Sunday, January 16, 2011

நல்லா படிச்சீங்களா?

தமிழ்மண 2010 விருதுகளை  வென்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்,   எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொல்லிக்கிறேன்ங்க! 


எனது கல்லூரி தோழி உமாவை, நான் சென்ற முறை திருச்சி சென்ற பொழுது, சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

அப்பொழுது உமா, பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தாள்.
" நல்லா படிக்கிறியா?"
இப்படி ஒரு மெகா புளித்து போன  கேள்வி கேட்ட வாய்க்கு, அவள் எனக்கு உடனே ஒரு டம்ளர்  தண்ணியில "Eno fruit Salt" போட்டு கலக்கி கொடுத்துருக்கணும்.   செய்யல..... நல்ல பொண்ணு!

"நல்லா படிக்கிறேன். கிளாஸ்ல first .  நீங்க என் அம்மா கிளாஸ் மேட் தானே?  எங்க அம்மா எப்படி படிப்பாங்க?", என்று கேட்டாளே பார்க்கலாம்.
"உங்கள் அம்மாவும் கிளாஸ் first ஆகத்தான் இருந்தாங்க," என்று உண்மையைத்தான் சொன்னேன்.
இருந்தாலும், நம்பாத மாதிரி ஒரு லுக் விட்டாள்.
"அம்மாவோட friend ல. அப்படித்தான் சொல்வீங்க."

நல்ல வேளை,  "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை.  ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்! 

அவர்கள் வீட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தபொழுது....  மனதில்  "flashback....." ஓடாமல் இருக்குமா?

நான் படித்த கான்வென்ட்டில் டென்த் வரை, இங்கிலீஷ் மீடியம் ஒரே ஒரு  செக் ஷன் மட்டும் தான். அதனால்,  என்னுடன் முதல் வகுப்பில் இருந்து டென்த் வரை படித்தவர்கள் - ஒரு சிலரை தவிர - மற்றவர்கள்  மாறவே இல்லை. அதே குரூப் தான்.

நிஜமாவே  தங்கள் படிப்பில், கருமமே  கண்ணாய் இருந்தவர்கள் - புத்தகத்தை படிச்சு - தவளையை கிழிக்கிற  first குரூப் எல்லாம் எடுத்துட்டு - நான் டாக்டர் ஆகப் போறேன் - engineer ஆகப் போறேன் - குப்பை கொட்டுனாலும், அதை கம்ப்யூட்டர்ல தான் கொட்டப் போறேன் -   என்று  + 1   இல் தான்  பிரிந்து சென்றார்கள். 

மற்றவர்கள்,  புத்தகத்தை படிச்சுட்டு அதையே கிழிக்கிற (பிட்டுக்குதான், ஹி  ஹி ஹி ஹி ..... )   குரூப்ஸ்  தேடி பார்த்து எடுத்து படித்தோம்.  அப்புறம்,  ஆர்ட்ஸ் காலேஜ் கூட சேர்ந்து ஒரே படையாக - வேறு வேறு டிகிரி வாங்க சென்றோம்.  மதிய உணவு நேரம்,  பலர்  பெரும்பாலும் சந்தித்து கொள்வோம்.

இதில்,   B.Com சேர்ந்த நானும் இன்னொரு தோழியும்  - B.A. History சேர்ந்த ஒருத்தியை சும்மா கலாய்த்து கொண்டே இருப்போம்.
ஒரு நாளு  அவளும் "பொறுத்தது போதும்.  பொங்கி எழு, மனோகரி!" மாதிரி பொங்கப் பானையாய் பொங்கிட்டா!

"படிக்கிறது Bachelor of Commerce தானே?  Bachelor of C(k)ombus (கொம்புஸ்) இல்லையே....  என்னமா அலட்டிக்கிறீங்க ...... நான் B.A. முடிச்சிட்டு,  அடுத்து உங்களுக்காகவே லா காலேஜ்ல  சேர்ந்துட்டு லாயர் ஆகிட்டு  - உங்க  மேல மான நஷ்டம் - மனக் கஷ்டம்னு எல்லாம் சொல்லி - நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டு - நீங்க வேலை பார்க்க போற பேங்க்லேயே,  நீங்க கொள்ளை அடிச்சாத்தான் அதை கட்ட முடியும்ங்கற நிலைமைக்கு உங்களைத் தள்ளி - உங்களுக்கு எதிரா நானே வாதாடி,  உங்களை ஒரு வழி பண்றேன்," என்று சொல்லிவிட்டு, தன் முன்னால் இருந்த புத்தக கட்டின் மேல  சத்தியம் செய்தாள்.

ஐயோ...... விளையாட்டுக்கு என்றாலும், இப்படி படிக்கிற புக் மேல சத்தியம் பண்ணிட்டாளே என்று  எட்டி பார்த்தோம்.  "Women's Era" பத்திரிகை ஒன்று அவளது History course books மேல இருந்தது.  அட்டைப் படத்தில்,  ஏதோ ஒரு  பொண்ணு சிரித்து கொண்டு இருந்தாள்.  அய்யோ.... பாவம்.... யார் பெத்த பொண்ணோ?


அருகில் இருந்த  B.Com. கிளாஸ் மேட் தோழி , "சரி, விடுமா.  எனக்கு  Reserve Bank Governor வேலை கொடுத்துட்டு , என் signature காகத்தான் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி   பேசாதே.   நானே அகப்பை (கரண்டி)  பிடிக்கப் போற  கைக்கு, Accountancy எதுக்குன்னு  உள்ளூர புலம்பிக்கிட்டு இருக்கேன். நீ வேற மிரட்டாதே."


அன்று சிரிப்போசை அடங்க ரொம்ப நேரம் ஆச்சு.....  இந்த விளையாட்டு சண்டைகளில் எங்கள் நட்பு வளர்ந்ததே தவிர - குறைந்ததே இல்லை.   இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் ...... அகப்பைப் பிடிக்கப் போறேன் என்று சொன்னவள் கூட,  இப்போ IT field க்கு மாறி வந்து விட்டாள்.   History புத்தகத்தை கரைத்துக் குடித்து கொண்டு இருந்தவள்,   Interior Decoration ஏரியாவில் ஜொலிக்கிறாள்.   அதற்குள், படிக்கும் போது மட்டும் என்ன அலப்பறை பண்றோம் என்று சிரித்து கொண்டேன்.

மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை.  அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... 

இந்த நினைப்பு ஒரு பக்கம் திடீர்னு வந்தப்போ,   ஒரு நண்பரின் பர்த்டே  பார்ட்டிக்கு போக வேண்டியது வந்தது .  வந்து இருந்த எல்லோருமே, ஆந்த்ராவில் இருந்து அமெரிக்காவுல  மாஸ்டர்ஸ் டிகிரி படிக்க வந்தவர்கள்.  அதில் ஒருவன்,  பயங்கர பாலையா காரு fan .........

அவன் வீட்டில் இருந்து வரும் போதே, நல்லா "தண்ணி"  அடிச்சிட்டு  வந்தாச்சு .... சிறிது நேரத்தில்,   தன்னையே பாலையாவாக நினைத்து தெலுங்கில் ஆக்ரோஷமாக வசனம் பேச ஆரம்பித்து விட்டான்.  எனக்கோ, தெலுங்கு - ஹிந்தி எல்லாமே ஒண்ணுதான்..... விளங்காத போது, அது என்ன பாஷையாக இருந்தால் என்ன?  இருந்தாலும், அவனது பாலையா சேட்டைகளை கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பாலையா, விரலைத் தூக்க - ஒரு காட்சியில் ட்ரைன் ஒன்று பின்னோக்கி செல்லும்.  அந்த காட்சியை வைத்து மற்றவர்கள்,  அவனை கலாய்க்க ஆரம்பித்தார்கள்.  அவனுக்கு எல்லோர் மேலும் கோபம் அதிகமாகியது.  திட்ட ஆரம்பித்தான்..... மற்றவர்கள் முகத்தை பார்த்தேன்.  அவங்க  லுக் விட்ட விதம்  சரியா இல்லை.....  தெலுங்கு புரியாமல் இருந்ததை பாக்கியமாக கருதினேன்.  என்ன சொல்லி திட்டி இருப்பான்  என்று புரியாமலே புரிந்த மாதிரி இருந்துச்சு.....

அடுத்த பில்டிங்கில்  இருந்த  அவனது  வீட்டுக்கு (apartment) அழைத்து சென்று விட,  இரண்டு பேர்  முனைந்தார்கள்.

பார்ட்டி நடந்த வீட்டை விட்டு வெளியே வந்தவன், ரோட்டில் நின்று கொண்டு, பாலையா ட்ரைன் சீன் வசனம் போல ஏதோ சீன் விட்டான்.  வீர வசனம் பேசினான் -  "இருக்கா?  இல்லையா?"  என்பதற்கே ஸ்பெஷல் பொங்கல் திருநாள் பட்டிமன்றம்,  டிவியில  நடத்தி முடிவெடுக்க வேண்டி  இருந்த தன் மீசையை தட்டி விட்டு கொண்டான் - தன் தொடையை தட்டி கொண்டு, ஒத்தை விரலை தூக்கி விட்டு என்னவென்னவோ சொல்லி விட்டு,  அப்படியே ஒரு விரலை நீட்டிக்கொண்டு நின்றான்.



என்ன ஆச்சு என்று கேட்ட போது,   கொஞ்சம் தமிழ் தெரிந்த ஒருவர்  " இல்லை,  அவனை கிண்டல் செய்ததற்கு, அவனது கோபத்தை தூண்டி விட்டுட்டோமாம்.    இப்போ, அங்கே நின்னுக்கிட்டு இருக்கிற நம்ம கிஷோர்  ஓட காரு பின்னோக்கி  போகுமாம்.  சபதம் போடுறான்.  அந்த கார்,  அந்த ட்ரைன் மாதிரி பின்னால போகும் வரைக்கும்,  நீட்டிய விரலை மடக்காமல் அப்படித்தான் நின்னுக்கிட்டு இருப்பான் போல ......"
 
டைம் பார்த்தோம்.  இரவு மணி, ஒன்று.  குளிர் - zero டிகிரிக்கும் கீழே.....  நீட்டிய விரலை மடக்காமல்,  நிற்கிறான் .... நிற்கிறான்..... சிலையாட்டம் நிற்கிறான் ......  அப்படியே  கடுங்குளிர்ல விறைச்சு போய்த்தான் நின்னானோ என்னவோ......

வேறு வழி இல்லாமல்,  அவன் அசந்த  சமயம்  கிஷோர்,  தன் காரில் ஏறி,  கார் ஸ்டார்ட் செய்து காரை reverse செய்து "பின்னுக்கு" போகச் செய்தான்.  பாலையா ரசிகருக்கு பரம சந்தோஷம்.... மீண்டும் ஒற்றை விரல் தூக்கி, எங்கள் அனைவருக்கும் ஒரு வார்னிங்..... பின், ஒரு வெற்றி புன்னகை.... சந்தோஷமாக தன் வீட்டுக்கு சென்று விட்டான்.

அவன் போவதையே சிறிது நேரம்,  வெறித்து பார்த்து கொண்டு இருந்த எங்களின் சிரிப்போசை அடங்கவும் ரொம்ப நேரம் ஆச்சு......

இன்னும் சில வருடங்களில்,  இவனும் பெரிய வேலையில் இருக்கலாம்.   இவன் மனைவி மக்களை நான் சந்திக்கலாம்...... இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?

94 comments:

எல் கே said...

ரொம்ப நல்லவர் வல்லவர் நாளும் தெரிஞ்சவர்னு சொல்லுங்க.

Gayathri Kumar said...

sirichu siruchu stomach ache vanduruchu..super..

ஆனந்தி.. said...

பாலையா ஜீ வாலுக:))))))
//"படிக்கிறது Bachelor of Commerce தானே? Bachelor of C(k)ombus (கொம்புஸ்) இல்லையே.... என்னமா அலட்டிக்கிறீங்க .//

அடடா...என்ன ஒரு கண்டுபிடிப்பு...:))))

Madhavan Srinivasagopalan said...

// "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" //

"எங்கப்பா எப்படி நடிச்சாங்கன்னு கேளு சொல்லுறேன்..", இப்படித்தான் இருக்கோணும், உங்களது பதில்.

உங்கள் வலைப்பதிவின் தலைபிற்கேற்ற பதிவிது..

'பரிவை' சே.குமார் said...

haaaaa.... haaaa...

ungappaa engada padichcharu... avaru kudichcharudanna solla mudiyum appaum poithaan...

தமிழ் உதயம் said...

"எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" //

வழக்கம் போல் பொய் சொல்லணும்.

Anonymous said...

ha ha ha ha. not able to stop my laughter.

தினேஷ்குமார் said...

பாலையா நல்லவரு வல்லவரு நாளும் தெரிந்ச்சவரு தன்னிமேல நடந்தவருனு சொல்லலாம் அக்கா

நல்ல பதிவு அக்கா

பொங்கல் வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

நடுநடுவே பஞ்ச் டயலாக்கெல்லாம் சூப்பர்:)

அருண் பிரசாத் said...

ஒத்த விரல்ல காரை பின்னாடி போக வெக்க தெரிஞ்சவர்னு சொல்லுங்க :)

Jaleela Kamal said...

hihi present

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஆளா இருக்காரே அவரு. அவரோட ஒரு விரலுக்கு என்ன பவரு.... :)

ஹுஸைனம்மா said...

நானும் நம்ம ‘தமிழ்’ பாலையாவை நினைச்சுகிட்டு, இப்படி ஒரு சீன்ல நடிச்சிருக்காரா என்னன்னு ஆர்வமாப் பாத்தா, தெலுங்கு பாலையா!! ஆத்தீஈஈஈ.. நம்ம சூப்பர் ஸ்டார்கூட படையப்பாவில மாட்டைத்தான் பின்னாடி போக வச்சார். இவர் எம்மாம் பெரிய ரெயிலையே... ஆ.. ஆ.. கண் நிறையுது.. தளும்புது எனக்கு!!

Asiya Omar said...

என்ன படிச்சா என்னங்க,இப்படி சிரிக்க வைக்க தெரியனுமே!அருமை.

Unknown said...

கலக்கல்ஸ்! உங்க பன்ச் டயலாக்ஸ் அருமை! :-)

ஸ்ரீராம். said...

அபபடி அவர் பிள்ளைகள் உங்களைக் கேட்டால் அவர் பல சவால்களைச் சந்தித்தவர் என்று சொல்லலாமே...!! அவருக்காக தன் காரை அவருக்குத் தெரியாமல் காரை ரிவர்ஸ் எடுத்த கிஷோரும், அந்த நட்பும் வாழ்க...

மாணவன் said...

சூப்பர்........

raji said...

ஒற்றை விரலால் ஊரையே ஒரு கலக்கு கலக்கினவர்னு சொல்லலாம்.

ஆமா!பி. காம் படிச்சதா சொல்லறீங்க!ஆளுக்கும் 'காம்' கும் சம்பந்தம் இருக்காப்போலவே தெரிலையே.

தவிர மேடம் பி.காம் படிச்சுட்டு இப்ப என்ன பண்றீங்கனு சொல்லலையே, சிரிக்க வைக்கறத தவிர.

நானும் பி.காம்தான். ஆனா இப்ப அகப்பை(கரண்டியை மட்டும் சொல்லலீங்க.என் அகப்பையில் இருப்பதை உங்க கிட்டலாம் பகிர்ந்துக்கறதையும் சேர்த்துத்தான் சொல்றேன்)

குறையொன்றுமில்லை. said...

சித்ரா உங்க ஒவ்வொரு பதிவும் சூப்பருங்க. இந்த மலரும் நினைவுகள் சூப்பரோ சூப்பர்/

MANO நாஞ்சில் மனோ said...

//"எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?///

நாங்கல்லாம் மாப்பிளை பெஞ்'ல இருந்தவங்களாக்கும்..............

S Maharajan said...

உங்களுக்குதான் பொய் சொல்ல தெரியாதே!

ராம்ஜி_யாஹூ said...

இன்றும் இந்தியாவில் ஒருவரின் வேலையை, பொருளீட்டலை பெரும்பாலும் பள்ளி கல்லூரி கல்வியும், மனப்பாடம் தரும் மதிப்பெண்களும் தானே தீர்மானிக்கின்றன.

Matangi Mawley said...

chance-illa! balaiyya comedy semma!! :) en college leyum balaiyya fan oruththan irunthaan... exam munnaadi full thanni pottu- ithe pola book munnaadi ukkaanthu "venki devudu" va nenachchi- ii book-lo irukkarthu ellaam en heart-lo transfer chesu--nnu dialogue laam vittan.. :D antha paper-lo arrear vanthathu thaan michcham! :D
innikku- wipro-la kuppa kottaraan! :D

all memories refreshed! :D
Dool post! :)

அமுதா கிருஷ்ணா said...

ஜெய் சென்னகேசவா..அட தேவுடா..

Prabu Krishna said...

உங்களை இங்கே அழைக்கிறேன்.

Tamil Bloggers Bio-Data

goma said...

எவ்வளவோ படிச்சிருக்கலாம்.ஒரு டிவி கிடையாது,கணினி கிடையாது செல்ஃபோன் தெரியாது ,இவையெல்லாம் அந்த நாளில் எப்படியெல்லாம் படிச்சிருக்கலாம்...கோட்டை விட்டேனே

இப்பொழுது எல்கேஜீ போகக்கூடத் தயார்....
ஸ்கூல் இருக்கா?

தூயவனின் அடிமை said...

ரொம்ப நல்லவரு என்று சொல்லுங்க..........அப்பவே தெரிந்துவிடும்.

Madurai pandi said...

பாலையா காமெடி செம காமெடி பா!!! சிரிப்பு சிரிப்பா வருது பா!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

as i am at work i couldn't write more.but voted.thanks akka.

ADHI VENKAT said...

படிச்சதுக்கும் வேலை பார்ப்பதற்கும் சம்பந்தமே இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். நல்லா இருந்தது இந்த பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

விருதுக்கு வாழ்த்துகள்.
பாலையா ... :-)

raji said...

ஒற்றை விரலாலே ஊரையே கலக்கினவர்னு சொல்லுங்க

ஆமா! பி.காம் படிச்சதா சொல்லிருக்கீங்க,ஆளுக்கும் 'காம்' கும் சம்பந்தம் இருக்கறாப் போலவே இல்லையே!

பி. காம் படிச்சுட்டு இப்ப என்ன செய்யறீங்கனும் சொல்லலையே சிரிக்க வைக்கறதை தவிர!

நானும் பி. காம் தான்ப்பா.ஆனா இப்ப அகப்பைதான்(கரண்டியை மட்டும் சொல்லலீங்க,என் 'அக' பையில் இருக்கறதை எல்லாம் உங்க கிட்ட பகிர்ந்துக்கறதையும் சேர்த்துத்தான் சொல்றேன்)

சுசி said...

//என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... //

சபாஷ் சித்ரா.. கை குடுங்க.. நானும் இதையே அடிக்கடி நினைப்பேன்.. :))

ISR Selvakumar said...

//
இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?
//
ஒத்ததை விரலை வைத்துக் கொண்டு, காரை ரிவர்ஸில் ஓட வைக்கும் வித்தையை கண்டுபிடித்தார் என்று சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்.

க ரா said...

பின்றீங்க..

//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ....//

இதோட கிளைமாக்ஸுன்னு நினச்சா அதுக்கு மேலயும் கதைய கொடுத்தீட்டிங்களே !

ரிஷபன் said...

//கேட்ட வாய்க்கு, அவள் எனக்கு உடனே ஒரு டம்ளர் தண்ணியில "Eno fruit Salt" போட்டு கலக்கி கொடுத்துருக்கணும். செய்யல..... நல்ல பொண்ணு!//
ஹா ஹா இயல்பாய் வந்து விழும் நகைச்சுவை

vinu said...

aaththi இது எதோ படிச்ச புல்லை போல இர்ருக்கு; சாரி பா அட்ரஸ் மாறி வந்துட்டேன்; வர்டுன்ன்களா

Jana said...

பாலையா ha ha ha ...
கலக்கல்

vanathy said...

சித்ரா, சூப்பர். அதான் நான் சின்னப் புள்ளைகளிடம் வாயை குடுப்பதில்லை.

pichaikaaran said...

வழக்கம் போல சூப்பர்

ஹேமா said...

எங்க அப்பா நல்லவர்.பொய் சொல்லப்படாது சித்ரா !

settaikkaran said...

//இதில்,B.Com சேர்ந்த நானும்//

நீங்களுமா? நாமெல்லாம் நாலெழுத்துப் படிச்சவங்களாச்சே! :-)

நானும் கவனிச்சிட்டேன். பி.காம் படிச்சவங்களுக்கு எப்பவுமே நகைச்சுவை உணர்வு அதிகமாயிருக்கு. கலக்ஸ்...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha ha ha ha
superb

Menaga Sathia said...

ஆஹா, சூப்பர்ர்ர்ர்...

ஸாதிகா said...

நல்லாவே சிரிக்கவைக்கறீங்க சித்ரா

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...//ரொம்ப உண்மைங்க

அன்புடன் நான் said...

உண்மைய மறைச்சி சொல்லனும்...

அந்த நாள் ஞாபகம்.... நல்லாயிருக்கு.

எம் அப்துல் காதர் said...

பதிவ நீங்க போட்டுட்டு கேள்விய எங்ககிட்டேயேவா கேக்கிறது, ரொம்ப நல்லா இருக்கு டீச்சர் ரொம்ப நல்லா இருக்கு (இப்படி சொல்லி தெரியாத பதிலுக்கு எப்படியெல்லாம் டீச்சர் கிட்ட சமாளிக்க வேண்டியிருக்கு.. ஸ்ஸ்ஸ் அப்பா..!!)

இவரு கண்ணாலேயே கார ரிவர்ஸ்ல வரவழைச்சிருந்தார்னா, கண்ணாலேயே படிச்சவர்னு சொல்லிடலாம். விரலாலேல வரவழைச்சிருக்கார், அதனால விரலால எழுதி படிச்சவர்னு சொல்லிடுங்க :-))) தப்பேயில்ல.. என்ன நான் சொல்றது டீச்சர்.

(இப்படி சொல்லி முடிச்சிட்டு 'எஸ்' ஆகுறதுக்குள்ளே யப்பா போதும் போதும்னு ஆகிடுச்சு..ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா (போதுமா உங்க அளவுக்கு நீளமா சிரிச்சேனா..))

பாலா said...

hello akka... terror as usual..
annaya video super... youtube la pakkathula vara suggestions ellam vidaama paarunga...

naangallam annayavoda theevara pans.. :))))

அரசூரான் said...

//இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?// குழந்தை சும்மா கேட்காது, ஒற்றை விரலை (அப்பா மாதிரியே) நீட்டி கேட்கும், அப்படியே பதில் சொல்லாம ரிவர்ஸ்ல ஓடிப்போயிருங்க... கலக்கல்.

அன்புடன் அருணா said...

As usual kalakkals!

கோமதி அரசு said...

//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... //


நல்லா சொன்னீங்க சித்ரா.

அம்பிகா said...

\\மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் \\
அதே:-)))

நிலாமதி said...

பதிவு நகைச்சு வையுடன் பாடம் சொல்கிறது :))

RVS said...

பாலையா காரு என்ன சொல்றாரு.. ஜெய் ஜெய் தேவா வா... பயம்மா இருக்குங்க.. இந்துமாதிரி டெர்ரர் வீடியோ போட்டு பயமுறுத்தாதீங்க.. ;-)

ராமலக்ஷ்மி said...

//எங்க அம்மா எப்படி படிப்பாங்க?//

எல்லாப் பிள்ளைகளுக்கும் இதைத் தெரிந்து கொள்வதில் பெரிய ஆர்வம்தான்:)!

ராஜவம்சம் said...

வலக்கம்போல் கலக்கல்.

Unknown said...

:-)..

Unknown said...

நீலக்கலரில் இருப்பது பஞ்ச் டயலாக் தானே.
உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி நினைவலைகள் கலகலப்பு.
அதை இப்போதைய பார்ட்டி விஷயத்துடன் இணைத்திருப்பது நல்லாயிருக்குங்க..
எங்களுக்கு நீங்க அக்கா-வா இருந்தாலும், நீளமான பதிவு எழுதுவதில் நீங்கள் உண்மைத்தமிழனுக்கு தங்கச்சி தான்.

//அவள் எனக்கு உடனே ஒரு டம்ளர் தண்ணியில "Eno fruit Salt" போட்டு கலக்கி கொடுத்துருக்கணும்//
//விளங்காத போது, அது என்ன பாஷையாக இருந்தால் என்ன?//
//குப்பை கொட்டுனாலும், அதை கம்ப்யூட்டர்ல தான் கொட்டப் போறேன்//
சுவையை அதிகரித்த இடங்கள்..

THOPPITHOPPI said...

நகைச்சுவை அங்காங்கே மின்னுது

Unknown said...

//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... //
highlight.

Ramesh said...

Ha ha. Kadaisila kettingale oru kelvi. Indha padhiva padikka sollidunga

Geetha6 said...

super!!

தக்குடு said...

//என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான்//

chitra akka punchhhhhh!!...:))

தெய்வசுகந்தி said...

ha ha ha!!!!!!!!

Riyas said...

nice post... Akka

வருண் said...

***மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ***

இப்போ ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி பெருசா சாதிக்கலைனா "பழம்பெருமை" பேசி ஆறுதல் அடஞ்சுக்கட்டுமே, பாவம், விடுங்க ! :)

பழமைபேசி said...

ஆகா... மொத்த பதிவர்களும் இங்கதான இருக்காய்ங்க... தளபதி இருந்தாகணுமே?

நசரேயன் said...

//எல் கே said...
ரொம்ப நல்லவர் வல்லவர் நாளும் தெரிஞ்சவர்னு சொல்லுங்க.
//
மறுக்க சொல்லிகிறேன்

தாராபுரத்தான் said...

கண்ணை கட்டுது....

ம.தி.சுதா said...

ஃஃஃஃபார்ட்டி நடந்த வீட்டை விட்டு வெளியே வந்தவன், ரோட்டில் நின்று கொண்டு, பாலையா ட்ரைன் சீன் வசனம் போல ஏதோ சீன் விட்டான். ஃஃஃஃ

நம்மள மாதிரி ஒருத்தனோ... ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப நல்லவருன்னு சொல்லுங்க ..................
காசா பணமா ............

சி.பி.செந்தில்குமார் said...

kalakkungka

வெட்டிப்பேச்சு said...

//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ......//
இன்னும் சில வருடங்களில், இவனும் பெரிய வேலையில் இருக்கலாம். இவன் மனைவி மக்களை நான் சந்திக்கலாம்...... இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?
//

ரொம்பப் பிரமாதமுங்க.. இப்போதைய வாழ்க்கை நிலையை ரொம்பக் கச்சிதமாய் நகைச்சுவையோடு முன் வெச்சிருக்கீங்க..

நன்றி.. வாழ்த்துக்கள்.

ஆர்வா said...

//இந்த விளையாட்டு சண்டைகளில் எங்கள் நட்பு வளர்ந்ததே தவிர - குறைந்ததே இல்லை.//

நட்பில் மட்டுமே இது சாத்தியம்.. உங்கள் நட்பு இப்படியே தொடர்ந்திட வாழ்த்துக்கள்

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

செல்வா said...

//நல்ல வேளை, "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை. ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்!
//

உண்மைலேயே தைரியமான பொண்ணுதான் அவுங்க .!! கண்டிப்பா பாராட்டலாம் ..

Sriakila said...

//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ......
//
சூப்பர் மேட்டரு சொன்னீங்க போங்க...

செல்வா said...

///அகப்பைப் பிடிக்கப் போறேன் என்று சொன்னவள் கூட, இப்போ IT field க்கு மாறி வந்து விட்டாள். History புத்தகத்தை கரைத்துக் குடித்து கொண்டு இருந்தவள், Interior Decoration ஏரியாவில் ஜொலிக்கிறாள். அதற்குள், ப///

உண்மைதான் அக்கா, நாம படிச்சது ஒண்ணு இப்ப செய்யுறது ஒன்னதான் பல பேரு இருக்கோம் !!

செல்வா said...

// அந்த கார், அந்த ட்ரைன் மாதிரி பின்னால போகும் வரைக்கும், நீட்டிய விரலை மடக்காமல் அப்படித்தான் நின்னுக்கிட்டு இருப்பான் போல ......"
//

ஆனாலும் கடைசிவரை நின்னு சாதிச்சிட்டார் பாருங்க , ஹி ஹி

போளூர் தயாநிதி said...

நல்ல பதிவு அக்கா

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா உங்க அப்பா கையசைச்சா கார் கூட பின்னாடி ஓடும்னு சொல்லணும்.. குழப்பணும்..:))

Anonymous said...

குடுத்துவச்ச மகராசி

priya.r said...

நல்ல பதிவுங்க சித்ரா !
இப்போ எல்லாம் கார் ரெவர்ஷ் பார்க்கும் போதே இந்த சம்பவம் நினைவுக்கு வந்து சிரிக்க வைக்கிறது !

Sriakila said...

super comedy video..என்னால சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

Jayanthy Kumaran said...

very lively n enjoyable post again ..
Tasty appetite

Lingeswaran said...

அக்கா....எனக்கு கயத்தாரை சேர்ந்த ஒரு நண்பர் இருக்கிறார்.....உங்க ஊர்க்காரங்க லொள்ளுக்கு அளவே இல்ல... உங்களுக்கு நல்ல ஹாஸ்ய உணர்வு..

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அட நீங்க நம்ம ஜாதி. அதாங்க பி.காம்ம சொன்னேன்.

ஆனாலும் கட்டுரை ஓவர் டோசுங்க. சிரிச்சு கண்ணு தளும்புது. அப்புறம் காமர்ஸ் படிச்சவுங்களுக்கு பொய் சொல்றது சர்வ சாதாரணம்.

Saraswathi Ganeshan said...

Superbbb.....

HVL said...

சொல்றதெல்லாம் பத்தாது. படமெடுத்து வச்சி போட்டுக் காட்டுங்க!

ஆமினா said...

//. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... //

ரைட்டு ;)

Anonymous said...

super:-):-)

Dhans said...

நான் தானே!! நீங்க எழுதியதை நல்லா படிச்சேன். ஹிஹி!!

எனக்கு பிடித்த டாப் வரிகள்

"நல்ல வேளை, "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை. ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்! "

நம்பளை பார்த்து ஒருவர் கேட்டா என்ன அற்தம்ன் கிறேன். என்ன பற்றி நான் பெருமை அடிபதிலை.

Dhans said...

நான் தானே!! நீங்க எழுதியதை நல்லா படிச்சேன். ஹிஹி!!

எனக்கு பிடித்த டாப் வரிகள்

"நல்ல வேளை, "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை. ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்! "

நம்பளை பார்த்து ஒருவர் கேட்டா என்ன அற்தம்ன் கிறேன். என்ன பற்றி நான் பெருமை அடிபதிலை.

Anisha Yunus said...

சித்ராக்கா,

பதிவே பயங்கர காமெடி இதுல அந்த வீடியோவை கடசில பாத்தவுடனே குபீர் சிரிப்பு தாங்கல. என் பையன், இவளுக்கு என்னாச்சின்னு பாக்கறான். ஹெ ஹெ சரி பதிவு, சரி நண்பர், சரி வீடியோ...கலக்குங்க :))


இந்த வீடியோவை விஜய்காந்த்துக்கு யாரும் போட்டு காட்டலையா??