கர்த்தரின் சித்தமும் ஆசிரும் இல்லாது, நான் இந்த பதிவுலகில் இல்லை.
என்னை பதிவுலகில், வெட்டி பேச்சு பேச வைத்த எனது கணவர், சாலமன்க்காகவும் - என்னை பதிவுலகுக்கு இழுத்து வந்த எனது நெருங்கிய தோழி, அம்முவுக்காகவும் ஒரு ஆயிரம் வாலா!
பதிவர்களில், எனக்கு முதல் கமென்ட் போட்டு ஹா...ஹா.... ஹாசிர்வதித்த கோமா மேடம்க்காக வடை பாயாசம்!
http://haasya-rasam.blogspot.com/2010/10/blog-post_18.html
அன்றைய தமிழிஷ் - இன்றைய இன்ட்லி ஜோதியில் நான் ஐக்கியம் ஆக முழுமுதல் காரணம் ஆன "பார்த்ததும் படித்ததும்" ஜெட்லி சரவணாக்காக நொறுக் - சாரி, முறுக்கு - சீடை!
http://nee-kelen.blogspot.com/2010/09/blog-post_20.html
பதிவுகள் எழுத வந்த சில நாட்களிலேயே, என் தந்தையின் மறைவினால் - ஊருக்கும் செல்ல இயலாத சூழ்நிலையில், வாடி இருந்தவளுக்கு - முதல் விருது ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்தி, மேலும் பதிவுகள் எழுத வைத்த அட்டகாசமான ஜலீலா அக்காவுக்காக லட்டு, ஜாங்கிரி!
http://allinalljaleela.blogspot.com/2010/10/chicken-biriyani.html
எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்தும் - பின்னூட்டம் இட்டும் - வோட்டுகள் போட்டும் - பரிந்துரை செய்தும் - தங்கள் அன்பை வெளிப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும் வாண வேடிக்கை!!!
தங்கள் மாறாத தோழமையினால், தூய அன்பில் என்னை நெகிழ வைக்கும் சகல பதிவர்களுக்கும் பூங்கொத்தும் மத்தாப்புக்களும்!!!
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இந்த நூறாவது பதிவு மூலமாக அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவு எழுத வந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது.
சிறப்பு கண்ணோட்டம்:
(மீள் பதிவு போடாமல் எப்படியோ நூறை தொட்டு விட்டேன். இப்போ சேர்த்து வைத்து, சில highlights மட்டும்: (ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... தீபாவளி ஸ்பெஷல் - நூறாவது பதிவு ஸ்பெஷல் - ஓராண்டு ஸ்பெஷல் ஷோ - என்று இருக்கட்டுமே!)
பில்ட் அப் எல்லாம் போதும். அப்படி என்னதான் வெட்டி பேச்சு பேசிட்ட என்று கேட்காதீங்க. அந்த கேள்வியை என்னை நானே கேட்டு இருக்கேனே!
ஏன் என்னை பாத்து கேட்டாங்க?
"சித்ரா, நீங்க தமிழ் மொழியை இன்னும் மறக்கலையா?"
"நான் தமிழை மறக்கதான் அமெரிக்கா போனேன்னு யார் சொன்னா?"
திருநெல்வேலி நக்கல்:
"துவையல் ஏன் ரொம்ப குறைவா இருக்கு?"
"கரண்ட் போயிட்டு. அம்மியில கொஞ்சமா அரைச்சேன்."
"இத்தனூண்டு அரைச்சிட்டு dining டேபிள்க்கு வேற வரணுமா? அம்மியிலேய இருக்கு. ரெண்டு இட்லியை அதிலே வைச்சே சாப்பிடுன்னு சொல்லாம விட்டியே."
"என்னலே, என்ன சாப்பாடுல போடுறே?"
"ஏழு வகை காய்கறியோட போடறேன்."
"ஒரு ஆடு வாங்க வக்கில்லை. காய் கூட கறின்னு வார்த்தையை சேர்த்ததும் கத்திரிக்காய்க்கும் முருங்கைக்காய்க்கும் நாலு காலும் ஒரு வாலும் முளைக்கவா போகுது?"
Fashion டிப்ஸ்:
பாட்டியாலா, கீதாஞ்சலி, அனார்கலி, மஜாகலி, தெனாலி, பங்காளி, பெருச்சாளி...........
இதெல்லாம் என்ன? இதெல்லாம் பெண்களிடேயே popular ஆக இருக்கும் உடைகளுக்கான styles.
இத தெரியாதவர்கள் எல்லாம் மொத்தமா சல்வார்/சுடிதார் செட் என்று சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.
அறிவு கொழுந்தும் நானும்:
சென்னையில் ஒரு அறிவு ஜீவி: சித்ரா, உன் மகன் என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா? நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)
முதன் முதலாக பலருடைய பாராட்டுதல்களை, எனக்கு பெற்று தந்த பதிவு:
நான் ரொம்ப ரசித்து எழுதிய பதிவுகளில் ஒன்று:
எனது செல்ல மகளின் பார்வையில் தமிழ் சினிமா:
சரவெடிகள்:
முதன் முதலாக "யூத்புல் விகடன்" - குட் ப்லாக்ஸ் கூட்டத்தில என்னையும் சேர்த்துக்கிட்டது:
"பதின்ம வயதினிலே ....!!!"
அதிக followers பெற்று தந்த பதிவு:
ஆண் பேச நினைப்பதெல்லாம் .......
இப்படியே போனா ....... பதிவு நீண்டு கிட்டே போய் - அடுத்து பொங்கல் திருவிழாவே வந்திடும் போல.
அதனால், இத்துடன் இன்றைய ஷோவை - மன்னிக்கவும் - பதிவை முடிச்சிக்கிறேன்.
"வாழ்க்கை பாதையில், முட்களும் உண்டு - ரோஜாக்களும் உண்டு. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ - அது மட்டும் தான், நம் உணர்வுகளை அலங்கரிக்கும்." தத்துவம் # 10645
"வாழ்க்கை பாதையில், முட்களும் உண்டு - ரோஜாக்களும் உண்டு. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ - அது மட்டும் தான், நம் உணர்வுகளை அலங்கரிக்கும்." தத்துவம் # 10645
எல்லோருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!