமா?

Chitra said...

பார்வையாளன் said...

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்...


.....இதற்கே முடியலைங்க.... பாவம், மக்கள் திணறிடுவாங்க....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அங்கதான் நிக்கிறாங்க சித்ரா.. இல்ல உக்காந்துருக்காங்க.. இல்ல நடக்கிறங்க.. இல்ல ஓடுறாங்க.. இல்ல யோசிக்கிறாங்க.. இல்ல நடந்துக்கிட்டே யோசிக்கிறாங்க.. இல்ல யோசிக்கிட்டே நடக்கிறாங்க.. இல்ல யோசிக்கிட்டே உக்க்காருகிறாங்க.. இல்ல யோசிக்கிட்டே ஓடுறாங்க.. இல்ல ஓடிக்கிட்டே யோசிக்கிறாங்க.. இல்ல நின்னுக்கிட்டே யோசிக்கிறாங்க.. இல்ல யோசிக்கிட்டே நிக்கிறாங்க.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா..... என்னாலயும் முடியல சித்ரா.. ஹா ஹா ஹா ஹா ஹா..........

எத்தனவகையான ப்ரொபபலிட்டி இல்ல சித்ரா.. ரசிக்க வைத்தது..

வெட்டிபேச்சி சித்ரான்னா கொக்கா... அதானே.. :)).

Chitra said...

Karthick Chidambaram said...

//முடிவே இல்லாத முடிவு .....முடிவு எடுக்க முடியாத/தெரியாத முடிவு ஆகி போச்சுல..... ஸ்ஸ்ஸ்..... அப்பா.... எனக்கே முடியல...... இதோட முடிச்சிக்கிறேன்..... // :):):)

//நாலே பேருக்கு புரிகிற மாதிரி இலக்கியம் எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து, நாலு பேரு "புலம்புற" மாதிரி மொக்கை எழுதலாம்.....
ஒரு விஷயத்தை எடுத்து, நாலு பேருக்கு கூட புரியாத மாதிரி எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து, நாலு பேரு வந்து "கலக்கல் பதிவு" என்று சொல்ற மாதிரி எழுதலாம்.....//

நாளும் தெரிஞ்ச ஆளுங்க நீங்க. :) :):)




.......நாலு நல்ல வார்த்தை சொல்லி இருப்பதற்கு, நன்றி.

Chitra said...

வானம்பாடிகள் said...

ந்ந்ந்ந்ந்நோ! இது வெட்டிப்பேச்சு இல்லை. கொத்து புரோட்டா:))


....என்னையே "கொத்தி"க்கிட்டேன்.... :-)

Anonymous said...

என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னே எல்லாத்தையும் எழுதிட்டீங்களே சித்ரா!
கலக்குங்க!

Chitra said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவுலக நண்பர்கள், உள்ளதை உள்ளபடி பின்னூட்டங்களில் சொன்னால், என்ன ஆகும்? எனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் எல்லோரும் உண்மையான feedback மட்டுமே சொல்ல வேண்டும் - ஆலோசனை மட்டுமே தர வேண்டும் என்று சொன்னால் - என்னால் எந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியும் - வரவேற்க முடியும்
/
நல்லா யோசிச்சிருக்கீங்க ..நானும் அப்ப ப்ப இப்படி யோசிப்பதுண்்டு :)


....Thank you.... This is self-assessment!

Chitra said...

தமிழ் உதயம் said...

வர வர ஞானி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டிங்க.


..... :-)

Chitra said...

அக்பர் said...

//எத்தனயோ வேலைகளுக்கு மத்தியில், ஒரு பொழுது போக்காக ப்லாக் என்று ஆரம்பித்து விட்டு,
இப்பொழுது, ப்லாக் வேலை (இடுகைகள், பின்னூட்டம், லைக், பரிந்துரை) மத்தியில் அத்தனை வேலைகளையும் செய்கிறேனோ என்ற பீலிங்க்ஸ்யா..... ம்ம்ம்ம்..... என்ன செய்யலாம்?//

ஹ.ஹ.ஹா... அத்தனையும் உண்மை.


....same blood??

Chitra said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆமா என்ன சொல்ல வர்றீங்க? a


.....என்ன சொல்றதுன்னு என்று சொல்ல யோசிக்கிறதுதான்.....

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha.... Starjan.... I am your best friend, yaar!

Chitra said...

Balaji saravana said...

என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னே எல்லாத்தையும் எழுதிட்டீங்களே சித்ரா!
கலக்குங்க!


.... Thank you very much!

சசிகுமார் said...

ஸ்ஸ்ஷப்பா இப்பவே கண்ணா கட்டுதே

S Maharajan said...

வேறு என்ன எழுதலாம்?

என்ன பின்னுட்டம் எழுதலாம்?

Thenral said...

Kadavula pathiyum manithaththa pathiyum potrukkura matter mattumdhan intha padhivulaye nallaa irunthathu!

ஈரோடு கதிர் said...

சரி எப்போ எழுதுவீங்க!!!??

'பரிவை' சே.குமார் said...

இப்பவே கண்ண கட்டுது

சத்தியமா முடியலீங்க...

அம்பிகா said...

அடடா! என்ன பதிவு போடலாங்குறதே ஒரு பதிவா போச்சே!

நட்புடன் ஜமால் said...

பிரபலம் பிறர்பலம்

ஜூப்பரு ...

நாடோடி said...

ஆனா நீங்க‌ அதை எழுதாம‌ல் விட்டிருக்க‌ கூடாது!!!!!!!!!!!! ஏங்க‌ அதை விட்டீங்க‌?.. அடுத்து எப்ப‌ எழுதுவீங்க‌?... இருந்தாலும் அப்ப‌டி நீங்க‌ விட்டுருக்க‌ கூடாது.... எப்ப‌டியாவ‌து அதை எழுதிடுங்க‌!!!!!!!! :))))))))

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணா கட்டுதே..
இதுக்கு நீங்க பதிவு போடாமலே இருக்கலாம்..

Anonymous said...

எப்பூடி.. said...
என்ன பின்னூடம் போடலாம் ? அப்பிடி போடலாமா? இல்லை இப்பிடி போடலாமா? அல்லது அப்பிடியும் இப்பிடியுமா சேர்த்து போடலாமா, இல்லை அப்பாலிக்கா வந்து போடலாமா? ஒண்ணுமே புரியல. எதுக்கும் ஜோசிச்சு நல்ல பின்னூட்டமாஅப்பாலிக்காவே போடலாம்:-)

nanum ithaiye solligiren chitra...yeppa yemma talent....

ஜெயந்தி said...

சீக்கிரம் யோசிச்சு முடிங்க அடுத்த பதிவு வரணுமே?

Paleo God said...

ஏனுங் டீச்சரம்மா எம்புட்டு நாளுக்கு இப்படி திரும்பியே பார்த்துகிட்டு இருப்பீங்க!:)

Athiban said...

என்ன எழுதலாமுன்னு யோசிச்சதுக்கு ஒரு பதிவா? தாங்கல....

Vidhya Chandrasekaran said...

இதுக்கு என்னன்னு பின்னூட்டம் போடறது?

Menaga Sathia said...

ssss.. mudiyala chitra...

Thenammai Lakshmanan said...

என்ன பின்னூட்டமிடலாம்.. ஹையா எங்க சித்தும்மா நாலு நாளைக்கு ப்ளாக்கை பிராண்டாம லீவு விட்டுட்டாங்க>>:)))

தேவன் மாயம் said...

ஒன்னுமே மேட்டர் இல்லாம இவ்வளவு பெரிய பதிவா?
மேட்டரைக் கையிலெடுத்தா.....?

தெய்வசுகந்தி said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா!! கண்ணகட்டுதே சித்ரா!! எப்படிங்க இப்படில்லாம் முடியுது :-))

நேசமித்ரன் said...

எப்பிடிங்க இப்படிலாம் அட சாமி
:)))

அன்பரசன் said...

என்ன பதிவு போடுறதுன்னு ஒரு பதிவா?
தாங்க முடியலடா சாமி...

Riyas said...

ஏதாவது.. தொடர்பதிவு எழுதியிருப்பிங்கன்னு நம்ம்ம்ம்பி வாசிச்சேன் இப்போ வரும் அப்போ வரும்னு பார்த்தா.. இதுவும் அதுதான்னு புரிஞ்சுது அப்ப்ப்ப்ப்ப்பா முடியல்ல..
அதுதான் மேலே பெருசா வெட்டிப்பேச்சுன்னு போட்டிருக்கு அதுக்குமேலேயும் நீ எதிர்பார்ப்பியான்னு நானே என்ன கேட்டுக்கிட்டன் ஹா ஹா...

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் பதிவு சித்ரா..இப்படி புலம்பியே ஆகஸ்டும் போயிடும்..

அமுதா கிருஷ்ணா said...

அடுத்த மாதம் எந்திரன் காப்பாத்திடுவார் நம்மை..

திருவாரூர் சரவணா said...

என்னப்பா பின்னூட்டம் போடப்போற...?

அது புரியாமத்தாங்க நான் இவ்வளவு நேரமும் யோசிச்சுகிட்டே இருக்கேன்.

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

ஹேமா said...

சித்ரா...ரொம்ப யோசிக்கிறீங்க.
பாவம்தான் நீங்க !

குட்டிப்பையா|Kutipaiya said...

எப்படி சித்ரா உங்களால மட்டும் இப்புடி :) :)

ஸ்ரீராம். said...

இப்படியும் சமாளிக்கலாமா?

ஸ்ரீராம். said...

விகடன் குட் ப்லாக்ஸ்ல உங்கள் இந்தப் பதிவு....

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

Chitra said...

தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, ஸ்ரீராம்!

Pavithra Srihari said...

ithu ungalukkae konjam overaa illaiyaa .....

சுசி said...

அப்பா.. முடிஞ்சுதா..

நசரேயன் said...

நல்ல வேளை முடிச்சிட்டீங்க

வேலன். said...

ஆ...இப்பவே கண்ணைகட்டுதே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Yoganathan.N said...

சீக்கிரமே ஒரு முடிவெடுத்து, எதாவது எழுதுங்க சித்ராஜி... :)

R.Gopi said...

சித்ரா......

உங்க கிட்ட ட்யூஷன் எடுத்துக்கலாம்னு இருக்கேன்...

என்ன எழுதலாம்....
சரி...இதைப்பத்தி எழுதலாமா...
வேண்டாம்... அதைப்பத்தி எழுதுவோம்..

அதுவும் வேண்டாம்... இப்படி ட்ரை பண்ணுவோம்...

ஓஹோ... சரியா வராதோ... அப்படின்னா, இது சரியா இருக்கும்...

என்னது இந்த ஐடியாவும் ஊத்திக்கிச்சா?

அப்போ என்ன பண்றது....

எப்படி இருந்தாலும், ஏதாவது ஒண்ணு பத்தி எழுதியே ஆகணும்.....

இப்படியெல்லாம் சொல்லிட்டு, ஒண்ணுமே எழுதாம ஒரு பதிவு எழுதினீங்க பாருங்க....

யூ ஆர் சிம்ப்ளி க்ரேட்ட்ட்ட்ட்ட்ட்ட்...

கலக்கல் சித்ரா..... கலக்குங்க...

தாங்கள் மென்மேலும் இது போன்ற அர்த்தபூர்வமான பதிவுகள் போட வேண்டும் என்பதே இந்த “ஜோக்கிரி”யின் சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று....

உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா...........

முடிஞ்சுதா... அட....ஒண்ணுமே எழுதாத பதிவுக்கே இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட முடியுமா..

செந்தில்குமார் said...

சித்ரா என்ன இது சும்மான்னு சொல்லிட்டு சும்மா பின்னியிருக்கிங்க..

Mythili (மைதிலி ) said...

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.... என்ன கமெண்ட் போடுறதுண்ணே தெரியலை......
அப்பாடா கமெண்ட் போட்டாச்சு....

Jey said...

நீங்க ப்திவ போட்டவுடனே முத ஆளா நாந்தான் படிச்சேன், ஆனா படிச்சவுடனே, உங்க எழுத்துல மயங்கி விழுந்து, இப்பதா முழிப்புதட்டி எழுந்தேன். அதான், பின்னூட்டமும், ஓட்டும் போட லேட்டாயிருச்சி..., அருமையா, எளிமையா எல்லாருக்கும் புரியிரா மாதிரிரி சூப்பர் பதிவு:)

செல்வா said...

அட பாவமே ..இங்க என்ன நடக்குது அக்கா ..!!
அப்படி எழுதலாமா இப்படி எழுதலாம்னு சொல்லிட்டு ஒண்ணுமே எழுதலையே ...??!!

அமுதா said...

ஸ்ஸ்...அப்பா.... இப்பவே கண்ணைக் கட்டுதே!!!

ஸாதிகா said...

எப்படி இப்படிஎல்லாம் யோசிக்க்றீங்க.

Nithu Bala said...

Chitra, kalakeetenka..Vikatan good blogs vazhiya vandhen..hehehe..eppadiyum post podalmnu idea-ku rombha nandri..

www.nithubala.com

ஜெய்லானி said...

கவிதை சூப்பர் ...

அடடே இதுக்குதான் சொல்றது மக்கா நல்லா படிசிட்டு போடுன்னு...அவ்வ்வ்

Alarmel Mangai said...

சித்ராக்கா :)

சிரிச்சு முடியல...போங்க..

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

GEETHA ACHAL said...

சித்ரா...தாங்கமுடியவில்லை...இருந்தாலும் நல்லா தான் எழுதிரிங்க...வாழ்த்துகள்...

தக்குடு said...

வேணாம்ம்ம்ம்ம்! அழுதுடுவேன்! வலிக்குது!!!...:)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா...

சித்ராராராராராரா.... இப்போ கடைசியா என்ன சொல்ல வரீங்க??

ப்ளாக் எழுத போறீங்களா?
இல்ல எழுதியாச்சா?
எழுதுனத போஸ்ட் பண்ண போறீங்களா?
இல்ல பண்ண மாட்டிங்களா?
இப்ப நா கமெண்ட் பண்ணலாமா...? கூடாதா?

அச்சச்சோ.... "அட கேள்விக்கு பிறந்தவளேன்னு......????" னு திட்ட பிடாது..
உங்க பதிவு படிச்சு சைடு எப்பெக்டு.....
சூப்பர் ம்மா....!!

பாலா said...

same blood ...:))))

அக்கா, உங்கள் பதிவுகள் மொத்தமும் ஒருவாறு படித்து முடிதுவிட்டடேன். மிக நீளமாய் ஒரு மின்னஞ்சல் எழுதி முடித்த பின்பு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரி இல்லாதது தெரிந்து பேந்த பேந்த முழித்தேன்.. அதன் சாரம் இங்கே..
வெட்டி பேச்சுகளை தாண்டி உங்கள் மீது எனக்கு ஒரு அதீத மரியாதை ஏற்பட்டது. இணையம் எனக்கு தந்த நல்ல விஷியங்களில் உங்கள் அறிமுகமும் ஒன்று.
(படித்த பின்பு ஒரு vikraman லாலா.. லாலல்லா... போட்டு கொள்ளவும். )

ReeR said...

யம்மா ....

முடியலடா ....’’

சும்மா சொல்லக்கூடாது..

அதுக்காக காசு கேட்கிறேன்னு போட்டுடாத

கடிக்கிற

கடிக்கிற மாதிரி ....

அடுத்து நீவ் தான்

இவன்
படுகை.காம்

Asiya Omar said...

மண்டையை பிளக்கிற வெயிலில் ஊர் வரவும் இங்கு வந்தால் அப்பா ! புரிந்து கொள்ள குறைந்தது ஒரு phd யாவது இருக்கனும் போல.சித்ரா தாங்க முடியலை.

Unknown said...

NAN APPOVEY CHONNEN NEE KEKALA:(enaku nanaey pesikrenga)

epo pathiya enta chitra akka bloga padichu eppadi aita...avanga kadisivarikum enna cholavaranganey theiraley...AVVVVV:

super etho chollavarena but cholamaternaga thalivar pola..

etho nalathu nadantha sari..

ok akka schoolku vera neram aitu

tata byebye

Unknown said...

hi enga malai...

appada unga blog padichu enga maliyaey vanthuvitathu...

Unknown said...

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்...

---ethupola rasigaragal ungalku erukum variyil..D.M.K vai yaralum asaika mudiathu...

Unknown said...

D.M.K APDINA
DEPARTMENT OF MOKKAI KAVIGAR
CHITRANU ARTHAM..

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

Unknown said...

98,

Unknown said...

99,

Unknown said...

hey am the 100comments

ஸ்ஸ்ஸ்...இவ்ளோ நல்ல பதிவு நான் பார்க்கவே இல்லே----evlo periya poi....

hm but nalla padivuthan annal enna cholavarenganu theriacha nalla erukum..

ok akka tata
bye..100 comments potu eruknela enaku 100 choclate vangi anupanum sariya...

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா இந்த இங்க கொசு மருந்து அடிங்க ? (தக்காளி என்ன பதிவு போடலாமுன்னு யோசிக்கிறதையே ஒரு பதிவா போடுராணுக இந்த மச்சி , மச்சான் ,......இம் ஏதோ ஒண்ணுன் )

மங்குனி அமைச்சர் said...

ஹலோ நான் தான் 100 ஆ ???

Hai said...

ஸ். அப்பா கண்ணைக் கட்டுது.

அக்கா இனிமே எதுவும் கிடைக்கலைனா பூ கட்டுறது ஒயர் கூடை பின்னறது இப்படி ஏதாவது எழுதவும். இப்படி கொடுமை பண்ணாதீங்க.

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போல கலக்கலா யோசிச்சிருக்கீங்க:)! நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியெல்லாம் இப்போ எங்களுக்கும் எழும்புகின்றன. என்ன செய்யலாம்:)?

பிரியமுடன் priya said...

ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
by
priya @ http://tipstoslim.blogspot.com/

பிரியமுடன் priya said...

ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
by
priya @ http://tipstoslim.blogspot.com/

மங்குனி அமைச்சர் said...

உஸ் ...... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இன்னும் விடியளையாப்பா ???

தாராபுரத்தான் said...

வெளியூரா? அதுதான் பதிவுலகமே சுவராசியம் இல்லாம இருக்கு..

கமலேஷ் said...

அடடா! என்ன பதிவு போடலாங்குறதே ஒரு பதிவா போச்சே!